20/01/2019

தோல்வியில் முடிந்த ஆபரேசன் தாமரை 3.0.. பா.ஜ.,வின் வலையில் சிக்காத காங்கிரஸ் எம்.எல்.ஏ.,கள்...


கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. கடந்த 7 மாதமாக இந்த கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. இந்த ஆட்சியை கவிழ்ப்பதற்காக உருவாக்கப்பட்டதே பாஜகவின் ஆபரேஷன்  தாமரை. கடைசியில் இதன் மூலம் ஆட்சியை கவிழ்க்க முடியாததால், அந்த திட்டத்தை பாஜக கட்சி கைவிட்டுள்ளது.

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 12-15 பேரை பதவி விலக வைத்து, சட்டசபையின் பலத்தை குறைத்து, ஆட்சியை கவிழ்க்க வைப்பதே பாஜகவின் திட்டமாக இருந்தது. அதன்பின் 104 எம்எல்ஏக்களின் பலத்தை வைத்து ஆட்சியை பிடிக்கலாம் என்று பாஜக திட்டமிட்டு இருந்தது. இதனால்தான் ஆபரேஷன் தாமரை 3.0 கையில் எடுக்கப்பட்டது.

இது போல மூன்றாவது முறையாக பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டு இருக்கிறது. ஏற்கனவே இரண்டு முறை முயன்று, அது தோல்வியில் முடிந்தது. அப்போதும் பாஜக, காங்கிரஸ் எம்எல்ஏக்களை பதவி விலக வைக்க திட்டமிட்டது. அது தோல்வியில் முடியவே, மூன்றாவது முறையாக இந்த திட்டம் கையில் எடுக்கப்பட்டது.

ஏன் இப்போது ஏன் இப்போது இப்போது ஆட்சியை கலைத்தால்தான் லோக் சபா தேர்தல் சமயத்தில் பாஜக கர்நாடகாவில் ஆட்சியில் இருக்க முடியும். அதனால் லோக் சபா தேர்தலில் பாஜகவிற்கு இன்னும் பலம் கிடைக்கும். இதனால்தான் தற்போது பாஜக ஆபரேஷன் கமலாவை கையில் எடுத்து இருப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு வைத்தது.

கர்நாடகாவை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மூன்று பேர் மும்பையில் தங்கி இருப்பதாக செய்திகள் வந்தது. இவர்கள், பாஜகவினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக செய்திகள் வந்தது. இது இரண்டு நாட்கள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் கடைசிவரை இவர்கள் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணிக்கு தங்கள் ஆதரவை வாபஸ் பெறவில்லை.

இந்த நிலையில் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணியின் ஆட்சியை கவிழ்ப்பதற்காக பாஜக கையில் எடுத்த ஆபரேஷன் தாமரை தோல்வி அடைந்து உள்ளதாக தகவல்கள் வருகிறது.

பாஜகவை சேர்ந்த முக்கிய தலைவர்களே இதை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. 3 எம்எல்ஏக்களை மட்டுமே பதவி விலக வைக்கும் அளவிற்கு மனது மாற்ற முடிந்தது, 16 எம்எல்ஏக்களின் ஆதரவை பெறுவது கடினம் என்பதால் இந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது...

முதல்வர் எடப்பாடி பேசுகிறார்...


மற்றவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொண்டிருப்பதை நிறுத்துங்கள்...


ஏனென்றால் அது ஒன்று தான் நீ தற்கொலை செய்து கொள்வதிலிருந்து உன்னை காக்கிறது..

நீ இங்கே யாருடைய எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வதற்கு பிறக்கவில்லை.

யாருடைய எதிர்ப்பார்ப்புக்கும் நீ பலி ஆகாதே.

உன் எதிர்பார்ப்பிற்கு எவரையும் பலியாக்காதே.

இதைத் தான் நான் தனித்தன்மை என்கிறேன்.

உன் தனித் தன்மையை மதி.

பிறர் தனித் தன்மையையும் மதி.

எப்போதும் எவரையும் உன் தனிப்பட்ட வாழ்வில் குறுக்கிட அனுமதியாதே.

அதே போல் எவருடைய தனிப்பட்ட வாழ்விலும் நீ குறுக்கிடாதே.

அப்போது தான் நீ ஒரு நாள் ஆன்மிகத்தில் மலரமுடியும்.

மாறாக 99 சதவீத மக்கள் வெறுமே தற்கொலை செய்து கொண்டே இருக்கிறார்கள்.

அவர்களுடைய மொத்த வாழ்வும் மிக மெதுவான தற்கொலையன்றி வேறில்லை.

மற்றவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொண்டே இருப்பது...

சில நாட்கள் அப்பாவின் எதிர்பார்ப்பு..

சில நாட்கள் அம்மாவின் எதிர்பார்ப்பு..

ஒரு நாள் மனைவி மற்றொரு நாள் கணவன், குழந்தைகள்.. அவர்களும் எதிர்பார்க்கிறார்கள்..

பின் சமூகத்தின் எதிர்பார்ப்பு.. அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்பு..

மத குருமார்களின் எதிர்பார்ப்பு.. சுற்றிலும் யாவரும் எதிர்பார்ப்புடனேயே உள்ளனர்..

நீயோ பாவம் எளிய மனிதன் மொத்த உலகமும் உன்னிடம் இதை செய் அதை செய் என்று எதிர்பார்க்கிறது..

உன்னால் அனைவரின் அனைத்து எதிர்பார்ப்பையும் நிறைவேற்றவே முடியாது.

அனைவரும் உன்னிடம் கோரும் எதிர்பார்ப்புகளை பார்த்து நீ பைத்தியம் அடைந்து விட்டாய்.

உன்னால் யாருடைய எதிர்ப்பார்ப்பையும் முழுதாக நிறைவேற்றவே முடிவதில்லை.

யாருமே திருப்தி அடைவதேயில்லை. யாருமே திருப்தி அடையாததால் நீ வீணானவன் தோற்றவன்.

தனக்குள் திருப்தியாக மகிழ்ச்சியாக இருக்க இயலாதவர்களால் மகிழ்ச்சியாக சந்தோசமாக இருக்க முடிவதேயில்லை.

எதை நீ செய்தாலும் மற்றவர்கள் உன்னுடன் திருப்தியடையாமல் இருப்பதற்கு வழி காண்பார்கள்.

ஏனென்றால் அவர்களால் திருப்தி அடைய முடியாது. சந்தோசமாக இருக்க முடியாது.

மகிழ்ச்சி திருப்தி என்பது ஒரு கலை. அதை ஒருவன் கற்றுக் கொள்ள வேண்டும்.

நீ எதை செய்கிறாய் எதை செய்யவில்லை என்பதை பொருத்தது அல்ல அது.

மற்றவர்களை மகிழ்விப்பதை விட... நீ மகிழ்ச்சியாக இருக்கும் கலையை கற்றுக் கொள்...

ஒரு உண்மையை சொல்கிறேன் கேள் தமிழா...


Royal Court of Justice இலண்டனில் இருக்கும்  காமன்வெல்த் கூட்டமைப்புக்கான நாடுகள் ஏற்று கொண்ட கோர்ட் இது.....

இந்திய குடியுரிமை பெற்ற தமிழர்கள் யார் வேண்டுமானாலும்.....  சென்று எம் இனம் வஞ்சிக்கப்படுவதாகவும்..  சுப்ரீம் கோர்ட்டின் காவேரி தீர்ப்பையும், முல்லை பெரியாறு தீர்ப்பையும், தற்போது திணிக்கப்படும் சாகர்மாலா வரையும்..  இந்த இந்திய குடியரசின் திணிப்பு போக்கை கண்டித்தும் ஒரு மனு போட்டு.. தனித் தமிழ்நாடு வேண்டும் என்று கேட்கும் பட்சத்தில்...

இந்திய அரசு எப்படி அலறி அடிச்சிட்டு வந்து தமிழனிடம்  நிற்கும் என்று  அழகாக பார்க்க முடியும்...

உதாரணமாக -  மலேசிய போரட்ட வெற்றி...

ஆனால் நம் தமிழக அரசியல்வாதிகள் இதை செய்ய மாட்டார்கள்...

குடிப்பழக்கத்தை ஏன் நிறுத்த முடிவதில்லை?


குடிப்பழக்கம் மட்டுமல்ல வேறு எந்த பழக்கத்தையும் உடனே நிறுத்த முடியாது.

பாதிப்பு அதிகம் என்பதால், நாம் குடிப்பழக்கத்தைப் பற்றி அதிகம் பேசுகிறோம்.

மற்றபடி டீ குடிக்கும் பழக்கத்தைகூட நிறுத்துவதென்பது கடினமான ஒன்று தான்.

நாம் ஏற்படுத்திக் கொள்ளும் பழக்கங்கள் நம் நரம்பு மண்டலத்தில் சில தூண்டுதல்களை ஏற்படுத்துகிறது.

அந்த தூண்டுதல்களுக்கு பழக்கப்பட்டு விட்ட நமது நரம்பு மண்டலம். மீண்டும் மீண்டும் குறிப்பிட்ட அந்த செயலை செய்யுமாறு நம்மை தூண்டுகிறது.

எனவே சரியான ஆலோசனை மற்றும் அதற்குண்டான பயிற்சியினால் மட்டுமே ஒரு பழக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.

மற்றபடி ஒரு முறை குடித்துவிட்டு ச்சே இனிமேல் குடிக்கவே கூடாது என நினைப்பதெல்லாம் குற்ற உணர்வால் ஏற்படும் சிந்தனைகள்...

BIMSTEC எனும் திட்டத்திற்காக தமிழினத்தை திட்டமிட்டு அழித்துக் கொண்டிருக்கின்றனர்...


2004 - 2005ஆம் ஆண்டுகளிலிருந்து திட்டமிடப்பட்டு, இன்று வரை தமிழ்நாடும், தமிழீழமும் சந்தித்துக் கொண்டுள்ள பேராபத்துகளை - சந்திக்கவுள்ள பேராபத்துகளை - எதிர்கொள்ளவுள்ள இராணுவமயமாக்கல் நடவடிக்கைகளை - சூழலியல் அழிப்புத் திட்டங்களை - தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நாம் பெற்ற விடைகளை - அரசின் ஆவணங்களிலிருந்து கிடைத்த அதிர்ச்சித் தகவல்களை தொகுத்து நூலாக்கியுள்ளேன்.

பிம்ஸ்டேக் - பேரழிவில் தமிழர் தாயகங்கள் - நூலின் பெயர்...

பன்மை வெளி வெளியீட்டகம் வெளியிட்டுள்ள இந்த புதிய நூல்...

சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில், “தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்” - சிறப்பு அரங்கம்  B (அரங்கு 42 - 43க்கு எதிரில்) விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

சூழலியல் செயல்பாட்டாளர்களும், தமிழின உணர்வாளர்களும் வாங்கிப் படித்து, நாம் இனி வரப்போகும் எதிர்காலத்தை சரிவரத் திட்டமிட்டுக் கொள்ள - செயல் திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டும்.

நூலெழுதும் போது, கருத்துகள் கூறி - செமைப்படுத்தி - வழிநடத்திய - தமிழ்த்தேசியப் பேரியக்கம் தலைவர்  ஐயா பெ. மணியரசன், பொதுச் செயலாளர் ஐயா கி. வெங்கட்ராமன், நூலை வெளிக் கொண்டு வந்த பன்மை வெளி வெளியீட்டகம் பொறுப்பாளர் தோழர் பாலகுமரன் அறிவன் தமிழ், மெய்ப்பு திருத்தி உழைத்த தோழர் ஆனந்தன் இலக்கியன், அட்டை வடிவமைத்த பாவலர் Kavi Baskar, தகவல்கள் அளித்து உதவிய Rathish Kumaran உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியும் நேசமும்!

தோழமையுடன்,
க. அருணபாரதி,
தலைமைச் செயற்குழு உறுப்பினர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
18.01.2018
பேச: 9841949462...

உன்னுள் நுழைய தியானம்...


எந்த எண்ணத்தையும் உன்னுள் நுழைய விடாமல்.. ஆச்சரியத்துடனேயே
இருப்பது தான் தியானம்...

நீ ஆச்சரியமாக இருக்கும் போது.. உன் மனதில் எண்ணம் புகுந்தால்.. நீ யோசிக்க ஆரம்பித்து விடுகிறாய்..

இந்த உலகம் முழுக்க ஆச்சரியம் நிறைந்து இருக்கிறது.. நீ ஆச்சரியத்தில் சாதாரணமாக இருக்க முடியவில்லை என்பதால் கேள்விகள் கேட்கிறாய்..

கேள்விகளுக்கும் பதில்களுக்கும் முடிவே கிடையாது..

ஒரு கேள்வி ஒரு பதிலுக்கு இட்டுச் செல்லும்..

ஒரு பதில் ஆயிரம் கேள்விகளுக்கு இட்டுச் செல்லும்..

ஆச்சரியம் அற்புதத்துக்கு இட்டுச் செல்கிறது..

அதற்கு ஓர் ஆன்மீகப் பெயர் தான் கடவுள்..

கடவுள் என்பது அறிந்து கொள்ள முடியாத ஓர் அற்புதம்..

கேள்விகள் கேட்பதை விட்டு விட்டு.. ஆச்சரியத்தின் மீது கவனம் செலுத்து..

வெகு விரைவில் ஆச்சரியம் மறைந்து போய் அற்புதம் தோன்றி விடும்..

ஆச்சரியம் என்பது ஒரு சிறு அலை..

அற்புதம் என்பது பெருங் கடல்..

நீ ஆச்சரியத்திலேயே இருக்கும் போது.. அது உன்னை அற்புதத்திற்கு இட்டுச் செல்கிறது..

அற்புதம் எல்லையற்றதற்கு இட்டுச் செல்கிறது.. அது கடவுளுக்கு இட்டுச் செல்கிறது..

ஆனால் உடனே சிந்திக்க மட்டும் ஆரம்பித்து விடாதே...

உனக்கு ஏதாவது ஆச்சரியம் தோன்று மானால்.. அதனுடனேயே தங்கி விடு..

அப்போது ஆழ்ந்த மௌனம் உன்னைச் சூழ்ந்து கொள்ளும்..

ஒரு நாள் அந்த ஆச்சரியம் அற்புதத்திற்குள் கரைந்து போகும்..

அந்த ஆச்சரியத் தோடு நீயும் கரைந்து போவாய்..

யோசிக்க ஆசை வரும்..

உன்னுடைய மனது அந்த ஆச்சரியத்தை சிந்தனையாக்கி விடும்..

அதனால் அந்த யோசிக்கும் ஆசையிலிருந்து விடுபட்டு நில்..

நீயும் ஒரு அற்புதமாகி விடுவாய்...

தமிழகத்தில் சாகர்மாலா திட்டத்தை செயல்படுத்த.. நம்மை திசை திருப்புகிறார்கள்.. தமிழினமே விழித்துக்கொள்...


சட்டநாதன் ஆணையம் என்ன ஆனது?


தமிழக இட ஒதுக்கீட்டில் எப்படி வந்தேறிகள் புகுந்தார்கள் என்று தெரியுமா?

இதோ தமிழர் இனத்துக்கும், எம் மக்களுக்கும் திராவிட அரசியல் செய்த துரோக வரலாறு...

1972 - ல் கொண்டு வந்த " சட்டநாதன் ஆணையத்தின் " பரிந்துரைகளைத் தமிழ் நாட்டில் நடைமுறைக்கு கொண்டு வந்தாலே மள்ளர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தமிழ்ச் சமூகங்களுக்கான உரிய பங்குகள் எல்லாத் துறைகளிலும் கிடைக்கப் பெறும்.

ஆகவே தமிழ்நாடு அரசு தமிழ் மக்களின் நலன் கருதி "சட்டநாதன் ஆணையத்தின்" பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முன் வர வேண்டும்.

தமிழர்கள் இதற்கான போராட்டத்தை துரிதப்படுத்தி காலத்தின் அவசியத்தை புரிந்து கொண்டு போராட முன் வர வேண்டும்.

சட்டநாதன் ஆணையம் என்றால் என்ன?
அந்த ஆணையம் என்ன ஆனது?
இதன் முக்கியத்துவம் என்ன?

இந்த ஆணையத்தை கிடப்பில் போட்டுத் தமிழ் மக்களுக்கு துரோகம் செய்த துரோகி யார்?

இத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டியவர், திருவாரூரை சேர்ந்த திருவாளர் கருணாநிதி மட்டுமே...

1956 - ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் கர்நாடகாவில் கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்ட கன்னடச் சாதிகள் மட்டுமே மாநில பட்டியல்களில் இடம்பெற்றது, கன்னடர் மட்டுமே அரசு வேலை மற்றும் அரசாங்க பிரதிநிதிகளாக இருக்க வகை செய்தது கர்நாடகம். அங்கு உள்ள பட்டியல்களில் எந்தவொரு தமிழ்ச் சாதிகளும் இடம் பெற முடியாது. தாழ்த்தப்பட்டவர் இட ஒதுக்கீட்டில் கன்னடர் அல்லாத பிற மாநில தாழ்த்தப்பட்டோருக்கு இடமில்லை.

அவ்வாறே ஆந்திராவில் தெலுங்கைத் தாய் மொழியாகவும், கேரளாவில் மலையாளத்தை தாய்மொழியாகவும் கொண்டவர்கள் மட்டுமே அந்தந்த மாநில பட்டியல்களில் இடம் பெற வகை செய்யப்பட்டது.

இதே நிலைபோல் தமிழகத்திலும் தமிழ்ச் சாதிகளை மட்டுமே பட்டியல்களை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை முன் வைத்து அதன் அடிப்படையில் "சட்டநாத ஆணையம் "  1972 - இல் மு.கருணாநிதி தலைமையிலான தி.மு.ஆட்சியின் போது நீதிபதி சட்டநாதன் தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டு அனைத்து பட்டியல்களில் உள்ள தமிழ்ச் சாதிகளை இனம் கன்டு புதிய பட்டியல் உருவாக்குவதற்க்கான திட்டம் வகுக்கப்பட்டது.

சட்டநாதன் ஆணையம் அனைத்து பட்டியலில் உள்ள தமிழ்ச் சாதிகளைத் தனியாகப் பிரித்தெடுத்து, அந்தந்தச் சாதிகளைப் பற்றிய முழு விவரங்களையும் தொகுத்து ஆங்கிலத்தில் 300 பக்கங்களை கொண்ட அறிக்கையைத் தமிழக அரசிடம் சமர்ப்பித்தது.

அனைத்து பட்டியல்களிலும் தமிழ்ச் சாதிகளை மட்டுமே கொண்ட அந்த அறிக்கையில் தனது சாதியான "சின்ன மேளம்" (இசை வேளார்) என்ற தெலுங்குச் சாதி இடம் பெறாதது கண்டு அதிர்ச்சி அடைந்த மு. கருணாநிதி 'அறியாமையில் பெரும் பிழை செய்து விட்டோமே' என அஞ்சி சட்டநாதன் ஆணையத்தின் அறிக்கையை அப்படியே கிடப்பில் போட்டு இருட்டடிப்புச் செய்துவிட்டார்.

தற்போது இருக்கக்கூடிய அனைத்து பட்டியல்களிலும் ( SC,ST,BC,MBC) தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய பதவிகளை தமிழர்கள் இருக்கக்கூடிய இடங்களில் அந்நிய மொழியினரான தெலுங்கர்களும், கன்னடர்களும், மலையாளிகளும், மார்வாடிகளும், செளராட்டிரர்களும், 'இந்தி'யர்களும்தான் வலுவாக அமர்ந்து கொண்டு வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இடத்தை பறிகொடுத்த தமிழர்கள் ஏமாளிகளாகத் தேர்வு எழுதிக் கொண்டே தெருவில் திரிகிறார்கள்.

ஆகையால் தமிழ் மக்களின் நலன் கருதி மீண்டும் நமக்குரிய அதிகார பங்கினை மீட்டெடுக்க. " சட்டநாதன் ஆணையத்தை" தமிழகத்தில் நடைமுறைப்படுத்த
தமிழர் அமைப்புகள் அனைத்தும் இந்த போராட்டத்தை வீரியத்துடன் முன்னெடுத்து போராட வேண்டும்.

-வாலறிவன்

தமிழ் நாட்டில் தலித் அரசியல் பேசுவோர் தமிழர் நலனில் கவனம் செலுத்த மாட்டார்கள், தாழ்த்தப்பட்ட தமிழரை ஒரு குறிப்பிட்ட சதவீத வாக்குகளாகவே பார்பார்கள்.

தமிழர் அல்லாதோரின் நலனுக்காக கட்சி கண்ட திராவிட அரசியல் கட்சிகளும் இதை கண்டுகொள்ளாது.

திராவிட இயக்கம் இந்த 'தமிழர் உரிமை மறுப்பை' ஆதரித்து சட்டநாதன் ஆணையத்தையே இனவாதம் என்று கருத்தாக்கம் செய்ய துணியும்.

தமிழ் தேசிய அரசியலில் மட்டுமே இந்த தமிழர் உரிமையும் நிலைநாட்டப்படும்...

நாம் இன்னும் இதே பாதையில் சென்றால் இருக்கும் கொஞ்ச இயற்கை காய்கறிகளையும் அழித்து விடுவோம்...


தமிழர் நீர் நிலைகள்...


ஒரு சின்ன குழாயில் நீர் பிடிக்கும் காலத்தில் நாம் இருக்கிறோம். ஆனால், நமது இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும் நீர் நிலைகள் மொத்தம் 47...

(1) அகழி (Moat) - கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்..

(2) அருவி (Water Falls) - மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது..

(3) ஆழிக்கிணறு (Well in Sea-shore) - கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு..

(4) ஆறு (River) - பெருகி ஓடும் நதி..

(5) இலஞ்சி (Reservoir for drinking and other purposes) - பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்..

(6) உறை கிணறு (Ring Well) - மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு..

(7) ஊருணி (Drinking water tank) - மக்கள் பருகும் நீர் நிலை..

(8) ஊற்று (Spring) - பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது..

(9) ஏரி (Irrigation Tank) - வேளாண்மை பாசன நீர் தேக்கம்..

(10) ஓடை (Brook) - அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்..

(11) கட்டுங்கிணக் கிணறு (Built-in -well) - சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு..

(12) கடல் (Sea) - சமுத்திரம்..

(13) கம்வாய் (கம்மாய்) (Irrigation Tank) - பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்..

(14) கலிங்கு (Sluice with many Venturis) - ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்டு பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு..

(15) கால் (Channel) - நீரோடும் வழி..

(16) கால்வாய் (Suppy channel to a tank) - ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி..

(17) குட்டம் (Large Pond) - பெருங் குட்டை..

(18) குட்டை (Small Pond) - சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை..

(19) குண்டம் (Small Pool) - சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை..

(20) குண்டு (Pool) - குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்..

(21) குமிழி (Rock cut Well) - நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு..

(22) குமிழி ஊற்று (Artesian fountain) -அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று..

(23) குளம் (Bathing tank) - ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப் பயன்படும் நீர் நிலை..

(24) கூவம் (Abnormal well) - ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு..

(25) கூவல் (Hollow) - ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்..

(26) வாளி (stream) - ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை..

(27) கேணி (Large Well) - அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங்கிணறு..

(28) சிறை (Reservoir) - தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை..

(29) சுனை (Mountain Pool) - மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை..

(30) சேங்கை (Tank with Duck Weed) - பாசிக்கொடி மண்டிய குளம்..

(31) தடம் (Beautifully Constructed Bathing Tank) - அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்..

(32) தளிக்குளம் (Tank Surrounding a Temple) - கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற நீர் நிலை..

(33) தாங்கல் (Irrigation tank) - இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்..

(34) திருக்குளம் (Temple tank) - கோயிலின் அருகே அமைந்த நீராடும் குளம்..

(35) தெப்பக்குளம் (Temple tank with inside pathway along parapet wall) - ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்..

(36) தொடு கிணறு (Dig well) - ஆற்றில் அவ்வப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்..

(37) நடை கேணி (Large well with steps on one side) - இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங்கிணறு..

(38) நீராவி (Bigger tank with center Mantapam) - மைய மண்டபத்துடன் கூடிய பெருங்குளம். ஆவி என்றும் கூறப்படும்..

(39) பிள்ளைக்கிணறு (Well in middle of a tank) - குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு..

(40) பொங்கு கிணறு (Well with bubbling spring) - ஊற்றுக்கால் கொப்பளித்துக் கொண்டே இருக்கும் கிணறு..

(41) பொய்கை(Lake) - தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை..

(42) மடு (Deep place in a river) - ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்..

(43) மடை (Small sluice with single venturi) - ஒரு கண்ணே உள்ள சிறு மதகு..

(44) மதகு (Sluice with many venturis) - பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ள, பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் மடை..

(45) மறு கால் (Surplus water channel) - அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்..

(46) வலயம் (Round tank) - வட்டமாய் அமைந்த குளம்..

(47) வாய்க்கால் (Small water course) - ஏரி முதலிய நீர் நிலைகள்...

தமிழகத்தை அழிக்க.. கார்பரேட்களின் சாகர்மாலா திட்டம்...


அந்தக் காலத்தில் மழைமானி பற்றி தெரியாத தகவல்...


உரல் உணர்த்தும் உண்மை.ஆட்டுக்கல் என்பது வெறுமனே மாவு அரைப்பதற்கு மட்டுமல்ல. அந்தக் காலத்தில் அதுதான் மழைமானி. வீட்டு முற்றத்தில்தான் பெரும்பாலும் ஆட்டுக்கல் இருக்கும்.

முதல்நாள் இரவில் மழை பெய்திருந்தால் அதன் குழிக்குள் நீர் நிறைந்திருக்கும். அந்நீரை விரலால் அளந்து பார்த்து அது ஓருழவுக்கு ஏற்ற மழையா அல்லது ஈருழவுக்கு ஏற்ற மழையா என்பதை அறிந்துக்கொள்வர்.

மழைப்பொழிவின் பழைய கணக்கு முறை செவி அல்லது பதினு எனப்படும். .இது 10 மி.மீ அல்லது 1 செ.மீட்டருக்கு சமமானது. மழையின் அளவுக்கும் நிலத்தின் ஈரப்பதத்துக்கும் தொடர்பு உண்டு. இதனை ‘பதினை’ என்றனர்.

அறிவியல் கணக்குபடி 18 மி.மீ வரை மழை பெய்தால்தான் அதை முறையாக மண் உறிஞ்சிடும். ஆக எத்தனை பதினு மழை பெய்திருக்கிறது எனத் தெரிந்துக்கொண்டு முதல் உழவுக்கு அணியமாவார்கள். மழை என்பது மழைத்துளிகளின் தொகுப்பு என்பதை அறிவோம்.

அதன் அடிப்படையில் அதன் பெய்திறனின் அடிப்படையில் தமிழில் பெயர் வைக்கப்பட்டிருந்தது. அவற்றைக் காண்போம்

தூறல் – பசும்புல் மட்டுமே நனைவது. விரைவில் உலர்ந்துவிடும்.

சாரல் – தரைக்குள் ஓரளவு நீர் செல்லும்.

மழை – ஓடையில் நீர்ப்பெருக்கு இருக்கும்.

பெருமழை – நீர்நிலைகள் நிரம்பும்.

அடைமழை – ஐப்பசியில் பெய்வது

கனமழை – கார்த்திகையில் பெய்வது

இதையே அறிவியல் வேறுவகையில் கூறுகிறது.

மழைத்துளியின் விட்டம் 0.5 மி.மீட்டருக்கு குறைவாக இருந்தால் அது தூறல்.

அதுவே விட்டம் 0.5 மி.மீட்டருக்கு மேல் இருந்தால் அது மழை.

4-6 மி.மீட்டருக்கு மேல் துளியின் விட்டம் இருக்குமானால் அது கனமழை.யாகும்.

மழையைப் பற்றித் திருவள்ளுவர் நிறையப் பேசியிருப்பதை நாம் அறிவோம்.அவற்றில் வியக்க வைக்கும் செய்தி 20ம் நூற்றாண்டின் அறிவியல் உண்மையை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அவர் பேசியிருப்பது.

இந்த உலகம் தோன்றிய போது எவ்வளவு நீர் இருந்ததோ அதில் ஒரு துளிக்கூடக் குறையவும் இல்லை கூடவும் இல்லை என்பதை நாம் ஏற்கனவே அறிந்தோம்.

திருவள்ளுவர் இதை ‘மாறா நீர்’ என்று உரைத்திருக்கிறார். அதாவது உலகில் இதுவரையுள்ள நீர், நிலையானது, அளவு மாறாதது என்கிறார். கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாறாநீர் வையக்கு அணி - (குறள் 701) இங்கு மாறாநீர் என்பது நீரின் தன்மையைக் குறிக்கும் எனச் சிலர் பொருள் கூறுவது பொருத்தமன்று என்று குறிப்பிடுவார்.

பழ. கோமதிநாயகம். நிலத்திற்கு ஏற்ப நீரின் தன்மை மாறுபடும் என்பதை வள்ளுவரே பிறிதோர் குறளில் கூறியிருப்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு (குறள் 452) எனவே வள்ளுவர் ‘மாறாநீர்’ எனக் குறிப்பிடுவது நீரின் அளவைத்தான் என்பது தெளிவாகிறது...

தமிழன் விழித்து விட்டான் என்று நம் பாரம்பரியத்தையே நமக்கு வியாபார ரீதியாக விற்க தொடங்கி விட்டான்...


ராஜீவ் காந்தி மரணம் பற்றி நாஸ்டிரடாமஸ்...


கி.பி. 1555 ஆம் ஆண்டு புகழ்பெற்ற தீர்க்கதரிசி நாஸ்ட்ரடாமஸ் வெளியிட்ட Prophecies என்கிற புத்தகம் உலகில் நடக்கப்போகும் பல விடயங்களைப் பூடகமாகச் சொல்லும் நூலாகும்.

அதில் ஒரு பெண்மணி இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்து 67 வயதில் சதிகாரர்களால் கொல்லப்படுவார் என்று இந்திரா காந்தி பற்றி கூறியுள்ளார்.

அவர் கூறியவற்றில் தெள்ளத் தெளிவாக உள்ளவை சில மட்டுமே!
அவற்றில் டயானா வுக்கு அடுத்து தெளிவானது ராஜீவ் காந்தி பற்றிய பாடல்.

அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு வருமாறு,

The great pilot shall be sent for by royal mandate (அரச ஆணையின் மீது ஒரு மாலுமி அல்லது விமானி).

to leave the fleet, and be preferred to a higher place, (படைப்பிரிவை விட்டு விலகி, தலைமைக்கு உயர்வான்).

seven years after he shall be countermanded (ஏழாம் ஆண்டில் கட்டளை ரத்தாகி).

a barbarian army shall put venice to fear (காட்டுமிராண்டி படை வெனிஸ் நகரை பயத்தில் ஆழ்த்தும்).

இதில் கூறப்பட்டுள்ளபடி ராஜீவ் விமானியாக இருந்தார்.

இந்திரா காந்தியின் மரணத்திற்குப் பிறகு அவர் அரசியலுக்கு வந்தார்.

அடுத்த ஏழாவது ஆண்டில் அவர் பதவியை இழந்தார்.

ஈழத்தில் அவர் அனுப்பிய படை செய்த இனப்படுகொலைக்கு பழிவாங்க ஆயுதம் தாங்கிய படை (புலிகள் அல்லது வேறொரு ஈழ ஆயுதக் குழு) அவரைக் கொன்றது.

வெனிஸ் நகரம் என்பது இத்தாலியில்  சோனியா காந்தி பிறந்த (வெனிடோ) மாநிலத்தின் தலைநகரம் ஆகும்...

பாஜக வின் ஏமாற்று வேலைகள்...


நமக்கே அவனுங்க போட்ர பேக்நியூஸ ஈஸியா கணிக்க முடிஞ்சப்ப ஆய்வு செஞ்சா எவ்ளோ சிக்கி இருக்கும்...

சமஸ்கிருத கிளுகிளுப்பு வேணும்னா மொத்த போஸ்ட்டரையும் சமஸ்கிருதத்துலயே எழுத வேண்டியது தானே?


ஸெளராஷ்ட்ர ஸமூக நலப்பேரவையாம்...

தின்னாளுக் அவோ.. கலாச்சார் கபடுவோ..

அமி மிளெங்கெ.. அமி ஹொடெங்கெ..

அடேய்களா....

சபரிமலைச் சென்ற பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க ஆணை...


சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் சென்ற கேரளாவைச் சேர்ந்த கனகதுர்கா, பிந்து ஆகிய 2 பெண்களுக்கு பாதுகாப்பு தர கேரள போலீசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி கனகதுர்கா தொடர்ந்த மனுவில் உச்ச நீதிமன்றம் நடவடிக்கை...

கார்பரேட் வியாபார உண்மைகள்...


நமக்குள் இருக்கும் சக்தி...


நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு மகாசக்தி இருக்கிறது. அது நம்முடைய பார்வைக்குத் தெரியாவிட்டாலும் கூட நம்மால் அதனைப் பயன்படுத்திக் கொண்டு பிரமாதமான பலன்களைப் பெற முடியும்.

இந்த உலகம் பார்த்திருக்கிற புதிய கண்டுபிடிப்புகள், கலைப் படைப்புகள், மருத்துவ சிகிச்சைகள், புத்தகங்கள், இசைத் தொகுப்புகள், இன்னும் நம்மைச் சுற்றியிருக்கிற எல்லாமே இந்த ஒரு சக்தியின் துணையோடு உருவாக்கப்பட்டவை தான்.

சராசரி மனித மனதில் நல்ல சிந்தனைகள், கெட்ட சிந்தனைகள் இரண்டுமே உண்டு. அவற்றின் விகிதம் மாறலாமேதவிர, முழுக்க முழுக்க நல்லதைமட்டுமே நினைக்கிறவர் என்று யாரும் கிடையாது.

வெறுப்புச் சிந்தனைகளின் தாக்கத்தைக் குறைந்து அன்புச் சிந்தனைகளை ஊக்குவித்து வாழ்க்கையில் அமைதி, நிம்மதி, செயல்திறன், சாதனைகள் என்று படிப்படியாக மேலே அழைத்துச் செல்கிறது.

நமக்குள் இருக்கும் அந்தச் சக்தியை அடையாளம் காண்பது எப்படி? அதை வெளிக் கொண்டு வருவது எப்படி?

எதையும் சாதிக்கக்கூடிய இந்தப் ‘சக்தி’ பூட்டைத் திறப்பதற்கு மூன்று சாவிகள் உள்ளன. அவை...

1. அன்புச் சாவி
2. நன்றிச் சாவி
3. விளையாட்டுச் சாவி

1. அன்புச் சாவி...

உலகின் மிக உன்னதமான ஆற்றல், அன்புதான். அதைக் கொண்டு எந்தக் கதவையும் திறந்துவிடலாம்.

ஒரு மனிதரை, ஒரு குடும்பத்தை, ஒரு வீட்டை, ஒரு நாட்டை மட்டும் நேசித்தால் போதாது. ஒட்டுமொத்த உலகத்தையும் மானுட குலத்தையும் நேசிக்கப் பழகுங்கள். அதனால் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை அழகாகும்.

நீங்கள் எதையெல்லாம், யாரையெல்லாம் நேசிக்கிறீர்கள்? மனத்துக்குள் ஒரு லிஸ்ட் போட்டுக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் அந்த அன்புப் பட்டியலில் உள்ளவர்கள் மத்தியிலேயே அதிக நேரம் செலவிடுங்கள்.

அதன்மூலம் ஏற்படுகிற மகிழ்ச்சியும் திருப்தியும் உங்களுடைய செயல் திறனை உயர்த்தும், உங்களை ஒரு புதிய மனிதராக மாற்றிவிடும்.

2. நன்றிச் சாவி...

வாழ்க்கை இதுவரை உங்களுக்குத் தந்திருக்கிற, தந்து கொண்டிருக்கிற, இனி தரப்போகிற எல்லா விஷயங்களுக்காகவும் மனமார நன்றி சொல்லிப் பழகுங்கள். உரக்கச் சொல்ல வேண்டாம், மனத்துக்குள் அதை உணர்ந்தாலே போதும்.

நீங்கள் சந்திக்கிற எல்லோரும் உங்களுக்கு ஏதோ ஒருவிதத்தில் உதவுகிறார்கள், ஏதாவது பாடம் சொல்லித்தருகிறார்கள். அந்த உதவி சிறியதோ, பெரியதோ, வாய் திறந்து நன்றி சொல்லுங்கள். உலகம் உங்களை இன்னும் நேசிக்கும். உங்களுடைய வளர்ச்சிக்கு அவர்கள் உதவுவார்கள்.

3. விளையாட்டுச் சாவி...

வாழ்க்கை என்பது சீரியஸான மேட்டர் அல்ல. மனம் விட்டுச் சிரியுங்கள். ஒவ்வொரு கணத்தையும் அனுபவியுங்கள். சுருக்கமாகச் சொல்வதென்றால், சும்மா பூந்து விளையாடுங்க..

சிறுவயதில் நாமெல்லாம் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்தவர்கள் தான். வயது ஏற ஏற, விளையாட்டை அலட்சியப்படுத்துகிறோம்.

அதனால் தான் அநாவசியப் பதற்றம், பரபரப்பு, டென்ஷன் எல்லாமே.

சின்ன வயதில் விளையாட்டாய் நிறைய கற்பனைகள் செய்வோம். ஆனால் வயது ஏறும்போது கற்பனைகளைக் குறைத்து விடுகிறோம்.

கற்பனை என்பது ஒரு மிகப் பெரிய வரம். அதை வைத்துக் கொண்டு நாம் எங்கேயும் பயணம் செய்யலாம். நம்முடைய பாதையை நாமே உருவாக்கிக் கொள்ளலாம். உங்கள் கற்பனைக் குதிரைக்கு ஓய்வே கொடுக்காதீர்கள். தொடர்ந்து ஓட விடுங்கள். அது மேலும் மேலும் புதிய இலக்குகளை கற்பனை செய்யட்டும். அதன்மீது உட்கார்ந்து சவாரி செய்யும் நீங்களும் புதுப்புது சிகரங்களைத் தொடுவீர்கள்.

நம்பிக்கை உள்ள ஒருவருக்கு எதுவும் சாத்தியம் என்கிறது பைபிள். நம் ஊரிலும் நம்பினோர் கெடுவதில்லை என்று ஒரு வாசகம் உண்டு.

மகாசக்தி எது என்று உங்களுக்கு புரியாவிட்டாலும் கூடப் பரவாயில்லை. அப்படி ஒன்று உங்களுக்குள் எங்கேயோ இருக்கிறது என்று நம்பிக்கை மட்டும் வைத்து, அன்பு, நன்றி, விளையாட்டு என்கிற மூன்று சாவிகளைப் பயன்படுத்திப் பார்க்கலாமே...

தமிழ்நாட்டிலுள்ள காளை நாட்டு மாடுகள் வகைப்பட்டியல்...


இதில் பல மாடுவகைகள் பீட்டாவால் ஏற்கனவே அழிக்க பட்டுவிட்டது...

திருட்டு திராவிடம்...


தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவராகவும், வீட்டில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனவும், வெளியில் தமிழும் பேசிவந்த இரு மொழியர் மட்டுமே தங்களை திராவிடர் என அழைத்துக் கொண்டனரேயன்றி...

ஆந்திரர்களோ , கன்னடர்களோ, மலையாளிகளோ என்றுமே தங்களை திராவிடர்கள் என அழைத்துக் கொண்டதும் இல்லை, ஏற்றுகொண்டதும் இல்லை...

ஆனால் இளிச்சவாய்த் தமிழன் மட்டுமே திராவிடன் ஆனான்...

தாழ்த்தப்பட்டோர் எனப்பட்ட நலிந்த தெலுங்கு, மலையாளி, கன்னடச் சாதியினர் முறையே ஆதி ஆந்திரர் என்றும் ஆதி கேரளர் என்றும் ஆதி கர்நாடகர் என்றும் ஏற்கனவே இவர்கள் அழைக்கப்பட்டிருந்த போதிலும்...

தமிழினத்தின் மூத்த குடிமக்களாகிய, தாழ்த்தப்பட்டோர் எனப்பட்ட தமிழகத்தின் நலிந்த சாதியினர் மட்டும் ஆதிதமிழர் என அழைக்கப்படாமல் ஆதி திராவிடர் என இழிவுபடுத்தப்பட்டனர்.

அந்த ஆதிதமிழரை ஆதி திராவிடர் என்றும், பிற சாதி இந்துக்கள் என்றும் முதன்முதலில் பிரித்து எழுதியும், பேசியும், சாதி இந்துக்கள் என்ற சொல்லை ஆக்கியும் அறிமுகப்படுத்தியும், தமிழர்களை சாதியாய் பிரித்து இழிவுபடுத்தியது அன்றைய நீதிக்கட்சியின் ஏடான திராவிடன் ஏடுதான் என்பதை நினைவில் கொள்க.

இத்திராவிடக் கருத்தியலின் விளைவாகத் தமிழர்கள் ஒரு தனி இனமெனும் அடையாளத்தையே இழந்து வருகின்றனர்.

தமிழர்கள் திராவிட மயமாக்கப்பட்டு விட்டதால் இனப் பற்றும், இன மானமும், இன நலனும் இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப் பட்டுள்ளனர்...