கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. கடந்த 7 மாதமாக இந்த கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. இந்த ஆட்சியை கவிழ்ப்பதற்காக உருவாக்கப்பட்டதே பாஜகவின் ஆபரேஷன் தாமரை. கடைசியில் இதன் மூலம் ஆட்சியை கவிழ்க்க முடியாததால், அந்த திட்டத்தை பாஜக கட்சி கைவிட்டுள்ளது.
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 12-15 பேரை பதவி விலக வைத்து, சட்டசபையின் பலத்தை குறைத்து, ஆட்சியை கவிழ்க்க வைப்பதே பாஜகவின் திட்டமாக இருந்தது. அதன்பின் 104 எம்எல்ஏக்களின் பலத்தை வைத்து ஆட்சியை பிடிக்கலாம் என்று பாஜக திட்டமிட்டு இருந்தது. இதனால்தான் ஆபரேஷன் தாமரை 3.0 கையில் எடுக்கப்பட்டது.
இது போல மூன்றாவது முறையாக பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டு இருக்கிறது. ஏற்கனவே இரண்டு முறை முயன்று, அது தோல்வியில் முடிந்தது. அப்போதும் பாஜக, காங்கிரஸ் எம்எல்ஏக்களை பதவி விலக வைக்க திட்டமிட்டது. அது தோல்வியில் முடியவே, மூன்றாவது முறையாக இந்த திட்டம் கையில் எடுக்கப்பட்டது.
ஏன் இப்போது ஏன் இப்போது இப்போது ஆட்சியை கலைத்தால்தான் லோக் சபா தேர்தல் சமயத்தில் பாஜக கர்நாடகாவில் ஆட்சியில் இருக்க முடியும். அதனால் லோக் சபா தேர்தலில் பாஜகவிற்கு இன்னும் பலம் கிடைக்கும். இதனால்தான் தற்போது பாஜக ஆபரேஷன் கமலாவை கையில் எடுத்து இருப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு வைத்தது.
கர்நாடகாவை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மூன்று பேர் மும்பையில் தங்கி இருப்பதாக செய்திகள் வந்தது. இவர்கள், பாஜகவினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக செய்திகள் வந்தது. இது இரண்டு நாட்கள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் கடைசிவரை இவர்கள் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணிக்கு தங்கள் ஆதரவை வாபஸ் பெறவில்லை.
இந்த நிலையில் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணியின் ஆட்சியை கவிழ்ப்பதற்காக பாஜக கையில் எடுத்த ஆபரேஷன் தாமரை தோல்வி அடைந்து உள்ளதாக தகவல்கள் வருகிறது.
பாஜகவை சேர்ந்த முக்கிய தலைவர்களே இதை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. 3 எம்எல்ஏக்களை மட்டுமே பதவி விலக வைக்கும் அளவிற்கு மனது மாற்ற முடிந்தது, 16 எம்எல்ஏக்களின் ஆதரவை பெறுவது கடினம் என்பதால் இந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.