07/11/2018
கன்னட ஈ.வே. ராமசாமி மூவர்ணக் கொடியைக் கொளுத்தினாரா?
சில வந்தேறி திராவிட பயல்கள்
அவர்களது நைனா ஈ.வே.ரா தேசியக் கொடியைக் கொளுத்தினார் என்றும்.. இந்திய வரைபடத்தில் தமிழகத்தை தவிர பிற பகுதிகளை கொளுத்தினார் என்றும் இரண்டு பொய்களைக் கூறுவார்கள்...
ஈ.வே.ரா இந்தியாவின் தேசியக்கொடி அல்லது வரைபடத்தைக் கொளுத்தியதற்கு எந்த சான்றுமே கிடையாது.
அவர் தேசியக்கொடி மீது மதிப்பு வைத்திருந்தார் என்பதற்கு ஒரு சான்று உண்டு.
1965ல் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்திய மாணவர்களை கடுமையாக விமர்சித்தும், அவர்களை சுட்டுத்தள்ள வேண்டுமென கொலை வெறியுடனும் ஈ.வே.ராமசாமி தொடர்ந்து எழுதிய காலத்தில்...
திருவல்லிக்கேணி பெரிய தெரு,
வாலாஜா ரோடு சாலை ஓரங்களில் குடியரசு தினத்திற்காக கட்டப்பட்ட தேசியக் கொடி தோரணங்களை
மாணவர்கள் அறுத்து சொக்கப்பனை போல் கொளுத்தி அவமதித்திருக்கின்றனர்.
(7 கல்லூரிகள் மாணவர்கள் கோட்டைக்கு ஊர்வலம் சென்று அமைச்சர் வெங்கட்ராமனை சந்தித்து மகஜர் கொடுக்க புறப்பட்ட வழியில்) என்று எழுதியுள்ளார். (விடுதலை, 13.02.1965).
இதிலிருந்து அவர் தேசியக்கொடியை எரித்தவரில்லை என்பது தெளிவாகிறது...
சோழர் காலத்தில் ஆட்சி முறை அமைப்பு...
ஒரு நாடு சீராய் செயலாற்ற, நல்ல நிர்வாகம் தேவைப்படுகிறது. இங்கு நாம் பார்ப்பது, சோழ ஆட்சியின் அமைப்பு.
இந்த படம், இன்று மக்களாட்சி என்று நாம் பின்பற்றும் விடயங்கள், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, இந்த மண்ணில் இருந்தவை என்பதை கூறுகிறது.
நகரின் வகைக்கு ஏற்ப, அதன் ஆட்சியையும், நிர்வாகத்தையும் மாற்றி அமைத்துள்ளனர்.
குறிப்பு: ராசராசசோழன் வரலாற்றுக்கூடம் புத்தகத்தில் இருந்து பகிர்ந்து கொள்ளப்பட்டது...
அறியப்படாத தியாகிகள் தினம்...
கோலார் தங்கவயல் தமிழர்களின் தியாகம் வரலாற்றில் இன்னும் முழுமையாக பதிவு செய்யப்படவில்லை. தமிழ் பவுத்தம், அம்பேத்கரிய எழுச்சி, தமிழிய அரசியல், முற்போக்கு கோட்பாடுகளுக்கு மட்டுமல்லாமல் தொழிற்சங்க செயல்பாடுகளுக்கும் தங்கவயல் நாற்றாங்காலாக இருந்திருக்கிறது. இந்தியாவின் தொடக்க கால தொழிற்சங்கங்களில் மிக தீவிரமாக செயல்பட்ட தொழிற்சங்கமாக தங்கவயல் தொழிற்சங்கத்தை குறிப்பிடுகிறார்கள். ஒரு வகையில், நவீன இந்தியாவின் அத்தனை முற்போக்கு அரசியல் கோட்பாடுகளையும் அங்கிருக்கும் ஒடுக்கப்பட்டோர் நீருற்றி வளர்த்திருக்கிறார்கள் எனலாம்.
1930- களில் சுரங்கத்தில் பாதுகாப்பு வசதி செய்யக்கோரி, தொழிலாளர்களிடம் பத்து விரல் ரேகை எடுப்பதை எதிர்த்து, தொழிலாளர்களின் கையில் காப்பு போட்டதை கண்டித்து வஜ்ரவேலு செட்டியார் உள்ளிட்ட தொழிற்சங்கவாதிகள் நடத்திய போராட்டங்கள் தாக்கத்தை ஏற்படுத்தின. 1946-ல் கே.எஸ்.வாசன், வி.எம்.கோவிந்தன் ஆகியோர் தலைமையில் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், வீட்டு வசதி, பாதுகாப்பு கவசம் உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுரங்க தொழிலாளர்கள் நடத்திய வேலை நிறுத்த போராட்டம் 78 நாட்கள் நீடித்தது. தங்கத்தை வெட்டியெடுக்கும் பணிகள் முற்றிலுமாக முடங்கியதால், மூர்க்கத்தின் உச்சத்தில் இருந்த பிரிட்டிஷ் நிர்வாகமும், மைசூரு அரசுமும் இறங்கி வந்தன. தொழிலாளர்களின் 26 கோரிக்கைகளில் 18 கோரிக்கைகளை ஏற்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்த மாபெரும் வெற்றிக்கு காரணமாக இருந்த தொழிற்சங்கத் தலைவர் கே.எஸ்.வாசன் ஆளும் வர்க்கத்தால் குறி வைக்கப்பட்டார். அடுத்த சில தினங்களில் கே.எஸ்.வாசன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தகவல் பரவியதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஆண்டர்சன்பேட்டை மைதானத்தில் திரண்டு போராட்டம் நடத்தினர். கொந்தளிப்பான போராட்டத்தை சிதைக்க, 1946-ம் ஆண்டு நவம்பர் 4-ம் தேதி போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் காளியப்பன், சுப்பிரமணி, ராமசாமி, சின்னப்பன், கண்ணன், ராமையா ஆகிய 6 தொழிலாளர்கள் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டனர்.
புலம்பெயர்ந்த ஏழை தொழிலாளர்களின் இந்த பலி, வரலாற்றில் பொருட்படுத்தத்தக்க வலியை தராமல் போய் விட்டது. ஆனால் தங்கவயல் சுரங்கத் தொழிலாளர் வாழ்வில் இந்த ஆறு தியாகிகளின் மரணம், ஆறா வடுவாக இருக்கிறது. ரத்தம் சிந்தியோரை நினைவுக்கூறும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 4-ம் தேதியை தியாகிகள் தினமாக அனுசரித்து வருகின்றனர். நேற்று (நவம்பர் 4) தியாகிகள் தினத்தையொட்டி, இடதுசாரி இயக்கத்தினர் தியாகிகளின் கல்லறைகளுக்கு செவ்வண்ணம் பூசி, மலர்களை தூவி, செவ்வணக்கம் செலுத்தினர்.
கோலார்தங்கவயல் ஒடுக்கப்பட்ட தொழிலாளர்களின் இந்த தியாகம் தமிழ்ப் பரப்பிலும், முற்போக்கு தளத்திலும் கூட பெரிதாக அறியப்படாமல் இருப்பது பெரும் வருத்தத்தை தருகிறது...
ஆவ்னியைக் கொன்றது யார்?
பிறந்து 10 மாதங்களேயான இரண்டு புலிக்குட்டிகளின் தாயான 6 வயது புலியை அஸ்கர் அலி கான் தான் சுட்டுக் கொன்றார். அஸ்கர் அலி கான் யாரென நீங்கள் கேட்கலாம். எந்தவொரு அனுமதியும், உரிமையும் இன்றி வனத்திற்குள் நுழைந்து, நம் ரத்தம் மொத்தமும் உறைவது போன்று அந்த புலியை வேட்டையாடியவர்.
டி1 என்ற இயற்பெயரைக் கொண்ட அந்த புலி, ஆவ்னி என பரவலாக அழைக்கப்பட்டது. மஹாராஷ்டிரா மாநிலத்தின் யாவாடாமல் மாவட்டத்திலுள்ள பந்தர்காவாடா காடுதான் ஆவ்னியின் வாழ்விடம். உள்ளூர் மக்களும் முதலாளிகளும் ஆக்கிரமித்துள்ள சிறிய காடு அது. சுண்ணாம்பு, நிலக்கரி, டாலமைட் உள்ளிட்ட வளங்களையுடைய அந்த வனத்தை சுற்றியுள்ள பகுதியில் அனில் அம்பானி சிமெண்ட் ஆலை அமைக்க எண்ணினார். அதற்காக அங்கு சிறிய தனியார் நிலத்தை வாங்கிவிட்டு, அப்போதைய காங்கிரஸ் அரசாங்கத்திடம் வனப்பகுதியின் நிலத்தையும் கோரினார். காங்கிரஸ் அரசாங்கமும் வனப்பகுதியை அம்பானிக்கு தருவதற்காக உற்சாகத்துடன் ஒத்துக்கொண்டது. ஆனால், அதற்குள் காங்கிரஸ் அரசாங்கம் முடிவுக்கு வரவே, பாஜக அந்த வேலையை செய்தது. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் சிமென்ட்ரேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு 467.5 ஹெக்டேர் வன நிலத்தை சொற்ப 40 கோடிக்கு பாஜக அரசு வழங்கியது. இதன்பின், அனில் அம்பானி தனது சிமெண்ட் சார்ந்த தொழில்கள் அனைத்தையும் ஹர்ஷ் வர்தன் லோதாவின் பிர்லா குழுமத்திற்கு 4,800 கோடிக்கு விற்றுவிட்டார்.
ஆனால், இவற்றுக்கும் ஆவ்னியின் படுகொலைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? எல்லா தொடர்பும் இருக்கிறது. ஆவ்னி தனித்த ஒற்றை புலி அல்ல, அது தன்னுடைய இணையுடன் அந்த வனத்திற்கு இடம்பெயர்ந்து இனப்பெருக்கம் செய்தது. அப்படியென்றால், அடுத்து வரும் பத்தாண்டுகளில் அந்த வனத்தில் புலிகளின் எண்ணிக்கையை ஆவ்னி பெருக்கியிருக்கும். ஆனால், அது சிமெண்ட் ஆலை நிறுவனத்திற்கோ அல்லது 4,000 கோடி மதிப்பிலான ஜின்புவிஷ் அனல் மின் நிலையம், அல்லது வரவிருக்கும் ஏசிசி சிமெண்ட் ஆலை நிறுவனத்திற்கோ பலனளிப்பதாக இல்லை. இந்த தொழில் நிறுவனங்கள் அனைத்தும் அந்த வனத்தின் வளங்களை பெருமளவு சுரண்டுவதிலேயே தங்கள் எண்ணத்தைக் கொண்டிருந்தன. அரசாங்கமும் வனப்பகுதியை பெருமுதலாளிகளுக்கு கேக் துண்டுகளை போன்று வெட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கையில், ஆவ்னியின் இருப்பிடம் அரசுக்கு பெருத்த தொந்தரவை ஏற்படுத்தியது. அதனால் 'பெருமுதலாளிகளின் தோழனான அமைச்சர்', அதாவது மஹாராஷ்டிரா மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு.சுதிர் முகந்திவார், ஆவ்னி புலியின் பெயரில் பொதுமக்களிடையே அச்சத்தை அரும்பவிட்டார். அந்த பகுதியில் நிகழும் இயற்கைக்கு மாறான அல்லது இயற்கையான மரணங்களுக்குக்கூட ஆவ்னி மீது பழிசுமத்தப்பட்டது. ஆவ்னியால் நிகழ்ந்ததாக குற்றம்சாட்டப்படும் 13 பேரின் மரணத்தில், 3 மனித உடல்கள் மீது மட்டுமே டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டது, அதில் இரண்டு பேரிடத்தில் மட்டுமே புலியின் டிஎன்ஏ கண்டறியப்பட்டது. புலிகளின் உணவு பழக்கத்தை கண்டறிய மேற்கொள்ளப்படும் ஸ்காட் (SCAT) பரிசோதனையும் ஆவ்னி மீது நிகழ்த்தப்படவில்லை. அதனால், ஆவ்னி உணவுக்காக மனிதர்களை கொன்றதா அல்லது தன் குடும்பத்தை காப்பதற்காக கொன்றதா அல்லது உண்மையிலேயே ஆவ்னிதான் அவர்களை கொன்றதா என்பதை அறிய எந்த வழிகளும் இல்லை.
அந்த பகுதியிலுள்ள கிராம மக்கள் மற்றும் பழங்குடிகள் விவசாயிகளுக்கு எதிரான அரசின் கொள்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள், அரசின் நடைமுறைகளால் பாதிப்புக்கு உள்ளானவர்கள். மஹாராஷ்டிராவின் யாவடாமால் மாவட்டம் இந்தியாவில் நிகழும் விவசாயிகள் தற்கொலைகளுக்கு தலைநகர். வறட்சி, நீர்ப்பாசன குறைபாடு, லாபம் கொடுக்காத பயிர், வளர்ந்துகொண்டே செல்லும் விவசாய கடன் இவையெல்லாம் சேர்ந்து அம்மக்களை வறுமையிலும் இழப்பிலுமே ஆழ்த்தியுள்ளது. அதனால், அம்மக்கள் வாழ்வாதாரத்திற்கு வேறு வழியின்றி அடர் வனத்திற்குள் உணவுக்காகவும், மேய்ச்சலுக்காகவும் செல்வர். வனத்தில் நிகழும் அசாதாரண மரணங்களுக்கு அரசு கொடுக்கும் 10 லட்சம் நிவாரண நிதி, விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்டால் கிடைக்கும் இழப்பீட்டை விட 3 மடங்கு அதிகம். அதிலும், தற்கொலை செய்துகொண்ட விவசாயியின் குடும்பம் இழப்பீடு பெற, அவர் தற்கொலைதான் செய்துகொண்டார் என்பதை நிருபிக்க வேண்டும். இந்த சூழ்நிலையில், மனித-விலங்கு முரண்கள் அந்த வனப்பகுதியில் அச்சம் நிறைந்ததாக்கப்பட்டது. வனத்தின் உள்ளே ஆவ்னி தன் குட்டிகளை கடுமையான சிரத்தையுடன் பாதுகாக்கும் வாழ்விடத்தில் 11 மனித மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த துன்பகரமான சூழலை தீர்க்க ஆவ்னி மற்றும் அதன் குடும்பத்தை பாதுகாப்பாக மீட்டு புலிகளின் வாழ்விடத்திற்கு கொண்டு செல்ல முடிவெடுக்கப்பட்டது. ஆனால், அது அவ்வளவு சுலபமாக இல்லை.
கோடை காலம் புலிகளை மீட்க சிறந்த காலமாக இருந்திருக்கும். ஆனால், மழைக்காலம் வந்துவிட்டது, அதனால் மக்கள் மீண்டும் வாழ்வாதாரத்திற்காக வனத்திற்குள் செல்ல அச்சப்பட்டனர். ஆகஸ்டு 2018 இல் மூன்று மரணங்கள் வனத்திற்குள் நிகழ்ந்தன, அந்த மரணங்களுக்கான பழியும் ஆவ்னியின் காலடி மீது விழுந்தது.
அதனால், அமைச்சர் முகந்திவாரும் முதன்மை வன பாதுகாவலர் ஏ.கே.மிஸ்ராவும் பல கேள்விகளை எழுப்பும் விதத்தில், வனவிலங்குகளை வேட்டையாடும் தனியாரை சேர்ந்த நவாப் அலிகானிடம் ஆவ்னியை கொல்லும் பொறுப்பை ஒப்படைத்தனர். ஆனால், ஏன் அந்த வேட்டையாளர் நவாப் அலி கான், அரசு நிபுணர்கள், கால்நடை மருத்துவர்கள், வனத்துறை அதிகாரிகள், ஆயுத படையினர் அனைவரையும் விட சிறந்தவர் என்பதை அரசு விளக்கவில்லை. ஆனால், அரசின் வளங்களை பயன்படுத்தி ஆவ்னி மற்றும் அதன் குடும்பத்தை மீட்டு பாதுகாப்பாக வேறொரு இடத்தில் விடலாம் என்று வனவிலங்கு ஆர்வலர்களும், நிபுணர்களும் கோரிக்கை விடுத்ததை அரசு அப்படியே புறந்தள்ளியது. கிராம மக்கள் காட்டிற்கு மேய்ச்சலுக்கு செல்லாமல் தடுக்கும் வகையில் தீவனம் வழங்க விருப்பம் தெரிவித்த அரசு சாரா நிறுவனங்களின் கோரிக்கையையும் அரசு புறக்கணித்தது.
ஆவ்னியை கொல்ல அரசு முடிவெடுத்ததால் கோபமடைந்த ஆர்வலர்கள் நீதிமன்றத்தை நாடினர். நீதிமன்றம் புலிகளை பாதுகாப்பாக கைப்பற்ற வேண்டும் எனவும், கடைசி முயற்சியாகவே புலியை கொல்ல வேண்டும் எனவும் மாநில அரசுக்கு அறிவுறுத்தியது.
அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் இந்த விஷயத்தில் அமைச்சர் மேனகா காந்தியும், நாடாளுமன்ற உறுப்பினரும் தலையிட்டு, புலியை கைப்பற்ற நவாப் அலிகானை நியமிக்கும் பொறுப்பை கைவிட்டு விட்டதாகவும், அவர் துணைக்கு மட்டுமே வனத்திற்குள் அழைத்துச் செல்லப்படுவார் எனவும் எங்களுக்கு தெரிவித்தனர். கால்நடை மருத்துவர்கள் குழுவுடன் அவர் இருப்பார் என தெரிவிக்கப்பட்டது. அரசு அவ்வாறு சொன்னது உண்மையில்லை என தெரிந்தது. ஆனால், நவாப் அலி கானுக்கு அது வேட்டை திருவிழா போன்றதாகவே இருந்தது. நவாப் அலி கான் தனது நண்பர் ஜோதி ரந்தவா மற்றும் அவரது மகன் அஸ்கர் அலி கான் ஆகியோரையும் இந்த மனித தன்மையற்ற செயலை செய்வதற்காக உடன் அழைத்து வந்திருந்தார்.
அஸ்கர் அலி கான் தான் ஆவ்னியை சுட்டுக் கொன்றது. அவருக்கு அங்கு இருக்கவே உரிமை இல்லை, எந்தவொரு அதிகாரமும் இல்லை. அஸ்கர் அலிகான் வனவிலங்குகளை வேட்டையாடுபவர். வனவிலங்குகளை வேட்டையாட வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை இங்கே பொருத்திப் பார்க்க வேண்டும்.
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வேட்டையாடுவதற்கென சில விதிமுறைகளை வகுத்துள்ள்து. சூரியன் உதித்து அது மறைவதற்குள் வேட்டையாட வேண்டும். ஆனால், அஸ்கர் அலிகான் நள்ளிரவில் வனத்திற்குள் இருந்துள்ளார். அந்த நள்ளிரவிலும் தான் சுட்டுக்கொல்லப் போவது பெண் புலி ஆவ்னிதான் என்பது எப்படி தெரியும்? அந்த உண்மை நமக்கு தெரிய போவதில்லை. எனென்றால், நியமிக்கப்பட்ட கால்நடை மருத்துவக் குழுவும் அங்கு இல்லை.
ஆவ்னி கொல்லப்பட்டது. அதன் குட்டிகளும் துணையும் உயிருடன் உள்ளதா அல்லது அவையும் கொல்லப்பட்டதா என்பது தெரியவில்லை. இப்போது பந்தர்காவாடா வனத்தை எளிதாக சுரண்டலாம். சொல்வதற்கு ஒன்றே ஒன்றுதான் உள்ளது. ஆவ்னி, எங்களை மன்னித்து விடு, நாங்கள் உன்னைக் காப்பாற்றுவதில் இருந்து தோற்று விட்டோம்.
கொஞ்சம் பொறுங்கள், இந்த படுகொலையில் வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் அரசின் பாத்திரங்களை மீண்டும் வலியுறுத்தவில்லையென்றால் இந்த இரங்கல் முடிவு பெறாது.
யோசியுங்கள் - ஒரு விலங்கு உயிருடன் இருக்க வேண்டும் என ஒரு மனிதர் போராடினால், அவர் மற்ற சக மனிதர்களிடத்தில் எவ்வளவு அக்கறையாக இருக்கிறார் என்பது புரியும். இந்த விஷயத்தில் ஆவ்னியை பாதுகாப்பாக மீட்டு வேறொரு இடத்தில் விட வேண்டும் என வலியுறுத்தியது வனவிலங்கு ஆர்வலர்கள் மட்டுமே. ஆவ்னி அதே இடத்தில் சுதந்திரமாக சுற்றி வரட்டும் என அவர்கள் சொல்லவில்லை.
யோசியுங்கள் - தற்கொலை செய்துகொள்ளும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மீது அக்கறையில்லாத அரசாங்கத்தால், எப்படி அந்த கிராம மக்களின் நலனுக்காக யோசிக்க முடியும்? அதற்காக வேட்டையாடும் நபருக்காக செலவு செய்யவும் முடிகிறது.
மக்களையும், விலங்குகளின் வாழ்விடங்களையும் பிரித்து இரண்டு தரப்பினரும் வாழ்வதற்காக வனவிலங்கு ஆர்வலர்கள் போராடினர். ஆனால் , அரசாங்கம் இரண்டு தரப்பினரின் வாழ்விடத்தையும் பெருமுதலாளிகளிடம் கொடுப்பதற்கான வேலைகளை செய்தது. அதற்காக, ஆவ்னி தன் உயிரை விலையாக கொடுத்தது.
Source: newsd.in
Author: Preeti Sharma Menon
Translation: Nandhini Vellaisamy
Translated with author's permission
எங்களை எதிர்த்தால் கூட்டு பலாத்காரம் செய்து விடுவோம்.. பெண் காங்கிரஸ் தலைவருக்கு மிரட்டல்...
கோவா காங்கிரஸ் கட்சியின் பெண் தலைவர் தியா ஷேத்கர். இவர் காவல் நிலையத்தில் ஒரு புகாரை அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் சுபாஷ் சிரோத்காரின் ஆதரவாளர் ஒருவர் எனக்கு போன் செய்தார்.
அவர் என்னிடம் மிகவும் ஆபாசமான வார்த்தைகளை பிரயோகித்தார். பின்னர் சிரோத்காரின் தொகுதிக்கு வந்து பிரசாரம் செய்தால் கூட்டு பலாத்காரம் செய்து விடுவோம் என்று மர்ம நபர் தெரிவித்ததாக தியா புகார் அளித்தார்
அக்டோபர் மாதம் சிரோத்கார் பாஜகவில் இணைந்தார். தியாவின் புகாருக்கு சிரோத்கார் எந்த பதிலையும் அளிக்கவில்லை...
ரஷ்ய விஞ்ஞானி டாக்டர் விளாதி மீரின் சிவலிங்க ஆராய்ச்சி...
சிவலிங்கங்கள்ப் பற்றிய டாக்டர் “விளாதி மீரின்” என்பவரின் ஆராய்ச்சி மிக வித்தியாசமானது. அது இந்த பூமியில் மொத்தம் எத்தனை லிங்கங்கள் உள்ளன என்று எண்ணிப் பார்க்கவோ, இல்லை அவற்றின் பூர்வ புராணக் கதைகளை அறியவோ முயலவில்லை.
இவற்றுக்கப்பால் சிவலிங்கங்கள் பற்றி நாம் யோசிக்கவும் அதை நாம் நேசிக்கவும் நிறைய அடிப்படைகள் இருப்பதாக டாக்டர் விளாதிமீர் கருதினார். அதில் முதலாவது, ஸ்தூல வடிவங்களில் இறை உருவங்களை உருவாக்கி வழிபாடு செய்யும் இந்து மதத்தில் ஒரு குழவிக் கல்லைப் போன்ற லிங்கம் என்னும் உருவமற்ற ஒரு உருவம் எப்படி உட்புகுந்தது என்பது தான்.
உண்மையில் லிங்க சொரூபமானது மூன்று மதத்திற்கும், புத்த ஜைனர்களுக்கும் கூட பொதுவானது என்பதையும் அவர் கண்டு பிடித்தார்.
ஒரு மலை உச்சி, அதில் பௌர்ணமி இரவில் கரிய நிழல் உருவாய் கண்ணுக்குத் தெரிந்த லிங்க உருவத்தை ஒரு கிருத்தவன் சிலுவைச் சின்னமாகப் பார்த்தான். ஒரு இஸ்லாமியன் தங்களின் மசூதிக் கூரை தெரிவதாக கருதினார்.
புத்த ஜைன சன்யாசிகள் தங்கள் குருமகாங்கள் அமர்ந்து தவம் செய்து கொண்டிருப்பதாகக் கருதினார்கள். ஒரு இந்துவோ அது சிவலிங்கம் என்று திடமாக கருதி இருந்த இடத்தில் இருந்தே வில்வ இலைகளை வாரி வாரி அர்ச்சித்தான்.
உருவம் ஒன்று. ஆனால் அனைத்து மார்க்க தரிசிகளையும் அது திருப்திப்படுத்தியது என்றால் சிவம்தான் முதலும் முடிவுமான அனைவருக்கும் பொதுவான இறை ஸ்வரூபமா? டாக்டர் விளாதிமீர் இப்படிதான் கேட்கிறார்.
மேலும் அவர் புராணங்களிலும், இதிகாசங்களிலும் சிவம் பற்றி சொன்னதை அவர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. லிங்க உருவம் பற்றி யாரும் சரியாக உணரவில்லை என்பதுதான் அவரது கருத்து. ஒரு ரஷ்ய நாட்டுப் பிரஜையாக இருந்தாலும் சிவலிங்க சொரூபம் அவருக்குள் ஆழமான பாதிப்புகளை உருவாக்கியதாக அவர் கூறுகிறார்.
லிங்கம், சதுரம், செவ்வகம், வட்டம், முக்கோணம் என்று கணித வடிவங்கள் அவ்வளவையும் தனக்குள் கொண்டிருப்பதாகவும், ஒவ்வொரு கோணத்தில் இருந்து பார்க்கும்போதும் ஒருள் பொருள் தருவதாகவும் இருக்கிறது என்பது அவர் கருத்து. குறிப்பாக அணு தத்துவம் சிவலிங்க சொரூபத்துக்குள் விலாவரியாக இருக்கிறது. லிங்கத்தைப் பயன்படுத்தத் தெரிந்தால், அது மழை தரும், நெருப்புத் தரும், காற்று தரும் கேட்ட எல்லாம் தரும், என்றும் நம்புகிறார்.
அப்படி என்றால் சிவமாகிய லிங்க ஸ்வரூபம் என்பது மானுடர்கள் பயன்படுத்தத் தெரியாமல் வைத்திருக்கும் மகத்தான ஒரு எந்திரமா?
டாக்டர் விளாதிமீரின் சிவஸ்வரூப ஆராய்ச்சியில் ஒரு ஆச்சரியமூட்டும் தகவல் ஒன்றும் அவருக்குக் கிட்டியதாம். இந்த மண்ணில் பூமிக்கு மேலாக கண்ணுக்குத் தெரியும் விதத்தில் உள்ள லிங்க ஸ்வரூபங்கள் இல்லாமல் பூமிக்குள் புதைந்து கிடக்கும் ஸ்வரூபங்களும் ஏராளமாம், அதுவே அவ்வப்போது ஸ்வயம்பு மூர்த்தியாய் வெளிப்படுகிறதாம்.
ஸ்வயம்பு மூர்த்தங்களின் பின்புலத்தில் பஞ்சபூத சக்திகளின் இயக்கம் ஒரு சீராகவும், ஆச்சரியம் ஊட்டும் விதத்தில் ஒன்றோடொன்று பின்னிப்பினைந்த கூட்டுறவோடும் செயல்படுகிறதாம்.
சுருக்கமாகச் சொன்னால், அந்த மூர்த்தங்களைப் பஞ்ச பூதங்கள் ஆராதிக்கின்றன என்பதே உண்மை என்கிறார்.
இப்படிப்பட்ட ஆராதனைக்குறிய இடங்களில் கூர்ந்து கவனித்தபோது பஞ்ச பூதங்களும் சம அளவிலும் அத்துடன் சீரான இயக்கத்துடனும் அவை இருக்கின்றன. மனித சரீரத்திலும் பஞ்ச பூதங்கள் உள்ளன. இவை சுயம்புலிங்க ஸ்தலங்களில் இயற்கையோடு கூடிச் செயல்படுகின்றன என்கிறார்.
அதாவது சுயம்பு மூர்த்தி உள்ள ஸ்தலங்களில் வாழும் மனிதர்களே அந்த மண்ணுக்கான மழை. காற்று, அக்கினி மண்வளம் ஆகியவைகளைத் தீர்மானிக்கிறார்கள் என்று கூறும் விளாதிமீர், மதுரை போன்ற சுயம்புலிங்க ஸ்தலங்களில் கூடுதலான மழை அல்லது குறைவான மழைக்கு அங்கு வாழும் மக்களின் மனநிலையே காரணமாகிறது என்கிறார். சுயம்பு லிங்கங்கள் உள்ள மண்ணில் வாழும் மக்கள் மனது வைத்தால் அங்கே எதை வேண்டுமானாலும் உருவாக்கிட இயலும் என்றும் கூறுகிறார்.
இந்த பூமியானது சூரியன் உதிர்ந்த ஒரு சிறிய அக்னித் துளி என்கிறது விஞ்ஞானம். மெல்லக் குளிர்ந்த இதில் அடுக்கடுக்காய் உயிரினங்கள் தோன்ற ஆரம்பித்தன. அந்த உயிரினங்கள் உயிர் வாழத் தேவையான அனைத்தும் கூட அப்போது தோன்றின. இதுதான் பல கோடி ஆண்டுகளைக் கண்டு விட்ட இந்த பூமியின் சுருக்கமான வரலாறு.
மாற்றம் என்பதே இந்தப் பூமியில் மாறாத ஒன்றாக என்றும் இருப்பது. அந்த மாற்றங்களால் வந்ததே இந்த மனித சமூகம். கூன் விழுந்த, கொத்துக் கொத்தான முடி கொண்ட ஏழு எட்டு அடிக்குக் குறையாத உயரம் கொண்ட குறைந்த பட்சம் 150.கிலோ எடையுடன் தொடங்கியதுதான் சராசரி மனிதனின் உடலமைப்பு.
இன்று அவன் சராசரியாக ஐந்தரை அடி உயரம், எண்பது கிலோ நிறை, நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை என்று மாறியிருக்கிறான். பல ஆயிரம் ஆண்டுகளாக இந்நிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. ஆனாலும் காலப்போக்கில் இவன் மேலும் குட்டியாகி சுண்டிச் சுருங்கி வினோதமான முக அமைப்பை எல்லாம் பெற்று. ஒரு பெருச்சாளி போல் நிலப்பரப்பைக் குடைந்து அதனுள் ஊர்ந்து சென்று பதுங்கி வாழும் காலம் வரலாம் என்பதெல்லாம் விஞ்ஞான அனுமானங்கள். இந்த பூமியில் கிடைக்கும் பலவித ஆதாரங்களும், மனித மனத்தின் ஊகம் செய்து பார்க்கும் சக்தியுமே.
இதன் நடுவே மிக மாறுபட்ட கருத்துகளுடன், நமக்கிருக்கும் அறிவாற்றலால் நம்ப முடியவில்லை என்று ஒரு வார்த்தையில் கூறும் விதமாய் இருப்பதே மதப் புராணங்கள். இதில் புராணவழி அறியப்பட்ட சிவமானது தனித்து நிற்கிறது. புராணம், விஞ்ஞானம் இரண்டையும் கடந்து மூன்றாவதாய் ஒன்றும் உள்ளது. அதுதான் நான். மானுடமே முடிந்தால் என்னைப் புரிந்துகொள் என்பது போல் இருக்கிறது அது என்கிறார் டாக்டர் விளாதிமீர்.
இந்த பூவுலகில் சிவம் தொடர்பான அடையாளக் குறியீடுகள் பாரத மண்ணில் மட்டுமன்றி ஆப்பிரிக்கா, ஐரோப்பா முதலிய கண்டங்களில் கூட இருக்கிறது என்பது டாக்டர் விளாதிமீரின் கருத்து.
அமெரிக்காவில் “ கிராண்ட் கன்யான் “ என்னும் வித்தியாசமான மலைப் பகுதியில் பராசக்தியின் அம்சங்கள் என்று வர்ணிக்கப்படும் “ சிவம், விஷ்ணு, பிரம்மன் “ மூன்றின் அடையாள உருவங்கள் காணப்படுகின்றனவாம்.
ஆயினும் இந்திய மண்ணில் மட்டும் சிவம் தொடர்பான சிந்தனைகளும் சைவம் என்கிற ஒரு பிரிவும் உருவாக ஆழமான ஒரு காரணம் இருப்பதாக விளாதிமீர் கருதுகிறார்.
உலகின் உயர்ந்த சிகரமான இமயம் பூகோள ரீதியில் பூமியின் மையத்தில் {கிட்டதட்ட} காணப்படுகிறது. அதன்படி பார்த்தால் இந்த உலகே கூட சிவலிங்க சொரூபம் எனலாம். ஒரு வட்டத்தில் இருந்து கூம்பு முளைத்தது போல் உலகமே ஆவுடையராகத் திகழ இமயம் சிவஸ்தம்பமாக எழும்பி நிற்கிறது.
அங்கே பஞ்ச பூத ஆராதனையாக குளிர்ந்த காற்றும் உறைந்த பனியே நீராகவும், அதன் முற்றிய குணமே நெருப்பாகவும் இருக்கிறது. ஈர்ப்பு விசைக்கு உட்பட்ட வெளி வேறு எங்கும் காணப்படாத விதத்தில் தூயதாக எல்லாவித கதிர் வீச்சுக்களையும் காணப்படாததாகக் திகழ்கிறது.
இங்கே உயிராகிய ஜீவன் மிகச் சுலபமாக சிவத்தை அடைந்து விட {அ} உணர்ந்து விட ஏதுவாகிறது. அதனாலேயே இங்கே ஞானியர் கூட்டம் அதிகம் இருக்கிறது என்பதும் அவரது கருத்து.
இந்த ரஷ்ய விஞ்ஞானி சொன்ன விஷயங்கள் எதுவும் எந்த விஞ்ஞானியும் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது...
ஒரே மாதத்தில் உடலில் உள்ள அதிக கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் அற்புத மருந்து...
உங்களுக்கு ஹோட்டல் உணவு அதிகம் பிடிக்குமா? உடற்பயிற்சி செய்யும் பழக்கமே இல்லையா? சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளதா? அப்படியெனில் உங்கள் உடலில் கெட்ட கொழுப்புக்கள் அதிக அளவில் தேங்கியிருக்க வாய்ப்புள்ளது.
பொதுவாக ஹோட்டல் உணவுகளில் கெட்ட கொழுப்புக்கள் மற்றும் சர்க்கரை அதிகமாக இருக்கும்.
இந்த உணவுகளை தொடர்ச்சியாக உட்கொண்டு வரும் போது, உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்து, உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனையை சந்திக்கக்கூடும். என்ன தான் கொலஸ்ட்ரால் உடலில் சில முக்கிய பணிகளை செய்து வந்தாலும், அதன் அளவு அதிகமாகும் போது, உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் பல நோய்களுக்கு உள்ளாக்கும்.
இங்கு கொலஸ்ட்ராலைக் குறைக்க மருத்துவர்களே பரிந்துரைக்கும் ஓர் அற்புத நாட்டு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தயாரித்து, அவற்றை உட்கொண்டு வர, விரைவில் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.
தேவையான பொருட்கள்:
விதை இல்லாத பேரிச்சம் பழம் - 3-4.
இஞ்சி சாறு- 2 டீஸ்பூன்.
பேரிச்சம் பழம்..
பேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது இரத்த குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும் கொழுப்புக்களை கரைத்துவிடும்.
இஞ்சி..
இஞ்சியில் உள்ள மருத்துவ குணத்தால், கொலஸ்ட்ரால் அளவு வேகமாக குறையும். ஏனெனில் இதில் உள்ள குறிப்பிட்ட அமிலம் உடலில் தேங்கும் அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் கரைத்துவிடும்.
செய்முறை:
முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, அத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
உட்கொள்ளும் முறை:
தயாரித்து வைத்துள்ள கலவையை தினமும் இரவில் உணவு உட்கொண்ட பின் சாப்பிட வேண்டும். இப்படி 2 மாதத்திற்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் முழுமையாக கரைந்துவிடும்.
குறிப்பு : இந்த இயற்கை மருந்தை தொடர்ந்து உட்கொண்டு, அதோடு சரியான டயட் மற்றும் உடற்பயிற்சியை செய்து வந்தால், அதிகப்படியான கொஸ்ட்ரால் குறையும். முக்கியமாக இந்த மருந்தை உட்கொண்டு வரும் போது, உணவுகளில் எண்ணெய் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டியது அவசியம்...
கேரள பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை சபரிமலை பிரச்சனை பற்றி தனி அறையில் பேசிய வீடியோ வெளியாகி பெரிய சர்ச்சை உருவாகியுள்ளது...
அதில் அவர் இவ்வாறு சொல்கிறார்,
"இந்த சபரிமலை பிரச்சனை நமக்கான மிகப்பெரிய வாய்ப்பு. நாம் இதில் உடனடி தீர்வை விடக்கூடாது. இந்துக்கள் அனைவரும் நம் கையில் சரண் அடைந்துவிட்டார்கள் இதை நாம் உபயோகப்படுத்த வேண்டும்.
சென்ற மாதம் அக்டோபர் ஆரம்பத்திலேயே இந்த பிரச்சனையை எப்படி நாம் எடுத்த செல்ல வேண்டும் என்று முடிவு செய்துவிட்டோம். எல்லா ஊர்வலம் / மறியல் நம் யுவ மோர்ச்சா ஆட்களால் முன்னெடுக்கப்பட்டது. இது யாருக்கும் தெரியாது.மக்களுள் கலந்து நாம் பிரச்சனையை முன்னெடுத்தோம் "
https://www.thenewsminute.com/article/everyone-surrendered-our-agenda-kerala-bjp-leaders-speech-sabarimala-leaked-91095
பாமக. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை - பின்வாங்கி அசிங்கப்பட்ட தேர்வாணையம்...
அப்பட்டமாக பொய் சொல்வதும், மாற்றிப் பேசுவதும் தேர்வாணையத்திற்கு (TNPSC) அழகா?
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் சில பாடங்களுக்கான வினாத்தாள்களை தமிழில் தயாரிக்க முடியாது என்றும், அப்பாடங்களுக்கான வினாக்கள் ஆங்கிலத்தில் மட்டும் தாம் இடம் பெறும் என்றும் தேர்வாணைய செயலர் நந்தக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருந்ததை கண்டித்து நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தேன். தமிழில் வினாத்தாள்களை தயாரிக்க முடியவில்லை என்றால் தேர்வாணையத்தை இழுத்து மூடிவிடலாம் என்றும் கூறியிருந்தேன்.
தமிழில் வினாத்தாள்கள் தயாரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாற்றுக்கு பதிலளிக்கும் வகையில் நேற்றிரவு தேர்வாணையத்தின் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் வெளியிட்ட அறிக்கையில், வரும் 11&ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் தொகுதி முதனிலைத் தேர்வுகள் மற்றும் பின்னர் நடைபெறவுள்ள முதன்மைத் தேர்வுகள் ஆகியவற்றுக்கான வினாத்தாள்கள் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். தேர்வாணையத்தின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது ஆகும்.
ஆனால், இன்னமும் சில பாடங்களுக்கான தேர்வுகள் ஆங்கிலத்தில் மட்டும் தான் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்ட விளக்க அறிக்கையில் உறுதி செய்துள்ளது. ‘‘தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆங்கிலத்தை மட்டுமே பயிற்று மொழியாகக் கொண்ட சில பாடங்களுக்கு மட்டுமே ஆங்கிலத்தில் வினாத்தாள்கள் தயாரிக்கப் படுகின்றன’’ என்று தேர்வாணைய அதிகாரி சுதன் கூறியுள்ளார். இது அப்பட்டமான பொய் என்பது மட்டுமின்றி, நேற்று முன்நாள் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது கூறப்பட்ட தகவல்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாகும். இரண்டுக்கும் இடையிலான முரண்பாடுகளை தெளிவாக விளக்குகிறேன்.
சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஆணையத்தின் செயலர் நந்தகுமார், ‘‘அரிதிலும் அரிதான சில பாடங்களுக்கு உதாரணமாக அரசியல் அறிவியல், சமூகவியல் போன்ற பாடங்களுக்கு வினாத்தாள் தயாரிக்க அந்தத் துறைகளில் தகுதி பெற்ற பேராசிரியர்கள் ஆங்கிலத்தில் மட்டுமே இருப்பதால் அப்பாடங்களுக்கு ஆங்கிலத்தில் மட்டும் தான் வினாக்கள் கேட்கப் படுகின்றன’’ என்று தெளிவாகக் கூறியிருந்தார். ஆனால், தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் அளித்துள்ள விளக்கத்திலோ, சில பாடங்கள் ஆங்கில வழியில் மட்டுமே நடத்தப்படுவதால் தான் அவற்றுக்கு தமிழில் வினாத்தாள்கள் தயாரிக்கப்படுவதில்லை என்று விளக்கமளித்திருக்கிறார். ஓர் அமைப்பின் இரு அதிகாரிகள் அளித்துள்ள விளக்கங்களில் இந்த அளவுக்கு முரண்பாடுகள் ஏன்?
தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் அளித்துள்ள விளக்கங்களின் அடிப்படையில் பார்த்தாலும் கூட, அரசியல் அறிவியலும், சமூகவியலும் ஆங்கில வழியில் மட்டுமே கற்பிக்கப்படும் பாடங்கள் அல்ல. சென்னை பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களிலும், ஏராளமான கல்லூரிகளிலும் இந்த இரு பாடங்களும் தமிழ் வழியில் கற்பிக்கப்படுகின்றன. நேரடி வகுப்புகளில் மட்டும் தொலைநிலைக் கல்வி முறையிலும் இந்த பாடங்கள் தமிழ் வழியில் கற்பிக்கப் படுகின்றன. அவ்வாறு இருக்கும் போது அந்தப் பாடங்களுக்கான வினாக்கள் ஆங்கிலத்தில் மட்டும் கேட்கப்படும் என்பது எந்த வகையில் நியாயம்? இது தமிழுக்கு இழைக்கப்படும் துரோகம் அல்லவா?
இவற்றுக்கெல்லாம் மேலாக தமிழ்நாட்டு அரசுப் பணிக்கு நடத்தப்படும் எந்தப் போட்டித் தேர்வுகளாக இருந்தாலும் அவை கண்டிப்பாக தமிழில் நடத்தப்பட வேண்டும். தமிழில் தேர்வு நடத்துவதற்கு ஏதேனும் முட்டுக்கட்டைகள் இருந்தால் அவை உடனடியாக களையப்பட வேண்டும். அதற்கான அழுத்தத்தை அரசுக்கு கொடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உண்டு. அதை செய்யாமல் தமிழுக்கு துரோகம் இழைப்பதையும், அந்த உண்மைகளை சுட்டிக்காட்டினால் அதை அவதூறு என்று பழி போடுவதையும் தமிழ் உணர்வாளர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட 2015-ஆம் ஆண்டுக்கான முதல் தொகுதி தேர்வுகளில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடத்தப்பட்டதையும், விடைத்தாள்கள் மாற்றப்பட்டதையும் பாட்டாளி மக்கள் கட்சி தான் அம்பலப்படுத்தியது. அதுகுறித்த சி.பி.சி.ஐ.டி விசாரணையில் இக்குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து தான் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலரும், தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரியும் மாற்றப்பட்டனர். இந்தப் பதவிகளுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இரு இளம் அதிகாரிகளும் நேர்மையானவர்கள். அவர்கள் ஆணையத்தின் இழந்த பெருமையை மீட்கும் பணிகளில் ஈடுபட வேண்டுமே தவிர, தமிழுக்கு எதிரானவர்களின் கைகளில் சிக்கிய பொம்மைகளைப் போல ஏற்கனவே கூறிய தகவல்களை மாற்றிப் பேசுவதும், பொய்யுரைப்பதும் கூடாது. இது அழகல்ல. அரசியல் அறிவியல், சமூகவியல் உள்ளிட்ட எந்த பாடமாக இருந்தாலும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் எந்தத் தேர்வாக இருந்தாலும் அதற்கான வினாக்கள் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் கேட்கப்படும் என்ற நிலை உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும்...
விக்கல் வருவது ஏன்?
சாதாரணமாக நாம் சுவாசிக்கும்போது காற்றை உள் இழுக்கிறோம். அப்போது மார்புத் தசைகள் விரிகின்றன. மார்புக்கும் வயிற்றுக்கும் இடையில் நுரையீரலை ஒட்டியுள்ள உதரவிதானமும் அப்போது விரிகிறது.
உடனே, தொண்டையில் உள்ள குரல்நாண்கள் திறக்கின்றன. அப்போது நுரையீரலுக்குள் காற்றின் அழுத்தம் குறைகிறது. அதேநேரம் நுரையீரலுக்குள் காற்று செல்ல அதிக இடம் கிடைக்கிறது. இதனால் நாம் சுவாசிக்கும் காற்று, திறந்த குரல்நாண்கள் வழியாகத் தங்கு தடையின்றி நுரையீரல்களுக்குள் நுழைந்துவிடுகிறது. இதுதான் இயல்பாக நிகழும் சுவாச நிகழ்வு.
சில நேரங்களில், மார்புப் பகுதியில் உள்ள நரம்புகள் உதரவிதானத்தை எரிச்சல்படுத்தினால், அது மூளைக் கட்டுப்பாட்டை மீறி, தன்னிச்சையாகத் திடீர் திடீரென்று சுருங்க ஆரம்பித்து விடும். அப்போது குரல்நாண்கள் சரியாகத் திறப்பதில்லை.
அந்த மாதிரி நேரங்களில் நாம் சுவாசிக்கும் காற்று குரல்நாண்களின் குறுகிய இடைவெளி வழியாகத்தான் நுரையீரல்களுக்குள் சென்று திரும்ப வேண்டும். அப்போது அந்தக் காற்று, புல்லாங்குழலில் காற்று தடைபடும்போது இசையொலி உண்டாவதைப் போல, தொண்டையில் ‘விக்... விக்...' என்று ஒரு விநோத ஒலியை எழுப்புகிறது. இதுதான் ‘விக்கல்'.
என்ன காரணம்?
வேக வேகமாக உணவைச் சாப்பிடுவது, மிகச் சூடாக சாப்பிடுவது, தேவையான அளவுக்குத் தண்ணீர் அருந்தாதது போன்றவை விக்கலுக்கு முக்கியக் காரணங்கள். வலிநிவாரணி மாத்திரைகள், ஸ்டீராய்டு மாத்திரைகளைச் சாப்பிட்டாலும் விக்கல் வரும்.
இரண்டு நாட்களுக்கு மேல் விக்கல் தொடர்ந்தால், அது நோய்க்கான அறிகுறி. உதாரணத்துக்கு, இரைப்பையில் அல்சர் இருக்கும்போது, சிறுநீரகம் பழுதாகி ரத்தத்தில் யூரியா அளவு அதிகரிக்கும்போது விக்கல் வரும். உதரவிதானத்தில் நோய்த்தொற்று, கல்லீரல் கோளாறு, நுரையீரல் நோய்த்தொற்று, குடல் அடைப்பு, மூளைக் காய்ச்சல், கணைய அழற்சி, பெரினிக் நரம்புவாதம் போன்றவற்றாலும் விக்கல் வரும்.
நிறுத்த என்ன செய்வது?
மூச்சை நன்றாக உள்ளிழுத்து அடக்கிக்கொள்ளுங்கள். 20 எண்ணும் வரை மூச்சை வெளியில்விட வேண்டாம். பிறகுதான் மூச்சை வெளியில்விட வேண்டும். இப்படி 5 முறை செய்தால் விக்கல் நின்றுவிடும்.
வேகமாக ஒரு சொம்பு குளிர்ந்த தண்ணீர் குடித்தால், விக்கல் நின்றுவிடும். ஒரு தேக்கரண்டி சர்க்கரையை நாக்கில் வைத்து அதைத் தானாகக் கரையவிட்டால், விக்கல் நிற்கும். ஏதேனும் ஒரு வகையில் தும்மலை உண்டாக்கினால், விக்கல் நிற்கும்.
அடுத்த வழி இது. ஒரு காகிதப்பைக்குள் மூச்சை விடுங்கள். பிறகு அந்தக் காற்றையே மீண்டும் சுவாசியுங்கள். இவ்வாறு 20 முறை செய்தால், ரத்தத்தில் கார்பன் டை ஆக்சைடு அதிகரித்து, விக்கல் நின்றுவிடும். அடிக்கடி விக்கல் ஏற்பட்டாலோ, 2 நாட்களுக்கு மேல் விக்கல் நீடித்தாலோ மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.
சில நிமிடங்கள் நீடிக்கும் விக்கலுக்கே நாம் பயந்துபோகிறோம். அமெரிக்காவில் சார்லஸ் ஆஸ்பார்ன் என்பவர் 68 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து விக்கல் எடுத்துக் கின்னஸ் ரிக்கார்டு செய்திருக்கிறார். அம்மாடியோவ்...
மூலிகை நீர்...
ஆவாரம்பூ நீர்: ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்ட துண்டோ என்ற பழமொழிக்கு ஏற்ப நீரிழிவுக்கு ஆவாரைப்பூவின் அற்புதத்தை அறியலாம். மஞ்சள் நிறமுள்ள இப்பூ தங்கச்சத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. ஆவாரம்பூ சுவை நீர் நீரிழிவு, பெரும்பாடு, குடற்புண், நீர்க்கடுப்பு, வெள்ளைப்போக்கு ஆகியன வராமல் தடுக்கிறது.
நூறு மில்லி நீரில் பத்து ஆவாரம் பூக்களை போட்டு காய்ச்சி, வடிகட்டி காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து தேவையெனில் காபித்தூள் அல்லது டீத்தூள் கஷாயத்தில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் குடிக்கவும்.
கரிசாலை நீர்: சிறுநீரக செயலிழப்பு, அதிக இரத்தக் கொதிப்பு, புற்றுநோய், காச நோய், வெண்புள்ளி, எலும்பு தேய்மானம் ஆகியன வராமல் கரிசாலை சுவைநீர் தடுக்கிறது.
மேற்சொன்ன ஆவாரம்பூ சுவை நீர் தயாரிப்பதுபோல் ஆவாரம்பூத் தூளுக்குப் பதிலாக கரிசாலைதூளை இரண்டு கிராம் போட்டுக் கொள்ளவும். தினசரி காலையில் மட்டும் கரிசாலைச்சுவை நீர் அருந்தி வரவும்.
செம்பருத்தி நீர்: செம்பருத்தி பூ நீர் இதய சுவர் ஓட்டை, இதய வால்வு, தேய் மானம், வழுக்கை, இரத்த சோகை ஆகியன வராமல் தடுக்கிறது. இது மாதவிடாய் கோளாறுகளை சரி செய்கிறது. குடல் இறக்கம், கர்ப்பப்பை இறக்கம் ஏற்படாதும் தடுக்கிறது.
காய்ச்சிய பாலை அடுப்பிலிருந்து இறக்கி வைத்து அதில் அடுக்கு செம்பருத்திப்பூ இதழ்கள் ஐந்து போட்டுப் பத்து நிமிடம் பாலை மூடி வைத்து பின் வடிகட்டி விட வும். பால் சிவப் பாகி இருக்கும். இனிப்பு சேர்த்து வடிகட்டி காலையிலும், மாலையிலும் குடிக்கவும். சளி தொந்தரவு உள்ளவர்கள் பால் காய்ச்சும் போது தோல் நீக்கிய சிறு துண்டு இஞ்சியை நசுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
நன்னாரி நீர்: தோன்றும் மழலைகள் உத்தாமணி வேரால், தோல் நோய்கள் மடிவது நன்னாரி வேரால் என்பதன் மூலம் நன்னாரியின் நற்பண்பை நவிலலாம்.
நூறு மில்லி நீரில் ஐந்து கிராம் நன்னாரி வேரை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டிய கருமை நிற கஷாயத்தை காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து உபயோகிக்கவும்.
துளசி நீர்: குடல் காய்ச்சல், மஞ்சள் காமாலை, மலேரியா, காலரா நோய்கள் வராமல் துளசி சுவை நீர் தடுக்கும். மேலும் குடல்வால் அழற்சி ஏற்படாது.
காய்ச்சிய நூறு மில்லி சூடான பாலில் இரண்டு கிராம் துளசி இலை பொடியைக் கலந்து, மூடி வைத்து பத்து நிமிடங்கள் சென்று இனிப்பு சேர்த்து,தேவை யெனில் காபி அல்லது டீ கஷாயம் சேர்த்து வடிகட்டி தினசரி காலையில் மட்டும் குடிக்கவும். அடிக்கடி பல ஊர்கள் தண்ணீர் குடிப்போரும், தொற்று நோய்கள் பரவும் காலங்களிலும் இந்த துளசி சுவை நீரை பயன்படுத்தி பலன் பெறலாம்.
வல்லாரை நீர்: யானைக்கால், வலிப்பு, மலடு, பக்கவாதம், மூலம், மூட்டுவலி, இரத்தக்குழாய் தடிப்பு போன்ற நோய்கள் வராமல் வல்லாரை சுவை நீர் தடுக்கும். “காய சித்திக்கு புளியாரை„ கபால கோளாறுக்கு வல்லாரை” என்பார்கள்.
வல்லாரை இலைப்பொடி இரண்டு கிராம் எடுத்து மேற்கண்டுள்ள துளசி சுவை நீர் தயாரிப்பதுபோல் வல்லாரை சுவை நீர் தயாரித்துக் கொள்ளவும். காலை, மாலை இருவேளையும் குடிக்கவும். எல்லோருக்கும் என்றும் ஏற்றது வல்லாரை சுவை நீராகும். இச்சுவை நீர்கள் குறிப்பிட்டுள்ள நோய்கள் வராமல் தடுக்கவும், குணப்படுத்தவும் கூடியது. எனவே நோயுள்ளோரும், பயன்படுத்தி பயன் பெறலாம்...
பசுமை தாயகம் மீண்டும் எச்சரிக்கை...
அவசரம்: திரையரங்குகளில் நடிகர் விஜய் புகைபிடிக்கும் பேனர்கள் - நடவடிக்கை எடுக்க உதவுங்கள்...
சர்க்கார் திரைப்படத்தின் புகைபிடிக்கும் காட்சி விளம்பரங்கள் தொடர்பாக பசுமைத் தாயகம் அளித்த புகார் அடிப்படையில் விளம்பரங்களில் அந்த காட்சிகள் நீக்கப்பட்டதை அறிவீர்கள்.
இந்நிலையில், சர்க்கார் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாவதை தொடர்ந்து நடிகர் விஜய் புகைபிடிக்கும் காட்சிகள் இடம்பெறும் பதாகைகள் பல திரையரங்குகளில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த பதாகைகள் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ளன. இவற்றை குறித்து சட்ட நடவடிக்கை எடுக்க உதவுங்கள்.
தயவுசெய்து பின்வரும் விவரங்களை உடனடியாக அனுப்புங்கள்:
1. நடிகர் விஜய் புகைபிடிக்கும் படத்துடன் கூடிய பேனரின் புகைப்படம்.
2. அந்த பேனர் வைக்கப்பட்டுள்ள திரையரங்கத்தின் பெயர், ஊர், முகவரி.
3. புகைப்படம் எடுக்கப்பட்ட நாள், நேரம்.
4. புகைப்படம் எடுத்தவர் பெயர், முகவரி.
ஆகியவற்றை arulgreen1@gmail.com என்கிற மின்னஞ்சல் மற்றும் 9962666446 எனும் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்புங்கள்.
மிக்க நன்றி...
வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...
இந்த ஹைரோக்ளிஃபில் சுவாரஸ்யமான தொகுப்பு என்னவென்றால், பறக்கும் பொருளின் மீது வளிமண்டலத்துக்கு மேலே சூரியகதிர் செல்வது போல காட்டப்படுவது. உண்மையில் பண்டைய எகிப்தியர்கள் வளிமண்டத்திற்க்கு மேலே பறக்கும் தட்டு போன்ற பொருளை கண்டதன் விளைவாகவே, இந்த கல்வெட்டு சித்திரம் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்கின்றனர், தொல்பொருள் நிபுணர்கள்.
மேலும், கதிர்வீச்சு ஒளி உள்ளே ஒரு உட்பகுதியில் உள்ள ஒரு காப்ஸ்யூல் போன்ற பொருளைக் காண்பிக்கிறது. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் திரைப்படமான இ.டி.இல் தோற்றமளிக்கும் வேற்றுகிரக உயிரினம் போல், ஒரு தட்டையான தலை மற்றும் சுருக்கமான தன்மை கொண்டதாக ஒரு உயிரினம் தோன்றுகிறது.
ஆனால் அந்த பறக்கும் தட்டின் குவிமாடம். முன்னர் பார்த்த தொப்பி வடிவமான பறக்கும் தட்டுகளை காட்டிலும் மிகவும் குழப்பமான தோற்றத்தில் உள்ளது..எனினும் இன்று நாம் வேற்றுகிரகவாசிகள் என வரையறுக்கப்பட்ட இனம் மற்றும் பறக்கும் தட்டுகளைப் போலவே தோற்றமளிக்கிறது,
இந்த சான்றுகளால் மட்டுமே வேற்றுகிரக இனமே பிரமிடுகளை முழுவதும் உருவாக்கியதாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும், பண்டைய எகிப்திய காலங்களில் பறக்கும் விண்வெளிக் கப்பல்களில் சில நம்பிக்கை இருந்தது என இந்த ஹைரோக்ளிஃப் மூலமாக அறிய முடிகிறது...
Subscribe to:
Posts (Atom)