04/05/2018

எண்ணெய்யில் காணாமல் போகும் நோய்கள்...


10 மில்லி எண்ணெய்யில் காணாமல் போகும் நோய்கள்...

எண்ணெய் கொப்பளிப்பு (Oil Pulling) எனப்படும் எண்ணெய் மருத்துவம் இப்பொழுது அநேக இடங்களில் பிரபலமடைந்து வருகிறது. எண்ணெயை வாயில் விட்டு சாதாரணமாக கொப்பளிப்பது தானே என்று அலட்சியமாக இல்லாமல் தொடர்ந்து எண்ணெய் கொப்பளிப்பு எடுத்துக் கொள்பவர்களுக்கு அனைத்து நோய்களும் தீரும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது

இன்றைக்கு பிரபலமாகிக் கொண்டு வரும் எண்ணெய் கொப்பளிப்பு நூற்றாண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் கண்டுபிடித்து பின்பற்றியுள்ளனர். இது அனைத்து நோய்களுக்கும் பாதுகாப்பான எளிய மருத்துவ முறையாக இருந்துள்ளது.

பல்வகையான நுண்ணுயிரிகளுக்கும், கிருமிகளுக்கும் நமது வாய்தான் நாற்றங்காலாகி நமக்கு தீமை செய்கிறது. இந்த எண்ணெய் கொப்பளிப்பு, அத்தகைய தீய, கொடிய கிருமிகளையும் நுண்ணுயிரிகளையும் அழித்து அதன் மூலமாக உடலில் நஞ்சு கலந்த வேதியியல் பொருட்களை வெளியேற்றுகிறது. இதனால் நமது உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களும் புத்துணர்வு பெறுகிறது.

எண்ணெய் கொப்பளிப்பு எடுத்துக்கொள்வது பற்றி தெலுங்கு நாளிதழான ஆந்திர சோ(ஜோ)தியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்தப்பட்டது. மூன்று வருடங்களாக 1041 நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 927 நபர்களுக்கு நோய் குணமானது தெரியவந்தது. 758 நபர்களுக்கு கழுத்து மற்றும் உடல்வலி குணமாகியது. ஒவ்வாமை (Allergy) மற்றும் சுவாசகாசம் (asthma) நோய்கள் 191 பேருக்கு சரியானது.

தோல்நோய், அரிப்பு,கரும்படை, உள்ளிட்ட நோய்கள் குணமடைந்ததாக தெரிவித்திருந்தனர். மேலும், இதயநோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம்,நரம்பு தொடர்பான நோய்கள் குணமடைந்ததாக கணக்கெடுப்பில் (Survey) தெரிவித்திருந்தனர்...

தமிழகத்திற்கு இந்த மாதம் 4 டிஎம்சி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு...


உத்தரவை மீறினால் கர்நாடக அரசு கடும் விளைவை சந்திக்க நேரிடும் - உச்சநீதிமன்றம்...

ஒன்றுக்கும் உதவாத மத்திய பாஜக அரசு எங்கு பார்த்தாலும் திருட்டு...


ஆதார் உடன் லின்க் செய்யப்பட்ட பிஎப் கணக்குகளில் திருட்டு; 2.7 கோடி மக்களின் நிலை என்ன.?

ஆதார் அட்டை அமல்படுத்திய பின்னர் நாட்டில் உள்ள அனைத்து இடங்களில் பயன்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. செல்போன் எண் முதல் வாக்களர் அடையளா அட்டை மற்றும் சகல அடையாள அட்டைகளுடன் ஆதார் இணைக்கப்பட்டது.இந்தியாவில் குறிப்பாக பல மில்லியன் மக்கள் பிஎஃப் (தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி) கணக்குதார்களாக உள்ளனர். மேலும் அவர்களின் அனைத்து தகவல்களும் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் வி.பி ஜாய் என்பவர் மத்திய தொழில்நுட்ப துறைக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் எழுதிய கடிதம் என்னவென்றால் ஆதாருடன் இணைக்கப்பட்டிருந்த 2.7 கோடிக்கும் மேற்பட்ட கணக்குதாரர்களின் தகவல்களை ஹேக்கர்கள் திருடி விட்டனர். இதனால், ஆதார் சேவை இணையதளம் தற்காலிகமாக செயல்பாட்டில் இருந்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கடிதத்தின் மேற்பகுதியில் மிக ரகசியம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது, அதன்பின்பு ஒவ்வோரு பணியாளரின் ஊதியத்திலும் 12சதவீதம் பிஎஃப தொகை பிடித்தம் செய்யப்படுகிறது, எனவே சம்பளம் தொடர்பாக தகவல்கள் வங்கி கணக்கு குறித்த தகவல்கள் ஆகியவையும் திருடப்பட்ருக்கலாம் என சைபர் கிரைம் துறை வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் வருங்கால் வைப்பு நிதி துறை அதிகாரிகள் தெரிவித்தது என்னவென்றால், திருட்டு எதுவும் நடக்கவில்லை, எனினும் பாதுகாப்பு காரணங்களுக்கு வேண்டி தற்சமயம் சர்வர் நிறுத்தப்பட்டுள்ளது என்றனர்.ஆதார் தகவல்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பிஎஃப் கணக்கு விவரங்கள் திருடப்பட்டதாக கூறப்படுவது நாட்டில் இருக்கும் தொழிலாளர்கள் மத்தியில் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் நேற்று மத்திய அரசு தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு சில அறிவறுத்தல்களை வழங்கியுள்ளது, அதன்படி செல்போன் சிம்கார்டுக்கு வேண்டி ஆதார் அட்டையை வாடிக்கையாளர்களிடம் கட்டயாகப்படுத்தக் கூடாது என்று உத்திரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக ஆதார் கார்டு அளிக்காவிட்டாலும் சிம் கார்டு கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது...

பாஜக மோடியின் சாதனை...


நாயாக மாறிய மனிதன், நம்ப முடியாத அதிசயம்...


பிரேசில் நாட்டு மனிதன் ஒருவன் அதிர்ச்சிப் பதிவு இது.

சத்திர சிகிச்சை மூலமாக நாய் மனிதனாக உருவெடுத்து உள்ளார்.

இறந்த நாய் ஒன்றின் முகத்தை
இவரது முகத்தில் பொருத்தி சத்திர
சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது.

இறந்த நாயின் முகத்தில் உள்ள வாய்,
மூக்கு, காதுகள், கண்கள், உரோமங்கள் உட்பட பல பாகங்கள் இவரது முகத்தில் பொருத்தப்பட்டன.

இதற்காக ஏராளம் பணத்தை செலவு
செய்து இருக்கின்றார்.

உலகின் முதலாவது நாய் மனிதன் என்கிற சாதனைக்கு சொந்தக்காரர் ஆக வேண்டும் என்கிற விபரீத ஆசையாலேயே சத்திர சிகிச்சையை செய்து இருக்கின்றார்.

நம்ம வீர தீர ஸ்ரீ ல ஸ்ரீ எடப்பாடி பழனிச்சாமி ஸ்வாமி இப்போ வந்து தண்ணீர் வர வரைக்கும் என்எல்சி ல இருந்து கர்நாடகவிற்கு கரண்ட் கட் னு அருள் கூறுவார்கள்...


தமிழ்நாட்டிற்கு மீண்டும் வருகிறான் லாட்டரி அரக்கன்...


தமிழக பட்ஜெட் கூட்டுத்தொடரில், மீண்டும் லாட்டரி டிக்கெட் அறிமுகப்படுத்தப்படலாம் என்று கூறப்பட்டது. புதிய முறையில் மீண்டும் லாட்டரி டிக்கெட் விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. தமிழகத்தின் கடன் சுமை வருடாவருடம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சென்ற வருட கடன் சுமையே 3 லட்சம் கோடியாக இருக்கிறது. இந்த வருடம் இன்னும் அதிக அளவில் கடன் சுமை கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைக்கு பிறகு பல்வேறு மாநிலங்களின் நிதி வருவாய் குறைந்துவிட்டது. லாட்டரிக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி  விதிக்கப்பட்டுள்ளதால் அதன் மூலமாக கிடைக்கும் வருவாய் மாநில செலவினங்களை ஈடுகட்ட பயன்படுத்தலாம் என்ற நோக்கத்தில் மாநில அரசு லாட்டரிக்கு அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளது. லாட்டரி டிக்கெட் விற்பனையை அறிமுகப்படுத்தும் போது அரசின் வருவாய் கணிசமாக அதிகரிக்கும். இது கடன்சுமை பெரிய அளவில் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லாட்டரி டிக்கெட் விற்பனை செய்வதன் மூலம் ரூ.2450 கோடி வருவாய் கேரளாவுக்கு கிடைத்துள்ளதால் தற்போது தமிழக மாநில அரசும் லாட்டரி விற்பனைக்கு அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது. இதற்கான மசோதா தயார் செய்யும் பணியில் மாநில அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

ஏழ்மையான வீட்டில் லாட்டரி டிக்கெட் விற்பனையால் நிறைய பிரச்சனை நடக்கிறது என்றே அதன் விற்பனைக்கு தடை வழங்கப்பட்டது. லாட்டரியால் அழிந்த பல குடும்பங்கள் உள்ளது. தற்கொலை, மன உளைச்சல் என தமிழர்களை மனநோயாளிகளாக்கியது இந்த லாட்டரி. இப்போது மீண்டும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது

இப்போதுள்ள டம்மி அரசை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ள மத்திய அரசும் அதன் பீட பாஜக அரசும் அதன் துணையுடன் தமிழ்நாட்டில் மீண்டும் லாட்டரியை கொண்டுவரும் திட்டத்திற்கான அனைத்து வேலைகளையும் செவ்வனே முடித்தாகி விட்டது.

லாட்டரியை தமிழ்நாடு அச்சடிக்கப் போவதில்லை. மற்ற மாதிலத்தில் அச்சடித்து இங்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

இதனை தமிழர்களாகிய நாம் தடுக்கவில்லை என்றால் தமிழர்களின் பொருளாதாரம் அனைத்தையும் ஒரு சிலர் அதுவும் அயலவர்கள் மொத்தமாக சுரண்டி சென்றுவிடுவார்கள். இப்போதே தமிழ்நாட்டில் பொருளாதார தேக்கநிலை ஏற்பட்டுவருகிறது. இதுவும் சேர்ந்தால் நம் பொருளாதாரம் அதல பாதாளத்திற்க்கு சென்று விடும். பொருளாதார ரீதியாக தமிழகத்தை அழிக்கவே இந்த லாட்டரியை கொண்டுவர இருக்கிறது மத்திம பாஜாகவும் அதன் அடிமை அரசான எடுபிடி அரசும் அதன் லாபியாளர்களும்.

இதனை தமிழ் மக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். லாட்டரி விற்பனையை தடுக்க அனைவரும் ஒன்றினைந்து போராடு வேண்டும் இல்லையேல் தமிழர்களை பொருளாதார அழிவிலிருந்து காப்பது சிரமமே...

இராணுவம் மயமாகும் தமிழகம்.. விழித்துக்கொள் தமிழா...


தமிழ் சித்தர்களின் வைத்தியம்...


மறதி தொல்லையா?

ஒரு தேக்கரண்டி தேனில் 5 மிளகு பொடியை குழைந்து சாப்பிட்டு வந்தால் மறதி மறைந்துவிடும்.

இருமலால் அவதியா?

உலர்ந்த திராட்சையை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வந்தால் நீங்கும். ஒரு சிட்டிகை மஞ்சள், மிளகுப்பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தாலும் குணமாகும்.

சளித் தொல்லையா?

வெற்றிலை, 3 மிளகு, துளசி இலையை சேர்த்து மென்று விழுங்கவும் அல்லது உறங்கும் முன் சிறிது வெந்தயத்தை சாப்பிட்டு 1 டம்ளர் வென்னீர் அருந்தினால் குணமாகும்.

சீதபேதி கடுமையாக உள்ளதா?

ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

அடிக்கடி ஏப்பம் வருகிறதா?

வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்...

மலையை, குவாரியாக்க முடிவு பன்னிட்டானுங்க...


சிலந்தி தண்ணீரில் நடக்கும், நீருக்கு அடியிலும் சுவாசிக்கும் தன்மை கொண்டது...


சிலந்தி தன்னை தானே கோமா நிலைக்கு எடுத்து செண்டு நீருக்கு அடியில் சில மணி நேரம் உயிருடன் இருக்கும்.

சிலந்தி தான் பின்னிய வலையையே மறுசுழற்சி செய்ய உண்ணும்.

ஒரே எடையிலான சிலந்தி வலை மற்றும் இரும்புடன் ஒப்பிடுகையில், சிலந்தி பின்னும் வலை தான் இரும்பை விட வலுமையானது.

சிலந்திகளுக்கு எறும்புகள் என்றால் பயமாம். இதற்கு காரணம் எறும்புகளிடம் இருக்கும் ஃபார்மிக் அமிலம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கடைசியாக சிலந்தி கடித்து மரணம் அடைந்த சம்பவம் கடந்த 1981-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்தது.

சிலந்திகளுக்கு ஆணுறுப்பு  இல்லை. இவை முகத்தை தான் இணை உறுப்புகளாக பயன்படுத்துகின்றன.

கருப்பு பெண் சிலந்திகள் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டவுடன், ஆண் சிலந்தியை உண்டு விடுமாம்.

இதிலிருந்து தப்பிக்க கருப்பு ஆண் சிலந்திகள், கருப்பு பெண் சிலந்திகளின் பசியை மோப்பம் பிடித்து தப்பித்துக் கொள்ளுமாம்.

சிலந்திகள், நண்டு மற்றும் நத்தைகளுக்கு இரத்தம் நீல நிறத்தில் தான் இருக்கும். இதற்கு காரணம் இவற்றின் இரத்தத்தில் கலப்பு கொண்டுள்ள hemocyanin எனும் காப்பர்.

இதுவரை கண்டறியப்பட்ட 46,000 சிலந்தி வகைகளில். ஒன்றே ஒன்று மட்டும் தான் தாவரங்களை உண்டு வாழும் வகையை சேர்ந்தது ஆகும்...

ஆந்திராவில் தமிழ் கல்வெட்டுகள்...


தமிழ் கல்வெட்டுகள் கிடைத்துள்ள தாலுகா பகுதிகள் வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ளன.

முதல் படம் காலம் 1325 - 1499
இரண்டாம் படம் காலம் 1499 - 1649

மேற்கண்ட பகுதிகளில் இன்றும் தமிழரே பெரும்பான்மை.

இதில் குப்பம், சித்தூர், திருப்பதி, காளஹஸ்தி, மதனப்பள்ளி, நெல்லூர், குடூர் போன்றவை அடங்கும்.

நூல்: Precolonial India in Practice: Society, Region, and Identity in Medieval Andhra- By Cynthia Talbot...

வைகோ நாயூடு கலாட்டா...


தூக்கத்தில் யாரோ உங்கள் மேல் ஏறி அழுத்துவது போல் இருக்கிறதா?


இரவு நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது, யாரோ உங்கள் மேல் ஏறி அழுத்துவது போல் இருக்கும். உங்களால் கண்ணைத் திறக்க முடியாது.

கத்தலாம் என்றாலும் குரல் வெளியே வராது. சரி, திரும்பிப் படுக்கலாம் என்று நினைத்தாலும் திரும்பி படுக்க முடியாது. ஒரு நிமிடம் கழித்துத்தான் உங்களால் எதுவும் செய்யமுடியும். எழுந்து பார்த்தால் யாரும் அருகில் இருக்கமாட்டார்கள்.

என்னடா இது என்று திகைத்திருப்பீர்கள். இதுதான் அமுக்குவான் பேய்..

உயிரைக் கொல்லும் அளவுக்கு கொடூரமான பேய் இல்லை என்றாலும், இதுவும் ஒரு முக்கியமான பேயாக கிரேக்கப் புராணங்களில் கூறப்படுகிறது.

பொதுவாக அமுக்குவான் பேய்கள் மற்ற பேய்கள் போல் புளியமரத்திலோ வேப்பமரத்தின் உச்சியிலோ இருக்காது. பூச்சிகளின் இராஜாவான இது உங்கள் வீட்டின் சிலந்திகளின் கூட்டிற்குள், எறும்புகளின் குறிப்பாக சிவப்பு எறும்புகளின் புற்றில், கரப்பான் பூச்சிகளின் பொந்துகளில் தான் வாழும்.

இது உலவும் நேரம் பெரும்பாலும் சூரியன் உதிப்பதற்கு சற்று முன்பாக மூன்று மணியில் இருந்து நாலு மணி வரை ஆனால் சில சமயம் அவை பகலில் கூட வரும். என்றெல்லாம் சுவாரஸ்யமாக த்ரில்லாக கதை எழுத ஆசைதான் ஆனால் அது உண்மை இல்லையே..

என்ன செய்வது? நம்மூரில் அமுக்குவான் பேய் என்று சொல்லப்படுவது உண்மையில் தூக்க பக்கவாதம் என்கிற கோளாறு.

சில சமயம் உங்கள் மூளை விழித்துக் கொண்ட பிறகும் உங்கள் உடல் தூங்கிக் கொண்டே இருக்கும். அதனால்தான் உங்களால் எழவோ, பேசவோ, கண்களைத் திறக்கவோ முடியாது.

இந்தக் கோளாறு தூக்கத்தில் ஏற்படும் இடையூறினால் இது வருகிறது. துயில் மயக்க நோய், ஒற்றைத் தலைவலி, ஏக்க நோய்கள், மற்றும் தூக்கத்தில் மூச்சுத் திணறல் ஆகிய கோளாறுகளுக்கும் இதற்கும் தொடர்புகள் உண்டு.

இதை தனிமைத் தூக்க பக்கவாதம், தொடர் தனிமைத் தூக்க பக்கவாதம் என்று இரண்டு வகைகளாகப் பிரிக்கிறார்கள்.

இதில் தனிமைத் தூக்க பக்கவாதம் என்பது ஒரு நபரின் வாழ்க்கையில் எப்போதாவது இரு நிமிடங்களுக்கும் குறைந்த நேரத்தில்தான் நிகழும். இது ஒன்றும் பிரச்னைக்குரியது அல்ல. தொடர் தனிமைத் தூக்க பக்கவாதம் பேருக்கு ஏற்றபடி அடிக்கடி ஏற்படும்.

மேலும் இது ஒரு மணி நேரம் வரைக்கும் கூட இருக்கும். சில சமயம் அந்தரத்தில் பறப்பது போல்கூட தோன்றும். இதற்கு மருத்துவர்களிடம் (மந்திரவாதிகளிடம் அல்ல) சென்றே ஆகவேண்டும். துயில் மயக்க நோய் உடையவர்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களில் 50 சதவீதம் பேருக்கு இப்பிரச்னை ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், இன்றும் பெரும் அளவில் மக்கள் இது ஏதோ பில்லி சூனியத்தின் வேலை என்று நினைத்துக் கொண்டு மந்திரவாதிகளைத் தேடி ஓடிக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரி மூட நம்பிக்கைகளில் இருந்து மக்கள் விடுபடும் காலம் என்றுதான் வருமோ?

திராவிடமும் தமிழின அழிப்பும்...


நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு.. எந்த டெக்னாலஜியும் இல்லாம எப்படி கிணறு வெட்டுனாங்க?


அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனாங்க?

கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை. பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிடவேண்டிய ஒன்று.

ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால்
அத்தனை உழைப்பும் வீணாகி விடும் .

அதே போல் கோடையில் கிணற்றில் நீர்
வறண்டு போகும் வாய்ப்பும் உள்ளது.

ஆனால் இவற்றிற்கெல்லாம் எளிய இலகுவான தீர்வுகள் இதோ.

மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில்
நீரூற்று தோன்றும் என்கின்றனர் .

சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல நீரூற்று என அறிவது எப்படி ?

நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல் நாள்
இரவு தூவி விடவேண்டும்.

அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டுசென்று சேர்த்த அடையாளங்கள், அதாவது தடயங்கள் இருக்குமாம் அந்த இடத்தில்கிணறு வெட்டினால் தூய சிறப்பான நன்னீர் கிடைக்கும் என்கிறார்கள்.

சரி தூய நீரும் கண்டு கொண்டாயிற்று. . .
கோடைகாலத்திலும் வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிவது எப்படி ?

கிணறு வெட்ட இருக்கும் நிலப்பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேய விட வேண்டும். பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம்.

அப்படி அவை படுக்கும் இடங்களை நான்கு, ஐந்து நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம். அந்த இடத்தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்...

அப்ப சிம் கார்டோட ஆதார் எண்ணை இணைச்ச நாங்களான் பைத்தியக்காரய்களா...


இந்த புகைப்படம், கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி கிராமம், எளச்சிபாளையத்தில் அமைந்துள்ள உயர்மின் கோபுரம் (400kv உடுமலை-அரசூர்). உயர்மின் கோபுரத்தில் எவ்வளவு மின்காந்த கதிர்வீச்சு இருக்கிறது என்பதை பற்றிய புகைப்படம்...


மனிதனின் உடம்பு அதிகப்பச்சமாக 2mg அளவு தான் மின்காந்த கதிர்வீச்சை தாங்கும்.

ஆனால் இங்கு 28.8mg மின்காந்த கதிர்வீச்சை இருக்கிறது.

இது மனிதன் & கால்நடைகளுக்கு மிக மிக ஆபத்தானது.

இந்த உயர்மின் கோபுரங்கள் கண்டிப்பாக மனிதன்க்கு புற்றுநோய் வரவைக்கும்.

தமிழ்நாட்டு விவசாயத்தை அழித்து இவ்வாளவு ஆபத்தான உயர்மின் கோபுரம் வேண்டாம்.

நெடுஞ்சாலை வழியாக புதைவடம்(HVDC UG Cables) மூலம் உயர்மின் பாதையை அமைக்க வேண்டும்...

யார் இந்த சேலம் கலெக்டர் ரோகினி..?


திருவொற்றியூர் தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் பெண் உயிரிழப்பு...


சென்னை திருவொற்றியூர் அருகே தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் சலீமா என்ற பெண் உயிரிழந்துள்ளார்.

கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சைக்கு பின் சலீமா உயிரிழந்துள்ளார்...

நம்ப முடியாத ஊளவியல் உண்மைகள்...


சித்தர்கள் வகுத்த ஆயகலைகளுள் ஒன்றான வர்மக்கலை...


வாசி தட்டும் இடமெல்லாம் - வர்மம் அதாவது வர்மம் என்றால் உயிர் நிலைகளின் ஓட்டம் என்று பொருள்.

இதை சித்த மருத்துவத்திற்கும், வர்மக்கலைக்கும் பயன்படுத்தலாம். இடகலை, பிங்கலை, சுழு முனை நாடிகள், தச வாயுக்கள், சரங்களின் ஓட்டமே -வர்மம்.

அகத்தியர் வர்ம சூட்சமத்தை அளவு நூல் மூலம் அளந்து தெரியப்படுத்தியதுடன் வர்மப் புள்ளிகள் தான் மனித உடலை இயக்குகின்றன. இவைதான் மனித உடலுக்கு ஆதாரமாக இருப்பவை.

இவை பாதிக்கப்பட்டால் மனித உடலின் இயங்கும் தன்மை முற்றிலும் பாதிக்கப்படும் என்பதை ஆணித்தரமாக கூறினார். காரணம் வர்மப் புள்ளிகள் அனைத்தும் ஒடுங்கியிருக்கும் இடங்களில்தான் உயிர்நிலை சுவாசமும் ஒடுங்கியுள்ளது.

மனித உடலில் 108 வர்மப் புள்ளிகளாக அதாவது உயிர்நிலை சுவாசமாக ஒடுங்கியுள்ளது. இந்த வர்மப் புள்ளிகளின் ஏதாவது ஒன்று பாதிக்கப் படுமானால் உடலில் நோய் உண்டாகும். இவற்றை சீர் செய்வதன் மூலம் தான் நோயைத் தீர்க்க முடியும்.

உதாரணமாக உடம்பில் ஏதாவது ஒரு இடத்தில் பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது நோயின் தாக்குதல் இருந்தாலோ அது வர்மப் புள்ளிகளை சார்ந்துதான் இருக்கும்.

வர்ம கலையை அகத்தியர் நான்கு பிரிவுகளாக பிரிக்கிறார் அவை:

தொடு வர்மம்:

இது பலமாக தாக்க படுவதன் மூலம் ஏற்படுகிறது. இதை எளிதில் குனபடுத்த முடியும்

தட்டு வர்மம்:

இது ஒரே ஒரு விரலை மட்டும் பயன்படுத்தி தாக்கபடுபவரின் உடலில் வலி ஏற்படாமல் மிக லேசாக தட்டுவதன் மூலம் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகும், நான் ஏற்கனவே கூறியவாறு இம்முறையில் தக்கபடுபவரை இதற்க்கு உரிய தனியான சிகிச்சை முறையில் மட்டுமே குனபடுத்த முடியும்

நோக்கு வர்மம்:

பார்வை ஒரே இடத்தில செலுத்தி விளைவுகளை ஏற்படுத்துவதே நோக்கு வர்மம் ஆகும். இந்த முறை ஆபத்தானது என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். நோக்கு வர்மம் முறையில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு நிகர் உலகில் எவரும் இல்லை என குறிப்பிடுகிறார்

படு வர்மம் :

நான்கு வகை வர்மங்களில் அபாயகரமானது இதுவே, உடலில் உள்ள வர்ம பகுதிகளில் அடியோ தாக்குதலோ ஏற்படுத்தினால் அதுவே படு வர்ம ஆகும். இத்தாக்குதலுக்கு ஆளானவர்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதால் இது மிகவும் ஆபத்தானது என்று அகத்தியர் குறிப்பிடுகிறார்.

ஒரு மனிதன் படுவர்மா புள்ளிகளில் அடிபட்டால் உடனே மயங்கி விழுவான் என்று, வாயில் நுரை தள்ளி நாக்கு வெளியே தள்ளும் என்றும், அடிபட்ட இடம் குளிர்ச்சியாக என்றும் குறிப்பிடுகிறார் எல்லோராலையும் இதை செய்து விடமுடியாது. மிகுந்த பயிற்சி உள்ளவரால் மட்டுமே இது இயலும்.

உடலில் உள்ள முக்கியமான வர்ம புள்ளிகளை பட்டியலிடுகிறார் அவை:

தலைப்பகுதி வர்மங்கள் = 37
நெஞ்சுப் பகுதி வர்மங்கள் = 13
உடலின் முன் பகுதி வர்மங்கள் = 15
முதுகுப் பகுதி வர்மங்கள் = 18
கைப்பகுதி வர்மங்கள் = 17
கால் பகுதி வர்மங்கள் = 32

தலைப்பகுதி வர்மங்கள் (37)...

திலர்த வர்மம்
கண்ணாடி கால வர்மம்
மூர்த்தி கால வர்மம்
அந்தம் வர்மம்
தும்மிக் கால வர்மம்
பின் சுவாதி வர்மம்
கும்பிடு கால வர்மம்
நட்சத்திர வர்மம்
பால வர்மம்
மேல் கரடி வர்மம்
முன் சுவாதி வர்மம்
நெம வர்மம்
மந்திர கால வர்மம்
பின் வட்டிக் கால வர்மம்
காம்பூதி கால வர்மம்
உள்நாக்கு கால வர்மம்
ஓட்டு வர்மம்
சென்னி வர்மம்
பொய்கைக் கால வர்மம்
அலவாடி வர்மம்
மூக்கடைக்கி கால வர்மம்
கும்பேரிக் கால வர்மம்
நாசிக் கால வர்மம்
வெட்டு வர்மம்
அண்ணாங்கு கால வர்மம்
உறக்க கால வர்மம்
கொக்கி வர்மம்
சங்குதிரி கால வர்மம்
செவிக்குத்தி கால வர்மம்
கொம்பு வர்மம்
சுமைக்கால வர்மம்
தலைப்பாகை வர்மம்
பூட்டெல்லு வர்மம்
மூர்த்தி அடக்க வர்மம்
பிடரி கால வர்மம்
பொச்சை வர்மம்
சரிதி வர்மம்

நெஞ்சுப் பகுதி வர்மங்கள் (13)...

தள்ளல் நடுக்குழி வர்மம்
திவளைக் கால வர்மம்
கைபுஜ மூன்றாவது வரி வர்மம்
சுழி ஆடி வர்மம்
அடப்பக்கால வர்மம்
முண்டெல்லு வர்மம்
பெரிய அஸ்தி சுருக்கி வர்மம்
சிறிய அஸ்தி சுருக்கி வர்மம்
ஆனந்த வாசு கால வர்மம்
கதிர் வர்மம்
கதிர் காம வர்மம்
கூம்பு வர்மம்
ஹனுமார் வர்மம்

உடலின் முன் பகுதி வர்மங்கள் (15)...

உதிர்க் கால வர்மம்
பள்ளை வர்மம்
மூத்திர கால வர்மம்
குத்து வர்மம்
நேர் வர்மம்
உறுமி கால வர்மம்
ஆமென்ற வர்மம்
தண்டு வர்மம்
லிங்க வர்மம்
ஆண்ட கால வர்மம்
தாலிக வர்மம்
கல்லடைக் கால வர்மம்
காக்கடை கால வர்மம்
புஜ வர்மம்
விதனு மான் வர்மம்

முதுகுப் பகுதி வர்மங்கள் (18)...

மேல் சுருக்கி வர்மம்
கைக்குழி காந்தாரி வர்மம்
மேல்க்கைப் பூட்டு வர்மம்
கைச் சிப்பு எலும்பு வர்மம்
பூணூல் கால வர்மம்
வெல்லுறுமி தல்லறுமி வர்மம்
கச்சை வர்மம்
கூச்ச பிரம்ம வர்மம்
சங்கு திரி கால வர்மம்
வலம்புரி இடம்புரி வர்மம்
மேல் சுருக்கு வர்மம்
மேலாக கால வர்மம்
கீழாக கால வர்மம்
தட்டேல்லு வர்மம்
மேலஅண்ட வர்மம்
நாயிருப்பு வர்மம்
கீழ் அண்ட வர்மம்
குத்திக் கால வர்மம்

கைப்பகுதி வர்மங்கள் (17)...

வலம்புரி இடம்புரி வர்மம்
தல்லை அடக்க வர்மம்
துதிக்கை வர்மம்
தட்சணக் கால வர்மம்
சுழுக்கு வர்மம்
மூட்டு வர்மம்
மொளியின் வர்மம்
கைக்குசத்திட வர்மம்
உள்ளங்கை வெள்ளை வர்மம்
தொங்கு சதை வர்மம்
மணி பந்த வர்மம்
திண்டோதரி வர்மம்
நடுக்கவளி வர்மம்
சுண்டு விரல் கவளி வர்மம்
மேல் மணிக்கட்டு வர்மம்
விஷ மணி பந்த வர்மம்
கவளி வர்மம்

கால் பகுதி வர்மங்கள் (32)...

முதிர கால வர்மம்
பத்தக்களை வர்மம்
ஆமைக்கால வர்மம்
பக்க வர்மம்
குழச்சி முடிச்சி வர்மம்
சிறுவிரல் கவளி வர்மம்
சிரட்டை வர்மம்
கால் மூட்டு வர்மம்
காலக் கண்ணு வர்மம்
நாய்த் தலை வர்மம்
குதிரை முக வர்மம்
கும்பேறி வர்மம்
கண்ணு வர்மம்
கோணச்சன்னி வர்மம்
கால வர்மம்
தட வர்மம்
கண் புகழ் வர்மம்
அனகால வர்மம்
பூமிக் கால வர்மம்
இடுப்பு வர்மம்
கிழிமேக வர்மம்
இழிப் பிழை வர்மம்
அணி வர்மம்
கோச்சு வர்மம்
முடக்கு வர்மம்
குளிர்ச்சை வர்மம்
குசத்திட வர்மம்
உப்புக் குத்தி வர்மம்
பாதச் சக்கர வர்மம்
கீழ் சுழி வர்மம்
பதக்கல வர்மம்
முண்டக வர்மம்

இவையே உடலின் முக்கிய வர்மப் புள்ளிகள் என்று குறிப்பிடுகிறார்...

நம்ப முடியாத இலுமினாட்டி அமெரிக்கா நாட்டின் இரகசியம்...


சித்தர் ஆவது எப்படி ? - 21...


அதுவாய் இருப்பதும், அதைப் பற்றி இருப்பதும்...

ஆன்மீகம் இரண்டாய் பிளந்து போய் இருக்கிறது..

ஒன்று அதுவாய் இருக்கும் மிக உன்னத நிலை.. மற்றொன்று அது என்ற ஒன்றை மறந்து விட்டு அதனால் காரியப் பட்ட விசயங்களையும், அதைப் பற்றிய விசயங்களில் மூழ்கி போய் அது என்ற அந்த ஒன்றின் தொடர்பை முற்றிலும் இழந்து விட்ட நிலை.. அதுவாய் இருக்கும் அந்த நிலையில் பல கோடி மக்களில் ஒருவர் தான் இருக்கிறார்.. மற்றவர்கள் எல்லாம் அது என்ற ஒன்றை பற்றிய விசயங்களில் பற்றிக் கொண்டு இருக்கும் நிலை....

சத்திய நிலையில் அதுவாக இருக்கும் சத்திய மகான்கள் உலக மக்கள் தொகையில் சிலர் மட்டுமே..

ஆனால் பற்றிய விசயங்களில் பற்றிக் கொண்டு அசத்திய நிலையில் உண்மை அற்ற நிலையில் தவித்துக் கொண்டு இருப்பவர்களே மற்ற அனைவரும்..

கடவுளை யாரும் நினைப்பதில்லை..
கடவுளை பற்றிய விசயங்களில் பற்றி பற்றி அதனால் தோன்றியவற்றில் மூழ்கி கடவுள் நினைப்பே இழந்து போய் விட்டனர்..

காதலை யாரும் நினைப்பதில்லை. காதலைப் பற்றிய விசயங்களிலேயே இருக்கின்றனர்..

வயது கடந்த நிலையில் வைரமுத்து என்ற கவிஞர் காதலை சொல்லுகின்ற போது காதலை மட்டுமே சொல்லுகின்றார்.. காதலை பற்றி சொல்லுவதில்லை.. அந்த கவிதைகள் பல பேருக்கு வியப்பை தருகிறது..

கடவுளை சொல்லுகின்ற போது அது பல பேருக்கு வியப்பை தரும்.. ஆனால் புரிவதில்லை.. கடவுளை பற்றி சொல்லுகின்ற போது புரிவது போல தோன்றும்.. ஆனால் சத்தியம் விளங்குவது இல்லை..

அது சத்தியமாக இருக்கிறது.. அது என்பதை விளக்க வந்தவைகள் சித்தாக உள்ளது..

அப்படி விளக்க, விவரிக்க வந்தவைகளில் சிக்கி கொள்ளாமல் விளக்க வந்தவைகள் சுட்டி காட்டும் அந்த சத்தியத்தை பிடிப்பதே புத்தி அறிவு..

ஆனால் இன்றைய நிலையில் அந்த சத்தியத்தை பிடிப்பது அவ்வளவு எளிதாக இல்லை..

காரணம் விளக்க வந்தவைகளின் பிடிப்பு மிக வலுவாக உள்ளது.. அதிலிருந்து விடுதலை பெற முடியாமல் மனிதன் தவிக்கின்றான்.. அந்த தவிப்பின் வெளிப்பாடே மதவெறியாக மாறி விட்டது..

சித்து சுட்டிக் காட்டும் சத்தை பிடிப்பவர்கள் தான் சித்தர்கள்..

சித்து சுட்டி காட்டுபவைகளில் சிக்கி கொண்டவர்கள் பித்தர்கள், மன நோயாளிகள், மத வெறியாளர்கள்..

சத்தை பிடிப்பவர்களிடம் மட்டுமே அன்பு என்ற புனிதம் இருக்கும்..

விளக்க வந்தவைகளில் சிக்கி கொண்டவர்கள் விடுதலை பெற வேண்டுமானால் சத்து நிலையை மட்டுமே அனுபவப் படும் தோன்றாநிலையை அனுபவப் படும் போது மட்டுமே விடுதலைக் கிடைக்கும்..

கடவுளை பற்றிய விசயங்கள் அங்கே தொலைந்து போய் கடவுளையே அறியும் உன்னதம், புனிதம் கிடைக்கும்..

அந்த தோன்றா நிலையையும் அங்கே கிடைக்கும் சத்தியமான பிரபஞ்ச பேராற்றலை பெறுகின்ற புனித நிலையையும் பெறுவதையே முக்கிய நோக்கமாக கொண்டு நம் வாழ்க்கை பாதையை அமைத்துக் கொள்வோம் என்றால் சித்தர் ஆவது உறுதி....

மாறனும் எல்லாம் மாறனும்...


வள்ளுவனின் கடவுளைத் தொலைத்த தமிழர்கள்...


தலைப்பு அதிர்ச்சி தருகின்றதா? படித்து முடித்ததும் பதிவும் ஆதிர்ச்சி தரும், வள்ளுவர் அப்படி எந்த கடவுளை தன்னுடைய குறளில் குறிப்பிட்டுள்ளார்? எதை நாம் தொலைத்தோம்? அந்த கடவுளுக்கு அப்படி என்ன சிறப்பு?

நண்பர் Manick Rajendran மற்றும் சென்னையில் ஒரு பெரிய மருத்துவமனையில் (Cardiology) பிரிவை சேர்ந்த மருத்துவர் ஒருவரோடு கடந்த வாரம் காஞ்சி கோயில்களை காணச் சென்றிருந்தேன், ஆயிரம் கோயில் நகரில் மிகவும் பழைய கோயிலான சுமார் 1300 வருடங்கள் பழமையான கைலாசநாதர் கோயிலுக்கு சென்றிருந்தோம்..

ஒவ்வொரு சிற்பமாக டாக்டர் அவர்களுக்கு விளக்கிக் கொண்டே வருகையில் ஒரு கட்டத்தில் அந்த குறிப்பிட்ட சிற்பத்தின் எதிரே நின்று விளக்கி கொண்டிருக்கையில், நண்பர் மாணிக் இடையில் புகுந்து ஒரு அற்புதமான தகவலை கொடுத்தார்.

இரவு நேர வானில் தெரியும் நட்சத்திரங்களில் பதினாறாவது ஒளி பொருந்திய நட்சத்திரமாக Antares என்ற நட்சத்திரம் உள்ளது, இந்த நட்சத்திரத்தை தான் நம்முடைய ஆட்கள் இந்த சிற்பத்தில் கடவுளுடன் தொடர்பு படுத்தி அழைகிறார்கள் என்ற தகவலைக் கொடுத்தார்.

வீட்டிற்கு திரும்பியதும் இது குறித்து அவரிடம் தொலை பேசி செய்து மேலும் பேசுகையில், இந்த நட்சத்திரம் குறித்த தகவலை இணையத்தில்தேடச் சொல்லி இருந்தார் அப்படி தேடிய போது Antares (α Scorpii, α Sco, Alpha Scorpii) is a red super giant star in the Milky Way Galaxy, Its visual luminosity is about 10,000 times that of the Sun, but because the star radiates a considerable part of its energy in the infrared part of the spectrum, the bolometric luminosity equals roughly 65,000 times that of the Sun. என்ற கூடுதலான அதிர்ச்சியான தகவலைய கொடுத்தது.

இத்தனை தொழில் நுட்பம் வளர்ந்த காலத்தில் தெரிந்த ஒரு விஷயத்தை நம்முடைய ஆட்கள் அந்த காலத்திலயே கண்டு பிடித்து அதை வணங்கி இருப்பது பேரதிர்ச்சியாக இருந்தது.

சார் இந்த நட்சத்திரத்தின் தகவல் பிரம்மிப்பாக உள்ளது என்று அவரிடம் கூறுகையில், சசி திருமணம் முடிந்து அம்மி மிதித்து, அருந்ததி நட்சத்திரம் பார்பதற்கு கூட அர்த்தம் உள்ளது, நம்முடைய ஆட்கள் எதையும் பொழுது போக்கிற்காக சொல்லவில்லை, அனைத்திற்க்கு பின்னும் அறிவியல் உள்ளது என்றார்.

என்ன செய்வது பகுத்தறிவாளிகள் உள்ளே புகுந்து பலவற்றை அழித்து விட்டார்களே என்று எண்ணிக் கொண்டேன், சரி யார் அந்த கடவுள், அவரை எப்படி நாம் அடையாளம் காண்பது?

பிறரை வையும் போது மூதேவி என்ற வார்த்தையை அடிக்கடி நாம் பயன்படுத்துவோம், அந்த மூதேவி யார் என்று ஒருமுறையேனும் நாம் சிந்தித்திருப்போமா? இல்லை.

சரி இப்போதாவது தெரிந்து கொள்ளுங்கள், மூதேவி என்பவள் திருமகளின் (லக்ஷ்மி) அக்காள், அதாவது லக்ஷ்மிக்கு மூத்தவள் என்பதால் மூத்ததேவி, அதை தான் நாம் சுருக்கமாக மூதேவி என்றழைக்கிறோம்.

வள்ளுவர் தன்னுடைய அறத்துப்பாலில் 167 வது குறளில் இந்த மூதவியை தவ்வை என்ற பெயரில் முதன் முதலாக நமக்கு அறிமுகம் செய்கிறார்.

அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும். (குறள்:167)

விளக்கம்: பிறர் உயர்வு கண்டு பொறாமைப்படுபவனைப் பார்க்கும் திருமகள் வெறுப்புக் கொண்டு தன் அக்காள் மூதேவிக்கு அவனை அடையாளம் காட்டிவிட்டு விலகிப் போய்விடுவாள்.

தவ்வை என்பவள் யார் என புரிந்தது, அவள் எப்படி இருப்பாள் என்று யோசிக்கிறீர்களா?

மேலே உள்ள படத்தை பாருங்கள் பெரிய வயிறுடன் காக்கைக் கொடியை கையில் ஏந்தி தன்னுடைய இடது பக்கம் மகள் அக்னியுடனும், வலது பக்கம் தன்னுடைய மகன் நந்தியுடனும் பல கோயில்களில் காணக் கிடைப்பார், பல கல்வெட்டுகள் இவரை ஜேஷ்டை என்ற பெயரிலும் அறிமுகப்படுத்துகின்றது.

ஜேஷ்டாவிற்கும் மேலே கூறிய அந்த நட்சத்திரத்திற்கும் என்ன தொடர்பு என்று இணையத்தில் தேடுகையில் Jyeshtha (The Eldest) (Devanagari ज्येष्ठा)(Telugu: ఝ్యెష్ఠా) (Tamil: கேட்டை) is the 18th nakshatra or lunar mansion in Vedic astrology associated with the heart of the constellation Scorpii, and the stars α (Antares), σ, and τ . என்ற அறிய தகவலும் கிடைத்தது.

சங்க கால தமிழர்கள், பல்லவர்கள், பாண்டியர்கள், சோழர்கள் என அனைத்து மக்களும் கொண்டாடிய தெய்வம் இவள், கடைசியாக சோழர் காலம் வரை சிறப்புற்று இருந்த இந்த தெய்வத்தை, பிற்காலத்தில் நாம் தொலைத்து விட்டோம்.

ஆனால் இன்றும் பழங்கால கோயில்களில் பத்தோடு பதினொன்றாக தன்னுடைய மகன் மகளுடன் ஏதோ ஒரு மூலையில் யார் கண்ணிலும் படாமல் வருவோருக்கு அருள் புரிந்து கொண்டு தான் இருக்கிறாள்.

ஒருவேளை யார் கண்ணிலாவது பட்டாலும் அங்கே செல்லும் மக்களுக்கு இவள் யார் என்பது தெரியாது, இவளுக்கு இப்படி ஒரு நீண்ட நெடிய வராலாறு இருப்பதும் புரியாது.

பணம் தான் வாழ்கை என்றாகிவிட்ட காலத்தில் தவ்வை நமக்கெதற்கு? அவளின் தங்கை திருமகளே போதும் என்கிறீரா?

யாரை வேண்டுமானாலும் வணங்குங்கள் ஆனால் இத்தனை அறிவியல் வரலாற்றையும் ஈராயிரம் வருடங்களுக்கு முன் வாழ்கை நெறியை நமக்கு கற்பித்த வள்ளுவனும் கூறிய தவ்வையை மறந்து விடாதீர்கள் தமிழர்களே...