04/05/2018

எண்ணெய்யில் காணாமல் போகும் நோய்கள்...


10 மில்லி எண்ணெய்யில் காணாமல் போகும் நோய்கள்...

எண்ணெய் கொப்பளிப்பு (Oil Pulling) எனப்படும் எண்ணெய் மருத்துவம் இப்பொழுது அநேக இடங்களில் பிரபலமடைந்து வருகிறது. எண்ணெயை வாயில் விட்டு சாதாரணமாக கொப்பளிப்பது தானே என்று அலட்சியமாக இல்லாமல் தொடர்ந்து எண்ணெய் கொப்பளிப்பு எடுத்துக் கொள்பவர்களுக்கு அனைத்து நோய்களும் தீரும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது

இன்றைக்கு பிரபலமாகிக் கொண்டு வரும் எண்ணெய் கொப்பளிப்பு நூற்றாண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் கண்டுபிடித்து பின்பற்றியுள்ளனர். இது அனைத்து நோய்களுக்கும் பாதுகாப்பான எளிய மருத்துவ முறையாக இருந்துள்ளது.

பல்வகையான நுண்ணுயிரிகளுக்கும், கிருமிகளுக்கும் நமது வாய்தான் நாற்றங்காலாகி நமக்கு தீமை செய்கிறது. இந்த எண்ணெய் கொப்பளிப்பு, அத்தகைய தீய, கொடிய கிருமிகளையும் நுண்ணுயிரிகளையும் அழித்து அதன் மூலமாக உடலில் நஞ்சு கலந்த வேதியியல் பொருட்களை வெளியேற்றுகிறது. இதனால் நமது உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களும் புத்துணர்வு பெறுகிறது.

எண்ணெய் கொப்பளிப்பு எடுத்துக்கொள்வது பற்றி தெலுங்கு நாளிதழான ஆந்திர சோ(ஜோ)தியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்தப்பட்டது. மூன்று வருடங்களாக 1041 நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 927 நபர்களுக்கு நோய் குணமானது தெரியவந்தது. 758 நபர்களுக்கு கழுத்து மற்றும் உடல்வலி குணமாகியது. ஒவ்வாமை (Allergy) மற்றும் சுவாசகாசம் (asthma) நோய்கள் 191 பேருக்கு சரியானது.

தோல்நோய், அரிப்பு,கரும்படை, உள்ளிட்ட நோய்கள் குணமடைந்ததாக தெரிவித்திருந்தனர். மேலும், இதயநோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம்,நரம்பு தொடர்பான நோய்கள் குணமடைந்ததாக கணக்கெடுப்பில் (Survey) தெரிவித்திருந்தனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.