13/01/2018
முட்டை வியாபாரிக்கு பட்டை நாமம் போட்ட தீபா.. கார் டிரைவருடன் சேர்ந்து பல லட்சங்கள் ஆட்டையை போட்டதும் அம்பலம்...
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை பொது செயலாளருமான தீபாவால் பல லட்சம் ரூபாயை இழந்துவிட்டேன் என்று சென்னையைச் சேர்ந்த முட்டை வியாபாரி ராமச்சந்திரன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த முட்டை வியாபாரி ராமச்சந்திரன் என்பவர் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது; சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் முட்டை மொத்த வியாபாரம் மற்றும் மளிகைக் கடை நடத்திவருகிறேன். எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையில் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளராகப் பணியாற்றினேன்.
தீபாவின் கார் டிரைவர் ராஜா என்னை தொடர்புகொண்டு தி.நகர், சிவஞானம் தெருவில் உள்ள தீபா வீட்டை ஆல்டரேஷன் செய்ய 50 லட்சம் ரூபாய் கடனாக வேண்டும் என்று கேட்டார். முதல் முறையாக 4.3.2017 அன்று சென்னை அடையாற்றில் வைத்து பணத்தைக் கொடுத்தேன்.
மேலும், பல கட்டங்களில் ராஜா மூலம் தீபாவுக்குப் பணம் கொடுத்து வந்தேன். நான் கொடுத்த 50 லட்சம் பணத்தை 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் தீபாவின் கணவர் மாதவன் திருடிவிட்டுதாகத் தீபாவும் ராஜாவும் என்னிடம் கூறினர். இதனால், அவசரச் செலவுக்காக 10 லட்சம் ரூபாய் கொடுத்தேன். இதுவரை கட்சி அலுவலகம் திறந்தது, கொடி ஏற்றியது என்ற வகையில் பல லட்சங்களை இழந்துள்ளேன்.
அந்தப்பணத்தை நான் திரும்ப கேட்கவில்லை. ஆனால் தீபா மற்றும் அவரின் கார் டிரைவர் என்னிடம் வாங்கிய பணத்தை கேட்கிறேன். என்னிடமிருந்து இதுவரை மொத்தம் 1.12 கோடி ரூபாய் வரை தீபாவும் ராஜாவும் மோசடி செய்துள்ளனர். எனவே, பணத்தைத் திரும்பப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருக்கிறார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பணத்தைப் பறிகொடுத்ததாக புகார் அளித்த முட்டை வியாபாரி ராமசந்திரன் கூறுகையில், "என்னுடைய தந்தை நயினார் அ.தி.மு.க-வில் இருக்கிறார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தீபாவின் தலைமையில் செயல்பட்டேன். என்னிடம் கடனாக வாங்கிய 1.12 லட்சம் பணத்தை தீபாவிடம் திரும்பக் கேட்டதால் என்னைக் கட்சிப் பதவியிலிருந்து நீக்கிவிட்டார்.
என் மீது தி.நகர் காவல் நிலையத்தில் பொய் புகார் கொடுத்தார். அவர் கொடுத்தது பொய் புகார் என அந்த தெருவில் இருக்கும் சிசிடிவி கேமரா அம்பலபடுத்தியது. அதுமட்டுமல்ல எனக்கு கொலை மிரட்டல் விடுகிறார்கள். நானே கடன் வாங்கிதான் தீபாவுக்குப் பணம் கொடுத்தேன். இதுவரை 3 லட்சம் ரூபாய் வட்டி கட்டியிருக்கிறேன். தீபாவிடம் கொடுத்த பணத்துக்கு என்னிடம் ஆதாரம் உள்ளது" என்றார்.
ராமசந்திரனிடம் மட்டுமல்ல பலர், தீபாவை நம்பி வந்து பலர் தங்களது பணத்தை லட்சக்கணக்கில் பறிகொடுத்துள்ளார்கள். பதவிகளைக் கொடுப்பதாக அவரது கார் டிரைவர் ராஜா பண மோசடி செய்துள்ளார். முட்டை வியாபாரி ராமசந்திரனிடமிருந்து ஒரு கோடி ரூபாய்க்கு மேல் தீபாவும் ராஜாவும் வாங்கியுள்ளனர்...
முத்துலெட்சுமி எழுதிய சுயசரிதையில் சொல்லப்படாத இருவர்...
1.சத்திய மூர்த்தி...
2.ஈ.வெ.ரா. பெரியார்...
தேவதாசி முறை ஒழிப்புக்காக பாடுபட்டவர் முத்துலெட்சுமி அம்மையார். இவர் 1927இல் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் சட்டமன்ற உறுப்பினருமாவர். இவர் தேவதாசி ஒழிப்புக்காக சட்ட முன்வரைவை கொண்டு வந்த போது கடுமையாக எதிர்த்தவர் சத்திய மூர்த்தி ஐயர். இவர் இறைவனுக்கு ஆற்றும் பணியை தடுக்கக்கூடாது என்று சொன்ன போது, உங்கள் ஆத்துப் பெண்களை இறைப்பணி செய்ய அனுப்புங்களேன் என்று கூறி, சத்தியமூர்த்தியின் வாயடைத்தவர் முத்துலெட்சுமி அம்மையார் என்று தான் பலரும் சொல்லி வருகிறோம். குறிப்பாக, ஈ.வெ.ரா. பெரியார் தான் முத்துலெட்சுமியை தூண்டிவிட்டு கேட்கச் சொன்னதாக தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது.
முத்துலெட்சுமி அம்மையார் 1964ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் சுயசரிதை நூல் எழுதியுள்ளார். அந்நூல் தமிழாக்கம் செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வந்துள்ளது. அந்நூலை தற்போது தான் படிக்க நேர்ந்தது. அந்நூலிலே, முத்துலெட்சுமி அம்மையார் சத்திய மூர்த்தி ஐயரிடம் இப்படியொரு விவாதம் நடத்தப்பட்டதை எங்கும் குறிப்பிடவே இல்லை, (ஓரிடத்தில் தன்னுடைய வகுப்புத் தோழர் அரசியல்வாதியான சத்திய மூர்த்தி என்கிறார் ) அதுபோல் முத்துலெட்சுமிக்கு ஆதரவாக "குடியரசு" ஏட்டில் குரல் கொடுத்த ஈ.வெ.ரா. பெரியார் குறித்து ஒரு வார்த்தை கூட இல்லை.
அந்நூலில், லேடி சதாசிவ ஐயரின் தலைமையில் அகில இந்திய மாதர் சங்கத்தை துவக்கியதாகவும், பெண்களுக்கு இல்லம் அமைப்பதற்கு ஶ்ரீனிவாச சாஸ்திரியார் முன்னெடுத்ததை அறிந்த பிறகே தாம் வேலை செய்யத் தொடங்கியதாக குறிப்பிடுகிறார்.
மேலும், அவர் சட்டமன்றத்தில், பெண்கள், குழந்தைகள் ஆகியோரின் முன்னேற்றத்திற்காக தீர்மானங்கள் கொண்டுவர முயன்ற போது கடும் எதிர்ப்பைச் சந்தித்ததாகவும், அச்சமயத்தில் காந்தியிடமிருந்தே ஆதரவைப் பெற்றதாகவும் குறிப்பிடுகிறார். பெண்ணுரிமைக்குப் போராடும் வலுவான போராளி என்று புகழாரம் அனைத்தையும் காந்தியாருக்கே சூட்டி மகிழ்கிறார். 'யங் இந்தியா' ஏட்டில் தமக்கு ஆதரவாக காந்தியார் எழுதியதையும் விரிவாகக் கூறுகிறார்.
1946இல் சென்னையில் இந்தி பிரச்சார சபை வெள்ளி விழா கூட்டத்திற்கு காந்தியார் வருகை தந்த கூட்டத்தில், முத்து லெட்சுமி அம்மையார் பெண்விடுதலைக்குப் பாடுபட்ட தலைவர்களாக இராஜராம் மோகன்ராய், பண்டிட் வித்யாசாகர், சுவாமி தயானந்த சரசுவதி ஆகியோரை குறிப்பிட்டு பேசுகிறார்.
பிறகு நீதிக்கட்சி தலைவர் பனகல் அரசர் தமக்கு ஆதரவாக செயல்பட்டதை நினைவு கூறும் முத்துலெட்சுமி அம்மையார் தமது மசோதாவை தாமதப்படுத்த நீதிக்கட்சியைச் சார்ந்த கிருஷ்ணன் நாயர் முயல்வதாகவும் குற்றம் சாட்டுகிறார். காங்கிரசு கட்சி சட்டமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டதால் தமக்கு ஆதரவளித்த வெங்கையா, ஏ.பி.ஷெட்டி,.ஆர். நாகன் கெளடா, நடேச முதலியார், ஏ.ரங்கநாத முதலியார், கே.உப்பி சாஹிப் ஆகியோரை நன்றியோடு நினைவு கூறுகிறார்.
இந்தியாவிற்கு முன்மாதிரியாக நீதிக்கட்சிதான் தேவதாசி முறையை ஒழித்ததாக திராவிட இயக்கத்தவர் கூறி வருகின்றனர். ஆனால் முத்துலெட்சுமி அம்மையாரோ தேவதாசி முறையை முதன்முதலாக ஒழித்தது 1909இல் மைசூர் சமஸ்தானமே என்று பாராட்டு தெரிவிக்கிறார். 1930களில் கொச்சி சமசுதானத்தில் அடியோடு தேவதாசி முறை ஒழிக்கப்படும் போது, அதுபோல ஆங்கிலேயரால் ஏன் சாதிக்க முடியவில்லையே? என கேள்வி எழுப்புகிறார்.
அவர் குற்றம் சாட்டும் ஒரே நபர் இராசாசி மட்டுமே. 1937இல் முதல்வராக இராசாசி பதவி வகித்த போது தேவதாசி ஒழிப்புமுறை சட்டத்தை தடுத்ததாகவும், பெண்கள் சீர்திருத்தத்திற்கு எதிரானவர் இராசாசி என்றும் கடுமையாகச் சாடுகிறார்.
பின்னர், 1947இல் ஓமந்தூர் இராமசாமி முதல்வராக இருந்த போதுதான் தேவதாசி சட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டு பெண்கள் தேவதாசி முறையிலிருந்து விடுபட்டதாகவும் மகிழ்ச்சி பொங்க குறிப்பிடுகிறார்.
அதுசரி, தமக்கு வழி காட்டியான காந்தியாரைத் தெரிகிறது, ஶ்ரீனிவாச ஐயங்காரைத் தெரிகிறது, லேடி சதாசிவ ஐயரைத் தெரிகிறது, தேவதாசி முறையை எதிர்த்த பனகல் அரசரைத் தெரிகிறது, அதே கால கட்டத்தில் எதிர்த்த ஈ.வெ.ரா. பெரியாரைத் தெரியவில்லையா?
தேவதாசி முறையை ஆதரித்த இராசாசியைத் தெரிகிறது, அதை ஆதரித்த மற்றொருவரான சத்திய மூர்த்தி ஐயரைத் தெரிய வில்லையா?
இது போன்ற கேள்விகள் முத்துலெட்சுமி அம்மையார் எழுதிய சுயசரிதை நூலைப் படிக்கும் போது எழுகின்றன.
சத்திய மூர்த்தி ஐயரின் குடும்பத்தை நோக்கி, முத்துலெட்சுமி அம்மையார் கேட்டதாக சொல்லப்படும் செய்தியை பலரும் கூறிவருவதை நானும் இதுகாறும் நம்பி வருகிறேன். முத்துலெட்சுமி அம்மையாரின் எழுத்திலும், பேச்சிலும் நாகரிக வார்த்தைகளே இந்நூலில் கொட்டிக் கிடக்கின்றன. சத்திய மூர்த்தி ஐயரையே விமர்சிக்கத் தயங்குபவர் "உங்க ஆத்துப் பெண்கள் இத்தொழிலை செய்யட்டும்" என்று கூறியிருப்பாரா? என்ற ஐயம் எனக்குள் எழுகிறது.
இந்தத் தகவலை பிராமண எதிர்ப்புக்காக தீவிரமாகப் பரப்பி வரும் திராவிட இயக்கத்தினர் மூலச் சான்றுகளோடு விளக்கம் அளித்தால் நல்லது..
(டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி சுயசரிதை, எஸ். இராஜலெட்சுமி (தமிழில்), அவ்வை இல்லம், ராஜ லெட்சுமி சீனிவாசன் நினைவு அறக்கட்டளை)...
இசைக் கருவி தம்புரா...
இதில் நான்கு தந்திகள் இருக்கின்றன. நடுத்தந்திகள் இரண்டும் ஆதார சட்ச சுரத்தை ஒலிக்கின்றன. நான்கு தந்திகளையும் ஒன்றாய் மீட்டி வரும்போது முதலாவது தந்தியில் வருவது அந்த ஆதார சட்ச சுரத்திற்குத் தாழ்ந்த பஞ்சம சுரத்தை ஒலிப்பதாக சுருதி செய்தல் வேண்டும்.
கடைசியில் உள்ள நான்காம் தந்தியில் ஆதார சட்ச சுரத்திலும் தாழ்ந்த ச-ஒலிப்பதாய்ச் சுருதி செய்தல் வேண்டும்.
எனவே தந்திகளை மீட்டி வரும்போது அவை “ ப [தாரஸ்தாயி low octave]-ஸ-ஸ-ஸ [தாரஸ்தாயி low octave]-” என்று ஒலிப்பதாய் இருக்க வேண்டும்.
இந்த நான்கு தந்திகளின் ஒலிகளும் தனித்தனியே பிரிந்து ஒலிக்காமல் ஒன்று சேர்ந்து ஒலிக்கும் போது, பிரதான மெட்டின் மேல் நான்கு தந்திகளுக்கும் மெட்டிற்கும் இடையே துண்டு நூல்கள் செலுத்தி வைத்துக் கொள்ளப்படும்.
இதற்கு “சீவா” என்று பெயர். இது வண்டின் ஒலிபோல ரீங்காரத்துடன் தொடர்ந்து ஒலியாக கேட்கப் பெறும்.
இந்த “சீவா” என்ற ரீங்கார ஒலியினால் நன்றாக சுருதி சேர்க்கப் பெற்ற தம்புராவானது “ரிகரிக” என்று ஒலித்து செவிப்புலனாகும். இது மிகவும் இனிமையாக இருக்கும்.
தம்புராத் தந்திகளின் சுருதி நன்றாக சேர்ந்திருப்பதற்கு இங்குக் கூறப்பெற்ற “ரிகரிக” என்று ஒலிக்கும் சிறப்பே குறிகாட்டியாகும்.
தம்புராவைப் பயன்படுத்திக் கொண்டு பாடி வரும்போது, ஒவ்வொரு சுவரமும் அதன் தானத்தில் வருகின்றதோ என்பதை இசைப் போர் தெரிந்துக் கொண்டு பாடி வரலாம்.
பாடுவோர் பாடி நிருத்தியிருக்கும் காலத்தில் இத்தம்புராவின் ஆதார சுருதி ஒலியானது “சீவா” வின் தொடர்பால் இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருப்பதால் அவர் பாடிக் கொண்டிருப்பதைப் போலுள்ள ஓர் உயர்ச்சியையும் அது உண்டாக்குகின்றது...
உளுந்தங்கஞ்சி...
விளையாட்டு வீரர்கள். ஓயாமல் ஓடிக் கொண்டே இருக்கும் உழைப்பாளிகள் தினமும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.
முதுகு வலி, இடுப்புவலி இரண்டுமே இருக்காது.
மலையேற்றம் மேற்கொள்பவர்கள் இதனை உட்கொண்டால் உடல்சோர்வே இருக்காது.
பெண்களுக்கு கர்பப்பை மிகவும் வலுப்பெறும்.
உளுந்தங்கஞ்சி தேவையான பொருட்கள்...
1.உளுந்தம்பருப்பு ஒரு டம்ளர் (கருப்பு உளுந்து நல்லது).
2.பச்சரிசி அரை டம்ளர்.
3.வெந்தயம் ஒரு தேக்கரண்டி.
4.பூண்டு 20 பல்லு.
5.வெல்லம் அல்லது கருப்பட்டி இனிப்புக்கு ஏற்றது போல்.
6.தேங்காய் ஒரு மூடி.
செய்முறை...
உளுந்தம்பருப்பு, பச்சரிசி, வெந்தயம், உரித்த பூண்டு அனைத்தையும் போட்டு ஆறு டம்ளர் (பருப்பு அளந்த டம்ளரில்) தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து 8 விசில் வரும் வரை விட வேண்டும்.
(குக்கரின் உள்ளே பாத்திரம் வைத்து தான் வைக்க வேண்டும். அப்படியே வைத்தால் அடிப்பிடித்துவிட வாய்ப்பு அதிகம். மேலும் தண்ணீர் வெளியே வந்துவிடும்).
இது தயாராவதற்குள் வெல்லம் அல்லது கருப்பட்டியை சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காய் அரைத்து பாலும் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
எட்டு விசில் வந்தவுடன் இறக்கி உள்ளே இருக்கும் பாத்திரத்தை வெளியே எடுத்து சூடாக இருக்கும் போதே நன்கு மசித்துவிட்டு வெல்லப்பாகு, தேங்காய்ப் பால் இரண்டையும் ஊற்றி சூடாக சாப்பிடவும். தேங்காய் துருவியும் போடலாம்.
(சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் வெல்லம் தேங்காய் இரண்டையும் தவிர்த்து விடலாம்,. செரிமானப் பிரச்சனை உள்ளவர்கள் தேங்காயை மட்டும் தவிர்த்து விடலாம்.)...
உங்கள் கட்சிக்கு சுயத்தன்மையே கிடையாதா? -ஸ்டாலினுக்கு பாமக அன்புமணி கண்டனம்...
பாமகவின் சாதனைகளையெல்லாம் திமுகவின் சாதனைகளாக சட்டப்பேரவையில் பட்டியலிடுகிறீர்களே உங்கள் கட்சிக்கு சுயத்தன்மையே கிடையாதா? என மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில்...
தமிழக சட்டப் பேரவையில் பேசும் போது பாமகவின் சாதனைகளையெல்லாம் திமுகவின் சாதனைகளாக பட்டியலிட்டு மகிழ்ந்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின். எதிரணியினர் இல்லாத விளையாட்டுத் திடலில் இஷ்டம் போல கோல் அடிப்பதைப் போன்று சட்டப்பேரவையில் பாமக இல்லாததை பயன்படுத்திக் கொண்டு அதன் சாதனைகளை சொந்தம் கொண்டாடியது கண்டிக்கத்தக்கது.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், மத்திய அரசுடன் நெருக்கமாக இருக்கும் அதிமுக அரசு அதன் மூலம் சாதித்தது என்ன? என்று வினா எழுப்பியதுடன், எதிர்தரப்பில் தரப்பில் எவரும் கேட்காத போதிலும், மத்திய அரசில் திமுக இருந்த போது சாதித்த திட்டங்கள் என்று கூறி ஒரு பட்டியலை படித்துள்ளார். அதில் இடம்பெற்றுள்ள சாதனைகளில் பெரும்பாலானவை பாமகவின் சாதனைகளாகும். பாமக படைத்த சாதனைகளை திமுக சொந்தம் கொண்டாடுவது வேடிக்கையாகவும், வினோதமாகவும் உள்ளது. ஸ்டாலின் கூறியது மிகவும் அப்பட்டமான, அருவறுக்கத்தக்க பொய்யாகும்.
தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம் நிறுவப்பட்டது, சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரூ.120 கோடியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை உறுதி செய்தது ஆகியவை மத்திய அரசில் அங்கம் வகித்த போது திமுக படைத்த சாதனைகள் என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார். இவையெல்லாம் திமுக மத்திய அரசில் அங்கம் வகித்த போது படைக்கப்பட்ட சாதனை தான்... ஆனால், திமுக படைத்த சாதனைகள் அல்ல, பாமகவின் சாதனைகள் என்பதை நண்பர் ஸ்டாலின் வரலாற்றைப் படித்து அறிந்து கொள்ள வேண்டும்.
தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்திட்டம் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், அதன் பணிகளை ரூ.49 கோடி செலவில் விரைவுபடுத்தி, 03.09.2005 அன்று அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கை அழைத்து திறப்பு விழா நடத்தியது நான்தான். திறப்பு விழா வரை காத்திருக்காமல், அதற்கு முன்பே மக்களுக்கு மருத்துவம் அளிக்க ஏற்பாடு செய்ததும் நானே. அதேபோல், சேலத்தில் ரூ.139 கோடியில் டெல்லி எய்ம்ஸுக்கு இணையான அதி உயர் சிறப்பு மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கி செயல்படுத்தியதும் எனது அமைச்சகம் தான். இந்த திட்டத்தை செயல்படுத்த பல வழிகளில் தடை போட்ட திமுக, இப்போது அந்த திட்டத்திற்கு சொந்தம் கொண்டாடுவதை எந்த வகையில் சேர்ப்பதோ?
பாமகவின் சாதனைகளை திமுக சொந்தம் கொண்டாடுவது இது முதல் முறையல்ல. ஒட்டுமொத்த இந்தியாவும் போற்றும் 108 அவசர ஊர்தித் திட்டத்தை எனது அமைச்சகம்தான் கொண்டு வந்தது என்பது குழந்தைகளுக்குக் கூடத் தெரியும். ஆனால், அந்தத் திட்டத்தை தாங்கள் கொண்டு வந்ததாக மிகப்பெரிய பொய்யைக் கூறி விளம்பரம் தேட திமுக முயன்றது கடந்த கால வரலாறாகும்.
அதுமட்டுமின்றி, மதுரையில் ரூ.150 கோடியில் எய்ம்ஸுக்கு இணையான அதி உயர்சிறப்பு மருத்துவமனை, சென்னையில் ரூ.100 கோடியில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல அதி உயர் சிறப்பு மையம், சென்னையில் ரூ.250 கோடியில் பிளாஸ்மா பிரிப்பு மையம், ரூ.112 கோடியில் மூத்த குடிமக்கள் கவனிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஸ்டான்லி மருத்துவமனையில் குருத்தணு ஆய்வகம் உள்ளிட்ட திட்டங்களுக்கு எனது தலைமையிலான மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி வழங்கி, அவற்றுக்கு நிதியும் ஒதுக்கப்பட்ட நிலையில் அப்போது தமிழகத்தை ஆண்ட அதிமுகவும், திமுகவும் அவற்றை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு வைத்தன.
இது தான் திமுக, அதிமுக ஆட்சிகளின் சாதனையாகும். மேலும், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு நான் மேற்கொண்ட புகையிலைத் தடை தொடர்பான பல திட்டங்களுக்கு அப்பட்டமான எதிர்ப்பு தெரிவித்தவர் கருணாநிதி. இது தான் திமுகவின் சாதனை. மத்திய உயர்கல்வி நிறுவன மாணவர் சேர்க்கையில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உறுதி செய்தது திமுகதான் என்ற இமாலயப் பொய்யையும் ஸ்டாலின் கூறியுள்ளார். 27% இட ஒதுக்கீடு குறித்து முடிவெடுப்பதற்காக 23.05.2005 அன்று சோனியா காந்தி இல்லத்தில் நடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் மண்டல் ஆணையப் பரிந்துரைப்படி கல்வியில் 27% இட இதுக்கீடு வழங்கும் திட்டத்தை முடக்கிப் போட முயற்சிகள் நடந்தன.அதற்கு ராமதாஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவருக்கு ஆதரவாக மற்ற கட்சித் தலைவர்கள் குரல் கொடுத்த போதிலும், திமுக பிரதிநிதிகள் 27% ஒதுக்கீட்டுக்கு ஆதரவளிக்காமல் வேடிக்கைப் பார்த்தனர்.
இதையடுத்து ராமதாஸை சமாதானப்படுத்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மாலையில் மீண்டும் கூடி இதுபற்றி விவாதிக்கலாம் என்று உறுதியளித்தார். இடைப்பட்ட நேரத்தில் லாலு பிரசாத், ராம்விலாஸ் பாஸ்வான், சீதாராம் யெச்சூரி, பரதன், டி.ராஜா உள்ளிட்ட தலைவர்களையும், பிரதமர் மன்மோகன்சிங்கையும் ராமதாஸ் சந்தித்து ஆதரவு திரட்டினார்.
அக்கூட்டத்திற்கு வராமல் சென்னையில் இருந்த தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியை, தயாநிதி மாறனின் தொலைபேசியில் பலமுறை தொடர்பு கொண்டு 27% இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளிக்கும்படி ராமதாஸ் வலியுறுத்தினார். அதன்பின்னர் மாலையில் தொடங்கி, இரவு வெகுநேரம் வரை நடைபெற்ற கூட்டத்தில் ராமதாஸின் நிலைப்பாட்டை மற்ற அனைத்து தலைவர்களும் ஆதரித்ததன் பயனாகவே 27% ஒதுக்கீடு சாத்தியமானது. இந்த வரலாறு நண்பர் ஸ்டாலினுக்கு தெரியாமல் இருக்கலாம். இதற்கெல்லாம் சாட்சியாக இருந்த அவரது மருமகன் தயாநிதி மாறனிடம் கேட்டு 27% இடஒதுக்கீட்டு போராட்ட வரலாற்றை தெரிந்துகொள்ளலாம்.
சேலம் ரயில்வே கோட்டம், தமிழ்நாட்டில் அனைத்து மீட்டர் கேஜ் பாதைகளையும் அகலப்பாதையாக மாற்ற அனுமதி அளித்தது ஆகியவையும் திமுகவின் சாதனைகள் என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார். இவையும் பாமகவின் சாதனைகளாகும்.
ரயில்வே இணையமைச்சராக அரங்க.வேலு பொறுப்பேற்றவுடன் அவரை அழைத்த ராமதாஸ், தமிழ்நாட்டில் ஒரு மீட்டர் அளவுக்குக் கூட மீட்டர் கேஜ் பாதைகள் இருக்கக்கூடாது. அனைத்தும் அகலப்பாதைகளாக மாற்றப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதை குறைந்தது 100 முறையாவது அவரிடம் வலியுறுத்தியிருப்பார் ராமதாஸ். இத்தகைய அறிவுரைப்படித் தான், பாமகவைச் சேர்ந்த அரங்க.வேலு தான் கடுமையாக போராடி இத்திட்டங்களைக் கொண்டு வந்தார்.
பாமகவைச் சேர்ந்தவர்கள் ரயில்வே அமைச்சர்களாக இருந்த போது அறிவிக்கப்பட்ட தமிழக ரயில்வே திட்டங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகள் மத்திய அரசில் அங்கம் வகித்தும் நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்காதது தான் தமிழ்நாட்டிற்காக திமுக செய்த பெரிய சாதனை ஆகும். எந்த ஒரு கட்சிக்கும் சுயம் தேவை. தங்களின் சாதனைகளை பட்டியலிட்டு பெருமை கொள்வதில் தவறில்லை. மாறாக அடுத்தக் கட்சியின் சாதனைகளை தங்களின் சாதனைகளாக பட்டியலிடுவது சாதனைத் திருட்டாகவே பார்க்கப்படும்.
2015-ம் ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, கடலூர் உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு வழங்குவதற்காக பொதுமக்களும், தொண்டு நிறுவனங்களும் கொண்டு வந்த உதவிப் பொருட்களை ஆளுங்கட்சியினர் பிடுங்கி ஜெயலலிதாவின் ஸ்டிக்கர் ஒட்டி கொடுத்ததற்கும், ஸ்டாலினின் செயலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
கடந்த காலங்களில் பாமக அறிக்கை மற்றும் தேர்தல் அறிக்கைகளை காப்பியடித்த திமுக, இப்போது பாமகவின் சாதனைகளைக் காப்பியடித்திருக்கிறது. இனியாவது மக்களுக்கு ஏதேனும் நன்மைகளை செய்யவும், அவ்வாறு செய்த நன்மைகளை மட்டும் திமுகவின் சாதனைகளாக பட்டியலிடவும் நண்பர் ஸ்டாலின் முயல வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்...
தற்காலிக பஸ் ஸ்டாண்ட்...
பொங்கல் பண்டிகையையொட்டி நெரிசலை சமாளிக்க சேலம் போஸ் மைதானத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, ஆத்தூர், அரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றது..
இந்த தற்காலிக பஸ் ஸ்டாண்ட் 12ம் தேதி முதல் 16ஆம் தேதி வரை செயல்படும்...
நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்...
நீங்கள் சிறிது நலமற்று இருந்தாலும் அதை பற்றி பேசாதீர்கள்..
அது உங்களுக்கு இன்னும் அதிகமாக வரவேண்டுமென்றால் மட்டுமே பேசுங்கள்....
நான் பிரமாதமாக இருக்கிறேன், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று எத்தனை தடவை முடியுமோ அத்தனை தடவை வாய்விட்டு கூறுங்கள்....
உங்களால் ஜலதோசத்தையோ அல்லது வேறு நோய்களையோ பிடித்து கொள்ள முடியாது... நீங்கள் அப்படி நினைக்காத வரை.
அப்படி நினைத்தால், உங்கள் எண்ணங்களால் அவற்றிற்கு வரவேற்பு விழா நடத்துகிறேர்கள்...
அப்படி ஏற்பட்டு இருந்தாலும் உங்கள் சிரிப்பு மற்றும் எண்ணங்கள் மூலம் உங்களை நீங்களே குணபடுத்தலாம்..
நோய்களால், கிருமிகளால் மகிழ்ச்சியான அல்லது உணர்வு பூர்வமான ஒரு உடலில் வாழ முடியாது..
எல்லா நோய்களும் ஒரே அடிப்படை காரணத்தில் தான் தோன்றுகின்றன... அதுதான் மன இறுக்கம்..
முதலில் மன இறுக்கத்தை மட்டும் உங்களுக்குள் இருந்து வெளியேற்றுங்கள்.. பிறகு உங்கள் உடல் தன்னுடைய இயற்கையாக கிடைத்த நோய் எதிர்ப்பு சக்தி மூலம் தன்னை தானே குணபடுத்தி கொள்ளும்...
உங்கள் உடல் இயற்கையாகவே அவ்வாறு வடிவமைக்கப்பட்டு உள்ளது என்பது அற்புதமான ஒன்று....
கடத்தலுக்கு தயாராக இருந்த மணல் குவியல்கள் பரிமுதல்...
குடியாத்தம் பாலாற்றில் பட்டு கிராமத்தில் கடந்த பல மாதங்களாக மனள் கொள்ளையர்களின் அட்டகாசம் தொடர்வதாகவும் இதனால் பாலாற்றில் வெள்ளம் வந்தால் தங்கள் கிராமம் முழுவதுமாக பாதிக்கப்படும் எனவும் அதனால் மணல் கொள்ளையை முழுவதுமாக தடுக்க வேண்டும் எனவும் அந்த கிராம மக்கள் தொடர்ந்து புகார் கொடுத்து வந்தனர்.
அதனால், பேர்ணாம்பட் தாசில்தார் காவல்துறையினரின் பாதுகாப்புடன் அப்பகுதியில் இரவு முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது ஆற்றில் சட்ட விரோதமாக திருடிய மணல்கள் லாரிகளில் கடத்த ஆங்காங்கே மணல் குவியல்களாக சேர்த்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு பிடித்து அவற்றை முழுவதுமாக பரிமுதல் செய்து மாவட்ட ஆட்ச்சியரின் உத்திரவின் பெயரில் அரசு கட்டுமாண பணிக்கு பயன்படுத்த பொதுப்பணி துறையினரின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் பரிமுதல் செய்த சுமார் 75, க்கும் மேற்ப்பட்ட மணல் குவியல்கள் பொதுப்பணித்துறையினர் லாரிகள் மூலம் சம்மந்தப்பட்ட அரசு கட்டுமான பணிகள் நடக்கும் இடங்களுக்கு கொண்டு சென்றனர்...
தமிழர்களின் கண்டு பிடிப்புக்கள் இன்று தமிழர்கள் அறியாமல் அடையாளம் இழந்து கொண்டு உள்ளனர்...
தினசரி காலண்டரில் "கெர்போட்ட நிவர்த்தி" என்று ஒரு குறிப்பு கண்டேன். அப்படி என்றால் என்ன? ஏதேனும் விசேட நாளா?
சிலர் காலண்டரின் பின் பக்கம் என்றைக்கெல்லாம் தமிழகஅரசு விடுமுறைன்னு பாக்கும் போதெல்லாம் *கெர்போட்ட நிவர்த்தி* என்று ஒன்று இருப்பதையும் கவனித்திருப்பீர்கள் .
இது எதும் விசேட தினமோ அல்லது மார்கழி மாத கோவில் திருநாளோ அல்ல.
உண்மையில் தமிழர்கள் அடுத்த வருட மழை கணிப்பு முறை.
அதாவது "கரு ஓட்டம்" என்பதே கர்ப ஓட்டம் என்று மாறி கர்ப்போட்டம் என்றாகி இன்று காலண்டர்களில் கெர்ப்போட்டம் என்று காண்கிறது.
நம்முடைய தமிழகத்தில் சூரியனின் சுழற்சியை மையமாக கொண்ட சூரிய வழி மாதங்கள் பின்பற்ற படுகிறது
இது தவிர வானியல் நட்சத்திரங்களை இருபத்தேழு மண்டலங்களாகவும் பன்னிரு ராசி மண்டலங்களாகவும் பிரித்துள்ளனர்.
அவ்வகையில் தனூர் மாதம் எனப்படும் மார்கழியில் சூரியன் தனூர் ராசி மண்டலத்தை கடக்கும் போது பூராட நட்சித்திரத்தை கடக்க பதினான்கு நாட்களை எடுத்து கொள்கிறது.
இந்நாட்களில் கருமேகங்கள் தெற்கு நோக்கி நகருவதை கண்டு கொள்ளலாம்.
இந்த பதினான்கு நாட்களும் கர்ப்போட்ட நாட்கள் ஆகும்.
அதாவது மழை கரு கொள்ளும் நாள் அல்லது மேகம் சூல் ஆகும் நாள்.
இதனை பெண்ணின் பத்து மாத கர்ப்ப காலத்துடன் ஒப்பிடுங்கள். மார்கழியில் கர்ப்பம் தரிக்கும் பெண் ஒருவள் ஒன்பது மாதம் கழித்து புரட்டாசிக்கு பின் பிள்ளை பெறுவாள்.
அவ்வகையில் இந்த கர்போட்ட நாட்களில் மழை முறையாக சூல் கொண்டால்
ஒன்பது மாதம் கழித்து அடுத்த ஆண்டில் ஐப்பசி கார்த்திகையில் மழை பொழிவு அளவும் முறையாக இருக்கும்.
இந்த கர்போட்ட நாட்கள் தோராயமாக டிசம்பர் 28 முதல் ஐனவரி 11ஆந் தேதி வரை அமைகிறது.
ஒரு எளிய விவசாயிக்கு தனூர் மாதம் பூராடம் நட்சத்திரம் எல்லாம் தெரியாது இல்லையா?
எனவே மார்கழி மாதம் அமாவாசையில் இருந்து அடுத்து வரும் பதினான்கு நாட்கள் "கர்போட்ட நாட்கள்" என்று நினைவில் வைத்து கொள்வார்கள்.
இந்நாட்களில் லேசான தூறல் மெல்லிய சாரல் போன்ற மழை இருந்தால் மேகம் சரியாக கரு கட்டி இருக்கிறது என்று பொருள்.
எனவே வரும் அடுத்த ஆண்டு நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.
மாறாக கர்ப்போட்ட நாட்களில் கன மழை பெய்து சூறைக் காற்று வீசினாலோ கடும் வெயில் இருந்தாலோ மேகத்தின் கரு கலைந்து விட்டது என்று பொருள்.
எனவே மார்கழியில் கன மழை பெய்தால் அடுத்த ஆண்டு பருவ மழை பொய்க்கும் என அர்த்தம்.
இன்றைய வாழ்க்கையின் மாறுபட்ட சூழலியல் கேடுகளும் பருவ நிலை மாற்றமும் மேகத்தின் கருக்கலைக்கும் வில்லன்களாக உருவெடுப்பதால்தான் ஒவ்வொரு வருடமும் மழையளவு குறைகிறது.
இந்த கர்போட்ட நாட்களை கணித்து இன்றும் திருநெல்வேலி பகுதிகளில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் மானாவாரி (வானம் பார்த்த பயிர் ) பயிர்களை விதைக்கிறார்கள் விவசாயிகள்.
சூரியன் வடக்கு நோக்கி நகர்வதற்கு. முன்னால் பூமியின் அச்சு அசையாமல் இருக்கும். இதுதான் கர்ப்போட்டம் சங்க கால நூலில் உள்ளது.. இந்த காலத்தில் எத்தனை மிமீ மழை எங்கே, எவ்வளவு பதிவு ஆகிறதோ. அதை ஆறு மாத நாள்களால் பெருக்க வேண்டும்.
உதாரணம் 5மிமீ × 180=900 மிமீ சராசரியாக பெய்யும்.. அதற்கு தகுந்தால் போல் நீர் மேலாண்மை செய்வார்கள்.
பயிரை தேர்வு செய்வார்கள்.
நாம் இது பற்றி எல்லாம் தெரியாமல் காலண்டரில் கர்ப்போட்டம் என்று பார்த்ததும் ஏதோ பண்டிகை என்று நினைத்து தேதியை கிழிப்பது போல நம் பாரம்பரியத்தை கிழிக்கிறோம்.
ஆங்கில கல்வியில் நம் பாரம்பரியத்தை இழந்து இன்று மழை வரும் நாட்களை தெரிந்து கொள்ள வானிலை அறிக்கைக்கு டீவியை பார்த்து கொண்டு அமர்ந்து இருக்கிறோம்.
புதுமையின் மோகத்தில் எத்தணை பழமைகளை இழந்து கொண்டிருக்கிறோம் நாம்..
ஆராய்ந்து உன் முன்னோரின் யுத்திகளை கையாளு என் தமிழா.
இது போன்ற நுணுக்கங்கங்களை விவசாயிகளுக்கு கற்றுத் தர வேண்டிய நம் தமிழக அரசுக்கு.
இங்கு மெத்த படித்த அறிவியலுக்கு தானே அரசு வேலையே..
இனியாவது கர்ப ஓட்டத்தை காண்போம்.
காவேரி புஷ்ர விழாவை அடுத்து இந்த மழை 144 ஆண்டுகளுக்கு பிறகு வரப் போகும் தாமிரபரணி புஷ்கர மழை என்பதை நினைவில் கொள்ளுங்கள்...
Subscribe to:
Posts (Atom)