30/01/2021
மனம்...
நமது வாழ்கையின் வெற்றியை, சந்தோஷத்தை நமது மனம் தான் தீர்மானிகிறது என்று முந்தய பதிவில் பார்த்தோம்..
மனதிற்கு பிடித்த செயலை நாம் செய்வதினாலேயே நாம் வெற்றி அடைய முடியும்,இந்தக் கருத்தை மையமாகக் கொண்டுதான் 3 iidots என்ற ஒரு படம் சில ஆண்டுகளுக்குமுன் வெளிவந்தது.
அந்தப் படத்தில் நீங்கள் வெற்றி அடைய வேண்டும் என்று எண்ணி வெற்றியை துரத்திச் சென்றால் உங்களுக்கு விரக்திதான் மிஞ்சும் மாறாக உங்களின் விருப்பத்தில் முழு கவனம் செலுத்தி வேலை செய்தால் வெற்றியானது உங்களின் பின்னால் ஓடி வரும் என்பதே அந்த படத்தின் கருத்து ஆகும்.
உங்களின் விருப்பத்தை எவ்வாறு தேர்வு செய்வது ?
விரும்பிய பணியை செய்தால்தான் வெற்றி கிடைக்கும் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்,ஆனால் நான் நம்முடைய மனம் விரும்பும் பணி,செயல் எது என்று எப்படி கண்டுபிடிப்பது என்று உங்களில் சிலருக்கு குழப்பமாக இருக்கலாம்.
எந்த செயலை நீங்கள் செய்யும்போது உங்களுக்கு சலிப்பு ஏற்படுவதில்லையோ, எந்த செயலை நீங்கள் செய்யும்போது நீங்கள் உங்களையே மறந்தும் வேலை செய்கிறீர்களோ , எந்த செயலை நீங்கள் செய்யும்போது உங்களுக்கு நேரம் செல்வதே தெரிவதில்லையோ, எந்த செயலை உங்களுக்கு கொடுத்தால் ஒரு நாளில் அதிகநேரம் சந்தோஷமான மனநிலையில் செய்வீர்களோ அதுவே உங்கள் மனம் விரும்பிய செயலாக இருக்கும் நண்பர்களே.
நீங்கள் இதனை நம்பவில்லை என்றால் வாழ்கையில் வெற்றியாளராக இருக்கும் சிலரின் வாழ்கையை படித்துப் பாருங்கள்.
சச்சின் டெண்டுல்கர் பல ஆண்டுகளாக தனது கிரிக்கெட் விளையாட்டை காதலித்து விளயாடியதாலும், ஏ.ஆர்.ரஹ்மான் பல மணிநேரமாக இசையில் மூழ்கி தன்னுடைய விருப்பமான துறையில் பணியாற்றியதாலும், ரஜினிகாந்த் , கமலஹாசன் போன்ற சிறந்த நடிகர்கள் பல காலமாக தங்களுடைய நடிப்புத் துறையில் முழு ஈடுப்படுடன் இருப்பதனால் தான் அவர்களால் இப்படி வாழ்க்கையில் உயர்ந்த இடத்தில் இருக்கின்றனர்.
உதாரணமாக நீங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை எடுத்துக் கொண்டால் அவர் சூப்பர் ஸ்டார் ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் இந்த திரை உலகிற்கு வரவில்லை , அவருடைய எண்ணமெல்லாம் நடிப்புத்துறையில் இருக்க வேண்டும் எந்த விதமான கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் முழு ஈடுபாட்டுடன் நடிக்க வேண்டும் என்பதாகவே இருந்தது, அதனால் தான் அவர் ஆரம்ப காலங்களில் துணை நடிகராகவும், வில்லனாகவும் இருந்திருந்தாலும் அவரின் விருப்பமான நடிப்பில் முழு ஈடுபாட்டுடன் இருந்ததால் பல வாய்புகள் தேடிவந்தன , வெற்றிகள் துரத்தி வந்தன, இன்று உலகின் மிக உச்ச நடிகர்களில் ஒருவகாகவும் இருக்கிறார்.
இப்பொழுது நாம் மனதின் விருப்பத்தை தெரிந்துகொண்டோம், வெற்றியாளர் ஆவதற்கு விருப்பம் மட்டும் போதுமா ? மனதின் விருப்பத்துடன் பலர் பணிபுரிந்தும் அனைவராலும் வெற்றியாளர் ஆகமுடிவதில்லையே ஏன்?
சரியான இலக்குகளை நிர்ணயிக்காமல் பயணிப்பதலேயே பலராரும் வெற்றி பெற முடிவதில்லை...
பல காடுகளை உருவாக்கும் தனி ஒருவன் யானைகள்...
காடுகளின் காவலன் யானைகள்...
காட்டில், யானைகள் விதைகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பரப்புகிறது. இதன்மூலம் மரங்கள், செடி, கொடிகள் அதிக அளவு வளர்ந்து, சோலைக் காடுகள் உருவாகக் காரணமாகிறது.
காட்டில் பல்லுயிரினப் பெருக்கத்துக்கும் யானை வழிவகுக்கிறது. யானைகள் பல கி.மீ. தூரம் காட்டில் நடந்து செல்வதால், புதிய வழிப்பாதைகள் காட்டில் உருவாகின்றன.
தும்பிக்கையே யானையின் பலம். தும்பிக்கை மூலமே யானை சுவாசிக்கிறது. தண்ணீரையும், உணவையும் அதன் மூலம்தான் சாப்பிடுகிறது. தும்பிக்கையாலேயே அதிக எடை கொண்ட பொருளை யானையால் எளிதாகத் தூக்க முடியும்.
யானை தும்பிக்கை மூலம் பூமிக்கடியில் இருக்கும் ஊற்றுத் தண்ணீரை எளிதில் கண்டுபிடிக்கும்.
யானை மண்ணை கிளறி கண்டுபிடிக்கும் ஊற்று தண்ணீரால் மற்ற விலங்குகளும் பயன் பெறுகின்றன.
யானைகளின் வாழ்விடங்களில் ஏற்படும் நாகரிக வளர்ச்சிப் பணிகள், காடுகளில் வெட்டப்படும் மரங்கள், அதிகரிக்கும் குவாரிகள், வழிப்பாதைகள் ஆக்கிரமிப்பு மற்றும் தந்தத்துக்காக யானைகள் வேட்டையாடப்படுதல் ஆகியவை யானைகள் அழிவுக்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன.
மழை வளம் பெற, காடுகளை பெருக்க, நம் வாழ்க்கை வளம்பட யானைகளை பாதுகாப்பது நம் கடமையாகும்...
இந்துக்களே சிந்திப்பீர் - பாஜக எச்.ராசா.
அப்பாவி தொண்டண் அடி வாங்கி சாகணும்.
நீங்க மகள் கல்யாணம், தன்னோட அறுபதாம் கல்யாணம், எல்லாத்துக்கும் கள்ளக் கூட்டணி வைத்து அழைச்சி விருந்து வைக்கணும்.
ஆ.ராசாவை உள்ள வைப்போம்னு மைக்கை பார்தவுடனே பரத நாட்டியம் ஆடி டிராமா பண்ணி...
அப்பாவிகளை உசுப்பேத்துறது...
சிறப்புப் பஞ்ச கற்பம்...
பஞ்ச கற்பத்தைப் பற்றி பல வைத்தியர்கள் அளவு முறையில் மாற்றி பயன் படுத்தி வந்தாலும் சிததர்கள் அனைவரும் கடுக்காத்தோல், விதை நீக்கிய நெல்லி வத்தல், வெண்மிளகு, கஸ்தூரி மஞ்சள், வேப்பம் பருப்பு..
ஆகியவற்றை சம அளவாகப் பயன்படுத்தச் சொல்லி இருக்கின்றனர்.
அதிலும் போகமாமுனிவர் எழுதிய போகர் 7000, என்ற நூலில் பஞ்சகல்பத்தை இரவில் கரிசலாங்கண்ணிச் சாற்றில் ஊற வைத்து மறுநாள் காவையில் பசுவின் பால் விட்டரைத்து தேய்த்து வெந்நீரில் குளிக்கும் படி சொல்லி இருக்கிறார்.
இம்முறையில் 15 நாட்களுக்கொருமுறை குளித்து வரச் சொல்லியிருந்தாலும்.
நோய்களுக்குத் தக்கவாறு தோல்சம்பந்தப் பட்ட நோயாளிக்கு வாரத்தில் இரண்டு நாட்களும் எயிட்ஸ் நோயாளிக்கு தொடர்ந்து 48, நாட்களும் நோயில்லா மற்றவர்களுக்கு 15, நாட்களுக்கொருமுறையும் கொடுத்து வருகிறோம்.
இவ்வாறு தயாரித்து பயன்படுத்தும் பஞ்ச கல்பத்தினால் கபாலம் கெட்டியாகும்.
உரோமம் தும்பி போல் கருப்பாக வளரும் மழையில் நனைந்தாலும் குளிராது கண்பார்வை அதிகரிக்கும் உடம்பில் நச்சு நீர் வெளியேறும். ஞாபகசக்தி அதிகரிக்கும்.
நீண்ட நாட்கள் தலைவலி நீங்கிவிடும்.
சிறு வயதில் இருந்தே 15 நாட்களுக்கொரு முறை பயன்படுத்தி வந்தால் அவர்களக்கு 4448 வகையான நோய்கள் மற்றும் நரை திரை வராது என்றும் சித்தர்கள் நூல்களில் கூறப்பட்டுள்ளது.
பாரம்பரிய வைத்தியங்களை கடைப்பிடித்து நோயின்றி வாழ்வோம்...
இந்தியா விற்கும் ஆரியனுக்கும் சம்பந்தமே இல்லை...
டி என் ஏ பரிசோதனை செய்தீர்களா என்று அடிக்கடி கேள்வி கேப்பீங்களே...?
இதோ டி என் ஏ பரிசோதனை செய்தே நிரூபிச்சுட்டானுங்க ஆரியர்கள் வந்தேறிகள் என்று...
http://www.thehindu.com/sci-tech/science/how-genetics-is-settling-the-aryan-migration-debate/article19090301.ece
தேக்கு இலையின் மகத்துவங்கள்...
வாழை இலையைப்போலவே தேக்கு இலைகளில் நாம் உணவருந்தலாம்.
ஏனெனில் அந்த இலையானது, 30 முதல் 60 CM நீளம் மற்றும் 15 முதல் 30 CM அகலம் கொண்டது.
தேக்கு மரத்தின் இலை, பூ, காய், மரபட்டை இவை அனைத்தும் மருந்துக்காக பயன்படக் கூடியதாகும்.
மருத்துவ பயன்கள்...
தேக்கு மரத்தின் இலைகளால் செய்யப்பட்ட தேநீரை குடிப்பதன் மூலம் ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை உண்டாகிறது.
இதில் காணப்படும் துவர்ப்பு சுவை ரத்தத்தை உறைய வைக்குத் தன்மை கொண்டதாக விளங்குகிறது.
மூக்கில் வடியும் ரத்தம், மூலத்தில் ஏற்படும் ரத்த கசிவை கட்டுப்படுத்துவதற்கும் இது சிறந்த நிவாரணியாக விளங்குகிறது.
தேக்கு மரத்தின் விதைகளை கொண்டு ஒரு சிறப்பான கூந்தல் தைலத்தை உருவாக்கலாம்.
இதற்கு தேவையான பொருட்கள் - தேக்கு மரத்தின் காய்ந்த காய்களை எடுத்து கொள்ள வேண்டும்.
அவற்றை நசுக்கி அதில் இருக்கும் விதைகளை நீக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
முடிந்தால் இந்த விதைகளை உடைத்தோ அல்லது முழுமையாகவோ பயன்படுத்தலாம்.
பின்னர் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதனுடன் ஒரு 10 அல்லது 15 விதைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை நன்றாக காய்ச்சி எடுத்து கொள்ள வேண்டும்.
விதையின் நிறம் இந்த எண்ணெய்யுடன் சேர்ந்து ஒரு இளஞ்சிவப்பு நிறமாக மாறிவிடும்.
இதை பயன்படுத்துவதன் மூலம் தலையில் ஏற்படும் பொடுகு கட்டுப்படுத்துகிறது.
இந்த விதையை அன்றாடம் பயன்படுத்தும் போது முற்றிலுமாக பொடுகு, பேன் ஆகியவற்றின் தொல்லைகளில் இருந்து விடுதலை பெறலாம்.
மேலும் முடி கொட்டுதல், இள நரை போன்ற பிரச்னைகளுக்கும் இந்த தைலம் மிகச் சிறந்த ஒன்றாக வேலை செய்கிறது.
நுண் கிருமிகளை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாகவும் இதன் விதைகள் பயன்படுகிறது.
சிறுநீரகப்பிரச்சனை, மார்புச்சளி, கல்லீரல் பிரச்சனை போன்றவற்றிற்கு தீர்வு தருகிறது.
ரத்த போக்கை கட்டுப்படுத்த மருந்து..
தேக்கு மரத்தின் இலையை பயன்படுத்தி ரத்த போக்கை கட்டுப்படுத்தக் கூடிய ஒரு மருந்தை நாம் தயார் செய்யலாம்.
இதற்கு தேவையான பொருட்கள் தேக்கு மரத்தின் துளிர் இலைகள், பட்டைகள், பனங்கற்கண்டு, காய்ச்சிய பால்.
தேக்கு மரத்தின் துளிர் இலைகளை சிறிய துண்டுகளாக நறுக்கி 4 அல்லது 5 இலைகள் சேர்க்க வேண்டும்.
சிறிதளவு தேக்கு மர பட்டைகளை சிறியதாக உடைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதனுடன் தேவையான அளவு பனங்கற்கண்டு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும்.
இலைகள் நன்றாக வேகும் வரை இந்த கலவையை கொதிக்க விட வேண்டும்.
இந்த தேநீரை எடுத்து காய்ச்சிய பாலை சேர்த்து கொள்ள வேண்டும்.
இதை பருகி வருவதன் மூலம் ரத்த போக்கு கட்டுப்படுத்துகிறது...
வெற்றி என்றால் என்ன?
வெற்றி என்பதற்கு தனியாக எந்த ஒரு விளக்கமும் கூற முடியாது..
எளிமையான முறையில் சொல்வதென்றால் நாம் நினைத்தது நமக்கு கிடைத்து விட்டால் நாம் நினைத்த இலக்கை நாம் அடைந்துவிட்டால், நாம் இருந்த நிலையை விட ஒரு நிலை மேலே அடைந்துவிட்டால் அதனை வெற்றி என்று போற்றுகின்றோம்.
சிலருக்கு பணம் கிடைத்தால் வெற்றி , சிலருக்கு புகழ் கிடைத்தால் வெற்றி , சிலருக்கு சேவை செய்தலில் கிடைக்கும் மகிழ்ச்சியில் வெற்றி, பிடித்த பெண் அல்லது பிடித்த ஆண் துணையாக கிடைத்தால் வெற்றி..
இப்படி ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் வெற்றியின் இலக்கணம் வெவ்வேறாக இருக்கும்.
இப்படி வெற்றிக்கான இலக்கணம் ஒவ்வொருவருக்கும் மாறுபட காரணமாக இருப்பது நம்முடைய மனம் மட்டுமே...
குறிப்பாக வெற்றி என்பதை ஒரு வரியில் விள்ளக்க வேண்டுமேயனால்...
மகிழ்ச்சியாக வாழ்வதே வெற்றி ஆகும்...
ஆனால் ஒவ்வொருவருடைய மனமும் ஒரு குறிப்பிட்ட செயலை செய்வதாலோ அல்லது குறிப்பிட்ட அல்லது பிடித்த அந்த இலக்கை அடைந்தால் மட்டுமே வாழ்க்கையில் முழு மகிழ்ச்சியாக இருக்க முடியும்.
ஆகவே நீங்கள் வெற்றியாளர் ஆக வேண்டுமேயானால் உங்களின் மனதிற்கு பிடித்த அந்த செயல் என்னவென்று நீங்கள் அறிந்திருக்க வேண்டும்...
தமிழர் யார் என்பதற்கான வரையறை...
கேள்வி: செம்மண், உவர் மண், களி மண் உண்டு. மாறாக 'தமிழ் மண்' என்று எங்கும் இருந்தது இல்லையே...?
இதே போல தமிழர் தேசம் என்றோ, தமிழர் என்றோ யாரும் எங்கும் இருந்தது இல்லையே...?
அப்படி என்றால், தமிழ் தேசியம் பேசும் அமைப்புகள், எந்த அடிப்படையில் 'இன்னார் தான் தமிழர்' என்று வரையறை செய்கிறீர்கள்?
பதில்: தொழில் பிரிவுகளாகவே ஆதியில் சாதி என்கிற இனக் குழுக்கள் உருவாகின என்பதையும், இந்தியா முழுக்க முன்பு 'தமிழ்' என்ற மொழி தான் பேசப்பட்டது என்று அண்ணல் அம்பேத்கார் உள்ளிட்டோர் ஆய்ந்து அறிந்து கூறியதற்கு இணங்க, அப்படி தமிழ் கூறும் மக்கள் அன்று முதல் இன்று வரை பல்வேறு இனக்குழுக்களாகவே வரையறுக்கப்பட்டு உள்ளனர் என்பதும் உண்மை.
மாறாக மொழி மட்டுமோ, அல்லது பூகோள இடமோ ஒரு இனத்தை தீர்மானிக்காது.
இந்திய அரசியல் சட்டத்தில் ஒருவர் மதம் கூட மாற முடியும். ஆனால், சாதி விட்டு சாதி மாற முடியாது.
காரணம், பல ஆயிரம் வருடங்களாக இந்த இனக்குழு (என்கிற) சாதியானது, அத்துணை இறுக்கமான ஒரு இத்யாதி.
இவ்வாறு இனக்குழுக்களின் தொகுதியே ஒரு இனத்தை வரையறுக்கிறது.
இந்த அடிப்படையில் தமிழர் என்ற இனத்தை நான் இப்படி வரையறை செய்கிறேன்.
தாய் மொழியாக தமிழை கொண்ட, தமிழ் சாதியை சேர்ந்தவனே தமிழன் ஆவான்...
இப்படி துல்லியமாக வரையறுக்கா விட்டால், எதிர் காலத்தில் என்ன என்ன கேடுகள் விளையும் என்பதற்கு சமீபத்திய நிகழ்வு தான் கேரளாவில் இருந்து தமிழர்களை வெளியேற்ற நினைக்கும் அட்டப்பாடி பிரச்சனை..
குறிப்பு : இல்லாத இந்தியத்தை போலியாக உருவாக்க முடிந்தது என்றால்...
பல்லாயிரம் ஆண்டுகளாக வரலாறாக வாழும் தமிழினம் மீண்டும் தனக்கான தேசத்தை ஏன் உருவாக்க முடியாது.?
பங்காளி, அங்காளி என்றால் என்ன?
பங்காளிகள் - தந்தைவழி உறவினர்கள் ‘பங்காளி’ களாவும், தந்தைவழி பங்குடையவன் என்பதாலே ‘பங்காளி.
அது போல நமது தகப்பன் வழி சகோதர்களின் வாரிசுகளான பெரியப்பா மகன், சித்தப்பா மகன், ஒன்றுவிட்ட , இரண்டுவிட்ட என்பார்களே அவர்கள் பங்காளிகள் ஆகும்...
அங்காளி - தாயை ஆதியாக வைத்து விளைந்த சகோதரத்துவம் ‘தாயாதி’ என்றும் கூறப்பட்டது.
நமது தாய்வழி உறவினர்கள் சகோதிகளின் வாரிசுகளான அதாவது சின்னம்மா மகன் பெரியம்மா மகன்களே அங்காளிகள் ஆகும்...
கால் ஆணி மற்றும் பரு குணமாக...
மயில் துத்தம் 10 கிராம்
ஊமத்தை இலைச்சாறு 50 மில்லி
தேங்காய் எண்ணெய் 100 மில்லி
எடுத்து பக்குவமாக மணல் பருவத்தில் காய்ச்சி வடிகட்டி கண்ணாடிப் பாட்டிலில் பத்திரப்படுத்தவும்.
பயன்கள்...
கால் ஆணி உள்ளவர்களுக்கு கால் ஆணி உள்ள இடத்தில் புது பிளேடுனால் மேலாக அறுத்து இந்த தைலத்தை பஞ்சில் மூன்று சொட்டு விட்டுஅந்த இடத்தில் வைத்து பஞ்சு நகராமல் டேப்பினால் இரவில் ஒட்டி பகலில் எடுத்துவிட வேண்டும். இவ்வாறு ஒரு வாரம் செய்தால் போதும். கால் ஆணி குணமாகும்.
ஒரு சிலருக்கு கழுத்து, மார்பு, முகம் முதலிய இடங்களில் மரு தோன்றி அசிங்கமாக இருக்கும். அதற்கு அந்த இடத்தில் இரவில் ஒரு சொட்டு வைத்தால் போதும். ஒருசில நாட்களில் வலி இல்லாமல் உதிர்ந்து விடும்.
ஆறாத புண்களுக்கு...
சர்க்கரை வியாதி புண்ணுக்கு புங்க மரத்துப் பட்டையினால் கசாயம் வைத்து புண்ணை கழுவி நன்கு துடைத்துவிட்டு இந்த தைலத்தை பஞ்சில் போட்டு காற்றோட்டமாக பேண்டேஜ் துணியினால் கட்டி வர விரைவில் புண் ஆறும். புண் பக்கத்தில் ஈ வராது...
அழுமூஞ்சிப் பேய்...
பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகப் கருதப்படுகின்ற ஜப்பானிய சாமுராய் அயோமா.
ஆள் கொஞ்சம் சபலிஸ்ட்.. தன் வீட்டில் வேலை பார்த்த அழகு வேலைக்காரி ஒகிகு மேல் அவருக்கு ஆசை. ஜாடைமாடையாகச் சொல்லி பார்த்தார். அவள் கண்டு கொள்ளவில்லை. நேரடியாகவும் கேட்டு பார்த்தார். பயந்து மறுத்தாள்.
எனக்கு இணங்கினால் நீ என் ஆசை நாயகியாக காலமெல்லாம் சுகமாக வாழலாம் டார்லிங் என்று ஆசை காட்டியும் பார்த்தார். ஒகிகு மசியவில்லை.
ஒகிகு வீட்டில் இல்லாத சமயத்தில் சமையலறைக்குள் சென்றார் அயோமா. அங்கே விலையுயர்ந்த டச்சு தட்டுகள் பத்து இருந்தன. அவற்றை எடுத்து கொண்டு சென்று கிணற்றில் போட்டு விட்டார். ஒகிகு இரவில் அயோமாவுக்கு உணவு பரிமாறினாள். டச்சு தட்டு எங்கே அதில் உணவைக் கொண்டு வா என்றார். சமையலறைக்கு சென்ற ஒகிகு அதிர்ந்து நின்றால் படபடப்புடன் தட்டுகளைத் தேடினாள். கண்ணிருடன் அயோமா முன்வந்து நின்றாள். என் விருப்பத்துக்கு சம்மதம் சொன்னால் உன்னை மன்னிக்கிறேன் என்று ஒகிகுவே மிரட்ட ஆரம்பித்தார். அவள் உறுதியாக நின்றால். அயோமா அவளைக் கட்டி வைத்து துன்புறுத்திக் கொன்றார். அதே கிணற்றில் அவளது உடலையும் தூக்கி போட்டார்.
சில நாள்கள் கடந்திருக்கும். இரவில் அந்த கிணற்றில் இருந்து அகோரமான ஓசைகள் கேட்க ஆரம்பித்தன. ஒன்று இரண்டு மூன்று என்று தட்டுகளை எண்ணும் ஒகிகுவின் குரல் அயோமாவின் காதுகளில் விழந்தன. ஒன்பது வரை எண்ணிய அந்தக் குரல் அதன்பின் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தது. தினமும் நள்ளிரவில் ஒகிகுவின் இந்தக் குரலைக் கேட்டுக் கேட்டே பைத்தியமாகிப் போனார் அயோமா.
வேண்டுமானால் டோக்கிய நகரத்துக்கு செல்லுங்கள். அங்கே அயோமா டோரி என்ற பெயரில் ஒரு நெடுஞ்சாலை இருக்கிறது. அதில் பயணம் செய்து கொண்டே போனால் அகாசகா என்ற பகுதியை அடையலாம். அங்கே தான் ஜப்பானுக்கான கனடாவின் தூதரகம் இருக்கிறது. அதனுள் சென்றால், அந்த இடத்துக்கு சம்பந்தமே இல்லாதவாறு ஒரு பழங்கிணறு இருக்கும். ஒகிகு வாழும் கிணறு தான். முடிந்தால் நள்ளிரவு வரை காத்திருங்கள் ஒகிகு அழுதுகொண்டே ஒன்று இரண்டு.... எண்ணுவதற்காக வெளியே வரலாம்...