வெற்றி என்பதற்கு தனியாக எந்த ஒரு விளக்கமும் கூற முடியாது..
எளிமையான முறையில் சொல்வதென்றால் நாம் நினைத்தது நமக்கு கிடைத்து விட்டால் நாம் நினைத்த இலக்கை நாம் அடைந்துவிட்டால், நாம் இருந்த நிலையை விட ஒரு நிலை மேலே அடைந்துவிட்டால் அதனை வெற்றி என்று போற்றுகின்றோம்.
சிலருக்கு பணம் கிடைத்தால் வெற்றி , சிலருக்கு புகழ் கிடைத்தால் வெற்றி , சிலருக்கு சேவை செய்தலில் கிடைக்கும் மகிழ்ச்சியில் வெற்றி, பிடித்த பெண் அல்லது பிடித்த ஆண் துணையாக கிடைத்தால் வெற்றி..
இப்படி ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் வெற்றியின் இலக்கணம் வெவ்வேறாக இருக்கும்.
இப்படி வெற்றிக்கான இலக்கணம் ஒவ்வொருவருக்கும் மாறுபட காரணமாக இருப்பது நம்முடைய மனம் மட்டுமே...
குறிப்பாக வெற்றி என்பதை ஒரு வரியில் விள்ளக்க வேண்டுமேயனால்...
மகிழ்ச்சியாக வாழ்வதே வெற்றி ஆகும்...
ஆனால் ஒவ்வொருவருடைய மனமும் ஒரு குறிப்பிட்ட செயலை செய்வதாலோ அல்லது குறிப்பிட்ட அல்லது பிடித்த அந்த இலக்கை அடைந்தால் மட்டுமே வாழ்க்கையில் முழு மகிழ்ச்சியாக இருக்க முடியும்.
ஆகவே நீங்கள் வெற்றியாளர் ஆக வேண்டுமேயானால் உங்களின் மனதிற்கு பிடித்த அந்த செயல் என்னவென்று நீங்கள் அறிந்திருக்க வேண்டும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.