இப்போது ஆப்பிளின் பங்கு மதிப்பு விண்ணை பிளந்து கொண்டு உயர்ந்து சென்று கொண்டிருக்க முக்கிய காரணமே...
2023 ல் ஆப்பிள் வெளியிட இருக்கும் ஆப்பிள் வி ஆர் /ஏ ஆர் கண்ணாடி தான் காரணம்.
இந்த கண்ணாடி அப்படி என்ன மாயாஜாலத்தை நிகழ்த்த போகிறது.?
எதிர்கால சந்ததிகளை முழுமையான சிறைக்குள் அடைப்பதற்கான மாயாஜாலம் தான் இது..
மெடா என்றால் என்ன?
மெடாவெர்ஸ் என்றால் மெய்நிகர் உலகம்.. என்பார்கள் ஆனால் உண்மையில் அது பொய் நிகர் உலகம்...
இன்றைய இணைய உலகம் எப்படியோ அதேபோல் தான் இதுவும் என்ன வித்தியாசம் என்றால் இணையத்திற்கு கணிணி வழி உள் நுழைவீர்கள் மெடாவிற்கு ஒரு விஆர்/ஏ.அர் கண்ணாடி வழியே நுழைவீர்கள்...
மெடாவில் நுழைய அந்த சிறப்பம்சமான கண்ணாடி அவசியம்..
கண்ணாடியை அணிந்ததும் உங்கள் கண்முன்னே மெடா எனும் மாயை உலகம் தோன்றும்..
அதில் உங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு உருவமைப்புடன் வாழ ஆரம்பிக்கலாம்...
நீங்கள் தேர்ந்தெடுக்கும் உருவமைப்பு அங்கேயே வாழ ஆரம்பிக்கும். அதன் மூலம் நீங்கள் அந்த உலகத்தில் வாழ ஆரம்பிப்பீர்கள். அதேபோல் உள்ள மற்ற அவதாரங்களுடன் நீங்கள் உரையாற்ற ஆரம்பிப்பீர்கள். அவர்களோடு நட்பு பாராட்டுவீர்கள். நட்பு பாராட்டும் அந்த உருவமும் எங்கோ ஒரு கடைகோடியில் இருக்கும் நாட்டில் இருக்கும்.. இனி அங்கேயே டேட்டிங் என்பது இலகுவாகும்..
உங்கள் மூளையை அதற்கு பழக்கப்படுத்தி அடிமையாக்குவார்கள். ஒரு கட்டத்தில் மெடாவில் பிரபலங்கள் இருப்பார்கள். அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம் நடத்துவார்கள். கல்லூரிகள் வரும். மெடாவில் விடு கூட வாங்க முடியும். அதைக் கொண்டே வேலைகள் செய்வீர்கள். இவையனைத்தும் வீட்டில் இருந்தபடியே..
உங்களுடைய சிந்தனைகள் அணைத்தும் அந்த மாய உலகத்திலேயே இருக்கும்.
வெளி உலக சிந்தனையற்று இப்ப இருப்பதுபோல் பன்மடங்கு அதிகமாக இருப்பீர்கள்..
நிஜவாழ்வில் செய்ய முடியா பல விசயங்களை மெடாவில் அவதார் வடிவில் செய்ய தோன்றும்..
இது எல்லாம் நடக்காது என்று நினைக்க வேண்டாம்.. எல்லா பெரும் முதலாளிகளும் இதில் இறங்கி விட்டன..
அடுத்த கட்டமைப்பை நோக்கி நகர்வதில் மெடாவின் பங்கு அதிகம்..
சமீபத்தில் மெடாவில் ஸ்னூப்டாக் என்ற பிரபலம் ஒருவர் நுழைந்து ஒரு வீட்டை வாங்கினார். அவரது வீட்டுக்கு அருகே இருக்கும் இடம் 5 லட்சம் டாலருக்கு விலை போயுள்ளது. ஐந்து லட்சம் என்பது உண்மையான கரன்சி. அதை கொடுத்து மெடா உலகில் இடம் வாங்கியுள்ளார்கள்.
இனி இதை வைத்து எதிர்காலத்தில் படங்களும் வரும்.. இதை பிரபலப்படுத்த..
பின் படங்களும் விர்சுவல் தியேட்டர்களில் வெளியாகும்.. மனித இனம் மிகப் பெரிய அடிமை வலையில் சிக்க தயாராகிக் கொண்டிருக்கிறது..
எச்சரிக்கை.. மாய உலகம் எனும் கடல் உங்களை மூழ்கடிக்க போகிறது...