20/03/2019

வேலி.......


ஒவ்வொருவரும் தங்களது வளவுகள், காணிகளை பாதுகாப்பதற்காகவும் அறுக்கையிடுவதற்காகவும் வேலிகளை அமைக்கின்றனர். ஏற்கனவே கல்லால் அமைக்கப்படும்.

அதைப்போலத் தான் மரக் கதியால்களை நட்டு வேலிகளை அமைக்கும் நடைமுறை இப்பவும் காணப்படுகின்றது. முள்முருக்கு, கிளுவை, சீமைக்கிளுவை, பூவரசு போன்றன பொதுவாக பாவிக்கப்படும் மரங்களாகும்.

இவை பாதுகாப்பு வேலியாக உள்ளதுடன் கால்நடைகளின் உணவாகவும், விறகுத் தேவைக்காகவும் பயன்படுகிறது. இவ்வேலியை மேலும் மறைப்பாக அமைப்பதற்கு கிடுகு, பனை ஓலை, கருக்கு மட்டை, அலம்பல் செடி போன்றவற்றைக் கொண்டு அடைக்கப்படுகின்றது.

ஒருசில இடங்களில் தகரங்களினாலும், முட்கம்பிகளாலும், மரச்சட்டங்களாலும் வேலி அடைக்கப்பட்டுள்ளது.

தற்போது சீமேந்துக் கற்களைக் கொண்டு மதில்கள் அமைக்கப்படுகின்றது. எனினும் இயற்கைச் சுவாத்தியமான வாழ்விற்கு வேலிகளை மரங்களைக் கொண்டு அமைப்பதே சிறந்தது...

நாதக சீமான் கலாட்டா...


பாஜக - அதிமுக கூட்டணி மக்களுக்கு வைத்த அடுத்த ஆப்பு...


பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் திடீர் உயர்வு.

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் 35-லிருந்து 40 ஆக அதிகரிப்பு.

பொதுப் பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் 50-லிருந்து 45 ஆக குறைப்பு.

யார் செஞ்ச வேலையா இருக்கும்...

திருட்டு திமுக ஸ்டாலின் பகுத்தறிவு...


பாகிஸ்தான் முன்னாள் அதிபர் மு‌ஷரப் துபாயில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி...


அபூர்வ நோயால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் அதிபர் மு‌ஷரப் துபாயில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2016இல் பாகிஸ்தானை விட்டு வெளியேறிய பாகிஸ்தான் முன்னாள் அதிபர் மு‌ஷரப், மருத்துவ சிகிச்சைப் பெற துபாயில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நரம்பு சம்பந்தமான நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து அவருக்கு லண்டன் நகரில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அவருக்கு “அமைலாடோசிஸ்” என்ற அபூர்வ நோய் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் அது மருத்துவ சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, துபாயில் உள்ள தனது வீட்டில் மு‌ஷரப் ஓய்வு எடுத்து வருகிறார். இந்த அபூர்வ நோயால் அவர் நிற்கவும், நடக்கவும் முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் துபாயில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விரைவில் குணமடைந்து அவர் வீடு திரும்புவார் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்...

பாஜக - அதிமுக கூட்டணி தமிழினத்தை அழிக்க போடும் திட்டம்...


மௌனம் ஒரு மகாசக்தி...


ஒரு எந்திரம் மிக நன்றாக வேலை செய்யும் நிலையில் இருக்கும் போது சத்தம் மிகக் குறைவாகவே இருக்கும். அதன் வேலை செய்யும் திறன் பழுதுபடும் போது தான் சத்தம் அதிகரிக்கத் துவங்கும். இது எந்திரத்திற்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் பொருந்தும்.

நிறைய சாதித்தவர்கள், மனித சமுதாயத்தில் தங்கள் காலடித் தடங்களைப் பதித்து விட்டுப் போனவர்கள் வாழ்க்கையை ஆராய்ந்தோமானால் அவர்கள் ஓயாமல் பேசுபவர்களாக இருப்பதில்லை.

நான் இப்படி செய்யப் போகிறேன், நான் அப்படி சாதிக்கப் போகிறேன் என்றெல்லாம் வாய் கிழிய சொல்லிக் கொண்டு இருப்பதில்லை.

வம்பு பேசுபவர்களாகவோ அடுத்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அலசுபவர்களாகவோ, விமரிசித்து மகிழ்பவர்களாகவோ இருப்பதில்லை. அவர்களுக்கென்று வாழ்க்கையில் குறிக்கோள் இருக்கிறது. அதில் தான் அவர்களுக்கு முழுக்கவனமும், உற்சாகமும் இருக்கிறது. அவர்களிடம் தேவையற்ற பேச்சுகளுக்கு நேரமோ மனமோ இருப்பதில்லை.

அமைதியாக இருக்கும் போது தான் தெளிவாக சிந்திக்க முடிகிறது. தெளிவாக சிந்தனைக்குப் பின் பிறக்கும் செயல்களே சிறப்புறுகின்றன. எதிலும் நமது முழுத் திறமையும் வெளிப்பட வேண்டுமானால் மனதை ஒழுங்குபடுத்தி, அனைத்து சக்திகளையும் நாம் ஒருமுகப்படுத்த வேண்டும். இது பேசிக் கொண்டே இருக்கும் சந்தர்ப்பங்களில் சாத்தியமாவதில்லை. மௌனம் நமது சக்திகளை விரயமாக்காமல் சேமிக்க உதவுகிறது. ஓயாமல் பேசிக் கொண்டிருக்கையில் நமது நேரத்தையும், சக்திகளையும் விரயமாக்குவதுடன், அடுத்தவர்களைத் தொந்தரவும் செய்கிறோம். சொல்ல வேண்டி இருக்காத, பின்னால் நம்மை வருந்த வைக்கிற எத்தனையோ விஷயங்களைச் சொல்லியும் விடுகிறோம்.

நிறுத்தாமல் பேசுபவர்கள் மற்றவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். ஒரு முறை வின்ஸ்டன் சர்ச்சிலை ஒரு விருந்தில் சந்தித்த ஒரு மூதாட்டி சொன்னார். "நான் என் பேரனைப் பற்றி உங்களிடம் சொன்னதில்லை என்று நினைக்கிறேன். வின்ஸ்டன் சர்ச்சில் தாங்கள் சொன்னதில்லை. அதற்காக நான் தங்களுக்கு நன்றி கூறக் கடமைப் பட்டிருக்கிறேன்" என்று சொல்லி அங்கிருந்து வேகமாக நகர்ந்து விட்டார். மற்றவர்களுக்குத் தேவையில்லாதையும், விருப்பமில்லாததையும் சொல்லாமல் நாமும் மற்றவர்களின் நன்றிக்கு உரியவர்களாவோமாக.

ஒரு கிரேக்க ஞானி சொன்னதைப் போல் "உங்கள் பேச்சு மௌனத்தை விடச் சிறப்பாக இருக்குமானால் மட்டுமே பேசுங்கள். இல்லையேல் மௌனமே நல்லது". உண்மையில் மேற்போக்காக நாம் வாழும் போது தான் அதிகமாய் வாக்குவாதங்களில் ஈடுபடுகிறோம்; அடுத்தவர்களை விமரிசிக்கிறோம்; சண்டை சச்சரவுகளில் ஈடுபடுகிறோம். சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்கிறோம். ஆனால் வாழ்க்கையில் ஆழமான நிலைகளை அடையும் போது இயல்பாகவே பேச்சு குறைந்து விடுகிறது.

நாம் பேசிக் கொண்டிருக்கும் போதும், மற்றவர்களின் இரைச்சலைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதும் நமக்குள்ளே இருந்து மெலிதாகக் கேட்கும் ஒரு குரலைக் கேட்க முடிவதில்லை. அந்தக் குரலைக் கேட்கவும் அதன் படி நடக்கவும் முடிந்தால் மட்டுமே ஒவ்வொருவனும் தன் தனித்தன்மையை அறிய முடியும். தன் தனித்தன்மையை அறிய முடியாதவன் அடுத்தவர்களின் கருத்துகளின் படி வாழவும் செயல்படவும் முற்படுகிறான். அப்படி வாழப்படும் வாழ்க்கை இரண்டாம்தர மூன்றாம்தர வாழ்க்கையாகவே இருப்பதில் ஆச்சரியமில்லை. ஆகவே எதிலும் முத்திரை பதிக்க விரும்புபவர் யாராயினும் முதலில் பேச்சைக் குறைத்து தங்கள் உள்ளே ஒலிக்கும் குரலைக் கவனிக்க ஆரம்பிப்பது அவசியம்.

எனவே முதலில் நமக்கும் மற்றவர்களுக்கும் பயன் தராத தேவையில்லாத பேச்சுகளை குறைத்துக் கொள்வோம். இதன் மூலம் அடுத்தவர்களும் இத்தகைய பேச்சுகளை நம்மிடம் தாங்களாகக் குறைத்துக் கொள்வார்கள். ஏனென்றால் ஒரு கை ஓசை இருக்க முடியாதல்லவா? இது பல பிரச்சினைகளை தவிர்க்கவும், நம்மைச் சுற்றி ஒரு அமைதியான சூழ்நிலையை உருவாக்கவும் பெரிதும் உதவும்.

பலரும் மௌனம் என்று குறிப்பிடுவது வாய் மூடியிருப்பதையே என்றாலும் மௌனத்தையே என்றாலும் இது ஒரு ஆரம்பம் மட்டுமே. இதைக் காட்டிலும் உயர்ந்த மௌனம் இன்னொன்று உள்ளது. அது உள்ளே நிகழும் மௌனம். மனமும் அமைதியடையும் போதே அந்த மௌனம் சாத்தியமாகிறது. வாய் மூடி இருந்தாலும் மனம் ஓயாமல் ஏதாவது சொல்லிக் கொண்டிருந்தால் வெளிப்புற மௌனத்தால் பெரிய அளவு பலன்களை நாம் எதிர்பார்க்க முடியாது. உட்புறமும் மௌனத்தை அனுசரிக்க முடிந்தால் அதனால் கிடைக்கும் பலன்கள் அளவில்லாதவை. இந்த உள்புற மௌனத்தை அடைய தியானம், ஆத்மவிசாரம் ஆகியவை உதவுகின்றன.

ஒவ்வொரு முக்கியமான செயலைச் செய்யும் முன்னும் ஓரிரு நிமிடங்கள் மௌனமாய் இருப்பது சிதறும் சக்திகளைச் சேர்த்து ஒழுங்குபடுத்த உதவுகிறது. இப்படி ஒழுங்குபடுத்தப்பட்ட சக்திகளை முறையாகப் பயன்படுத்தி ஒரு செயலைச் செய்யும் போது அது மிகச் சிறப்பாக அமைவதில் ஆச்சரியமில்லை. மேலும் எல்லா புதிய பரிமாணங்களும், ஆழமான அர்த்தங்களும் நமக்குப் புலனாவது நாம் இப்படி மௌனமாக இருக்கும் போது தான். நம் உண்மையான தேவை என்ன, அதற்கு என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்ற கேள்விகளுக்கு குழப்பமில்லாமல் தெளிவாக விடை காண்பது இந்த ஆழமான மௌனத்தின் போது எளிதாகிறது. அதற்கான பெரும் சக்தியும் இந்த மௌனத்தில் நம்முள் பிறக்கிறது. ஒரு பெரும் சூறாவளியின் சகல சக்திகளுக்கும் மூலம் அதன் அமைதியான மையத்தில் இருப்பது போல எல்லா சாதனைகளையும் புரியத் தேவையான மகா சக்தியை நம்முள்ளே பிறக்கும் அந்த மௌனத்தில் நாம் காண முடியும்...

விழித்துக்கொள் எம் தமிழினமே...


மூக்குப்பேணி....


தமிழர்களின் தனித்துவமான அடையாளங்களில் மூக்குப்பேணியும் ஒன்றாகும்.

வாய்ச் சுகாதாரத்தை பேணுதல் தேவையான அளவுக்கு நீராகாரங்களை பருகுதல் போன்றவற்றிற்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளது.

அழகியல் தன்மையான வடிவமைப்பு.

1970 ஆண்டின் கடைசிப்பகுதி வரையும் எம்மவர் வீடுகளில் எல்லாம் ஆட்சி புரிந்த இவ்வகைப் பாத்திரங்கள்.

எனினும் சில்வர் பொருட்களின் வருகையுடன் இவை அரும் பொருட்களாக மாறியுள்ளன...

ஓட்டுக்காக துணை முதல்வர் ஓபிஎஸ் பேரம்.. சமூக வலைதளத்தில் பரவும் காணொளி...


https://youtu.be/jg4GhcMpZfs

Subscribe The Channel For More News...

கற்ப மூலிகை வேப்பிலை...


உடலை என்றும் இளமையுடன் இருக்கச் செய்யும் அற்புத சக்தி படைத்தவை தான் கற்ப மூலிகைகள். நரை, திரை, மூப்பு என்ற மூன்றையும் அணுகவிடாமல் தடுக்கும் குணம் கற்ப மூலிகைகளுக்கு உண்டு. இந்த இதழில் வேப்பிலை என்னும் கற்ப மூலிகையைப் பற்றி அறிந்துகொள்வோம்.

இந்திய திருநாட்டின் பாரம்பரிய மரங்களில் ஒன்று தான் வேம்பு. இதனை சக்தி என்றே அழைக்கின்றனர். சமய வழிபாட்டில் வேம்பு ஒரு பெண் தெய்வமாகவே போற ்றி வணங்கப் படுகிறது. மருத்துவக் குணங்கள் கொண்ட வேம்பின் இலைகள் பற்றி நீண்ட ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

வேப்பிலையை சர்வரோக நிவாரணி என்று சமஸ்கிருதத்தில் அழைக்கப்படுகிறது.
ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பிருந்தே நம் மூதாதையர்கள் வேப்பிலையை உட்கொள்ளும் பொருளாக உபயோகப்படுத்தி வந்துள்ளனர். அப்படி உபயோகிப்பதில் எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லை என்பதையும் கண்டறிந்துள்ளனர். ஆனால், கருத்தரித்த தாய்மார்களும் கருத்தரிப்புக்காக காத்திருப் போரும் இதை உட்கொள்ளக் கூடாது என்றும் கூறியுள்ளனர்.

2005ம் ஆண்டு ஆய்வாளர்கள் வெளியிட் டுள்ள அறிவியல் ஆய்வறிக்கையில் வேப்பிலையின் மருத்துவக் குணங்கள் உறுதிப்படுத்தப் பட்டுள்ளன. கீழ்கண்ட மருத்துவக் குணங்கள் வேப்பிலையில் நிறைந்துள்ளது.

1. நோய் எதிர்ப்புசக்தியை உருவாக்குதல் (Immunomodulatory).
2. வீக்க உருக்கி (anti inflammatory).
3. ஆண்டி ஹைப்போகிளைசிமிக் (anti hypoglycemic).
4. குடல் புண்ணகற்றி (Anti-ulcer).
5. மலேரியா போக்கி (Anti malarial).
6. பூஞ்சை நோய் நீக்கி (Anti fungal).
7. பாக்டீரியா அகற்றி (Anti bacterial).
8. வைரஸ் அகற்றி (Anti viral).
9. ஆண்டி ஆக்சிடென்ட் (Anti oxidant).
10. புற்றுநோய் தடுப்பு (Anti cancerous).

வேப்பிலையில் நார்ச்சத்து, மாவுச்சத்து மற்றும் புரதச் சத்து, 10 விதமான அமினோ அமிலங்கள் உள்ளன. இதில் Azadirachtia, nimbidiol, nimbidin போன்ற வேதிப் பொருட்கள் இதுவரை பகுக்கப்பட்டுள்ளன.

வேப்பிலையை நம்முடைய முன்னோர்கள் பலவிதமான ஆயுர்வேத சித்த மருந்துகளில் உபயோகப்படுத்தியுள்ளனர். வேப்பிலை சாறில் தொழுநோய், வயிற்றுப் புழுக்கள், சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாவதை அறிந்து இந்த நோய்களுக்கு உபயோகப் படுத்தியுள்ளனர்.

நாள்பட்ட தோல் வியாதிகளை எந்த விதமான பக்க விளைவுகளும் இன்றி குணப்படுத்தக் கூடிய ஒரு அற்புதம் வேப்பிலைக்கு உண்டு. சோரியாசிஸ், சாதாரண சிரங்கு, நமைச்சல், புழுவெட்டு நோய், மருக்கள் முதலியவை வேப்பிலையால் குணமாகக் கூடிய சரும நோய்கள்.

வேப்பிலையை அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் பூசினால் வெகு விரைவில் முகப்பரு மறைந்துவிடும்.

வேப்பிலையை பயன்படுத்தும் முறை...

புத்தம் புதிதாக பறிக்கப்பட்ட இலைகளை பயன்படுத்த வேண்டும்.

வேப்பிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து சுண்டக் காய்ச்சி, அதனுடைய அடர்த்தி அதிகமான நிலையில் உபயோகிப்பது.

வேப்பிலையை சாறு எடுத்து உபயோகிப்பது.

வேப்பிலையின் பொதுவான பயன்கள்...

வேப்பிலையை அப்படியே அரைத்து சரும வியாதிகள் மேல் பூசலாம்.

சரும வியாதி உள்ளவர்கள் வெந்நீரில் வேப்பிலை போட்டு கொதிக்கவைத்து அந்த நீரில் குளித்து வரலாம்.

சின்னம்மை, தட்டம்மை போன்ற அம்மை நோய்களுக்கு கிருமி நாசினியாக பயன்படுத்தலாம்.

வேப்பிலையை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.

வேப்பிலையை காலையில் டீயுடன் சேர்த்து அருந்தினால் சாதாரண சளி இருமல் குறையும்.

வேப்பிலையை அரைத்து வீக்கம் உள்ள இடங்கள், மூட்டுகள், வாத நோய் கண்ட இடங்களில் பூசலாம். முதுகுத்தண்டு வலி, தசைப்பிடிப்பு போன்றவற்றிற்கும் சிறந்த மருந்தாகும்.

வேப்பிலையின் தொழிற்சாலை உபயோகங்கள்...

விவசாயத் துறையில் பூச்சிக் கொல்லியாகவும், கிருமி நாசினியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதிலுள்ள முக்கிய வேதிப் பொருள் தற்போது நாம் உபயோகிக்கும உரங்களில் சேர்க்கப்படுகிறது.

அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அழகுக்காக உபயோகப்படுத்தும் கிரீம்கள், லோஷன்கள், சோப்பு மற்றும் கூந்தல் எண்ணெய்களில் வேப்பிலை பயன்படுத்தப்படுகிறது. சித்த மருத்துவத்தில் வேப்பிலை முக்கிய பொருளாக பயன்படுகிறது.

வேப்பிலையின் மருத்துவக் குணங்கள்...

சூழ்நிலைக்கேற்ப உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் வராமல் தடுக்கிறது. குருதியில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் தன்மை வேப்பிலைச்சாறுக்கு உண்டு. வயிற்றுப்புண்களை ஆற்றும் தன்மை மற்றும் வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை மட்டுப்படுத்தும் தன்மை வேப்பிலைக்கு உண்டு.

மலேரியக் காய்ச்சலுக்கு குளோரோக்குவின் என்ற மருந்து கொடுக்கப்படும். இந்த மருந்துக்கு கட்டுப்படாமல் இருக்கும் காய்ச்சலை வேப்பிலை கொடுத்து கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர முடியும். காளான் நோய்களான டிரைக்கோபைட்டா மற்றும் பிற காளான் நோய்களையும் வேப்பிலையைக் கொண்டு தீர்க்க முடியும்.

பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும் பண்பு வேப்பிலைக்கு உண்டு. கிராம் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை வேப்பிலைக்கு உண்டு.

வைரஸ் நோய்களை எதிர்க்கும் சக்தி வேப்பிலைக்கு உண்டு. இதனை அம்மை நோய்களுக்கு உபயோகிக்கும் மருந்தாக நம் முன்னோர் காலத்திலிருந்து பின்பற்றப் படுகிறது.

புற்றுநோய் எதிர்ப்பு தன்மை வேப்பிலைக்கு உண்டு. இதனால் புற்றுநோய் வளர்ச்சியைத் தடைப்படுத்தக்கூடிய மருந்துகளில் வேப்பிலையைப் பயன் படுத்துகின்றனர்.

வேப்பமரத்தின் பயன்கள்...

தோட்டத்திலுள்ள ஒரு வேப்பமரம், பத்து குளிர்சாதனக் கருவிகளுக்கு ஒப்பாகும். ஏனெனில், இது வெப்பநிலையை பத்து டிகிரி வரைக் குறைக்கவல்லது.

மருந்துகள், பல வாசனைப் பொருட்கள், கிருமிநாசினிகள் ஆகியவற்றைத் தயாரிக்க வேப்பிலைகள் பயன்படுகின்றன.

இலை, பட்டை, விதையிலுள் தைலம் பலவகையான பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்தும் திறன் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

Streptomycinie போன்ற மருந்துக்கும் கட்டுப்படாத காசநோய் கிருமிகள் வேப்ப எண்ணெய்க்கு கட்டுப்படுவதாக ஆய்வு அறிக்கைகள் சொல்லுகின்றன.

மூலம் வேப்பிலை மோசமான தோல் நோய்களையும் கட்டுப்படுத்தும், மேலும் குடல் புழுக்களையும் அகற்றும் ஆற்றல் உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேகாலாயவில் உள்ள பழங்குடி மக்கள் இதய நோய்க்கும், காச நோய்க்கும் வேப்பம் பழங்களையும், இலைகளையும் பயன்படுத்துகிறார்கள்.

வேப்பெண்ணெய்க்கு விந்துவிலுள்ள உயிர் அணுக்களைச் செயல் இழக்கச் செய்யும் ஆற்றல் உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கண்டறிந்துள்ளது.

வேப்பிலையிலுள்ள குயிர் சிடின் என்னும் சத்து Bacteria-க்களைக் கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.

வேப்ப எண்ணெய்யை சிதைத்து வடித்துப் பெறும் பைரோனிமின் மூலம் Rocketகான உந்துவிசை மாற்று எரிப்பொருளைப் பெறலாம் என்கின்றனர்.

எலிகளுக்கு வேப்பிலை சாற்றைக் கொடுத்து ஆராய்ந்ததில் அது கருத்தரிக்கும் ஆற்றலை 11-வது வாரத்தில் முற்றிலும் இழந்து விட்டதை அறிந்தனர். சாறு கொடுப்பதை நிறுத்தி விட்டால் மீண்டும் கருத்தரிக்கும் ஆற்றல் பெற்று விடுவதையும் கண்டுள்ளனர்.

வேம்பு வெளியிடும் பிராகிபிடின் என்னும் வேதிப்பொருள் காற்றில் கலந்து மனிதனையும் தாவரங்களையும் தாக்கும் கிருமிகளை இயங்க விடாமல் தடுத்து அழிக்கிறது என்று Dr.சக்சேனா கண்டறிந்துள்ளனர்.

வேப்பம் விதைக்கும், எண்ணெய்க்கும் பிண்ணாக்கிற்கும்-123க்கும் மேற்பட்ட பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. வேம்பு Meliazia தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.

புழு, பூச்சிகளால் நேரிடும் துன்பங்களை ஒழிக்கும்.

வேப்பங்கொழுந்தும், எள்ளும் சேர்த்து அரைத்துப் பூசிவர ஆறாத நாட்பட்ட புண்கள் ஆறும்.

வேப்பிலையை கற்ப முறைப்படி சாப்பிட்டு வர எந்த நோயும் அணுகாது.

வேப்பிலைச் சாறு + பழச்சாறு கலந்து படுக்கபோகும் முன் அருந்த ஆழ்ந்த உறக்கம் உண்டாகும்.

பூவை குடிநீரிட்டு குடிக்க குன்ம நோய் தீரும்.

மூலம், தோல் நோய், சூதக சன்னி, குடல் கிருமி, நரம்புப் பிரிவு நீங்கும்.

விதை + கசகசா + தேங்காய் பால் சொறி, சிரங்கு, நமைச்சல், தேமல் தீரும்.

வேப்பம் பட்டை + திப்பிலி குடிநீர் இடுப்பு வாதம், கீல் வாதம் தீரும்.

வேப்பம் பூவைத் தலையில் வைக்க ஈறும் பேணும் தீரும்.

100 வயதான வேப்பமரப் பட்டையை நிழலில் உலர்த்திச் சூரணித்து பாலில் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும். நோய் அணுகாது.

பூச்சாறு + நெல்லிக்காய் சாறு கலந்து தர எந்த நோயும் அணுகாது, தோல் பளபளக்கும், இரத்தம் சுத்தமாகும்.

வேப்பமுத்து, மிளகு, கருஞ்சீரகம் மூன்றையும் அரைத்து எண்ணெய்யில் கலந்து தலைக்குத் தேய்த்து முழுகி வரப் புழுவெட்டு மாறும். முடி செழித்து வளரும்.

வேப்பம்பட்டைத் + தூள் கரிசாலை + மல்லிச் சாறு 7 முறை பாவனை செய்து 1 மண்டலம் தேனில் உண்ண உடல் கருங்காலி மரம் போல் வலிமை உடையதாகும். விந்து கட்டும்.

வேப்பம்பூ + வேப்ப எண்ணெய் கலந்து காய்ச்சி காதுக்குச் சொட்டு மருந்தாகப் பயன்படுத்தக் காதில் உள்ள பூச்சிகள் வெளிப்படும். காது வலி, காது சீழ் மாறும்.

நம் வீடுகளில் வேம்பு வளர்ப்பது ஐதீகமாகக் கருதப்பட்டாலும், அதன் தத்துவம் என்னவென்றால் வேம்பை சுற்றி நிறைய நோய் எதிர்ப்பு ஆற்றல் உள்ளதென்றும், காற்றானது தூய்மையுறும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

உலகில், இந்தியாவில்தான் இப்போது அதிக வேப்ப மரங்கள் உள்ளன. சமீபத்தில் நிகழ்ந்த ஒரு கருத்தரங்கில் ஓர் எச்சரிக்கை வெளியிடப்பட்டது. வேப்பமரத்தின் பயன்களை அறிந்த மற்ற நாடுகள், குறிப்பாக ஆஸ்திரேலியா, வியட்நாம் ஆகியவை இப்போது அதிக அளவில் வேப்பமரங்களைப் பயிரிடத் தொடங்கியுள்ளன.

நாம் இருக்கும் வேப்பமரங்களையெல்லாம் வெட்டிக் கொண்டிருந்தால் இழப்பு நமக்குத்தான்.

மரங்களை வெட்டாதீர்... ஒரு மரத்தை வெட்ட வேண்டி வந்தால் 10 மரங்களை நடுவோம்...

ஒரு தொகுதியில் அதிமுக அவுட்... டிடிவி அணிக்கு தாவும் மார்கண்டேயன்...


https://youtu.be/0fKOX6hWyUA

Subscribe The Channel For More News...

பொள்ளாச்சியில் கடையடைப்பு...


பொள்ளாச்சியில் பாலியல் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யுமாறும் அவர்களுக்கு துணையாக இருக்கும் ஆளும்கட்சியை கண்டித்து  இன்று கடையடைப்பு மற்றும் மாலை 4 மணிக்கு காந்தி சிலையிலிருந்து கண்டனப் பேரணியும் நடைபெறுகிறது.

பொள்ளாச்சியில் இன்று காலை 6 மணி முதல் கடையடைப்பு வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது நகரம் கிராமப்புறபகுதியில் 100 சதவீதம் வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு உள்ளது.

ஆட்டோக்கள் ஓடவில்லை பேருந்துகளில் மக்கள் கூட்டம் குறைவாக உள்ளது இன்று பொள்ளாச்சியே வெறிச்சோடி காணப்படுகிறது இதை தொடர்ந்து மாலை 4 மணிக்கு காந்தி சிலையிலிருந்து கண்டனப் பேரணி புறப்படும்...

அதிமுக vs திமுக தேர்தல் அறிக்கையின் சில ஒற்றுமை அம்சங்கள்...


https://youtu.be/XdxJRM-oLRE

Subscribe The Channel For More News...

360 பாகையில் சுழலும் கட்டடம்.....


வித்தியாசமாக ஒரு கட்டடத்தைக் கட்டி, பிரேசில் நாட்டு நிறுவனம் ஒன்று உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. Suite Vollard என்ற அந்த நிறுவனம் 360 பாகையில் சுழலும் குடியிருப்பு கட்டடத்தைக் கட்டியுள்ளது.

மொத்தம் 11 மாடிகள் கொண்ட அந்த கட்டடத்தின் ஓவ்வொரு மாடியும் 360 பாகையில் சுழலும் தன்மை கொண்டது. ஒரு சுற்று சுற்றுவதற்கு ஒரு மணி நேரம் ஆகிறது.

சுற்றும் வேகத்தை அந்தந்த மாடியில் வசிப்பவர்கள் கூட்டவோ, குறைக்கவோ முடியும். சூரிய உதயத்தையும், சூரிய மறைவையும் குடியிருப்புவாசிகள் ரசிக்கும் வகையில் கட்டடத்தின் வெளிச்சுவரில் கண்ணாடி பதிக்கப்பட்டுள்ளது.

மாடிப்பகுதி ஒன்றின் விலை என்ன தெரியுமா? அதிகமில்லை, 300,000 அமெரிக்க டாலர்கள்...

திமுக ஸ்டாலின் சதி செய்கிறாரா.? விசிக திருமாவளவன் புலம்பல்...


https://youtu.be/Z0Rxzs418V8

Subscribe The Channel For More News...

வங்கிக்கடன் மோசடி வழக்கில் தப்பிச் சென்ற நிரவ் மோடிக்கு லண்டன் நீதிமன்றம் பிடிவாரண்ட்...


நிரவ் மோடியை நாடு கடத்த இங்கிலாந்து அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது இந்திய அரசு...

அதிர்ச்சியில் திமுக உ.பி.கள்.. 2G புகழ் அ. ராசா வை எதிர்த்து களமிறங்கும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி...


https://youtu.be/iPbyqCU3BtA

Subscribe The Channel For More News...

தமிழன் உருப்படாததற்கு காரண‌ங்கள்...


இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில்... ஒரு நிமிடம்...

இது பல்பொடி விளம்பரம் அல்ல. தமிழன் புறக்கணிக்கப்படுகிற, அடிவாங்குகிற தேசங்களின் பட்டியல் தான் இது.

கேரளா, கர்நாடகாவில் தமிழன் செ(ஜெ)ன்ம எதிரியாகவே பார்க்கப்படும் நிலை. ஆந்திராவிலும் தமிழனுக்கு எதிரான ஆவேசம். மராட்டியம், மும்பையில் தமிழன் என்றாலே எட்டிக்காய். கல்கத்தாவிலும், டில்லியிலும் தமிழனுக்கு எதிரான அரசியல். யே(ஜெ)ர்மனியில் கூட நியோ நாசி(ஜி)க்கள் என்ற குழுவினருக்குத் தமிழன் என்றால் பிடிக்கவில்லை.

தமிழனுக்கு என்ன ஆச்சு? எல்லோரும் திட்டமிட்டு அவனுக்கு கட்டம் கட்டுவது ஏன்? அவன் செய்த தவறுதான் என்ன?

முதல் காரணம் தமிழனின் அறிவாற்றல்...

எந்த இடத்தில் விட்டாலும் அதில் மூளையைச் செலுத்தி முன்னேறும் ஆற்றல். அந்த தன்னம்பிக்கை காரணமாகவே அவன் தன் மண்ணில் மற்ற யார் பிழைப்பதையும் தடுப்பது இல்லை. ஆனால், அதே தமிழன் வேறு மண்ணில் பிழைக்கப் போகும் போது அங்கு அவன் காட்டும் ஆற்றல் மற்றவர்களைப் பொறாமையும் ஆத்திரமும் கொள்ளச் செய்கிறது. அதற்குத் தீர்வாகத்தம் மண்ணில் தமிழனைப் பிழைக்க விடக்கூடாது என்று முடிவெடுத்து மற்றவர்கள் செயல்படுகின்றனர்.

தமிழன் அறிவாளி. ஆனால், புத்திசாலி அல்ல...

இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. தன் அறிவை எல்லோருக்கும் பயன்பெறத் தருபவன் அறிவாளி (உதாரணம்: தாமஸ் ஆல்வா எடிசன்). தன் அறிவையும் மற்றவர்கள் அறிவையும் தனக்கு லாபமாக பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம் (உதாரணம்: தமிழக அரசியல் தலைக ள்). பிழைக்கச் செல்லும் இடங்களில் தன்னைப் பார்த்து வயிறு எரிகிற மற்றவர்களை தாஜா செய்வது பற்றி கவலையே படாமல் கண்ணை மூடிக்கொண்டு உழைத்து முன்னேறுவது. அதனால் ஒரு நிலையில் அநியாயம் செய்கிற எதிரிகளிடம் சுலபமாகச் சிக்கிக் கொள்கிறான்....

பொள்ளாச்சி பாலியல் பயங்கரம் / திருநாவுக்கரசின் திடுக்கிடும் பின்னணி அதிர்ந்து போன சிபிசிஐடி...


https://youtu.be/D3t6KXMjQSU

Subscribe The Channel For More News...

ஈழத்தில் சோழர்களின் சுவடுகள்...


இலங்கையில் நீண்ட காலமாக தலை நகராக விளங்கியநகரம் அனுராதபுரம். கி.மு.காலத்தில் இருந்தே இந்த நகரம் மிகவும் பிரபலம் பெற்று விளங்கியதற்கு வரலாற்றுச் சான்றுகள் ஏராளம் உண்டு.

2000 ஆண்டுகளுக்கு முன்பே சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு மேல் இலங்கை முழுவதையும் ஒரே குடையின் கீழ் ஆண்ட ஒப்பற்ற தமிழ் மன்னன் எல்லாளன்கூட அனுராதபுரத்தை தலைநகரமாகக் கொண்டே இலங்கை முழுவதையும் ஆண்டான் என்று வரலாறு கூறுகிறது.

பௌத்தம் இலங்கையில் தீவிரமாகப் பரவத் தொடங்கிய காலத்திலும் கூட அனுராதபுரத்தின் சிறப்பே ஓங்கி இருந்தது. இந்தியாவில் இருந்து புத்த மதத்தின் சின்னமாக கொண்டுவரப்பட்ட அரசமரக் கிளை ஒன்றுகூட அனுராதபுரத்தில் உள்ள விகாரை ஒன்றில் தான் நடப்பட்டு இன்றும் அதன் கிளைகள் அழியாமல் உள்ளன.

ஆயினும் இலங்கையின் தலைநகரம் அனுராதபுரம் என்ற வரலாற்றை முதன் முதலாக மாற்றிய பெருமை சோழர்களுக்கே உரியது.. கி.பி.895 இல் ராசராச சோழனின் மகனாகிய ராசேந்திரச் சோழன் என்பவன் இலங்கைமீது படை எடுத்துவந்து (ஆதாரம் 'சோழர் வரலாறு';by .. நீலகண்ட சாஸ்திரி) அனுராதபுரத்தை கைப்பற்றி தலை நகரக் கட்டிடங்களை எல்லாம் தரைமட்டமாக்கி, வெற்றிவாகை சூடினான்.

சைவ சமயத்தில் மிகவும் பற்றுள்ள ராசராச சோழனும் அவனது பரம்பரையும் புத்த மதத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க ஒருபோதும் விரும்பவில்லை.. ஆயினும் மனித நேயமுள்ள சோழர்கள் பௌத்தத்தை அழிக்க நினைத்திருந்தால் அனுராத புரத்தில் இருந்த புத்த சின்னங்கள் எல்லாவற்றையும் அழித்திருக்கலாம்.. ஆனால் அப்படிச் செய்யாமல் அரச கட்டிடங்களை மட்டுமே தரைமட்டமாக்கினான்.

ராசேந்திரச் சோழன், இலங்கையின் தலைநகரம் என்னும் பெருமையை அனுராத புரத்தில் இருந்து மாற்றி கிழக்கே நகர்ந்து சென்று பொலநறுவையை இலங்கையின் தலை நகரமாக மாற்றி கோட்டை கொத்தளங்களை கட்டினான் ராசேந்திரச் சோழன்.

நீண்ட காலமாக இலங்கையின் தலைநகரம் அனுராதபுரம் என்று இருந்த வரலாற்றை மாற்றிய பெருமை இந்தச் சோழ இளவரசனுக்கு உரியதாகும். அதுமட்டுமன்றி. பொலநறுவையில் ஒரு பெரிய சிவன் கோயிலையும் கட்டுவித்து வழிபட்டான் இப்பெரு மன்னன்.

இன்றும் அந்தச் சிவன் கோயில் அவன் நினைவாக அங்கே உள்ளது.கோயிலின் பட்டயங்களில் ராசேந்திரச் சோழனின் இலங்கைப் படை எடுப்புபற்றி பொறிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி பொல நறுவையை சுற்றி பல குளங்களைக் கட்டுவித்து மக்களை விவசாயத்தில் பெருமளவில் ஈடுபடுத்தி வந்தான் இம்மன்னன்.

ராசேந்திரச் சோழன் இலங்கைமீது படை எடுத்து வரும்போது அவனது படையினரும் யானைப்படை, குதிரைப்படை போன்றவையும் கப்பல்கள் மூலம் கொண்டு வந்து தரை இறக்கப்பட்டு பாளையம் அமைத்து இருந்த இடம், வடபகுதியில் உள்ள வடமராட்சி கிழக்கின் செம்பியன் பற்று ஆகும்.சோழருக்கு இன்னுமொரு பெயர் செம்பியன் என்பது ஆகும்.

எனவே சோழரின் வரலாற்று பிரதேசமாகவே செம்பியன்பற்று என்னும்பெயர் அன்றில் இருந்து வழங்கி வருகிறது.. செம்பியன் பற்றுப் பகுதியில் பின்னாளில் சிறீலங்கா படைகளின் குண்டுவீச்சில் இருந்து தப்ப மக்கள் நிலத்தை தோண்டிய போது பல இடங்களில் சோழர்களின் காசுகளும் சிவன் சிலைகளும் வேறு சில வரலாற்றுச் சின்னங்களும் மண்ணுக்குள் இருந்து எடுக்கப்பட்டன.

செம்பியன் பற்றில் மட்டுமன்றி அதை அண்மிய ஊரான நாகர்கோயிலிலும் இவை பல இடங்களில் கண்டு எடுக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத் தக்கது.

இவ்வாறு சோழர்களின் வரலாற்றுச் சுவடுகள் ஈழத்தில் நிறைய உண்டு. அவையெல்லாம் தமிழர்களின் வீரத்தின் அடையாளம் ஆகும்...

இயற்கை அழிவது மனிதனால் தான்...


உப்பின் மகத்துவம்...


கை, கால் மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா? உப்பு கரைத்த நீரில் குளியுங்கள்; எந்தவித பக்க விளைவும் இல்லாமல் வலி பறந்து போகும் என, சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து, லண்டனில் வெளியாகும், டெய்லி எக்ஸ்பிரஸ்' என்ற பத்திரிகையில் கூறப்பட்டு உள்ளதாவது...

அடிபடும் போது அல்லது கிருமி தொற்று ஏற்படும் போது, உடலில் உள்ள செல்கள், எவ்வாறு விரிவடைந்து எதிர்ப்புச் சக்தியை உண்டாக்குகின்றன என்பது பற்றி, மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தினர் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.

எலி ஒன்றின் உடலில், அடிபட்ட இடத்தில், ஊசி மூலம், உப்புக் கரைசல் செலுத்தப்பட்டது. அப்பகுதியில் இருந்த செல்கள் விரிவடைந்து, உப்பு நீரை கிரகித்துக் கொண்டதால், வீக்கம் குறைந்தது.

இதன் தொடர்ச்சியாக, மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் உப்பு நீரின் மகத்துவத்தை உணர்த்தின.

உப்புக் கரைத்த நீர், கை, கால் மூட்டு வலி, எரிச்சல் போன்ற பிரச்னைகளுக்கு, சிறந்த நிவாரணத்தை வழங்குகின்றன. இதை பயன்படுத்தும் போது, பக்க விளைவு ஏதும் ஏற்படுவதில்லை.

சமையலுக்கு பயன்படும் சாதாரண உப்பைக் கூட, இம்மருத்துவத்துக்குப் பயன்படுத்தலாம். கை, கால் மூட்டு வலி பிரச்னை உள்ளோருக்கு, அப்பகுதியில் செல்கள் விரிவடைவதால், வீக்கம் ஏற்படுகிறது. அப்பகுதியில் உப்புக் கரைசல் செலுத்தப்படும் போது, வீக்கம் குறைவது கண்டறியப்பட்டு உள்ளது.

உப்பு நீரில் ஊற வைத்த துணியால், பாதிக்கப்பட்ட இடத்தில் சுற்றுதல் அல்லது அதே நீரைக் கொண்டு பிரச்னைக்குரிய இடத்தில் நனையச் செய்தல், போன்ற எல்லா முறைகளும் வலி, வீக்கத்தைக் குறைக்கின்றன.

கை, கால் மூட்டு பிரச்னை உள்ளோர், இயற்கையான வெந்நீர் ஊற்றுகளுக்குச் சென்று, குளித்து நிவாரணம் பெறுவதை, பல ஆண்டுகளாக, நாம் கண்டு வருகிறோம்.

உண்மையில், வெந்நீர் ஊற்றுகளில் அதிகளவு உப்பு கலந்திருப்பது, ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. இதன் காரணமாகவே, மூட்டு வலியால் அவதிப்பட்டோருக்கு நிவாரணம் கிடைத்து உள்ளது.

மருத்துவத்தில் பயன்படும், "ஹைபோடோனிக்' கரைசலில், மிகவும் குறைந்தளவு உப்பே உள்ளது.

இக்கரைசலை அடிபட்ட இடத்தில் பயன்படுத்தும் போது, கடுமையான எரிச்சல் ஏற்படுவதைக் கண்டறிந்தோம்.

அதே சமயம், அடர்த்தியான உப்பைக் கொண்ட, "ஹைபர்டோனிக்' கரைசல், எரிச்சல் ஏற்படாமல் மட்டுப்படுத்துவதும் தெரிய வந்துள்ளது.

உடலில் நீர்ச்சத்து குறைந்து போய், பலவீனமாக இருப்போருக்கு, "ஹைபர்டோனிக்' கரைசல் கொடுப்பது பயனுள்ளதாக இருக்கும்.

கடுமையான மூட்டு வலியால் அவதிப்படுவோருக்கும் இதே கரைசலை பயன்படுத்தலாம்.

இவ்வாறு ஆய்வு முடிவுகள், மூட்டு வலி பிரச்னை உள்ளோருக்கு, ஆறுதல் அளிக்கும் தீர்வை வெளிப்படுத்தி இருக்கின்றன...

வைகோ நாயூடு வும்... அரசியல் வியாபாரமும்...


https://youtu.be/bhH4rvxwMNs

Subscribe The Channel For More News...

உறவு முறைகளை அழகாக வகுத்து சொன்னவன் தமிழன்...


மற்ற எந்த மொழியிலும் இல்லாத சிறப்பாக தமிழில் மட்டும் தான் உறவுகளை சிறப்பிக்க ஒவ்வொரு உறவுக்கும் தனிதனியாக பெயர் இட்டு சரியாக வரையறுத்துக் கூறப்பட்டுள்ளது.

இந்த படம் அதற்கு ஒரு சான்று...

தன் முன்னோர்களையும் தனக்கு பின் வரும் சங்கதியரையும் தனி தனியே வெவ்வேறு பெயர் இட்டு மகிழ்ந்துள்ளனர் நம் முன்னோர்கள்.

ஆனால் வேதனை என்னவெனில் நம் தலைமுரையினரோ இதை பற்றி எல்லாம் அறியாமல், எந்த உறவையும் அங்கிள் என்றும் ஆன்டி என்றும் ஒரு வார்த்தையில் அடக்கி விடுகின்றனர்...

தேர்தல் நேரம் வந்துட்டாலே போதும்.. கருத்து கணிப்புங்கிற பேருல இவனுங்க திமுக கட்சி வெற்றினு, மக்கள்கிட்ட கருத்து திணிப்ப கொடுக்க ஆரம்பிச்சிடுவானுங்க...


உறக்க‍ம் தரும் உணவுகள்....


நம்மில் சிலர் தலையணையில் தலைவைத்த அடுத்த விநாடியே கொர்ரென்ற குறட்டையுடனோ அல்லது குறட்டை அல்லாமலோ ஜோராக தூங்கத் தொடங்கி விடுவார்கள். அவர்களை பற்றி பிரச்சனை இல்லை. ஆனால் குறட்டை ஒரு பிரச்சனை தான்; அதுபற்றி அப்புறம் பார்க்கலாம்.

தற்போதைய பிரச்சனை தூக்கம் வராதவர்களை பற்றியது. புத்த கம் வாசிப்பது, இணையதளத்தில் மேய்வது, மனதுக்கு பிடித்த இனிமையான பாடல்களை கேட்பது என பலவிதமாக முயற்சித் தும், சிலருக்கு தூக்கம் தொலைவிலேயே இருக்கும்; பக்கத்தில் நெருங்காது.

அப்படியானவர்களுக்காக மருத்துவ மற்றும் உணவு நிபுண ர்கள் தரும் தூக்கம் வரவழைக்கும் உணவுகள் பட்டியல் இதோ...

இறால்: மீன்களில் பலவகை உண்டென் றாலும் இறால் மீனுக்கு தனி ருசி மட்டுமல்லாது, தூக்கத்தை வர வழைக்கும் திறனும் உண்டு. இதி லுள்ள ஆரோக்கியமான கொழு ப்பு, தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன் சுரப்புகளை அதிக ரிக்கும் திறனுடையதாம்.

பீன்ஸ் மற்றும் இந்த வகையை சேர்ந்த அவரை, பட்டாணி போன்றவற்றில் பி6, பி12 உள்ளிட்ட ‘பி’ வைட்டமின்களும், ஃபோலிக் அமிலமும் மிகுதியாக உள்ளன.

இவை மனிதனின் தூக்க சுழற்சி முறையை ஒழுங்குபடுத்துவதோடு, மன தை ஆசுவாசமாக வைத் திருக்கக் கூடிய செரோட்டோ னினை சுரக்க வைக்கிறது. மேலும் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு ‘பி’ வைட்டமின்கள் மிகவும் உதவுவதாக ஆராய்ச் சிகள் தெரிவிக்கின்றன.

தயிர்: கொழுப்பு குறைந்த தயிரில் கால்சியம் மற்றும் மெக்னீசி யம் நிறைந்துள்ளது. இந்த இர ண்டுக்குமே தூக்கத்தை வர வழைப்பதில் முக்கிய பங்கு உள்ளது. ஆழ்ந்த தூக்கம் வர உதவும் இந்த தாதுக்கள், வேகமாகவும் தூக்க த்தை வரவழைக்குமாம்.

இந்த தாதுக்கள் ஒருவருக்கு உரிய அளவு கிடைக்காமல் பற்றாக்குறையாக இருந்தால், அதனால் தூக்கமின் மை ஏற்படுவதோடு, மன அழுத்த ம் மற்றும் தசைவலி போன்ற வையும் ஏற்படலாம் என்று மருத் துவர்கள் எச்சரிக்கிறா ர்கள்.

பசளிக்கீரை: கரும்பச்சை நிறத்தில் உள்ள இந்த பசளிக்கீரையில் இரும்பு சத்து அதிக அளவில் உள்ளது. தூக்கமின்மையை ஏற்படுத்தக்கூடிய ஒரு ஆழ்ந்த உறக்க‍த்தில் வித படபடப்பு மற்றும் மன அமைதியின்மை போன்ற வை ஏற்படாமல் பாதுகாப் பதில் இந்த பசளிக்கீரை முக்கிய பங்கு வகிப்பதாக கூறு கிறார்கள் நிபுணர்கள்.

இவற்றுடன் தோசை, அப்பம் என்பவையும் உறக்கத்தைத் தரும் உணவுகளாகும்...

பலே ஆண்டிப்பட்டி குடும்பம்... அண்ணன் திமுக, தம்பி அதிமுக, இருவருமே வேட்பாளர்கள்...


https://youtu.be/owe2w9l37-c

Subscribe The Channel For More News...

ஆழ்மனதின் சக்தி - புன்னகைத்தார் பிரம்மா...


முன்னொரு சமயத்தில் எல்லா மனிதர்களுமே கடவுளாக இருந்தனர். எல்லோருக்குமே அபரிமிதமான சக்தி இருந்தது. இதனால் பலர் தங்களது சக்திகளை மிஸ்யூஸ் செய்ய ஆரம்பிக்க, கிரியேட்டிவ் ஹெட் ஆன பிரம்மாவிற்கு செம கொடைச்சல் ஆகிவிட்டது.

இதை தடுக்க எல்லா சிறு கடவுள்களையும் அழைத்து ஒரு மீட்டிங் போட்டார். இந்த சக்தியை மனிதர்கள் எளிதில் கண்டுபிடித்துவிட முடியாதபடி எங்காவது ஒளித்து வைத்துவிட வேண்டும். ஏதாவது ஐடியா இருந்தா சொல்லுங்க என்றார்.

முன் பெஞ்சில் உட்கார்ந்த ஆர்வக்கோளாறு சின்ன கடவுள் ஒன்று சட்டென "பூமியின் ஆழத்தில் புதைத்துவிடலாம் சார்"  என மூஞ்சியில் பல்ப் எரிய சொன்னது.

முன் பெஞ்சில் குரல் எழுந்தாலே காண்டு ஆகும் கடைசி பெஞ்சு கடவுள்கள், வேணாம் சார், நாளை பின்ன எவனாவது விஞ்ஞானி பூமியின் ஆழத்துல துளை போடுற மிசினை கண்டுபிடிச்சுடுவான், அதனால எங்கயாவது வேற கிரகத்துல ஒளிச்சு வைச்சுடுங்க என்றனர்.

இதற்கும் எதிர்ப்பு எழுந்தது. சார் மனுச பய சும்மாவே இருக்க மாட்டான் சார். ஏதாவது பறக்குற ரதம் செஞ்சு அங்கேயும் போய் ஈசியா எடுத்துடுவான் சார் என அவையில் சலசலப்பு ஏற்பட ஆரம்பித்தது.

கடைசியில் பிரம்மாவே யோசித்து ஒரு இடத்தில் ஒளித்து வைத்தார். அந்த  சக்தியை மனிதன் கண்டுபிடிக்க மிகவும் சிரமப்படும் இடமாக அது அமைந்தது ஆம்.. ஒவ்வொரு மனிதனின் ஆழ்மனதிலும் அந்த அற்புத சக்தியை வைத்து புன்னகைத்தார் பிரம்மா...

இதை விட கேவலம் தமிழக அரசுக்கு உண்டா..?


என் கள்ளக்காதலரை அறிமுகப்படுத்தியதே பாலாஜி தான்.. நித்யா அதிரடி...


இடையில் சிறிது காலம் அமைதி நிலவிய நடிகர் தாடி பாலாஜியின் வாழ்க்கையில் மீண்டும் அவரது மனைவி ரூபத்திலேயே புயலடிக்க ஆரம்பித்தது. தாடி பாலாஜி தன்னை  ரவுடிகளை வைத்து மிரட்டுவதாக அவர் போலீஸில் புகார் செய்தனர். இதற்கு தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வந்த பாலாஜி  தன் தரப்பு நியாயங்களை சில தினங்களுக்கு  கமிஷனர் அலுவலகத்தில் புகாராகக் கொடுத்தார்.

அப்போது பேசிய அவர், ‘என் குடும்பம் இப்படி மன உளைச்சலுக்கு ஆளானதற்கு முக்கிய காரணம் எஸ்.ஐ. மனோஜ் குமார் என்பவர்தான். குடும்ப நண்பராக அறிமுகமான அவர் பின் என்னுடைய மனைவி நித்தியாவிடம் தவறாகப் பழகத் துவங்கினார்.

இவர்கள் இருவரும் பேசுவதற்காகவே ஐந்துக்கும் மேற்பட்ட சிம் கார்டுகள் வைத்துள்ளனர். மேலும் நானோ அல்லது என்னுடைய வழக்கறிஞரோ கூட  நித்தியாவிடம் பேசினாலும் உடனடியாக எஸ்.ஐ.மனோஜ் குமாருக்கு  தெரிந்து விடும்.

அவருடன் சேர்ந்து கொண்டு தான் நித்தியா... பொய் பித்தலாட்டங்கள் செய்து கொண்டு இருக்கிறார். என்மீது பல புகார்களை கூறியபோதும் இதுவரை ஒரு முறை கூட எந்த ஊடகத்திற்கு நான் பேட்டி கொடுத்தது இல்லை. இப்போது இந்த பேட்டி கொடுப்பது கூட என்னுடைய மகளின் நலன் கருதிதான்’’ என்று கூறியிருந்தார்.

தாடி பாலாஜி மனோஜ் குறித்து அவதூறாகப் பேசியது குறித்து சில நாட்கள் மவுனம் காத்த நித்யா தற்போது, ‘என்னுடன் தவறான உறவு வைத்திருப்பதாக பாலாஜி குற்றம் சாட்டும் மனோஜே பாலாஜியின் நண்பர்தான்.  அவர்கள் 2 பேரும் நெருங்கிய நண்பர்கள்.

சொந்த நண்பனை, என்கூட தவறாக அர்த்தப்படுத்திப் பேச பாலாஜிக்கு எப்படி மனசு வந்ததே என்று தெரியவில்லை. எங்களுக்கு இடையே இருக்கும் பிரச்சினைகளை சட்டபூர்வமாக அணுகாமல் ஊடகங்களில் வீண் வதந்திகளாகப் பரப்பி மிகவும் கேவலமாக நடந்து வருகிறார் தாடி பாலாஜி’  என்று கூறியிருக்கிறார்...

பாஜக மோடி தமிழகத்திற்கு எந்த நன்மையான திட்டமும் செய்யவில்லை... ஆதாரம் இதோ...


மதுரையில் இரவு 8 மணி வரை ஓட்டுபதிவு நடக்கும்.. தேர்தல் அதிகாரி தகவல்....


தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு ஏப்ரல் 18 ம் தேதி நடக்கிறது. அதே நாளில் மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறுவதால் தேர்தல் தேதியை ஒத்திவைக்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதனை ஏற்க தேர்தல் கமிஷன் மறுத்து விட்டது. இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இன்று வெளியிட்டுள்ள தகவலில், சித்திரை திருவிழா நடப்பதால் ஏப்ரல் 18 ம் தேதி மதுரையில் மட்டும் ஓட்டுப்பதிவு நேரம் 2 மணி நேரம் நீட்டிக்கப்படுகிறது.

மதுரையில் காலை 7 மணி துவங்கி இரவு 8 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கும். தமிழகத்தின் மற்ற பகுதிகளில் காலை 7 மணிக்கு துவங்கி, மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கும்.

வழக்கமாக 5 மணி வரை மட்டும் நடத்தப்படும் ஓட்டுப்பதிவு தமிழகத்தில் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டு, மாலை 6 மணி வரை நடத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் கூறுகையில், சென்னை தனியார் கல்லூரியில் காங்.,தலைவர் ராகுல் பங்கேற்ற நிகழ்ச்சியில் தேர்தல் விதிகள் எதுவும் மீறப்படவில்லை.

கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் முறையாக அனுமதி பெறப்பட்ட பிறகு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை நடத்தப்பட்ட வாகன சோதனையில் ரூ.6.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்...

தமிழர் வரலாறு - பகுதி 4 / ஐயா ஒரிசா பாலு...


https://youtu.be/VazNt5CNpa0

Subscribe The Channel For More News...

பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்...


பூசணிக்காய்க்கு வெண்பூசணி, கல்யாணப்பூசணி என்ற பெயரும் உள்ளது..

காய்கறி வகைகளில் ஒன்றான, இதைச் சமைத்துச் சாப்பிட்டால் நரம்பைப் பற்றிய நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண் மேகவெட்டை, பிரமேக நோய் ஆகியவை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும். உடல் சூட்டைத் தணிக்கும். சிறுநீர் வியாதிகளை நீங்கும். சதா காலமும் உடல் வலி இருப்பவர்கள் பூசணிக்காயை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல்வலி தீரும். புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்கு சிகிச்சையளிக்கும் போது தினசரி பூசணிக்காய் சேர்த்து சமைத்த உணவைக் கொடுக்க புத்தி சுவாதீனம் படிப்படியாக மாறி நல்ல நிலைமைக்குத் திரும்பும்.

மருத்துவத்தில் பூசணிக்காயின் கதுப்பு, நீர்விதை ஆகியவை பயன்படுத்தப் படுகின்றன. நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது. ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் சிறுநீரக நோய்கள், ரத்தம் கலந்த சிறுநீர் வெளியேறுதல், பெண்களின் வெள்ளைப் போக்கு நீக்கவும் வெண்பூசணி பயன்படுத்தப்படுகிறது.

வெண்பூசணிக்காயின் சாறு 30 மில்லியளவு எடுத்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இதய பலவீனம் நீங்கும். ரத்தசுத்தியாகும்.

பூசணிக்காய் சாற்றைத் தயாரித்து தினசரி 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் தொடர்ந்த இருமல், நெஞ்சுச்சளி குணமாகும். நீரிழிவு நோய் கட்டுப்படும். அதிகத் தாகத்தைக் குறைக்கும். உடம்பின் எந்தப் பாகத்திலாவது ரத்தக்கசிவு ஏற்பட்டால் ரத்தக்கசிவை நிறுத்திவிடும்.

பூசணிக்காய் சாறு 30 மில்லியளவு சர்க்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் வலிப்பு நோயின் தீவிரம் குறைந்துவிடும்.

பூசணிக்காய் சாறு 120 மில்லியளவு தயாரித்து ஒரு தேக்கரண்டி தேனும், தேவையான அளவு சர்க்கரையும் கலந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகத்தில் ஏற்படும் நோய்கள் நிவர்த்தியாகும். சிறுநீரில் ஏற்படும் ரத்தம், சீழ் கலந்த சிறுநீர் வெளியேறுதல் நின்றுவிடும்.

பூசணிக்காயின் கதுப்புப் பகுதியை மட்டும் (தோல், பஞ்சுப் பகுதி நீக்கி) சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வேகவைக்கவேண்டும். வெந்தபின் இதை எடுத்து சாற்றைப் பிழிந்து நீரைச் சேகரித்து 60 மில்லியளவு தயாரித்து இதில் சிறிது கற்கண்டு சேர்த்து தினம் 2_3 வேளை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பாதிப்பால் ஏற்பட்டு வரும் மஞ்சள் காமாலை நோய் குணமாகும். தடையில்லாமல் சிறுநீர் வெளியேறும்.

பூசணிக்காயின் விதைகளைச் சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேக புஷ்டி உண்டாகும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தி மிகுதியாக உண்டாகும். உடல் சூட்டைத் தணிக்கும். பித்த நோயைக் கண்டிக்கும். பித்தவாந்தியை நிறுத்தும்.

வெண்பூசணி லேகியம்...

நன்கு முற்றிய பூசணிக்காயின் கதுப்புப் பகுதியை மட்டிலும் தேவையான அளவு எடுத்துக்கொண்டு இதில் 3.500 கிராம் எடுத்து சிறுசிறு துண்டுகளாக வெட்டி சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைத்து எடுத்து மிக்சியில் நன்றாக மசியும்படி அரைத்துக் கொண்டு வடிகட்டி, நீரையும் கதுப்பையும் தனித்தனியாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். வடித்து எடுக்கப்பட்ட பூசணிச் சக்கையை 500 கிராம் நெய்யில் மொற மொறப்பாகும்படி வறுத்து எடுத்து, நெய்வேறு, பொறிக்கப்பட்ட சக்கை வேறாக வைத்துக்கொள்ள வேண்டும்.

பூசணிக்காய் பிழிந்த சாற்றில் கல்கண்டு சேர்த்து பாகுபதம் வரும்வரை காய்ச்சி, இந்த பாகில் வறுத்த பூசணிக்காய்த் தூளைக் கொட்டிக் கிளற வேண்டும். திப்பிலி, சுக்கு, சீரகம் இவற்றின் பொடிகள் தலா 70 கிராம், லவங்கப்பட்டை, ஏலரிசி, பச்சிலை, தனியா, மிளகு இவற்றின் பொடிகள் தலா 20 கிராம். இவைகளை மேற்கண்ட மருந்துடன் கலந்து, வடித்து வைத்துள்ள நெய்யையும் சேர்த்து, நன்றாக எல்லா மருந்துகளும் ஒன்று சேர கிளறி வைத்துக் கொண்டு வேளைக்கு 10 கிராம் அளவில் தினசரி 2_4 வேளை சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா குணமாகும். சுவாச உறுப்புக்கள் பலப்படும். இருதய பலவீனம் நீங்கி பலப்படும். நல்ல பசியுண்டாகும். மலச்சிக்கல் இருக்காது. பொதுவாக உடல் ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாக்கும். ஈசனோபைல் நிவர்த்தியாகும். டான்சில்ஸ் தொல்லைக்குச் சிறந்தது.

பூசணிக்காயைச் சாறு எடுத்து 30 மில்லி முதல் 60 மில்லி வரை வைத்துக் கொண்டு இதில் தேன் ஒரு தேக்கரண்டி சேர்த்து தினசரி கொடுத்து வந்தால், ஒல்லியான சிறுவர்களுக்கு சதைப்பிடிப்பு ஏற்படும். அழகான தோற்றத்திற்கும், எடை அதிகரிப்பதற்கும் நோய் எதிர்ப்புச் சக்தி கூடி ஆரோக்கியமான உடல் தேறவும் நல்ல பலனைக் கொடுக்கும்.

சிறுநீரகச் செயல்பாடு குறைந்தவர்களுக்கு பூசணிக்காயில் 25 கிராம் அளவிற்கு வெட்டி எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்து வடிகட்டி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகச் செயல்பாடு சீராக அமையும்.

சிறுநீரகம் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் பூசணிக்காய்ச் சாறு 120 மில்லியில் ஒரு தேக்கரண்டி சர்க்கரையும், இரண்டு தேக்கரண்டி தேனும் கலந்து சாப்பிட்டு வந்தால், நோய்கள் முழுமையாக நிவர்த்தியாகும்.

பூசணிக்காயில் மருத்துவக் குணங்கள் அதிகம் இருப்பதால் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பல மருந்துகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்குக் கிடைக்கிறது. தனிப்பட்டவர்கள் மருந்து தயாரிக்கமுடியாத நிலையில் தயாரிக்கப்பட்ட மருந்துகளைப் பயன்படுத்திப் பயன்பெறலாம்.

இந்த லேகியத்தை வாங்கிச் சாப்பிட்டு வந்தால், ரத்தபித்தம், சயம், இளைப்பு, பலவீனம், இதய நோய், இருமல் உள்ளவர்கள் நல்ல நோய் நிவாரணம் கிடைப்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

வெண்பூசணி லேகியம்...

இந்த லேகியத்தை வாங்கிச் சாப்பிட்டால் காமாலை நோய், இரத்த சோகை, எலும்புருக்கி நோய், அஸ்தி வெட்டை, பிரமேகத்தால் ஏற்பட்ட வெள்ளை நோய் தீரும். உடல் வலிமை பெறும். தாது விருத்தி ஏற்பட்டு காம இச்சை மிகுதியாகும். வெண்பூசணி நெய் அல்லது கூழ்பாண்ட கிருதம் என்ற இந்தப் பூசணி நெய்யைச் சாப்பிட்டு வந்தால் சூலை நோய்கள் நிவர்த்தியாகும். தோல் நோய்கள், பெண்குறிப்புற்று முதலியன நீங்கும். உடல் சூடு, சூட்டுடன் எரிச்சல், நீர்க்கட்டு, நீர்க்குத்து முதலியன ஆண்களுக்கும், பெண்களுக்கும் நிவர்த்தியாகும். அஸ்திவெட்டை, கிராணிக்கழிச்சல், எலும்புருக்கி (T.B.) முதலிய கொடிய நோய்கள் நிவர்த்தியாகும்...

ஆரியம் திராவிடம் இனைந்து தமிழின அழிப்பு ஒரு உதாரணம்...


மாவட்ட வாரியாக முக்கிய தமிழக நதிகள்...


1. கடலூர் மாவட்டம் ​நதிகள்  : தென் பெண்ணை, கெடிலம்.

2. விழுப்புரம் மாவட்டம் ​நதிகள் : கோமுகி.

3. காஞ்சிபுரம் மாவட்டம் ​நதிகள் : அடையாறு, செய்யாறு, பாலாறு.

4. திருவண்ணாமலை மாவட்டம் நதிகள் : தென்பெண்ணை, செய்யாறு.

5. திருவள்ளூர் மாவட்டம் ​நதிகள் : கூவம், கொஸ்தலையாறு, ஆரணியாறு.

6. கரூர் மாவட்டம் ​நதிகள் : அமராவதி.

7. திருச்சி மாவட்டம் ​நதிகள் : காவிரி, கொள்ளிடம்.

8. பெரம்பலூர் மாவட்டம் ​நதிகள் : கொள்ளிடம்.

9. தஞ்சாவூர் மாவட்டம் ​நதிகள் : வெட்டாறு, வெண்ணாறு, கொள்ளிடம், காவிரி.

10. சிவகங்கை மாவட்டம் ​நதிகள் : வைகையாறு.

11. திருவாரூர் மாவட்டம் ​நதிகள் : பாமணியாறு, குடமுருட்டி.

12. நாகப்பட்டினம் மாவட்டம் ​நதிகள் : வெண்ணாறு, காவிரி.

13. தூத்துக்குடி மாவட்டம் ​நதிகள் : ஜம்பு நதி, மணிமுத்தாறு, தாமிரபரணி.

14. தேனி மாவட்டம் ​நதிகள் :  வைகையாறு.

15. கோயம்புத்தூர் மாவட்டம் ​நதிகள் : சிறுவாணி, அமராவதி.

16. திருநெல்வேலி மாவட்டம் ​நதிகள் : தாமிரபரணி, மணிமுத்தாறு, அடவிநயனார், உள்ளாறு, செண்பகவல்லி, கடனாநதி. கொடு முடியாறு, பச்சையாறு, நம்பியாறு, கருமேனியாறு.

17. மதுரை மாவட்டம் ​நதிகள் : பெரியாறு, வைகையாறு.

18. திண்டுக்கல் மாவட்டம் ​நதிகள் : பரப்பலாறு, வரதம்மா நதி, மருதா நதி.

19. கன்னியாகுமரி மாவட்டம் ​நதிகள் : கோதையாறு, பறளியாறு, பழையாறு.

20. இராமநாதபுரம் மாவட்டம் ​நதிகள் : குண்டாறு, வைகை.

21. தருமபுரி மாவட்டம் ​நதிகள் : தொப்பையாறு, தென்பெண்ணை, காவிரி.

22. சேலம் மாவட்டம் ​நதிகள் : வசிட்டாநதி, காவிரி.

23. விருதுநகர் மாவட்டம் ​நதிகள் : கௌசிகாறு, வைப்பாறு, குண்டாறு, அர்ஜுனாறு.

24. நாமக்கல் மாவட்டம் ​நதிகள் : உப்பாறு, நெய்யல், காவிரி.

25. ஈரோடு மாவட்டம் ​நதிகள் : பவானி, காவிரி.

இந்த தீரங்களை, சரியாக பராமரிக்காமல் அங்குள்ள மணலையும் அள்ளி, இயற்கையின் அருடகொடை நாசப்படுத்திவிட்டோம். சிறு குளங்கள் போன்ற நீர் நிலைகள் கூட காணாமல் போய்விட்டது.

தமிழக நீர்நிலைகள்: நாட்டின் விடுதலைக்கு முன் அதாவது 1947 ல் அன்றைய சென்னை மாகாணமான இன்றைய தமிழக நிலப்பரப்பில் மட்டும் 50000 நீர் நிலைகள் இருந்தன.

இன்றைக்கு பாதிக்கு குறைவாக 20000 நீர் நிலைகள் இருப்பதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றனர்.

மதுரை, சென்னை மாநகர்களைச் சுற்றி 500 ஏரிகள் - குளங்கள் காணாமல் போய்விட்டன.

இன்றைக்கு தமிழகத்தில் 18789 பொதுப்பணித்துறை ஏரிகள், 29484 கிளை வாய்க்கால்கள், 86 ஆறுகள், 200 அணைகள் என்ற புள்ளிவிபர கணக்கில் தமிழக நீர் நிலைகள் உள்ளன. நிலத்தடி நீரும் மிகவும் குறைந்து விட்டது. விவசாய சாகுபடி நிலங்களும் குறைந்துக் கொண்டே வருகின்றன. நீர் நிலைகளில் நீரில்லாமல், நிலத்தடி நீரும் குறைந்து விட்ட்தால் 1.10 கோடி ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளன.

இதற்கெல்லாம் காரணம் என்ன? ரியல் எஸ்டேட் என்று சமூக விரோதிகள் நீர் நிலைகளை கபளிகரம் செய்து தங்களுடைய சொத்துகளைப் போல விற்று கொழுத்துப் போய் விட்டனர்.

இருக்கின்ற நீர் நிலைகளை தூர் வாராமல், மதகுகளை சரிவர பழுது பார்க்காமல், நீர் நிலைகளில் கருவேல மரங்கள் வளர்வதை தடுக்காமல் இருந்த நிலையில் நீர் நிலைகளுடைய பயன்பாடு குறைந்து விட்டது.

மணல் திருடர்கள் ஆறுகளிலும் ஏரிகளிலும் உள்ள மணலை கொள்ளை அடித்த்தனால் நீர் வரத்துகளெல்லாம் குறைந்து விட்டன.

இயற்கையின் அருட்கொடையான அந்த நீர் நிலைகளை நாம் சரிவர பாதுகாக்காமலும், ஆயக்காட்டு நலன்களை புறந்தள்ளியதால் இன்றைக்கு இவ்வாறான கேடுகளை நாம் சந்திக்க வேண்டியுள்ளது.

ஜன நாயகம் என்று சொல்லிக் கொண்டு திருட்டுத் தொழிலுக்கும் துணை போகும் அரசுகளால் தான் இந்த மாதிரியான கொடூரங்கள் நடந்து வருகின்றன.

மன்னராட்சியில் கூட மக்களுடைய பங்களிப்பில் குளங்களும் நீர் நிலைகளும் வெட்டப்பட்டு மக்களாலேயே பராமரிக்கப்பட்டது. அது அக்காலம்.

இன்றைக்கு நாம் ஓட்டுப் போட்டு அனுப்பியவர்கள் இயற்கை வளங்களைச் சுரண்டக் கூடிய கொள்ளைக்கார்ர்களுக்கு ஆதரவாளர்களாக உள்ளனர்.

தாது மணல் ஆற்று மணல் யார் வீட்டு சொத்து மாதிரி மலை முழுங்கி மகாதேவர்கள் அள்ளிச் செல்வதை மக்கள் சக்தி பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது. ஏனென்றால் ஓட்டுக்குப் பணம் வாங்கி விட்டோமே…. வெற்றிப் பெற்றவர்களெல்லாம் மணல் கொள்ளைக்கார்ர்கள், ரியல் எஸ்டேட்காரர்களிடம் தானே காசை வாங்கி ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார்கள். வேறு என்ன செய்ய முடியும்...

திமுக ஸ்டாலினும்.. சாதி மத வெறி அரசியலும்...


தமிழரின் இசைக் கருவி....


தமிழர்களின் வழக்கொழிந்துப் போன பண்டைய இசைக் கருவிகளில் குட முழவமும் ஒன்றாகும். மிகப் பெரிய தமிழர் இசைக்கருவிகளில் ஒன்றான இது இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மட்டுமே எஞ்சியுள்ளது. திருவாரூர் தியாகராஜர் மற்றும் திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர் கோவில்களில் மட்டுமே இப்போது குட முழவத்தைக் காண முடியும்.வார்ப்பு வெண்கலத்தில் உருவாக்கப்பட்ட உயரமானக் குடத்தில் ஐந்து வாய்கள் இருக்கும்.வாய்கள் அனைத்தும் மான் தோல்களால் மூடப்பட்டிருக்கும்.

ஒவ்வொரு வாயிலிருந்து வெவ்வேறு விதமான பண்(இசை) எழுப்பப்படும்.குட முழவம் போலவே கேராளவிலும் பழமையான இசைக் கருவி பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் அதில் ஒரே ஒரு வாய் மட்டுமே இருக்கும். அதை மலையாளத்தில் ”மிழவு” என்றழைக்கின்றர்கள். சங்க இலக்கியங்களில் குட முழவத்தைப் பற்றி பலப் பாடல்கள் பாடப்பட்டிருக்கின்றன.

மேலும் மறவர்களின் தோல்வலிமைக்கும், பலாப்பழத்திற்கும், பனை மரத்தின் அடிக்கும், இக்கருவியை ஒப்பிட்டும் பல சங்கப் பாடல் பாடப்பட்டுள்ளன...

பழங்களும் உண்மைகளும்...


திமுக - காங்கிரஸ் கூட்டணியும் தமிழின அழிப்பும்...


ஒன்றரை லட்சம் தமிழர்களை அழித்த இனப்படுகொலை என்பது ஏதோ தெருமுனையில் நிகழும் தகராறு அல்ல....

உலகில் இனப்படுகொலையை சந்தித்த மிகச்சில இனங்களில் தமிழினமும் ஒன்று.

அதுவும் இந்த இனக்கொலை பழங்காலத்தில் நிகழவில்லை..
நம் கண் முன் நிகழ்ந்தது...

இந்த இனக்கொலைக்கு நிகழ்வதற்கு முழுமையாக துணை போனவர்கள் ஆரியர்கள், தெலுங்கர், கன்னடர், மலையாளிகள்...

நமது மெளனம் தான் இதை சாதித்தது.....

இந்த தருணத்தில் புலிகளை விமர்சிப்பதும், தமிழீழ கோரிக்கையை கொச்சைப்படுத்துவதும் ஒரே ஒரு அர்த்தத்தில் தான் புரிந்து கொள்ள முடியும்..

நாசிப்படைகளால் துப்பாக்கி முனையில் தலையில் சுடப்பட காத்திருக்கும் யூதனிடம் ” நீ அதிகம் வட்டி வாங்கி சம்பாதித்தவன், அதனால் நாங்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டோம் என்றாவது நீ புரிந்து கொண்டிருக்கிறாயா?..

உனது செயல்களை எவ்வாறு விமர்சிக்காமல் இருப்பது..

நீ விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட ஒருவரா“ என்று பேசிக்கொண்டு செல்வது போன்றது...

இனக்கொலை நிகழ்ந்த போது ஒன்றையும் புடுங்காதவர்கள்..

இனக்கொலை நிகழ்ந்த பிறகும் ஒன்றையும் நகர்த்தாதவர்கள்..

இனக்கொலை தொடர்ந்து கொண்டிருக்கும் போது மெளனம் காக்கிறவர்கள்..

இனக்கொலையால் அழிக்கபப்டும் இனத்தினை காக்க போராடியவர்கள் மீது குற்றம் சுமத்துபவர்கள்..

தமிழீழக்கோரிக்கையே அவர்கள் வரலாற்றில் இல்லை என்று எழுதுபவர்கள் என அனைவரையும் ”மனுசனா” பார்க்கும் அளவிற்கு முதிர்ச்சி எனக்கு இன்னும் வரவில்லையே என்கிற சுயவிமர்சனத்தினை ஏற்கிறேன்...

உங்களை மனிதராக மாற்றுவதைவிட ராஜபக்சேவையே மாற்றிவிடலாம் என்கிற நம்பிக்கைதான் வருகிறது.

இதோ... மீண்டும்.. திமுக - காங்கிரஸ் கூட்டணி...

அவர்களின் தேவை இங்கு குறையும் போது, உங்களுக்கு கொடுக்கும் அளவின் மதிப்பும் குறையும்...


அன்று புரியும் அடிமை என்ற வார்த்தையின் அர்த்தம்...

கருப்பட்டி...


இயற்கை உணவுப்பொருளில் சத்தான உணவுப்பொருள் கருப்பட்டி நமது முன்னோர்களுக்கு சர்க்கரை நோய் வராமல் இருந்ததற்கு இதுவும் ஒரு காரணம்...

மேலும் பூஸ்ட் கார்லிக்கஸ் போன்ற கார்பரேட் பொருட்களைவிட சத்தான பானம் கருப்பட்டி காப்பி இன்றைய விளம்பர உலகில் நாம் அதை மறந்தே போனோம்...