20/03/2019

மதுரையில் இரவு 8 மணி வரை ஓட்டுபதிவு நடக்கும்.. தேர்தல் அதிகாரி தகவல்....


தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு ஏப்ரல் 18 ம் தேதி நடக்கிறது. அதே நாளில் மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறுவதால் தேர்தல் தேதியை ஒத்திவைக்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதனை ஏற்க தேர்தல் கமிஷன் மறுத்து விட்டது. இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இன்று வெளியிட்டுள்ள தகவலில், சித்திரை திருவிழா நடப்பதால் ஏப்ரல் 18 ம் தேதி மதுரையில் மட்டும் ஓட்டுப்பதிவு நேரம் 2 மணி நேரம் நீட்டிக்கப்படுகிறது.

மதுரையில் காலை 7 மணி துவங்கி இரவு 8 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கும். தமிழகத்தின் மற்ற பகுதிகளில் காலை 7 மணிக்கு துவங்கி, மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கும்.

வழக்கமாக 5 மணி வரை மட்டும் நடத்தப்படும் ஓட்டுப்பதிவு தமிழகத்தில் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டு, மாலை 6 மணி வரை நடத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் கூறுகையில், சென்னை தனியார் கல்லூரியில் காங்.,தலைவர் ராகுல் பங்கேற்ற நிகழ்ச்சியில் தேர்தல் விதிகள் எதுவும் மீறப்படவில்லை.

கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் முறையாக அனுமதி பெறப்பட்ட பிறகு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை நடத்தப்பட்ட வாகன சோதனையில் ரூ.6.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.