05/07/2017

ஜி.எஸ்.டி (GST) வரி அமலுக்கு வந்துவிட்டது.. பிரதமர் மோடிக்கு திறந்த மடல்...


இந்தியர்கள் ஏன் வரி விதிப்பை எதிர்க்கிறார்கள் ?

கரும்புலிகள் தினம்...


இவர்கள் தான் நமது காவல் கருப்புகள்...

தலைவர் பிரபாகரன் அவர்கள் கொற்றவைக்கு கிடா பலிகொடுத்து செயல்கள் செய்பவர் என்பது தற்போது எனக்கு கிடைத்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்...

ஆணையிரவு போர் அதற்கு சாட்சி... தலைவர் பிரபாகரனுக்கு உறுதியாக அந்த ஆளும் அரசகுடும்பத்தை பற்றி தெரிந்து இருக்க வேண்டும். ஏனெனில் அவரது பேச்சுகளும் நடவடிக்கைகளும் அதை காட்டிகொடுக்கிறது மேலும் நார்வேயின் தலையீடும் அதை உறுதிப்படுத்துகிறது.

ஆனால் தலைவருக்கு தெரியாத தமிழ்இன வரலாறு எல்லாம் ஏதோ தங்களுக்கு மட்டுமே தெரிந்ததை போல பெருமைகளை பேசி பேசி இந்த இனத்தை சிலர் மலுங்கடிக்க முயலுகிறார்கள். மக்களும் அந்த பெருமைகளை தனது தனிச்சாதி பெருமையாக எடுத்துகொள்ள முயலுகிறார்கள்.

தலைவர் பிரபாகரன் எந்த ஒரு பெருமைகளையும் சொல்லி பெரும்படையை கட்டவில்லை.. மாறாக நாம் சுமந்து வந்த காயங்களையும் வரலாறுகளையும் தான் சொல்லி சொல்லி பெரும் தமிழர் இராணுவத்தை உருவாக்கினார்.. அதை ஏனோ இப்போதுள்ள ஒருசிலர் மறந்து விடுகிறார்கள்.

நீங்கள் அடுத்தவன் பெருமையை தனது என்று சொல்லுவதால் எந்த மாற்றமும் இந்த மண்ணில் நிகழப்போவது இல்லை.

ஆனால் வலியையும் காயத்தையும் சொன்னால் ஒவ்வொருவனுக்கும் வென்றாக வேண்டும் என்ற வெறிவரும்.


கரும்புலிகள் நம் உடன் இருப்பார்கள். இவர்கள் நமக்காக சிந்திய இரத்தம் வீண் போகாது...

மீத்தேன் குழாய்களில் கசிவு மீண்டும் தீ.. கதிராமங்கலத்தில் வெடித்தது மீண்டும் போராட்டம்...


மகாபாரதப் போரும் தமிழர்களும்...


மகாபாரதப் போரானது பாண்டவர்கள் ஐந்து பேருக்கும் கவுரவர்கள் நூற்றுவருக்கும் இடையில் நடந்ததாகக் கூறப்படுகிறது.

வியாசர் இயற்றிய மகாபாரத நூலின்படி இந்த பாண்டவர்கள் ஐந்து பேரும் பாண்டு மன்னனின் பிள்ளைகள் என்றும் கவுரவர்கள் நூற்றுவரும் திருதராட்டிரனின் மக்கள் என்றும் சொல்லப்படுகிறது. குருசேத்திரம் என்னும் இடத்தில் நடந்ததாகக் கூறப்படும் இந்த பெரும்போர் உண்மையிலேயே நடந்ததா? கற்பனையாகக் கூறப்படும் ஒன்றா? உண்மை என்றால் எந்த அளவிற்கு அதில் உண்மை கலந்துள்ளது என்று காண்பதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

உண்மையில் இந்த மகாபாரதப் போரானது தொல்தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து தமிழ் மன்னர்களுக்கும் வேற்றினத்தாருக்கும் இடையில் நடந்த போராகும். இந்த வேற்றினத்தாருக்கு என்ன பெயர் வைப்பது? ஏற்கெனவே ஆரியர் என்ற சொல் புழக்கத்தில் இருந்தாலும் இச்சொல் பல குழப்பங்களையே தோற்றுவித்துள்ளது. எனவே இந்த வேற்றினத்தவருக்கு 'நூற்றுவர்' என்ற பெயரையே கொள்ளலாம்.

இந்த மகாபாரதப் போரானது பல நாட்கள் நீடித்ததாகச் சொல்லப்படுகிறது. என்றால், ஒரு ஐந்து பேர் ஒருநூறு பேருடன் போரிட்டு வெல்ல பல நாட்களாகுமா?. என்ற ஐயம் மனதில் எழலாம். அதுமட்டுமின்றி, வெறும் ஐந்துபேர் ஒருநூறு பேருடன் போரிட்டு வெல்ல முடியுமா? என்ற கேள்வியும் கூடவே எழலாம். இக் கேள்விகளுக்கான விடைகளை மட்டுமின்றி இப் போரில் பங்கேற்ற அந்த ஐந்து தமிழ் மன்னர்கள் யார் யார்? என்றும் கீழே காணலாம்.

தமிழ் மன்னர்கள்:

தொல்தமிழகத்தில் இருந்ததாகக் கூறப்படும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்ற ஐவகை நிலங்களையும் ஆண்டு கொண்டிருந்த ஐந்து தமிழ் மன்னர்கள் தாம் இந்த மகாபாரதப் போருக்குத் தலைமையேற்றவர்கள் ஆவார். இவர்கள் ஐவரின் தலைமையில் பல்லாயிரக் கணக்கான தமிழ் வீரர்களும் நூற்றுவர் தலைமையில் பல்லாயிரம் எதிரி வீரர்களும் நிலம் அதிரப் பொருத 'தும்பை' வகைப் போரே மகாபாரதப் போர் ஆகும்.

இப்போரில் பங்கேற்ற ஐந்து தமிழ் மன்னர்கள் தான் பிற்காலத்தில் பாண்டவர்களாகிய தருமன், அர்ஜுனன், பீமன், சகாதேவன், நகுலன் என்று அழைக்கப்பட்டனர். இப் பெயர்கள் இம் மன்னர்களின் இயற்கைப் பெயர்கள் அல்ல; பட்டப்பெயர்கள். ஒவ்வொரு நிலத்தில் இருந்தும் வந்த இம் மன்னர்களுக்கு அவர்களின் தனிச்சிறப்பு கருதி இடப்பட்ட தமிழ்ப் பெயர்களே வடமொழியில் இவ்வாறு திரிபுற்று வழங்கப்படுகின்றன.

தருமன்:

பாண்டவர் ஐவரில் முல்லை நிலத்து மன்னனாக வந்தவனே தருமன் ஆவான். கற்பு நெறியும் ஒழுக்கமும் சான்ற முல்லை நிலத்தில் இருந்து வந்தமையால் இம் மன்னனுக்கு தருமன் என்ற பட்டப்பெயர் வழங்கப்பட்டது. தருமன் என்ற தமிழ்ப் பெயரே தர்மா என்று வடமொழியில் வழங்கப்பட்டது.

தருமன் -----> தர்மா

மேகத்தை தெய்வமாகக் கொண்டது முல்லை நாடு. இந்த மேகம் தரும் மழையோ தருமத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒரு நாட்டில் தருமம் பிறழும் போது மழையில்லாமல் போவதை நாம் அறிவோம். திருவள்ளுவரும் இக் கருத்தை பல இடங்களில் வலியுறுத்தி உள்ளார். இப்படி முல்லை நிலமானது தருமத்தையே தலைமேற்கொண்டு விளங்குவதால் இந் நாட்டில் இருந்து வந்த மன்னனுக்கு அவரது நாட்டின் சிறப்பான தருமம் பற்றி 'தருமன்' என்ற பெயரை சூட்டியிருக்கலாம்.

அர்ஜுனன்:

குறிஞ்சி நிலத்தில் இருந்து வந்த மன்னனே அர்ஜுனன் ஆவான். இவனது பட்டப்பெயர் அருஞ்சுனையன் என்பதாகும். அரிய பல சுனைகளை உடைய மலைநாட்டில் இருந்து வந்தமையால் இவன் அருஞ்சுனையன் எனப்பட்டான். இவன் சிறந்த வேடன் ஆவான். வில் எய்வதில் நிகரற்ற ஆற்றல் உடையவனாக அறியப்பட்டான். அருஞ்சுனையன் என்ற தமிழ்ப் பெயரே அர்ஜுனா என்று வடமொழியாக்கப் பட்டிருக்கலாம்.

அருஞ்சுனையன் -----> அர்ஜுனா

பீமன்:

மருத நிலத்தில் இருந்து வந்த தமிழ் மன்னனே பீமன் ஆவான். இவனது பட்டப்பெயர் பருமன் என்பதாகும். ஓங்கிய உருவமும் அதற்கேற்ப ஈடான உடலும் வலிமையும் கொண்டவனாக இருந்ததால் பெருமை கருதி பருமன் எனப்பட்டான். பருமம் உடையவன் ஆதலால் பருமன் எனப்பட்டான். இப் பருமன் என்ற தமிழ்ப் பெயரே வடமொழியில் பீமன் என்று வழங்கப்படுகிறது.

பருமன் ----> ப்ரமன் ---> பீமன் ----> பீமா

அதுமட்டுமின்றி, ஐந்து பூதங்களில் வலிமை மிக்கது காற்று ஆகும். மெல்லிய தென்றலாய் வருடிக் கொடுப்பதும் புயலாய் மாறி பொருட்களை புடைபெயர்த்து இடுவதும் காற்றே ஆகும். வலிமையின்றி தொய்ந்து கிடக்கும் ஒரு டயருக்குள் காற்றினை அடித்தவுடன் அது ஒரு வண்டியையே தாங்கி நிற்கும் ஆற்றலைப் பெறுகிறது. இந்த காற்றின் ஆற்றல் சிறப்புற்று விளங்கும் மருதநிலத்தில் இருந்து வந்தவன் என்பதாலும் காற்றைப் போல எதிரிகளை தனது உடல் வலிமையால் பந்தாட வல்ல பலசாலி மன்னன் என்பதாலும் இவனுக்கு இப் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம்.

பருமன் என்ற சொல்லில் இருந்து தோன்றிய ப்ரமன் என்ற சொல்லே பிரம்மாண்டம் (பெரியது) என்ற சொல்லுக்கும் வலிமை மிக்க சுழல் காற்றினைக் குறிக்கும் பிரமம் என்ற சொல்லுக்கும் ஆதாரமாய் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ப்ரமன் ----> பீமன் (பருமையும் வலிமையும் கொண்டவன்)
ப்ரமன் ----> ப்ரமாண்டம் (பெரியது)
ப்ரமன் ------> ப்ரமம் (வலிமையான சுழல்காற்று)

சகாதேவன்:

நெய்தல் நிலத்தில் இருந்து வந்த தமிழ் மன்னனே சகாதேவன் ஆவான். இவனது பட்டப்பெயர் சகடதேவன் ஆகும். இப் பெயரே சகாதேவ் என்று வடமொழியில் வழங்கப்படுகிறது.

சகடதேவன் ------> சகாதேவா

வண்டிச் சக்கரங்களைச் (சகடம்) செய்வதில் பெயர் பெற்றிருந்தவர்கள் இந் நிலத்து மக்கள் ஆதலால் அச் சிறப்பு கருதி இவனுக்கு இப் பெயர் ஏற்பட்டிருக்கலாம். ஐந்துநில மக்களிலும் கடலில் செல்லும் மரக்கலங்களை முதலில் கண்டறிந்தவர்கள் நெய்தல் நில மக்களே ஆவர். கடலில் இருந்து விளைவிக்கப்பட்ட உப்பினை ஏற்றிச் செல்லத் தேவையான வண்டியையும் சக்கரங்களையும் முதலில் கண்டறிந்ததும் நெய்தல் மக்களாகவே இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஏனென்றால் அதிக விளைபொருட்களை உடைய மருத நிலத்தில் பொருட்களைக் கடத்த மாடுகள் இருந்தன. முல்லை நிலத்திலோ குறிஞ்சி நிலத்திலோ வண்டிகளில் ஏற்றிக் கடத்த வேண்டிய அளவுக்குப் பொருட்பெருக்கம் இல்லை. பாலைநிலத்தில் கொள்ளையடிப்பதைத் தவிர வேலை எதுவும் இல்லை. எஞ்சியுள்ள நெய்தல் நிலத்தாருக்கு மட்டுமே பெரும் அளவிலான மீனையும் உப்பினையும் கடத்த வேண்டிய சூழல் இருந்ததால் அவர்களே வண்டிகளைக் கண்டறிந்திருக்கலாம். முதன்முதலில் கையால் தள்ளப்பட்ட இந்த வண்டிகளில் மாடுகளைப் பூட்டி இழுக்கும் வழக்கம் பின்னாளில் ஏற்பட்டிருக்க வேண்டும்.

நகுலன்:

பாலைநிலத்தில் இருந்து வந்த தமிழ் மன்னனே நகுலன் ஆவான். இவனுடைய பட்டப்பெயர் நற்குலன் என்பதாகும். இப் பெயரே நகுலா என்று வடமொழியில் வழங்கப்படுகிறது.

நற்குலன் -----> நகுலா

முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை என்னும் நான்கு நிலங்களுக்கும் தனித்தனியே சிறப்பு உண்டு. ஆனால் பாலை நிலத்து மக்களுக்கு என்ன சிறப்பு உள்ளது? பிறரது பொருட்களை கொள்ளையடிப்பதைத் தவிர அவர்கள் வேறெதுவும் அறியாதவர்கள். இருந்தாலும் தமிழருக்கு எதிரான போர் என்றதும் தானாகவே வந்து தனது ஆதரவைக் காட்டினான் இந் நிலத்து மன்னன். தொல்காப்பியர் கூறியதைப் போல இம் மன்னன் கடைக்குலத்தவனாகவே இருந்தாலும் ஆதரவு தந்து போர் புரியத் தயாராக இருந்ததால் அவனுக்கு 'நல்ல குலத்தவன்' என்ற பொருளில் 'நற்குலன்' என்ற பட்டப்பெயரைச் சூட்டியுள்ளது தமிழரின் பரந்த மனப்பான்மையைக் காட்டுகிறது.

இதுவரை கண்டவற்றை கீழ்க்கண்டவாறு தொகுத்து வழங்கலாம்.

போர் நடந்த இடம்:

இந்தியாவின் தற்போதைய அரியானா மாநிலத்தில் உள்ள குருசேத்திரம் என்ற ஊரில் தான் இப்போர் நடந்ததாகக் கூறப்படுகிறது. தொல்தமிழகப் பகுதிகளில் தமிழ் மன்னர்கள் ஆண்டு கொண்டிருந்த பொழுது ஆஃப்கானிஸ்தானில் இருந்து கைபர் போலன் கணவாய் வழியாக இந்த வேற்றினத்தாராகிய நூற்றுவர்கள் இந்தியாவிற்குள் நுழையத் தலைப்பட்டிருக்கக் கூடும். அப்பொழுது அவர்களுக்கும் தமிழ் மன்னர் ஐவருக்கும் இடையில் இந்த குருசேத்திரம் என்னும் இடத்தில் வைத்து நடந்த பெரும்போரே இந்த மகாபாரதப் போராகும். இந்த நூற்றுவர்கள், தமிழரின் போர்வீரத்தைப் பற்றி முன்னரே கேள்விப்பட்டிருக்கக் கூடும். அதனால் தான் அவர்களது படைக்கு நூறு பேர் தலைமை தாங்கி பெரும் படையாக வந்துள்ளனர்.

போர்க்காலத்தில் இப் போரில் ஈடுபட்ட தமிழ் மன்னர் ஐவரின் படைவீரர்களுக்கும் தேவையான உணவினை அளித்தான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் என்னும் தமிழ் மன்னன் என்று புறநானூறு கூறுகிறது. அப்படியென்றால் இம் மன்னனுடைய நாடும் தொல்தமிழகத்தில் தான் இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் இவனால் படைவீரர்களுக்கு குருசேத்திரத்தில் உணவளித்திருக்க முடியும். இப்போதுள்ள தமிழகத்தில் இருந்துகொண்டு இதைச் செய்திருக்க சாத்தியமில்லை.

ஆதாரங்கள்:

மேலே நாம் பல புதிய செய்திகளைக் கண்டோம். இவை உண்மை என்பதற்கு என்ன ஆதாரங்கள் உள்ளன என்று காண்போம்.

மேலே கண்ட பல புதிய செய்திகளில், பாரதப் போரில் ஈடுபட்ட தமிழ் மன்னர்கள் ஐவரின் பெயர்களில் வேண்டுமானால் மாறுபாடுகள் இருக்கலாம். ஆனால் மகாபாரதப்போர் என்பது தமிழ் மன்னர்கள் ஐவருக்கும் வேற்றினத்தார் நூற்றுவருக்கும் இடையில் நடந்த போர் தான் என்பதில் எந்தவித மாறுபாடுமில்லை. இதை உறுதிசெய்யும் வண்ணம் தமிழ் இலக்கியங்களில் இப் போர் பற்றிய குறிப்புக்களும் உள்ளன.

அலங்குஉளைப் புரவி ஐவரொடு சினைஇ
நிலம்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்

- புறநானூறு - 2

பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் பாரதப் போர் நிகழ்ந்த காலத்தில் பெருஞ்சோறு அளித்த நிகழ்ச்சியை இப்பாடல் விவரிக்கிறது.

ஈரைம் பதின்மரும் பொருதுகளத்து அவியப்
பேரமர்க் கடந்த கொடிஞ்சி நெடுந்தேர்
ஆராச் செருவின் ஐவர் போல

- பெரும்பாணாற்றுப்படை - 415-417...

பாஜக மோடியின் அதிகார துஸ்பிரயோகங்கள்...


அமித் ஷா வை விவிடுவித்ததற்காக முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி சதாசிவத்திற்கு கேரளா ஆளுநர் (Kerala Governenor) பொறுப்பு...

வருமான வரித்துறை சோதனையின் போது கிடைத்த ஆதாரத்தில் குஜராத் முதலமைச்சர்  மோடி லஞ்சம் வாங்கியதாக இருந்த டைரி யை வைத்து விசாரணை நடத்தாமல் தள்ளுபடி செய்த சவுத்திரிக்கு இந்திய கண்காணிப்பாளர் (Vigilance commissioner) பொறுப்பு...

மோடியின் தில்லுமுல்லுகள்..

நீதி டா நேர்மை டா... டிஜிட்டல் இந்தியா டா...

கன்னட பலிஜா ஈ.வே. ராமசாமி நாயக்கரும் சாதி ஒழிப்பும்...


கீழ்சாதிப் பறையனோடு நடுசாதி சூத்திரனைச் சேர்க்கலாமா - ஈ.வே.ரா ஆவேசம்...

தீண்டாமை விலக்கு என்பதும்.. கோவில் பிரவேசம் என்பதும்.. சூத்திரனைப் பறையனோடு  சேர்ப்பது தானா?

பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்பட வில்லையானால்.. அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா?

இந்த அனுமதியானது இதுவரை.. நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள்.. இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டு விட்டார்கள்.

ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது..

என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்.

நூல்: வைக்கம்போராட்ட வரலாறு
– வீரமணி...

தமிழகத்தை இரண்டாக பிரித்து.. தமிழர்களுள்ளே அடித்துக் கொள்ள வைத்து ஆட்சியை பிடிக்கலாம் என்று திருட்டு பாஜக நினைக்கிறது...


திருவள்ளுவரும் ஜிஎஸ்டி வரியும்...


பாஜக வும் சாதி வெறியும்...


தமிழ்நாட்டை தனியே பிரித்துக் கொடுத்து விட பாஜக திட்டம்...


தமிழர்கள்  நாளும் தேசிய நீரோட்டத்துக்குள் வரமாட்டார்கள். ஆகவே தமிழ்நாட்டை தமிழருக்கு  கொடுத்து விடலாம் என்று பாஜக முடிவு செய்து இருக்கிறது. இந்த முடிவை அகில இந்தியா தேசிய காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கிறது.

ஆனாலும்,  காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கன்னட சீத்தாராமையா,  பாஜகவின் இந்த முடிவை கேள்விப்பட்டு.   தமிழ்நாட்டை தமிழருக்கு கொடுப்பதனால், கர்நாடகத்தை கன்னடருக்கு கொடுத்து விடுக என்று போராட்டத்தில் இறங்கி இருக்கிறார்.

நாங்களும் தமிழர்களை போல, இந்தியாவை ஏற்க போவதில்லை , இந்தியை  ஏற்க போவதில்லை  என்று சொல்லி பெங்களூரு ரயில்வே நிலையங்களிலும், பேருந்து நிலையங்களிலும், மற்ற பொது இடங்களிலும் எழுதப்பட்டு இருக்கும் இந்தி அறிவிப்புகளை எல்லாம் அழிக்கும் போராட்டத்தில் தீவிரமாக இறங்கி இருக்கிறார்கள்...

இது தான் திமுக வின் கொள்கை...


பாஜக பொன் மொழிகள்...


எல்லாம் கற்பனையா?


ஒரு மிகப்பெரிய கோடிஸ்வரன் தான் விரைவில் இறக்கப்போவது தெரிந்து தன் உயிரையும் உடலையும் புதிப்பிக்க எண்ணுகிறான்.

தனது DNAவை கொண்டு ஒரு கருவை உருவாக்குகிறான்..

தனக்கு பிடித்த விளையாட்டை தீவிரமாக விளையாடக்கூடியவாரு அந்த கருவை வடிவமைக்கிறான்..

கரு முழு வளர்ச்சியடைந்ததும் தன் உயிரை பழைய உடலிலிருந்து பிரித்து புதிய உடலுக்குள் செலுத்துகிறான்..

புதிய உடலுடன் பிறந்து அவனுக்கு பிடித்த விளையாட்டை விளையாடி மகிழ்கிறான்.

மேலே கூறிய அனைத்தும் என் கற்பனையே.

இப்போ விசயத்துக்கு வருவோம்.

முதல் படத்தில் இருக்கும் நபர் Enzo Ferrari. உலகப்புகழ்பெற்ற Ferrari கார் கம்பெனியை உருவாக்கியர்.

இரண்டாவது படத்தில் இருக்கும் நபர் Mesut Özil ஜெர்மனியை சேர்ந்த உதை பந்தாட்ட வீரர்.

Enzo Ferrari இறந்தது 14/08/1988.
Mesut Özil பிறந்தது 15/10/1988.

மீண்டும் ஒரு முறை கூறுகிறேன் நான் மேலே கூறிய கதை கற்பனையே...

மக்களுக்கு யாரென்றே தெரியாத மக்களை சந்திக்காத ஒருவரை மத்திய அமைச்சராக்கி அவரையே மக்களின் பிரச்சனைக்கு பதில் கூற வைப்பதுதான் பிராமணியம்...


இலுமினாட்டி களால் தமிழனத்தை அழிக்க தமிழகத்தில் தலித் தலைவராக உருவாக்கப்படும் மராட்டிய கன்னட ரஜினி...



விரிவடையும் சென்னை , அரக்கோணம் வரை சென்னை பெருநகர பகுதிக்குள் வரும் - அமைச்சர் அறிவிப்பு...


1189 ச கி மீ  ஆக இருந்த சென்னை பெருநகரம்  திருவள்ளுர் , காஞ்சிபுரம் . அரக்கோணம் வரை உள்ளடக்கி  8878 ச கி மீ ஆக மாற்றப்பட்டுள்ளதாக வீட்டு வசதி துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.

பெருநகரத்திற்கான திட்ட பணிகள் அனைத்தும் இந்த ஊர்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் அறிவித்துள்ளார்...

வானதி அவர்களின் சமயோஜித புளுகும், ஆதாரபூர்வமான உண்மைகளும்...


தனக்கும், தனது கணவருக்கும் Zylog நிறுவனத்துடன் எந்த தொடர்பும் இல்லை என வானதி சீனிவாசன் கூறுவதையும், தனது கணவர் Zylog நிறுவனத்திற்கு செய்த ஊழியத்திற்காக 20000 ஷேர்கள் இலவசமாக (கூலி) வழங்கப்பட்டன என வானதி கூறியுள்ளது ஒரு அப்பட்டமான பொய் என்பதோடு வானதி குடும்பத்தார் Zylog ஊழலில் ஊறித் திளைத்தது குறித்த அலசல் இதோ.

21.5.2017 அன்று தனது முகநூல் பக்கத்தில் மக்களிடமும், தன்னை இன்னமும் நம்பிக் கொண்டிருக்கும் அப்பாவிகளை ஏமாற்றும் நோக்கில்தான் ஒரு அறிவு சிகாமணி என முன்னிறுத்துவதாக எண்ணி தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட வானதி அவர்களின் கீழே தரப்பட்டுள்ள விளக்கம் மற்றும் கூற்றுப்படியே இதை அலசி ஆராய்வோமா?.

1.      முதலில் SEBI யில் செய்யப்பட்ட பதிவின் படி  Zylog கம்பெனி ஷேர்கள் 10 ரூபாய் முக மதிப்பு கொண்டவை.  10 ரூபாய் பங்கை 5 ரூபாய் மதிப்பு என கூறியதில் வானதியின் முதல் பொய் வழக்கம் போல் துவங்குகிறது.

2.      பொதுச் சந்தையில் பங்கு வர்த்தகத்திற்கு வரும் நிறுவனம் தங்களுக்கு ஆலோசனை வழங்கும் நபருக்கெல்லாம் தான் தோன்றித்தனமாக 20000 ஷேர்களை கூலியாக தர முடியாது. SEBI மற்றும் கம்பெனி சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே தரமுடியும். ஆக எப்படி வானதியின் கணவருக்கு Zylog கம்பெனி கூலியாக 20000  க்ஷேர்களை தந்தார்கள்?? அவ்வாறு ஒதுக்கியதில் சட்ட முரண்கள் உள்ளதா என்பதை வானதி விளக்க வேண்டும்.  

3.    2007 வருடம்  ஜுலை 20ம் தேதி இந்த பங்குகளை விற்க Public Issue பதிவை துவக்கப்பட்டது. அது ஜுலை 25ம் தேதி வரை நடந்தது.  ₹ 10 பங்கின் விலை ₹ 330 முதல் ₹350 என Price band நிர்ணயிக்கப்பட்டது. இந்த பங்கு வெளியீடு சுமார் 5 மடங்கு பங்கு மூலதனத்தை பெற்றது. ஆதலால் ஒரு பங்கின் விலை Higher price band என முடிவு செய்யப்பட்டு ₹ 350 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டு  விண்ணப்பித்தோருக்கு  வழங்கப்பட்டது. அப்படி என்றால் வானதியின் கணவருக்கு  20000 பங்குகளை  70 லட்சம் ரூபாய்க்கே ஒதுக்கி இருக்க முடியும். தனது கணவர் செய்த சேவைக்கு 70 லட்சம் மதிப்புள்ள பங்குகளை தர  Zylog நிறுவனத்திற்கு கம்பெனிகள் சட்டப்படி உரிமை இல்லை என்பதால் ₹ 70 லட்சம் கொடுத்தே  பங்குகள் வாங்கப்பட்டன என்பது உறுதியாகிறது.

4.      ஒரு Public limited company தங்களது மனதிற்கு தோன்றியது போல பங்குகளை, அதுவும் 70 லட்சம் வரை மதிப்புள்ள பங்குகளை இலவசமாக, சேவையை பாராட்டி அளித்தார்கள் என கூறுவது வானதி அவர்கள் அவிழ்த்து விட்ட பொய் மூட்டைகள் என்பது உறுதியாகிறது.

5.      அந்த பங்குகள் ஆகஸ்ட்17ம் தேதி முதல் முறையாக பங்கு சந்தைகளில் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகிறது. அப்போது அதன் விலை 525 ரூபாயில் துவங்கி, 557 ரூபாய் வரை செல்கிறது. ஒருவேளை அது அவ்வாறு வழங்கப்பட்டு இருந்தால் முதலீடு செய்தவர்களை மோசடி செய்த ஷேர்களை இலவசமாகவோ கூலியாகவோ தந்தவர்கள் மீதும், பெற்றவர்கள் மீதும் வழக்காக யாரும் பதியலாம் என்பதையும் அறிவீர்கள்தானே!?.

6.      ஆக  Zylog நிறுவனத்தால் இலவசமாக வழங்க முடியாது என்றால், அதை பணம் கொடுத்து மட்டுமே வாங்க முடியும். அப்படியென்றால் 70 லட்சங்கள் கொடுத்து வாங்க வேண்டும். வானதியின்  கணவரின் அந்த வருடத்திய Financial year வருமான வரி கணக்கில் அந்த ஆண்டுகளில் காட்டிய தொகைக்கும், இதற்கும் சம்பந்தம் உண்டா என்பதையும் ஆராய வேண்டிய கடமை உள்ளது.

7.      ஒருவேளை இப்படி வந்த வருமானத்தை கணக்கில் காட்டாமல் மத்திய அரசின் வருமான வரித்துறையை மோசடி செய்திருந்தால்  ASG சு.சீனிவாசன் அவர்களின் இச்செயல் சட்டவிரோதமானதுதானே என சாமான்ய மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். கணக்கில் வாராத சொத்தை வைத்திருந்த வழக்கில் இத்தகைய குற்றம் செய்த குற்றவாளிகளை நியாயப்படி கைது செய்யலாமே ?.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், அவரது மகன் ராகுல் காந்தியும் நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை வாங்கியதில் வருமான வரித் துறையை ஏமாற்றியதற்கு வழக்கு தொடுத்துள்ள வருமான வரித் துறை வானதியின் கணவர் செய்த இந்த சட்ட விரோத செயலுக்கு ஏன்  நடவடிக்கை எடுக்கவில்லை என்று மக்கள் கேட்க மாட்டார்களா?.பிரதமர் மோடி அவர்களின் ஆட்சியில் அனைவருக்கும் ஒரே சட்டம்தான்.

என்ன செய்ய எல்லாம் தலையெழுத்து Public issue க்கும் Public limited company க்கும் வித்தியாசம் தெரியாத வானதி அவர்களை Madras Fertilisers limited கம்பெனியின் Non official டைரக்டராக நியமித்தது மிகுந்த ஆச்சரியமாகவே உள்ளது. ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கும் அந்த கம்பெனியை கம்பெனி சட்டம் குறித்த அடிப்படை அறிவு இல்லாத ஒரு நபர் எப்படி தூக்கி நிறுத்த முடியும் என்பது காலக் கொடுமைதானே!!.

Madras Fertilisers ltd கம்பெனி வெளங்கீருமா? என்பதை காலம்தான் இனி உணர்த்தும்.

நான் குற்றம் சுமத்துவதாக சொல்லி கோபம் கொள்வதை விட்டு விட்டு இவர் இப்படி சொல்கிறார் என் அருமை கட்சிக் காரர்களே!. இந்தாருங்கள் இவர் கேட்கும் ஆதாரம் இதோ என தூக்கி வீசி விட்டீர்கள் என்றால் இம்மி அளவுக்கும் என்னால் வாய்  திறக்கதான் இயலுமா?.

சிறு ஷேர் கேள்விக்கே எனக்கு பதில் சொல்ல இயலாவிடில் Zylog நிறுவனத்தின் 1000 கோடி ஊழலுக்கு தங்கள் சகோதரர் சிவகுமார் கந்தசாமி நம் பாரதப் பிரதமருக்கு எப்படிதான் பதில் கூற இயலும்?.

பல பேர் Zylog பற்றி சொல்லுங்கள் என்பதால் இதை பதிவிடுகிறேன்.
மேலும் ஒவ்வொன்றும் முக்கிய ஆதாரங்கள் சம்மந்தப்பட்டது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 செக்‌ஷன் 125 இன் படி திருமதி.வானதி சீனிவாசனாகிய நீங்கள் குற்றம் இழைத்தது 100% ஊர்ஜிதம் ஆகிறது.

மத்திய பிரதேசத்தில் இது போன்ற தவறான கணக்கில் பாஜக எம்எல்ஏ ஒருவர் மூன்று ஆண்டுகள் தேர்தலில் நிற்க கூடாது என சமீபத்தில் அறிவிக்கப்பட்டதை அறிவீர்கள்.

ஊர் வாயை மூடதான் இயலுமா?.
நெற்றிக் கண்ணை திறக்கும் நம் பிரதமரைதான் இனி ஏமாற்றவும் இயலுமா?

நவீன சுரண்டல் எது தெரியுமா?


நேரடியாக வந்து பிச்சை கேட்டால் தரமாட்டார்கள் என தெரிந்து.. GST என்ற பெயரில் கேட்கிறார்கள் அவ்வளவே..

ஒரு நாட்டின் பொருளாதாரம் பொதுமக்கள் செலுத்தும் வரி வசூலில் மட்டும் நடப்பதில்லை இது மன்னர் காலத்து நடைமுறை.

மும்மாரியும் பதும வரி சங்க வரி.. இவைகள் எல்லாமுமே மன்னர் காலத்து நடவடிக்கை..

தற்கால முறை யாதெனில்.. ஒரு நாட்டின் அஸ்திவாரத்தை ஊக்குவிப்பதே..

உதாரணமாக அமெரிக்கா வெறும் விவசாயம் செய்து தமது நாட்டை வளர்ச்சி நாடாக ஆக்க முடியாது அவனுக்கு ஆயுதங்கள் விற்பதே பிரதான தொழில்..

அரபு நாடுகளும் அப்படியே..

அரபு நாடு அரிசி ஏற்றுமதி செய்து வளர்ச்சியை கொண்டு வரமுடியாது அவனுக்கு எண்ணெய் வளங்கள் தான் நாட்டின் பிரதான சொத்து..

இப்படியாக ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு விஷயம் உண்டு அதை மெருகூட்டி மக்களை ஊக்குவித்து தமது நாட்டை வளர்ந்து எடுப்பதே சிறந்த ஆட்சியாளர்களின் பண்பு..

இதுல கொடுமை என்னவென்றால் இவைகள் எல்லாமே நமது இந்தியாவில் உண்டு விவசாயத்தை மையப்படுத்தி சென்றாலும் வளர்ச்சியை கொடுக்கலாம்..

தொழிற்சாலையை மையப்படுத்தி சென்றாலும் வளர்ச்சியை கொடுக்கலாம்..

கனிம வளங்களுக்கும் தண்ணீருக்கும் அண்டைய நாடுகளில் கெஞ்சி கொண்டு இருக்கும் எத்தனையோ நாடுகள் இன்றும் கூட உண்டு..

நமது நாட்டில் அதற்கும் பஞ்சம் இல்லையே ?

நமது நாட்டில் குறை என்று எதை கூறுவார்கள் தெரியுமா ?

மக்கள் தொகை தான்..

உண்மையில் மக்கள் தொகை அதிகமிருப்பது பெருமைக்குரிய விஷயம் ...

இதற்கு உதாரணம் சீனா..

அவனுடைய நாட்டு மக்களுக்கு தேவையான கல்வி மற்றும் வேலைவாய்ப்பை தருகிறானே..

உலகில் தாய்நாடு அல்லாமல் மற்ற நாட்டில் வேலை செய்வதில்..  இந்தியர்கள் ஏறக்குறைய முதலிடம் இருப்பார்கள் இதில் என்ன பெருமை உள்ளது இதுவே வளமே இல்லாத சின்ன நாட்டு மக்கள் என்றால் கூட சரி எனலாம்..

இந்த காலகட்டத்தில் அவர்கள் கூட தம் நாட்டு பிரஜைக்கு தேவையானவற்றை அழகாக கொடுக்கிறார்கள்.

வளங்கள் இருந்தும், மக்கள் இருந்தும் அந்த மக்களிடம் இருந்து வரியை பிடிங்கி வாங்கி கொண்டும்..

அந்த நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரமுடியவில்லை எனில் வெட்கப்பட வேண்டியது அத்துணை
அரசியல்வாதிகளும் தான்...

இந்த இலட்சணத்தில் புதிய இந்தியா வேறு அடிக்கடி பிறக்கிறது..

Road tax, Root tax, year tax, life time tax
சாலைக்கும் வரி கொடுக்கனும் வாகனம் வாங்கினாலும் வரி கொடுக்கனும் இது பத்தாதுன்னு அண்டைய மாநில வரி மற்றும் சுங்க வரி

இதெல்லாம் எவன் காசு ..

இதெல்லாம் விட இன்னும் ஒரு கொடுமை என்னவென்றால் உலக நாட்டில்
இருந்து கடன் வேறு ...

கடைசியாக..

வரி வசூலித்துதான் அரசாங்கத்தை நடத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை நாட்டின் உற்பத்தி மகசூலை அதிகரித்தாலே போதும்
இதெல்லாம் சிந்திக்காமல் தங்கள் விதியை நினைத்து வாழ்ந்து கொண்டு இருக்கும் மக்களிடையே..

இன்னும் பிடிங்க வேண்டும் என்பதற்கு பதிலாக பிச்சை எடுத்து அரசாங்கத்தை நடத்தலாம்...

தமிழர் இனம் மண் மக்கள் பண்பாடு காக்கும் போராட்டங்கள் அனைத்திலும் தமிழ் பெண்களே முன்னிலை...


கதிராமங்களத்தில் போராட்டத்தில் பெண்களே முன்னிலை..

இது தமிழ்தேசியத்தின் காலம்...

இவர் யாரென்று எத்தனை பேருக்கு தெரியும்...


தெரிந்து கொள்வதற்கு முன், இவருக்கு உங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் நீங்கள் இன்று வாழ்வதற்கு முக்கிய காரணமே இவர்தான்.

Dr.Jonas Salk, இவர் தான் போலியோ'க்கு தடுப்பு மருந்து கண்டு பிடித்தவர். சரி, எத்தனையோ நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்த பல அறிவியலாளர்கள் இருக்கும்போது இவருக்கு மட்டும் ஏன் இவ்வளவு சிறப்பு?

இவர் POLIO தடுப்பு மருந்து கண்டுபிடித்த பிறகு patented right, வாங்க மறுத்து விட்டார் (அதாவது கண்டுபிடிப்பு உரிமம். சினிமா படம் copyrights வாங்குவது போல்..) இவர் அவ்வாறு செய்திருந்தால் உலகிலேயே மிகப்பெரிய பணக்காரனாக இருந்திருப்பார்.

ஆனால் அப்படி செய்திருந்தால், பல கோடி ஏழை எளிய மக்கள் அந்த மருந்தை வாங்க முடியாமல் நோய் வாய் பட்டு இறந்திருப்பார்கள்..

பேட்டி ஒன்றில் ஏன் நீங்கள் உரிமம் பெறவில்லை எனக்கேட்டதற்கு, சூரியனுக்கு யாராவது உரிமை கொண்டாட முடியுமா என்று கேட்டார், இந்த மாமனிதர்...

பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ்... போன்றவர்களை போற்றும் இந்த உலகம், இவரை யாரென்று கூட தெரிந்து கொள்ளவில்லை என்பது கசப்பான உண்மை...

தமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas)...


இன்று உலகமே Mayan என்கிற வார்த்தையை அறிந்திருக்கிறது. Mayan Calendar-யை வைத்து உலகம் முழுவதும் பரபரப்பு கிளப்பப்படுகிறது. 2012-ல் உலகம் அழிந்திவிடலாம் என்கிற புனைவுகளும் தொலைக்காட்சி மர்மத் தொடர்களால் முன்னெடுக்கப்படுகின்றன. Mayan-கள் யார் என்றுத் தெரியாதவர்கள் கூட Mayan என்கிறப் பெயரை உச்சரிக்கிறார்கள். தமிழ் நாட்டின் முன்னோடித் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்தும் Mayan Calendar பற்றிய நிகழ்ச்சிகளை வெளிநாட்டு தொலைக்காட்சி நிறுவனங்களிடமிருந்து பிச்சையெடுத்து, தமிழ் படுத்தி கட்டைக் குரல்களில் உலக அழிவைப் பற்றி பேசின. வரலாற்று அறிவு கொஞ்சம் கூட இல்லாத நம்முடைய தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் Mayan தொடர்பான வரலாற்று நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவது அபத்தம்.

Omlec, Aztec, Mayan, Inca இவைகள் வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்த மக்களுடைய நாகரீகங்களின் பெயர்கள். இவர்களை வெள்ளையர்கள் செவ்விந்தியர்கள் என்று பொதுபட அழைத்தார்கள். ஆங்கிலேயர்கள் இவர்களை செவ்விந்தியர்கள் என்று அழைத்ததற்கு வரலாற்று பின்னனி உண்டு. கி.பி. 14, 15 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு செல்ல கடல் வழியைத் தேடிக்கொண்டிருந்தார்கள். அந்த காலகட்டத்தில் Atlantic Ocean-யை குறுக்காக கடந்து இந்தியாவிற்கு போய்விடலாம் என்று Columbus நம்பினார். அவருடைய நம்பிக்கையின்படியே அவர் Atlantic Ocean-யை கடந்தார். ஆனால் அவர் போய் சேர்ந்த கண்டம் அமெரிக்கா. ஆனால் Columbus தாம் வந்து இறங்கிய நாடு இந்தியா என்றே நம்பினார். அமெரிக்க கண்டத்தை சேர்ந்த மக்கள், இனக்குழு வழக்கப்படி தங்கள் உடம்பில் சிகப்பு சாயம் பூசிக்கொள்வது வழக்கம். இதை பார்த்த ஐரோப்பியர்கள் உடம்பில் சிகப்பு சாயம் பூசிய அந்த மக்களையும் தாங்கள் கண்டுபிடித்தது இந்தியா என்கிற நம்பிக்கையையும் ஒன்றாக்கி அந்த மக்களை செவ்ந்தியர்கள் (Red Indians) என்று அழைக்கத் தொடங்கினார்கள். Columbus-க்கு முன்பே Americo Vesbugi என்பவர் அமெரிக்க கண்டத்தை கண்டுபிடித்துவிட்டார் என்பது வேறு கதை. இவரை பெருமைபடுத்தும் விதமாகவே அந்த கண்டம் America என்று அழைக்கப்படுகிறது.

இந்த செவ்விந்தியர்கள் எப்படி இரு அமெரிக்க கண்டங்களிலும் (Green Land, Ice Land, Canada உட்பட) குடியெரினார்கள் என்பது இன்று வரை அவிழ்க்கப்படாத முடிச்சாக இருக்கிறது. ஆனால் ஒன்றை மட்டும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உருதிபடுத்தியிருக்கிறார்கள். அந்த ஒரு விசயத்தைப் பற்றிதான் நம்முடைய முன்னோடித் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு தெரியாமல் போயிற்று. வரலாற்று அறிவுக்கும் இவர்களுக்கும்தான் ஏழாம் பொறுத்தமாயிற்றே! வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்திய அந்த விசயம் செவ்விந்தியர்களுக்கும், தமிழர்களுக்கும் தொடர்பு உண்டு என்பதுதான். இதை படிப்பவர்களுக்கு, இது எதோ இட்டுகட்டிய சமாச்சாரம், வலிந்து தமிழர்களுக்கு பெருமை தேடுகிற விசயம், உலகத்தில் உள்ளவர்களையெல்லாம் தமிழர்களோடு தொடர்புபடுத்துகிற மோசடி என்று நினைக்கத் தோன்றலாம் ஆனால் உண்மை இதுதான்.

நல்லவேளை இந்த உண்மையை கண்டுபிடித்தவர்கள் வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் அதனால் நம்மவர்கள் இதை நம்பத் துணிவார்கள். நம்மவர்களுக்கு “Made in Foreign” என்றாலே ஒரு கிலுகிலுப்புதானே! தமிழ் வரலாற்று ஆராய்ச்சியாளர் ஒருவர் இந்த உண்மையை கண்டிருந்தால் அவரை பைத்தியக்காரன் என்று முத்திரை குத்தி மூலையில் தள்ளி இருப்போம். தன் இனத்து அறிஞனை மதிக்காத எந்த இனமும் உருப்பட்டதாக வரலாறு கிடையாது. இதற்கு வாழும் உதாரணம் தமிழனே.

The Conquest of Mexico and Peru என்கிற வரலாற்று நூலை எழுதிய William H. Prescott என்பவரே முதன் முதலில் செவ்விந்தியர் தமிழர் தொடர்பை பற்றி பேசுகிறார். ஐரோப்பியர்கள் எப்படி செவ்விந்தியர்களை, மெக்சிகோ மற்றும் பெரூ நாடுகள் முழுவதிலிருந்தும் ஒழித்துகட்டினார்கள் என்பதை விலாவாரியாக இந்த நூல் விவரிக்கிறது. இந்த நூலின் தொடக்கத்தில் செவ்விந்தியர்களின் பூர்வீகம் குறித்து பேசும் Prescott தமிழர் தொடர்பை அடித்து கூறுகிறார். வரலாற்று ஆராய்ச்சியாளர் இல்லையென்றாலும் சே குவேராவும் தன்னுடைய தென் அமெரிக்க பயண குறிப்புகளில் இதை பற்றி எழுதியிருக்கிறார்.

‘இன்காகள் (Incas) தென் அமெரிக்க சோழர்கள்’ என்கிற ஆராய்ச்சி நூல் ஒன்று தமிழிலும் இருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்னால் நூலகத்தில், யாரும் திரும்பி பார்க்க கூட யோசிக்கும் புத்தக அடுக்கில், தூசி தும்பட்டைகளுக்கு மத்தியிலிருந்து எடுத்து இந்த புத்தகத்தை நான் படித்திருக்கிறேன். இந்த புத்தகத்தை எழுதிய ஆராய்ச்சியாளரின் பெயரை நான் மறந்துவிட்டதின் காரணமாக என்னால் அது குறித்த தகவலை தர இயலவில்லை. இது வருத்தமளிக்க கூடி விசயம். இந்த கட்டுரை எழுதும் பொறுட்டு இந்த அறுமையான புத்தகத்தை நூலக்கத்தில் எவ்வளவோ முயன்று தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த புத்தகத்திற்கு மறுபதிப்பு இல்லை என்பதும் வேதனையான விசயம். தமிழ் அறிஞர்களின் ஆராய்ச்சி அறிவு இப்படிதான் கண்டுகொள்ள ஆளில்லாமல் காணாமல் போகிறது.

செவ்விந்தியர்களின் கலாச்சார கூறுகள் மிகத் தெளிவாக தமிழர்களின் கலாச்சார கூறுகளை உள்ளடக்கி இருக்கின்றன. தமிழர்களின் வானியியல், செவ்விந்தியர்களின் வானியியலோடு ஒத்துப்போகின்றன. செவ்விந்தியர்களின் வானியியல் நுட்பத்தை ஆராய்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், பல்லாயிரம் ஆண்டுகள் அனுபவத்தின் மூலமாகே இத்தகைய நுட்பங்களை பெற முடியும் என்றும் செவ்விந்தியர்களுக்கு இது ஒரே இரவில் கைவர சாத்தியம் இல்லையென்றும் கணிக்கிறார்கள். காரணம் செவ்விந்தியர்கள் ஒரிடத்தில் நிலைத்து வாழ்பவர்கள் கிடையாது அவர்களுடையது நாடோடி கலாச்சாரம். நாடோடி இனம் வானியியலில் தேர்ச்சி பெறுவது சாத்தியம் அற்றது. தமிழர்களுடனான தொடர்பே இவர்கள் வானியியலில் தேர்ச்சி பெறுவதற்கு உதவியிருக்கும் என்று கருதுகிறார்கள். மெசப்பத்தோமியா, எகிப்பது நாகரீகங்களின் தொடர்புகள் செவ்விந்தியர்களிடம் கிடையாது.

செவ்விந்தியர்கள் ஏறக்குறைய 3000 ஆண்டுகளாக அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்தாலும் அவர்களுடைய வாழ்க்கை, நிலையான விவசாய முறை சார்ந்த நிலவுடமை கலச்சாரம் கொண்டது கிடையாது. காடு சார்ந்த பொருட்களும், கால் நடைகளுமே அவர்களுடைய சொத்துகள். தென் அமெரிக்காவில் காடுகளிலும், வட அமெரிக்காவில் இடம் விட்டு இடம் நகரும் வகையிலுமே அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துகொண்டார்கள். அமெரிக்கா போன்ற இயற்கை வளம் நிறைந்த நாட்டில், செவ்விந்தியர்கள் நிலையான விவசாய சமூகத்தை ஏற்படுத்தாதது ஆச்சரியமான விசயம். Mel Gibson-னின் Apocalypto படம் தென் அமெரிக்க செவ்விந்தியர்களின் சமுதாய அமைப்பை மிகத் துள்ளியமாக காட்சி படுத்தியிருக்கும். Hollywood-ன் இனவெறிப் பிடித்த Cowboy படங்களில் வெள்ளையர்களுக்கும் செவ்விந்தியர்களுக்கும் இடையிலான சண்டை காட்சிகளில் வட அமெரிக்க செவ்விந்தியர்களின் சமுதாய அமைப்பை தெரிந்து கொள்ளலாம்.

ஐரோப்பியர்களுக்கு அமெரிக்கா என்று ஒரு கண்டம் இருப்பதே கி.பி. 12, 13 நூற்றாண்டுகளுக்கு பிறகுதான் தெரியவந்தது. ஆனால் 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களுக்கு அமெரிக்கா கண்டத்தோடு தொடர்பு இருந்திருக்கிறது. இது கற்பனை கதைப் போல இருந்தாலும் இதற்கு வலுவான சான்று உண்டு. தென் பசிபிக் மகாகடலில் (Pacific Ocean) ஆஸ்திரேலிய கடல் பகுதியில் கடல் அகழ்வாராய்ச்சி(Ocean Archeology) மேற்கொண்ட சமயத்தில் மிகப் பெரிய சரக்குக் கப்பல் ஒன்றை கண்டுபிடித்தார்கள். முழுவதும் மரத்தால் கட்டப்பட்டிருந்த இந்த கப்பல் வணிகப் பொருட்களுடன் முழ்கியிருக்கிறது. Carbon-Dating முறையின்படி இந்த கப்பலின் வயது இன்றிலிருந்து 2500 வருடங்களுக்கும் மேல் என்று தெரிந்திருக்கிறது. தரவுகளை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள், தமிழர்கள் வணிகத்திற்கு உபயோகப்படுத்திய கப்பல்களில் ஓன்று ஆஸ்திரேலிய கண்டத்தைத் தாண்டி அமெரிக்கா செல்லும் வழியில் பசிபிக் கடலில் முழுகியிருக்கிறது என்ற முடிவிற்கு வந்தார்கள்.

ஆராய்ச்சியார்கள் கண்ணை மூடிக்கொண்டு இந்த கப்பல் தமிழர்களுடையது என்கிற கணிப்பிற்கு வந்துவிடவில்லை. முதலில் இந்த கப்பல் எந்த மரத்தால் கட்டப்பட்டது என்று ஆராய்ந்தபோது தேக்கு மரத்தால் ஆனது என்று தெரிந்திருக்கிறது. தேக்கு தென்னிந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே கிடைக்க கூடியது. அதுமட்டும் இல்லாமல் 3000 ஆண்டுகளுக்கு முன்னால் கடல்களில் மிகப் பெரிய கப்பல்களை வைத்து வாணிபம் செய்த நாகரீகம் இரண்டே இரண்டுதான். ஒன்று தமிழர்களுடைய நாகரீகம் மற்றது எகிப்திய நாகரீகம். மூழ்கிய அந்த கப்பலின் கட்டுமான அமைப்பு எகிப்தியர்களின் சரக்கு கப்பல்களோடு பொறுந்திபோகவில்லை. மேலும் எகிப்தியர்கள் கறையோரமாகவே பயணித்து செல்லக் கூடியவர்கள். அவர்களுக்கு நடுகடலில் கப்பல் செலுத்தத் தெரியாது. அதன் காரணமாக அவர்களுடைய கப்பல்களின் கட்டுமானமும் கரையோரமாக பயணிக்க ஏற்ற வகையில்தான் இருக்கும்.

கண்டுபிடிக்கப்பட்ட கப்பலோ மிகப் பெரியதாக நிறைய சரக்குகளை கையாளக் கூடியதாக இருந்ததோடு நடுகடலில் பயணம் செய்வதற்கு ஏற்றபடியும் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கப்பலில் இருந்த சரக்குகளும் தென்னிந்தியாவில் மட்டுமே கிடைக்ககூடியவைகள். தமிழ் இலக்கியங்கள் மட்டுமே கடலில் பயணிக்கும் களங்களுக்கு உபயோகத்தின் அடிபடையில் அமைந்த பெயர்களைப் பற்றி கூறுகிறது. இவைகள் மூலம் தமிழர்களின் கடலோடும் அனுபவத்தை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் இது தமிழர்களுடைய வணிக கப்பல்தான் என்று உறுதி செய்திருக்கிறார்கள். ஆக வெள்ளையர்கள் நாடோடிகளாக சுற்றிதிரிந்த காலத்திலேயே தமிழன் ஆஸ்திரேலிய கண்டத்தையும், அமெரிக்க கண்டத்தையும் கண்டு அறிந்துவைத்திருந்தான். இந்த கண்டங்களோடு வணிகத் தொடர்புகள் அவனுக்கு இருந்திருக்கிறது. நம்முடைய சாபக்கேடு இவற்றை பற்றிய முறையான வரலாற்று ஆவணங்கள் இல்லாதது. 3000 ஆண்டுகளுக்கு முன்பே நடுகடலில் பயணிக்கத் தெரிந்த தமிழன், தன்னுடைய சிறப்புகள் பற்றி பதிய தவறியது கேடுகாலமே.

நல்லவேலை ஆரிய வேதங்கள் கடல் பயணத்தை தடை செய்திருக்கின்றன (கடல் என்றால் ஆரியர்களுக்கு பயத்தில் பேதியாகிவிடும்) இல்லை என்றால் மூழ்கிய இந்த தமிழர்களுடைய கப்பலுக்கு தலைவன்(Captain) ஒரு பிராமணன் என்று இல்லாத வரலாற்றை இருப்பதுபோல் எழுதியிருப்பார்கள். தன்னுடைய சிறப்புகள் பற்றிய விழிப்புணர்வே அற்ற தமிழனும் அதை அப்படியே நம்பிவிடுவான்.

உலக நாகரீகங்களுடனான நம்முடைய தொடர்புகளைப் பற்றி பேச இன்று நாதியில்லை. ஆங்கொன்றும் இங்கொன்றுமாக நம்முடைய சிறப்புகள் குறித்து வரலாற்று ஆதாரங்கள் கிடைத்தாலும் வெகு மக்களிடம் அதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழர்கள் தவறிவிடுகிறார்கள். தவறிவிடுகிறார்கள் என்பதை விட அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஆயிரம் ஆண்டுகளாக தொடரும் இந்த அக்கறையின்மை, நாடு இழப்புகளிலும், இனப் படுகொலைகளிலும் தமிழனை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது...

கத்தரிக்காய்...


கத்தரிக்காய் ஒரு மூலிகை என்பது பலருக்கு தெரியாது. எனவே தான் சித்தர்கள் மரியாதையுடன் பத்தியக் கறி என்று இதனை அழைக்கிறார்கள்.

நம் இலக்கியங்களில் இதுவே வழுதுணங்காய் என அழைக்கப்படுகிறது.

ஆஸ்துமா, ஈரல் நோய், காசம் போன்ற தீவிரமான நோய்களுக்கு இலக்கானவர்களுக்கு வலிமை தரக்கூடியது இது.

இதனை வற்றல்போல் செய்து நல்லெண்ணெயில் பொறித்து உண்டால் உடலுக்குத் தேவையான வெப்பசக்தி கிடைக்கும். தாது பலவீனமாகி, இல்வாழ்வில் உடல்சோர்வை போக்கும். ஈரல் வலிமை குன்றி இருந்தால், ஈரல் சோர்வைப் போக்கும்.

கத்தரிப்பழத்தை ஊசியினால் குத்தி நல்லெண்ணெயில் வதக்கி மிளகுத்தூள், உப்பு தூவி உண்டால் பல் நோய்கள், அஜீரணம் நீங்கும். வாய்வுக் கோளாறு குறையும். பித்தம் போகும். மனிதர்களுக்கு மட்டுமின்றி, மாடுகளுக்கு வரும் வயிற்று வலி, வயிற்றுப்புழுக்கள், வயிறு உப்புசம் ஆகியவற்றுக்குக் கத்தரிக்காயைத் தணலில் சுட்டுச் சிறிது பெருங்காயம் கூட்டி மாடுகளுக்குக் கட்டினால், அந்நோய்கள் விலகும்.

தோல் சம்பந்தப்பட்ட நோய் உடையவர்கள் மட்டும் கத்தரிக்காயைச் சேர்க்கக்கூடாது. தோல் நோய்க் காரணங்களை இது மிகுவிக்கும். மூர்த்தி சிறியதாயினும், கீர்த்தி பெரியது என்னும் பழமொழிக்குச் சரியான எடுத்துக்காட்டு கத்தரிக்காய். நீர்ச்சத்து அதிகம் கொண்ட கத்தரிக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, பி1, மற்றும் பி2, காணப்படுகின்றன.

வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் ஒன்று. கத்தரிக்காய் பிஞ்சாகச் சாப்பிடுவதே நல்லது. முற்றிய பெரிய காய்களைச் சாப்பிட்டால் உடம்பில் அரிப்பு ஏற்படும். குறிப்பாக, வீட்டிலே வளர்த்துப் பிஞ்சாகப் பறித்துச் சாப்பிட வேண்டிய காய்களுள் இதுவும்  ஒன்றாகும்.

முற்றிய காய்கள் உடல் வளர்ச்சிக்குப் பயன்படும். காரணம், இவற்றில் வைட்டமின் ‘ஏ’ அதிக அளவில் இருக்கிறது. ஆனால், அளவாகத்தான் பயன்படுத்தவேண்டும். இதனால் கண்பார்வைத் திறனும்  அதிகரிக்கும். உடலுக்கு சூடு தரும் காய்கறி இது. எனவே, மழை நேரத்தில் கூட  இரவு நேரத்தில் உடல் கதகதப்பாய் இருக்கக் கத்தரிக்காய் குழம்பு சமைத்து உண்ணலாம்.

கத்தரி வற்றலும் உடம்பில் சூட்டை ஏற்படுத்தும். நீர்க்கனத்தைக் குறைக்கும். உடல் பருமனைக்  குறைக்கும். உடம்பில் சொறி சிரங்கு, புண் உள்ளவர்கள் கத்தரிக்காயைத் தவிர்ப்பது  நல்லது. உடலுக்குச் சூடு தரும் காய் என்பதால் அரிப்பை உண்டு பண்ணிப் புண்கள் ஆற அதிக நாள் ஆகும். மற்றவர்கள்  மருந்தைப்போல் கத்தரிக்காயை உணவில் சேர்த்து உடலுக்கு நன்மை பெற வேண்டும். இக்காய் இளம் பிஞ்சாய் இருந்தால், சமையலில் சேர்த்து நாம் சாப்பிடும் மற்ற உணவுகள் விரைந்து  சிதைந்து  சத்தாக உடலுக்குக் கிடைக்க இது பயன்படும்.

வீட்டில் நன்கு உரமிட்டு  வளர்க்கப்படும் கத்தரிச்செடியில் உள்ள பிஞ்சு உடலுக்கு வளத்தையும் வலிமையையும் தவறாமல் தரும்....