01/08/2018
வரலாற்றை புரட்டிய சம்பவம் - 5...
தீட்டுபட்ட குளமும் மாட்டு மூத்திரமும்...
தொடர் பதிவு ஆரம்பத்தில் இருந்து படித்தால் மட்டுமே புரியும்...
தீட்டு பட்ட குளத்தை பரிகாரம் செய்தால் ஒழிய நாம் அதை பயன்படுத்த முடியாது என வீரேஸ்வர் ஆலயத்தில் உயர் மக்கள் என கூறக்கூடிய பார்பனர்கள் வேதபண்டிதர்கள் என்று எல்லாரும் முடிவு செய்து பரிகாரம் செய்வதுதான் சரி என்று முடிவெடுக்கப்பட்டது
அந்த பரிகாரம் என்ன தெரியுமா?
பசுவின் சாணி
பசு மூத்திரம்
தயிர்
மற்றும் தமது வீட்டில் உள்ள சுத்தமான தண்ணீர் (சுத்தம் என்பது தீண்டதகாதவர்கள் கை வைத்திடாத தண்ணீர்)
எல்லாவற்றையும் கரைத்து குளத்து நீரில் ஊற்றுவது தான் தீட்டு தீர்க்கும் முறை என்று முடிவெடுக்கப்பட்டது.
இதன்படி 108 பானைகளில் குளத்து நீரையும் எடுத்துவந்து மேல் உள்ள எல்லாத்தையும் அதில் கொட்டி பிராமண மந்திரங்கள் ஓதி பின்னர் பானையில் உள்ள கரைசலை குளத்தில் கொட்டப்பட்டது.
பின்னர் இனிமேல் இந்த தீண்டாதவர்கள் குடித்த நீரில் தீட்டு நீங்கியது என்று பிரகடனம் செய்யப்பட்டது,
முதலில் தன்டோரா போட்டு ஊர் முழுவதும் தீட்டை கழித்துவிட்டோம் என கூறியுள்ளனர்..
இது மக்களை நிலைகுலையச் செய்தது.
அவர்கள் மனம் வருணிக்க முடியாத அளவுக்கு புண்படுத்திற்று.
கேள்வியுற்ற அம்பேத்கரின் இதயத்தை நோகடித்தது.
கோபம் மேலோங்க..
1927 சூன் 26 தேதி மேடைப்பேச்சில் இதை குறிப்பிட்டு பேசினார்.
அதாவது சாதாரண மக்கள் கை வைத்து குடித்த குளத்தில் தீட்டு என்று மூத்திரத்தையும் சாணத்தையும் கொட்டி அசிங்கப்படுத்திய இவர்கள் மனநோயாளிகளே என பகிரங்கமாக அறிவித்தார்.
இதற்கு இவர்கள் நிச்சயமாக பதில் கூறியே ஆகவேண்டும் என்று கூறிவிட்டு..
இதை இப்படியே விடமுடியாது.
இவர்களுக்கு எதிராக சத்தியாக்கிரகம் செய்தே ஆகவேண்டும் என்று மக்கள் மத்தியில் கடும் கோபத்துடன் கூறிவிட்டார்.
அவ்வளவுதான் மக்கள் ஆரவாரம் காதை கிழித்தது.
இதை நான் செய்தே தீருவேன் அதற்கு முன்பு நான் சட்டத்தை நாடுவேன் என்று முடித்துவிட்டார்.
இப்படியாக சில மாதங்கள் போகிறது.
இறுதியில் 1927 டிசம்பர் மாதம் 25 ,26
மகத் நகரில் மீண்டும் மாநாடும் கூடவே சத்தியாக்கிரகம் நடக்கும் என்று அறிவித்தார்கள்.
மகத் நகரம் பரபரப்பை பஞ்சமிருக்காது இருந்தது .
தலைவர்கள் வேத விற்பன்னர்கள் எல்லாரும் வருவதும் போவதுமாகவே இருந்துள்ளனர்.
இந்த தடவை சரியாக திட்டம் தீட்டினார் அம்பேத்கர்,
நவம்பர் மாதம் 27 ம் தேதி சாமியார்கள் மடாதிபதிகள் மகத் நகரில் ஆலோசனை கூட்டம் நடந்தது
ஷூத்திரர்களை எப்படி அடக்குவது என்று விவாதித்துள்ளனர்.
இதை கேள்விப்பட்ட மாவட்ட குற்றவியல் நடுவர் டிசம்பர் மாதம் 7 தேதி மகத் நகருக்கு போலிஸ் படையுடன் வருகிறார்.
இரு தரப்பினரிடமும் பேசுகிறார்..
பார்பனர்கள் வேறு திட்டம் வைத்துள்ளனர்.
வெகுஜன மக்களோ நாங்கள் அம்பேத்கர் பேச்சுக்கு மட்டுமே மதிப்பளிப்போம் தயவுசெய்து எங்களிடம் பேச வேண்டாம்.
இது எங்கள் உரிமைக்கான போராட்டம் எனக் கூறி அனுப்பிவிட்டனர்.
இந்த நிலையில் தான் பிராமணர்கள் திட்டம் தீட்டியது போல்..
நீதிமன்றத்தில் ஒரு வழக்கை போடுகின்றனர்.
அதில் பெரும் மதிப்புமிக்க நபரான திவாகர் ஜோஷி என்ற நபருக்கு சொந்தமான குளத்தில் நூற்றுக்கணக்கான தீண்டதகாதவர்கள் திடீரென குளத்தில் இறங்கி குளத்தை மாசுபடுத்திவிட்டனர்.
இதன் காரணமாக எனது மனம் மிகுந்த துன்பம் கண்டுள்ளது.
அதோடு இல்லாமல் மீண்டும் எமது குளத்தை சுற்றி வளம் வருகின்றனர்.
இது எனக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மீண்டும் மாநாடு நடத்தி அம்பேத்கர் கலவரத்தை தூண்ட பார்கிறார்.
மீண்டும் இப்படி எனது குளம் தீட்டப்படுத்தினாள்.
மனுஸ்மிருதிப்படி பரிகாரம் செய்ய வேண்டும்.
பரிகாரம் செய்யும் காலம் 24 மணிநேரம் இந்த 24 மணிநேரமும் நானும் எனது சார்ந்த சமுதாயமும் தீட்டுபட்ட நீரை அருந்துவது மனுஸ்மிருதிப்படி குற்றம் ஆகவே உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில்
கூறப்பட்டுள்ளது...
ஜீ வி வைத்யா என்ற நீதிபதி கீழ்க்கண்டவாறு உத்தரவிட்டார்..
அதன் படி தனியாருக்கு சொந்தமான குளத்தில் அவர் யாருக்கு விருப்பம் உள்ளதோ அவருக்கு தான் தண்ணீரை கொடுப்பார் இது அவரது உரிமை இதில் மற்றவர்கள் பங்கு கேட்க முடியாது என்று தீர்ப்பு வழங்கினார்.
இப்போது அம்பேத்கர் சத்தியாகிரகம் செய்யும் ஏற்பாட்டையும் பெரும் மாநாடு நடத்துவது என்ற ஏற்பாட்டையும் செய்துக்கொண்டு இருந்த அவருக்கு அரசாங்கம் தற்காலிகமாக தீண்டதகாதவர்கள் குளத்தில் இறங்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது அவர் காதுக்கு வருகிறது.
ஏற்கனவே கோபத்துடன் இருந்த அம்பேத்கர் அடுத்து எடுத்த முடிவு உலக வரலாறு மறந்து விட்ட ஒன்று.
இவர்கள் செய்த மிகப்பெரிய தவறு வழக்கில் மனுஸ்மிருதியை
சேர்த்தது தான்.
என்ன ஆனது ?
நம்பமுடியாத நிகழ்வை செய்தார் அம்பேத்கர்,
பேசுவோம்...
சிலுவை யுத்தங்கள் − 11...
முதலாவது சிலுவைப் போர்
(ஹி.491−௧ி.பி.1097)..
பகுதி−1
சிலுவைப் போருக்கான காரணங்களையும் அதன் விளைவுகளையும் கடந்து வந்த பதிவுகளில் பார்த்தோம்.இப்பொழுது தான் தலைப்பினுள் நுழையவே போகின்றோம்.
மேலும், இப்போரில் வரும் சம்பவங்கள் மிகவும் மனிதாபிமானமற்ற வலிதர கூடியதாகும் பலவீனமான இதயம் படைத்தோர் இதை தொடர வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்...
இந்தப் படையை பாப்பரசரே நடத்திச் சென்றார்.அதன் தலைமைப் பொறுப்புக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களிடமும் தளபதிகளிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தன.
ஆண்கள், பெண்கள், சிறுவர்கள்,
சேவையாளா்கள் என்போரை மில்லியன் கணக்கில் உள்ளடக்கியிருந்த இப்படையில் பிரஞ்சுக்காரா்களே அதிகமாகக் காணப்பட்டனர்.இதில் 200,000 போர்வீரர்கள் இருந்தனர்.
கி.பி.1096−ம் ஆண்டு கோடை காலத்தில் ஐரோப்பாவின் பல பாகங்களிலிருந்தும் புறப்பட்ட சிலுவை வீரர்களின் குழுக்கள் ஸ்காண்டி நோபிளினூடாக முஸ்லிம் சிற்றரசான ஸல்ஜூக்கிய ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த சின்னாசியாவைச் சென்றடைந்தது.
இவ்வாறு பெரும் படைகளாகத் திரண்டு வந்த சிலுவை வீரா்கள்,போஸ்பெரஸ் அணையைக் கடந்து ஆசியாவினுள் நுழைந்து; ஸல்ஜூக்கிய சுல்தானின் தலைநகரான நிஸிபைனை நோக்கி முன்னேறினர்.
தனித்தனித் தலைவர்களின் கீழ் வந்த இப்படையினர் கி.பி 1097−ல் அந்நகரத்தை முற்றுகையிட்டனர்.அந்த நேரத்தில் ஸல்ஜூக்கிய சுல்தான் "கலீஜ் அர்ஸலான்" தனது இராஜ்ஜியத்தின் கிழக்கு எல்லையில் ஏற்பட்ட குழப்பத்தை அடக்குவதற்காகப் பெரும் படையொன்றை நடாத்திச் சென்றிருந்தார்.
சிலுவை வீரா்கள் அத்துமீறி நுழைவதைக் கேள்வியுற்றதும் உடனே நாட்டுக்குத் திரும்பிய அவர், அவர்களுடன் பெரிய மோதலில் ஈடுபட்டு, ஈடுகொடுக்க முடியாமல் மலைப்பகுதிகளை நோக்கிப் பின்வாங்கினார். பின்பு அங்கு வாழ்ந்த மக்களால் அந்நகரம் உரோம அரசனிடம் ஒப்படைக்ப்பட்டது.
பின்னர் அங்கிருந்து அன்தாகியா நகரை நோக்கி சிலுவை வீரா்கள் முன்னேறினர்.சுமார் ஒன்பது மாதகால முற்றுகையின் பின்னர் ஹி.492 (௧ி.பி.1098)ம் ஆண்டு பலாத்காரமாக நாட்டினுள் நுழைந்தனர்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து அங்கு 10,000 முஸ்லிம்களைக் கொன்றனர். தொடர்ந்தும் முஸ்லிம்கள் சொல்லொண்ணாத் துன்பங்களை எதிர் கொண்டனர்.
"குடிசை முதல் மாளிகை வரையிலான ஒவ்வொரு இருப்பிடமும் கொலைப்பீடமாக ஆக்கப்பட்டது.சிறிய தெருக்களிலும் பெரிய வீதிகளிலும் மனித இரத்தம் ஆறாக ஓடியது.
அன்தாகியா நகரில் படுகொலை செய்யப்பட்ட மனித உயிர்களின் மிகக் குறைந்த எண்ணிக்கை பத்தாயிாகும்"
என்று வரலாற்றாசிரியர் செய்யத் அமீர் அலி கூறுவது இங்கு கவனிக்கத்தக்கது..
மேலும் பல வரலாற்றுத் தகவல்களுடன் அடுத்தப் பதிவில் தொடர்கிறேன்.
- தொடரும்.....
வரலாற்றை புரட்டிப் போட்ட சம்பவம் - 4...
கோபம் கொப்பளிக்க பதில் தாக்குதல் தொடுக்க தயாராக நின்ற இளைஞர்கள் மத்தியில் அம்பேத்கர் சென்றார் .
நாம் இந்த பிரச்சினையை சட்டப்படி தீர்க்க வேண்டும்.
நீங்க இப்போது தாக்கினால் அம்பேத்கர் தலமைதாங்க மாநாடு கலவரத்தில் முடிந்தது என்று வரலாறு கூறும் நாளை நாம் மாநாடு என்று கேட்டால் அரசு அனுமதி மறுக்கவும் வாய்ப்பு உண்டு.
ஏற்கனவே உரிமைகளை இழந்து நிற்கும் நமக்கு மாநாடு போடவும் போதுக்கூட்டம் நடத்தவும் அனுமதி மறுத்தால் இதுவே பார்பனியத்தின் வெற்றி என்று பேசினார்.
கண் அசைவுக்கு காத்திருந்த இளைஞர்கள் அமைதியானார்கள்.
பின்னர் அம்பேத்கர் தமது உதவியாளர் ஆனந்த்ராவ் சித்ரேயுடன் அங்கு இருந்து கொண்டு கலவரம் பற்றிய விசாரணையை பூர்த்தி செய்து விட்டு மார்ச் 23 தேதி மும்பை திரும்பினார்.
இதன் விளைவாக காவல்துறை மஹத் வந்துசேர்ந்தது சிலரை கைது செய்தது.
அவ்வளவு பெரிய படையில் வெறும் 15 பேரை மட்டுமே கைது செய்து அதில் ஐந்து பேருக்கு மட்டும் நான்கு மாத கடுங்காவல் தண்டனை விதித்தது.
அம்பேத்கர் இதை பற்றி குறிப்பிடுகையில் ஆரியர்களின் தூண்டுதலால் உண்டான கலவரத்தில் சாதிய இந்துக்கள் மட்டுமே கைது செய்யப்பட்டார்கள் தூண்டிவிட்டவர்கள் ஒருவரையும் நான் காணவில்லை என்று கூறுகிறார்.
பம்பாய் கிராணிக்கல் என்ற பத்திரிக்கையில் அம்பேத்கருக்கு எதிராகவே செய்தி வந்தது.
1927 மார்ச் மாதம் 19 ,20 தேதிகளில் உருவான தலித் மாநாடு பெரும் கலவரத்தை ஏற்படுத்தி உள்ளது
தலித் மக்களுக்குக்கும் இந்துக்களுக்கும் கடும் மோதல் வெடித்துள்ளது.
இரு தரப்பினரும் சரமாரியாக தாக்கினர் என்று செய்தி திரிக்கப்பட்டு வெளியானது.
அதே போன்று தலித் மக்களில் 20 பேர் மட்டுமே காயம் அடைந்தனர் என்றும் எதிர் தரப்பில் பலர் பயங்கர காயம் என்றும் திசை திருப்பி செய்தியை வெளியிட்டது .
இதை உணர்ந்த அம்பேத்கர்...
களத்தில் இறங்கி உண்மைகளை வெளிச்சம் போட்டு காண்பித்தார்.
அவர் சொன்ன உண்மையில் ஒன்றுதான்.
மஹத் கிராம பார்பனர்கள் அக்கம்பக்கத்து கிராமத்திற்கு கலவரம் நடந்த அன்றே ஒரு அவசர தகவலை தெருவித்தனர் அந்த தகவல் என்னவென்றால்?
ஊர் கட்டுப்பாட்டை மீறி அம்பேத்கர் மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பி வரும் அத்துனை நபர்களையும் ஊர் தண்டிக்கவேண்டும் என்று கட்டளையிடப்பட்டது.
அம்பேத்கர் ஒரு பொதுக்கூட்டதில் கூறும் போது நான் விசாரித்த வரையில்.
மாநாட்டில் கலந்து கொண்ட அத்துணை நபர்களும் சிறுவர் பெரியவர் உட்பட அனைவருக்கும் ஊர் மக்கள் மத்தியில் சவுக்கடி கொடுக்கப்பட்டது.
இதை எதிர்தவர்களை ஊர் தள்ளிவைப்பு நடந்தேறியது என்றார்.
ஆங்காங்கே உள்ள சில நல்ல மனிதர்கள் அம்பேத்கருக்கு ஆதரவு தந்தாலும் அரசு என்னவோ வாய்மூடி மவுனமாகவே இருந்தது.
ஒரு வகையில் அம்பேத்கருக்கு வெற்றிதான் இவ்வளவு பெரிய படையை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்து இருந்து மாநாட்டை முடித்தது.
இந்த சம்பவத்திற்கு பிறகு தான் முழு அளவில் பார்பனர்களை சட்டரீதியாக எதிர்பதும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு பாடுபடுவதையும் முழு நேர வேலையாக ஆக்கிக் கொண்டார்.
சரி இவ்வளவு பிரச்சினைக்கும் வித்திட்ட மகத் குளம் நிலவரம் என்ன
ஆனது .?
அம்பேத்கர் உடன் தாழ்தப்பட்ட மக்கள் கைவைத்தும் வாய் வைத்தும் தண்ணீர் குடித்ததால் குளம் தீட்டுப்பட்டுவிட்டதாக மகத் பார்பனர்கள் கூறினார்கள்.
இது வீரேஸ்வர் கோவிலில் அவசரக்கூட்டம் நடந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு தீர்வு தீட்டை கழிப்பது தான் என்ன செய்தால் தீட்டுக்கு பரிகாரம் ஆகும் என்று வேத பண்டிதர்களை கூப்பிட்டு பரிகாரம் கேட்டது.
அவர்கள் செய்தது என்ன..?
கொடுமையிலும் கொடுமை?
இந்த பரிகாரம் தான் அம்பேத்கரை உச்சக்கட்ட கோபத்தை கிளப்பியது.
ஊர் தலித்துகளை நோகடிக்க செய்தது.
அம்பேத்கர் மறுபடியும் இந்திய வரலாற்றில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராட்டம் அல்ல சத்தியாகிரகம் செய்ய வழிவகை செய்தது.
சத்தியாகிரகமா ?
ஆம் காந்தி செய்த சத்தியாகிரகம் தானே கேள்வி பட்டு இருப்பீர்கள்.
அம்பேத்கரும் வரலாற்று சிறப்புமிக்க சத்தியாகிரகம் செய்தார்.
அப்படி என்ன பரிகாரம் செய்து கோபத்தை தூண்டினார்கள் பார்பனர்கள்.
பேசுவோம்...
கையில் காப்புக் கயிறு கட்டுவதன் அறிவியல் பார்வை...
பெரும்பாலனவர்கள் மஞ்சள், கறுப்பு, சிவப்பு நிறங்களில் கயிறுகட்டுவார்கள் நம்மை தீய சக்திகளிடமிருந்து காக்கும் ஒரு கவசமாக செயல்படும்.
பட்டுநூலினால் ஆன காப்புக்கயிறுகளை அணிவது அதிக பலன் தரும். மேலும் செம்பு, வெள்ளி, தங்கம், ஐம்பொன்னில் காப்பு செய்து போட்டு கொள்வார்கள்.
இது சிறப்பானதாக இருந்தாலும் பட்டு, தர்ப்பை, அருகம்புல் போன்றவை பிரபஞ்ச சக்திகளையும், நவக்கிரக கதிர் வீச்சுகளையும் ஈர்க்கும் தன்மை கொண்டவை அதனால் இவைகளை நூல்களாக தரித்து கைகளில் அணியலாம்.
குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் அணிய வேண்டும். பட்டு, தர்ப்பை, அருகம்புல் போன்றவை மந்திரங்களின் அதிர்வுகளை ஈர்க்கும் தன்மை கொண்டவை. எனவே இவற்றினாலான ஆசனங்களில் அமர்ந்து தியானம் செய்வது, மந்திரங்கள் சொல்வது அதிக பலன் தரும். இது போலவே காப்புக்கயிறும் மந்திரங்களை ஈர்க்கும்.
இது போலவே நாம் அணியும் காப்புக்கயிறும் மந்திரங்களின் ஆற்றலை சேமித்து நம்மைக் காக்கும் மந்திரிக்கப்பட்ட எலுமிச்சங்கனியும் நம்மைக் காக்கும் ஆற்றல் கொண்டது.
நாயுருவி, சீதெவிசெங்கழுநீர், அருகம்புல் போன்ற சில மூலிகைகளின் வேரையும் இதுபோல் மந்திர உருவேற்றி குளிசத்தில் (தாயத்து) அடைத்து அணிவார்கள். காசிக்கயிற்றில் முருகன், பிள்ளையார், சிவன், திருப்பதி போன்ற தெய்வங்களின் டொலர்களை கோர்த்து கழுத்தில் மாலையாகவும் அணிவதும் ஒரு வகையில் காப்பதே.
நாகரிகம் முற்றி வரும் இக்காலத்தில் பட்டையாக திருநீரு அணிய தயங்குபவர்கள் காசிக்கயிறு, அம்மன் கயிறு போன்ற காப்பு கயிறுகளை நாமும் அணிந்து, குழந்தைகளுக்கும் அணிவித்து காத்துக் கொள்ளுங்கள்..
சில சமுதாயங்களில் மணமகன் பெண்ணுக்கு எப்போதும் உன்னைக் காப்பேன் என்று ரசை அணிவிக்கும் சடங்குகள் உண்டு..
அறிவியல் பார்வை...
தூதுவளை செடியை நீங்கள் அறிவீர்கள். சாதாரணமாக சளித்தொல்லைகளுக்கு தூதுவளை செடியை பயன்படுத்துகிறோம். ஆனால் அதே தூதுவளை செடிக்கு காப்பு கட்டி அதாவது பட்டுநூல் கற்றாளை நூலில் மஞ்சள் கிழங்கை கட்டி அந்தக் கயிற்றால் செடியில் சுற்றிக்கட்டி 40 நாட்கள் சாடச மந்திரத்தை 108 முறை உச்சரித்து செடிக்கு தேங்காய் உடைத்து, தூப, தீபம் காட்டி அதன் பின் செடியை வேருடன் பிடுங்கி உலர்த்தி பொடி செய்து பல்வேறு அனுபானங்களில் பயன்படுத்த 40 வகையான நோய்களைக் குணமாக்கும். அதாவது அந்தக் காப்புக்கயிற்றின் மூலம் செடி மந்திரங்களை சேமிப்பதனால் 40 வகையான நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றலைப் பெற்றுவிடுகிறது.
அதுபோல நம் உடலில் பல்வேறு முடிச்சுகள் இருக்கின்றன. ஒவ்வொரு முடிச்சுகளும் உடம்பின் இயக்கத்தை ஒழுங்கு படுத்துகின்றன அந்த வகையில் இருக்கும் முக்கிய முடிச்சு பகுதி நம்முடைய மணிக்கட்டு ஆகும்.
இந்த இடத்தில்தான் இதயத்தின் இயக்க தன்மையை அறிந்து கொள்வதற்க்காக நாடி பிடித்து பார்ப்பார்கள். நம்முடைய எண்ணங்கள் மற்று மனநிலையின் அடிப்படையிலேயே நாடியின் செயல் பாடும் அமைகின்றது.
நம்முடைய மணிக்கட்டு இடத்தில் கயிறு கட்டினாலும் அல்லது காப்பு போடுவதாலும் நாடியின் இயக்கம் சீராகிறது. எண்ணங்களும், மனநிலையும் அலைபாயாமல் இருக்கும்.
கையில் காப்புக்கயிறு கட்ட வேண்டியதன் அவசியத்தை நம்மில் பலர் உணர்வதேயில்லை. ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் அணிய வேண்டும்...
அமானுஷ்யம் - லார்டு காம்பர்மெரி ஃபோட்டோ -1891...
ஆவிகள் குறித்த ஆராய்ச்சியின் மிகப்பழமையான புகைப்படம் இது.
1891ம் ஆண்டு காம்பர்மெரி அப்பே நூலகத்தில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் நாற்காலியில் ஒரு உருவம் அமர்ந்திருப்பது போல பதிவானது.
இந்தப்படத்தை பார்த்தவர்கள் அது அங்கு வாழ்ந்த லார்டு காம்பர்மெரி தான் என்று உறுதியளித்தனர்.
கூடுதல் தகவல் - இந்தப்புகைப்படம் எடுக்கப்பட்ட போது லார்டு காம்பர்மெரியின் உடல் அருகிலிருந்த சுடுகாட்டில் எரியூட்டப்பட்டுக் கொண்டிருந்திருக்கிறது...
பனை மரத்தை வெட்டினால் ஜெயில் தான்...
சில பொருளுங்க நமக்கு சுலபமா கிடைக்கிறதால, அதோட மகிமையை நாம புரிஞ்சுக்கிறதில்ல.
அந்த வரிசையில பனை மரத்துக்கு முதலிடம் கொடுக்கலாம். பனை மரம் மட்டும் இல்லாம போயிருந்தா… நம்ம தமிழ்த் தாத்தாக்கள் கண்டுணர்ந்த அறிவியல் உண்மைங்க, பயன் படுத்தின மருத்துவ முறைங்க, பாடிப் பரவசப்பட்ட இலக்கியங்க எல்லாம் காத்துலயே கரைஞ்சி போயிருக்கும்.
பனை ஓலைனு ஒண்ணு கிடைச்சதால, அதையெல்லாம் எழுதி வெச்சாங்க. அதனால தான் காலம் கடந்தும் அந்த விஷயங்கள் எல்லாம் நம்மகிட்ட வந்து சேர்ந்து, நாமளும் பயன்படுத்திட்டிருக்கோம்.
சரி, இந்த ஓலைச்சுவடி தவிர, பனை மரத்துல அதிகபட்சமா என்ன கிடைக்கும்?...
நுங்கு, பதநீர், பனைவெல்லம் இவ்வளவுதானே’னு நினைக்கலாம். ஆனா, பனை மூலமா 80 பொருட்களும், 800 விதமான பயன்களும் கிடைக்குதுங்க.
அட ஆமாங்க… ‘தால விலாசம்’ங்கிற பழங்கால நூல்ல இதைப் பத்தி விரிவா எழுதி வெச்சிருக்காங்க. பனை மரத்தை கற்பக விருட்சமா போற்றிப் பாதுகாத்த காலமும் நம்ம மண்ணுல இருந்திருக்கு.
இப்பவும் கூட இலங்கையில பனை மரத்துக்கு ராஜ மரியாதைதான். பனை மரத்தை வெட்டினா, ஜெயில்ல போட்டு அடைக்கிற சட்டம், 1993-ம் வருஷத்துல இருந்து அங்க நடைமுறையில இருக்கு.
நம்ம நாட்டுல சாதாரண மக்கள் தொடங்கி, நாட்டை ஆண்ட மன்னன் வரையிலும் பனை மரத்தோட இணைஞ்சுதான் வாழ்ந்திருக்காங்க. சேர மன்னருங்க, பனம் பூவைத்தான் மாலையா கட்டி சூடிக்குவாங்களாம். இன்னும் கூட கிராமத்துல இருக்கிற சிறு தெய்வங்களுக்கு காதோலை… பனை ஓலையில செய்து வைக்கிற பழக்கம் இருக்கு.
பழநி பஞ்சாமிர்தத்தோட சுவைக்கு முக்கிய காரணம் பனங்கல்கண்டுதாங்க. பனங்கல்கண்டு போட்டு முறைப்படி செய்யுற பஞ்சாமிர்தம், ஒரு வருஷம் வரையிலும்கூட கெட்டுப் போகாம இருக்கும். சித்தர்கள் பஞ்சாமிர்தத்தை தயாரிக்க சூத்திரமே எழுதி வைச்சிருக்காங்க. அதுல மலை வாழைப்பழம், பனங்கல்கண்டு, தேன் என பல விதமான பொருட்களை சேர்க்க சொல்லறாங்க. அந்த முறைப்படி தயாரிச்ச பஞ்சாமிர்தத்தைச் சாப்பிட்டா… நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். பழநி மலைக்குப் போயிட்டு வந்தா உடம்பு சுறுசுறுப்பா இருக்குனு சொல்றதுக்குப் பின்னாடி, பஞ்சாமிர்தமும் நிக்குதுங்க. மருத்துவக் குணம் கொண்ட, பஞ்சாமிர்தம் பழநியில கிடைக்குதுனு சொன்னா… எத்தனை பேர் போய் வாங்கி சாப்பிடுவோம். அதனாலதான், சாமி… சித்தர்… இப்படியெல்லாம் பல மாதிரி சொல்லி, பழநி பஞ்சாமிர்தத்தைச் சாப்பிட வெச்சிருக்காங்க.
தமிழ்நாட்டுல பழமையான கோயில்கள்ல தல விருட்சம் இருக்கு. தல விருட்சமா சந்தனம், மருதுனு அரிய வகை மரங்கள் இருக்கும். ஏன்னா, கோயில்ங்கிறது காலம், காலமா பாதுக்காக்கப்படற இடம். அங்க அரிய பொருளை வெச்சுட்டா, அழிஞ்சி போகாம இருக்கும். அதனாலதான், கோயில்ல தல விருட்சத்தை வளர்க்க ஆரம்பிச்சாங்க. சில கோயில்கள்ல தல விருட்சமா பனை மரம் இடம் பிடிச்சிருக்கு. இந்தக் கோயில்களுக்கு ‘தாலப்புரீஸ்வரர்’னு பேரு உண்டு. அப்படினா… சந்தன மரத்தை போலவே, பனை மரமும் மதிப்பு வாய்ந்ததுனு சொல்லித் தானே கோயில்ல வளர்த்திருப்பாங்க?.இந்த நுணுக்கம் தெரியாம, வேலியில முளைச்ச மரம் தானேனு செங்கல் சூளைக்கு வெட்டி அனுப்பிடறோம்.
பனங்காட்டு ஈஸ்வரர் என்று கூட அவர்களுக்கு மதிக்க தெரியல.
பனை மரத்தை வெறும் மரமா பார்க்காதீங்க. நம்ம முன்னோர்களோட உயர்ந்த மனசுதான், பனை மரமா வளர்ந்து நிக்குது. பனை மரத்தை நடவு செய்யும் போது, அந்த மரத்தோட பலனை நடவு செய்யறவரு அனுபவிக்க முடியாது.
காரணம், பனை மரம் பலன் கொடுக்க முப்பது, நாப்பது வருஷம் கூட ஆகலாம். அதைப்பத்தி கவலைப்படாம… எனக்கு பலன் கிடைக்காட்டா என்ன… என்னோட சந்ததிகளுக்கு இந்த மரம் உதவுமேனு சொல்லித்தான் நடவு செய்வாங்க. ஆக பனை மரம்ங்கிறது ‘தன்னலமில்லா சேவையின் சின்னம்’னு கூட சொல்லலாம். இவ்வளவு சிறப்பு கொண்ட பனை மரம்தான் நம்ம தமிழ்நாட்டு அரசாங்கத்தோட மரமா இடம் புடிச்சிருக்கு. தேசிய விலங்கான புலியைக் காப்பாத்தறதுக்கு சிறப்புத் திட்டம் போட்டிருக்கிற மாதிரி, தமிழ் மக்களோட பெருமையைச் சுமந்து நிக்குற பனையைக் காக்கவும் சிறப்புத் திட்டம் போடணும். இல்லைனா, கொஞ்ச வருஷத்துலயே புலிங்க மாதிரியே, பனைகளோட எண்ணிக்கையும் இறங்க ஆரம்பிச்சுடும்.
தென்னை ஓலையில கொட்டகை போட்டு குடியிருந்தா, குளுகுளுனு இருக்குங்கிற விஷயம், ஊரறிஞ்ச விஷயம். ஆனா, பனை ஓலை மகத்துவத்தை அதை அனுபவிச்சவங் களுக்குத்தான் தெரியும். பனை ஓலையில மேல் கூரைப் போட்டா, அந்த வீட்டுல குளிர் காலத்துல கதகதப்பா இருக்கும். வெயில் காலத்துல குளுமையா இருக்கும். தென்னை ஓலையை விட, கூடுதலா பல வருஷம் உழைக்கக் கூடியது பனை ஓலை.
இதுமட்டுமா… ஒண்ணுக்கும் உதாவதுனு கழிச்சு போட்ட, களர் நிலத்தைத் திருத்தறதுக்கு பனை ஓலையை அந்த நிலத்துல புதைச்சு வெச்சா… பொன்னு விளையுற பூமியா பலன் கொடுக்கும்!.
மண் புழு உற்பத்தி ஆகி மண்ணில் தாண்டவம் ஆடும் என்பதையாவது அறிவீர்களா?
முக சருமத்தில் துளைகளா? இதோ சரி செய்ய டிப்ஸ்...
அரிசி கழுவிய தண்ணீர் அழகு பராமரிப்பிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அரிசி கழுவிய நீரானது கூந்தலின் எலாஸ்டிசிட்டியை (Elasticity) அதிகரித்து, அதனால் முடி பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதாக ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
இதோ அதற்கான டிப்ஸ்...
அரிசியை நன்றாக 2 முறை கழுவிக்கொள்ள வேண்டும்,
பின்னர் அரிசியை சுத்தமான நீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து, அந்த நீரை வடிகட்ட வேண்டும்.
பின்னர் அந்நீரால் முகத்தையும், கூந்தலையும் பராமரிக்கலாம்.
இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் அனைத்தும் நீங்குவதோடு, சருமத்துளைகளும் அடைக்கப்படும்.
அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் சருமத் துளைகளின் வழியே சரும செல்களுக்கு கிடைத்து, சருமம் ஆரோக்கியமாகவும் பொலிவோடும் இருக்கும்.
அதற்கு தினமும் ஒவ்வொரு முறை முகத்தைக் கழுவும் போதும், அரிசி கழுவிய நீரினால் கழுவ வேண்டும்.
கூந்தல் அதிக வறட்சியுடன் மென்மையின்றி இருந்தால், அப்போது அரிசி கழுவிய நீரைக் கொண்டு கூந்தலை அலசி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் சுத்தமான குளிர்ந்த நீரில் கூந்தலை அலச வேண்டும்.
இதனால் கூந்தலின் மென்மைத்தன்மை அதிகரிக்கும். மேலும் முடியின் இயற்கை நிறமும் பாதுகாக்கப்படும்.
இந்நீரில் கார்போஹைட்ரேட்டுகளும், ஊட்டச்சத்துகளும் வளமாக நிறைந்துள்ளதால் இதனை குடிப்பதன் மூலம் உடலுக்கு ஆற்றல் கிடைக்கும்...
குருவின் ரகசியத்தை அறிய திரையை விலக்கியதால் வந்த விபரீதம்...
இவர் “பிரம்மதேவரின் கண்ணிலிருந்து தோன்றிவரும், சப்தரிஷி மண்டலத்தில் முதலாவது நட்சத்திரமாக பிரகாசிப்பவருமான அத்திரி மகரிஷிக்கும், மும்மூர்த்திகளைக் குழந்தைகளாக்கிய அனுசுயா தேவிக்கும் மகனாகப் பிறந்தவர். ஆதிசேடனின் அவதாரமாகத் தோன்றியவர். ஆதலினால் பதஞ்சலி முனிவரின் கடும் விஷமூச்சிக்காற்று பட்ட அனைத்தும் சாம்பலாகிவிடும். எனவே இவர் தம் சீடர்களுக்கு அசரீரியாகவே உபதேசம் செய்வார்.
தில்லையம்பல பஞ்சசபைகளில் ஒன்றாகிய ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து தாம் இயற்றிய “வியாகரண சூத்திரம்” என்னும் நூலை தம்முடைய சீடர்களுக்கு தாமே நேருக்கு நேராய் உபதேசிக்க வேண்டும் என்ற ஆவல் திடீரென்று உண்டாயிற்று. கௌட பாதர் என்னும் சீடர் மட்டும் பதஞ்சலி ஏவிய பணிநிமித்தமாக் வெளியே சென்றிருந்தார்.
இத்தனை காலமாக அரூவமாக உபதேசித்துவந்த பதஞ்சலி நேருக்கு நேராக உபதேசிக்க உபதேசித்து ஒரு முடிவுக்கு வந்தார். தமக்கும் தம் சீடர்களுக்கும் இடையே ஒரு கனமான திரையை போட்டுக்கொண்டார். திரையின் பின் அமர்ந்து ஆதிசேட உருவில் கடும் விஷகாற்று கிளம்ப பதஞ்சலி முனிவர் “வியாகரண சூத்திரத்தை” உபதேசித்தார். சீடர்களுக்கு பரமானந்தம். இத்தனை நாள் அசரீரியாய் கேட்ட குருவின் குரலை மிக அருகில் கேட்டு மகிழ்ந்தனர். உவகை பொங்க பலரும் தங்களுக்கு உண்டான சந்தேகங்களைக் கேட்டனர்.
வெண்கல மணியோசை போல முனிவரின் குரல் பதிலாக வந்தது.
“குருநாதரே தவத்தைப் பற்றிச் சொல்லுங்கள்” என்றார் ஒரு சீடர்.
“உடல் ஐம்புலன்கள் மூலம் வெளியில் பாய்வதைக் கட்டுப்படுத்துவதே தவம். மேலும் சுகம், துக்கம் இரண்டையும் கடக்கவும் வசப்படுத்துவும் செய்யப்படும் சடங்கே தவம்” என்றார்.
“குருதேவரே இந்த உலகில் பரகாயப் பிரவேசம் சாத்தியமா?” என்று கேட்டார் இன்னொரு சீடர்.
“பஞ்ச பூத ஜெயத்தால், அணிமா, மஹிமா, கரிமா, இலகிமா, பிராப்தி, வசித்துவம், பிரகாமியம், ஈசத்துவம் ஆகிய அஷ்டமா சித்திகளை அடையலாம். சித்தர்களுக்கு மட்டுமே இது சாத்தியம்” என்றார் பதஞ்சலி.
பதஞ்சலி முனிவரிடமிருந்து தடையின்றி வந்த கருத்து மழையில் திக்குமுக்காடிய சீடர்களுக்கு இந்த கம்பீரக் குரலுக்குரிய குருநாதரின் திருமுகத்தினை ஒரு கணம் திரை நீக்கிப் பார்த்துவிட வேண்டுமென்று ஆவலால் திரையைப் பிடித்து இழுக்க, திரை விலகியது. அடுத்த கணம் ஆதிசேடனின் ஆயிரம் முகங்களிலிருந்து வெளிப்பட்ட கடும் விஷ மூச்சுக்காற்று தீண்டி அங்கிருந்த அத்தனை சீடர்களும் எரிந்து சாம்பலாயினர்.
முனிவர் எதை நினைத்து இத்தனை நாளும் பயந்தாரோ அது நடந்து விட்டது. அது சமயம் வெளியில் சென்றிருந்த கௌடபாதர் வருவதைக் கண்ட முனிவர் அவர்மீது மூச்சுக் காற்று படாமல் இருக்க உடனே மானுட உருவத்திற்கு மாறினார். நடந்ததை யூகித்த கௌடபாதர் “என் நண்பர்கள் அனைவரும் இப்படி சாம்பலாகிவிட்டனரே” என்று கண்ணீர் வடித்தார்.
“குருவின் ரகசியத்தை அறிய திரையை விலக்கியதால் வந்த விபரீதம் இது. இத்தனைநாள் பொறுமை காத்தவர்கள் இன்று அவசரப்பட்டு விட்டார்கள். கௌடபாதரே நீர் மட்டும்தான் எனக்கு சீடனாக மிஞ்ச வேண்டும் என்பது விதி எனவே மனதைத் தேற்றிக்கொள். உனக்கு நான் சகல கலைகளையும் கற்றுத்தருகிறேன். உன்னுடைய இப்போதைய நிலைக்கு தேவை தியானம். தியானம் கைகூடியதும் சமாதிநிலை உண்டாகும்” என்றார் பதஞ்சலி.
படிப்படியாக கௌடபாதருக்கு வித்தகளணைத்தும் கற்றுக்கொடுத்தார். பதஞ்சலி முனிவர் யோகத்தில் ஆழ்ந்து மூலாதாரத்தின் கனலை எழுப்பி யோக சாதனை புரிந்த போது, குருநாதரின் ஆதிசேட அவதாரத்தின் ஆனந்த தரிசனம் கண்டு மெய்சிலிர்த்தார் கௌடபாதர்.
பதஞ்சலி முனிவர் சிதம்பரத்தில் சித்தியடைந்ததாகக் கூறப்படுகிறது...
கருப்பட்டியின் பயன்கள்...
பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால்… இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.
சீரகத்தை வறுத்து சுக்குக் கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத் தொல்லை நீங்கும்.
குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.
ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு. காபிக்கு சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால்… உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.
சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால்… சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது...
திருட்டு திராவிடர்ஸ்...
நான் : தமிழர் கழகம் என்று வைக்காமல் ஏன் திராவிடர் கழகம் என்று வைத்தார்?
திராவிடர் : தமிழர் கழகம் என்று வைத்தால் பார்ப்பான் உள்ளே வந்து விடுவான், அதனால் திராவிடர் கழகம் என்று வைத்தார்,
நான் : அப்ப கன்னடன், தெலுங்கன், மலையாளி உள்ளே வந்தால் பரவாயில்லையா என்றேன்,
திராவிடர் : நீ இனவெறிப் பிடித்து அலைகிறாய் என்றுவிட்டு கிளம்பிட்டார்,
இது போன மாதம்...
நான் : மேலே கேட்ட அதேக்கேள்வியை அப்படியே கேட்டேன்,
திராவிடர் : அன்றைய சென்னை மாகாணத்தில் கன்னடர், தெலுங்கர், மலையாளி, தமிழர்கள் என அனைவரும் ஒன்றாக இருந்தனர், அதனால் திராவிடர் கழகம் என்று வைத்தார்,
நான் : சரி அன்றைய சென்னை மாகாணத்தில் வசித்த மற்ற மொழியினருக்கு தமிழ் தெரியுமா என்று வினவினேன்,
திராவிடர் : மொழி பிரச்சனையில்லை, மொழி ஒரு கருத்து பரிமாற்றக் கருவியே தவிர வேறொன்றுக்கும் பயனில்லை என்றார்,
நான் : சரி மொழி கருத்து பரிமாற்றத்திர்க்கு மட்டுமே பயன்படுவதாக வைத்துக் கொள்வோம், மற்ற மொழியினருக்கு எவ்வாறு கருத்தை பரிமாற்றம் செய்தார் உங்க ஆசான்,
அவர்கள் மொழியில் கருத்தை பரிமாற்றம் செய்ய ஏதாவது ஏடுகள் வெளியிட்டாரா?
(உ.தா: விடுதலை, குடியரசு போன்று) என்றுக் கேட்டேன்..
திராவிடர் : நீ மொழிவெறிப் பிடித்து அலைகிறாய் என்றுவிட்டு கிளம்பிட்டார்,
இது இந்த மாதம்...
இந்த பிழைப்புக்கு மரத்தில் நாண்டுக்கிட்டு சாகுங்கடா...
இலுமினாட்டி வணங்கும் நெப்ட்டியூன்...
இலுமினாட்டிகளின் மதத்தில் Poseidon என்ற ஒரு நெப்ட்டியூன் கடவுளுண்டு, இது கடலுக்குரிய கிரெக்கக் கடவுளாகும். இதன் கையில் ஒரு மும்முனை குத்தீட்டி வைத்திருக்கும். அந்த மும்முனை குத்தீட்டி (Trident) அதிகாரத்தின் அடையாளமாகும்.
உலகத்தின் அதிகாரம் கடவுளிடமிருந்து சைத்தானுக்கு கைமாறுவதை கொண்டாடும் விதமாக கடல் தெய்வமான நெப்ட்டியூனுக்கு கடலில் நடத்தும் ஒரு சடங்காகவும் 2014-ஆம் ஆண்டில் இந்த மும்முனை குத்தீட்டி சின்னத்தை (Trident) எல்லோருடைய ஆழ்மனதிலும் பதிக்கும் விதமாகவும் அதை உலகம் முழுவதிலும் பிரபலப்படுத்துவது இவர்கள் நோக்கம்.
மக்களது ஆழ்மனதில் இதை ஏன் பதிய வைக்க வேண்டும் என்று conspiracy theorist-களைக் கேட்டால் அவர்கள் இலுமினாட்டிகளை mind manipulators என்று அழைக்கிறார்கள். இவர்கள் இன்று உலகத்தை ஆண்டு கொண்டிருப்பதே மக்களை உளவியல் ரீதியில் மூலம் mind control செய்துதானாம்.
2014-ஆம் ஆண்டில் தங்கள் மும்முனை குத்தீட்டி செய்யப்போகும் காரியத்தை மசெராட்டி என்ற புகழ்பெற்ற இத்தாலிய கார் விளம்பரத்தில் ஏற்கனவே சொல்லி விட்டார்கள்.
We have prepared, now we strike என்று தெளிவாகவே சொல்லுகிறார்கள். உடனே மும்முனை குத்தீட்டி சின்னம் பொறித்த கார் நம்மை நோக்கி சீறிப்பாய்ந்து வருகிறது. அந்த விளம்பரம் இதோ...
அடுத்து MH370-க்கு நேரப்போவதை முன்கூட்டியே 2013 இல் வெளியான Man of Steel என்ற ஹாலிவுட் படத்தில் அறிவித்து விட்டார்கள்.
ஒரு எரிந்து கொண்டிருக்கும் மும்முனை குத்தீட்டி போன்ற விண்கலம் இந்தியப் பெருங்கடலில் விழப்போவதை அந்தப் படம் முன்னறிவிக்கிறது.
மேலும் எண் 370-ஐத் தூக்கப்போகிறோம் என்பதையும் அதே படத்தில் தெளிவாகக் காட்டி விட்டார்கள்.
அதற்குப் பின்பு ஒரு ஜுலை 17-அன்று MH-17 இன்னொரு மலேசிய விமானம் உக்ரேனில் சுட்டி வீழ்த்தப்பட்டதை யாவரும் அறிவோம். இதில் ஒரு ஒற்றுமை என்னவென்றால் மசெராட்டி, உக்ரேன், மலேசிய விமானம் அனைத்துக்கும் ஒரு பொதுவான ஒற்றுமை உண்டு அதுதான் மும்முனை ஈட்டி லோகோ.
இன்னொரு கூடுதல் தகவல், உலகத்தின் ஆளுகை இறைவனிடமுருந்து சைத்தானுக்கு கைமாறியதன் அடையாளமாக இரு மும்முனை ஈட்டிகள் இன்னொரு முக்கியமான இடத்திலும் இப்போது வைக்கப்பட்டுள்ளது, அதுதான் நியூயார்க் இரட்டைக் கோபுரம் இடிக்கப்பட்டதன் நினைவாக நியூஜெர்ஸியில் எழுப்பப்பட்டிருக்கும் நினைவகம்.
மலேசியன் ஏர்லைன்சில் உள்ள இரட்டை மும்முனை குத்தீட்டிக்கும், இரட்டைக் கோபுரம் இடிக்கப்பட்டதன் நினைவாக நியூஜெர்ஸியில் வைக்கப்பட்டிருக்கும் இரட்டை மும்முனை ஈட்டிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு அது சைத்தானுக்குரிய எண்ணாகிய 33-ஐயும் குறிக்கிறது.
இன்னும் வரும் நாட்களில் நீங்கள் திரும்புமிடமெல்லாம் மும்முனை குத்தீட்டியை உலகம் முழுக்க பார்க்கலாம்.
மும்முனை குத்தீட்டியை மக்கள் ஆழ்மனதில் பதிக்கும் விதத்தில் இனி திரையுலக நாயகர்கள்கூட படத்தில் அதைத் தூக்கிக் கொண்டு ஸ்டைலாக போஸ் கொடுப்பார்கள் என்பதையும் எதிர்பார்க்கலாம்..
வெறும் இந்த ஆதாரங்களை வைத்து இதுதான் நடந்திருக்கும் என்று எப்படி நம்புவது என்று கேட்டால், இதில் எழுதியிருப்பது எதுவுமே எனது சொந்தக் கற்பனையோ கருதுக்களோ அல்ல, conspiracy theory என்பது வெவ்வேறு புள்ளிகளை இணைத்து ஒரு புரிந்து கொள்ளுதலுக்கு வருவதாகும்.
conspiracy theorists இணையத்தில் ஆங்கிலத்தில் சொல்லுவதை தமிழில் உங்கள் பார்வைக்கு கொண்டு வந்திருக்கிறேன். அவ்வளவே..
அவர்களால்கூட இதற்கு ஒருபோதும் சட்டம் ஏற்றுக்கொள்ளும் படியான ஆதாரங்களைக் காட்ட இயலாது. இது எப்போதும் கோட்பாட்டளவிலேயே தான் நிற்கும்...
உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது...
மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் ( ரூ.10 தமிழில் ௧௦) இடம் பெற்றிருக்கிறது. எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசியசு அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே.
தமிழ் எண்கள்...
1 - க, 2 - உ, 3 - ங, 4 - ச, 5 - ரு, 6 - சு, 7 - எ, 8 - அ, 9 - கூ, 10 - கo,
11 - கக, 12 - கஉ, 13 - கங, 14 - கச, 15 - கரு, 16 - கசு, 17 - கஎ, 18 - கஅ, 19 - ககூ, 20 - உo
21 - உக, 22 - உஉ, 23 - உங, 24 - உச, 25 - உரு, 26 - உசு, 27 - உஎ, 28 - உஅ, 29 - உகூ, 30 - ஙo
31 - ஙக, 32 - ஙஉ, 33 - ஙங, 34 - ஙச, 35 - ஙரு, 36 - ஙசு, 37 - ஙஎ, 38 - ஙஅ, 39 - ஙகூ, 40 - சo,
41 - சக, 42 - சஉ, 43 - சங, 44 - சச, 45 - சரு, 46 - சசு, 47 - சஎ, 48 - சஅ, 49 - சகூ, 50 - ருo
51 - ருக, 52 - ருஉ, 53 - ருங, 54 - ருச, 55 - ருரு, 56 - ருஎ, 57 - ருஎ, 58 - ருஎ, 59 - ருகூ, 60 - சுo
61 - சுக, 62 - சுஉ, 63 - சுங, 64 - சுச, 65 - சுரு, 66 - சுசு, 67 - சுஎ, 68 - சுஅ, 69 - சுகூ, 70 - எo
71 - எக, 72 - எஉ, 73 - எங, 74 - ஏசு, 75 - எரு, 76 - எசு, 77 - எஎ, 78 - எஅ, 79 - எகூ, 80 - அo
81 - அக, 82 - அஉ, 83 - அங, 84 - அச, 85 - அரு, 86 - அசு, 87 - அஎ, 88 - அஅ, 89 - அகூ, 90 - கூo
91 - கூக, 92 - கூஉ, 93- கூங, 94 - கூச, 95 - கூரு, 96 - கூசு, 97 - கூஎ, 98 - கூஅ, 99 - கூகூ, 100 - கoo
101 - கoக, 102- கoஉ, 103 - கoங, 104 - கoச, 105 - கoரு, 106 - கoசு, 107 - கoஎ, 108 - கoஅ, 109 - கoகூ, 110 - ககo
111 - ககக, 112- ககஉ, 113 - ககங, 114 - ககச, 115 - ககரு, 116 - ககசு, 117 - ககஎ, 118 - ககஅ, 119 - கககூ, 120 - கஉo
121 - கஉக, 122- கஉஉ, 123 - கஉங, 124 - கஉச, 125 - கஉரு, 126 -கஉசு, 127 - கஉஎ, 128 - கஉஅ, 129 - கஉகூ, 130 - கஙo
131 - கஙக, 132- கஙஉ, 133 - கஙங, 134 - கஙச, 135 - கஙரு, 136 - கஙசு, 137 - கஙஎ, 138 - கஙஅ, 139 - கஙகூ, 140 - கசo
141 - கசக, 142- கசஉ, 143 - கசங, 144 - கசச, 145 - கசரு, 146 - கசசு, 147 - கசஎ, 148 - கசஅ, 149 - கசகூ, 150 - கருo
151 - கருக, 152- கருஉ, 153 - கருச, 154 - கருச, 155 - கருரு, 156 - கருஎ, 157 - கருஎ, 158 - கருஅ, 159 - கருகூ, 160 - கசுo
161 - கசுக, 162- கசுஉ, 163 - கசுங, 164 - கசுச, 165 - கசுரு, 166 - கசுசு, 167 - கசுஎ, 168 - கசுஅ, 169 - கசுகூ, 170 - கஎo
171 - கஎக, 172- கஎஉ, 173 - கஎங, 174 - கஏசு, 175 - கஎரு, 176 - கஎசு, 177 - கஎஎ, 178 - கஎஅ, 179 - கஎகூ, 180 - கஅo
181 - கஅக, 182- கஅஉ, 183 - கஅங, 184 - கஅச, 185 - கஅரு, 186 - கஅசு, 187 - கஅஎ, 188 - கஅஅ, 189 - கஅகூ, 190 - ககூo
191 - ககூக, 192- ககூஉ, 193 - ககூங, 194 - ககூச, 195 - ககூரு, 196 - ககூசு, 197 - ககூஎ, 198 - ககூஅ, 199 - ககூகூ, 200 - உoo
மொரீசியசில் 30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர்...
ஜெர்மனியும் தமிழகமும்...
தற்போதைய ஜெர்மனி நாடானது ஜெர்மானிய பெரும் நிலத்தின் ஒரு பகுதி தான்.
ஆஸ்திரியாவும் லக்சம்பர்க்கும் கூட ஜெர்மானிய நாடுகள் தான்.
இது போக பிரான்சிடமும் இத்தாலியிடமும் டென்மார்க்கிடமும் ஸ்லோவேனியாவிடமும் சிறிய சிறிய ஜெர்மானிய பகுதிகள் உள்ளன.
ஸ்விட்சர்லாந்தின் முக்கால்வாசி ஜெர்மானியரே.
போலந்திலும் செக் குடியரசிலும் இருந்த ஜெர்மானியர் உலகப்போருக்குப் பிறகு விரட்டப்பட்டு விட்டனர்.
நீல நிற கோடு 1910வரை ஜெர்மானியர் வாழ்ந்த நிலப்பரப்பு.
இதை நமது சூழலுக்கு பொருத்திப் பார்த்தோமானால்...
இன்று தமிழ்நிலம் ஏழுதுண்டுகளாக சிதறுண்டு உள்ளது..
1.தமிழகம்
2.ஈழம்
3.கிழக்கு கேரளம்
4.தென் கன்னடம்
5.தென் ஆந்திரம்
6.புதுச்சேரி
7.மலையகம்
ஐரோப்பாவிற்கு ஜெர்மானியர் எப்படியோ அதேபோல இந்திய துணை கண்டத்திற்கு தமிழர்.
ஒருவேளை அண்டை மாநிலங்களிடம் இழந்த பகுதிகளை மீட்க முடியாது போனாலும்..
ஈழம் தனிநாடாக ஆனாலும்..
தமிழகம் மட்டும் தன் வலிமையால் தனி நாடாகி மாபெரும் வல்லரசாக உருவெடுக்க முடியும்...
குதம்பைச் சித்தர்...
குதம்பை என்பது பெண்களின் காதிலே அணியும் தொங்கட்டான் நகை. இவர் பாடல்களில் குதம்பை அணிந்த பெண்ணை குதம்பாய் என்று அழைக்கிறார். இதனால் இவரை குதம்பைச் சித்தர் என்றே அனைவரும் அழைத்தார்கள். இவர் 32 பாடல்களைப் பாடியுள்ளார்.
யாதவ குலத்தில் கோபாலர் தம்பதிகளுக்கு ஆடிமாத விசாக நட்சத்திரத்தன்ற்ய் மிக அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அது ஆண் குழந்தையாக இருந்தாலும் அதன் அழகு பெண் குழந்தையைப் போலிருக்கவே அக்குழந்தையின் காதில் அசைந்தாடும் குதம்பை என்னும் நகையை அணிவித்தாள் குழந்தையின் தாய். குதம்பையின் தினசரி நிகழ்ச்சி காலையும், மாலையும் கோவிலுக்கு சென்று இறைவனை வணங்குவது தான்.
குதம்பைச் சித்தருக்கு பதினாறு வயதாகும் போது அவருக்கு ஞான உபதேசம் செய்வதற்காக மாதவர் ஒருவர் வந்தார். வந்தவரை வணங்கி நின்றார் குதம்பை. மாதவர் குதம்பைக்கு அருளுபதேசம் செய்தார். “மாதவ குருவே உபதேசம் செய்த உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன்” என்றார் குதம்பை மாதவரோ குதம்பையை மெல்ல தடவிக்கொடுத்து “குதம்பை நீ போன பிறவியில் உய்வடையும் பொடுட்டு கடுந்தவம் செய்தாய். ஆனால் தவம் முழுமை அடையும் முன்பே உன் காலம் முடிந்து நீ இறந்து போனாய். அந்தத் தவத்தின் பயனால் தான் நீ என்னிடம் உபதேசம் பெற்றாய். நான் உபதேசித்ததை அனுபவத்தில் கொண்டு வெற்றி பெறுவாய்” என்றார்.
ஒரு நாள் இரவு குதம்பைச் சித்தர் யாருக்கும் தெரியாமல் எழுந்து ஒரு காட்டிற்குள் புகுந்தார். அங்கிருந்த ஒரு மரப்பொந்தில் நுழைந்து தவ நிலையில் ஆழ்ந்தார். தம் அனுபவங்களைப் பாடல்களாக எழுதினார். அந்தப் பாடல்கள் தான் குதம்பைச் சித்தர் பாடல்களாக உள்ளன...
நலமுடன் வாழ எளிய பாட்டி வைத்தியம்...
1. நெஞ்சு சளிக்கு தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
2. தலைவலிக்கு ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
3. தொண்டை கரகரப்புசுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
4. தொடர் விக்கல்uக்கு நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
5. வாய் நாற்றம் சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.
6. உதட்டு வெடிப்புக்கு கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.
7. அஜீரணம் ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
8. குடல்புண்க்கு மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.
9. வாயு தொல்லைக்கு வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
10. வயிற்று வலிக்கு வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
11. மலச்சிக்கல் செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.
12. சீதபேதிமலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.
13. பித்த வெடிப்புக்கு கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
14. மூச்சுப்பிடிப்புக்கு சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.
15. சரும நோய்க்கு கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
16. தேமல் வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.
17. மூலம் கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.
18. தீப்புண் வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.
19. மூக்கடைப்புக்கு ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
20. வரட்டு இருமல் எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.
21. நரம்பு சுண்டி இழுத்தால் ஊற வைத்து, முளைக்க வைத்ததானிய வகைகளை சாப்பிட்டால் இந்த நோய் வராது. வாரத்தில் 3 தடவைகளாவது சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் இருக்கும். நரம்பு நாளங்களை சாந்தப்படுத்தும் குணம் தேனுக்கு உடையது.
22. பல்லில் புழுக்கள் சிறிது வேப்பங்கொழுந்து எடுத்து, நன்றாக பற்களின் எல்லாப் பகுதியிலும் படும்படி மென்று சாப்பிட வேண்டும்.
23. உடல் பருமன் குறைய வெங்காயத்தில் கொழுப்புச் சத்து குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் உணவில் தாராளமாக வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்.
24. தேன் உடல் பருமனைக் குறைக்கும்.தேனுடன் குளிர்ந்த தண்ணீரை கலந்து அருந்தினால் உடல் பருமன் குறையும்.
25. வெண்மையான பற்களைப் பெற ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பின்பு வாயை நன்றாகக் கழுவ வேண்டும். தூங்கப் போகும் முன்பும், தூங்கி எழுந்த பின்பும் பல் தேய்க்க வேண்டும். பல்தேய்த்துக் கழுவும் போது ஈறுகளைத் தேய்த்துத் தடவி கழுவ வேண்டும். இதனால் பற்களும் ஈறுகளும் வலுவடையும்.
26. கணைச் சூடு குறைய சூட்டினால் சில குழந்தைகள் உடல் மெலிந்து நெஞ்சுக் கூடு வளர்ச்சி இன்றி மெலிவாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு தினமும் ஆட்டுப்பாலில் 2 தேக்கரண்டி தேன் கலந்து கொடுத்தால் கணைச் சூடு குறைந்து உடல் தேறிவிடும்.
27. வலுவான பற்கள் வேப்பங்குச்சியினால் பல் துலக்கினால் பற்கள் நல்ல ஆரோக்கியமாக இருக்கும். முருங்கைக்காயை நறுக்கி, பொரியல் செய்து அல்லது சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் பற்கள் வலுவடையும். தினமும் சாப்பிட்டால் வயோதிகத்திலும் பற்கள் நன்கு உறுதியாக இருக்கும்.
28. உடல் சூடு ரோஜா இதழ்கள், கல்கண்டு, தேன் ஆகியவற்றைக் கலந்து தயாரிக்கும் குல்கந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.
29. கற்கண்டு சாப்பிடுவதால் இரத்தம் சுத்தமாகும். கண்களில் ஏற்படும் திரை அகன்று, கண்னொளி பெருகும். கண் சிவப்பை மாற்றும். வெண்ணெய்யில் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் பெருக்கும்.
30. கக்குவான் இருமல் வெற்றிலைச் சாறுடன், தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு வரும் கக்குவான் இருமல் குணமாகும்.
31. உள்நாக்கு வளர்ச்சி உப்பு, தயிர், வெங்காயக் கலவை உள்நாக்கு வளர்ச்சியைத் தடுக்கும்.
32. இரத்தசோகை நோய்க்கு தேன் ஏற்ற மருந்து. இதற்குக் காரணம் அதில் இரும்புச்சத்து இருப்பதாகும்.ஆட்டுப் பாலை வடிகட்டி, தேன் கலந்து பருகினால் உடல் வலிமை ஏற்படும். உடலுக்குத் தேவையான இரத்தத்தை ஊறச் செய்யும்.
33. உடலில் தேமல் மறைய தொடர்ந்து மருந்து எடுத்துக்கொண்டால் மட்டுமே குணமாகும்.
வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
எலுமிச்சம் பழச் சாற்றை முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும்.
ஆடு தீண்டாப் பாளையை, தேங்காய் எண்ணெய்யில் போட்டு, 1 வாரம் வெய்யிலில் வைத்த பிறகு தேமல் இருக்குமிடத்தில் தடவினால் தேமல் மறையும்.
மோரில் முள்ளங்கியை அரைத்து இந்தக் கலவையை முகத்தில் தேய்த்தால் தேமல் மறையும்.
1 துண்டு வசம்புடன் பூவாரம்பட்டை சேர்த்து அரைத்து இரவில் பற்றுப் போட்டு வந்தால் நாளடைவில் தேமல் குணமாகும்.
குறிப்பு: சோப்பு போட்டுக் குளிக்கக் கூடாது.
34. மலேரியாவால் தாக்கப்பட்டவடர்கள் தினமும் துளசி இலையை சிறிதளவு காலையில் வெறும் வயிற்றில் மென்று விழுங்கி வந்தால் ஓரிரு நாட்களில் நோய் நீங்கிவிடும்.
மலேரியா போன்ற நோய்கள் பரவக் கொசுக்களே மூல காரணம். துளசியின் வாடை பட்டால் கொசுக்கள் அவ்விடத்திற்கு வராது. கொசு தொல்லையை நீக்க வீட்டில் துளசி செடிகளை வளர்க்கலாம்.
35. தீக்காயங்கள் பட்டவுடன் முதலில் தண்ணீரில் கழுவ வேண்டும்.
தீப்பட்ட புண்ணின் மேல் தொடர்ந்து தேன் தடவி வந்தால் புண் குணமாகி விடும். தீக்காயங்களை ஆற்றுவதற்கு தேன் உகந்தது. வலி நீங்கும். தீக்கொப்புளங்கள் ஏற்படாமல் தடுக்கும்.
முட்டைக்கோஸ் இலைகளை சிறுசிறு துண்டுகளாக்கி, முட்டையில் உள்ள வெள்ளைக் கருவுடன் கலந்து தீக்காயங்கள், புண்கள், காயங்கள் மீது தடவினால் விரைவான குணம் கிடைக்கும்.
தீப்புண்களுக்கு முட்டையின் வெள்ளைக் கருவைத் தடவி குணப்படுத்தலாம்...
அமானுஷ்யம் - HMS டேடலஸ் ஃபோட்டோ – 1919...
ஆவிகளின் நடமாட்டத்திற்கு மற்றுமொரு கிளாஸிக் உதாரணமாய்த் திகழும் இந்தப்படம் HMS டேடலஸ் என்ற ராயல் நேவிக்கப்பலில் எடுக்கப்பட்ட குரூப் ஃபோட்டோ.
இந்தப் போட்டாவில் பின்ணனியில் தெரியும் அந்த முகத்துக்குச் சொந்தக்காரர் ஃப்ரெட்டி ஜாக்சன் என்ற மெக்கானிக்.
கூடுதல் தகவல் - இந்த ஃபோட்டோ எடுக்கப்பட்ட இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் அதேக் கப்பலில் அந்த மெக்கானிக் ஒரு விபத்தில் இறந்திருக்கிறார்.
அதுவுமில்லாமல் இது போன்ற கேளிக்கைகளில் தவறாமல் கலந்து கொள்வது அவரது சுபாவமாம்...
காவேரி மருத்துவமனை முன்பு திரண்டுள்ள தொண்டர்கள் கூட்டத்தில் கொள்ளையர்கள் அட்டகாசம் கொடிகட்டி பறக்கிறது...
திமுக தலைவர் கருணாநிதி சென்னை ஆழ்வார்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் ஏராளமான திமுகவினர் மற்றும் பொதுமக்கள், ஊடகங்கள் குவிந்துள்ளன...
இந்த கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி செல்போன்கள், மணிபர்ஸ், பணம் உள்ளிட்டவற்றை லாவகமாக திருடும் கொள்ளை கும்பல் உள்ளே புகுந்து அட்டகாசம் செய்து வருகிறார்கள்...
சென்னை புதுப்பேட்டையைச் சேர்ந்த 48 வயது மதிக்கத்தக்க முத்துக்குமார் என்ற கொள்ளையன் இருபது நபர்களிடம் சுமார் 60 ஆயிரம் ரூபாய் மற்றும் செல்போன் பறிப்பு. பாதிக்கப்பட்டவர்கள் பிடித்து போலீசாரிம் ஓப்படைப்பு...
திருவரங்கனின் தரிசனம் கண்ட சட்டைமுனி சித்தர்...
இவர் ஆவணி மாதம் மிருகசீரிடம் மூன்றாம் பாதத்தில் பிறந்தார் என்று கூறும் போகர் இவரைத் தமது சீடராக அறிமுகப்படுத்தி இவரது வரலாற்றையும் தெரிவிக்கிறார்.
சட்டைமுனியின் பெற்றோர் விவசாயக் கூலிகளாகத் தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர். சட்டைமுனி கோவில்களில் தட்டையேந்தி யாசகம் பெற்று தாய்தந்தையர்க்கு உதவி வந்தார்.
ஒருநாள் கோவில் வாசலில் பிச்சைக்காக நின்று கொண்டிருந்த போது வடநாட்டிலிருந்து வந்த சங்கு பூண்ட ஒரு சித்தரைக் கண்டார். அவரிடம் ஏதோ ஒரு அபூர்வ சக்தி இருப்பதாக உணர்ந்த சட்டைமுனி அவருடனே கிளம்பிவிட்டார்.
போகருடைய சீடராக வாழ்ந்த காலத்தில் கொங்கணர், கருவூரார் முதலான பல சித்தர்களின் தொடர்பு அவருக்கு ஏற்பட்டது.
இவர் ஞானத்தை மனித குலம் முழுமைக்கும் உபதேசிக்க முயன்றார்.
தம் சாதனைகளை எல்லோரும் புரிந்து கொள்ளும் வண்ணம் நேரிடையாக எழுத ஆரம்பித்தார். புரியாத பரிபாஷையில் எழுதாமல் வெளிப்படையாக எழுதுவதைத் தடை செய்வதற்காக சித்தர்கள், சிவபெருமானிடம் முறையிட்டனர். சட்டைமுனியின் நூல்களை குகையில் வைத்து பாதுகாக்கும்படி சிவபெருமான் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.
சட்டைமுனி ஊர் ஊராகச் சுற்றி வரும் காலத்தில் தூரத்திலிருந்து தெரியும் திருவரங்கர் கோவில் கலசங்களை கண்டு பேரானந்தம் கொண்டார்.
இக்கோவில் நடைசாத்துவதற்குள் அரங்கனை தரிசித்து விட வேண்டுமென அவலாக நடந்தார். ஆயினும் பூசை முடிந்து கோவில் கதவுகள் அடைக்கக்ப்பட்டு விட்டன.
ஏமாற்றத்துடன் சட்டைமுனி, கோவில் வாசலில் நின்று அரங்கா. அரங்கா. அரங்கா. என்று கத்தினார்.
உடனே கதவுகள் தாமாகத் திறந்தன. அரங்கனின் அற்புத தரிசனம் சட்டைமுனிக்குக் கிடைத்தது.
அரங்கனின் ஆபரணங்கள் ஒவ்வொன்றாக கழன்று சட்டைமுனியின் மேல் வந்து சேர்ந்தன. சட்டைமுனி அரங்கா என்று கதறிய சப்தம் கேட்டு திரண்டு வந்த ஊர்மக்கள் வியந்து நின்றனர்.
அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இறைவனுடன் ஒன்றாய்க் கலந்தார் சட்டைமுனி.
சித்தரின் ஜீவ சமாதி இன்றும் திருவரங்கத்தில் இருப்பதாய் கூறப்படுகிறது.
இத்தகவல் மரு.ச.உத்தமராசன் எழுதிய “தோற்ற்க் கிராம ஆராய்ச்சியும், சித்த மருத்துவ வரலாறும்” என்ற நூலில் காணப்படுகிறது...
வாஸ்து குறைபோக்கும் வன்னி மரம்...
மண்ணில் உள்ள எல்லா விதமான தோஷங்களையும் நீக்க வல்லது வன்னி மரம்..
உங்கள் வீட்டில் நான்கு மூலையிலும் வன்னி மர குச்சியை அம்மாவாசை தினத்தில் அதிகாலையில் பள்ளம் தோண்டி புதைத்து விடுங்கள்..
அறுபது நாளில் மண்ணின் தோஷங்கள் படிப்படியாக விலகி விடும்..
பிறகு உங்கள் அனைவருக்கும் மனதில் மகிழ்வும் அமைதியும் தானாக ஏற்படும் . குறைபோக்கும் வன்னி மரம்...
Subscribe to:
Posts (Atom)