கோபம் கொப்பளிக்க பதில் தாக்குதல் தொடுக்க தயாராக நின்ற இளைஞர்கள் மத்தியில் அம்பேத்கர் சென்றார் .
நாம் இந்த பிரச்சினையை சட்டப்படி தீர்க்க வேண்டும்.
நீங்க இப்போது தாக்கினால் அம்பேத்கர் தலமைதாங்க மாநாடு கலவரத்தில் முடிந்தது என்று வரலாறு கூறும் நாளை நாம் மாநாடு என்று கேட்டால் அரசு அனுமதி மறுக்கவும் வாய்ப்பு உண்டு.
ஏற்கனவே உரிமைகளை இழந்து நிற்கும் நமக்கு மாநாடு போடவும் போதுக்கூட்டம் நடத்தவும் அனுமதி மறுத்தால் இதுவே பார்பனியத்தின் வெற்றி என்று பேசினார்.
கண் அசைவுக்கு காத்திருந்த இளைஞர்கள் அமைதியானார்கள்.
பின்னர் அம்பேத்கர் தமது உதவியாளர் ஆனந்த்ராவ் சித்ரேயுடன் அங்கு இருந்து கொண்டு கலவரம் பற்றிய விசாரணையை பூர்த்தி செய்து விட்டு மார்ச் 23 தேதி மும்பை திரும்பினார்.
இதன் விளைவாக காவல்துறை மஹத் வந்துசேர்ந்தது சிலரை கைது செய்தது.
அவ்வளவு பெரிய படையில் வெறும் 15 பேரை மட்டுமே கைது செய்து அதில் ஐந்து பேருக்கு மட்டும் நான்கு மாத கடுங்காவல் தண்டனை விதித்தது.
அம்பேத்கர் இதை பற்றி குறிப்பிடுகையில் ஆரியர்களின் தூண்டுதலால் உண்டான கலவரத்தில் சாதிய இந்துக்கள் மட்டுமே கைது செய்யப்பட்டார்கள் தூண்டிவிட்டவர்கள் ஒருவரையும் நான் காணவில்லை என்று கூறுகிறார்.
பம்பாய் கிராணிக்கல் என்ற பத்திரிக்கையில் அம்பேத்கருக்கு எதிராகவே செய்தி வந்தது.
1927 மார்ச் மாதம் 19 ,20 தேதிகளில் உருவான தலித் மாநாடு பெரும் கலவரத்தை ஏற்படுத்தி உள்ளது
தலித் மக்களுக்குக்கும் இந்துக்களுக்கும் கடும் மோதல் வெடித்துள்ளது.
இரு தரப்பினரும் சரமாரியாக தாக்கினர் என்று செய்தி திரிக்கப்பட்டு வெளியானது.
அதே போன்று தலித் மக்களில் 20 பேர் மட்டுமே காயம் அடைந்தனர் என்றும் எதிர் தரப்பில் பலர் பயங்கர காயம் என்றும் திசை திருப்பி செய்தியை வெளியிட்டது .
இதை உணர்ந்த அம்பேத்கர்...
களத்தில் இறங்கி உண்மைகளை வெளிச்சம் போட்டு காண்பித்தார்.
அவர் சொன்ன உண்மையில் ஒன்றுதான்.
மஹத் கிராம பார்பனர்கள் அக்கம்பக்கத்து கிராமத்திற்கு கலவரம் நடந்த அன்றே ஒரு அவசர தகவலை தெருவித்தனர் அந்த தகவல் என்னவென்றால்?
ஊர் கட்டுப்பாட்டை மீறி அம்பேத்கர் மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பி வரும் அத்துனை நபர்களையும் ஊர் தண்டிக்கவேண்டும் என்று கட்டளையிடப்பட்டது.
அம்பேத்கர் ஒரு பொதுக்கூட்டதில் கூறும் போது நான் விசாரித்த வரையில்.
மாநாட்டில் கலந்து கொண்ட அத்துணை நபர்களும் சிறுவர் பெரியவர் உட்பட அனைவருக்கும் ஊர் மக்கள் மத்தியில் சவுக்கடி கொடுக்கப்பட்டது.
இதை எதிர்தவர்களை ஊர் தள்ளிவைப்பு நடந்தேறியது என்றார்.
ஆங்காங்கே உள்ள சில நல்ல மனிதர்கள் அம்பேத்கருக்கு ஆதரவு தந்தாலும் அரசு என்னவோ வாய்மூடி மவுனமாகவே இருந்தது.
ஒரு வகையில் அம்பேத்கருக்கு வெற்றிதான் இவ்வளவு பெரிய படையை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்து இருந்து மாநாட்டை முடித்தது.
இந்த சம்பவத்திற்கு பிறகு தான் முழு அளவில் பார்பனர்களை சட்டரீதியாக எதிர்பதும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு பாடுபடுவதையும் முழு நேர வேலையாக ஆக்கிக் கொண்டார்.
சரி இவ்வளவு பிரச்சினைக்கும் வித்திட்ட மகத் குளம் நிலவரம் என்ன
ஆனது .?
அம்பேத்கர் உடன் தாழ்தப்பட்ட மக்கள் கைவைத்தும் வாய் வைத்தும் தண்ணீர் குடித்ததால் குளம் தீட்டுப்பட்டுவிட்டதாக மகத் பார்பனர்கள் கூறினார்கள்.
இது வீரேஸ்வர் கோவிலில் அவசரக்கூட்டம் நடந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு தீர்வு தீட்டை கழிப்பது தான் என்ன செய்தால் தீட்டுக்கு பரிகாரம் ஆகும் என்று வேத பண்டிதர்களை கூப்பிட்டு பரிகாரம் கேட்டது.
அவர்கள் செய்தது என்ன..?
கொடுமையிலும் கொடுமை?
இந்த பரிகாரம் தான் அம்பேத்கரை உச்சக்கட்ட கோபத்தை கிளப்பியது.
ஊர் தலித்துகளை நோகடிக்க செய்தது.
அம்பேத்கர் மறுபடியும் இந்திய வரலாற்றில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராட்டம் அல்ல சத்தியாகிரகம் செய்ய வழிவகை செய்தது.
சத்தியாகிரகமா ?
ஆம் காந்தி செய்த சத்தியாகிரகம் தானே கேள்வி பட்டு இருப்பீர்கள்.
அம்பேத்கரும் வரலாற்று சிறப்புமிக்க சத்தியாகிரகம் செய்தார்.
அப்படி என்ன பரிகாரம் செய்து கோபத்தை தூண்டினார்கள் பார்பனர்கள்.
பேசுவோம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.