27/04/2017

பாஜக காவாலிகள்.....


ராஜஸ்தானில் பால் பண்ணை வியாபாரி மாட்டு தீவிரவாதிகளால் அடித்து கொலை செய்யபட்ட பெகலு கான் குடும்பம் டெல்லியில் தர்ணா...


கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி  மாடுகளை ஏற்றிச்சென்ற பேலு கான் என்ற 55 வயது முதியவரை பசு காவலர்கள் அடித்து கொலை செய்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பேலு கானின் தாயார் அன்கூரி பேகம் கொல்லப்பட்ட தனது மகனுக்காக நீதி வேண்டி டெல்லியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இச்சம்பவம் நடைபெற்று 25 நாட்கள் கழித்து முதல்முறையாக ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் வசுந்தராராஜே வாய் திறந்துள்ளார். பேலுகானை அடித்து கொலை செய்த நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்...

ஒவ்வாரு வீட்டிலும் தாமரையை மலர வைக்க தமிழிசை அக்கா ஆர்வமாய் கிளம்பிய போது....


மொழி வரைபடம் (1928)...


ஆங்கில ஆட்சியில்கீழ் இந்தியாவில் முதன்முதலாக மொழிவாரி கணக்கெடுப்பு நடத்திய க்ரையெர்ஸன் (Grierson) என்பார் வெளியிட்ட Linguistic Survey of India என்ற நூலில் உள்ள வரைபடம் (அதன் ஒரு பகுதி).

1928வாக்கில் கையால் வரையப்பட்ட இந்த வரைபடத்துடன் தற்போதைய தமிழக மாநிலத்தின் வரைபடத்தைப் பொருத்திப்பார்க்கையில் ஓரளவு நாம் இழந்த பகுதிகளை அறியமுடிகிறது.

( Madras Presidency என்ற தலைப்பில் சென்னை மாகாணம் பற்றிய விக்கிபீடியா பக்கத்தில் இதுவே நிறமில்லாத வடிவில் இடம்பெற்றுள்ளது)

ஆனாலும் இது முழுமையாக சரியென்று சொல்ல முடியாது.

தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் கன்னடம் பேசும் பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளது.

ஆனால், அந்த மாவட்டத்தில் தமிழர்களும் அல்லர் காடர் போன்ற (தமிழ்) பழங்குடி மக்களும் சில பகுதிகளில் மலையாளிகளுமே இருக்கின்றனர்.

அதேபோல மைசூர் தமிழர் பெரும்பான்மை நகரம் அதுவும் இதில் இல்லை.

அதேபோல ஈழத்தின் கிழக்குபகுதி சிங்களப் பகுதியாகக் குறிக்கப்பட்டுள்ளது.

கிரையர்சன் வடமொழிகளில் மிக மிக விரிவாக ஆய்வு செய்துள்ளார்.

தனது நூலின் முதல் தொகுதியில் தொடக்கத்திலேயே தனது ஆய்வில் தென்னிந்தியா இடம்பெறவில்லை என்பதை வரைபடம் மூலம் குறிப்பிட்டும் உள்ளார்.

அதாவது தென்னிந்தியாவில் அவர் அதிக கவனம் செலுத்தவில்லை என்று கூறலாம்.

ஆந்திரா மற்றும் கேரளா பறித்துக் கொண்ட தமிழ் நிலத்தினை ஓரளவு அறிந்து கொள்ள இந்த வரைபடம் உதவுகிறது.

இவ்வரை படத்தின் படி...

தற்போதைய ஆந்திராவின்.. சித்தூர் மாவட்டத்தில் பாதி தமிழர் பெரும்பான்மை கொண்டது.

தற்போதைய கர்நாடகத்தின் கோலார் கால்பகுதி மற்றும் பெங்களூர் மாவட்டத்தில் கால்வாசி.. ராமநகரா கால்வாசி.. சாம்ராஜ்நகர் பாதி.. தமிழ் பெரும்பான்மை உடையன.

தற்போதைய கேரளத்தின் பாலக்காடு முழுவதும்.. இடுக்கி பாதியும்.. திருவனந்தபுரம் முழுவதும்.. தமிழ் பெரும்பான்மை உடையன.

(இவ்வரைபடம் ஏற்கனவே 03.03.16 அன்று இதே வலையில் போடப்பட்டிருந்தது.. ஆனால் படம் அழிந்துவிட்டது பதிவு மடடும் இருந்தது அதனால் மீண்டும் பதவிடப்படுகிறது)...

இப்படிப்பட்டவர்களை அமைச்சராக தேர்ந்தெடுத்தது தான், தமிழன் செய்த மிகப்பெரிய தவறு...


வைகோ நாயூடு எல்லாம் சுமூகமா முடியுற வரை நீ உள்ளயே இரு...வெளில வந்தா உளரி வெச்சிடுவ.... பாஜக மோடி டா...


தேச துரோக வழக்கில் கைதாகி சிறையில் உள்ள வைகோவின் காவலை வரும் ஜூன் 2ம் தேதி வரை நீட்டித்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்..

வடகொரிய அதிபர் பைத்தியக்காரனாம்.. போரிடுவது நோக்கம் இல்லையாம்.. அந்தர் பல்டி அமெரிக்கா...


உலகநாடுகளுக்கு ஆயுதங்களை சப்ளை செய்யும் தொழிலை செய்து வரும் நாடு அமெரிக்கா, அமெரிக்காவில் தயார் செய்யும், ஆயுதங்கள் நல்ல முறையில் விற்பனை ஆக வேண்டும் என்றால், பல நாடுகளுக்கு இடையே பிரச்னை வெடிக்க வேணடும்.

முடிந்த அளவு பிரச்னையை தூண்டிவிட்டு, பிரச்னைக்குரிய நாடுகளில் தனது ஆயுதங்களை விற்பனை செய்துவிடும்.

அப்படி இரு நாடுகளுக்கும் ஆயுதம் விற்பனை செய்யும்போது, எந்த ஒரு நாடு அமெரிக்காவிடம், ஆயுதங்களை வாங்குவதை நிறுத்தி தானே தயார் செய்து, தனது ராணுவ பலத்தை கூட்டுகிறதோ. அந்த நாடு அமெரிக்காவின் எதிரி நாடாக கருதப்படும்.

பின்ன அந்த நாடு அணு ஆயுதங்களை தயாரிக்கிறது. இது உலகுக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று பேச ஆரம்பிக்கும். எந்த ஒருநாடும் தானாகவே அணு ஆயுதங்களையும் தயாரிக்கக் கூடாது என்பதுதான் அமெரிக்காவின் விருப்பமாம்.

கொரியா தீப கற்பத்தில் வட கொரிய, தென் கொரிய இரண்டு, பிரச்னைக்குரிய நாடுகள்.

இதில் தென் கொரியாவிற்கு ஆயுதம் விற்பனை செய்வது அமெரிக்காவாம். அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து ராணுவ பயிற்சியல் ஈடுபட்டு வருகிறதாம்.

ஆனால் சீனாவுடன் நட்பில் இருக்கும் வட கொரியா, தனது நாட்டு வல்லுனர்களைக் கொண்டு, தானே அணு ஆயுதங்களை தயார் செய்து வருகிறது.

இது உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறதாம். இதனால்தான் அமெரிக்கா போர்க்கப்பலை தென் கொரியாவிற்கு அனுப்பியது. அந்த கப்பல் தென் கொரியாவிற்கும் வந்து சேர்ந்துவிட்டது.

இந்த நிலையில் அமெரிக்க தூதரக அதிகாரி நிக்கி ஹேலி கூறியிருப்பதாவது..

அணு ஆயுத சோதனைகளை நடத்தி உலக நாடுகளை அச்சுறுத்திவரும் வடகொரியா, அணு ஆயுத சோதனைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் நோக்கம். போரிடுவது என்பது அமெரிக்காவின் நோக்கம் இல்லை.

கடந்த 16ம் தேதி வடகொரியா நடத்திய அணுஆயுத சோதனையை ஐ.நா கடுமையாக  கண்டித்துள்ளது.

அணு ஆயுத சோதனை நடத்தி உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை கொடுத்து வரும் வட கொரியா, தாங்கள் மேற்கொள்ளும் சோதனையை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பது மட்டுமே எங்கள் நோக்கம்.

வடகொரிய அதிபர் கிம் ஜாங்கின் அணு ஆயுத சோதனைகளை நடத்தி விட்டால், உலக நாடுகள் அச்சப்படும் என்று நம்புகிறார்.

அதிபராக இருக்கும் அவர் தற்போது மன நலம் பாதிக்கப்பட்டவராக மாறிவிட்டார் என்று அமெரிக்க தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்...

கர்நாடகாவில் அதிரடி... கல்யாண கோஷ்டி போல நுழைந்து ப.சிதம்பரம் உறவினர் நிறுவனங்களில் ரெய்டு...


மடிகேரி: கர்நாடகாவின் குடகு மாவட்டத்திலுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினர் வீடுகள், தொழில் நிறுவனங்களில் ஐடி அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தியுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தின் மலைப்பகுதி, மாவட்டமான குடகு மாவட்டத்தின், குஷால்நகர் பகுதியில் எஸ்.எல்.என் குரூப் தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

இந்த நிறுவனத்தில் 11 கிளைகளிலும் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டுகளை நடத்தியுள்ளனர்.

இந்த குரூப், விஸ்வநாதன் மற்றும் சாத்தப்பன் என்பவர்களால் நடத்தப்படுகிறது. இவர்கள், சிதம்பரத்தின் சகோதரி மகன்களாகும்.

எஸ்.எல்.என் குரூப் நிறுவனங்கள் காபி யூனிட், மரம் அறுவை தொழிற்சாலை, பெட்டோல் பங்க், ஆடம்பர ஹோட்டல், ரிசார்ட்டுகளை நடத்தி வருகிறது. மைசூரிலுள்ள வருமான வரித்துறை அலுவலகத்திலிருந்து வாடகை கார்கள் மூலம் அதிகாரிகள் குடகு மாவட்டத்திற்கு சென்றுள்ளனர்.


யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக திருமண கோஷ்டி வாகனம் போல கார்களில் மலர் அலங்காரம் செய்ததோடு, திரேஷ்-கஜோல் என்ற பெயரில், போலியாக மணமகன்-மணமகள் பெயர்களையும் காரில் ஒட்டிக்கொண்டு அதிரடியாக ரெய்டு நடத்தியுள்ளனர்.

குடகு மாவட்ட காவல்துறைக்கு தெரிந்தால் கூட விஷயம் லீக் ஆகிவிடும் என்பதால் மைசூர் மாவட்ட போலீசாரை பாதுகாப்புக்கு அழைத்துச் சென்றுள்ளனர் ஐடி அதிகாரிகள். சுமார் 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரே நேரத்தில் இந்த ரெய்டுகளை நடத்தியுள்ளனர்.

ரெய்டின்போது பல்வேறு ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். ஏர்செல் மேக்சிஸ் வழக்கு தொடர்பாக சிதம்பரத்தின் மகன், கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகங்களில் அதிகாரிகள் அண்மையில் ரெய்டு நடத்தியிருந்தனர்.

இதன் ஒரு பகுதியாக இந்த ரெய்டு நடைபெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது...

நள்ளிரவில் நடக்கும் மர்மங்கள் – அதிமுகவின் நிலைமைக்கு காரணம் ஆவியா, காவியா...


தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் பல அதிர்ச்சிகரமான விஷயங்கள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக நள்ளிரவு நேரத்தில் தான் இந்த விஷயங்கள் நடந்து வருகின்றன.

முதலில், செப்டம்பர் 22ம் தேதி உடல்நலக் குறைவால், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக நள்ளிரவில் தகவல் வெளியானது, அதனை தொடர்ந்து, அவரது இறப்பு நள்ளிரவில் அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, தமிழக அரசியலில் பல அதிரடி மாற்றங்கள் அரங்கேறின.

ஜெயலலிதா மரண செய்தி வெளியான உடன் நள்ளிரவிலேயே ஓ.பி.எஸ் முதல்வராக பதவியேற்க, அமைச்சரவையும் பதவியேற்றது.

இரவோடு இரவாக தமிழக அரசியல் களமே தலைகீழானது.

இதனைத்தொடர்ந்து, சசிகலா பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டு, பதவியேற்கும் முன்பு, ஓ.பி.எஸ், தியானம் மேற்கொண்டு நள்ளிரவில் பரபரப்பை கிளப்பினார். இதனையடுத்து, அரசியல் களம் சூடுப்பிடிக்க தொடங்கியது.

பின்னர், சொத்து குவிப்பு வழக்கு, சசிகலா கைது, தினகரன் பதவியேற்பு என அதிமுக பல அதிரடி மாற்றங்களையும், திருப்பங்களையும் சந்தித்தது.

தினகரன் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக கட்சியினர் இரவில் அறிவித்தனர். இரவோடு இரவாக சசிகலா அணியினர் பல்டி அடித்தனர்.

தொடர்ந்து, தற்போது இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் வழங்கிய புகாரில் தினகரன் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கடந்த சில மாதங்களாக தமிழக அரசியலில் நடந்து வரும் மாற்றங்கள் இரவு நேரத்தில் தான் நடந்து வருகிறது. பலர் , இது இறந்த ஜெயலலிதாவின் ஆவி செய்யும் செயல், அவர்களுக்கு செய்த பாவம் தான் இவ்வாறு நடக்கிறது என்று கூறி வரும் நிலையில், இல்லை இது நாட்டை ஆளும் காவியின் செயல் என்று சிலர் கூறுகின்றனர்.

எது எப்படியோ, இரவு நேரத்தில் நாட்டை அழிக்காமல் இருந்தால் சரி...

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றைய வெயில் அளவு...


9வது நாளாக தொடரும் மருத்துவர்கள் மாணவர்கள் போராட்டம்.....


50% இட ஒதுக்கீட்டை ரத்து செய்தால் வரும்காலத்தில் கிராம மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்படும்....

காஷ்மீர் ராணுவ அடக்கு முறையை கண்டித்து பஞ்சாப் சீக்கியர்கள் போராட்டம்...


திமுக நாடகத்தை மறக்க முடியுமா..?


27 /04 /2009 அன்று 1 மணி நேரம் உண்ணா விரதம் நாடகம் போட்டு போர் நின்றதாக சொல்லி லட்ச கணக்கான ஈழ மக்களை கொன்று குவித்த நாள்... மறக்க முடியுமா ?

அவர் சிறப்பா செய்வார்யா...


ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 39...


சக்ரா தியானம் செய் முறை...

சக்ராக்கள் அமைந்துள்ள இடங்கள், அவைகளுக்குத் தரப்பட்டிருந்த சின்னங்கள், மந்திர பீஜ ஒலிகள் ஆகியவற்றை நாம் முன்பு பார்த்தோம். இனி சக்ரா தியானம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

ஆரம்பத்தில் இந்த தியானம் கஷ்டமாகத் தோன்றினாலும் செய்யச் செய்ய நாளடைவில் இது மிக சுலபமானதாக மாறி விடும். இதில் அந்தந்த சக்ராக்களின் பெயரைச் சொல்வதும், மந்திரங்களைச் சொல்வதும் சத்தமாகவோ, மனதினுள்ளோ உங்கள் வசதிப்படி சொல்லலாம். அந்தந்த சக்ராவின் சின்னங்களை உருவகப்படுத்திக் கொள்ள சிரமம் இருந்தால் அந்தந்த சக்ராவின் நிறமுள்ள சக்கரங்களாகவும் உருவகப்படுத்திக் கொள்ளலாம்.

1) மற்ற தியானங்களைப் போலவே அமைதியான ஓரிடத்தில் உங்களுக்கு வசதியானபடி சம்மணமிட்டோ, பத்மாசனத்திலோ, நாற்காலியிலோ நிமிர்ந்து நேராக அமருங்கள். உங்கள் உள்ளங்கை மேலே பார்த்த வண்ணம் திறந்திருக்கும் படி தொடைகளில் கைகளை வைத்துக் கொள்ளுங்கள். கைகளின் கட்டை விரலின் அடிப்பாக நுனியில் சுட்டு விரல் நுனியை வைத்து ஒரு முத்திரையை உருவாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் மூச்சு சீராகும் வரை மூச்சில் கவனம் வையுங்கள்.

2) உங்கள் மூலாதாரச் சக்ராவை மனதில் அந்தச் சின்னமாகவோ அல்லது சிவப்பு நிறச் சக்கரமாகவோ உருவகப்படுத்திக் கொள்ளுங்கள். அப்படி உருவகப்படுத்திக் கொள்ள ஆரம்பத்தில் சிறிது நேரம் தேவைப்படலாம். அவசரமில்லாமல் அமைதியாக உருவகப்படுத்திக் கொண்டு உங்கள் கவனத்தை அந்த சக்ராவிற்கு கொண்டு செல்லுங்கள். மனதில் இந்த சக்ரா சின்னமாகவோ, சிவப்பு நிற சக்கரமாகவோ பதிந்த பின்னர் ஓம் மூலாதார என்று சத்தமாகவோ, மனதிற்குள்ளோ சொல்லுங்கள். பின் மூச்சை உள்ளிழுக்கையில் இந்தச் சக்ரா நல்ல ஒளி பெறுவதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். மூச்சை வெளி விடும் போது இந்த சக்ரா திறப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். மூச்சை வெளியே விடும் போது லா........ம்/ங் என்ற மந்திரத்தை சத்தமாகவோ, மனதிற்குள்ளோ நிதானமாக உச்சரித்த படியே வெளியே விடுங்கள். இந்த மந்திர ஒலியால் அந்த திறக்கப்படும் சக்ரா சக்தி பெறுவதாக உணருங்கள். இப்படி லா........ம்/ங் மந்திரத்தை ஒரு முறையிலிருந்து ஏழு முறை வரை வெளிமூச்சு விடும் போது உச்சரிக்கலாம். இதைச் செய்யும் போது உங்கள் முழுக்கவனமும் இந்த சக்ராவிலேயே இருக்கட்டும். (நீங்கள் இந்த மந்திரத்தை எத்தனை முறை இந்த சக்ராவிற்குச் சொல்கிறீர்கிறீர்களோ அத்தனையே முறை தான் மற்ற ஆறு சக்ராக்களுக்கும் உரிய மந்திரத்தை நீங்கள் சொல்ல வேண்டும்.) முடிக்கையில் அந்த சக்ரா குறைபாடுகள் ஏதாவது இருந்திருக்குமானால் நீங்கி வலிமையடைந்து ஜொலிப்பதாக உணருங்கள்..

3) அடுத்ததாக உங்கள் கவனத்தை சுவாதிஷ்டானா சக்ரா அமைந்துள்ள இடத்திற்குக் கொண்டு செல்லுங்கள். அந்த சின்னமாகவோ, ஆரஞ்சு நிற சக்கரமாகவோ அந்த சக்ராவை அந்த இடத்தில் மனக்கண்ணில் காணுங்கள். உங்கள் உருவகம் தெளிவான பின் ஓம் ஸ்வாதிஸ்தான என்று சொல்லுங்கள். பின் மூச்சை உள்ளிழுக்கையில் இந்தச் சக்ரா நல்ல ஒளி பெறுவதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். மூச்சை வெளி விடும் போது இந்த சக்ரா திறப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். மூச்சை வெளியே விடும் போது வா........ம்/ங் என்ற மந்திரத்தை நிதானமாக உச்சரித்த படியே வெளியே விடுங்கள். இந்த மந்திர ஒலியால் அந்த திறக்கப்படும் சக்ரா சக்தி பெறுவதாக உணருங்கள். இந்த மந்திரத்தையும் நீங்கள் மூலாதார மந்திரத்தை எத்தனை முறை சொன்னீர்களோ அத்தனை முறை சொல்ல வேண்டும். முடிக்கையில் அந்த சக்ரா குறைபாடுகள் ஏதாவது இருந்திருக்குமானால் நீங்கி வலிமையடைந்து ஜொலிப்பதாக உணருங்கள்.

4) இதே போல் மற்ற சக்ராக்களுக்கும் செய்தல் வேண்டும். மணிப்புரா சக்ராவுக்கு அந்த சின்னம் அல்லது மஞ்சள் நிற சக்கரம் நினைத்து ஓம் ஸ்ரீ மணிபத்மே ஹம் என்று சொல்லி ரா........ம்/ங் என்ற மந்திரத்தைச் சொல்ல வேண்டும். மற்ற சக்ராக்களுக்கு ஓம் அனாஹத, ஓம் விஷுத்தி, ஓம் ஆஜ்னேய, ஓம் சஹஸ்ரார என்று சொல்லி, அந்தந்த சின்னங்கள் அல்லது அந்தந்த நிறச் சக்கரங்களை எண்ணி, முறையே யா........ம்/ங், ஹா.......ம்/ங், ஓ.......ம் (a…u….m), ஓ...கூம்...சத்யம்....ஓ...ம்” என்ற மந்திரங்களைச் சொல்ல வேண்டும்.

5) சக்ராக்களின் பெயர்களைச் சொல்வதில் மணிபுரா சக்ராவிற்கு மட்டும் ஓம் ஸ்ரீ மணிபத்மே ஹம் என்று சொல்ல வேண்டும். மற்ற சக்ராக்களுக்கு ஓம் என்று சொல்லி அந்தந்த சக்ராவின் பெயரையே சொல்ல வேண்டும். அதே போல் மந்திர ஒலிகள் உச்சரிப்பதில் சஹஸ்ராரா சக்ராவுக்கு மட்டும் ’ஓகூம் சத்யம் ஓம்’ என்ற மந்திரத்தைச் சொல்ல் வேண்டும். மற்ற சக்ராக்களுக்கு முன்பு நாம் சொன்ன மந்திரங்கள் தான். இந்த இரு வித்தியாசங்களைத் தவிர எல்லா சக்ராக்களையும் எண்ணி சக்ரா தியானம் செய்வது ஒரே மாதிரி தான். இதை நினைவில் கொள்ளவும்.

இந்த சக்ரா தியானம் மிக சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதில் ஒவ்வொரு சக்ராவுக்கும் சமமான முக்கியத்துவத்தைத் தருவது முக்கியம். ஒரு சங்கிலியின் உண்மையான வலிமை அதன் மிக பலவீனமான பகுதியைப் பொறுத்தே இருக்கிறது என்று சொல்வார்கள். ஒரு பகுதி மிக வலிமையாக இருந்து இன்னொரு இணைப்பு மிக பலவீனமாக இருந்தால் அந்த இடத்தில் அது சுலபமாகத் துண்டிக்கப்படும் அல்லவா? அது போலத் தான் சக்ராக்களும். எல்லா சக்ராக்களையும் சமமாக பாவித்து ஒரே மாதிரியான முக்கியத்துவம் அளியுங்கள்.

(குண்டலினி சக்தியை மேலுக்குக் கொண்டு வருவதும் இந்த சக்ராக்கள் மூலமாகத் தான். மூலாதார சக்ராவில் உறங்கிக் கிடக்கும் குண்டலினியை சஹஸ்ரார சக்ராவிற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் அதற்கு முறையான பயிற்சியும், கடுமையான கட்டுப்பாடும், தகுந்த சுத்தமான சூட்சுமமான மனநிலையும் இருப்பது மிக அவசியம். அதில் ஏதாவது சிறு குறைகள் ஏற்பட்டால் கூட பெரிய ஆபத்தை அவை ஏற்படுத்த வாய்ப்புண்டு. எனவே முறையாக சரியாக தயார்ப்படுத்திக் கொள்ளாமல், உண்மையான நிபுணரின் கண்காணிப்பில் அல்லாது முயற்சி செய்வதும் ஆபத்தே. குண்டலினியை நான் எழுப்பிக் காட்டுகிறேன் என்று பலரும் இணையத்திலும், பத்திரிகைகளிலும் விளம்பரம் செய்வதை உடனே நம்பி ஏமாந்து விடாமல் இருப்பது நல்லது. மிகச் சிலரே உண்மையில் அதில் தேர்ச்சி பெற முடியும் என்பதையும் அதிலும் வெகுசிலரே பொது வாழ்வில் காணக் கிடைப்பார்கள் என்பதையும், அவர்களும் கூட தகுதிகளை பரிசோதித்து தெளிவடையாமல் கற்றுக் கொடுக்க முனைய மாட்டார்கள் என்பதையும் நினைவில் வைக்கவும்.)

இந்த சக்ரா தியானம் உடலின் எல்லா சக்ராக்களையும் சூட்சுமமாகவும், வலிமையாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. ஆரோக்கியம், வலிமை, அறிவு, ஞானம் ஆகிய அனைத்துமே சக்ரா தியானம் செய்யச் செய்ய மேம்படும் என்பது உறுதி.

இனி அடுத்த தியானம் பற்றி பார்க்கலாம்.

மேலும் பயணிப்போம்.....

மனிதரை பாம்பு கடித்துவிட்டால் அவர் மீண்டும் உயிர் பெற முடியுமாம்... இதோ ஆச்சரிய தகவல்...


பாம்பு கடித்து 5 மணி நேரம் ஆனால் அவர் உடம்பில் உயிர் இருக்குமா?

அவர் மீண்டும் உயிர் பெற முடியுமா?

சித்த வைத்தியத்தால் முடியும்..!

பாம்பு கடித்த ஒருவரை நீங்கள் டாக்டரிடம் சென்று காட்டும் போது அவர் இறந்து விட்டார் என்று சொல்லி விட்டால் நீங்கள் பயப்பட தேவை இல்லை..

பாம்பு கடித்து விட்டால்
இரத்த ஓட்டம் நின்று விடும் இதயம் துடிப்பு நின்று விடும் ஆனால் உடலில் உயிர் மட்டும் இருக்கும்.

கடிபட்டவர் உடலில் உயிர் உள்ளதா என்று தெரிந்து கொள்ள...

அவரின் ஒரு பக்க காதில் எண்ணெய் உற்ற வேண்டும்...

எண்ணெய் மறு காதில் வந்தால் அவர் இறந்து விட்டார் என்று அர்த்தம் மறு பக்க காதில் எண்ணெய் வரவில்லை என்றால் அவர் உடம்பில் உயிர் உள்ளது என்று அர்த்தம்..

அதன் பிறகு கரு ஊமத்த இலையை அரைத்து மூக்கில் 3 லிருந்து 5 சொட்டு விடவும்..

மீண்டும் அவருக்கு உயிர் உண்டாகிவிடும்...

இலுமினாட்டி யும்.. திராவிடமும்...


சித்தர் என்பவர், ரிஷி என்பவர் யார்?


சித்தர் என்னும் சொல் தற்காலத்தில் பலரை மதிமயங்கச் செய்யும் சொல்லாக அமைந்துள்ளது. சித்தர் என்ற சொல்லின் பொருள் விளங்காததால் பலர் ஏமாற்றங்களுக்கு உள்ளாகிறார்கள். இந்த வார்த்தையை தவறாக பயன்படுத்துபவர்களும் அதிகரித்து வருகிறார்கள்.

இதனால் எதிர்காலத்தில் இந்த வார்த்தையே வெறுக்கத்தக்க வார்த்தையாக அமைந்துவிடவும் வாய்ப்புள்ளதால் அது பற்றி எனக்கு தெரிந்தவரையில், நான் புரிந்துகொண்ட அளவில் சித்தர் என்பவர் யார்? என்பதை கொஞ்சம் அலசிப்பார்க்கலாம் என தோன்றுகிறது.

சித்தி என்றால் வெற்றி என்று பொருள். சித்தர் என்றால் வெற்றியாளர் அல்லது சாதனையாளர் அல்லது வல்லுனர் என்று பொருள் அவ்வளவு தான்.

ஒரு மனிதர் ஏதாவது ஓரிரு துறைகளில் சாதனை படைப்பதை இன்றளவும் நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். ஒரே மனிதர் அனைத்து துறைகளிலும் சாதனை படைத்ததாக சரித்திரத்தில் எங்கும் இல்லை.

உதாரணமாக புரட்சிக்கவிஞன் பாரதி ஒரு கவிதை சித்தன், கவியரசு கண்ணதாசன் ஒரு பாட்டு சித்தன், இசை ஞானி இளைய ராஜா ஒரு இசை சித்தன். வலம்புரி ஜான் ஒரு வார்த்தை சித்தன். கணிதமேதை ராமானுஜன் ஒரு கணக்கு சித்தன். இப்படி ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு துறையில் சாதனை நிகழ்த்தினால் அவர்களை சமூகம் ஒரு சித்தனாக பாவிக்கிறது. ஆனால் இவர்களில் யாரும் உலக விசயங்கள் அனைத்தையும் தெரிந்தவர்கள் இல்லை.

சித்தர் என்ற வார்த்தைக்கு பெரும்பாலானவர்கள் அனைத்தும் அறிந்தவர் என பொருள் காண முற்படுகிறார்கள். இது அவர்களுக்கு சரியான புரிதல் இல்லாததையே காட்டுகிறது. பொறியாளர் என்பது ஒரு பொது வார்த்தை. பொறியியல் துறையில் பல பிரிவுகள் உள்ளதை நாம் அறிவோம்.

கட்டிடப் பொறியாளரும், கணணிப் பொறியாளரும் ஒரே துறையை சார்ந்தவர்கள் இல்லை. ஆனால் படிப்பறிவு இல்லாத பாமர மக்களுக்கு இந்த வேறுபாட்டை புரிந்து கொள்ள முடியாது.

ஒருவர் தன்னை அனைத்தும் அறிந்தவர் என கூறிக்கொள்வாரானால், அவருக்கு உலகத்தில் மனிதர்களால் பேசப்படும் அனைத்து மொழிகளும் தெரிந்திருக்க வேண்டும். அனைத்து விலங்குகளின் மொழி தெரிந்திருக்க வேண்டும், அனைத்து பறவைகளின் மொழி தெரிந்திருக்க வேண்டும். ஆகாயத்தைப் பற்றி அனைத்தும் தெரிந்திருக்க வேண்டும். பூமியைப்பற்றி அனைத்தும் தெரிந்திருக்க வேண்டும். அவருக்கு தெரியாதது என்று உலகத்தில் எதுவுமே இருக்கக்கூடாது. அப்படி ஒருத்தர் எங்காவது இருக்கிறார? நிச்சயமாக அப்படி ஒருவர் இருக்க மாட்டார் என நினைக்கிறேன்.

ரிஷி என்றால் கண்டு பிடிப்பாளர் என்று பொருள். இவர்கள் எதை கண்டு பிடித்தார்கள்? இவர்கள் ஆகாயத்தில் ஒளிவடிவமாகவும்,ஒலி வடிவமாகவும் உள்ள மந்திரங்களை கண்ணால் கண்டு, காதால் கேட்டு உலகத்திற்கு தெரிவித்தார்கள். அதனால் இவர்களை ரிஷி என அழைக்கிறார்கள்.

மந்திரங்கள் பல உண்டு. ஒவ்வொரு மந்திரத்தையும் கண்டு பிடித்த ரிஷி உண்டு. ஆனால் அனைத்து மந்திரங்களையும் ஒரே ஒரு ரிஷி மட்டும் கண்டு பிடிக்கவில்லை. ஒவ்வொருவரும் ஒரு சில மந்திரங்களைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். எனவே இவர்களில் யாரும் அனைத்தும் அறிந்தவர் கிடையாது.

ஒவ்வொரு மனிதனும் எதோ ஒரு காரணத்திற்காக மட்டுமே படைக்கபட்டிருக்கிறான். அதை நிறைவேற்றுவதற்காக மட்டுமே இயற்கை அவனை தயார் படுத்துகிறது. அனைத்தையும் இயக்குவதுஒரே பரம்பொருள் தான்.

ஆனால் மனிதர்கள் இயங்கும் விதம் அவர்களின் படைப்புத் தன்மையைப் பொருத்தது. மின்விளக்கையும், மின் விசிறியையும் ஒரே மின்சாரம் தான் இயக்குகிறது. ஆனால் அவைகள் இயங்கும் விதம் வேறு.

இதை புரிந்து கொண்டால் அறியாமை நம்மை விட்டு விலகிவிடும். ஒரு சித்தர் அல்லது ஒரு ரிஷி அனைத்து விசயங்களையும் தெரிந்து வைத்திருப்பார் என எதிர்பார்ப்பது, எதிபார்ப்பவரின் பாமரத்தனமே தவிர வேறொன்றுமில்லை.

கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்னும் தமிழறிஞர்களின் கூற்று சத்தியமானது...

ஆந்திராவில் தொடர்ந்து நடைபெற்று வரும் தமிழர்கள் கைது சம்பவங்கள்...


பாஜக மோடி அரசு இந்தியாவின் முக்கிய நகரங்களை சுத்தம் மற்றும் தூய்மைபடுத்தும் 5 ஆண்டு திட்டமான கிளின் இந்தியா மிஷன் திட்டத்திற்கு சுமார் 62,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது...


இத்திட்டத்தின் மூலம் இந்தியா மேற்கத்திய நாடுகளை போல துய்மையாக இருக்கும்...

அந்த மேற்கிந்திய நாடு லச்சனம் தான் 3,4 இடத்தில் கொண்டு போய் இந்தியாவின் பெருமையை உலகலவில் சேர்த்துருக்கு..

இந்த பெருமைக்கு சொந்தகாரர் பில்டப் மன்னன் இந்தியாவின் நிரந்தர பிரதமர் மோ(ச)டியை சேரும்..

இப்புடி பில்டப் குடுத்துட்டு 62000 கோடியை ஆட்டைய போட்டுடானுங்க இனி எவன் கேள்வி கேட்பான்.... மீறி கேள்வி கேட்டா தேசதுரோகின்னு சொல்லுவானுங்க நமக்கு எதுக்கு வம்பு.?

உடைந்த அணையை 40 ஆண்டுகளாக சரி செய்யாத தமிழக அரசு.. காய்கிறது 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம்..?


வாசுதேவநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கேரள -தமிழக எல்லை பகுதியில் திருவிதாங்கூர் மற்றும் சிவகிரி ஜமீன் ஆட்சி காலத்தில் செண்பகவல்லியாறு அணைக்கட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டு 200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

அதன்படி வாசுதேவநல்லூர், சிவகிரி, சங்கரன்கோவில், மற்றும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முதல் சாத்தூர் வரை விவசாய நிலங்கள் பயனடையும் வகையில் தமிழக எல்லை பகுதியை நோக்கி கன்னியா மதகு அமைக்கப்பட்டது.

இந்த மதகு கடந்த 1976ம் ஆண்டு கனமழையால் இடிந்து விழுந்தது. அதன் பிறகு எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் அதனை சீர்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு தமிழக அரசின் பங்கு தொகையாக ரூ.5 லட்சம் கேரள அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

மதகு சீரமைப்பு பணியை இழுத்தடித்த கேரள அரசு 2006ம் ஆண்டு அப்பணியை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி விட்டது. கன்னியா மதகு சீரமைக்கப்படாததால் நெல்லை, விருதுநகர் மாவட்ட பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசாக மாறின. விவசாயம் அடியோடு அழிவதை தடுக்க கன்னியா மதகை சீரமைக்க கோரி தென்காசி எம்.பி லிங்கம், முதல்வர் கருணாநிதியை சந்தித்து மனு கொடுத்தார்.

இந்நிலையில் செண்பகவல்லி அணைக்கட்டு கன்னியா மதகு உடைப்பை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய லிங்கம் எம்பி அப்பகுதிக்கு சென்றார். அவருடன் 20 பேர் சென்றனர். அவர்களுக்கு பாதுகாப்பாக புளியங்குடி வனச்சரக வனவர் முருகையா, வனக்காப்பாளர் அருள் தேவதாஸ், வேட்டை தடுப்பு காவலர்கள் ஜோசப், கருப்பசாமி, கிருஷ்ணன் ஆகியோரும் சென்றனர் .

வாசுதேவநல்லூர் – மதுரை மெயின் ரோட்டில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சிமலை இருக்கிறது. இது நடந்தது 5வருடம் ஆகிவிட்டது தமிழக அரசு இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இது மட்டும் நடந்துவிட்டா திருநெல்வேலி. விருதுநகர் மாவட்டம் சாத்தூர்வரை தண்ணீர்ககு பிரச்சினை வராது விவசாயம் செழிப்பாக நடைபெறும்.

எதற்காக இதனை ஒதுக்கி விட்டார்கள் எக்காரணம் என்று பத்திரிக்கையாளர் தொலைக்காட்சி எதுவும் கண்டு கொள்ளவில்லை இதனை நாம் வெளிக் கொண்டு வர வேண்டும்...

நஷ்டத்தை காரணம்காட்டி சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கக் கூடாது - பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம்...


லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற தாமதிப்பது நியாமானது அல்ல...


மத்திய அரசின் நடவடிக்கை குறித்து  உச்சநீதிமன்றம் கருத்து...

சித்தராவது எப்படி - 39...


மனதின் தோல்விகளே அககுருவின் எழுச்சி...

எல்லாம் நான் தான் என ஆணவ இறுமாப்பில் இருக்கும் மனம், தன் சிறு வட்டத்தை விட்டு வெளி வராமல், தன் சிற்றறிவிலேயே காலம் தள்ளி பேரறிவினை பெற முடியாமல், வளர்ச்சி அடையாமல் போய் விடுகிறது...

என்றோ ஒரு நாள் தன் வட்டத்தை விட்டு எட்டி பார்க்கையில், மற்றவர்களீன் ஆன்மா வளர்ச்சியை கண்டு திகைத்து இருந்தாலும், தனக்கு தானே சமாதானங்களை தேடி அலைகின்றது..

மிக பெரிய உண்மை என்னவென்றால், தான் ஏற்படுத்திய குறுகிய வட்டத்திற்கு சமாதானங்களை தேடி அலைவது தான் மனதினுடைய பெரும் பாலான வேலையாக உள்ளது..

இந்த மனதை தோற்கடிக்க எந்த சக்தியாலும் முடியாது போல் இருந்தாலும், அண்ட பேரறிவு திக்கு அற்ற நிலைக்கு நம்மை தள்ளி விட வில்லை...

இந்த ஆணவ மனத்தின் ஆதிக்கத்தை கட்டுப் படுத்தி முறைபடுத்த நமக்குள்ளே வைத்த ஒரு உறவு தான் இந்த சுவாசம்..

இது பிராண வாயுவை உள் வாங்க செய்யும் ஒரு ஏற்பாடு மட்டும் அல்ல.. அதற்கு மேலே பல பல காரணங்களை உள் அடங்கிய ஓர் உன்னத உறவு..

தேகத்தை ஓங்க செய்வதின் மூலம் வினாடிக்கு வினாடி தேகம் சீர் குழைந்து போகாமல் காக்கிறது.. அதற்கு மேலே ஞான மார்க்கத்திற்கென்றே செயல் பட கூடிய நிலையில் உள்ளது.. அதை மனிதன் அறியாது இருப்பது அஞ்ஞானமாக உள்ளது....

பிரபஞ்ச ஆற்றலாலும், அறிவாலும் ஒவ்வொரு உயிரிலும் இந்த சுவாசம் செயல் படுகின்ற விதம் மிகவும் வியப்புக்கு உரியது..

அதை ஞானத்திற்கு என்று பயன்படுத்தியவர்கள் நமது போற்றுதற்கு உரிய சித்தர் பெரு மக்கள்...

வாசி யோகம் என்ற தலைப்பில் முறை படுத்திய யோகப் பயிற்சிகள், அதன் உண்மை தன்மையை அறிந்தவர்களுக்கு பிரமிப்பு ஊட்டக் கூடியது...

பதஞ்சலி போன்ற வட இந்திய யோகிகளின் முறை வேறு.. அது சிறப்பானது தான்..

ஆனால் அதனிலும் மிக சிறப்பான தமிழ் வாசி யோகம் அறியாத ஆரிய மக்கள் தங்கள் செல்வாக்கை பயன் படுத்தி தாங்கள் அறிந்த பதஞ்சலி யோகத்தை முன்னிலை படுத்தி விட்டார்கள்.. அதனால் தமிழ் வாசியோகம் காணாமல் போய் விட்டது..

புத்தர்களின் சீடர்களிலே மிகவும் பலம் வாய்ந்த போதி தர்மாவை சீனாவுக்கு புத்தர் அனுப்பி வைத்தது புத்தரின் ஒரு அரசியல் கபடமே..

தமிழ் வாசி யோகத்தை கற்றுக் கொடுக்க புத்தருக்கு மனம் இல்லை.. அது தான் வழக்கமாக கற்று கொடுத்த பயிற்சிக்கு முற்றிலும் வேறு பாடாக இருந்ததாலும் மிகவும் வலுவாக இருந்ததாலும், போதி இந்தியாவில் இருந்தால் சில பிரச்சனைகள் எழக்கூடும் என்ற நோக்கில் போதி தர்மாவை பிரச்சனைகள் நிறைந்த சீனாவுக்கு அனுப்பி விட்டார்..

இதையும் உணர்ந்த போதி சீனாவில் தன் பணியை வெற்றி கரமாக முடித்து விட்டு, நாடு திரும்பாமலேயே இமயமலையில் அடங்கி விட்டார்...

சுவாச ஒழுங்கு என்பது மனதால் இயலாத காரியம்.. ஒழுங்கற்ற தன்மை உடைய மனம் அந்த சுவாச ஒழுங்கில் இணைய முடியாது..

அதனால் ஞானம் என்ற ஆசை வார்த்தைக் காட்டி மனதை ஈர்த்து, சுவாச ஒழுங்கிலே ஈடு படுத்துகின்ற போது மனம் அதனோடு போராடி போராடி தோற்றுப் போகின்ற ஒவ்வொரு நேரத்திலும் மனம் தன் தோல்வியை ஒப்புக் கொண்டு பணிந்து போகிறது.. மனதினுடைய பணிவிலே அக குருவாகிய விழிப்பு நிலை எழத்தொடங்குகிறது...

அதனால் தான் சமயங்களில் அதாவது மதத்தில் பணிவுக்கு அவ்வளவு முக்கியத்துவம் தரப் படுகிறது..

ஒரு இரகசியம் என்னவென்றால், மனம் தனக்கு தானே பணிவை ஒரு நாளும் ஏற்படுத்தி கொள்ள முடியாத நிலையில் உள்ளது..

அதற்கு அதனுடைய குறுகிய ஆணவ வட்டம் மிக பெரிய தடையாக உள்ளது...

மனதை தோற்று போக செய்யக்கூடிய ஒரு காரியத்தை மனதிற்கு ஒப்படைக்கும் போது, மனம் அதை செய்ய முடியாமல் தன் தோல்வியை ஒப்புக் கொள்கிறது.. பணிவு கொள்கிறது.. மென்மை அடைகிறது.. அது மிக மென்மை அடைகின்ற போதுதான் அதனிலும் சற்று வன்மையான ஆனால் மென்மையான விழிப்பு நிலை எழ முடிகிறது.. இது தான் மிக பெரிய இரகசியம்..

சரி சுவாச ஒழுங்கு ஒன்று தான் மனதை பணிவு கொள்ள செய்யுமா? வேறு ஒரு யோக முறையே இல்லையா? என கேட்கலாம்..

பல காரணங்களில் ஒரு முக்கியமான காரணம் இதுவும் ஒன்று..

அது சதா காலமும் வெளியிலேயே உலாவி பழக்கப் பட்ட மனம் சுவாசத்தில் ஈடு படும் போது, உள் நோக்கி பாயும் சுவாசக் காற்றால் மனமும் உள் நோக்கி பாய வேண்டியதிருப்பதால், பழக்கமில்லாத அந்த இடத்தில் எதுவும் தோன்றாது இருப்பதால், பற்றிக் கொள்ள எதுவும் இல்லாததால், மனம் அங்கே இருப்பு கொள்ள முடியாமல், மொத்தத்தில் சுவாசத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள மிகவும் முயற்சி செய்கிறது..

மனம் வெளியே பாய்ந்து தன் ஒழுங்கின்மையை சுவாசத்திலும் பாதிப்பு அடைய செய்கிறது..

இந்த காரணத்தில் தான் மனம் சுவாசத்தை ஒழுங்கிலே இருக்க செய்ய முடிவதில்லை..

நாம் சுவாச ஒழுங்கிலே இருக்க முடியாததற்கு காரணம் மனதின் வெளியில் உள்ள ஒழுங்கற்ற ஈடுபாடு தான்..

மனதின் குறுக்கீடுகள் மட்டும் இல்லையென்றால் ஒரு சுவாசம் இயல்பாகவே நான்கு வினாடிகள் ஒழுங்கில் இருக்கும்..

இதையே மாற்றி செய்யும் போது அதாவது சுவாச ஒழுங்கில் இருக்கும் போது மனம் ஒழுங்காகிறது...

நம்மில் அக குரு இரண்டு வழிகளில் பலப்படுகிறார்..

ஒன்று சுவாச ஒழுங்கில் நாம் இருக்க முயலும் போது மனம் ஒழுங்கு தன்மை பெற்று மென்மை அடைந்து அக குரு எழ வகை செய்கிறது..

இரண்டாவது மனம் சுவாச ஒழுங்கில் இல்லாத சமயம் தன் தோல்வியை ஏற்றுக்கொண்டு ஆணவத்தை இழந்து மென்மை அடைகின்ற போது அககுரு எழ வகை கிடைக்கிறது...

சரி இப்போது அககுரு பலப்படுவதால் என்ன நேர்ந்து விடப் போகிறது என்ற கேள்வியை மட்டும் கேட்டு விடாதீர்கள்..

நமது மர்ம யோக நெறியில் மிகவும் ஈடு பாடு உள்ளவர்களின் மன நிலை பாதிக்கப் படலாம்...

அககுருவால் அனைத்தும் செயல் கூடும் என்பது தெள்ளத் தெளிவான உண்மை ஆகும்..

சித்தர் பெருமக்கள் அககுருவை அடைந்து பின் அககுருவாய் தன்னை மாற்றி, அன்பின் மூலம் வியப்பு ஊட்டும் செயல்களை செய்யக் கூடியவர்களே...

நாமும் அககுருவின் மூலமும், அககுருவாய் ஆகியும் நிறை நிலை சித்தனாக மாற முயலுவோமாக...

பாஜக மோடியே அடிப்படையில் கடலை சாகுபடி செய்யும் விவசாயி என்பது இங்கு எத்தனை பேருக்கு தெரியும் - S.V.சேகர்...


மோடி கடலை சாகுபடி செய்த போது சேட்டிலைட்டிலிருந்து S.V.சேகர் எடுத்த அரிய புகைப்படம்....

கவுதமி, காஜோல் கூட கடலை போட்டது எல்லாம் கடலை சாகுபடியாடா சேட்டிலைட் மண்டையா....

அரசு மருத்துவர்கள் 9வது நாளாக போராட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள்.. ஆனால் யாரும் கண்டுக்கவில்லை...


திமுக வில் இளைஞர்களின் வயது என்பது 60க்கு மேல் தான்...


எங்க தாத்தா கட்டுமரத்த கண்ணுல காட்டுங்ககடா...

சட்டமன்றத்தேர்தல் முடிஞ்ச பிறகு அவரு ஜெயிச்ச தொகுதி பக்கமே வரல...

முதுமை அனைவருக்கும் ஒன்றுதான்.
செயல் பட முடியவில்லை என்றால் MLA பதவி எதற்கு...?

செயல் பட முடியவில்லை என்றால் MLA பதவிக்கான சம்பளம் எதற்கு....?

திமுகவில் இளைஞர்களே இல்லையா...?

இப்படி 90 வயதுக்கு மேல் உள்ள MLA தேவையா...?

திமுக விவசாயிகளுக்காக போராடுகிறது நம்புங்கள்...


2019 ல உனக்கு ஆப்பு சொருக யோகிய ரெடி பண்ணிட்டானுங்க மோடி ஜி...


ஏன்டா நாங்க பில் கட்டலனா அடுத்த நாளே பியூஸ் புடுங்குறீங்க... நீங்க ஒழுங்கா பில் கட்ட மாட்டீங்களா...


ஆகாயத்தில் ஒரு ஒளி – 39...


ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்க தரிசனத்தில் இன்று நாம் காணும் பகுதி 39-ம் தீர்க்க தரிசனப் பகுதியில் இடம்பெறும் முக்கிய குறிப்புகளாகும்.

39-ம் தீர்க்க தரிசனத்தில் இறைவனின் அவதாரம் இப்புவியில் நிகழும் சமயத்தில் உலகத்தின் பிற தேசங்களில் மக்களை அச்சுறுத்தும் பல கொடிய சம்பவங்கள் நடக்கும் என்றும், உதாரணமாக ஊர் தெருக்களில் வினோதமான உருவ அமைப்பு கொண்ட மனிதர்கள் உலாவுவார்கள் என்றும், இவர்கள் மனித ரத்தத்தை குடிக்கும் அளவிற்கு இருப்பார்கள் என்றும், இதனை உலக நாடுகள் கண்டறிந்து அவர்களை அழிக்கும் சம்பவம்  ஒன்று நடைபெறும் என்றும், இது தீயசக்திகள் என்று அந்நாட்டு மக்கள் பயப்படும் சமயத்தில் கடவுளின் சேனைகள் அந்த நகரத்தில் இறங்கி அவர்களை முற்றிலுமாக அழிக்கும் ஒரு அதிசய நிகழ்வு நடக்கும் என்று 39-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.


இந்த பூமியில் பல சக்திகளின் மறுபிரவேசம் இந்த 38-ம் தீர்க்க தரிசனம் நடக்கும் சமயத்தில் நிகழும் என்றும், அப்பொழுது ஒட்டுமொத்தமாக உலக மக்களும் தங்களை காக்கும்படி இறை அவதாரத்திடம் முறையிடுவார்கள் என்றும், அச்சமயத்தில் பிரபஞ்சம் வியக்கும் அதிசயம் ஒன்று நடந்து அந்த மக்களை இரட்சிக்கும் என்றும், ஒரேசமயத்தில் இறைவனின் அற்புதம் மக்கள் காணும்படியான அதிசயங்களாக நிகழக்கூடும் என்று 39-ம் தீர்க்க தரிசனம் கூறுகிறது.

39-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு அரிய குறிப்பை இங்கு தருகின்றது. அதாவது கடலுக்குள் மறைந்து போன கப்பல்கள், விமானங்கள் அதிசயத்தக்க வகையில் மீண்டும் அவைகள் பூமிக்கு திரும்ப வரும் என்றும், இது கடவுளின் செயலாக உலக மக்கள் கண்டு வியப்பார்கள் என்று 39-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை இங்கு தருகின்றது. இப்பணியில் வேற்று கிரகவாசிகளின் முக்கிய பங்கு இருக்கும் என்று 39-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


மனம் மகிழும் அதிசய சம்பவங்கள் தொடர்ந்து தமிழகத்தில் நடக்கும் என்றும், இக்காலம் தமிழகத்திற்கு பொற்காலம் என்றும், கண்ணகி வாழ்ந்த மதுரையில் அப்பொழுது மாபெரும் இறை அதிசயம் ஒன்று நடைபெறும் என்றும், இதுவே 39-ம் தீர்க்க தரிசனங்கள் நடைபெறுவதற்கான முன் அறிகுறிகளாக இருக்கும் என்று 39-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


வாலைசித்தர் என்று அழைக்கப்பட்ட ஒரு சித்தரின் அரிய உருவக்காட்சி வீடியோவில் பதிவாகும் என்றும், அவருடன் சேர்ந்து பதிவாகும் மற்றொரு உருவம் வேற்றுகிரக வாசியைப் போன்று காணப்படும் என்றும், அன்றிலிருந்து தமிழகம் ஊடகங்களில் இச்செய்தி சிறப்பான ஒரு இடத்தை அடையும் என்றும், சித்தர்களை பற்றிய ஆய்வில் இருக்கும் பல அமைப்புகள் சேலத்தை நோக்கி படையெடுக்கும் என்றும், கஞ்ச மலையின் பல இரகசியங்கள் அப்பொழுது உலக மக்களுக்கு தெரியவரும் என்று 39-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

உலக மக்களின் அனைத்து கேள்விகளுக்கும் தமிழகத்தில் உள்ள ஒரு யோகா அமைப்பு தனது விளக்கங்களை ஆதாரத்துடன் தெளிவுபட விளக்கும் என்றும், அன்றுமுதல் உலக மக்கள் அந்த அமைப்பை  நோக்கி விரைந்து வந்து இணைந்து இறைபணியை செய்வார்கள் என்றும் 39-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


உலக மக்கள் இறைவன் வெளிப்படுத்தும் ஒரு அடையாள சின்னத்தை தங்களுடைய இல்லங்களில் வைத்து வழிபடுவார்கள் என்றும், அது ஆதிசக்தியின் அடையாளமாக உலக மக்கள் மட்டுமின்றி பிறகிரகவாசிகளும் ஏற்று வணங்குவார்கள் என்று 39-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

தென் தேசத்து மக்கள் வாழும் ஒரு மலையில் சித்தர்களின் நடமாட்டமும், அவர்கள் வான்வீதியில் பறந்து செல்லும் ஒரு அதிசயமும் நடக்க உள்ளதாகவும், அங்கு இறைவனுடைய பல அதிசய வெளிப்பாடுகள் நடக்கும் என்று 39-ம் தீர்க்க தரிசனம் மெய்பட ஒரு குறிப்பை தருகின்றது...

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...

பழங்களின் மருத்துவ குணங்கள்...


மாம்பழம் - மாம்பழத்தில் வைட்டமின் ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது.

கொய்யா பழம் - சி உயிர் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. வளரும் சிறுவர்களுக்கு வைட்டமின் …சி† உயிர்சத்து எலும்புகளுக்கு பலத்தையும், உறுதியையும் அளிக்கின்றது. மலச்சிக்கல் இருப்பவர்கள் கொய்யாப் பழத்தினை தொடர்ந்து சாப்பிட்டு பயன் பெறலாம். சொறி, சிரங்கு, ரத்த சோகை இருப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிட்டு இவற்றை குணப்படுத்தி கொள்ளலாம். விஷ கிருமிகளை கொல்லும் சக்தி கொய்யாப் பழத்திற்கு இருப்பதால் வியாதியை உண்டு பண்ணும் விஷக் கிருமிகள் ரத்தத்தில் கலந்தால் அதை உடனேயே கொன்று விடும்.

பப்பாளி - வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் …ஏ† உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்.

மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டி ருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும். அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.

அன்னாசி - அன்னாசி பழத்தில் வைட்டமின் …பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக்.

நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஓர் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 40 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.

விளாம்பழம் - விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் …ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும். பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும்.

விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக் கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து...

கூடிய சீக்கிரமே வாங்கிடுவான் இவன்....


ஆற்றுநீர் வாதம் போக்கும். அருவி நீர் பித்தம் போக்கும். சோற்று நீர் இரண்டையும் போக்கும்...


மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய அனைத்து நோய்களுக்கும் அடிப்படையாக விளங்குவது வாதம், பித்தம், கபம் என்ற மூன்றுமே ஆகும்.
இவற்றுள் வாதம், பித்தம் தொடர்பாக ஏற்படும்Vநோய்களைப் போக்கும் வழிமுறைகளை இப்பழமொழி விளக்குகின்றது.

ஆற்று நீரிலும், அருவி நீரிலும் உயர்ந்த தாதுப் பொருட்களும், மூலிகைச் சத்துக்களும், நிறைந்து காணப்படும். ஏனெனில், ஆற்றுப் படுகையிலும், அருவிக்கு நீர் வரும் மலைப் பகுதியிலும் மூலிகைச் செடிகள் நிறைந்து காணப்படும்.

மூலிகைகளின் மீது பட்டு இந்நீர் வருவதால் இத்தகைய குணமுடையதாக உள்ளது. வாதநோய் தொடர்பாக நரம்புக் கோளாறுகளும், பித்தநோய் தொடர்பாக
மூளைக் கோளாறும் ஏற்படுகின்றன.

இவற்றைக் குணப்படுத்த ஆற்று நீரும், அருவி நீரும் பயன்படுகின்றன. வாதம், பித்தம் இரண்டையும் சோற்று நீர் குணமாக்குகின்றது.

இத்தகைய மருத்துவகுணம் கருதியே
நாட்டுப்புற மக்கள் காலையில் எழுந்ததும் பழைய சோற்று நீரை அருந்துகின்றனர்.

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்
கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி செய்தார்கள்...

அந்த ஆராய்ச்சி முடிந்து வந்த
ஆய்வறிக்கையை பார்த்து விட்டு அவர்கள் சொன்னது என்ன தெரியுமா?

தென்னிந்தியர்கள் மனிதர்கள் அல்ல... அவர்கள் கடவுள்களாகத் தான் இருக்க வேண்டும்....

அதாவது பழைய சோறு... அந்த உணவு,

1.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி
அதிகரிக்கிறது.
2.வெள்ளை அணுக்கள் அதிகரிக்கிறது.
3.உடல் சோர்வை போக்குகிறது.
4.உடலில் உள்ள அனுச்சிதைவுகளை
தடுக்கிறது.
5.உடல் சூட்டை தணிக்கிறது.
6.வயிற்றிலுள்ள பழைய கழிவுகளை
விரைந்து வெளியேற்றுகிறது.
7.உற்சாகமான மனநிலையைத் தருகிறது.
8.வெயில் காலங்களில் மட்டுமல்ல அனைத்து நாட்களிலும் சாப்பிடுவதற்கேற்ற அருமையான உணவு பழைய சோறு.

என்று பலவிதமான நன்மைகளைப்
பட்டியலிட்டனர்… இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளி வந்ததும் HOW to MAKE PALAYA SORU?... என்று அமெரிக்கர்கள் இந்திய நண்பர்களிடமும் இணையத்திலும் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர்….

ஆனால் நாம் தான் இதை திண்ணால் சளி பிடிக்கும், உடல் குண்டாகி விடும்
என்றெல்லாம் சொல்லி இன்றைக்கு
பழையதை பழித்து வருகிறோம். அது பெரிய தவறு…

சரி...பழைய சோற்றை எப்படி செய்வது?

1. நாம் சாப்பிட்டு மீதம் உள்ள சாதத்தில்
சுமார் ஒரு மணிநேரம் கழித்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி மூடிவைத்து 6 முதல் 8 மணிநேரம் கழித்து திறந்து பார்த்தால் அமிர்த பானம் தயார்..

2. இதில் தேவையான அளவு சாதத்தை ஒரு மண்சட்டியில் எடுத்து அதனுடன் தயிர் கலந்து சின்னவெங்காயம், வெண்டைக்காய் ஆகிய வற்றையும் சிறிது சிறிதாக வெட்டிப்போட்டு, தேவைப்பட்டால் சிறுது உப்பையும் ஒரு பச்சை மிளகாவையும் கலந்து நன்றாக பிசைந்து சாப்பிட்டு பாருங்கள்….

ஆகா… இதுதான் தேவாமிர்தம் என்பதை
நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்….

இந்த உணவு முறையை வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமாவது கடைபிடியுங்கள்.

பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்தவர்கள் தேவர்கள்…….

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்..

இனியாவது குப்பை உணவான பர்கரையும், பீட்சாவையும், புரோட்டவையும் தேடி அலைவதை நிறுத்துவோம்... உடல் நலத்தை
பேணுவோம்...

பாஜக மோடி Vs ஹிட்லர்...


குழந்தைத் திருமணம் என்பது தெலுங்கின திராவிடர் கொள்கையே...


பெண்கள் மீதான அடக்கு முறைகளிலேயே தலையானது குழந்தைத் திருமணம்.

அதில் முன்னணியில் இருந்தது தெலுங்கு இனமே.

1931 ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கட்தொகை கணக்கீட்டில் உள்ள ஒரு பக்கத்தை இங்கே தருகிறேன்.

அப்படியே ஈ.வே.ரா முதலில் திருமணம் செய்த பெண்ணின் வயதையும்,
இரண்டாம் திருமணத்தில் அவரது வயதையும் பொருத்திப் பார்த்தால் உண்மை விளங்கும்.

தமிழினம் எப்போதும் பெண்ணடிமை சிந்தனைக்கு இடமளித்ததில்லை...

அதிமுக அமைச்சர் தெர்மாகோல் செல்லூர் ராஜூ வை அனைவரும் பாராட்டிய போது...


சீனப்பயணியின் தமிழ்க் கல்வெட்டு தென்னிலங்கையில்...


கி.பி. 1409 ம் ஆண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு தென்னிலங்கையில் காலி (Galle)யில் எஸ்.எச்.தொம்லின் என்பவரால் 1911ல் கண்டெடுக்கப்பட்டது.

இது செங் ஹெ (Zheng He) எனும் சீன கடலோடி சீனம், தமிழ், பாரசீகம் என மூன்று மொழிகளில் காணப்படுகிறது.

சிங்களத்தில் இல்லை.

சிவனொளிபாதமலை மீது இருக்கும் அல்லா,
தமிழர் கடவுளான தேனாவரை நாயனார்,
மற்றும் புத்தர் கோவில்களுக்கு கொடுத்த கொடை பற்றி கூறுகிறது.

அதாவது புத்தமதம் பற்றி இருக்கிறதே தவிர சிங்களவர் பற்றி எதுவுமே இல்லை.

செங் ஹே எனும் சீனக் கடற்படைத் தளபதி மற்றும் நாடுகாண் பயணி ஒரு இசுலாமியர் ஆவார்.

இவர் சிவனொளிபாத மலையின் (Adam's peak) அல்லா என்று குறிப்பிடுவது இறைவன் எனும் பொருளில் இருக்கலாம்.

ஏனென்றால் 1766ல் தான் முதன்முதலாக சிவனொளிபாதமலை பௌத்தர்களுக்கும் திறந்துவிடப்பட்டது.
அதுவரை அது சைவர்களின் புனிதத்தலமே.

தேனாவரை நாயனார் கோயில் தென்னிலங்கையின் தொண்டீஸ்வரம் (donra) ஆகும்.

இது போர்த்துகேயர்களால் இடிக்கப்பட்டுவிட்டது.

இது இருந்த தேவேந்திரமுனை (தேவிநுவர)யில் பெருமாள் கோவில் ஒன்று சிங்களவர்களால் கட்டப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

இவர்கள் வைணவ பற்றாளரான நாயக்கர் வம்சாவழி சிங்களவராக இருக்கலாம்.

தென்னிலங்கையில் தற்போதைய தலைநகரம் கொழும்பு அருகே  கோட்டை கட்டி ஆண்ட அழகேஸ்வரன் என்ற மன்னன் அழகேஸ்வரன்.

இக்கோட்டை ஸ்ரீ ஜயவர்த்தன கோட்டை என்று அழைக்கப்படுகிறது.

அழகேஸ்வரன் என்ன காரணத்தாலோ செங் ஹே வருகையை எதிர்த்துள்ளான்.

செங் ஹே படையுடன் அவன் நாட்டில் இறங்கி போர் செய்து தோற்கடித்து கைது செய்து சீனாவுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பிறகு விடுவித்துவிட்டனர் என்றாலும் அழகேஸ்வரனின் கோட்டை அரசு (kotte kingdom) சிங்களவர் கைக்குப் போனது.

பிறகு இந்த கோட்டை அரசின் காலமே சிங்கள மொழியின் பொற்காலம் எனுமளவு சிங்களம் வளர்ச்சியடைந்தது.

அதாவது 1400களில் சிங்களவர்கள் மொழியாலும் நாகரீகத்தாலும் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்துள்ளனர் எனலாம்.

600 ஆண்டுகள் முன்பு வரை கூட தென்முனை வரை தமிழர்கள் வாழ்ந்துள்ளனர். ஆண்டுள்ளனர்.

இதற்கு அசைக்க முடியாத சான்று செங் ஹே அவர்களின் காலி மும்மொழி கல்வெட்டு ஆகும்...

கள்ளழகர் கதை ஒரு பொய்க்கதை...


திருமலை நாயக்கர் காலத்திற்கு முன், மாசி மாதத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடக்கும்..

இரண்டு மாதம் கழித்து,சித்திரை மாதத்தில் அழகர் ஆற்றில் இறங்குவார்.

அப்படி என்றால் கள்ளழகர், மீனாட்சி கல்யாணத்தைப் பார்க்க வருகிறார் என்ற கதை பொய்தானே?

திருமலை நாயக்கர் இந்த இரண்டு விழாவையும் ஒன்றாக்கி சித்திரையில் கொண்டாடுமாறு மாற்றியமைத்துள்ளார்.

மீனாட்சியம்மனும் சுந்தரேஸ்வரரும் தம்பதிகளாக ஊர்வலம் வரும் தெருக்கள் இன்றும் மாசிவீதிகள் என்று அழைக்கப்படுகின்றன.

மீனாட்சி அழகரின் தங்கை என்பதற்கு எனக்குத் தெரிந்தவரை எந்த சான்றும் கிடையாது.

இதேபோல இராசராசனின் சதய திருவிழாவும் மாதம் மாற்றப்பட்டுள்ளது.

கடவுள்கள் வரலாறை.. ஆள்பவன் நினைத்தால் மாற்ற முடிகிறதே?

வந்தேறிகள் இப்படித்தான் ஆளும் அதிகாரத்தைக் கைப்பற்றி தமிழர்களின் ஒவ்வொரு விழாவையும் குழப்பி  வைத்துள்ளனர்...

வைகோ நாயுடு வின் 30 வருட அரசியல்......



ஆர்எஸ்எஸ் தேசவிரோத அமைப்பை சேர்ந்த ஒருவரை ஜனாதிபதியாக்குவதே பாஜகவின் குறிக்கோள்...


அப்படி ஜனாதிபதியாக்கபட வேண்டுமெனில் அதிமுக ஆதரவு கட்டாயம் தேவை அதற்கு தான் தினகரனுக்கு தொடர்ச்சியான சிக்கலும் தற்போது கைதும்...

பாஜக திருடனுங்க ஒருத்தனும் இதுக்கு பதில் சொல்ல மாட்டான்...


84 நோபல் பரிசுகள் பெற்ற ஒரே குட்டி நாடு ... உங்களுக்கு தெரியுமா?


எல்லோரும் தெரிந்து கொள்ள ஒரு பதிவு...

ஒரு சின்ன குட்டி நாடு மொத்தமே ஒன்றரை கோடி தான் மக்கள் தொகை ஆனால் உலகத்தையே அவர்கள் தான் மறைமுகமாக ஆள்கிறார்கள் எப்படி ?

அந்த நாட்டை பற்றி மக்களை பற்றிய சிறு குறிப்புகள்...

கல்யாணம் பண்ணனும்னா ஏதாவது ஒரு துறையில் டாக்டர் பட்டம் வாங்கி இருக்க வேண்டுமாம்.

கல்லூரியில் சேர முதலில் 5000 டாலர் கொடுத்து ஏதாவது ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து 15 பேருக்கு வேலை கொடுத்த பின்பு அதை 15000 டாலர் ஆக்கினால் தான் கல்லூரியில் சீட் கிடைக்குமாம் இதனால் இன்று உலகத்தில் உள்ள பாதி முக்கிய ப்ரெண்டெட் நிறுவனங்கள் அந்த நாட்டை சேர்ந்தவை தான்.

உலகத்தில் உள்ள அணைத்து சிறுவர் கார்ட்டூன் படங்களை தயாரிப்பது அவர்கள் தான் அவர்கள் நாட்டின் குழந்தைகள் அதை பார்ப்பதில்லை அங்கு அது தடை செய்ய பட்டுள்ளது.

உலகத்தில் முதன் முதாலாக தற்பொழுது வங்கிகளில் கடன் கொடுக்கும் கடன் வாங்கும் விதத்தை உலகத்துக்கு கத்து கொடுத்தது இவர்கள் தான்.

கர்ப்பிணி பெண்கள் தொலைக்காட்சி , சினிமா பார்க்க அனுமதிக்க படுவதில்லை , அதற்கு பதில் கற்பமாக இருக்கும் பொழுது கணக்கு ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் பாடம் படிப்பார்களாம் , அப்பொழுது பிறக்கும் குழந்தைகள் அறிவாக பிறக்கிறார்கலாம்..


உலகத்தில் அதிகம் நோபல் பரிசு வென்றவர்கள் இந்த நாட்டில் தான் மொத்தம் 84 பேர்.

உலகத்தில் மெத்த படித்த மேதாவிகளும் உலகத்தை மறைமுகமாக ஆளும் தந்திரமும் மிக்கவர்கள் உள்ள ஒரே நாடு.

இவர்களை யாரும் ஒன்றும் செய்ய முடியவில்லை இப்படி இன்னும் ஏராளாமான விஷயங்கள் அந்த நாட்டை பற்றி தெரிந்த உடன் இப்பொழுது தெரிகிறது அவர்கள் எல்லோரையும் ஆள என்ன காரணம் என்று..

அந்த நாடு தான் யூதர்களின் இஸ்ரேல்...

அவன நாங்க மட்டும் தான்டா அடிப்போம்...


ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 38...


உடலின் ஏழு சக்ராக்கள்...

நம் முன்னோர்கள் மனித உடலில் ஏழு சக்தி மையங்கள் இருப்பதாகக் கருதினார்கள். அந்த சக்தி மையங்களை சக்ரா என்றழைத்தார்கள். அந்த சக்தி மையங்கள் இருப்பதாக சீனா, திபெத் போன்ற நாட்டு முன்னோர்களும் நம்பி வந்தனர். இந்த சக்ராக்களின் தன்மையைப் பொறுத்தே மனிதர்களின் தன்மையும், ஆற்றலும், அறிவும் அமைகிறதாக அவர்கள் நம்பினார்கள். ஒவ்வொரு சக்ராவும் புறக்கண்ணால் காண முடியாததாக இருந்தாலும் சூட்சும சரீரத்தில் இருக்கும் சக்தி மையங்களாக அவர்கள் அவற்றைக் கண்டதோடு அந்த சக்ராக்களுக்குத் தனித்தனியாக சின்னங்களும், நிறங்களும், மந்திர சப்தங்களும் ஒதுக்கி இருந்தார்கள். ஒவ்வொரு சக்ராவும் தனித்தன்மை கொண்டதாகவும், சில குறிப்பிட்ட சக்திகளை மையமாகக் கொண்டதாகவும், அந்த சக்திகளை உருவாக்கவும், கட்டுப்படுத்தவும் முடிந்ததாகவும் கருதப்பட்டது. குண்டலினி சக்தியும் இந்த சக்ராக்களின் வழியாகத் தான் மேலே எழுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

இருபதாம் நூற்றாண்டில் பல மேலை நாட்டு அறிஞர்களும் இந்த சக்ராக்களில் காட்டிய ஈடுபாடும், ரெய்கி போன்ற மாற்று சிகிச்சை முறைகளில் இந்த சக்ராக்களைப் பயன்படுத்தியதும், தியான முறைகளில் பயன்படுத்தியதும் உலகளவில் இந்த சக்ரா முறைகளைப் பிரபலப்படுத்தின.

இனி ஏழு சக்ராக்களையும் அறிந்து கொள்வோம்.

1) மூலாதார சக்ரா – இது மனித உடலில் ஆசன வாயின் அருகே அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது. மரத்திற்கு வேர் எப்படியோ அப்படியே உடல் வலிமைக்கு ஆணிவேராக இந்த சக்ரா விளங்குகிறது. அமைப்பில் நான்கு இதழ் தாமரையுடன் உள்ள இதன் நிறம் சிவப்பு. இது லா என்ற சத்தத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மந்திரமாக உச்சரிக்கும் போது லாம், லாங் என்ற இரு உச்சரிப்புகளுக்கு இடையே உச்சரிக்கப்படுகிறது. அதாவது லா என்கிற ஒலி பிரதானமாக உச்சரிக்கப்பட்டு அது முடிகிற போது ம்/ங் ஒலிகளின் மெலிதான சேர்க்கையோடு முடிகிறது. இந்த மந்திர ஒலியால் இந்த சக்ரா சக்தி பெறுகிறது. உடல் ஆரோக்கியம், தற்காப்பு ஆகியவற்றிற்கு இந்த சக்ராவின் செயல்பாடு முக்கியம்.

2) ஸ்வாதிஷ்டானா சக்ரா -  இது மனித உடலில் ஆண்/பெண் குறி பாகத்தில், இன விருத்தி உறுப்புகளை ஒட்டி அமைந்துள்ளது. இது ஆறு இதழ் தாமரை அமைப்பில் ஆரஞ்சு நிறத்தில் அமைந்துள்ளது. இது வா என்ற எழுத்தின் ஒலியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மந்திரமாக உச்சரிக்கும் போது இது வாம்/வாங் இவற்றின் இடைப்பட்ட உச்சரிப்பாக இருக்கிறது. அதாவது வா பிரதானமாக உச்சரிக்கப்பட்டு அது முடிகிற போது ம்/ங் ஒலிகளின் மெலிதான சேர்க்கையோடு முடிகிறது. இந்த மந்திர ஒலியால் இந்த சக்ரா சக்தி பெறுகிறது. இனவிருத்தி, அடிப்படை உணர்ச்சிகள், அடிப்படைத் தேவைகள் ஆகியவற்றிற்கு இந்த சக்ராவின் செயல்பாடு சரியாக இருப்பது முக்கியம்.

3) மணிபுரா சக்ரா - இது மனித உடலில் தொப்புளுக்குக் கீழ் வயிற்றுப் பகுதியில் அமைந்துள்ளது. இது பத்து இதழ் தாமரை அமைப்பில் மஞ்சள் நிறத்தில் அமைந்துள்ளது. இது ரா என்ற எழுத்தின் ஒலியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மந்திரமாக உச்சரிக்கும் போது இது ராம்/ராங் இவற்றின் இடைப்பட்ட உச்சரிப்பாக இருக்கிறது. அதாவது ரா பிரதானமாக உச்சரிக்கப்பட்டு அது முடிகிற போது ம்/ங் ஒலிகளின் மெலிதான சேர்க்கையோடு முடிகிறது. இந்த மந்திர ஒலியால் இந்த சக்ரா சக்தி பெறுகிறது. ஜீரணம், செயலாற்றத் தேவையான சக்தி, எண்ணங்களால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் ஆகியவை இந்த சக்ராவின் கட்டுப்பாட்டில் வருகின்றன.

4) அனாஹதா சக்ரா - இது மனிதனின் நெஞ்சுப்பகுதியில் அமைந்துள்ளது. இது பன்னிரண்டு இதழ் தாமரை அமைப்பில் பச்சை நிறத்தில் உருவகப்படுத்தப்படுகிறது. இது யா என்ற எழுத்தின் ஒலியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மந்திரமாக உச்சரிக்கும் போது இது யாம்/யாங் இவற்றின் இடைப்பட்ட உச்சரிப்பாக இருக்கிறது. அதாவது யா பிரதானமாக உச்சரிக்கப்பட்டு அது முடிகிற போது ம்/ங் ஒலிகளின் மெலிதான சேர்க்கையோடு முடிகிறது. இந்த மந்திர ஒலியால் இந்த சக்ரா சக்தி பெறுகிறது. இதயமும், அன்பு, கருணை, இரக்கம் போன்ற மேலான உணர்வுகளும் இந்த சக்ராவின் கட்டுப்பாட்டில் வருகின்றன.

5) விசுத்தா அல்லது விசுத்தி சக்ரா - இது மனிதனின் தொண்டைப் பகுதியில் அமைந்துள்ளது இது பதினாறு தாமரை இதழ்கள் கொண்ட தாமரையாக நீல நிறத்தில் இருக்கிறது. இது ஹா என்ற எழுத்தின் ஒலியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மந்திரமாக உச்சரிக்கும் போது இது ஹாம்/ஹாங் இவற்றின் இடைப்பட்ட உச்சரிப்பாக இருக்கிறது. அதாவது ஹா பிரதானமாக உச்சரிக்கப்பட்டு அது முடிகிற போது ம்/ங் ஒலிகளின் மெலிதான சேர்க்கையோடு முடிகிறது. இந்த மந்திர ஒலியால் இந்த சக்தி பெறுகிறது. தைராய்டு சுரப்பியும், பேச்சுத் திறனும், எந்த விஷயத்தையும் அடுத்தவருக்குப் புரிய வைக்கும் சக்தியும் இந்த சக்ராவின் செயல்பாட்டைப் பொறுத்து அமைகின்றன.

6) ஆஜனா சக்ரா -  இது இரு புருவங்களுக்கிடையில் பொட்டு வைக்கும் நெற்றிப் பகுதியில் அமைந்துள்ளது. இதை நெற்றிக் கண் சக்ரா என்றும் அழைக்கிறார்கள். இது கருநீல நிறத்தில் இரண்டு இதழ் தாமரை சின்னத்தில் அமைந்துள்ளது. இது ஓம் என்ற மந்திர சப்தத்தில் சக்தி பெறுகிறது. ஆங்கிலத்தில் aum என்று உச்சரிப்பிற்கிணையாக இந்த ஓம் இருக்கிறது. கூர்மையான, தெளிவான புறப்பார்வை மற்றும் அகப்பார்வை, ஆழ்மன சக்திகள், ஞானத் தெளிவு ஆகியவை இந்தச் சக்ராவின் செயல்பாட்டைப் பொறுத்து அமைகிறது.

7) சஹஸ்ரரா சக்ரா - இது தலையின் உச்சிப்பகுதியில் அமைந்துள்ளது. ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை வடிவத்தில் கருஞ்சிவப்பு நிறத்தில் இந்த சக்ரா அமைந்துள்ளது. இது ஆ என்ற எழுத்தில் ஆரம்பித்து ஓம் (aum) என்று முடியும் படியான மந்திர உச்சரிப்பில் பலம் பெறுகிறது. ஆத்ம ஞானம், தெய்வீக சக்திகள் போன்றவை கைகூடுவது இந்த சக்ராவின் குறையற்ற செயல்பாட்டாலேயே.

இந்த ஏழு சக்ராவின் சின்னங்களையும், மந்திர சப்தங்களையும் கூடுமான வரை மனதில் இருத்துங்கள். சக்ரா தியான முறையை அடுத்து பார்க்கலாம்.

மேலும் பயணிப்போம்....

பாஜக எச்ச. ராஜா சர்மா கலாட்டா...