கி.பி. 1409 ம் ஆண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு தென்னிலங்கையில் காலி (Galle)யில் எஸ்.எச்.தொம்லின் என்பவரால் 1911ல் கண்டெடுக்கப்பட்டது.
இது செங் ஹெ (Zheng He) எனும் சீன கடலோடி சீனம், தமிழ், பாரசீகம் என மூன்று மொழிகளில் காணப்படுகிறது.
சிங்களத்தில் இல்லை.
சிவனொளிபாதமலை மீது இருக்கும் அல்லா,
தமிழர் கடவுளான தேனாவரை நாயனார்,
மற்றும் புத்தர் கோவில்களுக்கு கொடுத்த கொடை பற்றி கூறுகிறது.
அதாவது புத்தமதம் பற்றி இருக்கிறதே தவிர சிங்களவர் பற்றி எதுவுமே இல்லை.
செங் ஹே எனும் சீனக் கடற்படைத் தளபதி மற்றும் நாடுகாண் பயணி ஒரு இசுலாமியர் ஆவார்.
இவர் சிவனொளிபாத மலையின் (Adam's peak) அல்லா என்று குறிப்பிடுவது இறைவன் எனும் பொருளில் இருக்கலாம்.
ஏனென்றால் 1766ல் தான் முதன்முதலாக சிவனொளிபாதமலை பௌத்தர்களுக்கும் திறந்துவிடப்பட்டது.
அதுவரை அது சைவர்களின் புனிதத்தலமே.
தேனாவரை நாயனார் கோயில் தென்னிலங்கையின் தொண்டீஸ்வரம் (donra) ஆகும்.
இது போர்த்துகேயர்களால் இடிக்கப்பட்டுவிட்டது.
இது இருந்த தேவேந்திரமுனை (தேவிநுவர)யில் பெருமாள் கோவில் ஒன்று சிங்களவர்களால் கட்டப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
இவர்கள் வைணவ பற்றாளரான நாயக்கர் வம்சாவழி சிங்களவராக இருக்கலாம்.
தென்னிலங்கையில் தற்போதைய தலைநகரம் கொழும்பு அருகே கோட்டை கட்டி ஆண்ட அழகேஸ்வரன் என்ற மன்னன் அழகேஸ்வரன்.
இக்கோட்டை ஸ்ரீ ஜயவர்த்தன கோட்டை என்று அழைக்கப்படுகிறது.
அழகேஸ்வரன் என்ன காரணத்தாலோ செங் ஹே வருகையை எதிர்த்துள்ளான்.
செங் ஹே படையுடன் அவன் நாட்டில் இறங்கி போர் செய்து தோற்கடித்து கைது செய்து சீனாவுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பிறகு விடுவித்துவிட்டனர் என்றாலும் அழகேஸ்வரனின் கோட்டை அரசு (kotte kingdom) சிங்களவர் கைக்குப் போனது.
பிறகு இந்த கோட்டை அரசின் காலமே சிங்கள மொழியின் பொற்காலம் எனுமளவு சிங்களம் வளர்ச்சியடைந்தது.
அதாவது 1400களில் சிங்களவர்கள் மொழியாலும் நாகரீகத்தாலும் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்துள்ளனர் எனலாம்.
600 ஆண்டுகள் முன்பு வரை கூட தென்முனை வரை தமிழர்கள் வாழ்ந்துள்ளனர். ஆண்டுள்ளனர்.
இதற்கு அசைக்க முடியாத சான்று செங் ஹே அவர்களின் காலி மும்மொழி கல்வெட்டு ஆகும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.