தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் பல அதிர்ச்சிகரமான விஷயங்கள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக நள்ளிரவு நேரத்தில் தான் இந்த விஷயங்கள் நடந்து வருகின்றன.
முதலில், செப்டம்பர் 22ம் தேதி உடல்நலக் குறைவால், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக நள்ளிரவில் தகவல் வெளியானது, அதனை தொடர்ந்து, அவரது இறப்பு நள்ளிரவில் அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, தமிழக அரசியலில் பல அதிரடி மாற்றங்கள் அரங்கேறின.
ஜெயலலிதா மரண செய்தி வெளியான உடன் நள்ளிரவிலேயே ஓ.பி.எஸ் முதல்வராக பதவியேற்க, அமைச்சரவையும் பதவியேற்றது.
இரவோடு இரவாக தமிழக அரசியல் களமே தலைகீழானது.
இதனைத்தொடர்ந்து, சசிகலா பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டு, பதவியேற்கும் முன்பு, ஓ.பி.எஸ், தியானம் மேற்கொண்டு நள்ளிரவில் பரபரப்பை கிளப்பினார். இதனையடுத்து, அரசியல் களம் சூடுப்பிடிக்க தொடங்கியது.
பின்னர், சொத்து குவிப்பு வழக்கு, சசிகலா கைது, தினகரன் பதவியேற்பு என அதிமுக பல அதிரடி மாற்றங்களையும், திருப்பங்களையும் சந்தித்தது.
தினகரன் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக கட்சியினர் இரவில் அறிவித்தனர். இரவோடு இரவாக சசிகலா அணியினர் பல்டி அடித்தனர்.
தொடர்ந்து, தற்போது இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் வழங்கிய புகாரில் தினகரன் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கடந்த சில மாதங்களாக தமிழக அரசியலில் நடந்து வரும் மாற்றங்கள் இரவு நேரத்தில் தான் நடந்து வருகிறது. பலர் , இது இறந்த ஜெயலலிதாவின் ஆவி செய்யும் செயல், அவர்களுக்கு செய்த பாவம் தான் இவ்வாறு நடக்கிறது என்று கூறி வரும் நிலையில், இல்லை இது நாட்டை ஆளும் காவியின் செயல் என்று சிலர் கூறுகின்றனர்.
எது எப்படியோ, இரவு நேரத்தில் நாட்டை அழிக்காமல் இருந்தால் சரி...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.