19/07/2018

மக்கள் சிந்திக்க கூடாது என்பதில் அதிகார வர்க்கம் தெளிவாக இருக்கிறது...




இறுதியாக நீங்கள் எப்போது சிந்தித்து செயல்பட்டீர்கள் என நினைவு கூறுங்கள்...

சத்தியமாக எப்போது சிந்தித்தோம் என்று கூட நினைவில் வர்றாது..

அப்படியெனில் நீங்கள் சிந்திக்கவே இல்லையென்றுதான் அர்த்தம்..

இதுதான் உளவியல் தாக்குதல்...

அதிமுக, திமுக தலைவர்களும், நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தக்காரர்களும் அமைத்துள்ள சுரண்டல் கூட்டணி: பாமக அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு...


அரசியலில் எதிரிகளைப் போலக் காட்டிக்கொள்ளும் இரு திராவிடக் கட்சிகளும் ஊழல் செய்வதிலும், கருப்புப் பணத்தை மாற்றுவதிலும் மட்டும் ஒன்றாக கைகோத்துள்ளன என்று வருமான வரித்துறை ரெய்டு குறித்து அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டு வரும் எஸ்.பி.கே நிறுவன உரிமையாளர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு சொந்தமான 50-க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்டு வரும் வருமானவரித்துறை சோதனைகளில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் தங்கக்கட்டிகள் குறித்த விவரங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. இவை அனைத்தும் முறையாக ஈட்டிய சொத்துகள் அல்ல என்பதிலிருந்தே தமிழகத்தில் ஊழல் தலைவிரித்தாடுவதைப் புரிந்துகொள்ள முடியும்.

எஸ்.பி.கே நிறுவன உரிமையாளர் செய்யாத்துரை, அவரது மகன் நாகராஜ், அவர்களின் தொழில் பங்குதாரர்கள் உள்ளிட்டோருக்கு சொந்தமான 30-க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்டு வரும் சோதனைகளில் இதுவரை 150 கோடி பணம், 120 கிலோ தங்கம் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவை தவிர பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. ஒப்பந்த அடிப்படையில் நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணியை மேற்கொண்டு வரும் நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் இல்லத்தில் இவ்வளவு பணம் ரொக்கமாக வைத்திருக்க வேண்டிய தேவையே இல்லை.

சாலை அமைக்கும் பணிக்கும், ரொக்கப்பணம் மற்றும் தங்கக்கட்டிகளுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இதிலிருந்தே கைப்பற்றப் பணம் மற்றும் தங்கக்கட்டிகள் அதிகாரத்தில் உள்ள வேறு யாருக்கோ சொந்தமானவை என்பதை ஐயத்திற்கு இடமின்றி தெரிந்து கொள்ளலாம். வருமானவரி சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட செய்யாத்துரை, அவரது மகன் நாகராஜுக்கு உள்ள அரசியல் மற்றும் தொழில் தொடர்புகளை ஆராய்ந்தாலே அந்தப் பணம் யாருக்கு சொந்தம் என்பதை கண்டுபிடித்துவிட முடியும்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி சுப்பிரமணியம், உறவினர் ராமலிங்கம், சேகர் ரெட்டி ஆகியோரும், எஸ்.பி.கே உரிமையாளர்களும் தொழில் கூட்டாளிகள் என்பதுடன், அவர்கள் கூட்டாகச் சேர்ந்து தான் தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான நெடுஞ்சாலைத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 7 ஆண்டுகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நெடுஞ்சாலைப் பணிகளை இந்தக் கூட்டணி தான் செய்திருக்கிறது.

இப்போது கூட ரூ.7940 கோடி மதிப்புள்ள சாலைப் பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் கூட செய்யாத்துரைக்கு சொந்தமான எஸ்.பி.கே நிறுவனத்துக்குத் தான் வழங்கப்பட்டிருக்கிறது என்பதிலிருந்தே அவருக்கும், ஆட்சியாளர்களுக்கும் உள்ள தொடர்பையும், கைப்பற்றப்பட்ட பணம் யாருக்கு சொந்தமானதாக இருக்கக்கூடும் என்பதை யூகித்துக் கொள்ளலாம்.

தமிழகத்தின் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக கடந்த 2011-ம் ஆண்டு முதல் இன்று வரை வழங்கப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் எஸ்.பி.கே நிறுவனம், சேகர் ரெட்டி, எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி சுப்பிரமணியம், உறவினர் ராமலிங்கம் ஆகியோருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருவதற்கு காரணம் அவர்களுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையில் அமைக்கப்பட்டுள்ள ஊழல் கூட்டணி தான் என்பதை மறுக்க முடியாது. இக்கூட்டணியில் திமுகவும் இணைந்துள்ளது.

சுருக்கமாகக் கூற வேண்டுமானால் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளின் தலைவர்களும் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தக்காரர்களும் கூட்டணி அமைத்துக் கொண்டு மக்களின் வரிப் பணத்தை ஊழல் செய்து சுரண்டுதல், அவ்வாறு சுரண்டி சேர்த்த கருப்புப்பணத்தை வெள்ளையாக மாற்றுதல் உள்ளிட்ட பணிகளைத் தான் செய்து வருகின்றனர். அரசியலில் எதிரிகளைப் போலக் காட்டிக் கொள்ளும் இரு திராவிடக் கட்சிகளும் ஊழல் செய்வதிலும், கருப்புப் பணத்தை மாற்றுவதிலும் மட்டும் ஒன்றாக கைகோத்துள்ளன.

ஓட்டுக்கு ரூ.200, ரூ.300 கொடுத்து வெற்றி பெற்ற அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் எந்த அளவுக்கு கூட்டணி அமைத்து ஊழல் செய்கின்றன என்பதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். இவர்களைத் தேர்ந்தெடுத்ததற்காக வருத்தப்பட வேண்டும். இனிவரும் தேர்தல்களிலாவது எந்தக் கட்சி பணம் கொடுத்தாலும் அதற்கு மயங்காமல் மக்களுக்காக நன்மை செய்யும் கட்சியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

வருமானவரிச் சோதனையில் சிக்கியுள்ள நிறுவனத்திற்கும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மூத்த அமைச்சர்கள் சிலருக்கும் உள்ள தொடர்புக்கான ஆதாரங்கள் இந்தச் சோதனையில் சிக்கியிருப்பதாகக்
கூறப்படுகிறது. சேகர் ரெட்டி, ராமமோகன்ரெட்டி முதல் சசிகலா குடும்பத்தினர் வரை இதுவரை நடத்தப்பட்ட வருமானவரி சோதனைகளில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வில்லை.

அதேபோல், இந்தச் சோதனையையும் முடித்துக் கொள்ளாமல் இந்த நிறுவனத்திற்கும், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் உள்ள தொடர்பு, நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதில் நடந்த ஊழல்கள், கருப்புப் பணம் எங்கெல்லாம் முதலீடு செய்யப்பட்டுள்ளது ஆகியவை குறித்து வருமானவரித்துறை, அமலாக்கப்பிரிவு, சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளின் அதிகாரிகளைக் கொண்ட பல்முனை விசாரணைக் குழுவை அமைத்து விசாரிக்க மத்திய ஆட்சியாளர்கள் ஆணையிட வேண்டும்''என்று அன்புமணி தெரிவித்துள்ளார்...

ஓ.பி.எஸ். மீதான சொத்துக்குவிப்பு புகார் பற்றி ஏன் சி.பி.ஐ. விசாரணைக்கு ஏன் உத்தரவிடக்கூடாது? என்று தி.மு.க. தொடர்ந்த வழக்கில் அரசு வழக்கறிஞரிடம் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ..


வருமான வரித்துறை நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளன. சோதனைக்கு ஆளானவர் டைரியில் ஓ.பி.எஸ். பெயரும் உள்ளதே என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மேலும் அரசு பதில் தர உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் திங்கள்கிழமைக்கு வழக்கை ஒத்திவைத்தது.

சி.பி.ஐ.க்கு புகார் மனுவை வழங்குமாறு தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...

இயற்கை வாழ்க்கைக்கு திரும்புவோம்...


பாலிதீன், பிளாஸ்டிக் உபயோகிப்பதால் அது பூமியில் ஒரு அடுக்கு போல படிந்து, மழை நீரை மேலேயே தேங்கச் செய்கிறது, இதனால் நீர் பூமிக்குள் செல்லாமல் மீண்டும் ஆவியாகி சென்றுவிடுகிறது...


கடந்த 50 ஆண்டுகளாக பெருகிவரும் கட்டடங்கள், தார், சிமெண்ட் ரோடுகள், பிளாஸ்டிக் குப்பைகளாலும்,
பெரும்பாலான மழை நீர் பூமிக்குள் செல்வது தடுக்கப்பட்டு மீண்டும் வீணாக  ஆவியாகி சென்றுவிடுகிறது..

மேலும் மரங்கள் வெட்டப்படுவதாலும், ஆற்றில் மணல் அள்ளுவதலும், குவாரிகளில் கனிமங்களை எடுக்க பெரும் பள்ளம் தொண்டுவதாலும் 

நிலத்தடி நீர் மட்டம்  வெகுவாக குறைந்து இன்னும் 4 ஆண்டுகளில் நிலத்தடி நீரே இல்லாத நிலைக்கு செல்லும் என்று ஆய்வுகள் கூறுகிறது..

இதன் தீவிரம் தெரியாமல் மக்களும் கடைக்காரர்களும் ஒன்றுக்கு இரண்டாக பிளாஸ்டிக் பைகளை உபயோகித்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

குடிக்க, விவசாயம் செய்ய என வாழ்வின் முக்கிய தேவை நீர் தான்... பிளாஸ்டிக் உபயோகத்தை குறைத்து, மரம் நட்டு, மழை நீரை சேமிக்காவிட்டால் மூன்றாம் உலக போர் தண்ணீருக்காக தான் ஏற்படும்...

பக்கோடா விற்ற ஜேஎன்யு மாணவருக்கு ரூ. 20,000 அபராதம்...


ஒரு ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவேன் என வாக்குறுதி அளித்த மோடி, பிரதமராகி 4 ஆண்டுகளாகியும் இன்னும் யாருக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தவில்லை.

இதை கண்டித்து ஜேஎன்யு மாணவர்கள் சாலைகளில் பக்கோடா தயாரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மணீஷ்குமார் என்ற மாணவருக்கு பல்கலைக்கழக நிர்வாகம் ரூ. 20,000ம் அபராதம் விதித்திருப்பதாக தெரியவந்துள்ளது...

இன்னுமா வானிலையை கட்டுபடுத்த முடியாது என நினைக்கிறீர்கள்?? இனியும் நம்பாவிட்டால் நாம் தான் முட்டாள்...


திரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து...


இன்றைய காலத்தில் கடினமாக உழைப்பதை விட, புத்திசாலித்தனமாக வேலையை முடிப்பதே மிகவும் முக்கியம்.

அதைப்போல் நமது பிரச்சனைகளை சரியாகத் தீர்க்கும் விதமாக எதையும் கையாள வேண்டியுள்ளது. இதற்கு உடலும் உள்ளமும் முழுத் தகுதியுடன் இருந்தால் தான் இவை சாத்தியமாகும். உடலும் உள்ளமும் முழுத்தகுதியுடன் விளங்குவதற்கு, அன்றாட வேலைகளை ஒரு ஒழுங்கு முறையுடன் செய்து வர வேண்டும். முறையான மற்றும் கட்டுப்பாடான உணவுப்பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். வாழ்க்கையை உடலளவில் மிகவும் வசதியான முறையில் வாழ்கிறோம். ஆனால், மனதளவில் மிகவும் அழுத்தம் நிறைந்த வாழ்க்கையை தான் வாழ்கிறோம். இத்தகைய வாழ்க்கை முறை சீக்கிரமாகவே முதுமையாக உணர வைத்து விடும் அல்லது பல நோய்களுக்கு வழிவகுக்கும்.

திரிபலா என்றால் என்ன?

திரிபலா என்பது பாரம்பரிய ஆயுர்வேத மருந்து. இது ஒரு ரசாயனமாகவும், காயகல்பமாகவும் கருதப்படுகிறது. மூன்று மூலிகைகள் சேர்ந்த கூட்டுப்பொருள் தான் திரிபலா. அம்மூன்று மூலிகைகளாவன நெல்லிக்காய் (Emblica officinalis),கடுக்காய் (Terminalia chebula) மற்றும் தான்றிக்காய் (Terminalia belerica) ஆகும்.

திரிபலா எப்படி நமக்கு உதவுகின்றது?

திரிபலா என்பது அற்புதமான ஆயுர்வேத மருத்துவத் தயாரிப்பு ஆகும். ஆயுர்வேத மருத்துவர்களால், உலகம் முழுவதும் பரவலாக எந்த நோய்க்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுவது திரிபலா. சர்க சம்ஹிதா என்னும் ஆயுர்வேத நூலில் முதல் அத்தியாயத்திலேயே திரிபலாவைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான விஷயமாகும். நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய இம்மூன்றின் கலவையானது அற்புதமான காயகல்பமாகி, தேவர்களின் அமிர்தத்தினைப் போல் எந்த ஒரு வியாதியையும் தீர்க்கும் அற்புத சக்தியினைப் பெற்றுள்ளது.

நோய் எதிர்ப்புச் சக்தி..

ஆயுர்வேதத்தில் திரிபலா என்பது இளமையை பாதுகாக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது நமக்கு முதுமைத் தன்மையை நீக்கி இளமைத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் என்று பொருள். இது உடல் ஆரோக்கியத்தினை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டவும் உதவுகிறது. ஆரோக்கியமான வாழ்வில் நோய் எதிர்ப்புச் சக்தி என்பது ஒரு முக்கியமான அங்கமாகும். இது எப்போதுமே அதிகமாகவே இருக்க வேண்டும். நமது உடலில் இயற்கையாகவே அமைந்திருக்கும் தடுப்பு அரண்களைத் தாண்டி, உடலின் உள்ளே நுழையும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் 'ஆன்டிபாடி' (antibodies) எனப்படும் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய, இந்த திரிபலா உதவுகிறது.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்..

உடலில் செல்களுக்கிடையில் நடைபெறும் வளர்ச்சிதை மாற்றத்தில், சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்டாக திரிபலா செயலாற்றுகிறது. நமக்கு முதுமையைத் தரும் முக்கியமான காரணியான "கட்டற்ற காரணிகளை" (free radicals) உற்பத்தி செய்யும் வாய்ப்பைக் குறைக்கிறது. மேலும் செல்கள் முறையாகச் செயல்படுவதற்கு முக்கியமாகத் தேவைப்படும் மைட்டோகாண்டிரியா, கோல்கை உறுப்புகள், உட்கரு ஆகியவை சிறப்பாகச் செயல்படுவதையும் திரிபலா தூண்டுகிறது.

செரிமானமின்மை..

செரிமானக் கோளாறுகளை திரிபலா அற்புதமாக குணப்படுத்துகிறது. அதிலும் உணவுப்பாதையில், மலத்தினை வெளித்தள்ளும் குடலியக்கத்தை சீராக செயல்பட வைக்கிறது. மேலும் இரத்தத்தில் உள்ள கொழுப்பினை கரைக்க தேவைப்படும் பைல் (Bile) திரவத்தினை கல்லீரலிலிருந்து சுரக்கவும் உதவுகிறது. உணவுப்பாதையில் தேவையான கார அமிலநிலையை (pH level) தேவையான நிலையில் பேணுவதற்கும் துணை புரிகிறது.

மலச்சிக்கல்..

திரிபலா ஒரு சிறந்த குடல் சுத்திகரிப்பானாகச் செயல்படுகிறது. மலச்சிக்கலுக்கு அதிகமாகப் பரிந்துரைக்கப்படும் இயற்கை மருந்து திரிபலாவாகும். உடலிலுள்ள நச்சுப்பொருட்களை நீக்கும் நச்சு நீக்கியாகவும் இது செயலாற்றுகிறது. சிறந்த மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.

வயிற்றுப் பூச்சிகளும் தொற்றுகளும்..

வயிற்றில் பூச்சி வளர்வதையும், தொற்றுக்களையும் கட்டுப்படுத்தும் சக்தி வாய்ந்தது தான் திரிபலா. குறிப்பாக வயிற்றிலிருந்து நாடாப்புழுக்களையும், வளையப்புழுக்களையும் வெளியே அகற்றுவதற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் உடலில் பூச்சிகளும், நுண்கிருமிகளும் வளர்வதற்கு உதவாத நச்சு நிலையை உடலில் பேணுவதற்கு திரிபலா உதவுகிறது.

இரத்தசோகை..

இரத்தத்தில் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க திரிபலா உதவுகிறது. இதன் மூலம் இரத்த சோகை என்னும் நோயைத் தீர்க்க முடியும். (இரத்த சோகை என்பது இரத்தத்தில், ஹீமோகுளோபின் எனப்படும் இரத்த சிவப்பு அணுக்களின் அளவு குறைந்து காணப்படும் நிலையாகும்).

சர்க்கரை நோய்..

திரிபலா சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பு மிக்கது. நமது கணையத்தினைத் (pancreas) தூண்டி, இன்சுலினை சுரக்கச் செய்கிறது. கணையத்தில்தான் இன்சுலினைச் சுரக்கும் லாங்கர்ஹான் திட்டுக்கள் (langerhans) எனப்படும் சுரப்பிகள் உள்ளன. மேலும் உடலில் குளுகோஸின் அளவை சமநிலையில் பேணுவதில் பெரும் பொறுப்பு வகிப்பது இன்சுலின் ஆகும். மேலும் திரிபலா கசப்புச் சுவையுடன் இருப்பதனால், சர்க்கரை நோயின் ஒரு நிலையான ஹைப்பர்கிளைசீமியா (hyperglycemia) எனப்படும் அதிக சர்க்கரை நிலையில், இதனை எடுத்துக் கொள்வது சிறப்பானது.

உடல்பருமன்..

இயல்பை விட உடல் பருமனானவர்கள், திரிபலாவை உட்கொள்வது மிகவும் பயன்தரும். இதனுடைய மருத்துவக் குணத்தினால் உடலிலுள்ள கொழுப்பின் அளவினைக் குறைக்க முடியும். நமது உடலில் கொழுப்பு படிவதற்குக் காரணமான அடிபோஸ் செல்களைக் குறி வைத்து செயல்படுவதால், கொழுப்பின் அளவு குறைகிறது. இதன் மூலம் உடல் பருமன் கட்டுப்படுத்தப்படுகிறது.

சருமப் பிரச்சனைகள்..

இது இரத்தத்தினைச் சுத்தம் செய்து இரத்தத்திலுள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றும் தன்மை கொண்டிருப்பதால், சரும நோய்களுக்கான மருத்துவத்தில் பெரும் பங்காற்றுகிறது. இரத்தத்தினைச் சுத்திகரிக்கும் தன்மை கொண்டிருப்பதால், தொற்று நோய்களையும் தீர்க்கும் குணம் கொண்டுள்ளது.

சுவாசக் கோளாறுகள்..

சுவாசப் பாதையிலுள்ள அடைப்புகளை நீக்கி சீரான சுவாசம் ஏற்பட பெரிதும் உதவுகிறது. சைனஸ் என்னும் நோயைத் தீர்க்கும் மருந்தாகவும் இது செயல்படுகிறது. மேலும் நமது சுவாசப்பாதையிலுள்ள சளியில் பாக்டீரியாக்கள் வளராமலும் இது தடுக்கிறது.

தலைவலி..

தலைவலிக்கு நிவாரணமாகவும் திரிபலா பயன்படுகிறது. குறிப்பாக வளர்சிதை மாற்றத்தின் இடையூறுகளால் உண்டாகும் தலைவலிக்கு சிறப்பான நிவாரணத்தை அளிக்கிறது.

புற்று நோய்..

புதுடில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வுகளின் படி, திரிபலாவுக்கு புற்றுநோயைக் குணப்படுத்தும் திறன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் செல்களில் மைட்டேடிக் நிலையில் ஸ்பிண்டில் வடிவத்தோற்றம் உண்டாவதைக் குறைக்க உதவி செய்கிறது. அதன்மூலம், புற்றுநோய் செல்களில் மெடாஸ்டேடிஸ் (metastasis) வளரும் அபாயத்தையும் குறைக்கிறது...

இராமனும் தமிழனே...


2300 ஆண்டுகளுக்கு முன்பு கி.மு.295 வாக்கில்.. சந்திரகுப்த மௌரியரின் மகன் பிம்பிசாரன் ஆட்சி இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரவிவிட்டது.

தமிழ்மண் மட்டும்  எதிர்த்து நின்றது.

கரிகாலனின் தந்தையான இளஞ்சேட்சென்னி தலைமையில் தமிழ் மூவேந்தரும் சேர்ந்து கூட்டணி அமைத்து அந்த பெரிய படையெடுப்பை முறியடிக்கிறார்கள்.

இந்த செருப்பாழி போரின் வெற்றியைப் பாடினார் ஊன்பொதி பசுங்குடையார்.

இளஞ்சேட்சென்னி அவருக்கு அளவுக்கதிமாக விலையுயர்ந்த புதிய ஆபரணங்களை அளிக்கிறான்.

புலவரின் குடும்பத்தினர் அந்த நகைகளை எப்படி அணிவது என்று தெரியாததால் கண்டபடி அள்ளிப்போட்டுக் கொள்கின்றனர்.

இதை இராவணன் சீதையைக் கடத்திச் சென்ற போது வழிநெடுக அவள் கழற்றி எறிந்த நகைகளை குரங்குகள் கண்டபடி அணிந்து கொண்டதுடன் ஒப்பிடுகிறார் புலவர்.

கடுந்தெறல் *இராமன்* உடன் புணர் சீதையை
வலித்த கை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழை பொலிந்து ஆங்கு

(புறநானூறு 378)

இராமன் இராவணனை வென்றபிறகு பாண்டிய நாட்டுக்கு வருகிறான்.

கோடி என்ற இடத்தில் (தனுஷ்கோடி) ஒரு ஆலமரத்தடியில் ஆமர்ந்து வேதங்களை ஓதுகிறான்.

(இராவணனைப் போல இராமனும் தமிழ்ப் பார்ப்பானோ?)

அப்போது அம்மரம் (அதில் இருந்த உயிர்கள்) ஒலி எதுவும் எழுப்பாமல் அமைதியாக இருந்ததாம்.

வென்வேல் கவுரியர் தொன்முது கோடி
முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன் துறை
வெல்போர் *இராமன்* அருமறைக்கு அவித்த
பல்வீழ் ஆலம் போல ஒலி அவிந்தன்று இவ் அழுங்கல் ஊரே

( அகநானூறு 70)

மணிமேகலை கூறுவதைக் கேளுங்கள்..

நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி
அடல் அரு முந்நீர் அடைத்த ஞான்று
குரங்கு கொணர்ந்து எறிந்த நெடு மலை எல்லாம்
அணங்கு உடை அளக்கர் வயிறு புக்காங்கு
இட்டது ஆற்றாக் கட்டு அழல் கடும் பசிப்
பட்டேன் என் தன் பழ வினைப் பயத்தால்

(உலக அறவி புக்க காதை, 10-20)

பூமியில் பிறந்த நெடியோனின் (திருமாலின்) அவதாரம் (இராமன்),
கடலை வழிமறிக்க குரங்குகள் கொண்டு வந்து போட்ட மலைகள் எல்லாம் கடலில் அமிழ்ந்து மறைந்தது போல
என் அடங்காப் பசியினால் நான் உண்ணும் உணவு மறைந்து விடுகிறது என்று வருகிறது.

இதே மணிமேகலையில் வேறொரு இடத்தில்..

மீட்சி என்பது *இராமன்* வென்றான் என
மாட்சி இல் இராவணன் தோற்றமை மதித்தல்

(சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை, 50-60)
என்று வருகிறது.

அதாவது இராமன் வென்றான் எனில் இராவணன் தோற்றான் என்றுதானே பொருள் என்று வினவுவது போல் உள்ளது.

சிலப்பதிகாரம், புறஞ்சேரியிறுத்த காதையில்..

அருங்கான் அடைந்த
அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப்

என்று கோவலன் இல்லாத காவிரிப் பூம்பட்டிணத்தை
காட்டிற்கு சென்ற ராமன் இல்லாத அயோத்தியுடன் ஒப்பிடுகிறார் இளங்கோவடிகள்.

அன்று இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் விளங்கியது தமிழே.

தென்குமரி வடபெருங்கல்
குணகுட கடலா வெல்லைத் தோன்று மொழிந்து தொழில் கேட்ப

என்று மதுரைக்காஞ்சி கூறுகிறதே..

இராவணனைப் போலவே கரிய நிற இராமனும் ஒரு தமிழனே.

இருவருக்கும் நடந்த போர்க்கதை (இராமாயணம்) அன்றே தமிழ் மக்களுக்குத் தெரிந்திருக்கிறது.

ஏற்கனவே தெரிந்த ஒன்றைத்தானே எடுத்துக்காட்டாகக் காட்ட முடியும்.

எனவே வடமொழி புளுகுப் புராணமான இராமயணம் தமிழர் வரலாற்றை திரித்து எழுதிய கதையே ஆகும்.

https://ta.m.wikipedia.org/wiki/சங்கப்_பாடல்களில்_இராமாயணம்

ஊழலை தான் விரட்டல.. பறவையாவது விரட்டுங்க...


நம் உரிமைகள் அனைத்து வழிகளிலும் பறிக்கப்படுகிறது என்றால், நம் உரிமைகள் எத்தகைய வலிமையுடையதாக இருக்கக்கூடும்...


அந்த உரிமைகளின் வலிமையை நாம் கண்டிப்பாக உணர வேண்டும்..

அதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் முன்னெடுக்க வேண்டும்...

ஸ்டெர்லைட் திட்டமிடல்...


பாசிட்டிவ் எனர்ஜி....


உலகம் முழுமைக்கும் ஆக்க சக்திகளாக இருப்பவற்றை பாசிட்டிவ் எனர்ஜி என்கிறோம். ’நீங்க நல்லா இருக்கணும், வாழ்க வளமுடன்’ போன்ற வாழ்த்துச் சொற்கள் பலவும் பாசிட்டிவ் எனர்ஜியை சேர்ந்தவை.

வங்கி வாசலில் பேனா இல்லாமல் தவித்தும்போது உதவியவரிடம் புன்முறுவலிடம் நன்றி என சொல்வது, சாலையில் நடப்பட்ட மரத்திற்கு ஒருவாளித் தண்ணீர் ஊற்றுவது போன்ற பலவும் பாசிட்டிவ் எனர்ஜியை வெளிப்படுத்தும் செயல்கள்தான். நற்செயல்களின் மூலாதாரம், பாசிட்டிவ் எனர்ஜி. அது ஒன்றின் வளர்ச்சியை கூட்டும். அவ்வளர்ச்சியை பாதுகாக்கும்.

பாசிட்டிவ் எனர்ஜியின் பகையாளிதான் நெகட்டிவ் எனர்ஜி. ’அவன் அழியணும், அந்த குடும்பம் அழியணும், அவன் வீட்டு மாடு சாகணும், விவசாயம் பொய்க்கணும், பிசினஸ் நொடிக்கணும்’ போன்ற வசவு உணர்வுகள் நெகட்டிவ் எனர்ஜியை சேர்ந்தது. ஒன்றின் அழிவை, ஒருவரின் துயரத்தை நேசிக்கக்கூடியது. தீய நிகழ்வுகளின் தூண்டுகோலாக இருப்பது நெகட்டிவ் எனர்ஜி. இத்தகைய இரண்டு எனர்ஜிகளின் பிறப்பிடம், வாழ்விடம் எது? மனிதனின் சிந்தனை அறைதான்.

இரு சக்திகளும் ஒரே அறையில்தான் வித்தாக விழ்கிறது. அதில் எந்த விதை செடியாகும், எந்த விதை மரமாகும் என்பது அம்மனிதனுக்குக் கிடைக்கிற சூழ்நிலையே முதலில் முடிவு செய்கிறது.

மனிதன் தனக்குக் கிடைக்கிற சூழ்நிலையால் சிந்தனைகளைப் பெறுகிறான். இயல்பாகவே நல்ல சூழ்நிலையை பெறுகிறவன் பாக்கியசாலிதான். அவனுக்கு நற்சிந்தனை, நல்ல செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு எளிதில் கிட்டிவிடும். சமூகம் ’நல்லவர்’ என்ற பட்டியலில் சீக்கிரமே இணைத்துக் கொள்ளும்.

இவர், தன்னம்பிக்கை, மகிழ்ச்சி, பொறுமை, சகிப்புத்தன்மை, மற்றவரை வாழ்த்தும் உணர்வு போன்ற பண்புகளால் கட்டமைக்கப்படுவார். இவரிடம் நெகட்டிவ் எனர்ஜி அடங்கிக் கிடக்கும். இவரது ஆளுமையில் மற்றவர்கள் கட்டுண்டு போவர். எதிர்பாராதவிதமாக நல்ல சூழ்நிலைகள் இவரை விட்டு விலகினாலோ, மாறினாலோ எனர்ஜியும் மாற்றம் அடையும். நெகட்டிவ் எனர்ஜி ஆளுமை செய்ய முற்படும். எனினும் அவரது நற்சிந்தனை அனுபவத்தால் அது நிரந்தரமாகி விடாமல் பாசிட்டிவ் எனர்ஜியை நோக்கி உடனுக்குடன் மீண்டு கொள்வார்.

கடலில் எவ்வாறு ஒவ்வொரு நாளும் நீர் தளும்பலில் உள்வாங்குதல், வெளி தள்ளுதல் ஏற்படுகிறதோ, அப்படி ஒரு நிகழ்வு போல மனிதனின் மன நிலையில் இத்தகைய ஏற்ற இறக்கங்களை சூழ்நிலைகள் நாளொரு பொழுதும் உருவாக்கிக் கொண்டே இருக்கும்.

இயல்பிலேயே நல்ல சூழ்நிலை, குடும்பநிலை அமையாதவர்கள், சூழ்நிலையின் பாதிப்பால் வாழ்வில் தன்னம்பிக்கை இழந்து, விரக்தி நிறைந்து, பயம், கோபம் மிகுந்து. மற்றவர்களை ஏக்கத்தோடும், பொறாமையோடும் காண்பவர்களாகவும், தன்னையே தனக்குள் தாழ்த்தி கொண்டும் வாழ்வர். இவரிடம் எளிதில் நெகட்டிவ் எனர்ஜி வெற்றி கொள்ளும். ஆளுமை செய்யும். பாசிட்டிவ் எனர்ஜி அடங்கிக் கிடக்கும். எதிர்பாராதவிதமாக தீய சூழ்நிலைகள் இவரை விட்டு விலகினாலோ, மாறினாலோ எனர்ஜியும் மாற்றமடையும். அடங்கிக் கிடந்த பாசிட்டிவ் எனர்ஜி துளிர்க்கும். எனினும் அது நிரந்தரமாக வளர்ந்து விடாமல் அதுநாள் வரை ஆதிக்கம் செய்த நெகட்டிவ் எனர்ஜி கண்காணிக்கும். ஒவ்வொரு நாளும் இந்த எனர்ஜி மாற்றம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

பலமுறை நிகழும் இத்தகைய மாற்றங்களில் அதிகமாக எந்த எனர்ஜி அவரை வழி நடத்துகிறதோ அதன் பலன்களை, பாதிப்புகளை அவரது வாழ்விலும், அவரைச் சேர்ந்தவர்கள் வாழ்விலும் எதிரொலிக்கும். உதாரணமாக பாசிட்டிவ் எனர்ஜி மிகுந்த ஒருவரை டிராஃபிக்கில் கெட்ட வார்த்தையால் ஒருவன் திட்டி விடுகிறான் என வைத்துக்கொள்வோம். திட்டியவனைத் திரும்ப மோசமான கெட்ட வார்த்தையால் திட்ட வேண்டும் என தோன்றும். முடியாது. அப்போது மனதில் நெகட்டிவ் எனர்ஜி எழும். திட்டியவன் மீது பாய வேண்டிய நெகட்டிவ் எனர்ஜி சம்மந்தமே இல்லாமல் அலுவலகத்தில் பணி செய்யும் எளிய ஊழியரின் சிறு தவறைச் சுட்டிக்காட்டி அவர் மீது பாய்ந்து விடும். அவர் என்ன செய்வார் அவருக்குச் சாதகமான இடத்தில் வெளியிடுவார். இப்படியாக இது பரவும்.

ஆக உள்வாங்கப்படும் எனர்ஜியைப் பொறுத்து சார்ந்தவர்களையும் பாதிக்கும், அல்லது பலனளிக்கும்.

மனிதர்கள் தங்களுக்குள் எழுப்பிக் கொள்ளும் எனர்ஜிகளில் ஒவ்வொரு நாளும் எந்த சக்தியின் ஆதிக்கம் அதிகரிக்கிறதோ, அதற்கான விளைவுகளை அவர் சார்ந்துள்ள சமூகமும், இந்த உலகமும் சந்திக்கிறது.

இத்தகைய பலப் பரிட்சை, அதனால் எழும் விளைவுகளால்தான் இந்த உலகம் பல ஆயிரம் ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்டு வருகிறது.

ஒட்டுமொத்த மனிதகுலம் அனைத்திற்கும் முழுமையாகவும், முழுநேரமும் பாசிட்டிவ் எனர்ஜி சூழ்ந்திருக்க உத்தேசித்தே மதங்களின் உபதேசங்கள், வழி நடத்தைகள் அமைந்திருக்கின்றன. உலகில் மதங்கள் அனைத்துமே நற்சிந்தனைகள், நற்செயல்களை வழிமொழிகின்றன.

நான் எப்போதோ படித்த நிகழ்வு ஒன்றை இங்கே நினைப்படுத்துகிறேன். ’மகிழ்ச்சியை விதைப்பவர்’ என்ற பெயரில் அதைப் படித்த நினைவு. ஒருவர் தினமும் காலையில் பத்து ரூபாய்க்கு ஒரு ரூபா நாணயங்களாக மாற்றிக்கொண்டு நடைப்பயிற்சிக்குச் செல்வாராம். செல்லும்போது வேண்டுமென்றே அங்கொன்றும், இங்கொன்றுமாக நாணயங்களை வேண்டுமென கிழே போட்டு வைப்பாராம். காலையில் அதைக் கண்டெடுக்கும் பிற மனிதர்கள் ’இன்று அதிஷ்ட நாள்’ என சிறு மகிழ்ச்சிக்கு உள்ளாவர் இல்லையா? அதற்காகத்தான் அப்படிச் செய்வாராம். ஏனெனில் அம்மகிழ்ச்சி அலைகள் சமூகத்திற்குத்தானே திரும்பவும் கிடைக்கும். அதற்காக அப்படி நடந்துகொள்வாராம் அம்மனிதர்.

சூழ்நிலை தான் ஒரு மனிதனுக்கு சிந்தனைத் தருகிறது. அச்சிந்தனையே அவனிடமிருந்து சொல்லாக வெளிவருகிறது. அச்சொல்லே அவனது செயலாகிறது. தொடர்ச்சியான செயலே பண்பாகிறது. அப்பண்பே அம்மனிதன் மரபணுவில் பதிவு பெறுகிறது. அடுத்த சந்ததிக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது. எனவே வாழும் வீட்டில் சமூகத்தில், நாட்டில் பாசிட்டிவ் எனர்ஜியை பரவ விடுங்கள். அதை உருவாக்குங்கள். உங்களுக்கும் சமூகம் பாசிட்டிவ் எனர்ஜியையே திரும்ப வழங்கும்...

சாவுங்கடா மொத்த பயலுகளும்...


இலுமினாட்டி - பங்குனி உத்திரம் & கிருஸ்தவர்களின் ஈஸ்டர் இவை இரண்டும் ஒரே நாளில் வர காரணம்...


இரண்டுமே சூரியன் உச்சமடைவதை குறிப்பதாகும்..

இயேசுவும்  12 சீடர்கள் என்பது ...
சூரியனும் 12 இராசிகளின் குறியீடு...

கோவில்கள் சூரிய வழிபாட்டுக்காக கட்டப்பட்ட கட்டிடம்...

வழிபாடு என்பது சூடம் பத்தி காட்டுவது இல்லை நாட்களை கணித்து அதன் அடிப்படையில் செயல் செய்து வாழ்தல்...

பாஜக மோடியும் எடப்பாடி பழனிச்சாமியும்....


புற்றுநோய் - CANCER.. கேன்சர் ஒரு நோய் என்னும் வார்த்தையே பொய்...


உங்களால் நம்ப முடியாது ஒரு அதிர்ச்சியான உண்மை என்னவென்றால் புற்றுநோயை என்பது நோய் அல்ல வியாபாரம்.

புற்றுநோய் என்பது இன்று பரவி வரும் கொடிய நோய் மட்டுமின்றி குழந்தைகள், சிறார்கள், மற்றும் பெரியவர்கள் என அனைவரிடமும் பாரபட்சம் பார்க்காமல் பற்றிக்கொள்ளும் கொடிய நோய் ஆகும்.

கேன்சர் இல்லா உலகம் - (WORLD WITHOUT CANCER) எனும் புத்தகம் உ ங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.

இன்றும் உலகம் முழுவதும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதற்கு தடுக்கப்படுவதும், தடுக்கப்படுவதற்கு உண்டான காரணமும் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.

இது வரை தெரியாத ஒரு வியாபார தந்திர உண்மையை தயவுசெய்து தெரிந்து கொள்ளுங்கள்,கேன்சர் என்பது நோய் அல்ல அது வைட்டமின் B17ன் குறைபாடு.

இதற்காக கீமோதெரபி, அறுவை சிகிச்சை மற்றும் பக்க விளைவுகள் தரும் மருந்தை தயவுசெய்து எடுத்துக்கொள்ள வேண்டாம்.

கடந்த காலத்தில் ஸ்கர்வி ( Scurvy ) எனும் ஒரு கொடிய நோய் கடல்வாழ் மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்தது. இதன் மூலம் பல பெரிய கைகள் நல்ல லாபம் பார்த்தன. ஆனால் பிறகு ஸ்கர்வி என்பது நோய் அல்ல வைட்டமின் C ன் குறைபாடு என்பது தெரியவந்தது.

கேன்சர் என்பதும் இதுபோன்றதே நோய் அல்ல வைட்டமின் B17 குறைபாடு என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன். மனித குலத்திற்கு தீங்கு விளைவிக்கும் சிலர் இதை வியாபாரம் ஆக்கி பில்லியன் இல் புரளுகின்றனர்.

இனி இந்த கேன்சர் நோயிலிருந்து விடுபடும் வழிமுறைகளை பார்க்கலாம்.

நீங்கள் கேன்சர் ஆல் பாதிக்கப்பட்டவரா? முதலில் அது எந்த வகை என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும். பயம் கொள்ள வேண்டாம்.

தினமும் 15 முதல் 20 ஆப்ரிகாட் பழத்தை உண்டு வந்தாலே போதுமானது. இதில் வைட்டமின் B17 நிறைந்துள்ளது.

முளைகட்டிய கோதுமை கேன்சர் ஐ எதிர்த்து போராடக்கூடிய வல்லமைபெற்றது. இதில் வளமான நீர்த்த ஆக்சிஜன் மற்றும் கேன்சர் ஐ எதிர்த்து போராடக்கூடிய LAETRILE லேட்ரில் உள்ளது.

ஒரு அமெரிக்க மருந்து நிறுவனம் இதை சட்டத்திற்கு புறம்பாக உற்பத்தி செய்து மெக்ஸிகோ விலிருந்து உலகம் முழுவதும் விநியோகிக்கபடுகிறது. அமெரிக்காவிற்கும் இது ரகசிய முறையில் கடத்தி கொண்டு செல்லப்படுகிறது .

DR . ஹரோல்ட் W . மேன்னர் என்பவர் "டெத் ஆப் கேன்சர்" என்னும் புத்தகத்தில் LAETRILE கொண்டு கேன்சர் ஐ எதிர்க்கும் மருத்துவ முறையில் 90% வெற்றி கண்டார்.

கேன்சர் குறைபாடு நீக்க உண்ண வேண்டிய உணவுகள்...

1. காய்கறிகள்- பீன்ஸ் , சோளம்,  லீமா பீன்ஸ், பச்சை பட்டாணி, பூசணி.

2.பருப்பு வகைகள்- லென்டில் ( மைசூர் பருப்பு என சொல்வார்கள்) முலை கட்டியது, பிட்டர் ஆல்மண்ட் மற்றும் இந்தியன் அல்மோன்ட் ( பாதம் பருப்பு), இதில் இயற்கையாகவே வைட்டமின் பி-17 நிறைந்துள்ளது.

3. பழங்கள்-முசுக்கட்டை பழம் ( Mullberries )இல் கருப்பு முசுக்கட்டை , பிளூபெர்ரி , ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி.

4. விதைகள்- எள் (வெள்ளை & கருப்பு) , ஆளி விதை.

5. அரிசி வகைகள்- ஓட்ஸ், பார்லி அரிசி, பழுப்பு அரிசி ( Brown Rice ), உமி நீக்கப்பட்ட கோதுமை, பச்சரிசி.

6. தானியங்கள்- கம்பு, குதிரைவாலி.

கேன்சர் உணவுகள் ஒரு பட்டியல்..

அப்ரிகாட்
லிமா பீன்ஸ்
ஃபாவா பீன்ஸ் ( Fava Beans )
கோதுமை புல் ( Wheat Grass)
பாதாம்
ராஸ்பெரிஸ்
ஸ்ட்ராபெர்ரி
ப்ளாக்க்பெரி
பிளூபெர்ரி
பக் வீட் ( Buck Wheat )
சோளம்
பார்லி
குதிரைவாலி
முந்திரி
மெகடாமியா கொட்டைகள் ( Macadamia Nuts )
முளைகட்டிய பீன்ஸ்
இவை அனைத்தும் பி-17 நிறைந்த உணவுகள்.

இதை கவனிக்க வேண்டிய மிக அபாயகரமான விஷயம் என்னவென்றால் நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் handwash liquid , dishwash liquid இல் அதிகளவு கேன்சர் ஐ ஏற்படுத்த கூடிய பொருட்கள் உள்ளது.

நாம் இதை பயன்படுத்தும் பொழுது இது நம் கைகளிலோ , உணவு தட்டுகளிலோ படிந்துவிடுகிறது. இது 100 முறை கழுவினாலும் சுலபத்தில் நீங்குவதில்லை.

மேலும் நாம் உணவை சூடாக பரிமாறும்பொழுது இது உணவின் வெப்பத்தால் அதனுடன் கலந்து உடம்பிற்குள் சென்று புற்றுநோயை உண்டாக்குகிறது.

இதை தவிர்ப்பதற்கு லீகுய்ட் ஜெல் உடன் சரி அளவு வினிகர் கலந்து உபயோகிக்கலாம்.

அதுமட்டுமின்றி நான் உண்ணும் காய்கறிகளில் கூட புற்றுநோயை உண்டாக்க கூடிய ரசாயனம் கலந்திருப்பதை நான் பலரும் அறிவோம்.

என்னதான் நாம் 100 முறை கழுவினாலும் தோல் மற்றும் தோலின் உட்புறங்களில் ரசாயன கிருமிகள் பரவிவிடும். அதற்கு சிறந்த வழி நீங்கள் தினமும் சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறிகளை வருடம் 365 நாளும் உப்பு நீரில் ஊரவைத்தே பயன்படுத்துங்கள். அப்படி ஊறவைத்த காய்களை புதியதாக வைக்க வினிகர் சேர்க்கலாம்.

கீழ்காணும் இணையதளத்தில் இருந்து எடுத்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது..

http://www.newsrescue.com/secret-uncovered-cancer-not-disease-business/#axzz4MOVbUFAi

இல்லாத கல்லூரிக்கு வேந்தரை நியமித்தார் பாஜக மோடி நண்பர் அம்பாணி...


தூதுவளையில் இவ்வளவு விஷயம் இருக்கா?


இது சயரோகம், பிரைமரி காம்ளக்ஸ், ஆஸ்துமா, டான்சிலிட் டீஸ், தைராய்டு கட்டிகள், வாயில், கன்னத்தில் ஏற்ப ம் கட்டிகளுக்கும் காதில் ஏற்படும் எழுச்சிக் கட்டிக்கும் பயன்படுகிறது. சளியைக் கரைக்கும் தன்மைக்கு முதலிடம் பெறுகிறது. தைராய்டு கட்டிகள் தோன்றியவுடன் தூதுவளையைப் பயன்படுத்தினால் நிரந்தரத் தீர்வு காணலாம்.

தூதுவளை இலையை சேகரித்து சுத்தம் செய்து, பதினைந்து முதல்
...ஐம்பது கிராம் வரை எடுத்து, ஊற வைத்த அரிசி சேர்த்து அரைத்து ரொட்டியாகத் தயாரித்து காலை உணவாக மூன்று ரொட்டிக்குக் குறையாமல் இரண்டு மாதங்கள் சாப்பிட்டால், பூரண குணம் ஏற்படும். முதல் பதினைந்து தினங்கள் முதல் தொண்டைவலி குறைய ஆரம்பிக்கும். பிறகு படிப்படியாக நோய் நிவாரணம் அடையும்.

தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.

இருபது கிராம் தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, சட்னியாகவோ, பச்சடியாகவோ தயாரித்து பயன்படுத்தினால், மேற்கண்ட நோய்கள் குணமாகும். இப்படி தயாரித்த துவையலை சாப்பிடும்போது காலை, மதியம், இரவு நேர உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் நல்ல பலனை உடனே காண முடியும். இவ்வாறு வாரத்தில் இரண்டு தினங்களாவது சாப்பிட்டு வந்தால் நோய்த் தடுப்பாகவும், நோய் தீர்க்கவும் பயன்படும். இம்முறையில் பயன்படுத்தினால் நுரையீரல் நோய்கள் வராமல் நுரையீரல் பாதுகாக்கப்படும். ஆஸ்துமா, ஈசனோபீலியா நோய் வராமல் தடுப்பு மருந்தாகவும், வந்தபின் நோய் நீக்கவும் பயன்படுகிறது. துவளையைப் பயன்படுத்துவதால் மூளை நரம்புகள் வலிமையடைகின்றன. இதனால் நினைவாற்றல் பெருக உதவியாக இருக்கிறது.

தூதுவிளங்காயைச் சேகரித்து மோரில் ஊற வைத்து வற்றலாகக் காயவைத்து வைத்துக் கொண்டு பனி மற்றும் மழைக்காலங்களில், எண்ணெயில் பொரித்து ஆகாரத்தில் சேர்த்துக் கொண்டால் ஆஸ்துமா நோய் தணியும். நுரையீரல் வலுவடையும்.

தூதுவளை இலையைப் பொடி செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். இப்பொடியை உபயோகிப்பதால் சளி, இருமல் நீங்குகிறது. பசியை உண்டாக்குகிறது. ஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம். இப்பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு கட்டுப்படும். இப்பொடியுடன் திப்பிலிப் பொடியை சமமாக சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால், இருமல் உடனே நின்று விடும்.

பசும்பாலில் இப்பொடியைச் சேர்த்து சாப்பிட்டால் பித்த நோயால் ஏற்படும் மயக்கம் தீரும். இப்பொடியை எருமை மோரில் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை நீங்கி இரத்த விருத்தி உண்டாகும்.

தண்ணீரில் கலந்து சாப்பிட்டால் செய்யான் கடி விஷம் தீரும்.

தூதுவளை இலையை நெய்யில் வதக்கி, துவையல் செய்து வாரத்தில் இரண்டு நாளாவது பயன்படுத்தினால் வாயுவைக் கண்டிக்கும். உடல் வலிமை ஏற்படும். மூலரோகப் பிணிகள் குறையும். தாம்பத்ய உறவு மேம்படும்.

ஆஸ்துமா நோயாளிகள், காலை வேளையில் வெறும் வயிற்றில் தூதுவளைச்சாறு 50 மில்லியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமாவினால் ஏற்படும் சளி, இருமல் கபத்தைப் போக்கும்.

தூதுவளை இலைச்சாறு 100 மில்லி, பசு நெய் 30 மில்லி, இரண்டையும் சேர்த்து தூள் செய்த கோஸ்டம் 5 கிராம் சேர்த்து பதமாய்க் காய்ச்சி வைத்துக் கொண்டு, இதில் ஒரு தேக்கரண்டியளவு, தினம் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் சாதாரண இருமல் முதல் கக்குவான் இருமல் வரை குணமாகும். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம், பத்தியமில்லை.

தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம். தொண்டைப் புற்று, கருப்பை புற்று, வாய்ப்புற்று ஆகிய வற்றிற்கு தூதுவளை மருந்து மிக்க நல்ல பலன் கொடுத்துள்ளது. ஆய்வு மூலம் தொண்டைப்புற்று, வாய்ப்புற்றுக்கு நல்ல மருந்தென நிரூபிக்கப்பட்டுள்ளது.

புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்ற பின் விளைவுகளான புற்றுநோய் எனக் கண்டறியப்பட்டால் ஆரம்ப நிலையிலே தூதுவளை இலையைப் பயன்படுத்தி, பூரண சுகாதாரத்தைச் சில மாதங்களிலே மீண்டும் பெற்று விடலாம்.

சித்த வைத்திய முறையில் தயாரிக்கப்படும் தூதுவளை நெய் பல நோய்களுக்கு நிவாரணமளிக்கிறது. தூதுவளை நெய்யை 1 முதல் இரண்டு தேக்கரண்டியளவு சாப்பிட்டால், எலும்புருக்கி நோய்கள், ஈளை இருமல், கபநோய்கள், மேக நோய்கள், வெப்பு நோய்கள், இரைப்பு, இளைப்பு இருமல் நோய்கள், வாய்வு, குண்டல வாயு முதலியன தீரும்.

தூதுவளையை மிக எளிய முறை உபயோகத்திலேயே பல நன்மைகளை அடைய முடியும்.

இதே போல தூது விளங்காயையும் சமைத்துச் சாப்பிட்டால், கப ரோகம் தீரும். பித்தவாயு இவைகள் நிவர்த்தியாகும்...

கன்னட ஈ.வே. ராமசாமி கண்ட கனவு பெண்ணிமென்ற பெயரில் விபச்சாரம்...


LIBERALIZATION தாராளமயமாக்கல்...

ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள் பிரச்சாரம்...


இன்று மதியம் 12 மணி அளவில்  ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி அளித்தால் விவசாயிகள் விவசாயம் செய்ய இயலாத நிலை வரும் எனவே குடியுரிமையை ஒப்படைத்து விட்டு பண்டம் பாத்திரத்தோடு ஊரை காலி செய்யும் நிலை வரும் என்பதனை காட்டும் வகையில் ஆதார் அட்டை ரேசன் கார்டு உள்ளிட்டவற்றை கையில் ஏந்தியும் பாத்திரங்களை வைத்து கொண்டும் நூதன பிரச்சாரம்...

தலைமை
தங்க சண்முக சுந்தரம்
அகில இந்திய மக்கள் சேவை இயக்க மாநில தலைவர்
திருச்சி மாவட்ட துணை செயலாளர் தனராசு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்...

அதிமுக எடப்பாடி யின் ஏமாற்று வேலை...


‘0’ மதிப்பெண் எடுத்தாலும் மருத்துவ இடம்: நீட்டை ஒழிக்க வேறு காரணம் தேவையா - பாமக அறிக்கை...


மருத்துவக் கல்வி வணிகமயமாவதைத் தடுக்கவும், அதன் தரத்தை உயர்த்தவும் தான் நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்து வரும் நிலையில், அது முற்றிலும் பொய் என்பதை புள்ளி விவரங்கள் நிரூபித்திருக்கின்றன. நீட் தேர்வில் 3 பாடங்களில் இரண்டில் ‘0’ அல்லது அதைவிட குறைவாக மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு கூட மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது என்பது தான் புள்ளிவிவரம் சொல்லும் சேதியாகும். இது கல்வியை கடைச்சரக்காக விற்கும் செயல் ஆகும்.

2017-ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் மொத்த மதிப்பெண்கள் 720-க்கு 150க்கும் குறைவான மதிப்பெண் பெற்றவர்களின் பாடவாரியான நீட் தேர்வு மதிப்பெண்களை டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் ஆய்வு செய்தது. அதில் நீட் தேர்வில் 150க்கும் குறைவான மதிப்பெண்கள் பெற்று தேசிய தரவரிசையில்  5 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் பிந்தைய இடத்தை பிடித்தவர்களில் 1990 பேர் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். இவர்களில் 530 பேர் இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் ஒற்றை இலக்க மதிப்பெண்கள் எடுத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 நீட் தேர்வு இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களில் தலா 180 மதிப்பெண்கள் வீதம் 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். இத்தேர்வில் 500-க்கும் கூடுதலான மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டும் தான் அரசு கல்லூரிகளில்  இடம் கிடைக்கும். 150-க்கும் குறைவான மதிப்பெண் என்பது எந்த வகையிலும் பரிசீலிக்கக் கூட தகுதியானதல்ல. ஆனாலும், இந்த மதிப்பெண் பெற்றவர்களில் 1990 பேர் மருத்துவப் படிப்பில் சேர முடிந்ததற்கு காரணம் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு சாதகமான விதிகள் தான். அதிலும் குறிப்பாக இந்த 1990 பேரில் 400 பேர் இயற்பியல் - வேதியியல் பாடங்களில்  9க்கும் குறைவான ஒற்றை இலக்க மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். 110 பேர் இந்த இரு பாடங்களில் ஏதேனும் ஒன்றிலோ அல்லது இரண்டிலுமோ பூஜ்ஜியம் அல்லது அதைவிடக் குறைவான எதிர்மறை மதிப்பெண்களை பெற்றுள்ளனர். எனினும், உயிரியல் பாடத்தில் சற்று கூடுதலான மதிப்பெண் எடுத்ததால் நீட் தேர்வில் அவர்களால் தேர்ச்சி பெற முடிந்துள்ளது. இவ்வாறு தேர்ச்சி பெற்ற 530 பேரில் 507 பேர் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்பில் சேர்ந்து ஓராண்டை முடித்துள்ளனர்.

கடந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்கு சுமார் 60,000 இடங்கள் மட்டுமே இருந்தன. தகுதி அடிப்படையில் இந்த இடங்கள் நிரப்பப்பட்டிருந்தால் தரவரிசையில் முதல் 75,000 இடங்களைப் பிடித்த  மாணவர்களுக்கு மட்டும் தான் வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும். ஆனால், தரவரிசையில் 50,000-க்குள் வந்த பலருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளிலோ, தனியார் மருத்துவக் கல்லூரிகளிலுள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களிலோ வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேநேரத்தில் தரவரிசையில் 5.30 லட்சத்திற்கும் கீழ் ஆறரை லட்சமாவது இடத்தைப் பிடித்தவர்களுக்குக் கூட தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவ இடம் கிடைத்துள்ளது. இதற்கு காரணம் 50,000க்குள் இடங்களைப் பிடித்தவர்களால் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் ஆண்டுக்கு ரூ.18 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை செலுத்திப் படிக்க வசதி இல்லை. அதனால் அவர்களால் மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை. அதேநேரத்தில் மதிப்பெண்களே இல்லாமல், பணத்தை குவித்து வைத்திருப்பவர்களால் நிகர்நிலைப் பல்கலை.களில் சேர முடிந்துள்ளது. அப்படியானால், மருத்துவப் படிப்பில் சேரத் தேவை மதிப்பெண்களா... கோடிகளா? என்ற வினா எழுகிறது.

இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் 180-க்கு பத்துக்கும் குறைவான மதிப்பெண் பெற்றவர்களால் மருத்துவக் கல்வியை எவ்வாறு கற்க முடியும்? அதன் நுணுக்கங்களை எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்? இவர்கள் தட்டுத்தடுமாறி மருத்துவர்கள் ஆனாலும் கூட இவர்கள் தரும் மருத்துவம்  எந்த அளவுக்கு தரமானதாக இருக்கும்? என்ற வினாக்களுக்கு மத்திய அரசு தான் விடையளிக்க வேண்டும்.
12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பாடங்களில் தேர்ச்சி பெறுவதற்கு 35% மதிப்பெண்களைப் பெற வேண்டியது கட்டாயமாகும். ஆனால், நீட் தேர்வில் அத்தகைய கட்டாயம்  எதுவும் கிடையாது. இத்தகைய சூழலில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு தகுதி இல்லை என்றும், நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு மருத்துவம் படிக்க தகுதியுள்ளது என்றும் கூறுவது எந்த வகையான சமூகநீதி? என்பதை நீட் தேர்வை ஆதரிப்பவர்கள் விளக்க வேண்டும்.

உண்மையில் நீட் தேர்வு 2010-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட போது, அதில் ஒவ்வொரு பாடத்திலும்  தேர்ச்சி பெற குறைந்தபட்ச மதிப்பெண் தேவை என அறிவிக்கப்பட்டிருந்தது. அத்தகைய நிபந்தனை விதிக்கப்பட்டால் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தேர்ச்சி பெற மாட்டார்கள், அத்தகைய சூழலில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் சேர மாணவர்கள் கிடைக்க மாட்டார்கள் என்பதால் பாடவாரியாக குறைந்தபட்ச மதிப்பெண் நிபந்தனை நீக்கப்பட்டது. இது தான் மருத்துவக்கல்வி சீரழிவின் தொடக்கமாகும்.

நீட் தேர்வின் நோக்கம் தரத்தை வளர்ப்பதா... நிகர்நிலை பல்கலை.களை வாழ வைப்பதா? என்று வினா எழுப்பி கடந்த ஜூன் 6-ஆம் தேதி பா.ம.க. அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில் கூறப்பட்டிருந்த குற்றச்சாற்றுகள் அனைத்தும் உண்மை; நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை வாழ வைப்பதற்காக மட்டுமே நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது இந்த புள்ளிவிவரங்கள் மூலம் நிரூபிக்கப் பட்டுள்ளது. இத்தகைய முறையில் மருத்துவப் படிப்பின் தரத்தை எந்த வகையிலும் உயர்த்த முடியாது. ஓட்டைகள் நிறைந்த நீட் தேர்வை ரத்து செய்ய இதை விட சிறந்த காரணம் தேவையில்லை. எனவே, அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரி இடங்களுக்கு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.  நிகர்நிலைப் பல்கலைக்கழக இடங்களுக்கு மட்டும் கடுமையான விதிகளுடன் நீட் தேர்வை நடத்த வேண்டும். அப்போது தான் மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்த முடியும்...

இலங்கை விற்பனைக்கு...


900 ஆண்டு பழைய எடின்பர்க் கோட்டை...


இந்த இடம் உலகின் பேய்  நடமாடும் இடங்களில் ஒன்றாகும். பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் இக் கோட்டைக்கு சென்றவர்கள் பேய்களை கண்டதாக கூறியுள்ளார்கள்.

ஒரு தலையில்லாத டிரம்மர், ஏழாண்டு போரில் இறந்த பிரஞ்சு கைதிகளின் ஆவிகள், அமெரிக்க புரட்சி போரில் இறந்த காலனித்துவ கைதிகளின் ஆவிகள் மற்றும் அடித்தளத்தில் உள்ள நாய் ஒன்றின் கல்லறைக்கருகில் நாயின் ஆவி நடமாடுவதையும் கண்ண்டுள்ளார்கள்...

இயற்கை வாழ்வுக்கு திரும்பு...


காவிரி ஆற்றைச் சுத்தம் செய்த திருச்சி மாணவர்கள்...


பொங்கி வரும் காவிரியை வரவேற்கும் விதமாக திருச்சியில் மாணவர்கள் காவிரி ஆற்றைச் சுத்தம் செய்தனர்.

கர்நாடகாவில் தென்மேற்குப் பருவமழை காரணமாக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால், காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள் முழுவதும் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ் அணையில் 123.10 அடி தண்ணீர் நிரம்பி உள்ளது. இதேபோல், கபினி அணையில் 2.282.50 அடி தண்ணீர் உள்ளதால், நீர்வரத்து கூடியுள்ளதால்,  தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு 1,05,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.  இதனால் ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரிக் கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக அணைகள் அனைத்தும் முழுமையாகத் திறந்துவிடப்பட்டுள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் மிக வேகமாக உயர்ந்து வருகிறது. தற்போது 80 அடி எட்டியுள்ள நிலையில் இன்னும் 10 நாள்களில் 90 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதனிடையே தமிழகத்தில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களைத் தூர்வாரி, காவிரி நீரைக் கடலில் வீணாகக் கலப்பதை தடுக்க வேண்டும் என அரசுக்குச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், திருச்சியில் தண்ணீர் அமைப்பின் சார்பில் காவிரியை வரவேற்கும் விதமாக  காவிரிக்கரைகளைத் தூய்மைப்படுத்தும்  பணி நடைபெற்றது. ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் நடைபெற்ற இந்தப் பணியை  திருச்சி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

தண்ணீர் அமைப்பின் தலைவர் சேகரன் தலைமையில்  நடந்த இந்த நிகழ்ச்சியில் திருச்சி ஜென்னிஸ் உணவக மேலாண்மைக் கல்லூரி முதல்வர் பொன்னிளங்கோ மற்றும் தண்ணீர் அமைப்பின்  செயலாளர் நீலமேகம், இணைச் செயலர்கள் சதீஷ்குமார், தாமஸ் மற்றும் அமைப்பின் ஆலோசனைக் குழு உறுப்பினர் ராஜா, லலிதா, மரகதம், ரமணா, தங்க யாழினி மற்றும் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்ற மாணவர்கள்  சகிதமாக தண்ணீர் அமைப்பினர் தூய்மைப் பணியைச் செய்தனர். அவர்களுடன் மாநகராட்சித் துப்புரவுப் பணியாளர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது மாணவர்கள், பெண்கள், சமூக ஆர்வலர்கள் அவருடன் இணைந்துகொண்டு, காவிரிக் கரைகளில் படித்துறைகளின் ஓரங்களில் மண்டிக் கிடக்கும் மக்காத பிளாஸ்டிக் பைகள், சடங்குகளுக்காக பொதுமக்கள் வீசி விட்டுச் சென்ற பழைய துணிகள், காலணிகள் உள்ளிட்ட குப்பைகளை அகற்றினர். அப்போது மாணவர்கள், காவிரியில் நீர்வரும் காலத்தில் கரைகளை தூய்மையாய் பாதுகாப்போம். நீர் நிலைகளை அசுத்தமாகாமல் தடுப்போம் என விழிப்பு உணர்வு பரப்புரையை பொதுமக்களிடம் விளக்கினர்.

ஓடி வரும் காவிரியைப் பார்ப்பதற்கு பலரும் ஆர்வமாக உள்ள நிலையில், மாணவர்கள் மிக ஆர்வமாக காவிரியைச் சுத்தம் செய்தது பலரையும் மெய் சிலிர்க்க வைத்தது...

உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார் அமேசான் நிறுவனர்...


காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியில் மாமூல் கேட்டு தள்ளுவண்டி வியாபாரியை தாக்கிய ரவுடிகள...


ஜிஎஸ்டி சாலை ஓரமாக தள்ளுவண்டி கடையில் சிற்றுண்டி விற்றுவந்த முதியவரிடம், அதே பகுதியை சேர்ந்த சிவா, சதிஷ் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளனர். பணம் தர மறுத்ததால், இருவரும் சேர்ந்து முதியவரை தாக்கினர். அங்கிருந்து ஓடி முயன்ற முதியவரை விடாமல் பிடித்து, சரமாரியாக அடித்து உதைத்தனர்.

பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இச்சம்பவத்தின் போது முதியவரை காப்பாற்ற யாரும் முயற்சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் முதியவர் ஒருவரை ரவுடிகள் தாக்கிய காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமரா ஒன்றியில் பதிவாகியது.அதன் உதவியால் தற்போது இந்த சம்பவம் குறித்து கூடுவாஞ்சேரி போலீசார், விசாரணை நடத்தி ரவுடிகள் சிவா, சதீஷை கைது செய்தனர்...

திருட்டு ஊடகங்களை இன்னும் நம்புகிறீர்களா.?


பாஜக மோடியின் கூட்டத்தில் கூரை சரிந்து விழுந்ததில் 20 பேர் காயம்...


பிரதமர் மோடியின் கூட்டத்தின் போது கூரை சரிந்து விழுந்ததில் காயம் அடைந்த 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்காள மாநிலம் சென்றுள்ள பிரதமர் மோடி மிட்னாபூரில் பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசினார். மழை பெய்துக் கொண்டிருந்த நிலையில் மேடை அமைக்கப்பட்டு இருந்த பகுதியின் நுழைவு வாயிலில் ஒருபுறம் சரிந்து விழுந்தது. கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் கூரை இடிந்து விழுந்ததில் 20 பேர் காயம் அடைந்தனர். உடனடியாக பா.ஜனதா தொண்டர்கள் தங்களுடைய மோட்டார் சைக்கிளில் காயம் அடைந்தவர்களை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றார்கள், பிரதமர் மோடியின் பாதுகாப்பு வாகனத்துடன் வந்த ஆம்புலன்ஸிலும் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி பேசிக்கொண்டு இருந்த போது அவருடைய கண்ணுக்கு எதிரேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. மருத்துவமனைக்கு சென்று பிரதமர் மோடி காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மழை காரணமாக இச்சம்பவம் நடைபெற்றுள்ளது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிட்னாப்பூரில் காலையில் கனமழை பெய்தது, தொடர்ந்து மழை பெய்துக்கொண்டே இருந்தது. மேலும் பந்தல் அமைக்கப்பட்ட இடங்களில் பிரதமர் மோடியை பார்ப்பதற்காக பொதுமக்கள் கம்பங்களில் ஏறியதாலும் பாதிப்பு நேரிட்டதாக கூறப்படுகிறது....

இந்திய மருத்துவம் அலோபதி அல்ல...


ஒருவன் இறக்கப் போகிறான் என்பதை வெளிப்படுத்தும் 10 அறிகுறிகள்...


இவ்வுலகில் பிறப்பு என்ற ஒன்று இருந்தால், இறப்பு என்ற ஒன்று நிச்சயம் இருக்கும். பிறப்பை கண்டு மகிழும் நாம், இறப்பைப் கண்டு அச்சமடைவோம்.

சாதிக்கும் எண்ணம் இருக்கும் யாருக்கும் இறக்க வேண்டுமென்ற எண்ணம் இருக்காது. இருப்பினும், நிச்சயம் ஒரு கட்டத்தில் அனைவரும் இறக்க நேரிடும். அதை யாராலும் தடுக்க முடியாது.

இத்தகைய இறப்பை சந்திக்கும் முன்பு ஒருசில அறிகுறிகள் தென்படும்.

மேலும் சிவபுராணத்தில் ஒருவன் இறக்கப் போகிறான் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஒருவன் இறக்கப் போகிறான் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்..

அறிகுறி 1 : எப்போது ஒருவரது சருமத்தின் நிறமானது வெளிர் மஞ்சளாகவோ அல்லது வெள்ளையாகவோ அல்லது லேசான சிவப்பாக மாற ஆரம்பித்தால், அது அவர் இன்னும் 6 மாத காலத்தில் உயிரை விடப் போகிறார் என்று அர்த்தமாம்.

அறிகுறி 2 : எப்போது ஒருவனால் அவனது பிம்பத்தை எதிரொலியை தண்ணீரிலோ அல்லது கண்ணாடியிலோ தெளிவாக காண முடியவில்லையோ, அத்தகையவர்களும் ஆறு மாதத்தில் இறக்கப் போகிறார் என்பதை வெளிப்படுத்துமாம்.

அறிகுறி 3 : எப்பொழுது ஒருவனுக்கு பார்க்கும் அனைத்தும் கருப்பாக தெரிய ஆரம்பிக்கிறதோ, அவர்களும் இறப்பை சந்திக்கப் போகிறார் என்று அர்த்தம்.

அறிகுறி 4 : ஒருவரது இடது கை மட்டும் ஒரு வாரத்திற்கு மேல் துடிக்கவோ அல்லது நடுங்க ஆரம்பிக்கிறதோ, அவர்கள் ஒரு மாதத்திற்கு மேல் உயிருடன் இருக்கப் போவதில்லை என்று அர்த்தமாம்.

அறிகுறி 5 : ஒருவரின் உணர்ச்சிமிக்க உறுப்புக்கள் இறுக்கமடைந்து கல் போன்று மாறுகிறதோ, அவர்களும் இன்னும் கொஞ்ச மாதத்தில் இறக்கப் போகிறார் என்று அர்த்தமாம்.

அறிகுறி 6 : நிலா, சூரியன் அல்லது நெருப்பின் ஒளியை சரியாக காண முடியவில்லையோ, அத்தகையவர்களும் விரைவில் மரணத்தை சந்திக்கப் போகிறார் என்று அர்த்தம்.

அறிகுறி 7 : எப்போது ஒருவரின் நாக்கு வீக்கமடைந்து, ஈறுகளில் சீழ் கட்ட ஆரம்பிக்கிறதோ, அவர்கள் இவ்வுலகில் நீண்ட நாட்கள் வாழப் போவதில்லை என்று அர்த்தம்.

அறிகுறி 8 : ஒருவரால் வானத்தில் உள்ள நட்சத்திரங்களை காண முடியவில்லையோ, அவரும் ஆறு மாதத்தில் இறக்கப் போகிறார் என்று அர்த்தம்.

அறிகுறி 9 : சூரியன், நிலா மற்றும் வானத்தை பார்க்கும் போது, அவை சிவப்பாக தெரிய ஆரம்பித்தால், அத்தகையவர்களும் விரைவில் மரணத்தை சந்திக்கப் போகிறார் என்று அர்த்தமாம்.

அறிகுறி 10 : ஒருவரின் கனவில் ஆந்தையோ, வெற்றிடமோ அல்லது கிராமம் அழிவது போன்றோ வந்தால், அவரும் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தமாகும்...