பிரதமர் மோடியின் கூட்டத்தின் போது கூரை சரிந்து விழுந்ததில் காயம் அடைந்த 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்காள மாநிலம் சென்றுள்ள பிரதமர் மோடி மிட்னாபூரில் பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசினார். மழை பெய்துக் கொண்டிருந்த நிலையில் மேடை அமைக்கப்பட்டு இருந்த பகுதியின் நுழைவு வாயிலில் ஒருபுறம் சரிந்து விழுந்தது. கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் கூரை இடிந்து விழுந்ததில் 20 பேர் காயம் அடைந்தனர். உடனடியாக பா.ஜனதா தொண்டர்கள் தங்களுடைய மோட்டார் சைக்கிளில் காயம் அடைந்தவர்களை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றார்கள், பிரதமர் மோடியின் பாதுகாப்பு வாகனத்துடன் வந்த ஆம்புலன்ஸிலும் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடி பேசிக்கொண்டு இருந்த போது அவருடைய கண்ணுக்கு எதிரேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. மருத்துவமனைக்கு சென்று பிரதமர் மோடி காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மழை காரணமாக இச்சம்பவம் நடைபெற்றுள்ளது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிட்னாப்பூரில் காலையில் கனமழை பெய்தது, தொடர்ந்து மழை பெய்துக்கொண்டே இருந்தது. மேலும் பந்தல் அமைக்கப்பட்ட இடங்களில் பிரதமர் மோடியை பார்ப்பதற்காக பொதுமக்கள் கம்பங்களில் ஏறியதாலும் பாதிப்பு நேரிட்டதாக கூறப்படுகிறது....
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.