10/09/2018

சிவனார் வேம்பு.....


சிவனார் வேம்பு என்ற பெயரே, இந்த மூலிகைச்செடியின் மகத்துவத்தைச் சொல்லும். இதனை சிவனார் வேம்பு, இறைவன் வேம்பு என அழைப்பர்.இது ஒரு அரிய வகை கற்ப மூலிகை....

இதன் பூக்கள், காய்கள், தண்டு மற்றும் வேர் உள்ளிட்ட அனைத்து பாகங்களும், அளப்பரிய மருத்துவ பலன்கள் மிக்கவையாக இருந்தாலும், இதன் வேரே, மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

சிவனார் வேம்பு செடியை பூக்கள், காய்கள் இலைகள் மற்றும் வேர்த்தண்டுடன் எடுத்துக்கொண்டு, நிழலில் உலர்த்தியபின்னர், நன்கு இடித்து தூளாக்கி வைத்துக்கொண்டு, இந்த சிவனார் வேம்பு பொடியை, தினமும் சிறிதளவு எடுத்துக்கொண்டு, அதே அளவில் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து, சிறிது பாலில் குழைத்து பருகிவர, உடல் நலனை சரிசெய்து, மனிதரின் ஆயுளை நீட்டிக்கவல்லது இந்த சிவனார் வேம்பு மூலிகை, அது மட்டுமல்ல, மேலும், இதுவே, தொழு வியாதிகள் போன்ற கடுமையான வியாதிகளுக்கும் மருந்தாகிறது ...

சிவனார் வேம்பு சூரணத்துடன் அருகம்புல் சேர்த்து, தேங்காயெண்ணையில் இட்டு காய்ச்சி வர, எண்ணை நன்கு இறுகி, தைலப் பதத்தில் வந்ததும், அதை, உடலில் ஏற்படும் கட்டிகள், காயங்கள், சொறி சிரங்கு படை போன்ற சரும பாதிப்புகளுக்கும் தடவி வர, அவை விரைவில் குணமாகும். மேலும், அழுகிய நிலையில் உள்ள புண்கள், நாள்பட்ட காயங்களையும் ஆற்றும் வல்லமை மிக்கது.

சித்த மூலிகை நாயுருவி வேரைப் போல, தேவ மூலிகை சிவனார் வேம்பின் வேரைக் கொண்டும் பல் துலக்கி வர அல்லது வேரை நன்கு மென்று நாரைத் துப்ப, பல் வலி, ஈறு வீக்கம் பாதிப்புகள் குணமாகி, வாய்ப் புண்களும் ஆறி விடும்.

அகத்தியர் அருளிய "அகத்தியர் அமுத கலைஞானம்" என்ற நூலில் சிவனார் வேம்பு வை காயகற்ப மூலிகையாகக் குறிப்பிட்டுள்ளார்...

காதல்...


சொல்லுக்குப் பொருள் சொல்லோடு மட்டும் அல்ல, இடத்தோடும் இழைந்து  இருக்கிறது.

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி, என்று சம்பந்தர் பாடும்போது காதல் என்பது பக்தி.

காதல் திருமகன், என்று ராமனை தசரதன் குறித்த போது காதல் என்பது அன்பு.

ஆதலினால் காதல் செய்வீர், என்று பாரதி பாடிய போது, காதல்  என்பது ஆண், பெண் நட்பு.

காதலுக்கு வழி வைத்துக் கருப்பாதை சாத்த, என்று பாரதிதாசன் பாடிய போது, காதல் என்பது உடல் உறவு.

முதியோர் காதல், என்று எழுதிய  போது காதல் என்பது உடல் கடந்த உணர்வு நிலை.

காதல் என்பது கடவுள் மாதிரி..

இழுத்த இழுப்புக்கு வரும், இஷ்டத்துக்குப் பொருள் கொள்ளலாம்...

சாத்தானுக்கு சமீபத்தில் கொடுக்கப்பட்ட 600 மனித உயிர்கள்...


ஆப்பிரிக்க நாடான கானாவில் மத போதகர் ஒருவர் சுமார் 600 சிறுவர்களை மத சடங்குகளுக்காக நரபலி கொடுத்தாள்ளார்..

நரபலிக்காக சாத்தான் வழிபாடுகளில் ஈடுபடும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சிறுவர்களை வழங்கியதாக மதபோதகர் தெரிவித்துள்ளார்.

முகமூடி அணிந்து வீடியோவில் அந்த மத போதகர் கடந்த 17 ஆண்டுகளாக சாத்தானுடன் வாழ்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுவரை சடங்குகளுக்காக 675 பேரை கொலை செய்ததாகவும், அதில் பெரும்பாலானோர் சிறுவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்..

இது கானாவில் எந்த பகுதியில், எப்போது நடந்தது என்ற தகவல்களையும் வெளியிட மறுத்துள்ளார்.

தாம் தீய சக்தியுடன் பிறந்தவர் எனவும் தமது சக்தியை தக்க வைத்துக் கொள்ளவே நரபலி கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்...

மராட்டிய ரஜினி கலாட்டா...


கெட்ட பயலுங்க சார் இந்த சமூக விரோதிகள்... 

வாதம், பித்தம், கபம். மூன்றையும் சீராக வெய்க்க சீராண வழி... பிரண்டை...


வாதம், பித்தம், கபம். மூன்றையும்  சீரான அளவில் வெய்க்கும்.  இதை எவ்வாறு பயன்படுத்துவது.

ஒரு தேங்காய் சட்னி, புதினா சட்னி, தக்காளி சட்னி போன்ற சட்னிகளை செய்வதற்க்கு பயன்படுத்தும். மிளகாய், உப்பு, புளி, உளுத்தம் பருப்பு போன்றவை தான் இதற்க்கும்  பயன் படுத்த வேண்டும். பிரண்டையை சட்னியாக, தொகையலாக  பயன் படுத்தலாம்.  பொதுவாக இதை சமையலில் அதிகம் சேர்த்து கொள்ள மாட்டார்கள். சேர்த்தால் நல்லது...

பாஜக - அதிமுக வின் பெட்ரோல் கொள்ளை...


பெட்ரோல் விலை பற்றிய இரண்டு விசயங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

1) பெட்ரோல், டீசல் விலையேற்றம் என்பது மத்திய அரசு போடுகின்ற வரியினால் தான் விலை ஏறுகிறது என நாம் அனைவரும் நினைக்கின்றோம்.

அது பற்றிய உண்மைகளை பார்ப்போம்..

ஒரு லிட்டர் பெட்ரோல் விலை மத்திய, மாநில அரசுகள் போடும் வரி விபரம்,

ஒரு லிட்டர் உற்பத்தி விலை 36.93 ரூபாய் .

மத்திய அரசு வரி விதிப்பு ரூ 23.03 ஒரு லிட்டருக்கு .
36.93 +23.03= 59.96

குறிப்பு..
(ரூ23.03 - வில் 40%
அதாவது ரூ 9.21 வை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தந்துவிடும்).

மத்திய அரசு வரி விதிப்புக்கு பின் விலை 59.96. ரூபாய்...

ரூ20.36 வரியாக மாநில அரசு வசூலிக்கிறது.

அதாவது 59.96 + 20.36 = 80.32

மாநில அரசின் வாட் வரி விதிப்புக்கு பின் 80.32-க்கு மக்கள் வாங்குகின்றனர்.

மொத்தத்தில்
மத்திய அரசாங்கம் பெறும் வரி ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ 13.82. மட்டுமே

மாநில அரசாங்கம் பெறும் வரி
20.36 +9.21 = ரூ29.57

உற்பத்தி விலை - = 36.93
மத்திய அரசு வரி =  13.82
மாநில அரசு வரி =   29.57
                                 ========
                                    80.32
                                 ========
நண்பர்களே எத்தனைப் பேர்களுக்கு இந்த உண்மை தெர்யும்.

2) இந்தியா 34 ரூபாய்க்கு பெட்ரோலை ஏற்றுமதி செய்கிறது. என்ன நியாயம் என்பது போல செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.

சராசரி இந்தியர்கள் மன நிலைப்படி ஒரு மாபெரும் ஏமாற்று வேலையை மத்திய அரசு செய்வதாக தோன்றும். தோன்றுவது இயல்புதான்.

இது புதிதாக தற்போது தான் செய்வது போலbசொல்வது அப்பட்டமான பொய்.

இந்தியர்களுக்கு 80 ரூபாய்.
வெளிநாட்டினருக்கு ஏற்றுமதி 1லிட்டர் =34 ரூபாய். இது உண்மை.

"மெய்பொருள்" அதாவது உண்மையை அறிந்து கொள்ள முயற்சிப்போமாக.

ஏற்கனவே பெட்ரோல் விலை எப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது என்பதை அறிந்தோம்.

கச்சா எண்ணெயாக வந்து அதை Refind செய்யும் வேலையை மட்டுமே இந்தியா செய்து கொண்டு உள்ளது.

அதாவது 2 லட்சத்து 4 ஆயிரம் கோடிக்கு வருடத்திற்கு ஏற்றுமதி செய்கிறது.
JOB work என்ற அடிப்படையில் தான் இது நடக்கிறது.

எந்த ஏற்றுமதிக்கும் வரி கிடையாது என்பதை அறியவும்.

இது அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும். 

ரூ 34 க்கு மேல் அனைத்தும் மேலே நான் கூறிய வரிகளுக்கு பின்பே  80 ரூபாய் ஆகிறது.

வெளிநாடுகளுக்கு அனுப்பும் எந்த பொருளுக்கும் வரி கிடையாது என்பதை மீண்டும் மீண்டும் நினைவுப்படுத்துகிறேன்.

மிக முக்கியமான விசயம் :
இந்த விலையில் ,
இதே முறையில்,
ஏற்றுமதி செய்வது பல ஆண்டுகளாக நடந்து கொண்டு இருக்கிறது...

திருட்டு திமுக பகுத்தறிவு கலாட்டா...


ஆழ்மனதின் சக்தி - புன்னகைத்தார் பிரம்மா...


முன்னொரு சமயத்தில் எல்லா மனிதர்களுமே கடவுளாக இருந்தனர். எல்லோருக்குமே அபரிமிதமான சக்தி இருந்தது. இதனால் பலர் தங்களது சக்திகளை மிஸ்யூஸ் செய்ய ஆரம்பிக்க, கிரியேட்டிவ் ஹெட் ஆன பிரம்மாவிற்கு செம கொடைச்சல் ஆகிவிட்டது.

இதை தடுக்க எல்லா சிறு கடவுள்களையும் அழைத்து ஒரு மீட்டிங் போட்டார். இந்த சக்தியை மனிதர்கள் எளிதில் கண்டுபிடித்துவிட முடியாதபடி எங்காவது ஒளித்து வைத்துவிட வேண்டும். ஏதாவது ஐடியா இருந்தா சொல்லுங்க என்றார்.

முன் பெஞ்சில் உட்கார்ந்த ஆர்வக்கோளாறு சின்ன கடவுள் ஒன்று சட்டென "பூமியின் ஆழத்தில் புதைத்து விடலாம் சார்"  என மூஞ்சியில் பல்ப் எரிய சொன்னது.

முன் பெஞ்சில் குரல் எழுந்தாலே காண்டு ஆகும். கடைசி பெஞ்சு கடவுள்கள், வேணாம் சார், நாளை பின்ன எவனாவது விஞ்ஞானி பூமியின் ஆழத்துல துளை போடுற மிசினை கண்டுபிடிச்சுடுவான், அதனால எங்கயாவது வேற கிரகத்துல ஒளிச்சு வைச்சுடுங்க என்றனர்.

இதற்கும் எதிர்ப்பு எழுந்தது. சார் மனுச பய சும்மாவே இருக்க மாட்டான் சார். ஏதாவது பறக்குற ரதம் செஞ்சு அங்கேயும் போய் ஈசியா எடுத்துடுவான் சார் என அவையில் சலசலப்பு ஏற்பட ஆரம்பித்தது.

கடைசியில் பிரம்மாவே யோசித்து ஒரு இடத்தில் ஒளித்து வைத்தார்.

அந்த  சக்தியை மனிதன் கண்டுபிடிக்க மிகவும் சிரமப்படும் இடமாக அது அமைந்தது.

ஆம்.. ஒவ்வொரு மனிதனின் ஆழ்மனதிலும் அந்த அற்புத சக்தியை வைத்து புன்னகைத்தார் பிரம்மா...

பாஜக - அதிமுக வின் அரச பயங்கிரவாதம்...


திமுக-வில் கோஷ்டி பூசல் அடிதடி, மருத்துவமனையில் ஒருவர் அனுமதி...


கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் திமுகவில் உட்கட்சி பூசலால் அடிதடி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தேன்கனிக்கோட்டை திமுக நகர மாணவரணி அமைப்பாளராக இருப்பவர் லிங்கோஜ் இவர் தளி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு.பிரகாஷ் அவர்கள் இன்று தேன்கனிக்கோட்டையில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திர திறப்பு விழா நடைப்பெற இருந்த நிலையில் பொது இடத்தில் பொது மக்கள் பயப்படும் வகையில் பட்டப்பகலிலே திமுக பிரமுகர் 12வது வார்டை சேர்ந்த பேக்கரி நஞ்சப்பா மற்றும் அவரது உறவினர் புட்ராஜ் என்பவரால் தாக்கியதில் லிங்கோஜ் காயமடைந்து தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது சம்பந்தமாக தேன்கனிக்கோட்டை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது...

இந்திய திராவிட திருட்டு அரசியல்...


கணவர் இறந்த துக்கம் தாளாமல் குழந்தையை கொலை செய்து தாய் தூக்கிட்டு தற்கொலை...


சேலம் அருகே கணவன் இறந்த துக்கம் தாளாமல், குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்த தாய், தானும் தற்கொலை செய்து கொண்டார்.

சேலம் அருகேயுள்ள மாசிநாயக்கன்பட்டி சக்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். மின் மோட்டார்களை பழுது பார்க்கும் வேலை செய்து வந்த அவர், கடந்த 6 மாதத்திற்கு முன்பு கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

கண்ணனின் மனைவியான பிரேமா, தனது குழந்தையுடன் மாசிநாயக்கன்பட்டியிலேயே வசித்து வந்தார்.

ஆனால் கணவர் இறந்த துக்கத்தில் இருந்த பிரேமா, தான் தற்கொலை செய்யப்போவதாக உறவினர்களிடம் கூறிவந்தாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு பிரேமா தனது குழந்தை அஜயை வீட்டு முன்பு இருந்த தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்து கொன்றார். பின்னர் வீட்டுக்குள் சென்ற அவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கொலை மற்றும் தற்கொலை குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்...

அம்பானிக்கு காவிரியை விற்ற பாஜக - அதிமுக...


சிவனே முதல் சித்தன்...


சிவனைப் புராண நாயகனாகக் கொள்வதைக் காட்டிலும் வரலாற்று நாயகனாகக் கொள்வது பொருந்தும்.

சித்தர் இலக்கியங்கள் மூலம் சிவனே முதல் சித்தன் என்பதற்கான சான்றுகளைக் காணலாம்...

திராவிட திருடர்கள் கலாட்டா...


ஆழ்மன ஆராய்ச்சி...


ஆழ்மன ஆராய்ச்சிகளுக்கு ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்திய ஒரு முறை கன்ஸ்ஃபெல்டு ஆராய்ச்சி (ganzfeld experiment). இம்முறை ஓல்ஃப்காங்க் மெட்ஸ்கர் என்ற ஜெர்மானியரால் 1930களில் வேறொரு ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்டது. சுமார் 1970 ஆம் ஆண்டிற்கு மேல் மிகப் பிரபலமாகி பல ஆழ்மன ஆராய்ச்சிகளில் பயன்படுத்தப்பட்டது.

இந்த ஆராய்ச்சியில் தகவலைப் பெறுபவர் ஒரு தனியறையில் தனித்து விடப்படுவார். அவர் சாய்வு நாற்காலியில் கண்களை மூடியபடி ஓய்வாக அமர்த்தப்படும் அவருடைய மூடிய கண்களின் மீது பாதியாக வெட்டப்பட்ட பிங்பாங்க் பந்துகள் வைக்கப்பட்டிருக்கும். காதுகளில் ஹெட்போன்கள் வைக்கப்பட்டு ஒரேமாதிரியான இசை தொடர்ந்து கேட்கும். முகத்தில் சிவப்பு விளக்கொளி விழும்படி வைக்கப்பட்டிருக்கும். தகவல் அனுப்புபவர் வெளியே இருந்து ஏதாவது ஒரு பொருளை மனதில் நினைத்து அந்தத் தகவலை உள்ளே உள்ளவருக்கு அனுப்புபவர். அரை மணி நேரம் நீளும் இந்த ஆராய்ச்சியில் கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருப்பவர் தன் மனதில் தோன்றுவதை சத்தமாகச் சொல்லிக் கொண்டிருப்பார். அதை டேப் செய்தோ, கையால் எழுதியோ குறித்துக் கொள்வார்கள்.

ஆழ்மன ஆராய்ச்சியாளர்கள் டீட் ரேடின், டேரில் ஜே.பெம், சார்லஸ் ஹொனொர்டன் ஆகியோர் இந்த கன்ஸ்ஃபெல்டு ஆராய்ச்சிமுறையில் ஆழ்மன சக்திகள் நன்றாகச் செயல்புரிகின்றன என்று தங்கள் அனுபவங்கள் மூலம் கூறினாலும் ஆராய்ச்சியாளர்கள் சூசன் ப்ளாக்மோர், ரே ஹைமன் ஆகியோர் இந்த ஆராய்ச்சிகளில் பல குறைகள் இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். சார்லஸ் ஹொனொர்டன் செய்த கன்ஸ்ஃபெல்டு ஆராய்ச்சிகளில் சிலவற்றில் அந்த அரை மணி நேரம் தகவல் பெறுபவர் சொல்லிக் கொண்டு வரும் வர்ணனைகள் தகவல் அனுப்புபவர் இருக்கும் சூழ்நிலைகளையும் தெளிவாக விவரிப்பதாக இருந்ததாம்.

ஆனால் உண்மையில் அந்த ஆராய்ச்சி முறையைப் பார்க்கும் போது அது ஒருவரைத் தியான மனநிலைக்கு அழைத்துச் செல்லத் துணை புரிகிறது என்றே தோன்றுகிறது. நம் கவனத்தைச் சிதற வைக்கும் புலன்களில் முக்கியமானவை கண்களும் காதுகளும் தான். அவற்றை அடைத்து, தொடர்ச்சியாக ஒரே போன்ற இசை கேட்டுக் கொண்டிருக்கையில் தியான நிலைக்கு அது உதவுகிறது. அதைத் தான் கன்ஸ்ஃபெல்டு ஆராய்ச்சியில் செய்கிறார்கள்.

ஏறத்தாழ அதே கால கட்டத்தில் (1970 களில்) தான் கலிபோர்னியாவில் உள்ள SRI என்றழைக்கப்படும் ஸ்டான்ஃபோர்டு ஆராய்ச்சி நிறுவனம் (Stanford Research Institute) பல வித்தியாசமான ஆராய்ச்சிகளை இன்கோ ஸ்வான், மற்றும் பேட் ப்ரைஸ் (Pat Price) என்ற முக்கியமான ஆழ்மனசக்தி வல்லுனர்களை வைத்து நடத்தியது.

அவர்களில் ஸ்வான் பற்றி முன்பே (ஆழ்மன சக்திகள் 12ல்) சிறிது குறிப்பிட்டு இருந்தோம். புகழ்பெற்ற விஞ்ஞானியான ரஸ்ஸல் டார்க் ஒரு ஆராய்ச்சியில் ஒரு காகிதத்தில் '49\'b020'S, 70\'b014'E' என்பதை மட்டும் எழுதி ஸ்வானிடம் தந்து அவருக்கு அதைப் பார்த்ததும் கிடைக்கும் தகவல்களை எல்லாம் சொல்லச் சொன்னார். சிறிது நேரம் கண்களை மூடியிருந்த ஸ்வான் கண்களைத் திறக்காமல் தான் கண்டவைகளை சொல்ல ஆரம்பித்தார்.

“எனக்கு இது ஒரு தீவு போலத் தோன்றுகிறது. நிறைய பாறைகள் உள்ளன. மிகவும் கச்சிதமாகக் கட்டப்பட்ட சில கட்டிடங்கள் தெரிகின்றன. அதில் ஒன்று ஆரஞ்சு நிறத்தில் இருக்கிறது. ஒரு ரேடார் ஆண்டெனாவும், ரவுண்ட் டிஸ்கும் தெரிகிறது. வடமேற்கில் ஒரு விமானத் திட்டு தெரிகிறது.....” என்று சொல்ல ஆரம்பித்தார். அவர் சொன்னது போலவே அந்த எண்கள் குறிக்கும் அட்சரேகை தீர்க்கரேகை உடைய, தெற்கு இந்து மகா சமுத்திரத்தில் உள்ள, கெர்க்யூலன் என்ற சிறிய பிரெஞ்சுத் தீவில் எல்லாம் சரியாக அப்படியே இருந்தன.

SRI நடத்திய ஆராய்ச்சிகளில் மிகவும் பிரபலமானவர் பேட் ப்ரைஸ். ஒரு போலீஸ் அதிகாரியான அவர் தன் ஆழ்மன சக்தியால் பல குற்றவாளிகளை பெரிய சிரமமில்லாது கண்டுபிடிக்கக் கூடியவராக இருந்தார். அது SRI ஆராய்ச்சியாளர்கள் கவனத்தைக் கவர்ந்தது. அவரை வைத்து அவர்கள் செய்த ஆரம்ப ஆராய்ச்சிகள் கற்பனையையும் மிஞ்சும்படி இருந்தன.

அமெரிக்க CIA அதிகாரி ரிச்சர்டு கென்னட் என்பவர் செய்த ஆராய்ச்சியில் பேட் ப்ரைஸ் அமெரிக்க இராணுவத்தின் இரகசிய சுரங்க முகாம் ஒன்றை மிக நுணுக்கமானத் தகவல்களுடன் விவரித்தார். National Security Agency (NSA)ன் கட்டுப்பாட்டில் இருக்கும் நாட்டின் மிக மிக ரகசியமான தகவல்களை ஆழ்மன ஆராய்ச்சிகளால் தர முடியும் என்று நம்ப முடியாத அரசாங்கம் அவரை ரஷிய உளவாளியாக இருக்கக்கூடும் என்று கூட சந்தேகித்தது. அவர்கள் சந்தேகத்தைப் போக்க பேட் ப்ரைஸ் ரஷிய ரகசிய தளவாடங்களையும் கண்டறிந்து சொல்வதாகக் கூறினார். ரஷியாவில் வட யூரல் மலைகளில் ஒன்றான நரோட்னைனா என்ற மலையின் அடிவாரத்தில் இருந்த ரகசிய தளவாடத்தைப் பற்றியும், அங்கு அதிகமாக இருந்த பெண் ஊழியர்களைப் பற்றியும், ரேடார் டிஷ்கள் பற்றியும் விவரித்துச் சொன்னார். பின்பே அமெரிக்க அரசாங்கத்தின் சந்தேகம் நீங்கியது. இது போல பல ராணுவ ரகசியத் தளவாடங்கள், உயர் கருவிகள் பலவற்றை நுண்ணிய விவரங்களுடன் பேட் ப்ரைஸிடம் இருந்து பெற்றார்கள். (ஸ்டாலின் காலத்தில் வாசிலிவ் என்ற ஆழ்மன சக்தியாளரை வைத்து அவர்களும் அமெரிக்க ரகசியங்களைப் பெற்றார்கள் என்று சொல்லப்படுவதையும் நாம் முன்பு கூறியது நினைவிருக்கலாம்).

SRI பாரடே கூண்டில் பேட் ப்ரைஸை அமர வைத்துப் பல ஆராய்ச்சிகள் நடத்தினார்கள். துரதிர்ஷ்டவசமாக 1975 ஆம் ஆண்டு மர்மமான முறையில் பேட் ப்ரைஸ் இறந்து போனது ஆழ்மன ஆராய்ச்சிகளுக்குப் பெருத்த நஷ்டம் என்று CIA யின் உயர் அதிகாரிகளும், ஆழ்மன ஆராய்ச்சியாளர்களும் கருதினார்கள். அவருடைய மரணம் ரஷிய உளவாளிகளால் ஏற்பட்டிருக்கக் கூடும் என்ற வதந்தி அக்காலத்தில் நிலவியது. அவர் மேலும் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தால் தங்கள் அனைத்து ராணுவ ரகசியங்களும் வெளியே வந்து விடும் என்ற பயத்தில் ரஷியா அவரைக் கொல்லும் முயற்சிகளை எடுத்திருக்கக் கூடுமா என்ற சந்தேகத்திற்கு பதில் கிடைக்கவில்லை.

கன்ஸ்ஃபெல்டு ஆராய்ச்சிகள், SRI நடத்திய ஆராய்ச்சிகள், மற்றும் ஃபாரடே கூண்டில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளில் வெற்றி பெற்றவைகளையும், வெளிப்படும் அலைகளையும் மேலும் நுணுக்கமாக ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தார்கள். அப்போது மனிதர்களிடமிருந்து வெளிப்படும் மிக நுண்ணிய மின்காந்த அலைகளையொத்த அலைகள் பற்றி அவர்கள் அறிய நேரிட்டது. Bioelectromagnetics என்ற விஞ்ஞானத் துறையின் கீழ் அந்த ஆழ்மன சக்தி அலைகளும் ஆராயப்பட்டன...

பாஜக மோடியும் பெட்ரோல் கொள்ளையும்...


சர்வதே சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்த போதும், பாஜக அரசு கடந்த நான்கு வருடங்களாக கலால் வரியை உயர்த்தி கொள்ளையடித்து வருகிறது.

இத்தகைய மோடி அரசு கடைபிடித்து வரும் நாசகர பொருளாதாரக் கொள்கை எதிர்த்து நாடு தழுவிய அளவில் செப்டம்பர் 10ந் தேதி பொது வேலைநிறுத்தம் நடத்தப்படும்...

விழித்துக்கொள் எம் தமிழினமே...


மறைந்தார் மக்களின் டாக்டர்.. 50 பைசா முதல் 5 ரூபாக்கு மேல் பீஸ் வாங்காத சிறந்த தமிழர்...


கோவை குனியமுத்தூர் பகுதியில் வசித்த வந்தவர் மக்கள் டாக்டர்' வெங்கடாசலம். இவருடைய மறைவு எங்கள் வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினரை இழந்தது போல உள்ளது என கண்ணீர் மல்க கூறி உள்ளனர். 

கோவை குனியமுத்தூர் பகுதியில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் அதிகம் வாழும் பகுதி. இவர்களின்  மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்தவர் தான் மக்கள் டாக்டர் வெங்கடாசலம். இவர் தன் குடும்பத்துடன் இருந்ததை விட மக்களுக்காகவே வாழ்ந்தவர். நோய் வாய் படும் எவராக இருந்தாலும், அவர்களுக்கு 50 பைசா பீஸ் மட்டுமே வாங்கி சிகிச்சை அளித்து வந்தார். பல ஆண்டுகளாக இதே போன்று அந்த ஊர்  மக்களுக்கு அன்புடன் சிகிச்சை அளித்து சமீபத்தில் தான் ரூ.5 வரை உயர்த்தினார்.

அதிலும் யாரிடமும், வாய் திறந்து பைசா கேட்காத மனிதர்...

யாரவது பணம் இல்லாமல் சிகிச்சை பெற வந்தாலும், அவருக்கு  தன் கையில் இருக்கும் பணத்த கொடுத்து மருந்து வாங்க வைப்பாராம்.

அதுவும் முடியவில்லை என்றால், அவரே வெளியில் சென்று தேவையான மருந்தை வாங்கி அவர்களுக்கு கொடுத்து, மாபெரும் உதவி செய்தி அவர்களின் உயிரை காப்பவர் தான் மக்களின் மருத்துவர். அதுமட்டுமா, கோவில் பணிகள் என்றால் அவருக்கு அவ்வளவு முக்கியமாம்....கோவிலுக்காக அதிகமாக பணிகள் செய்வாராம்.

தன்னுடைய வீட்டிலேயே சிறிய கூரை போட்டு சிறிய கிளினிக் வைத்து நடத்தி வந்தாராம். கடந்த ஆண்டு தான் கூரையை சரி செய்து விட்டு சிறிய மாற்றம் செய்து உள்ளார்.

எப்போதும் விளம்பரம் பிடிக்காத மனிதர்

எத்தனையோ மருத்துவர்கள் பற்றி விளம்பரம் வந்தாலும், தன்னை பற்றி பெருமையாக யாரிடமும் சொல்லி, விளம்பரம் செய்து விட கூடாது என உறுதியுடன் இருந்தாராம்.

இவர் பல ஆயிராம் மக்களுக்கு சிகிச்சை அளித்து உள்ளார். அதில் எத்தனையோ பேர் வெளி ஊர்களிலும் வெளி நாடுகளிலும் உள்ளனர். அதில் பலரும், மருத்துவரை பற்றி, அவர் சிகிச்சை அளித்த விதம் பற்றியும் உதவி செய்யும் மனம் பற்றியும் கூறி, கண்ணீர்  வடிகின்றனர்.

எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் இவரை போன்ற ஒரு டாக்டர் மீண்டும் இந்த நாட்டுக்கு கிடைக்க மாட்டார் என குனியமுத்தூர் மக்கள் தெரிவித்து வருகின்றனர். இவருடைய மருத்துவ சேவை 50 ஆண்டுகளுக்கும் மேலாக கடந்து உள்ளது. மருத்துவரின் இழப்பு அந்த ஊருக்கே பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது. இவருடைய இறுதி அஞ்சலிக்கு கூட உறவினர்களை விட, அவரிடம் சிகிச்சை பெற்ற  அப்பால் குடும்பங்களே அதிகமாக வந்து உள்ளனர்.

ஏழைகளின் மருத்துவர் டாக்டர் வெங்கடாசலம் ஐயா அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்...

பாஜக - அதிமுகவும் தமிழின அழிப்பும்...


சாத்தியமில்லை என்று ஒரு இடத்தில் முடங்கிப்போவதை விட, அதற்கான முயற்சிகளை எடுப்போம்...


தோற்றாலும் அதற்கான காரணத்தை அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்வோம்..

நாம் ஒன்றும் உடனடி தீர்வுக்கு இங்கு வரவில்லை,

அப்படி நினைப்பவர்கள் தான் இந்த உலகத்தின் ஆகச்சிறந்த முட்டாள்களாக இருப்பார்கள்...

மெல்ல அல்ல விரைவாகவே இனி சாகும் தமிழினம்..


பெர்ட்டிலிட்டி ரேட் என்ற ஒரு எண் உண்டு.... அதாவது சராசரியாக ஒரு பெண் எத்தனை குழந்தை பெறுகிறாள் என்ற கணக்கு அது.

இறப்பு விகிதத்தை எல்லாம் கணக்கில் கொண்டால் ஒரு இனம்/நாடு/மாநிலம் என எதுவாக இருப்பினும் அதன் தற்போதைய ஜனத்தொகை குறையாது இருக்க வேண்டுமெனில் ஒரு பெண் குறைந்தது 2 பிள்ளைகளையாவது சராசரியாக பெற வேண்டும்.

ஏனெனில் ஒரு ஆண்/ஒரு பெண் இணைந்து 2 குழந்தைகளையாவது சராசரியாக பெற்றால் தான் அந்த இனம்/நாடு/மாநிலத்தின் ஜனதொகை வளர்கிறதோ இல்லையோ, அழியாமலாவது இருக்கும்.

தமிழ்நாட்டின் ஜனதொகை பெருக்கம் நெருகடிவில் உள்ளது. ஆம் சராசரியாக ஒரு தமிழ் பெண் 1 குழந்தைகளையே பெறுகிறார்.

இந்தியாவின் அதிக மக்கள் தொகை உள்ள உபி,பிகாரில் இது 3 ஆம் சராசரி உபி, பிகார் பெண் 5 குழந்தைகளை பெறுகிறார்.

அதாவது இந்த தலைமுறையில் 2 கோடி தமிழர்கள் இருந்தால் அவர்கள் பிள்ளைகள் கால கணக்கில் 1.7 கோடி தமிழரே இருப்பார்கள்.

ஜனதொகையில் 15% ஒவ்வொரு தலைமுறையிலும் காணாமல் போகும்.

அதே சமயம் இந்த தலைமுறையில் 2 கோடியாக இருக்கும் பிகாரிகள் அடுத்த தலைமுறையில் 3.5 கோடியாக இருப்பார்கள்.

அத்தனை பேர் பிகாரிலும், உபியிலும் எப்படி வசிக்க முடியும்?

அதனால் தான் நாடு, முழுக்க பரவுகிறார்கள்.

இதனால் தான் தென்மாநிலங்களில் ஆள்பற்றாகுறை ஏற்பட்டு பீகார், உபி என வடமாநில தொழிலாளிகளை இறக்குமதி செய்யும் நிலை உருவாகிறது.

இதே நிலை தொடர்ந்தால் இன்னும் 100 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் தேசிய மொழி இந்தியாகவும், அகிலேஷ் சிங் யாதவின் பேரன் தமிழக முதல்வராகவும் இருக்கலாம்.

தமிழை கேட்க வேண்டுமெனில் எங்காவது மியூசியத்தில் போனால் ஒலிப்பதிவுகளை வைத்திருப்பார்கள் கேட்டுகொள்ளலாம்.

இந்த அவலநிலை எப்படி உருவானது, ஏன் உருவானது?

1970களில் நாசகரமான குடும்ப கட்டுபாடு திட்டம் இந்திரா காந்தி அரசால் கொன்டு வரப்பட்டது.

"நாம் இருவர் நமக்கு மூவர்" எனதான் அப்போது ஆரம்பித்தார்கள். இப்போது அது "நாம் இருவர். நமக்கு ஒருவர்" என மாறியுள்ளது.

இனி "நாம் இருவர். நமக்கெதுக்கு இன்னொருவர்" என மாறினாலும் மாறலாம்.

திமுக, அதிமுக இரன்டும் மாறி, மாறி ஆண்டாலும், ஜனதொக்கை கட்டுபாடு எனும் நாசகர விசயத்தில் மத்திய அரசு "போடு தோப்புகரணம்" என்றால் "எண்ணிக்க" என சொல்லும்படித்தான் நடந்து கொன்டுள்ளன.

சத்துணவு ஆயாக்களுக்கு குடும்ப கட்டுபாடு ஆபரேஷனுக்கு ஆள்பிடிக்க எல்லாம் டார்கெட் வைத்து அவர்களில் பலர் ஆள் கிடைக்காமல் தாமே ஆபரேசக் செய்து கொண்ட கதை எல்லாம் நடந்ததுண்டு.

குடும்ப கட்டுபாடு ஆபரேசனுக்கு 500 ரூபாய் பணம், மஞ்சள் பையில் ஐந்து கிலோ அரிசி என எல்லாம் கொடுத்த கதை 80களில் வளர்ந்த பலரும் அறியலாம்.

இப்படிப்பட்ட நாசகரமான குடும்ப கட்டுபாட்டு திட்டம் ஒரே தலைமுறையில் தமிழக ஜனதொகை வளர்ச்சி விகிதத்தை நெருகடிக்கு கொண்டு வந்துவிட்டது.

எத்தனையோ தமிழ் சாதிகளில் கல்யானம் செய்ய பெண் இல்லை.

ஒரு குறிப்பிட்ட சாதியில் பெண் கிடைக்காத பையன்கள் படும் அவதியை கூட சிலர் எழுதியிருந்தார்கள்.

இந்த அவலத்துடன் ஆணாதிக்கமும் சேர்ந்து பெண் குழந்தைகளை கருவிலேயே அபார்ட் செய்து, பையன்களை மட்டும் பெற்றுக்கொள்ள வைத்து ஆண்-பெண் விகிதமும் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டது.

இதுமட்டுமின்றி ஜனதொகை குறைந்தால் நாடாளுமன்றத்தில் நமக்கான சீட்டுகளில் குறைந்து தமிழகத்தின் அரசியல் பிரதிநிதித்துவமும் குறைந்துவிடும். மாநிலங்களுக்கு ஒதுக்கபடும் நிதியும் குறையும்.

ஜீவாதாரமான இந்த பிரச்சனையை எந்த தமிழக அரசியல் கட்சியும் ஏனோ பேசுவதே இல்லை.

அவர்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை இருப்பதே தெரியவில்லையா அல்லது சோஷலிச போர்வையில் கொண்டு வரப்படும் ஜனதொகை கட்டுபாட்டு சூழ்ச்சியை அவர்கள் புரிந்து கொள்ளவில்லையா என தெரியவில்லை.

இனியாகிலும் விழித்துக் கொள்வோம்.... அதிக அளவில் குழந்தைகளை பெறுவோம்.

ஒவ்வொரு தம்பதியும் குறைந்தது 2 குழந்தைகளையாவது பெறுவது என உறுதி எடுக்க வேண்டும்... இல்லையெனில் அண்ணன்/தம்பி, அக்கா/தங்கை, மாமா/சித்தப்பா/அத்தை போன்ற உறவுகள் எல்லாமே அழிந்துவிடும்.

தமிழகத்திலுள்ள அனைத்து கட்சிகளும் தம் தேர்தல் அறிக்கையில் "குடும்ப கட்டுபாட்டு திட்டங்களில் இருந்து தமிழகம் உடனடியாக விலகும்" என்ற அறிவிப்பை கட்சிசார்பின்றி ஒருமனதாக முன் வைக்க வேண்டும்.

பிள்ளைகள் செல்வங்கள். சுமைகள் அல்ல..

விழிப்புடன் இல்லையெனில் மொழியும், இனமும், நாடும் அழிந்து விடும்...

ஹெட்ரோகார்பன் நாகப்பட்டினத்திற்கு எச்சரிக்கை...


காலச்சாரம் மற்றும் பண்பாடு என்று இரண்டு சொல்லாடல்கள் பயன் படுத்தப்படுகின்றன… இதில் பண்பாடு என்பது என்ன? கலாச்சாரத்திற்கும் பண்பாட்டிற்கும் வேறுபாடு உள்ளதா?


கலாச்சாரம் என்பது சமஸ்கிருத சொல்… பண்பாடு என்பது அதற்கான மாற்று தமிழ்சொல்.

பலபேர் கலாச்சாரம் என்பதும் பண்பாடு என்பதும் வேறு வேறு என்று கருதுகிறார்கள்.

ஆனால் இவை இரண்டும் வேறு வேறு அல்ல.. ஒரே விசயத்தை குறிக்கிற இரண்டு சொற்கள்.

நடு சென்டர் என்று சொல்கிறோம் அல்லவா அதுபோல்...

தமிழரும் மதங்களும்...


தமிழர்கள் இசுலாமியர் ஆக்கப்பட்டனர் என்பதை ஏற்கும் கூட்டம்.

தமிழர்கள் கிறித்துவர் ஆக்கப்பட்டனர் என்பதை ஏற்கும் கூட்டம்.

தமிழர் இன்னும் பல மதங்களுக்கு மாற்றப்பட்டதை ஏற்கும் கூட்டம்.

தமிழர் இந்துவாக்கப்பட்டதை ஏற்க மறுக்கிறது.

காரணம் அதில் இருக்கும் வழிபாட்டு/பண்பாட்டு முறைகள்.

ஒன்றை தமிழர்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

உலகில் மதங்களில் இனங்களில் மொழிகளில் எல்லாவற்றிலும் தமிழ்/தமிழர் தாக்கம் இருக்கும்.

காரணம் தமிழ் தான் முதன் மொழி தமிழர் தான் மூத்த மாந்த இனம்.

இசுலாம் கிறித்து இன்னும் பிற மதங்கள் வேறு நிலப்பரப்பில் இருந்து தமிழர் நிலப்பரப்பினுள் நுழைந்து தமிழரை மதமாற்றம் செய்தது.

ஆனால் இந்து என்று இன்று அழைக்கப்படும் ஆரிய கோட்பாட்டின் கருத்தியல் மதம், தமிழர் பாரம்பரியம், பண்பாடு, மொழி, கலை போன்றவற்றை நம் நிலப்பரப்பில் இருந்து கொண்டே, அதை களவாடி (திருடி) பின் திரித்து (ஆரிய கோட்பாடை கலந்து) நம்மிடம் திணிக்கப்பட்டது.

எனவேதான் தமிழர் நாம் இயல்பாகவே தொன்றுதொட்டே நம்மை இந்துக்கள் என்று எண்ணி ஏமாந்து வாழ்கிறோம்.

இதையெல்லாம் அறிந்து தெளிந்து எடுத்துரைத்தால், தமிழர்களே அதற்கு எதிராக நிற்பது, 1800 ஆண்டுக்கும் மேல் அடிமைபட்டு, அடிமைக்கும் அடிமையாகிப் போன நிலை தந்த அறியாமையே.

என் பாட்டன் சொன்னார் என் அப்பன் சொன்னார் என்று நான் மாற மாட்டேன் நான் இப்படித்தான் வாழ்வேன் என்னும் சில வாதங்கள் வேதனைக்குரிய ஒன்று.

நம் பாட்டனும் அப்பனும் அறியாத வரலாற்றை நாம் மீட்டெடுத்துக் கொண்டிருக்கின்றோம் என்பதை உணர்ந்து தெளி என் தமிழினமே.

தொன்றுதொட்டு வந்ததை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்று மடமையில் விழுந்து உன் இனம் அழிய நீயே வழிகாட்டாதே.

மலேசிய வரலாறுபடி 200 ஆண்டுக்கு முன் அடிமையாய் இந்த நாட்டுக்கு வந்தோம் என்கிறான். எனவே நான் அடிமையாய் வந்தேன் அடிமையாய் தான் இருப்பேன் என்றால் அது சரியா?

200 ஆண்டுதானா உன் வரலாறு?

உன் பாண்டிய சேர சோழன் காலத்தில் நீ உலகை ஆண்டவனா அடிமையா?

2000 ஆண்டுக்கு முன் வாழ்ந்த வள்ளுவன்.

6000 ஆண்டுக்கு முன் வாழ்ந்த காப்பியன்.

இவர்கள் தமிழரா இந்துவா?

இதற்கு பதிலுண்டா உன்னிடம்..

புரிந்துகொள், நீ 50,000 ஆண்டுக்கும் மூத்த நீண்ட நெடிய வரலாறு கொண்ட மாபெரும்  தமிழர் எனும் தேசிய இனம்.

இனியும் நீ எழாவிட்டால்..

எழு.. மதத்தை தூரப்போடு
குலத்தில் ஏற்றதாழ்வை தூக்கிப்போடு..

இனம் மீள விடுதலை வெல்ல..

உன் களப் பணியை
செய்.... அல்லது செத்துமடி..

தமிழர் வெல்வது உறுதி...

நம் நாட்டில் இந்த மாதிரி ஒட்ட இடம் பத்தாது...


சுவாமி விவேகானந்தர்...


நான் இறைவனிடம் வலிமையை எனக்கு கொடுக்கும்படி வேண்டினேன்...

அவர் எனக்கு பல கடினமான சூழ்நிலைகளை சந்திக்கும்படி செய்தார்.

நான் இறைவனிடம் எனக்கு சிறந்த அறிவைக் கொடுக்கும்படி வேண்டினேன்.

அவர் எனக்கு வாழ்கையில்  பலவிதமான புதிர்களை  கொடுத்தார்.

நான் இறைவனிடம்  மகிழ்ச்சியை தரும்படி வேண்டினேன்.

அவர் இந்த உலகில் மகிழ்ச்சியற்ற நிலையில் உள்ள பல மனிதர்களை காட்டினார்.

நான் இறைவனிடம் செல்வச் செழிப்பை கேட்டேன்.

அவர் எனக்கு கடினமாக  எப்படி உழைக்க வேண்டும் என்று கற்று தந்தார்.

நான் உதவிகளை இறைவனிடம் வேண்டினேன்.
அவர் கடின உழைப்பிற்கான வாய்ப்புகளைக் காட்டினார்.

நான் அமைதியை இறைவனிடம் வேண்டினேன்.

அவர் மற்றவர்களுக்கு எப்படி உதவ வேண்டும் என்று சொல்லி தந்தார்.

இறைவன் நான் விரும்பிய எதையும் எனக்கு தரவில்லை.

ஆனால் அவர் எனக்கு தேவையான அனைத்தையும் தந்தார்.

- சுவாமி விவேகானந்தர்

மேற்கண்ட இந்த வரிகள் மனித வாழ்க்கையின் உண்மை நிலைகளை நமக்கு கற்றுத் தருபவையாக இருக்கின்றன.

மனிதர்களாகிய நாம் பல சமயங்களில் நாம் விரும்பும் படிப்பு , தொழில் , வாழ்கைநிலை , உறவுகள் கிடைக்கவில்லை என்று வருத்தப் படுகிறோம்.

ஆனால் இறைவன் எப்பொழுதும் நாம் விரும்புவதை  தருவதில்லை  நமக்கு என்ன தேவையோ அதைதான் தருகிறார்.

விருப்பம் , தேவை இரண்டில் எந்த ஒன்று முக்கியம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

நாம் விரும்பிய ஒன்று கிடைக்கவில்லை என்றால் நம்மால் வாழமுடியும்.

ஆனால் நமக்கு தேவையானது கிடைக்கவில்லை என்றால் நம்மால் வாழ முடியாது.

உதாரணமாக இனிமையான திண்பண்டம் சுவைப்பது நம்முடைய விருப்பமாக இருக்கலாம்..

ஆனால் அடுத்த வேலை உணவு என்பது தான் நம்முடைய தேவை.

எனவே தான் உணவு , உறைவிடம் , உடை ஆகியவற்றை அத்தியாவசிய தேவைகள் என்கிறோம்.

தொலைக்காட்சி , வானொலி , கைபேசி ஆகியவற்றை நாம் விரும்பும் பொருட்கள் என்கிறோம்.

நம் தேவைகளையும் , விருப்பங்களையும்  சரியாக புரிந்து கொள்வோமானால் வாழ்கையில் எந்நாளும் நமக்கு மகிழ்ச்சியே கிடைக்கும்...

இந்தியர்கள் சோதனை எலிகள்...


அது எப்படி டா, மனித உடலுக்கு கேடு என வெளிநாடுகளில் தடை செய்யப்படுற உணவு பொருட்கள் முதல் மருந்து, சோப்பு என நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் அனைத்து விதமான பொருட்களும், நம் இந்தியாவில் மட்டும் எளிதாக விற்பனைக்கு வருகிறது...

இதற்கு சிலர் ஆதரவும் தருகிறார்கள்...


அவர்கள் ஏன்..? ஆதரவு தருகிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது என்பதுதான் உண்மை..

இந்த பண்பட்ட குடும்ப அமைப்பு தகர்ந்து போவதை நீங்க பார்க்க விரும்புகிறீர்களா..?

ஆய்த எழுத்து...


ஃ - ஆய்த எழுத்து தமிழில் உள்ள ஒரு சிறப்பு எழுத்து ஆகும்.

ஆய்த எழுத்தைத் தனியே பயன்படுத்துவது அரிது.

பழந்தமிழில் பரவலாக ஆய்த எழுத்து பயன்படுத்தப்பட்டதிலும், தற்காலத்தில் ஆய்த எழுத்தின் பயன்பாடு அரிதே.

சில நேரங்களில் பகரத்துடன் சேர்த்து (ஃப) ஆங்கில எழுத்தான f-ஐக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது.

ஆய்த எழுத்தை அஃகேனம் என்றும் அழைப்பர்...

கார்பரேட்டும் தண்ணீர் சதியும்...


எந்த வட்டியை ஒழிக்க வேண்டும் என்று முகமதுநபி முயற்சி செய்தாரோ...


அதே வட்டிகடையான வங்கியை இப்போது நடத்தி வருகிறார்கள் அவர்களின் வழி வந்தவர்கள்...

உலகத்தில் முதன் முதலில் வட்டியை தோற்றுவித்த உண்மையான நகரத்தார்களின் சின்னமான சிங்கத்தை தனது அடையாளமாக கொண்டே செயல்படுகிறது எனில் எதிரி முழுமையாக இஸ்லாம் என்ற மதத்தை கைப்பற்றி விட்டதாகவே அர்த்தம்...

விரைவில் மின்சாரமும் தனியாருக்கு விற்பனை...


90’s kids என பெருமைக்கொள்ள வேண்டாம்...


நாம் தோற்று விட்டோம்...

கடந்த தலைமுறை நம்மிடம் கொடுத்த வளங்களை எல்லாம்,

நாம் நம்முடைய அடுத்த தலைமுறைக்கு கொடுக்க முடியாமல், தோற்று விட்டோம் என்பதே நிதர்சனம்... 

உலகமயமாக்கலை வரவேற்றோம்..

ஆனால் உண்மை நம்முடைய இயற்கை சார்ந்து உலகத்தை இழந்து விட்டோம்...

நைஜீரியாவினை விட இந்தியாவை கேவலமாக்கிய பாஜக மோடி...


பிரபல நடிகர் கோவை செந்தில் திடீர் மரணம்- திரையுலகினர் அதிர்ச்சி...


தமிழ் சினிமா கடந்த சில நாட்களாக வரும் பிரபலங்களின் மரண செய்தியால் சோகத்தில் உள்ளது என்றே கூறலாம். ராக்கெட் ராமநாதன், வெள்ளை சுப்பையா போன்ற பிரபலங்களின் மரண செய்தியையே யாரும் மறக்கவில்லை.

இப்போது பிரபல நடிகரான கோவை செந்தில் அவர்களின் மரண செய்தி மற்றொரு அதிர்ச்சி. இன்று அவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

என்ன காரணம், எப்படி இறந்தார் என்பது சரியாக தெரியவில்லை. படையப்பா, புதுமை பித்தன், கோவா, ஏய் என நிறைய வெற்றி படங்களில் சின்ன சின்ன வேடத்தில் நடித்துள்ளார் கோவை செந்தில்...

இன்னும் என்னெலாம் வருமோ...


வேற்றுகிரகவாசி உண்மைகள்...


நவீன மனிதனுக்கும் அவனது மூதாதையினருக்கும் இடையேயுள்ள பிரதான வேற்றுமைகள் என்னவென்றால் அவை மனித மூதாதையர் கொண்டிராததும் நவீன மனிதன் கொண்டுள்ளதுமான நிமிர்ந்த தோற்றமும் அதீத நுண்ணறிவுமேயாகும்.

நுண்ணறிவு வளர வளர மனிதன் கருவிகளை பயன்படுத்த ஆரம்பித்ததோடு நாகரீகமாகவும் வாழப்பழகிக் கொண்டான். இன்று விஞ்ஞான அறிவோடு விஸ்வரூபம் எடுத்து நிற்கிறான்.

நுண்ணறிவினது வளர்ச்சிப்போக்கு பற்றிய ஆராய்ச்சிகள் தற்போது விஞ்ஞானிகள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

நுண்ணறிவின் வளர்ச்சிப்போக்கானது கூர்ப்பில் மனித மூளையின் கனவளவு அதிகரிப்போடு நேரடியான தொடர்பைக்காட்டுவதாக உள்ளது.

Homo habilis இனத்தின் மண்டைஓட்டை ஆராய்ந்தபோது அவற்றில் மூளையின் கனவளவு வெறும் 500 – 600cm3 அளவே இருந்துள்ளது.

ஆனால் மூளையின் பருமன் பரிணாம வளர்ச்சிப்போக்கில் ஏனைய மனித மூதாதையர்களில் படிப்படியாக அதிகரித்து இன்றைய நவீன மனிதனில் அதன் கனவளவானது 1200 – 1850cm3 ஆக காணப்படுகின்றது.

இது மூளையின் பருமனில் மூன்று மடங்கு அதிகரிப்பைக் காட்டுகின்றது. அந்தவகையில் மூளையின் பருமன் அதிகரிப்பு நுண்ணறிவின் வளர்ச்சியில் பாரிய பங்களிப்பை செய்துள்ளது.

ஆனால் சில ஆய்வாளர்களின் கருத்துப்படி நுண்ணறிவானது கூர்பினூடாக படிப்படியாக அதிகரித்திருந்தாலும் அண்மைக்காலம் வரை மனிதன் தற்போது கொண்டுள்ள பாரிய நுண்ணறிவு வளர்ச்சியைப் பெற்றிருக்கவில்லை எனவும் சில ஆயிரம் வருடங்களினுள்ளே மூளையின் பருமனிலே பாரிய மாற்றமெதுவும் ஏற்படாதபோதும் நுண்ணறிவு பல மடங்காக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கான காரணத்தை அறிய பல விஞ்ஞானிகள் முற்பட்டுக் கொண்டிருக்கையில்...

‘புராதன விண்வெளி கோட்பாட்டாளர்கள்’ (Ancient Astronaut Theorists – AAT) என்று தம்மை அடையாளப்படுத்தும் ஆய்வாளர்கள் சிலர் பின்வருமாறு அதற்கு விளக்கமளித்துள்ளனர்.

எவ்வாறெனில் குறுகிய காலப்பகுதியில் மனிதன் அடைந்த இப்பாரிய நுண்ணறிவு வளர்ச்சியானது இயற்கையான பரிணாம வளர்ச்சியினூடாக ஏற்பட்ட ஒரு மாற்றம் அல்லவெனவும் அது மனிதனைவிட நுண்ணறிவில் அதீத வளர்ச்சியடைந்த
வேற்றுக்கிரகவாசிகளின் (extraterrestrials) தலையீட்டின் காரணமாக ஏற்பட்டதெனவும் கூறுகின்றனர்.

மனிதர்களை ஊர்வன(Reptilians) வேற்றுக்கிரகவாசிகளால் உருவாக்கப்பட்ட அல்லது அவர்கள் வழி வந்த இனமாக கருதும் இவர்கள், நமது மூதாதையர்கள்  வேற்றுக்கிரக வாசிகளையும் அவர்களது அதிநவீன தொழிநுட்பங்களையுமே அளப்பரிய சக்தி கொண்ட கடவுளாகவும் தெய்வத் தூதுவர்களாகவும் பிழையாக கற்பித்துக் கொண்டதாக வாதாடுகின்றனர்.

ஊர்வன(Reptilians) வேற்றுக்கிரக வாசிகள்...

இவர்களே மனிதனின் பரிணாம வளர்ச்சியையும் வரலாற்றினையும் நெறிப்படுத்தினார்கள் எனவும் நம்புகின்றனர். அந்தவகையில் இவ்வேற்றுகிரகத்தவர்கள் பண்டைய மனிதனில் பல பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டு மனிதனின் உடல் ஆற்றலையும் நுண்ணறிவினையும் அதிகரிக்க முயன்றிருப்பதாக பல ஆதாரங்களையும் முன்வைக்கின்றார்கள்...