சிவனார் வேம்பு என்ற பெயரே, இந்த மூலிகைச்செடியின் மகத்துவத்தைச் சொல்லும். இதனை சிவனார் வேம்பு, இறைவன் வேம்பு என அழைப்பர்.இது ஒரு அரிய வகை கற்ப மூலிகை....
இதன் பூக்கள், காய்கள், தண்டு மற்றும் வேர் உள்ளிட்ட அனைத்து பாகங்களும், அளப்பரிய மருத்துவ பலன்கள் மிக்கவையாக இருந்தாலும், இதன் வேரே, மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
சிவனார் வேம்பு செடியை பூக்கள், காய்கள் இலைகள் மற்றும் வேர்த்தண்டுடன் எடுத்துக்கொண்டு, நிழலில் உலர்த்தியபின்னர், நன்கு இடித்து தூளாக்கி வைத்துக்கொண்டு, இந்த சிவனார் வேம்பு பொடியை, தினமும் சிறிதளவு எடுத்துக்கொண்டு, அதே அளவில் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து, சிறிது பாலில் குழைத்து பருகிவர, உடல் நலனை சரிசெய்து, மனிதரின் ஆயுளை நீட்டிக்கவல்லது இந்த சிவனார் வேம்பு மூலிகை, அது மட்டுமல்ல, மேலும், இதுவே, தொழு வியாதிகள் போன்ற கடுமையான வியாதிகளுக்கும் மருந்தாகிறது ...
சிவனார் வேம்பு சூரணத்துடன் அருகம்புல் சேர்த்து, தேங்காயெண்ணையில் இட்டு காய்ச்சி வர, எண்ணை நன்கு இறுகி, தைலப் பதத்தில் வந்ததும், அதை, உடலில் ஏற்படும் கட்டிகள், காயங்கள், சொறி சிரங்கு படை போன்ற சரும பாதிப்புகளுக்கும் தடவி வர, அவை விரைவில் குணமாகும். மேலும், அழுகிய நிலையில் உள்ள புண்கள், நாள்பட்ட காயங்களையும் ஆற்றும் வல்லமை மிக்கது.
சித்த மூலிகை நாயுருவி வேரைப் போல, தேவ மூலிகை சிவனார் வேம்பின் வேரைக் கொண்டும் பல் துலக்கி வர அல்லது வேரை நன்கு மென்று நாரைத் துப்ப, பல் வலி, ஈறு வீக்கம் பாதிப்புகள் குணமாகி, வாய்ப் புண்களும் ஆறி விடும்.
அகத்தியர் அருளிய "அகத்தியர் அமுத கலைஞானம்" என்ற நூலில் சிவனார் வேம்பு வை காயகற்ப மூலிகையாகக் குறிப்பிட்டுள்ளார்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.