நான் இறைவனிடம் வலிமையை எனக்கு கொடுக்கும்படி வேண்டினேன்...
அவர் எனக்கு பல கடினமான சூழ்நிலைகளை சந்திக்கும்படி செய்தார்.
நான் இறைவனிடம் எனக்கு சிறந்த அறிவைக் கொடுக்கும்படி வேண்டினேன்.
அவர் எனக்கு வாழ்கையில் பலவிதமான புதிர்களை கொடுத்தார்.
நான் இறைவனிடம் மகிழ்ச்சியை தரும்படி வேண்டினேன்.
அவர் இந்த உலகில் மகிழ்ச்சியற்ற நிலையில் உள்ள பல மனிதர்களை காட்டினார்.
நான் இறைவனிடம் செல்வச் செழிப்பை கேட்டேன்.
அவர் எனக்கு கடினமாக எப்படி உழைக்க வேண்டும் என்று கற்று தந்தார்.
நான் உதவிகளை இறைவனிடம் வேண்டினேன்.
அவர் கடின உழைப்பிற்கான வாய்ப்புகளைக் காட்டினார்.
நான் அமைதியை இறைவனிடம் வேண்டினேன்.
அவர் மற்றவர்களுக்கு எப்படி உதவ வேண்டும் என்று சொல்லி தந்தார்.
இறைவன் நான் விரும்பிய எதையும் எனக்கு தரவில்லை.
ஆனால் அவர் எனக்கு தேவையான அனைத்தையும் தந்தார்.
- சுவாமி விவேகானந்தர்
மேற்கண்ட இந்த வரிகள் மனித வாழ்க்கையின் உண்மை நிலைகளை நமக்கு கற்றுத் தருபவையாக இருக்கின்றன.
மனிதர்களாகிய நாம் பல சமயங்களில் நாம் விரும்பும் படிப்பு , தொழில் , வாழ்கைநிலை , உறவுகள் கிடைக்கவில்லை என்று வருத்தப் படுகிறோம்.
ஆனால் இறைவன் எப்பொழுதும் நாம் விரும்புவதை தருவதில்லை நமக்கு என்ன தேவையோ அதைதான் தருகிறார்.
விருப்பம் , தேவை இரண்டில் எந்த ஒன்று முக்கியம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
நாம் விரும்பிய ஒன்று கிடைக்கவில்லை என்றால் நம்மால் வாழமுடியும்.
ஆனால் நமக்கு தேவையானது கிடைக்கவில்லை என்றால் நம்மால் வாழ முடியாது.
உதாரணமாக இனிமையான திண்பண்டம் சுவைப்பது நம்முடைய விருப்பமாக இருக்கலாம்..
ஆனால் அடுத்த வேலை உணவு என்பது தான் நம்முடைய தேவை.
எனவே தான் உணவு , உறைவிடம் , உடை ஆகியவற்றை அத்தியாவசிய தேவைகள் என்கிறோம்.
தொலைக்காட்சி , வானொலி , கைபேசி ஆகியவற்றை நாம் விரும்பும் பொருட்கள் என்கிறோம்.
நம் தேவைகளையும் , விருப்பங்களையும் சரியாக புரிந்து கொள்வோமானால் வாழ்கையில் எந்நாளும் நமக்கு மகிழ்ச்சியே கிடைக்கும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.