10/09/2018

பாஜக - அதிமுக வின் பெட்ரோல் கொள்ளை...


பெட்ரோல் விலை பற்றிய இரண்டு விசயங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

1) பெட்ரோல், டீசல் விலையேற்றம் என்பது மத்திய அரசு போடுகின்ற வரியினால் தான் விலை ஏறுகிறது என நாம் அனைவரும் நினைக்கின்றோம்.

அது பற்றிய உண்மைகளை பார்ப்போம்..

ஒரு லிட்டர் பெட்ரோல் விலை மத்திய, மாநில அரசுகள் போடும் வரி விபரம்,

ஒரு லிட்டர் உற்பத்தி விலை 36.93 ரூபாய் .

மத்திய அரசு வரி விதிப்பு ரூ 23.03 ஒரு லிட்டருக்கு .
36.93 +23.03= 59.96

குறிப்பு..
(ரூ23.03 - வில் 40%
அதாவது ரூ 9.21 வை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தந்துவிடும்).

மத்திய அரசு வரி விதிப்புக்கு பின் விலை 59.96. ரூபாய்...

ரூ20.36 வரியாக மாநில அரசு வசூலிக்கிறது.

அதாவது 59.96 + 20.36 = 80.32

மாநில அரசின் வாட் வரி விதிப்புக்கு பின் 80.32-க்கு மக்கள் வாங்குகின்றனர்.

மொத்தத்தில்
மத்திய அரசாங்கம் பெறும் வரி ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ 13.82. மட்டுமே

மாநில அரசாங்கம் பெறும் வரி
20.36 +9.21 = ரூ29.57

உற்பத்தி விலை - = 36.93
மத்திய அரசு வரி =  13.82
மாநில அரசு வரி =   29.57
                                 ========
                                    80.32
                                 ========
நண்பர்களே எத்தனைப் பேர்களுக்கு இந்த உண்மை தெர்யும்.

2) இந்தியா 34 ரூபாய்க்கு பெட்ரோலை ஏற்றுமதி செய்கிறது. என்ன நியாயம் என்பது போல செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.

சராசரி இந்தியர்கள் மன நிலைப்படி ஒரு மாபெரும் ஏமாற்று வேலையை மத்திய அரசு செய்வதாக தோன்றும். தோன்றுவது இயல்புதான்.

இது புதிதாக தற்போது தான் செய்வது போலbசொல்வது அப்பட்டமான பொய்.

இந்தியர்களுக்கு 80 ரூபாய்.
வெளிநாட்டினருக்கு ஏற்றுமதி 1லிட்டர் =34 ரூபாய். இது உண்மை.

"மெய்பொருள்" அதாவது உண்மையை அறிந்து கொள்ள முயற்சிப்போமாக.

ஏற்கனவே பெட்ரோல் விலை எப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது என்பதை அறிந்தோம்.

கச்சா எண்ணெயாக வந்து அதை Refind செய்யும் வேலையை மட்டுமே இந்தியா செய்து கொண்டு உள்ளது.

அதாவது 2 லட்சத்து 4 ஆயிரம் கோடிக்கு வருடத்திற்கு ஏற்றுமதி செய்கிறது.
JOB work என்ற அடிப்படையில் தான் இது நடக்கிறது.

எந்த ஏற்றுமதிக்கும் வரி கிடையாது என்பதை அறியவும்.

இது அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும். 

ரூ 34 க்கு மேல் அனைத்தும் மேலே நான் கூறிய வரிகளுக்கு பின்பே  80 ரூபாய் ஆகிறது.

வெளிநாடுகளுக்கு அனுப்பும் எந்த பொருளுக்கும் வரி கிடையாது என்பதை மீண்டும் மீண்டும் நினைவுப்படுத்துகிறேன்.

மிக முக்கியமான விசயம் :
இந்த விலையில் ,
இதே முறையில்,
ஏற்றுமதி செய்வது பல ஆண்டுகளாக நடந்து கொண்டு இருக்கிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.