10/09/2018

காதல்...


சொல்லுக்குப் பொருள் சொல்லோடு மட்டும் அல்ல, இடத்தோடும் இழைந்து  இருக்கிறது.

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி, என்று சம்பந்தர் பாடும்போது காதல் என்பது பக்தி.

காதல் திருமகன், என்று ராமனை தசரதன் குறித்த போது காதல் என்பது அன்பு.

ஆதலினால் காதல் செய்வீர், என்று பாரதி பாடிய போது, காதல்  என்பது ஆண், பெண் நட்பு.

காதலுக்கு வழி வைத்துக் கருப்பாதை சாத்த, என்று பாரதிதாசன் பாடிய போது, காதல் என்பது உடல் உறவு.

முதியோர் காதல், என்று எழுதிய  போது காதல் என்பது உடல் கடந்த உணர்வு நிலை.

காதல் என்பது கடவுள் மாதிரி..

இழுத்த இழுப்புக்கு வரும், இஷ்டத்துக்குப் பொருள் கொள்ளலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.