28/09/2018
அண்ணை தெரேசாவின் மறுமுகம்..
1997ம் ஆண்டு அன்னை தெரேசாவின் இறுதி ஊர்வல சடங்குகள் இதுவரை யாரும் கண்டிராத ஆர்பாட்டத்துடன் நடத்தப்பட்டது.
இதில் நமது செக்யூலர் தலைவர்கள் பொறுமையாக வாடிகனினால் நடத்தப்பட்ட 2 மணிநேர சடங்கை பார்வையிட்டு பிறகுதான் அவர்களை இறுதி மரியாதை செய்ய அனுமதித்தார்கள்.
நேதாஜி மூடிய விளையாட்டு அரங்கம் அன்று இந்தியர்க்ளின் வரிப்பணத்தை கொண்டு இரங்கல் மரியாதை செய்தது ஒரு வாடிகனின் தலைநகரை போல் காட்சியளித்தது.
இது அரசர்களுக்கு நடத்தும் இறுதி மரியாதை போல்தான் இருந்தது.
இதில் பணம் படைத்தவர்களும் செக்யூலர்களும் தான் கலந்து கொண்டார்கள், ஏழைகள் அல்ல.
மீறிவந்த ஏழை கூட்டத்தை ஒரு மென்மையான லத்தி உதைமூலம் கலையச் செய்ததாகப் பொய் செய்திகள் வெளி வந்தன.
இனிமேல் அவர்களின் தேவை மிஷினரிகளுக்கு தேவையில்லை.
தாங்கள் திட்டமிட்டபடி அவரை ஒரு தன்னிகரில்லா கிருஸ்துவ தொண்டராக உலக அரங்கில் உயர்த்தியாகி விட்டது.
இவரை கல்கத்தாக்காரர்கள் தங்களுக்கு கிடைத்த வரபிரசாதமாக எண்ணி பெருமைப்படுகிறார்கள்.
ஆக்நஸ் பேஜாஜியூ என்ற தெரேசா தன் பிறந்த ஊரான அல்பேனியாவில் இருந்திருந்தால் இவ்வளவு புகழ் பெற்று இருக்க மாட்டார். அந்த அல்பேனியா இந்தியாவை விட மிகவும் ஏழ்மையான நாடு. தம் மக்களுக்கு தொண்டு செய்வதை விட்டு இவருக்கு இங்கே என்ன வேலை?
நீண்ட நெடுநாளைய மதம் பரப்பும் திட்டத்திற்கு வாடிகனால் தேர்வு செய்யப்பட்டு இங்கே சோனியாவை இறக்குமதி செய்தது போல் இவரையும் இறக்குமதி செய்தார்கள்.
இன்று கல்கத்தாவிற்கு என்ன பயன் தெரேசாவால் என்பதைவிட கல்கத்தாவால் தெரேசா உலக அரங்கில் சிறந்த சமூகசேவகியாக நிறுத்தப்பட்டு விட்டார் என்பது தான் நிதர்சனம்.
இவரது முதன்மைப் பணி பிணியில் இறப்பை எதிர் நோக்கும் நோயாளிகளுக்குத் தொண்டு செய்வது என்று அறியப் பட்டது.
ஆனால் உண்மையில் அவர் வெளிநாட்டு கிருஸ்துவப் பணக்காரர்களிடமிருந்து பணம் திரட்டும் வேலையைதான் தீவிரமாக செய்து வந்தார் என்று பல வெளிநாட்டு எழுத்தாளர்கள் கூறியுள்ளார்கள்.
அவர் நடத்திய நோயாளிகளின் இருப்பிடம் நம் ஊர் அரசாங்க மருத்துவ மனையைவிட மிகக் கேவலமான முறையில்தான் இயங்கி வந்தது.
வசதிகள் ஏதும் இன்றி சுகாதாரமற்ற முறையில்தான் இயங்கியது என்று பலர் பகிங்கரமாக குற்றம் சாட்டியுள்ளார்கள்.
உயிருக்கு போராடும் நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்காமலும் பெயின் கில்லர் போன்ற மருந்துக்களை செலுத்தாமலும் ஏசு ஜபம் செய்தால் எல்லாம் தானே குணமாகிவிடும் என்று அறிவுரை சொல்லியே பலர் மரணம் அடைந்தார்கள்.
இதே நிலையைதான் அவர்களால் நடத்தப்பட்டு வந்த குழுந்தைகள் காப்பக இல்லங்களிலும் இருந்தது.
httpv://www.youtube.com/watch?v=dSvFCwGmGow
httpv://www.youtube.com/watch?v=6Pei8lSiv6s
இப்படி மோசமான நிலையில் நடத்தப்பட்ட காப்பகங்கள் மருத்துவமனைகள் பற்றி உலகில் மிகவும் பிரபலமான மருத்துவச் செய்திகளை வெளியிடும் இங்கிலாந்திலிருந்து வெளிவரும் லான்சன்ட் (Lancent) என்ற பத்திரிகையின் தலைமை ஆசிரியர் டாக்டர் ராபின் காக்ஸ் (Dr.Robin Cox) கடுமையாக சாடியிருந்தார்.
இந்த இடங்களில் நோயாளிகள் படுக்கப் படுக்கை வசதி இல்லாமல் வெறும் தரையில் படுக்க வைக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் சில குறுகிய அறைகளில் 60க்கு மேறப்பட்ட நோயாளிகளை அடைக்கிறார்கள் என்றும் ஊசிபோடும் சிரிஞ்சுகளை மறுபடி மறுபடி பச்சை தண்ணீரில் நனைத்து உபயோகிக்கிறார்கள் என்றும் கூறுகிறார்.
பல தீவிர சிகிச்சைக்கு தேவைப்படும் மருந்துகள் இல்லாமலும் நோயாளிகளை மாற்று மருத்துவமனைக்கு அனுப்பாமலும் அங்கேயே சாகடிக்கப் படுகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
இப்படி சுகாதாரமற்ற முறையில் நேயாளிகளை நடத்துவதால் அங்கே பணியில் இருக்கும் பல நர்ஸ்கள் காசநோய் எயிட்ஸ் போன்ற நோய் தொற்றிக்கொண்டு அவதிப்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்.
இந்த குறைகளுக்கெல்லாம தெரேசாவின் ஒரே மருந்து ஏசு ஜபம்தான். இந்த ஜபம் செய்ய பொருள் செலவோ வங்கிக் கணக்கோ தேவையில்லை!
இதுதான் அவர் ஏழைகளுக்கும் நோயாளிகளுக்கும் செய்துவந்த பிரார்த்தனை தொண்டு.
பல சமயம் அவர் நோய்வாய்ப் பட்டால் இங்கே சிகிச்சை மேற்கொள்ளாமல் பாஸ்டன் போன்ற வெளிநாட்டு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று நாடு திரும்பினார்.
தனது கடைசிக் காலத்தில் நோய்வாய் பட்டபோது பயணம் செய்ய இயலாததால் கல்கத்தாவில் உள்ள ஆர்.கே.பிர்லா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
இது ஹிந்துக்கள் நடத்தும் அதி நவீன தொண்டு நிறுவனம். இங்கே அவருக்கு கிருஸ்துவர்களது பணமோ அல்லது பிரார்தனையோ தேவையில்லை.
அவரது கொள்கை ஏழைகளுக்கு மட்டும் பணம் செலவு இல்லாமல் கூட்டுப்பிரார்த்தனை ஒன்றுதான் – அதாவது ஆன்மீக சுத்திகரிப்பினால் மன நிறைவை ஏற்படுத்தி ஏசுவிடம் அனுப்புவது.
இப்படித்தான் அவரது தொண்டு நிறுவனங்கள் வசதிகள் ஏதும் இன்றி ஏழைகளுக்கு உதவுவதாக கண்துடைப்பு செய்து கொண்டு உலக கிருஸ்துவ நாடுகளிலிருந்து கணக்கிலடங்கா நன்கொடைகளை பெற்று அதில் பெரும் பங்கை வாடிகன் பாங்கில் செலுத்தி மேலும் உலகில் பலநாடுகளில் ஆட்டு மந்தை வியாபாரத்தை (Soul Harvesting Business: ஆன்ம அறுவடை வணிகம்) விரிவாக்கம் செய்ய உதவி வந்தார்.
இதில் பெரும் பங்கு சர்சு கட்டுவதற்கும் கான்வென்ட் பள்ளிகள் கட்டுவதற்கும் செலவு செய்யப்பட்டன.
அவர் நடத்தி வந்த ”மிஷனரிஸ் ஆஃப் சாரிடிஸ்” என்ற நிறுவனம் உலகில் மிகவும் பணம் படைத்த ஒன்று.
இவர்களது வெளிநாட்டு வங்கி நியூயார்கில் உள்ளது.
அதில் கரண்ட் கணக்கில் வைத்திருந்த தொகை 50 மில்லியன் டாலர்களுக்கு மேல்.
இருந்தும் தங்களிடம் பணம் இல்லை என்று சொல்லி மேன்மேலும் தொண்டு நிறுவனங்களிடமிருந்து பணம் பெற்று வந்தார்.
தெரேசா ஏழைகளின் பாதுகாவலர் என்ற ஒரு பிம்பம் பரப்பப் பட்டாலும் அவர் பல நேரங்களில் பணக்காரர்கள் மத்தியிலும் அரசியல்வாதிகள் மத்தியிலும் தான் காணப்பட்டார்.
சந்திரசாமி போன்றவர்களிடம் நெருங்கிய தொடர்பு உண்டு.
இவர் இந்திரா காந்தியின் எமர்ஜென்சியை வெளிப்படையாகவே ஆதரித்தார்.
சஞ்சய் காந்தியின் கட்டாய குடும்ப கட்டுபாடு திட்டத்தை ஆதரித்தார்.
ஆனால் கருச்சிதைவையும் தற்காலிகக் குடும்ப கட்டுப்பாடு மாத்திரைகள் சாதனங்களின் உபயோகத்தையும் எதிர்த்தார்.
இவர் பெரும் பணக்காரர்களிடமிருந்து பணம் பெறுவதைவிட கிரிமினல்களிடமிருந்து பணம் பெறுவது எளிது என்பதை அறிந்து அதன்படி செயல்ப்பட்டார்.
அதில் முக்கியமான இருவர் ”சார்லஸ் கீடிங்”. இவர் இன்று கலிபோர்னியாவில் 10 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.
மற்றும் ஒருவர் ”ராபர்ட் மாக்ஸ்வெல் ” என்ற கிரிமினல். இவர் ஸ்காட்லாந்து போலீஸ் தன்னை பிடிக்க நெருங்கிவந்த பொழுது பிடிபடுவோம் என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
இவர்கள் இருவருமே தங்கள் வங்கிகளில் பணம் போட்டவர்களை மோசடி செய்து பெரும் பணக்காரர்கள் ஆனவர்கள்.
இந்த கீடிங் என்பவன் சுமார் 900 மில்லியன் டாலர் பொதுமக்கள் சொத்தை சூறையாடியவன்.
இவனது கேஸ் கோர்டில் நடந்து வந்த பொழுதுதான் தெரேசா இவனிடமிருந்து 1 மில்லியன் டாலர் மேல் நன்கொடை பெற்றுக்கொண்டு அந்த கோர்ட்டின் நீதிபதிக்கு அவனை மன்னித்து விடுமாறும் அவன் ஏழைகளுக்கு தொண்டு செய்தவன் என்றும் சிபாரிசு கடிதம் எழுதினார்.
மேலும் அவர் குற்றாவாளியின் விலாசமான மனதை ஜீசஸ் எவ்வாறு அணுகுவாறோ அவ்வாறே அணுகவேண்டும் என்று எழுதினார்.
இதனால் கோபம் கொண்ட நீதிபதி, ‘அதுசரி அவனை மன்னிக்கலாம் ஆனால் அவன் மோசடி செய்த பணத்தைத் தங்களால் கொடுக்க முடியுமானால் அந்த பணத்தை உரியவரிடம் சேர்ப்பித்து அவனை விடுதலை செய்கிறேன்’ என்று பதில் எழுதினார். ஏன் வாய் திறப்பார் இந்த பரோபகாரி!
வேறு ஒரு சமயம் அரசியல் சார்ந்த சினிமா பிரசார படம் எடுப்பதற்காக ஹைட்டி (Haiti) நாட்டை சேர்ந்த டுவேலியர் மிச்சேல் தம்பதிகளுக்கு உதவி செய்தார்.
இவர்கள் அந்த நாட்டின் ஏழைகளிடமிருந்து மில்லியன் கணக்கில் பணம் மோசடி செய்து ஸ்பெயின் நாட்டிற்கு ஓடியவர்கள்.
இதன் பிரதிபலனாக டுவேலியரிடமிருந்து (ஒரு நாட்டின் மொத்த குடிகளும் தண்டிக்க தயாராக உள்ள ஒருவனிடமிருந்து) மில்லியன் கணக்கில் நன்கொடையும் பாராட்டுப் பட்டங்களையும் பெற்றார்.
அவர் ஏன் கல்கத்தாவை தனது சேவைசெய்யும் இடமாக தேர்தெடுத்தார் என்றால் இங்கே தான் ஜனத்தொகையும் ஏழ்மையும் அதிகம்.
இது தன் ” மிஷினரிஸ் ஆஃப் சாரிடி” நிறுவனத்தை வலுபடுத்த ஏழ்மையை பறைசாற்றி உலக கிருஸ்துவ பணக்காரர்களிடமிருந்து நன்கொடை பெற முடியும் என்பதை உணர்ந்திருந்தார்.
அத்தோடு அல்லாமல் இங்கே உள்ள அரைகுறை அரசியல்வாதிகள் அறிஞர்கள் பத்திரிகையாளர்கள் தன் தொண்டு நிறுவனத்தை குறை சொல்லமாட்டார்கள் என்ற நம்பிக்கையால். ஏழைகளிடமும் நோயாளிகளிடமும் கொடிய தொற்றுநோய் உள்ளவர்களிடமும் பொது மக்கள் பார்வையில் பரிவுகாட்டினார் என்பதை யாரும் மறுக்கமுடியாது.
ஆனால் அந்த பாவனைதான் தொழிலின் மூலதனம் என்பது பலருக்கு தெரியாது.
இப்படி இந்தியாவில் பல ஆண்டுகளுக்குமேல் வாழ்ந்த இவர் தம் வாழ்நாளில் பெரும் பகுதியை வெளிநாடுகளில் தான் கழித்துள்ளார்.
பணம் திரட்டுவது வெளிநாடுகளில் தன்னுடைய சேவை நிறுவனத்தின் கிளைகள் திறப்பது என்பது அவரது முதன்மை பணியாக இருந்தது.
அவர் வாழ்ந்த நாளில் இயற்கை சீற்றங்கள் பல இந்தியாவில் நிகழ்ந்தது.
ஏதோ குறிபிட்டு சொல்லும் ஒரு இரு நிவாரண பணிகளை தவிர்த்து மற்றவற்றில் இவரது நிறுவனம் பங்கு கொள்ளவே இல்லை.
அப்படியே பங்கு கொண்டாலும் அதற்கான பகட்டான பல விளம்பரங்கள் செய்து விழா கொண்டாடியதை தவிர உண்மையான நிவாரண பணி மேற்கொள்ளப் படவில்லை.
நோயாளிகளுக்கு உருப்படியான சிகிச்சை செய்வது அவருக்கு அறவே பிடிக்காது.
நோய் முற்றிவிட்டால் அவர்களிடம் ஜீசஸ் நெருங்கிவிட்டார் என்றும் அவரை மருந்து செலுத்தி குணப்படுத்துவதை விட ஜபம் செய்து ஜீசஸிடம் சேர்ப்பதுதான் உண்மையான கிருஸ்து நெறி என்பார். கல்காதாவில் உள்ள இந்த காப்பகத்தில் (Nirmal Hriday – House for dying destitute) இதுவரை 86170 நோயாளிகள் சேர்கப்பட்டார்கள் என்றும் அதில் 34815 பேர் ஜீசஸிடம் போய் சேர்ந்தார்கள் என்றும் சிஸ்டர் கிளெண்டா (Sister Glenda) என்ற கன்யாஸ்திரி தெரிவிக்கிறார்.
அவரது தொண்டு நிறுவனங்களில் பணிபுரிந்த பல கன்யாஸ்திரிகள் அவரது அளவுக்கு மீறிய கட்டுப்பாட்டினால் வேலையை விட்டு வெளியேறியுள்ளார்கள்.
முடிவாக, ஐரோப்பாவிலிருந்து இந்திய இறக்குமதி வரிசையில் ராபரட் கிளைவ் 18 ஆம் நூற்றாண்டில். சோனியாவும் குட்ரோச்சியும் சமீபத்தில். பின்பு வந்தவர் தெரேசா. இவர்கள் எல்லோரும் தங்கள் நாட்டில் பெறமுடியாத பணத்தையும் புகழையும் இங்கே பெற்றார்கள்.
இன்று தெரேசாவின் வாரிசு சகோதரி நிர்மலா. இவர் “ஏழைகள் எங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்; அவர்கள் இல்லையேல் எங்களுக்கு வேலை கிடையாது” என்கிறார். ஏன் சொல்ல மாட்டார்?
குரங்கு மரணத்தின் இரகசியம்...
சமீபத்தில் சதுரகிரிக்கு சென்றிருந்த போது அங்கிருந்த ஒரு வைத்தியர் ஒரு தகவலைச் சொன்னார்...
அதாவது இயற்கையாக வயதாகி இறக்கும் குரங்குகளின் மரணத்தை யாரும் பார்க்க முடியாதாம்.
இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே அதற்குத் தெரிந்துவிடுமாம்.
அன்றிலிருந்து அந்தக் குரங்கானது ஒரு பாதுகாப்பான இடத்தை தேர்ந்தெடுத்து உணவு, நீர் எதுவும் அருந்தாமல் அமைதியாக அமர்ந்து விடுமாம்.
அதனுடைய முடிவு காலம் வந்தவுடன் பூமி பிளந்து கொள்ள, குரங்கு அதில் அமர்ந்து கொள்ளுமாம்.
பூமி மூடிக் கொள்ளும் என்றார். எனக்கு அதிசயமாக இருந்தது. அந்த ஒருவாரமும் அது தவம் செய்யும் என்றார்...
மர்மமும் டுமாஸ் கடற்கரையும்...
குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரத்தில் அமைந்துள்ள கடற்கரையின் பெயர் தான் டுமாஸ் (dumas). டுமாஸ் என்னும் கிராமபுரம் ஒட்டி அமைந்துள்ளது.
டுமாஸ் கடற்கரையின் மணல் கருப்பு நிறமாகவும் சிறிது சாம்பல் நிறமாகவும் காணப்படுகிறது. இதுவே இதன் திகில் கதைகளுக்கு ஆரம்பம்.
அங்கு பல மக்கள் காணாமல் போனதாகவும், சில இரவுகளில் விசித்திரமான விஷயங்கள் நடைபெருவதாகவும் கூறப்படுகிறது.
முன்னோர் காலங்களில் அங்கு இடுகாடு (சுடுகாடு) இருந்துள்ளது அதன் காரணமாகவே அங்கு கருப்பு நிற மணல் காணப்டுகிறது.
அங்கு இருக்கும் மக்கள்,இங்கு கடற்கரையில் மக்கள் காணாமல் போவதுபோல் ஏதும் நிகழ்வது இல்லை என்று மறுக்கிறார்கள்.
இந்தியாவில் அதிக திகிழ்வவூட்டும் இடங்கள் பட்டியலில் முதல் பத்தில் இன்றும் இடம் பிடிக்கிறது.
அதற்கு காரணம் அங்கு நிகழும் கருப்பு நிற மணல் மற்றும் இரவில் சூழும் திகில் இருட்டு தான்.
சுற்றுலா பயணிகள் அங்கு புகைப்படம் எடுக்கும் போது அதில் எதோ மர்மமான உருவங்கள் தென்படுவதாக
கூறுகின்றனர்.
அதற்கு காரணம் அங்கு அதிகளவில் காணப்படும் தூசு மற்றும் சாம்பலே என்றும் சிலர் கருதுகின்றனர்.
இன்றும் இரவில் அங்கு யாரும் செல்வதில்லை...
நகரத்தார்கள் தமிழ்வணிகர்கள் அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது என சொம்பு அடிப்பவர்களுக்கு......
1) இரண்டாம் உலகபோருக்கு யுத்தவிமானங்கள் வாங்க எல்லா நகரத்தாரும் சேர்ந்து பணம் கொடுக்க வேண்டிய தேவை என்ன?
இரண்டாம் உலகபோரின் போது காரைக்குடியில் எதுக்கு விமான ஓடுதளம்.. அதை எதுக்கு இப்போ மூடிவைத்துள்ளீர்கள்?
2) உங்களுக்கும் கிழக்கிந்திய கம்பெனிக்கும் என்ன தொடர்ப்பு....?
3) புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கொடியும்( புதுக்கோட்டையை சுற்றி நகரத்தார்கள் அதிகம்)
கிழக்கிந்திய கம்பெனியின் கொடியும்
நகரத்தார் கொடியும்
குஜராத் சேட்( பணியா) கொடியும் எப்படி ஒன்றாகவே உள்ளது....
4) இந்த ஆவணங்கள் ஒரு முறை கொடுத்தது இதே போல 24 முறை நீங்கள் கொடுத்த ஆவணங்கள் உள்ளது எதற்காக நீங்கள் போருக்கு பணம் கொடுக்கிறீர்கள் இத்தனை முறை?
5) ஹிட்லரை பற்றி நீங்கள் உங்களுக்குள் பேசிய குறிப்புகள் உள்ளது... ஜெர்மனியை கைப்பற்றியவனை பற்றி உங்களுக்கு என்ன அக்கரை?
இந்த பணம் கொடுத்த நகரத்தார்கள் அனைவரும் கெட்டவர்கள் என நான் சொல்லவரவில்லை.... இவர்கள் உண்மையான நகரத்தார்களும் அல்ல... வெள்ளாளர்களுடன் கலப்பில் வந்த வம்சம் தான் உள்ளது.... ஒரு தூய இனம் உங்களை ஆட்டுவிக்கிறதே. அவர்களை இந்த உலக சமூகத்தின் முன் தோலுரிக்காமல் உதவி செய்கிறீர்களே... இது எவ்வளவு பெரிய தவறு....
இன்னும் 200 க்கு மேற்ப்பட்ட ஆதாரங்கள் உள்ளது.Reserve bank of india வில் உங்களுடைய பங்கு உட்பட...
அதிகம் சாப்பிட்டால் ஞாபகம் குறையும்...
சாப்பாட்டை ஒரு கட்டு கட்டுபவர்களுக்கு இது கசப்பான தகவல் தான்.
அதிகம் சாப்பிடுவது பல்வேறு நோய்களுக்கு வழி வகுக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
குறிப்பாக அதிகம் சாப்பிடுபவர்களுக்கு ஞாபக சக்தி குறையும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று சொல்கிறது.
அதிகம் சாப்பிடுபவர்களுக்கு மந்த புத்தி என்று சொல்வதை கேள்விப்பட்டிருக்கிறோம். அது உண்மை தான் என்கிறது, இந்த ஆய்வு.
இந்த ஆராய்ச்சியில் பங்கேற்றவர்கள் 3 வகையாக பிரிக்கப்பட்டார்கள்.
600 முதல் 1526 கலோரிகள்,
1526 முதல் 2143 கலோரிகள்,
2143 முதல் 6000 கலோரிகள்
உணவு உட்கொள்பவர்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த 3 பிரிவினரிடமும் ஒரு வினா- விடை கொடுக்கப்பட்டது.
இதில் முதல் வகையைச் சேர்ந்தவர்கள் ஓரளவுக்கு விடையை தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.
2வது வகையினர் அதை விட சற்று குறைவான பதிலையே கொடுத்துள்ளனர்.
3வது வகையினர் மிக மிகக்குறைவான கேள்விகளுக்கே பதில் கூறியுள்ளனர்.
அதனால் அவர்களுக்கு ஞாபக சக்தி குறைவு ஏற்பட்டுள்ளது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
அதிகம் சாப்பிடுபவர்களுக்கு அதிக ரத்த அழுத்தம் நீரிழிவு நோய், மாரடைப்பு போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படலாம்.
இந்த வரிசையில் ஞாபக சக்தி குறைவு, மனச்சிதைவு போன்ற நோய்களும் ஏற்படும் என்று புதிய ஆய்வு சொல்கிறது.
வயிறு முட்ட சாப்பிடக் கூடாது.
ஒரு நாளைக்கு எத்தனை முறை என்பது கணக்கல்ல.
அளவுக்கு அதிகமாக சாப்பிடக் கூடாது என்பது தான் முக்கியம்.
நாற்பது வயதுக்கு மேல் ஆகி விட்டால் அதிகமான உணவு உட்கொள்வதை தவிர்த்து உணவு சாப்பிடும் வேளைகளை வேண்டுமானால் கூட்டிக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதிகம் சாப்பிட்டாலும் ஆபத்து. சாப்பிடாமல் இருந்தாலும் ஆபத்து.
எனவே மிதமான உணவை தினசரி 5 முறைகள் சாப்பிட்டால் நல்லது என்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் அளவான சாப்பாடே ஆரோக்கியமான வாழ்வு என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அப்போது உடலுக்கும் தீங்கு ஏற்படாது. ஞாபக சக்தியும் குறையாது...
இலுமினாட்டி - வங்கிகளின் உண்மை நிலை...
நீங்க யாராவது சிந்தித்திருக்கீங்களா ?
வெற்று காகிதத்திற்கு எப்படி இவ்வளவு மதிப்பு வந்தது என ?
காலம் முழுவதும் அந்த காகிதத்திற்காக அடிமை போல மானத்தை இழந்து, சுதந்திரம் இழந்து, மகிழ்ச்சியும் இழந்து எவனுக்கோ வேலை செய்து சாக வேண்டுமா...
எது விலை உயர்ந்தது உணவா அல்லது கணிணியா?
உணவு தானே. ஆனால் இங்கு அப்படி தெரியவில்லையே.
சில பேர் சொல்வார்கள் அத்தியாவசிய பொருட்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் அதனால்?
அப்படியா யார் அந்த எல்லாரும். இங்கு விவசாயி தான் பட்டினி கிடந்து சாகிறான். அப்போ யாருக்காக இந்த மலுப்பல்.
கணிணி தயாரிப்பவனுக்கும் மதிப்பே இல்லா காகிதத்தை அவனே மதிப்பு இருப்பதாக கூறி முதலீடு என்ற பெயரில் எதுவும் செய்யாமல் உட்கார்ந்து திண்கிறானே அவனுக்காக தானே இந்த மலுப்பல்.
ஏன் இப்படி இருக்க கூடாது கணிணியை கொடுத்து உணவு வாங்கி கொள்ளட்டும் ஓர் வேலை உணவு. உணவு யாரிடம் இருக்கிறதோ அவனே வாழ்வளிப்பவன். அவன் தயவாலயே நாம் வாழ்கிறோம். ஆனால் எதார்த்தத்தில் அப்படி இல்லையே. ஏன்?
இவ்வாறு தானே உலகம் நகர்ந்திருக்க வேண்டும். எது இதை மாற்றியது. பொய். மாயை.
நிலவுடையாரிடம் தோன்ற்றிவித்த இந்த மாயை பல பரிமாணங்களை கடந்துள்ளது. அது அரசர்களின் கைகளுக்கு மாறியது. தற்போது பெரும் செல்வந்தர்களில் கைகளில் இருக்கிறது.
இப்படி சொல்லலாம் உலக வங்கிகளின் முதலாலிகள் கைகளில் இருக்கிறது.
பணம் என்ற பொய்மை உங்களுக்கு புரியும் என நம்புகிறேன். இல்லாத மதிப்பை இருப்பதாக கூறி அனைவரையும் அதை நோக்கி ஓட வைத்து விட்டனர். அதை அவர்களே அச்சிடுவதால் நாம் அவர்களை நோக்கி ஓடுகிறோம். அவர்கள் சொல்வதை நம்புகிறோம். அவர்கள் சொல்வதையே செய்கிறோம் பொதுவாக.
இந்தியாவின் முதல் வங்கி இந்திய கிழக்கிந்தய கம்பேனியால் கொண்டு வரப்பட்டது. அதன் பெயர் Imperial Bank Of India,British . தற்பொழுது இதன் பெயர் Reserve Bank Of India.
பெயர் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது. வேறு எதுவும் மாறவில்லை...
இந்த வங்கி Asian clearing Union. என்ற அமைப்பால் கட்டுப்படுத்தப்படுகிறது. தலைமை இடம் ஈரானில் உள்ளது.
மேலும் இந்தியாவின் ரிசர்வ் வங்கி யின் கீழ் தான் பல வங்கிகள் செயல்படுகின்றன. அவை இந்திய தனியார் வங்கிகள் போல தோன்றும் ஆனால் ரோத்ஸ்சைல்ட் உடையது தான்.
பங்குச்சந்தை இதில் பெரும் பங்காற்றுகிறது. இதையும் இவர்களே உருவாக்கினார்கள் கட்டும் படுத்துகிறார்கள்.
முத்தூட் வங்கி அனைவரும் அறிந்ததே. அந்த வங்கி சிறிது காலத்திற்கு முன் பெரிய அளவில் மோசடி புகார்களை சந்தித்தது இவர்களாலேயே.
வங்கிகளின் மோசடி...
ஓர் வங்கி தான் வைத்திற்கும் பணத்திற்கு 16 மடங்கு லோன் வழங்கலாம். இதன் மூலம் லாபத்தை மட்டுமே வங்கிகள் ஈட்டும். இப்பொழுது வெறும் 5% பணம் மட்டுமே தாளாகவோ தங்கமாகவோ உள்ளது. மீதி அனைத்தும் கணிணியில் வெறும் எண்ணாக மட்டுமே உள்ளது..
நாம் அனைவரும் ஒரே நாளில் வங்கியில் போட்ட பணத்தை எடுத்தால் வங்கியால் பணத்தை வழங்க முடியாது.
புரியும் என்று நம்புகிறேன் நாம் அனைவரும் பணத்திற்காக ஓடுகிறோம். ஆனால் அந்த பணம் சிலரின் கட்டுப்பாட்டில் உள்ளது. உண்மையில் இதற்கு மதிப்பும் இல்லை. அர்த்தமும் இல்லை.
நாம் முட்டாளாக்கப் பட்டிருக்கிறோம்...
தேங்காயின் மருத்துவக் குணங்கள்...
தேங்காயில் உள்ள “ஃபேட்டி ஆசிட்” (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது என்று சமீபத்திய ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இது மருத்துவ உலகினர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. “தேங்காயில், தேங்காய் எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம். உடலுக்கு ஆகாது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் தேங்காயைத் தொடக்கூடாது” என்ற பிரசாரத்துக்கு இந்த ஆய்வு பெரும் சவால் விடுத்துள்ளது.
அதேவேளையில் பூலோகத்தின் கற்பக விருட்சம் என்று சொல்லி தென்னையையும் அதன் முத்தான தேங்காயையும் சித்த மருத்தவம் உள்பட இந்திய மருத்துவ முறைகள் காலம் காலமாகப் போற்றி வருகின்றன.
தாய்ப்பாலில் உள்ள புரதச் சத்துக்கு இணையானது இளநீரில் உள்ள புரதச் சத்து. சித்த மருத்துவம் உள்பட இந்திய மருத்துவ முறைகளில் தென்னையின் பயன்கள் பட்டியலிடப் பட்டுள்ளன.
தென்னையின் வேரிலிருந்து குருத்து வரை எல்லாப் பாகங்களிலும் மருத்துவக் குணங்கள் கொட்டிக் கிடப்பதாகச் சொல்கிறது சித்த மருத்துவம். தேங்காய், தேங்காய் எண்ணெய் உடல் நலத்துக்குக் கேடு என்ற பிரசாரம் தேங்காய் எண்ணெய் மீது சுமத்தப்பட்டிருக்கும் அவதூறு என்கிறார்கள் நமது பாரம்பரிய மருத்துவர்கள்.
தேங்காய், தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று. விருந்து, விழாக்கள், பண்டிகைகள், சடங்குகள் என எல்லா இடத்திலும் தேங்காய்க்கு முதல் மரியாதைதான். தேங்காய், மங்களகரத்தின் அடையாளச் சின்னம் மட்டுமல்ல. மருத்துவத்தின் அடையாளச் சின்னமும்கூட என்கிறது சித்த மருத்தவம்.
இந்தியாவுக்கு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னை வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் வயது 80 ஆண்டுகள் முதல் 200 ஆண்டுகள் வரை.
விதை வளர்த்து மரமான பின் விதைத்தவனுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கிறது என்பதால் இதை “தென்னம்பிள்ளை” என்று அழைக்கிறார்கள். தேங்காய் உள்பட தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் பொருள்களில் உள்ள மருத்துவக் குணங்கள் குறித்து ஓர் அலசல் : ஆண்மையைப் பெருக்கும் கொப்பரை.
தேங்காயில் உள்ள சத்துக்கள் என்ன? புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன. தேங்காய் உள்பட தென்னை மரத்தின் வெவ்வேறு பாகங்களின் மருத்துவக் குணங்கள் என்ன? தேங்காய்ப் பால் உடல் வலிமைக்கு நல்லது.
தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.
மாதவிடாய் போது ஏற்படும் அதிக உதிரப்போக்கு, தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு நல்ல மருந்து. வெள்ளை படுதலுக்கு தென்னம் பூ மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தயாரிக்கும்போது கிடைக்கும் புண்ணாக்கோடு கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
தேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஓடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது. மூல முளை, ரத்த மூலம் போன்றவற்றுக்கு தென்னங்குருத்திலிருந்து மருந்து தயாரிக்கப் படுகிறது. தேங்காய் பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப் படுகிறது. சேராங் கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்குத் தேங்காய்ப் பால் நஞ்சு முறிவு. தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களுக்கு அருமருந்து.
தைலங்கள்: தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துகின்றன. நாள்பட்ட தீராத புண்களுக்கு மருந்தாகத் தரப்படும் மத்தம் தைலம், தோல் நோய்களுக்கான கரப்பான் தைலம், வாத வலிகளைக் குணப்படுத்தும் கற்பூராதி தைலம், தலைக்குப் பயன்படுத்தப்படும் நீலபிரிங்காதித் தைலம், சோரியாசிஸ் நோய்க்குப் பயன்படும் வெப்பாலைத் தைலம், தலையில் உள்ள பொடுகுக்கு மருந்தாகும் பொடுதலைத் தைலம் ஆகிய தைலங்களில் தேங்காய் எண்ணெய்யின் பங்கு முக்கியமானது.
எளிதில் ஜீரணமாகும் : தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும். பெரு வயிறுக்காரர்களுக்கு (வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தால் சரியாகும்.
தேங்காய்ப் பாலை விளக்கெண்ணெய்யில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அப்புறப்படுத்தும்.
வயிற்றுப்புண்கள் : தேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு தேங்காய்ப் பால் மிகவும் சிறந்தது. உடலுக்குத் தேவையான அமீனோ அமிலங்கள் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.
தேங்காய் அல்லது தேங்காய் எண்ணெய்யை உணவில் சேர்த்தால் அது உடலில் உள்ள கொழுப்பைக் குறைப்பது எப்படி? மீடியம் செயின் ஃபேட்டி (Medium Chain Fatty Acid) ஆசிட் தேங்காயில் அதிகமாக உள்ளது. உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கும் காப்ரிக் ஆசிட் (Capric Acid) மற்றும் லாரிக் ஆசிட் (Lauric Acid) ஆகிய இரண்டு அமிலங்களும் தேங்காயில் போதிய அளவு உள்ளன.
இதனால் தேங்காய் எண்ணெய் உரிய அளவு தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும் என்று அண்மைக் கால ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளன.
வைரஸ் எதிர்ப்பு: தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது.
தேங்காயில் உள்ள மோனோ லாரின் (Mono Laurin) வைரஸ் செல் சுவர்களைக் கரைக்கிறது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வைரல் லோடைக் குறைக்கிறது. தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு (Metabolism) பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் சக்தியை அதிகப்படுத்துகிறது.
ஆண்மைப் பெருக்கி : முற்றிய தேங்காய் ஆண்மைப் பெருக்கியாகப் பயன்படுகிறது. அதில் வைட்டமின் இ முதுமையைத் தடுக்கிறது. தைராய்டு சுரப்பின் செயல்பாட்டை ஊக்கப்படுத்துகிறது.
குழந்தை சிவப்பு நிறமாக: குழந்தைகள் நல்ல நிறமாக பிறக்க வேண்டும் என்பதற்காக குங்குமப்பூ சாப்பிடுவது வழக்கம். அதுபோல் குழந்தை நல்ல நிறமாகப் பிறக்க தேங்காய்ப் பூவை சாறாக்கி கர்ப்பிணிகளுக்குக் கொடுக்கும் வழக்கமும் உள்ளது.
இளநீரின் மருத்துவக் குணங்கள் என்ன?
மனித குலத்துக்கு இயற்கை தந்த பொக்கிஷம் இளநீர்.
சுத்தமான சுவையான பானம். இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன. இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும். ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும். மேக நோய்களைக் குணப்படுத்தும். ஜீரணக் கோளாறால் அவதிப் படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. உடலில் ஏற்படும் நீர் - உப்புப் பற்றாக்குறையை இளநீர் சரி செய்கிறது.
இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்ல சத்து. ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன. அவசர நிலையில் நோயாளிகளுக்கு இளநீரை சிரை (Vein) மூலம் செலுத்தலாம். இளநீர் மிக மிகச் சுத்தமானது.
இரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருள்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது. இளநீரிலிருந்து தயாரிக்கப்படும் “ஜெல்” என்ற பொருள் கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து. இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன.
சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன. பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது.
இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிட வேண்டும்...
இளநீர்...
கர்ப்பிணிகள் அதிகமாக இளநீர் பருகுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
கர்ப்ப காலத்தில் இயற்கையான மருத்துவ குணம் நிறைந்த இளநீரை பருகுவது தாய்க்கும், கருவில் உள்ள குழந்தைகளுக்கும் ஏற்றது என்றும் மருத்துவர்கள் பரிந்துரைந்துள்ளனர். இளநீரில் எலக்ரோலைட் அதாவது மின்பகுபொருள் அதிகமாக உள்ளது. எனவே கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இளநீர் அருந்துவது மிகவும் அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். இதனால் கர்ப்ப காலத்தில் சிறுநீர் தொற்றுநோய் ஏற்படுவது தவிர்க்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர், தாது உப்புக்களும், உயிர்சத்தும் மிதமாகவே சர்க்கரை, உப்பு மற்றும் புரத சத்து உள்ளது. மேலும் இதில் குளோரைடு, பொட்டசியம் மற்றும் மக்னிசியம் அதிகமாக உள்ளது.
இளநீரில் உள்ள பொட்டாசியம் இரத்த கொதிப்பையும்,இதயத்தின் செயல்களையும் சீராக செய்ய உதவுகிறது. இளநீரில் நார் சத்து, மாங்கனீஸ்,கால்சியம், ரிபோஃப்ளோவின் , மற்றும் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் சிறந்த மருந்துப் பொருளாகவும் திகழ்கிறது.
இளநீரில் அதிகமாக லாரிக் அசிட் உள்ளது. லாரிக் அசிட், ஃபேட்டி அமிலம் சுரக்க காரணமாக உள்ளது. லாரிக் அசிட் , ஆன்டி பங்கல், ஆன்டி பாக்டீரியல் தன்மை இதில் அதிகமாக உள்ளதால் இது கர்பகாலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்தி, நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது.
இயற்கை குளுக்கோஸ் இளநீரில் மின்பகுபொருள் (ஏலேக்ட்ரோல்ய்டே) அதிகமாக உள்ளதால் இது உங்கள் நாவறட்சியில் இருந்தும் உடம்பில் உப்பு தன்மை குறைந்தால் இயற்கை முறையில் உங்களின் உடம்பில் உள்ள உப்பின் அளவை சரி செய்யவும் உதவுகிறது. வயிற்று போக்கு அதிகமாக இருக்கும் பொழுது உடம்பின் நீரின் அளவை சமன் படுத்த இளநீர் அருந்துவது மிகவும் அவசியம். இது இயற்கை குளுகோஸ் ஆக செயல்படுகிறது.
இயற்கை சுத்திகரிப்பு இளநீரில் கொழுப்பு சத்து, கொலஸ்ட்ரால் சுத்தமாக இல்லை என்றும் இது உடலின் நல்ல கொலஸ்ட்ராலை அதிக படுத்த உதவுகிறது என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இளநீர் குடிப்பதால், கர்ப காலத்திற்கே உரித்தான, மலச் சிக்கல், வயிறு உப்பிசம், நெஞ்சு எரிச்சல் குறிப்பிட்ட அளவு சரியாக வாய்ப்புள்ளது. எனவே கர்ப்ப காலத்தில் பெண்கள் கடையில் விற்கும் சோடாக்களை வாங்கி குடிப்பதையும், கோலா வகைகளையும் கர்ப காலத்தில் குடிப்பதை தவிக்கவும். அதிலும் காபின் உள்ளது. எனவே இயற்கை அளித்த இளநீர் பருகுவதே சிறந்தது என்றும் இது இயற்கையிலே சுத்திகரிக்க பட்டுள்ளதால் தூய்மைகேடு மற்றும் நோய் தாக்குதல் பற்றி கவலை படமால் அருந்தலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இளநீரின் உள்ள இந்த இயற்கை மருத்துவ குணங்களினாலேயே கர்பவதிகளுக்கு மிகவும் பரிந்துரைக்க படுகிறது. எனவே கர்ப்பிணிகளே இளநீர் குடிங்க நோயில்லாத குழந்தைகள் பிறக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்...
வாஷிங்டனிலிருந்து ஜனாதிபதி எங்கள் நிலத்தை வாங்க விரும்புவதாக செய்தி அனுப்பியிருக்கிறார்...
வானத்தையோ நிலத்தையோ எவ்விதம் நீங்கள் விற்கவோ வாங்கவோ முடியும்? இது நாங்கள் கேட்டறியாதது. காற்றின் சுத்தத்தையும் நீரின் மினுக்கலையும் எவ்விதம் விற்க இயலும்? இந்த நிலத்தின் ஒவ்வொரு பகுதியும் எங்களுக்கு புனிதமானது. பளபளக்கும் ஊசிக்காட்டின் ஒவ்வொரு சுள்ளியும், ஓசையிடும் சிள்வண்டுகளும். இவையெல்லாமே எங்கள் மக்களின் அனுபவங்களிலும் நினைவுகளிலும் மிகவும் புனிதம் வாய்ந்தவை.
மரங்களினுள்ளே ஓடும் உயிர்த்தன்மையை எங்கள் நரம்புகளில் ஓடும் ரத்தத்தை அறிவது போலவே அறிவோம். நாங்கள் இந்த பூமியின் ஓர் அங்கம். பூமி எங்களின் ஒரு பகுதி. நறுமணமுள்ள மலர்கள் எங்கள் சகோதரியர். கரடி, மான், வலிய பருந்து முதலியவை எங்கள் சகோதரர்கள். மலை முகடுகள், புல்வெளிகளில் உள்ளுறை அமிழ்து, குதிரைக் குட்டியின் கதகதப்பு, மனிதன், எல்லாம் எங்கள் குடும்பம்.
ஓடைகளிலும் நதிகளிலும் சலசலத்து மின்னியோடுவது நீரல்ல; எம் மூதாதையரின் குருதி. நாங்கள் உங்களுக்கு இவற்றை விற்போமானால் நீங்கள் நினைவிலிருத்த வேண்டும் இவற்றின் புனிதத்தை. துல்லியமான நீர் நிரம்பிய ஏரிகளில் பிரதிபலிக்கும் ஒவ்வொரு பிம்பமும் எங்கள் மக்களின் வாழ்வியலை, நினைவுகளைச் சொல்கின்றன. நீரெல்லாம் என் அப்பனுக்குத் தகப்பனின் குரலில் முணுமுணுக்கிறது.
நதிகளோ எம் சகோதரர்கள். அவை எம் விடாய் தீர்க்கின்றன. அவை எங்கள் ஓடங்களைச் சுமக்கின்றன. எம் குழந்தைகளுக்கு உணவூட்டுகின்றன. ஆதலினால் எம் நதிகளிடம் ஒரு சகோதரனைப் போல அன்பு செலுத்த வேண்டும்.
உங்களுக்கு இந்த நிலத்தை யாம் விற்போமானால், இந்தக் காற்று எங்களுக்கு விலை மதிப்பற்றது, சூழலின் வாழ்வத்தனையும் அது தாங்குகிறது என்று நினைவிருத்துவீர்களாக. எம்முடைய தாத்தனுக்கு அவனது முதல் மூச்சையும் கடைசி சுவாசத்தையும் இந்தக்காற்றுதான் அருளிற்று, இதே காற்றுதான் எங்கள் குழந்தைகளுக்கு இந்த வாழ்க்கையின் ஆதாரத்தையே தருகிறது. ஒருவேளை உங்களுக்கு நாங்கள் இந்த நிலத்தைத் தருவோமானால், நீங்கள் அதனைப் புனிதமாகப் போற்றி, நறுமலர்களின் இன்மணம் தோய்ந்த காற்றை மனிதர்கள் அங்கு சுவாசிக்க ஏதுவாக நீங்கள் அந்த நிலத்தைப் பாதுகாக்க வேண்டும்.
நாங்கள் எங்கள் குழந்தைகளுக்குக் கற்பித்ததை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்குக் போதிப்பீர்களா? இந்த பூமி நம் தாய் என்றும், எது இந்த நிலத்துக்கு நேர்கிறதோ அது இந்த நிலத்தின் எல்லாப் பிள்ளைகளுக்கும் நேரும் என்றும்?
நாங்கள் அறிந்தவரை, இந்த பூமி மனிதனுக்கு சொந்தமானதல்ல; மனிதன் பூமியின் உடமை. நம் எல்லோரையும் பிணைக்கும் ரத்தம் போலவே இந்த பூமியில் எல்லாம் ஒன்றுக்குள் ஒன்று. இந்த வாழ்க்கையின் உயிர்க்கூட்டை நெய்தவன் மனிதனல்லன். மனிதன் இந்த பூமியின் உயிரிகளில் ஓர் இழை மாத்திரமே. இந்த பூமிக்கு மனிதன் இழைக்கும் ஒவ்வொரு செயலையும் அவன் தனக்கேதான் இழைத்துக் கொள்கிறான்.
கடவுள் ஒருவரே. பூமியின் மீது நிகழ்த்தப்படும் ஒவ்வொரு தாக்குதலும் அதன் படைப்புக் கடவுளின் மீது நிகழ்த்தப் படுவதே. உங்களுக்கு இறுதியில் என்னவாகும் என்பது எங்களுக்கு விளங்காப் புதிர்தான். எல்லா எருதுகளையும் கொன்று குவித்த பின், எல்லாக் குதிரைகளையும் அடக்கியபின் என்னாகப் போகிறது? அடர்வனங்களின் பகுதிகளெல்லாம் மனிதக் கூட்டத்தின் மூச்சுக் காற்று படர்ந்தபின், பசுமலைகளின் சிகரங்களை மின்கம்பிகளின் பின்னல்கள் மறைக்கும்போது… செறிந்த காடுகள் எங்கே? அழிந்தன..உயர் வானில் பறக்கும் பருந்துகள் எங்கே? போயே போயின…
அப்புறமென்ன? உயிர்த்திருப்பது இல்லாமலாகி, வாழ்தல் மட்டுமே எஞ்சும்.
கடைசி செவ்விந்தியனும் அவனது கானுயிரோட்டமும் மறைந்தபின், அவன் குறித்த நினைவென்பது, அலையாடும் புல்வெளியைக் கடக்கும் மேகத்தின் நிழல் போலான பின் இந்த நதிக்கரைகளும் காடுகளும் இங்கிருக்குமா என்ன? எம் மக்களுடைய உயிர்ப்பு இங்கே எங்கிருக்கும்?
தாயின் இதயத்துடிப்பை உணரும் பிறந்த குழந்தை போல இந்த பூமியை நாங்கள் நேசிக்கிறோம். ஆதலால் இதை உங்களுக்கு நாங்கள் கொடுப்போமானால், நாங்கள் நேசித்தது போல் நீங்களும் இந்த பூமியை நேசிக்கத் தெரிந்து கொள்ளுங்கள். அதன்பால் எங்களைப் போலவே கரிசனம் கொள்ளுங்கள். இந்த நிலத்தைப் பெற்றுக் கொள்ளும்போது அது இருந்த விதமாகவே நீடிக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இனி வரும் சந்ததிகளுக்காக இந்த நிலத்தைப் பாதுகாப்பாக, அதை அந்த இறை நேசிப்பது போல இந்த நிலத்தை நேசமுடன் வைத்திருங்கள்.
நாங்கள் இந்த நிலத்தின் பகுதி என்பதே போல்தான் நீங்களும். இந்த பூமி எங்களுக்கு விலை மதிப்பற்றது. உங்களுக்கும்தான். இறை என்பது ஒருவரே. செவ்விந்தியனோ வெள்ளையனோ ஒருவருக்கொருவர் வித்தியாசமானவர்கள் அல்லர். நாமெல்லோரும் ஒருதாய் வயிற்று மக்களே”
-செவ்விந்திய சமூகத் தலைவன் ஸீயாட்டீல் 1852ல் எழுதியது...
சங்கம் வைத்து இந்தி வளர்த்த கன்னட ஈ.வே.ரா...
ஈ.வெ.ராமசாமி நாயக்கர் தான்
தென்னாட்டில் முதன் முதலில்
ஹிந்திக்கு வித்திட்டவர்..
இவர் 1922-ல் ஈரோட்டில் ஹிந்திப்பள்ளி ஒன்றை ஆரம்பிக்க இலவசமாக இடம் கொடுத்தார்.
திரு.வி.க.வின் வாழ்க்கைக் குறிப்புகள் என்ற நூலில் பக்கம் 436ல்..
இராமசாமி நாயக்கர் காங்கிரசில்
தொண்டாற்றிய காலத்தில் அவர் முயற்சியால் ஈரோட்டில் ஹிந்தி வகுப்பொன்று நடைபெற்றது.
திறப்பு விழாவுக்கு யானுஞ்
சென்றிருந்தேன்..
தென்னாட்டில் ஹிந்திக்கு விதை இட்டவர் நாயக்கரே என்று திரு.வி.க. அவர்கள் எழுதியுள்ளார்.
1917-ஆம் ஆண்டிலிருந்து 1925-ஆம்
ஆண்டுவரை பிராமணர்களின் தாசனாக விளங்கி வந்தார் (ஏமாற்றுவதில்) பெரியார்...
ஓம் எனும் பிரணவம் மந்திரம்...
ஓம் என்ற சொல் தமிழில் பிரணவம் மந்திரமாக குறிக்கபட்டதின் காரனம் அதற்க்குள் அடங்கிய பாசிட்டிவ் வைப்ரேஷன் எனப்படும் ஒரு நல்ல விஷயங்களுக்கான அதிர்வு தான் அந்த வார்த்தை.
ஆம் ஒரு சில கோயில்களிலும், அரண்மனைகளிலும், சில வீடுகள் மடங்கள் இந்த மாதிரி இடத்திலும் நீங்கள் காணக்கூடிய ஒரு ஸ்ரீ சக்கரம் (யந்திரம்) என்னவென்று பலருக்கு தெரியாது.
பலர் இதை ஒரு செப்பு தகுடு டின் கிருக்கல்கள் என நினைத்திருக்கலாம்.
ஓம் என்ற சொல்லின் உருவம் அல்லது படிவம் தான் என்று சயின்ஸ் நிருபித்துள்ளது.
ஆம் ஹான்ஸ் ஜென்னி என்னும் விஞ்ஞானி ஸ்விஸ் நாட்டை சேர்ந்தவர் தான் ஒலியின் பரிமானத்தை நம் பார்வைக்கு கொண்டுவந்தவர்.
இவர் கண்டுபிடித்த சாதணம் தான் டோனோஸ்கோப் (Tonoscope) என்னும் ஒரு வரலாற்று முக்கிய கருவி.
இந்த டோனோஸ்கோப்பில் ஓம் என்று உச்சரித்தால் ஸ்ரீ சக்ரா எனப்படும் யந்திர உருவத்தை காண முடியும் அதன் படத்தையும் இங்கு இணைத்துள்ளேன்.
நீங்களும் உச்சரித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். ஆனால் இந்த உருவத்தை நாம் வரைந்து வைத்திருப்பதை அதுவும் பல ஆயிரகணக்கான ஆண்டுகளூக்கு முன் ஒம் என்ற உச்சரிப்பின் பரிமானம் இது தான் என்று வேத ரிஷிகளும் முனிவர்களும் இதன் அர்த்ததை உணர்ந்திருப்பது மெய் சிலிர்க்க வைக்கும் ஒரு பெரிய உண்மை...
மனுதர்மம் பார்ப்பனர் படைத்ததா?
பிராமணிய கொடுநெரிகளைச் சட்ட வடிவமாக்கிய 'மனு நூல்', அது பார்ப்பனரால் ஆக்கப்பட்ட நூல் அல்ல.
அது கி.பி.நான்காம் நூன்றாண்டில் கருனாடகத்து பெரியார் எனும் ஈ.வே.ரா முன்னோர்கள் (திராவிடன்) கடம்பப் பேரரசனான மயூரவர்மனின் அவையில் அரங்கேற்றப் பெற்ற சட்டநூல்.
மானவக் குலம் என்பது 'ஆரிபுத்திரனின் வழிவந்த' கடம்ப்பரையும், சாளுக்கியரையுமே குறித்தது..
'மானவத் தருமநூல்' எனப்பட்ட மனுநூல் இதனால் கருனாடகத்து கன்னட அரசர் ஆக்கிய நூலேயாகும்.
அதையொத்த...
ஆவத்தம்பா சூத்திரம்,
போதாயன சூத்திரம்,
நாரதர் சூத்திரம் முதலான பிராமனியாயச் சட்ட நூல்களும் கூடத் தென்னகத்தின் 'திராவிட' அரசுகளால் ஆக்கப்பெற்ற சட்ட நூல்களே ஆகும்...
இதில் நகைச்சுவை என்னவென்றால் சாதியை உருவாக்கிய திராவிடனே... சாதியை ஒழிக்க போராடுவதைப் போல் நடித்து நம்மை ஏமாற்றி பிழைத்துக் கொண்டிருக்கிறான்... அதை தமிழன் நம்பி ஏமாந்துக் கொண்டிருக்கிறான்...
அன்று முதல் இன்று வரை அரசியலில் தலைவனாவது எப்படி? இது தான் அந்த இரகசியம்...
நீ ஒரு தனிமனிதன்.
உனக்கு ஆளும் விருப்பம் வந்துவிட்டது.
நீ ஆள மக்கள் வேண்டும்.
குறிப்பிட்ட மக்களைத் தேர்ந்தெடு.
அவர்கள் மதம்,இனம்,சாதி, ஊர், வரலாறு, பண்பாடு என அனைத்தையும் அலசு.
இதில் எது அவர்களிடம் நன்கு வேறூன்றியிருக்கிறது என்று ஆராய்.
அதைக் கையிலெடு.
அவ்வுணர்வுக்கு எதிரான பிரச்சனைகள், தடைகளை எதிர்த்துப் போராடி அவ்வுணர்வை மேலும் தூண்டு.
உன் பின்னால் ஒரு கூட்டம் வரும்.
உன் வலிமை கூடும்.
அவ்வுணர்வுள்ள மக்களுக்காக ஒருவன் போராடி மடிந்திருப்பான் அவனை அறிந்துகொள்.
அவனின் வாரிசாக மாறு.
உன் மீது விமர்சனங்கள் வரும்.
கருத்தியல் ரீதியான விமர்சனங்களை உன் தலைவனின் பிம்பத்தால் உடை.
நடைமுறை எதிர்ப்புகளை உன் வலிமையால் உடை.
பாதிவாழ்நாள் கழிந்ததும் கிடைத்த நாற்காலியில் அமர்.
கடந்த காலத்தைச் சொல்லியே சுகமாக வாழு.
பணம், புகழும், இல்லமும் தளைக்க நல்லசாவு பெறு.
பத்து தலைமுறைகளுக்கு சொத்தும்.
ஐந்து தலைமுறைக்கு உன் பெயரும் எஞ்சியிருக்கும்...
மீளாத் துயரை தந்துவிட்டு போன திலீபன்...
தன் சொந்தத் தம்பி போலவே திலீபனைக் கருதினார் பிரபாகரன். அண்ணனின் போராட்டத்துக்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருந்தார் திலீபன்.
இந்திய அமைதிப் படைக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கும் முடிவை திலீபன் தயக்கத்தோடு பிரபாகரனிடம் சொன்னபோது, 'நான் ஆயுதப் போராட்டத்துக்குதான் உங்களை எல்லாம் உருவாக்கியிருக்கிறேனே தவிர, உண்ணாவிரதம் இருக்க அல்ல’ என மறுத்திருக்கிறார் பிரபாகரன்.
இதை விட்டால் நமது கொள்கைகளின் தீவிரத்தை நிரூபிக்க வேறு வழி இல்லை. ஈழ மக்களுக்கும், உலகத் தமிழர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நாம் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஏற்கவில்லை என்பதையும், எங்கள் மண்ணில் இன்னொரு இராணுவம் நிலைகொள்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பதையும் அழுத்தமாகச் சொல்லவேண்டிய தருணம் இது. அதை இந்தியாவின் மொழியிலேயே சொல்ல வேண்டும் என்றால், உண்ணாவிரதம்தான் ஒரே வழி’ என வலியுறுத்தி, பிரபாகரனிடம் ஒப்புதல் பெற்றார் திலீபன்.
ஆனாலும், கடைசி நிமிஷத்துலகூட திலீபன் மனசை மாத்திரலாம்னு நம்பினார் பிரபாகரன். உண்ணாவிரதத்துக்கு முந்தைய இரவு திலீபனை விருந்துக்குக் கூப்பிட்டார் பிரபாகரன். அவரோடு சாப்பிட்டுக்கிட்டே, உண்ணாவிரத முடிவைக் கைவிடச் சொல்லிப் பேசிப் பார்த்தார். திலீபன் எதுக்கும் மசியலை.
விருந்து முடிந்து கிளம்பும்போது திலீபன் பிரபாகரனிடம் இப்படிச் சொன்னாராம்... 'அண்ணா... நான் சும்மா வேடிக்கைக்காகவோ, கவனஈர்ப்புக்காகவோ உண்ணாவிரதம் இருக்கப்போவது இல்லை. உங்களோடு பேசிய பிறகு தண்ணீர்கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருக்கலாம் என முடிவு எடுத்திருக்கிறேன்!’ - இப்படி தன் முடிவை இன்னும் கடுமையாக்கி உண்ணாவிரதப் பந்தலில் அமர்ந்தார் திலீபன். எட்டாவது நாளே நினைவு தப்பிருச்சு.
புலிகள் தலைவர் பிரபாகரன், இந்திய அரசுக்கு ஒரு கோரிக்கை வைத்தார். 'நீங்கள் நேரடியாக உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்து திலீபனிடம் மக்கள் முன்னிலையில் உங்கள் வாக்குறுதிகளைக் கொடுங்கள். நாங்கள் உண்ணாவிரதத்தை விலக்கிக்கொள்கிறோம்’ என்று.
ஆனால், கடைசி வரை இந்திய அதிகாரிகள் வாக்குறுதி எதையும் அளிக்காமல், ஈழத்து காந்தியை சாகவிட்டனர். அன்னைக்கு முழுக்க உணவு அருந்தாமல் இருந்த பிரபாகரன், வாழ்க்கையில் கண்ணீர்விட்டு அழுதது அந்த ஒரு நாள்தான். அந்தக் கண்ணீர்... திலீபனுக்காக...
சில முதல் உதவி தகவல்கள்...
ஆஸ்த்துமா..
கடினமான மூச்சு, சத்தத்துடன் சுவாசம் விடுதல். மூச்சிழப்பு ஏற்படுதல், இருமல் வரலாம். மார்பு இருக்கமடைந்து சுவாசம் கடினமாதல், பேச முடியாமை, உதடு, முகம்-நீல நிறமாதல்.
சிகிச்சை..
சுவற்றின் மீதோ அல்லது நாற்காலியின் மீது முதுகு நேராக இருக்கும்படி உட்கார வைக்கவும். கொஞ்சம் முன்பாக சாய்ந்து இருந்தால் நல்லது. முன்னால் மேசை மீது கைகளை ஊன்றி உட்கார வைக்கவும். அவரிடம் உறிஞ்சும் மருந்து இருந்தால் ரசாயனக்கலவை வரும்படி அதனை திருகி-வாயில் வைத்த 3 அல்லது 4 முறை உள்ளே உறியச் சொல்லவும்.
மருந்து ஏதும் இல்லையெனில் அல்லது மேற்சொன்ன முறையில் பலனில்லையெனில் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும்.
மின்சாரம் தாக்குதல்..
சுவாசமும் ரத்த ஓட்டமும் பாதிக்கப்பட்டு சுய நினைவு இழத்தல். மின்சாரம் நுழைந்த - வெளிப்பட்ட இடங்களில் தீக்காயங்கள்.
சிகிச்சை..
சுவிட்ச் தெரிந்தால் - அணைத்து விடவும். இல்லையெனில் மரக்கட்டை போன்ற மின்சாரம் புகாத பொருள்கொண்டு மின் இணைப்பிலிருந்து அவரைத் தொடாமல் அப்புறப்படுத்தவும். சுய நினைவு இழந்திருந்தால் - சுவாசமும் ரத்த ஓட்டமும் உள்ளதா? என்று கண்டறிந்து உடனே சி.பி.ஆர். கொடுக்க தயாராக இருக்கவும்.
தீக்காயங்கள் ஏற்பட்ட இடத்தில் ஈரத் துணியை 10 நிமிடம் வைத்து பிறகு உலர்ந்த துணியால் மூடி கட்டுப் போடவும். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும்.
நீரில் மூழ்குதல்..
சுவாசத்தடையும், உடல் குளிர்ந்து போதலாலும் உயிரிழக்க நேரிடும். தக்க பாதுகாப்பு முறைகளை கையாண்டு நீரில் மூழ்கியவரை வெளியில் கொண்டு வரவும். தரையில் இரண்டு கால்களுக்கு இடையில் குப்புற படுக்க வைக்கவும். உங்கள் இரண்டு கைகளால் வயிற்றுப் பாகத்தில் தூக்கவும்.
இரண்டு, மூன்று தடவைகள் அவ்வாறு தூக்கி இறக்கினால் நீரும் தொண்டையில் உள்ள அடைப்புகளும் நீங்கும். பிறகு அவரை மல்லாந்து படுக்க வைத்து, வாய், நாசிதுவாரங்களை சுத்தம் செய்து, சி.பி.ஆர். முறையைக் கையாளவும். அருகில் உள்ளவர்கள் ஈரத்துணிகளை கழற்றி எடுத்து விட்டு உலர்ந்த துணியால் கீழும் மேலும் முழு உடலையும் சுற்றி வைக்கவும்.
மூச்சுக் குழாய் வழியாக நீர் செல்லும்போது அவை பாதிக்கப்பட்டு வீக்கமடைந்து 2 அல்லது 3 மணி நேரத்திற்கு பிறகு, சுவாசக் குழாயை அடைத்து தடையை உண்டாக்கும். ஆகவே அவரை மருத்துவமனையில் முதல் உதவி கொடுத்தப் பின் சேர்க்க வேண்டும். நீரில் மூழ்கி சுயநினைவு இழந்தவர்கள் அவசியம் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற வேண்டும்.
எலும்பு முறிவு..
பாதிக்கப்பட்ட இடத்தில் வலி (முக்கியமாக அசை ஏற்பட்டால்) சில நேரங்களில் உருமாறி, வீக்கமும் ஏற்பட்டிருக்கும். ரத்தக்கட்டு உண்டாகியிருக்கும். அசைவுகள் பாதிக்கப்பட்டு, எலும்பு அசைந்தால் தாங்க முடியாத வலி உண்டாகும்.
சிகிச்சை..
அசைவு கொடுக்காமல் இருக்கச் சொல்லவும். உடைந்த எலும்புக்கு மேலும் கீழும் உள்ள மூட்டுகள் அசையா வண்ணம் ஆதரவு கொடுத்து கட்டு போடவும். மேல்பாக எலும்புகள் முறிவு ஏற்பட்டால் தூக்குகள் மூலமாக அவர்களுக்கு அந்த எலும்புகளுக்கு ஆதரவு கொடுக்கவும்.
கீழ்பாக எலும்புகள் முறிவு ஏற்பட்டால் சிம்புகள் வைத்து கட்டு போடவும். முக்கியமாக இரு கால்களையும் பாதங்களையும் சேர்த்து வைத்து 8 வடிவகட்டு போடவும்.
சுளுக்கும் - சதை பிடிப்பும்..
வலி, மூட்டின் அசைவுகள் குறைந்தும், வீக்கம், ரத்தக்கட்டு ஏற்படும்.
சிகிச்சை..
ஆர்.ஐ.சி.இ. ஆர்-ஓய்வு, ஐ-பனிக்கட்டி, ஈரத்துணி, சி-அழுத்தமான கட்டு, இ-உயர்த்திப் பிடித்தல். பாதிக்கப்பட்ட இடத்திலுள் இருக்கமான ஆடை, காலணிகள் எடுத்து விடவும். அந்த இடத்தின் மீது அதிக பளுவு தாங்கும்படியாக வைக்க வேண்டாம். ஓய்வு கொடுக்க வேண்டும்.
பனிக்கட்டி ஒரு துணியில் சுற்றியோ அல்லது ஈரத் துணியோ வீக்கத்தின் மீது வைத்து இறுகக்கட்டு போடவும். அதிகமாக இறுக்க வேண்டாம். உயர்த்தி வைத்து ஆதரவு கொடுக்கவும். 20 நிமிடத்துக்கு ஒரு முறை சிறிது தண்ணீர் ஊற்றி கட்டை ஈரமாக வைத்துக் கொள்ளவும்.
மருத்துவ உதவிக்கு நாடவும். கை, கால் வலிப்பு (காக்காய் வலிப்பு)..
கை, கால்கள், உடலும் முறுக்கினால் போல் இருக்கும். குழப்பம், கை கால்கள் வலிப்புடன் அசைந்து காணப்படும், சுவாசம் முரடாக இருக்கும்; பற்களை கடித்துக் கொண்டு சில நேரங்களில் நாக்கும் கடிபட்டு இரத்தம் சேர்ந்து நுரை கலந்த எச்சில் வெளிப்படும்; சுயநினைவு இழந்தும் காணப்படுவார்கள்.
சிகிச்சை..
கீழே விழும் பொது தாங்கிப் பிடித்த தலையில் அடிபடாமல் படுக்க வைக்கவும். தலைக்கடியில், கை, கால்கள் அசையும் போது தரையில் உராய்ந்து காயங்கள் ஏற்படாமல் இருக்க துணிகளைப் போடவும். அருகில் உள்ள பொருட்கள் மீது கை, கால்கள் படும் போது காயம் ஏற்பட வாய்ப்பிருந்தால் அவைகளை அப்புறப்படுத்தவும். கை, கால்களை பிடித்துக் கொள்ள வேண்டாம்.
கழுத்தில் மார்பில் உள்ள துணிகளை தளர்த்தி விடவும். வலி நின்றவுடன் சுயநினைவு இழந்திருந்து, சுவாசமும் இரத்த ஓட்டமும் இருந்தால் அவர்களை மீட்பு நிலையில் படுக்க வைக்கவும் பற்களுக்கு இடையில் எதையும் வைக்க முயல வேண்டாம்.
பக்கவாதம்..
மூளைக்கு செல்லும் ரத்தம் தடைபட்டாலோ அல்லது ரத்தம் அழுத்தம் காரணமாக மூளை ரத்தக்குழாய் வெடித்து ரத்தம் பரவி அமுக்குதல் ஏற்படும். முகத்தில் வலுவிழந்த நிலை (சிரிக்க முடியாமை), கை, கால்களில் சோர்வு, நாக்கு குழறுதல்-பேச்சில் குழப்பம், தள்ளாட்டமுடன் நடை, கண்களில் பார்வை பாதிப்பு, தாங்க முடியாத தலைவலி, போன்றவை ஏற்படும்.
சிகிச்சை..
இந்த அறிகுறிகள்- தெரிந்தவுடன்-நேரத்தை குறித்துக் கொண்டு உடனே மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும். வாயில் வரும் எச்சில் போன்றவற்றை துடைத்து விட்டு தலையை உயர்த்தி தலையணை மீது படுக்கவைக்கவும். டோலியில் எடுத்துச் செல்லவும்.
இதயக் கோளாறுகள்..
மார்பு வலி:- மார்பின் அடிபாகத்தில் பிழிவது போன்ற வலி எடுத்து அது மேல் நோக்கி பரவுது போல் தெரியும்- தாடை- கைகள் வழியாக வலி, நடுக்கம் கைகளில் எடுக்கும். சுவாசமும் கடினமாகும். திடீரென்று வலு விழந்தது போல் தோன்றும்.
மேல் மூச்சு வாங்கும். சிகிச்சை:-உடனே உட்கார வைத்து கழுத்து மார்பு, இடுப்பிலுள்ள துணிகளை தளர்ச்சி நிதானமாக ஆழ்ந்த மூச்சு வாங்கும்படி சொல்லவும். தைரியம் சொல்லி ஆசுவாசப்படுத்தவும். அவரிடம் ஏதாவது மாத்திரை இருந்தால் நாக்குக்கு அடியில் வைத்து சாரினை உறிஞ்சும் படி சொல்லவும்.
அல்லது ஆவியாக இரசாயன கலவை இருந்தால் அதனை உறிஞ்சச் சொல்லவும். ஓய்வுக்குப் பின் வலிகுறைந்தால் அவர் செய்து கொண்டிருந்த வேலைகளை நிதானமாக செய்யச் சொல்லவும். மறுபடியும் வலி உண்டானால் மருத்துவரை நாடவும்.
இதயத்தில் திடீரென்று கோளாறு..
அடிப்பாகத்தில் பிழிவது போன்று எடுக்கும் வலி நேரமாக அதிகரித்துக் கொண்டே போகும். இடது தாடை-இடது கை, சில நேரங்களில் வலது பக்கமாக ஓடுவது போல் தோன்றும். மார்பு இறுக்கமடைந்து சுவாசம் விடுவது கடினமாகும். மயக்கமும் தலைசுற்றலும் ஏற்படும்.
தனக்கு ஏதோ ஆபத்து நிகழ இருக்கென்ற அச்சம் உண்டாகும். முகம் வெளுத்து, உதடுகள் நீலமாக காணப்படும். வழுவிழுந்த, ஒழுங்கீனமான வேகமான நாடி; அதிக அளவு வியர்த்து கொட்டுதல்; காற்றுக்கு கதறுவது போல் ஆழ்ந்த சுவாசம், குழப்பம்-கை, கால், விரல்களிலிருந்து குளிர்ந்து கொண்டே இதயம் நோக்கி வரும். குமட்டல், வாந்தி உண்டாகும் கைகள் நடுங்கும்.
சிகிச்சை..
மருத்துவ ஊர்திக்கு அழைப்பு கொடு; அவரிடம் ஏதாவது மருந்து இருந்தால் உடனே கொடுக்கவும். தைரியம் சொல்லி ஊக்கம் அளிக்கவும் ஓய்வு எடுக்கச் சொல்லவும்.
பின்புறமாக சாய்ந்து உட்கார வைத்து கழுத்து, மார்பில் உள்ள துணிகளை தளர்த்தவும், முட்டியை மடக்கி தொடைகளுக்கு அடியில் தலையணைகளை வைக்கவும். மருந்து ஏதும் இல்லையெனில் ஒரு ஆஸ்பிரின் (300கிராம்) மாத்திரை அவர் நாக்குக்கு அடியில் வைத்து உறிஞ்சி சாரை விழுங்கச் சொல்லவும். ஊர்திக்கு செல்ல நடக்காமல் உட்கார வைத்து எடுத்துச் செல்லவும். ஊர்தியினுள் சாய்ந்து உட்கார்ந்தபடியே அழைத்துச் செல்லவும்.
நாய்கடி..
வெறி நாய் எச்சலில் ``ரேபிஸ்'' என்ற மிகச் சிறிய கிருமிகள் மனித நரம்பு மண்டலத்தையும் மூளையினையும் தாக்கி உயிரை போக்கக் கூடிய சக்தி கொண்டது.
சிகிச்சை..
கடித்த இடத்தையும் அதனை சுற்றிலும் சோப்பு போட்டு நன்றாக கழுவவும். ரத்த காயங்கள் இருந்தால் அதன் மீது பற்றுத்துணி வைத்து கட்டு போட்டு மருத்துவரிடம் அழைத்துச் சென்று தடுப்பு ஊசி மருந்து போட்டுக் கொள்ளவும்.
நாயை கால் நடை மருத்துவமனையில் ஒப்படைத்தால் அவை அங்கு கவனிக்கப்பட்டு அவை இறந்தவுடன் மூளையை சோதித்து ``ரேபிஸ்'' தாக்கம் ஏற்பட்டிருந்தால் அதனால் கடிக்கப்பட்ட அனைவருக்கும் மீண்டும் அதிக அளவு கொண்ட தடுப்பு ஊசி மருத்துவரால் கொடுக்கப்படும்.
நாசியிலிருந்து ரத்த ஒழுகல்..
வேகமாக மூக்கை சிந்துதல், தும்மல் உண்டாகுதல், அதிக ரத்த அழுத்தம் `ப்ளு' போன்ற காய்ச்சல், அதிக வெப்பமான சூழ்நிலை போன்ற காரணங்களினால் மூக்கின் முன் பக்கத்திலிருந்து விசந்த ரத்தம் ஒழுகும்.
சிகிச்சை..
உடனே உட்கார வைத்து தலையை முன்பக்கமாக குனிந்தவாறு வைக்கவும். வாய் வழியாக சுவாசிக்க சொல்லவும். பேசுவது, விழுங்குவது, இருமல் உண்டாகுவது போன்ற காரியங்களை செய்யக்கூடாது. மூக்கெலும்பின் கீழ்பாகத்தை கீழ்நோக்கி அழுத்தச் சொல்லவும். 10 நிமிடம் பிறகு விட்டு விட்டவும். அடுத்த 2 மணி நேரத்துக்குள் நாசித்துவாரங்களை சுத்தம் செய்வது போன்ற வேலைகளை செய்ய வேண்டும். மீண்டு ஒழுகல் ஏற்பட்டால் மருத்துவரை நாடவும்.
நீரிழிவு வியாதி..
சர்ச்கரை ரத்தத்தில் அதிகமானால்: உலர்ந்த சருமம், வேகமான நாடி, கடின சுவாசம், தாகம், சிறுநீர் கழிக்க அடிக்கடி தோன்றும், குமட்டல், சுவாசம் வார்னிஷ் வாசனை வரும். வயிற்றில் வலி.
சிகிச்சை..
மருத்துவரிடம் அழைத்துச் செல்லவும். சுயநினைவு இழந்து விட்டால், மீட்பு நிலையில் படுக்க வைக்கவும்.
சர்க்கரை குறைந்து விட்டால்..
வலுவிழந்த, மயக்கமான நிலை, குழப்பம், தோல் வெளுத்து குளிர்ந்து பிசு பிசுப்பாக காணப்படும். வலுவான வேகமான நாடி, மேல் மூச்சு, பசி, நெற்றி, மூக்கின் மேல் முத்து முத்தாக வேர்வைத் துளிகள்- வாசனை அற்ற சுவாசம்.
சிகிச்சை..
உடனே இனிக்கும் திரவம் - ஒரு டம்ளர் தண்ணீரில் 2 தேக்கரண்டி சர்க்கரை அல்லது "ஜாம்'' கரைத்து குடிக்கச் சொல்லவும். அல்லது தேனீரில் அதிக சர்க்கரை கலந்து, ஆரஞ்சு பழச்சாறு போன்றவற்றை சிறிது சிறிதாக விழுங்கச் சொல்லி கொடுக்கவும். கோ கோ கோலா, போன்ற வாயு நிறைந்த பானங்கள் கொடுக்க வேண்டாம்....
தமிழ்த்தாய் வாழ்த்தை நோண்டிக் கிளறிய திராவிட வந்தேறிகள்...
எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெரும் தமிழணங்கே..
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்..
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்..
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமுந் துளுவும்
உன்வயிற்றிற் பிறந்தெழுந்தே..
ஒன்றுபல வாயிடினும்
ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்..
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே..
மேற்காணும் வரிகள் ஆரியம் திராவிடம் இரண்டையும் விட தமிழின் பழைமையை கூறுவதால் அதையே வெட்டி ஒட்டிவிட்ட கொடியவர்கள் இவ்வந்தேறிகள்..
நம் தாய்மொழியாம் தமிழைப் புகழ்ந்து பாடும் நமது நாட்டுப் பண்(தேசிய கீதம்)..
அதையே தமது வசதிக்காகத் திருத்தி அதை நம் வாயாலேயே பாடவைத்து விட்டனர் இந்த திராவிட வந்தேறி பொறுக்கிகள்..
நாமும் வெட்கமின்றிப் பாடி நாம் எவ்வளவு இழிந்த இனம் என்று நிறுவிவருகிறோம்..
தமிழ் அன்னைக்கு நாம் செய்கிற வன்கொடுமை இது...
தமிழ் வளர்த்த மதுரையில் "திலீபன் தெரு" - வந்தது எப்படி?
1987ஆம் ஆண்டு திலீபனின் மரணம் நிகழ்ந்த வேளையில் எனக்கு வயது 18. பனிரெண்டாம் வகுப்பு முடித்த கால கட்டத்தில் தி.மு.க.வில் அடியெடுத்து வைத்தேன். திராவிடர் கழகத்தைச் சேர்ந்த நான் மதிக்கும் அண்ணன் பாண்டியன் அவர்கள் தான் எனது முதல் அரசியல் வழிகாட்டி. மதுரை பெத்தானியாபுரம் மேட்டுத் தெருவில் உள்ள ஒரு தேனீர் கடையில் அமர்ந்து அரசியல் பாடம் நடத்துவார். என்னைப் போன்ற தி.மு.க. தோழர்கள் குறிப்பாக விருமாண்டி, இராசபாண்டி, பார்த்திபன், தனுசு கோடி ஆகியோர் அன்றைய அரசியல் நிலவரங்களை அவரிடம் கேட்டறிந்து தெளிவு பெறுவோம். ஒவ்வொரு நாளும் இரவு பனிரெண்டு மணிக்குத்தான் வீட்டிற்கே தூங்கச் செல்வோம்.
அப்போதைய அரசியல் களப் பேச்சு என்பது தமிழீழ விடுதலைப் புலிகளைச் சுற்றியே நடைபெற்று வந்தது. இந்திய -இலங்கை ஒப்பந்தம் என்ற பேரில் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்திய அரசு எடுத்தது தவறு என்பதை உணர்ந்திருந்தோம். அதுமட்டுமின்றி, ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி திலீபன் நடத்திய சாகும்வரை பட்டினிப் போராட்டத்தை இந்திய அரசு கண்டு கொள்ளவே வில்லை.
செப்.26ஆம் நாள் திலீபனின் இறப்புச் செய்தி பேரிடியாக காதில் விழுந்தது. அன்றைய நாளில் அனைவரும் கலங்கிப் போனோம். அப்போதைய செய்தித் தாள்களில் "திலீபன் மரணம்; விடுதலைப்புலிகளுக்கும், இந்திய அமைதிப்படைக்கும் போர் தொடங்குமா?" என்ற வினாவோடு தலைப்புச் செய்தியாக வந்திருந்தது. தினகரன் ஏடானது (ஆசிரியர்: கே.பி.கந்தசாமி) திலீபனின் பனிரெண்டு நாள் பட்டனிப் போராட்டத்தை ஒவ்வொரு நாளாக வெளியிட்டு படிப்போர் நெஞ்சை உருக வைத்தது.
திலீபன் இறந்து சில வாரங்களுக்குப் பிறகு, பாலன் என்ற தோழர் ஒருவர் வந்தார். அவர் "நான் குடியிருக்கும் தெருவில் ஒரு சில வீடுகள்தான், ஆனால் தெருவிற்குப் பெயரே கிடையாது. இதனால் கடிதங்கள் எதுவும் வந்து சேருவதில்லை " என்று புலம்பினார்.
அப்போது , அண்ணன் பாண்டியன் அவர்களுக்கு சட்டென்று ஒரு யோசனை தோன்றியது. திலீபன் பெயரை வைத்தால் என்ன? எல்லோரிடமும் கேட்டார். எல்லோரும் திலீபன் பெயரை வழி மொழியவே, பாலனுக்கோ மட்டற்ற மகிழ்ச்சி. மறுநாள் ஒரு தகரம் அடித்த சிறு பலகையை தயார் செய்து கொண்டு வந்தார். அதிலே "திலீபன் தெரு" என்று எழுதிக் கொடுத்தோம். உடனடியாக கொண்டு போய் தெருமுனையில் பெயர்ப் பலகையை நிறுத்தி விட்டு சிலநாள் கழித்து எங்களிடம் பாலன் வந்தார். அப்போது புன்முறுவலோடு "இப்போது கடிதங்கள் ஒழுங்காக வருகின்றன. மிக்க நன்றி!" என்றார்.
" ஒரு ஈகியின் பெயரை மக்களிடையே உச்சரிக்க வைத்த உங்களுக்குத் தான் முதல் நன்றி" என்றோம்.
திலீபன் பெயர் மதுரை மாநகராட்சி தெருப் பெயர் பட்டியலில் ஏற்றப்பட்டு விட்டது. 30 ஆண்டுகள் கடந்த நிலையிலும் திலீபன் கம்பீரமாக தற்போது காட்சியளிக்கிறார். அவரின் பெயர் வைத்து மகிழ்ந்த தோழர் பாலன் மட்டும் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை.
நானும் வேறு தெருவிற்கு குடி பெயர்ந்து வந்து விட்டதால் அண்ணன் பாண்டியன் உள்ளிட்ட ஒரு சில தோழர்களோடு மட்டுமே தற்போது நெருக்கம்.
தமிழ்நாட்டின் தெருக்களில் தமிழகத் தலைவர்களின் பெயர்களுண்டு. ஆனால் நமது தொப்புள் உறவுகளாகிய தமிழீழ விடுதலைப் போராளிகளின் பெயரில் தெருக்கள் இருப்பதாக நான் அறியவில்லை. அந்தவிதத்தில், சொட்டு நீரும் அருந்தாமல் உயிர் நீத்த உலகின் முதல் போராளி திலீபனின் பெயரிலே தெருவொன்று பாண்டிய மண்ணில் அமைந்திருப்பது பெருமைக்குரியது.
நான் அந்தத் தெருவில் எப்போதாவது கடக்கும் வேளையில் , திலீபன் பெயரை பார்க்கும் போதெல்லாம் என்னை அறியாமலே மெய் சிலிர்க்கும்.
ஆம்! திலீபன் என்பது உலகத் தமிழர்கள் அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்த பெயரன்றோ...
கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப்பிரசவமாகும் முடக்கத்தான் கீரை...
முடக்கத்தான் வேலிகளில் காட்டுச் செடியாக வளர்ந்து கிடக்கும் ஒரு வகைக் கீரை. இதன் இலை துவர்ப்புச் சுவையுடையது.
முடக்கத்தான் கீரையை எண்ணெயில் வதக்கி மிளகாயும், உப்பும் சேர்த்துத் துவையல் அரைத்துத் தொடு கூட்டன்கப் பயன்படுத்தினால் சுவையாக இருக்கும்.
இந்தக் கீரையைச் சன்னமாக நறுக்கி வெங்காயம் அதிகமாகச் சேர்த்துப் பொரியல் செய்தும் சாப்பிடலாம்.
கொடியை மிளகு, சீரகத்துடன் சேர்த்து ரசம் வைக்கலாம்.
துவரம் பருப்பு, பாசிப்பருப்பு மற்றும் வேறு பருப்புகளுடன் இந்தக் கீரையைச் சேர்த்துக் கூட்டும் செய்யலாம். அதோடு, அடை செய்வதற்கும், தோசை மாவை புளிக்க வைப்பதற்கும் இந்தக் கீரையை அரைத்துச் சேர்த்துக்கொள்ளலாம்.
முடக்கத்தான் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மலச்சிக்கல், மூல நோய், கரப்பான், கிரந்தி, பாதவாதம் போன்ற நோய்கள் குணமாகின்றன.
இந்தக் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி உண்டால் மூட்டுவலி, கைகால் வலி, முதுகு வலி, உடல் வலி ஆகிய அனைத்து வலிகளும் அகலும். முடக்கத்தான் கீரையுடன் வெல்லம் சேர்த்து நெய்யில் வதக்கி உட்கொண்டன்ல் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
இந்தக் கீரையின் சாற்றைக் காதில் விட்டால் காது வலி நிற்கும். கட்டிகளில் வைத்து கட்டினால் அவை உடைந்து புண் ஆறும்.
வாய்வுத் தொல்லையுடையவர்கள் முடக்கத்தான் கீரையை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு இந்தக் கீரை நல்லது.
பெண்களின் மாதவிடாய் தொடர்பான பிரச்னைகளுக்கு இந்தக் கீரையின் சாறு ஒரு மேஜைக்கரண்டி போதும். இந்தக் கீரையை அரைத்து கர்ப்பிணிப் பெண்களின் அடிவயிற்றில் கட்டினால் சுகப்பிரசவமாகும்...
காவிரிக் கலவரத்தை தட்டிக்கேட்ட அண்ணன் வீரப்பனார்..
1991 ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதி.
வீரப்பனார் தமது தம்பி அர்ச்சுணனிடம் காவிரியைக் கடக்க பரிசல் ஏற்பாடு செய்யுமாறு கூறியிருந்தார்.
இரண்டு நாட்களாகியும் அர்ச்சுணன் அந்த ஏற்பாட்டைச் செய்யவில்லை.
வீரப்பன் தமது தம்பியிடம் இது பற்றி விசாரித்தார்.
அர்ச்சுணன் தயங்கித் தயங்கிக் கூறினார்.
அண்ணே காவிரியை தமிழ்நாட்டுக்குத் தெறந்துவிட கர்நாடகா மறுத்துட்டதாம்.
கர்நாடகாவுல இருக்குற தமிழ்க் கிராமத்துலல்லாம் ஒரே கலவரமாம்.
நம்ம மக்களோட சொத்துபத்த கொள்ள அடிச்சுட்டு விரட்டுதானுவ.
அதான் பரிசலுக்குத் தட்டுப்பாடு.
வீரப்பன் குதித்தெழுந்தார்..
மடையா இத ஏன் நீ மொதல்லயே சொல்லல? என்று கடிந்து கொண்டே விருட்டென்று தன் துப்பாக்கியை தோளில் மாட்டிக் கொண்டார் அவருடன் இருந்த தளபதிகள் தத்தமது துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டனர்.
அப்போது அர்ச்சுணன் அண்ணே அண்ணிக்கு பிரசவமாகுற நேரம்.
நீங்க இங்க இருக்குறது ரொம்ப முக்கியம்.
சேதி தெரிஞ்சா நீ புறப்புட்டுருவனு தான் சொல்லாம இருந்தேன் என்றார்.
அதற்கு வீரப்பன் சரி நீ இங்கயே இரு. மத்தவங்க என்னோட வாங்க என்று கூறிக்கொண்டே வேகமாக ஆற்றங்கரைக்கு ஓடினார்.
அவரது தளபதிகளும் பின்தொடர்ந்து ஓடினர்.
ஆற்றங்கரைக்கு வீரப்பன் வந்ததும் எதிரில் தமிழ் மக்கள் தமது வீடு நிலமெல்லாம் விட்டுவிட்டு கையில் கிடைத்ததை அள்ளிக் கொண்டு பரிசலில் கண்ணீர் சிந்திய முகத்தோடு கூட்டம் கூட்டமாக வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.
அங்கு ஓடோடிச் சென்ற வீரப்பன் அவர்களிடம் என்ன இது? எப்படி ஆச்சு? என்று வினவினார்.
அந்த மக்கள் காவிரில தண்ணி தெறந்து விடனும் கேட்டதுக்கு. நம்ம பங்கு தண்ணீரையும் குடுக்காம இந்தக் கன்னடனுங்க, இங்க காலங்காலமா வாழுற எங்கள எல்லாத்தையும் புடுங்கிட்டு வெரட்டுறானுவ.
தட்டிக் கேக்க யாருமில்ல என்றார் ஒருவர்.
இன்னொருவர் கன்னட வனத்துறையும் போலீசும் இதுக்கு உடந்தை.
பெங்களூர்ல கலவரம் நடந்து நம்ம மக்கள கொன்னுட்டானுவ.
மஞ்சள் கயிறு தாலிய வச்சு அடையாளம் கண்டுபிடிக்கிறானுக.
அடி, உதை, கொள்ளை தான்.
காலங்காலமா இதுதான் நடக்குது என்றார் இன்னொரு தமிழர்.
வீரப்பன் ஆத்திரத்தின் உச்சிக்கே போய்விட்டார்...
யார் இத தூண்டிவிடுறது? என்று மீசையை முறுக்கியபடி கேட்டார்..
ஒரு கட்சியா ஒரு டிபார்ட்மென்டா எல்லாரும் சேந்துதான் செய்றானுவ.
மத்த மாநிலத்தோடயும் தண்ணி பிரச்சன இருக்கு.
ஆனா, தமிழன்னா மட்டும் அடிக்கிறானுக. கேக்க நாதியில்ல பாரு.
இதுல மட்டும் ஒத்துமையா இருக்கானுக என்றார் ஒரு தமிழர்.
ஏன் இல்லை இந்த வீரப்பன் இருக்கான் என்று உறுமியபடி பரிசலில் ஏறி தமது தளபதிகளுடன் அக்கரைக்குப் போனார்.
அக்கரையில் தமிழரை விரட்டி அவர்கள் வெளியேறுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கன்னடவர், ஆற்றங்கரையில் 20, 25 பேர் வீரப்பன் தலைமையில் கண்களில் கொலை வெறியுடன் பரிசலில் இருந்து துப்பாக்கிகளைப் பிடித்தபடி இறங்குவதைப் பார்தததுதான் தாமதம், காலியான அந்த தமிழ்ச் சிற்றூரில் வீடுகளுக்குள் கன்னடர்கள் புகுந்து ஒளிந்து கொண்டனர்.
மற்றவர் தலைதெறிக்க ஓடினர்.
தமிழர் வெளியேறக் கெடுவிதித்த கர்நாடக வனத்துறை காணாமல் போய்விட்டிருந்தது.
ஊருக்குள் நுழைந்த வீரப்பனார்
எவன்டா தமிழன் மேல கைய வெச்சது.
ஆம்பளனா வெளிய வாங்கடா பாப்போம்.
தமிழனுக்கு யாருமில்லனு நெனச்சீங்களா?
இனிமே ஒரு தமிழனத் தொட்டீங்க தொலச்சிருவேன். என்று முழங்கியபடி தமது ஆட்களை வீதிகளில் தேடச் சொன்னார்.
அப்போது அங்கே சில கன்னடர் வர அவர்கள் வீரப்பனிடம் கொண்டு வரப்பட்டனர்.
உங்களுக்கு எவ்வளவு துணிச்சல்டா?என்று வீரப்பன் மீசையை முறுக்க..
வீரப்பனைப் பார்த்து நடுநடுங்கிய அவர்கள்..
ஐயா, நாங்க ஒண்ணும் பண்ணல தமிழர் எங்க கூடப் பிறந்தவங்க மாதிரி என்று குழறியபடி சொன்னார்கள்.
ஊருக்கெல்லாம் சொல்லுங்க..
இந்த வீரப்பன் இருக்குற வர எவனாவது எங்க மக்களத் தொட்டீங்க தொலஞ்சீங்க என்று எச்சரித்து விட்டு அந்த சிற்றூரிலிருந்து பரிசல் ஏறி மறுகரைக்கு வந்தார்..
ஆற்றங்கரையில் நின்ற அர்ச்சுணன்.. அண்ணே உங்களுக்கு ரெண்டாவது பெண்கொழந்த பிறந்திருக்குவஎன்று கூறினார்.
அதன் பிறகு அவர் தம் மனைவியை பார்க்கக் காட்டுக்குள் சென்றார்.
இது சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் காவிரிப் பிரச்சனை தீவிரமடைந்திருந்தது.
அப்போதே வீரப்பனாருக்குத் தெரிந்திருந்தால் கன்னடவருக்குத் தக்கப் பாடம் புகட்டியிருப்பார்.
ஆனால், தமிழர் அனைவரும் கிட்டத்தட்ட வெளியேறிய பிறகே வீரப்பனாருக்கு அது தெரியவந்தது.
தவிரவும் வீரப்பனார் அப்போது தமிழ்ப் போராளியாக மாறியிருக்கவும் இல்லை..
ஒரு கடத்தல்காரனாகத் தான் இருந்தார்..
ஆனாலும் தமது இனத்தின் மேலிருந்த பற்றினால் தமது மனைவி அடர்ந்த காட்டில் பிள்ளைபேறு வலியில் துடித்துக் கொண்டிருக்கும் போதும் தமது மக்களைக் காக்கப் பாய்ந்தோடினார்.
வீரப்பனார் தமிழருக்காக முதன் முதலில் வெளிப்படையாகக் குரல் கொடுத்த நிகழ்வு இதுவே ஆகும்...
தற்போது வீரப்பனார் இல்லை.. ஆகையால் காவிரி பிரச்சனை மீண்டும் வந்தது.. இதற்கும் இந்த திருட்டு திராவிட சதி தான் காரணம்...
கரும்புலிகள் மறக்க முடியாத புனிதர்கள்...
கரும்புலிகள் பலருக்கு சிம்ம சொர்ப்பனமாக இருந்தாலும் தமிழினத்தின் காவலாளர்களாகத் தான் இவர்களை தமிழ் மக்கள் பார்க்கின்றார்கள்.
இவர்கள் ஒன்றும் மனவருத்தமானவர்களோ அல்லது வன்முறையின் மீது நாட்டம் கொண்டவர்களோ இல்லை. தமது இனம் அழிவை நோக்கிச் செல்கின்றது என்பதையறிந்து தலைவனின் வழியே தமிழ் மக்களுக்கு பாதுகாவலர்களாக
கிளம்பியவர்கள் தான் கரும்புலிகள்.
இவர்கள் மரணிப்பவர்கள் இல்லை மாறாக மறுபிறப்பு எடுப்பவர்கள். இவர்களைப் போற்றும் நாள் தான் ஜூலை 5.
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் தமிழீழம் இருந்த வேளையில் துணிச்சலுடன் தெருக்களில் அணிவகுப்பு வரும் மாணவ மாணவிகள் பட்டாளம் கடந்த சில வருடமாக தமது மறவர்களை நினைவு கூரமுடியாத இக்கட்டான சூழ்நிலையில் வாழ்ந்தாலும் அவர்களின் மனங்களில் இன்றும் இருப்பவர்கள் கரும்புலிகள்.
சாவை குறித்துக்கொண்டு எந்த சலனமும் இல்லாமல் தமது இளம் வயதில் குண்டை கட்டிக்கொண்டு எதிரியை குறிவைத்து தாக்குதல் செய்து பல நூறு எதிரியை சாதுரியமாக தாக்கி கதிகலங்க வைப்பவர்கள் தான் கரும்புலிகள்.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முதல் தற்கொடைப் போராளியான மில்லர் 1987 யூலை 5-ஆம் நாள் இலங்கை இராணுவத்திற்கு எதிராக, நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த இராணுவமுகாமின் மீது தற்கொடைத் தாக்குதலை நடத்திய நாளாகும். இத்தாக்குதலின் பின்னர் எத்தனையோ தற்கொடைத் தாக்குதல்களை நடத்தி எதிரிகளை கதிகலங்க வைத்தார்கள்.
எந்த சலனமும் இல்லாமல் எதிரியின் குகைக்குள்ளேயே நடமாடி, தமது கொள்கையிலிருந்தும் கட்டுப்பாடுகளிலிருந்தும் இமையளவும் தடம் புரளாமல் தமக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்த அற்புத மனிதர்கள் தான் இந்த கரும்புலிகள்.
இவர்களையும் இவர்களின் இறுதி வார்த்தைகளான ‘தமிழீழமே தமிழரின் தாகம்’ என்ற வேத வாக்கையும் உலகத்தமிழர்கள் மறப்பார்களானால் இவர்கள் வாழ்ந்து கொண்டும் பிணமானவர்களாகவே தான் கருத வேண்டியிருக்கும்.
பலவீனமான தமிழரின் பலமே கரும்புலிகள் :
பலவீனமான தமிழ் இனத்தின் பலம் மிக்க ஆயுதமாகவே தான் கரும்புலிகளைத் தேர்ந்தெடுத்தேன் என விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் வர்ணிக்கப்பட்டவர்கள் தான் கரும்புலிகள்.
அன்று கட்டளை கொடுக்கப்பட்டிருந்தால் சிங்கள இராணுவத்திற்கு கொடுத்திருப்பார்கள் இந்த கரும்புலிகள் ஒரு தெளிவான பாடம்;. கட்டுநாயக்காவில் அமைந்திருந்த சிறிலங்கா அரசின் விமானப்படையினரின் தளத்தை அன்றொரு நாள் இரவைத் தாண்டிய வேளை, தமது தாகத்தை தீர்த்துக்கொண்டார்கள் தாக்குதலைத் தொடுத்து. அன்று சென்றார்கள் வென்றார்கள்.
உலகமே தலையில் கைவைத்து ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்கள். பல நாட்கள் வேவு பணிகளுக்கு பின்னர் தீபாவளிப் பண்டிகையை அனுராதபுர நகருக்கே காட்டி வெற்றிவாகை சூடினார்கள் கரும்புலிகள்.
பதினெட்டு வானுர்திகளை சாம்பலாக்கி தாம் யார் என்று உலகுக்கே நிருபித்தார்கள் இந்த கரும்புலிகள்.
இவர்களின் சாதனைகளை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். எனவேதான் இன்றும் தமிழர் தரப்பின் சக்தி மிக்க ஆயுதமாகப் பார்க்கப்படுவது இந்த உயிராயுதம்.
கடந்த சில வருடங்களாக வட மற்றும் தென் தமிழீழ பகுதிகளில் இடம்பெற்ற தன்னிச்சையாக திணிக்கப்பட்ட போரில் கரும்புலிகளின் பங்கு என்பது மிக குறைவானதாகவே இருந்துள்ளது.
இவர்கள் மீதான கட்டுப்பாடுகள் சிங்கள ஆக்கிரமிப்பு படைக்கு மனத் தைரியத்தை கொடுத்து பல்லாயிரக்கணக்கான தமிழரை கொலை செய்ய உதவியது. அன்று கரும்புலிகள் கடந்த காலங்களைப் போல செயல்பட்டு இருந்திருந்தால் பல ஆயிரம் எதிரிகள் வன்னி மண்ணில் புதைக்கப்பட்டிருப்பார்கள்.
விடுதலைப்புலிகளின் தலைவரின் சாணக்கியத்தை இன்றும் எவரினாலும் அறிய முடியாது. அவரின் வழி தனி வழி இதை கண்டிப்பாக ஒரு நாள் காண்பார்கள் தமிழர்கள்.
இன்று தமிழீழ தேசமெங்கும் தனது கால்களை அகலப்படுத்தியிருக்கும் சிறிலங்காவின் கொடிய கரங்களினால் தமிழீழ மக்கள் படும் துன்பங்கள் அனைத்தும் பல நூறு கரும்புலிகளை உருவாக்கும் என்பது தான் உண்மை.
அரசபடையினரின் அட்டூழியங்கள் அனைத்தும் தமிழீழ கொள்கைக்கு மேலும் உரம் கொள்ள வைக்கும் செயற்பாடாகும். ஒரு குறிப்பிட்ட வாரத்தில் மட்டும் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை கொன்று குவித்த அரசபடையினருக்கு விருந்து கொடுக்கும் காலம் ஒரு நாள் வரும் என்பது மட்டும் திண்ணம்.
தமிழ் மக்கள் இன்றேனும் இவர்களின் தற்கொடையை போற்றி உலகுக்கு சொல்லவேண்டும். அன்று நிர்க்கதியான நிலையில் இருந்த தமிழீழ மக்களை கொன்றும் சித்திரைவதை செய்த சிங்கள பேரினவாத அரசைப்பற்றி உலகம் அனைத்தும் தமிழர்கள் எடுத்துரைக்க வேண்டும்.
உலக நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்கவே விடுதலைப்புலிகள் ஆயுதங்களை மௌனமாக்கினார்கள். 2002 - ஆம் ஆண்டு சிறிலங்கா அரசுடன் சமாதான ஓம்பந்தத்தை செய்து, அத்துடன் தாம் கொடுத்த வாக்குறுதியை பேணி கடைசி வரை அந்த சமாதான ஒப்பந்தத்தில் இருந்து விலகாமல் ஒப்பந்த சரத்துகளின் படியே விடுதலைப்புலிகளும் கடைசி வரை பேணிவந்தார்கள்.
கரும்புலிகளை போற்றிக் கொண்டாடுவோம் :
மரணித்த கரும்புலி மறவர்கள் ஒன்றும் மடிந்தவர்கள் அல்ல. இவர்களின் சாவை போற்றி கொண்டாட வேண்டிய தினம். இந்த தினத்தில் ஒவ்வொரு தமிழனும் சபதம் எடுக்க வேண்டும். அந்த மாவீரர்கள் விட்டுச்சென்ற பணியை வாழும் தமிழன் செய்து முடிக்க வேண்டும் என்ற கொள்கையுடன் களம் காணவேண்டும்.
இப்படியான கொள்கையுடன் செயாற்றினால் தான் மரணித்த வேங்கையின் ஆத்மா அமைதியாகும். அதுவரை மரணித்த வேங்கை தமிழீழ கொள்கையுடன் பகை எடுக்கும் என்பது தான் உண்மை.
இன்று 90 வயதை தாண்டிய முதியவர் ஒருவரே தான் சாகக்கூடாது என்று கடவுளை வணங்குவதும் மற்றும் மருத்துவமனையை நாடி வைத்தியத்தை பெற்று இன்னும் பல வருடம் இருக்க வேண்டும் என்று ஆசைப்படும் காலத்தில் இந்த கரும்புலிகளோ தமது இளம் வயதில் சாவை அரவணைக்கின்றார்கள்.
இவர்களை ஒவ்வொரு தமிழனும் போற்றி வழிபடவேண்டும். ஆனால் பல தமிழர் இவர்களை நினைவுபடுத்த நிகழ்வுகளை நடத்தப் பயப்படுகின்றார்கள் காரணம் இவர்களை உலக நாடுகள் பயங்கரவாதிகளாக அங்கீகரித்து கைது செய்து போடுவார்களாம்.
உலக நாடுகள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளவேண்டும் அதாவது கரும்புலிகள் ஒன்றும் பொதுமக்களை இலக்கு வைத்து தாக்குதல் செய்வதில்லை. எதிரியின் பலத்தை அறிந்து அவர்களை அழிப்பதுவே இவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணி.
எப்படி ஜப்பான் நாடு தற்கொடை தாக்குதலை எதிரிக்கு எதிராக நடத்தி எதிரியை கதிகலங்க வைத்தார்களோ அதைத்தான் கரும்புலிகளும் செய்கின்றார்கள்.
அன்று ஜப்பான் நாடு அதைச் செய்தது ஆனால் இன்று ஜப்பான் உலக நாடுகளின் நேச நாடாக விளங்குகின்றது. அதென்ன ஜப்பான் நாட்டுக்கு ஒரு சட்டம் ஈழத் தமிழருக்கு ஒரு சட்டம்.
பல உலக நாடுகள் கரும்புலிகளை ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் இடம்பெறும் தற்கொடை தாக்குதல்களை ஒப்பிடுகின்றார்கள்.
அமெரிக்காவின் தற்போதைய வெளியுறவு அமைச்சர் ஹில்லரி கிளிண்டன் அவர்கள் சில வருடங்களுக்கு முன்னர் கூறிய வார்த்தைகள் தமிழருக்கு சந்தோசத்தை கொடுத்தது. தெளிவாக ஹில்லரி அம்மையார் அவர்கள் கூறினார் உலகில் இயங்கும் அனைத்து போராளிகளையும் பயங்கரவாதிகளாக பார்க்கக் கூடாது என்று கூறினார்.
தமிழர்கள் மனம் தளராது தமது மரணித்த மாவீரர்களை அவர்களைக் கொண்டாடும் தினங்களில் போற்றி கொண்டாடி உலகுக்கு எடுத்துரைத்தால் உலகை தமிழர் வசம் ஈர்த்து தமிழீழ தனியரசை நிறுவ கரும்புலிகள் ஒப்புவித்த இறுதி தமிழீழ விருப்பை வெகு சீக்கிரத்திலையே நிறுவலாம் என்பது தான் அசைக்க முடியாத உண்மை.
மரணித்த கரும்புலி மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவதுடன் அவர்களின் இறுதி அவாவை உண்மையாக்குவதே அவர்களுக்கு உலகத் தமிழினம் செலுத்தும் கடமை...
திருட்டு திராவிடக் கூட்டம்...
30 வருடங்களுக்கு முன்பு முல்லை பெரியாறு அணையை யார் பராமரிப்பது என்று கருத்தாய்வுக் கூட்டம் நடந்துள்ளது..
மொத்தம் 94 பேர் இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டனராம்.
அதாவது கேரளா சார்பாக 47 பேரும்.
தமிழகம் சார்பாக 47 பேரும்..
கூட்டத்தில் இறுதி முடிவாக கேரளாவே அணையை பராமரிக்கட்டும்னு தீர்மானம் எடுக்கப்பட்டது.
இந்த தீர்மானத்தை ஏற்று 93 பேர் கையெழுத்திட்டனர், ஒருவரை தவிர.
அந்த ஒருவர் யார் என்றால் தமிழ் இசுலாமியர், அப்போதைய தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர்.
இதெப்படி சாத்தியமாயிற்றுனு உங்களுக்கு வினா எழலாம்.
கதை என்னனா, தமிழகம் சார்பாக கலந்துக்கொண்டவர்களில் 46 பேரும் மலையாளிகளாம்.
இந்தக் கொடுமையை எங்கே போய் சொல்வது?
எப்படி எல்லாம் தமிழினத்திற்கு எதிராக இந்த திருட்டு திராவிடம் சதி செய்துள்ளது என்பதை சிந்தியுங்கள்...
Subscribe to:
Posts (Atom)