தமிழகத்தில் இரண்டு பொய்த் தேசிய மாயைகள் கட்டியமைக்கப் பட்டுள்ளன..
ஒன்று நாம் எல்லோரும் இந்தியர், நம்நாடு இந்தியா என்றும்,
இதற்கு மாறாக மற்றொன்று நாம் எல்லோரும் திராவிடர், நம்நாடு திராவிட நாடு என்பதாகும்.
உண்மையில் நாம் இந்தியரா? அல்லது திராவிடரா?
இது புலியை நாய் என்றும் அதற்கு மாறாக பன்றி என்றும் வாதிடுவதற்கும் கீழானதாகும்.
முதலில் ஒரு தேசிய இனம் என்றால் என்ன?
ஒரு குறிப்பிட்ட நிலப் பரப்பில் ஒரு பொதுவான பண்பாடு, மற்றும் பொருளாதார வாழ்வுடன் ஒரு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டு கூடி வாழும் குடும்பம் தேசிய இனம் என்று வரையறுக்கப்படுகிறது. ஒரு தேசியம் ஒரு மொழியின் அடிப்படையிலேயே அமைகிறது.
இதில் எந்தப் பண்புகளும் இன்றி போலித் தேசியமும், (இந்தியா) போலித் தேசிய இனக் (திராவிட இனம்) கோட்பாடும் தமிழர்கள் மீது திணிக்கப் பட்டுள்ளது. இதன் உள் நோக்கம் தான் என்ன?
இந்திய தேசியம் என்பது வடநாட்டு பிராமண, மார்வாடி, சிந்தி இனத்தவர்களின் சுரண்டலுக்காகவும்,
திராவிட இனக் கோட்பாடு என்பது தெலுங்கு, கன்னட, மலையாளிகளின் சுரண்டலுக்காகவும், தமிழர் மண் பறிப்பிற்காகவும், கட்டியமைக்கப் பட்டுள்ளது.
இதில் சுரண்டலை விட மண்பறிப்பானது மிகக் கேடானது.
இன்று இந்திய தேசியத்தை விட திராவிட இனக் கோட்பாடு என்பது மிக மிகக் கேடு விளைவிப்பது ஆகும்.
தெலுங்கரும், மலையாளியும், கன்னடரும் நம்மைச் சுரண்டுவதோடு மட்டுமல்லாமல் மண்பறிப்பு வேலையில் விரைவாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் கேட்டை உணராத அல்லது உணர்ந்தும் தம் சொந்த நலனுக்காக, திராவிட கோட்பாட்டை ஒரு சில தமிழ் தேசியத் தலைவர்கள் ஆதரிப்பது தமிழர்களுக்கு மிகப்பெரிய அழிவைத் தருவதாகும்.
இவ்விரண்டு அமைப்பிலும் தமிழர்கள் இல்லையா? என்றால் இருக்கின்றார்கள். அவர்கள் தங்களின் நலனுக்காக பால் கொடுத்த தாயின் மார்பையே அறுத்து விற்கும் கருங்காலிகளாகவே இருக்கிறார்கள்.
இந்தியத் தேசியமும், திராவிடத் தேசியமும் தமிழனின் மண்ணைப் பறித்து, அவன் குருதியை உறிஞ்சுகிறது. இதற்காக இல்லாத போலி ஆரிய திராவிடப் போரை உண்டாக்கித் தமிழரை இரண்டுபடுத்தியுள்ளது.
வங்கக் கடலில் சிங்கள நாய்ப் படையினரால் கொல்லப்படும் தமிழர்களையோ, இலங்கையில் குடியுரிமை பறிக்கப்பட்டு, நாயிலும் கீழாக நடத்தப்படும் தமிழர்களையோ, மும்பாயில் சிவசேனையால் தாக்கப்பட்ட தமிழர்களையோ இந்திய தேசியம் பாதுகாக்கவில்லை.
கருநாடகத்திலும், கேரளாவிலும், ஆந்திரத்திலும் தமிழர்கள் தாக்கப்பட்டும், அவர்கள் உடமைகள் சூறையாடப்பட்டும், துரத்தியடிக்கப்பட்ட போதும் எந்தத் திராவிடரும், தமிழர்களை மதித்து அவர்களை பாதுகாக்கவில்லை.
மாறாக அங்கெல்லாம் தமிழன் பாண்டிக்காரன், கொங்கன் என்று இழிவு படுத்தப்பட்டும் சுரண்டப்பட்டும் வருகிறான்.
இந்தியம் நம் புரத்தே இருந்து தாக்குகின்ற எதிரி என்றால் திராவிடம் நம் அகத்தே இருந்து நம்மை அழிக்கும் புற்று நோயாகும்.
இன்று இந்தியா என்பது மாயை என்று தமிழர்கள் உணர்ந்துள்ளனர். ஆனால் திராவிடமாயை என்பதில்தான் (மக்கள் அல்ல) தலைவர்கள் தடுமாறுகின்றனர். இவர்கள் அறியாமையில் தடுமாறுகின்றனரா? அல்லது செஞ்சோற்றுக்கடனா? என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
கைப்புண்ணுக்கு கண்ணாடி வேண்டுமா? திராவிடத் தலைவர்களின் கயமைத்தனம் தமிழரின் வரலாற்றில் மிகப்பெரிய வடுவுடன் நீண்டு கிடக்கிறது.
நீதிக்கட்சியினரின் ஆந்திராவிற்கு ஆதரவான கயமைத்தனம், ஈ.வே.ராவின் தமிழுக்கும், தமிழருக்கும் எதிரான இரண்டகம் நிறைந்த துடுக்குத்தனமான கீழ்த்தரமான செயல்கள், அண்ணாவின் ஏமாற்று, கருணாநிதியின் இரண்டகம், மா.கோ.ராவின் மலையாளப்பற்று, வை.கோ, வீரமணி, கிருட்டிண சாமி, இராசேந்திரன், இராமகிருட்டிணரின் தெலுங்குப்பற்று என்று திராவிட இயக்கங்களின் இரண்டக வரலாறு இன்றளவும் நம்மைத் தொடர்ந்து வருகிறது.
ஈ.வே.ரா பார்ப்பான் எதிரி என்று சொல்லிக் கொண்டே இராசாசியுடன் கூடிக் குலாவினார். அவரின் ஆலோசனைப்படி நடந்தார்.
அண்ணா டி.வி.ஸ். அய்யங்காரின் நன்கொடையைப் பெற்று அவருக்குத் துணையாக இருந்தார்.
கருணாநிதியோ சாவி, குகன், ராம் போன்றவர்களுடன் தொழிலிலும், குடும்பத்திலும் நட்பு கொண்டுள்ளார். தன் பேரன் தயானநிதிக்கு பாப்பாத்தியை தான் திருமணம் செய்து வைத்துள்ளார்.
மா.கோ.ரா வடுக பிராமணப் பெண்ணையே தனது பிறங்கடையாக்கினார்.
புரட்சி புழுதியோ சங்கரமடத்தில் ஆசி பெற்று வடநாட்டுப் பிராமணருக்கு பாதக்கழுவல் நடத்துகிறார்.
திராவிட மடத்து பூசாரி வீரமணியோ செயலிலாதாவின் காலைக்கழுவிக் குடிப்பதே தனது கடமை என்று அல்லும் பகலும் அம்மையாரின் காலில் தவம் கிடந்தவர்.
இப்படித் திராவிடத் தலைவர்களும், அவர்களது அடிவருடிகளும் பிராமணருடன் கூடிக் குலாவலாம், கேட்டால் அது ஆரிய திராவிடப் போர் உத்தியாம்!
என்னடா உங்கள் போர் உத்தி?
ஆனால் தமிழர்கள், தமிழ் தேசியவாதிகள் தமிழ்ப் பார்ப்பனர்களுடன் பேசினாலோ அல்லது பழகினாலோ அவர்கள் இரண்டர்களாம்!
தமிழனைப் பழித்தவன்,
தமிழ் மொழியைப் பழித்தவன்,
கன்னடரான பெரியார் தமிழருக்குத் தந்தையாம்!
தமிழனை சிங்களவனுக்கு பிடித்து கொடுத்தவன், தமிழரின் நிலத்தை சிங்களவனுக்கு தாரைவார்த்த (கச்சத்தீவு) தெலுங்கரான கருணாநிதி உலகத் தமிழினத்தின் தலைவராம்!
தமிழரைச் சுரண்டி தமிழ் மண்ணில் மலையாளிகளை வளர்த்து விட்டவரான மா.கோ.ரா புரட்சித் தலைவராம்.
தமிழரின் போர்வாள் தெலுங்கன் வை.கோ.வாம்.
இந்த இழிவான நிலை உலகத்தில் எந்த இனத்திற்காவது ஏற்பட்டிருக்கிறதா?
பொய்யாமொழிப் புலவரான வள்ளுவனை தந்தது தமிழினம்.
விடுதலைப் பாவலன் பாரதியை தந்தது தமிழினம்.
மரணத்தைத் தழுவினாலும் தழுவுவேன், மாற்றான் மகவைத் தழுவ மாட்டேன் என்று மரணத்தை தழுவிய மாவீரன் குலசேகர பாண்டியனை தந்தது தமிழினம்.
உலகின் மூத்தக் குடியாம் தமிழ்க் குடி குறித்தும், உலகின் முதன் மொழியாம் தமிழ் மொழிக்குறித்தும் உலகிற்கு உணர்த்திய பாவாணரைத் தந்தது தமிழினம்.
உலகின் தலைசிறந்த கரந்தடிப்படையை தலைமை தாங்கி நடத்தும் பிரபாகரனைத் தந்தது தமிழினம்.
சிந்திப்போம் தமிழர்களே..
தமிழால் ஒன்றுபடுவோம்.. தமிழுக்காக, தமிழருக்காக ஒன்றுபடுவோம்..
தமிழனையே தலைவனாகவும், வழிகாட்டியாகவும் ஏற்று வீறு நடை போடுவோம்.
சாதியை அறுத்து சமயத்தை மறுத்து இனத்தால் ஒன்றுபடுவோம்.
ஒவ்வொரு மனிதனின் சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் அவனது அக நலன் ஒளிந்து கிடக்கிறது இது மார்க்சின் கருதுகோள்.
ஒவ்வொரு மனிதனின் சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் அவனது இனநலன் ஒளிந்து கிடக்கிறது இது நடைமுறைப் பாடம்!
இந்தியத்தையும், திராவிடத்தையும் வேரறுப்போம்..
புதிய தமிழ் தேசியத்தை மீளமைப்போம்!