05/06/2018

பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கவும் முடியாது... தடுக்கவும் முடியாது.. கார்ப்பரேட் ஆதிக்கம்.. கவர்ன்மெண்ட் என்பது கைக்கூலிகள் மட்டுமே.. உலக சுற்றுச்சூழல் தினம் இன்று...


தமிழர்களின் சிந்தனையும், அறிவுக்கூர்மையும் அன்றுமட்டுமல்ல... இன்றளவிலும் குறிப்பிட்டு பேசக் கூடியதே...




நீட் தேர்வில் இந்திய அளவில் கடைசி மூன்றாமிடத்தில் தமிழகம்..

வஞ்சிக்கப்பட்டு கொண்டேதான் இருக்கிறோம்.. இந்த தரங்கெட்ட ஓநாய்களால்... 

அழிந்து கொண்டு இருக்கும் நம் முன்னோர்கள்...


மலைகளில் வேட்டையாடி  மலையடி வாரத்தில் குருத்துக்களை பயிரிட்டு  உண்டு வாழ்ந்த மக்கள் தான் குறிஞ்சி நில மக்கள்..

இவர்கள் தான் குறவர்கள் என்று நாம் இன்று அழைக்கிறோம்..

இவர்களின் பாரம்பரியத்தில் ஒன்று தான் தேன்..

இன்றும் கூட தேன் தேவையெனில் இவர்களால் மட்டுமே சுத்தமான தேனை கண்டு பிடித்து எடுத்து தர முடியும்..

மட்டுமின்றி நீண்ட கம்புகளுடன் எவ்வித ஆயுதம் இன்றி கொக்கு மடையான் கீரிப்பிள்ளை போன்ற விலங்கினங்களை இலகுவாக வேட்டையாடி விடுவார்கள்...

ஆனால் இவர்களின் இன்றைய நிலை ஊசி மணி பாசி மணி விற்கும் நிலை பேருந்து நிலையத்தில் தமது பிள்ளைகளுடன் ஈ மொய்க்கும் இடத்தில் உறங்குவதும் வாழ்விடங்கள் இன்றி அலைந்து திரிவதுமாக இருக்கிறது இதற்க்கு  நாம் வெட்கப்பட வேண்டும்..

இன்றைய நவீனத்துவம் என்று போட்டி பொறாமை காலை  வாறிவிடுதல் போன்று இல்லாமல் கிடைக்கும் இடத்தில் உறங்குவதும்..

எந்த விதமான அரசாங்கதையும் நம்பாமலும் ஒரு சமூகம் வாழ்கிறது என்றால் அது இவர்கள் மட்டுமே..

படிப்பு என்பது இன்று வந்தது பாரம்பர்யம் என்பது என்றோ வந்தது.

குறவன் குறத்தி ஆட்டம் என்பதும் அவர்களின் ஆடை ஆபாசமாக ஆகியதும் நவீன உலகத்தின் தாக்கம் தான்..

குறவர்கள் இனம் மிகவும் மரியாதையான இனம்..

காட்டுப்பகுதியில் வாழக்கூடிய இவர்களுக்கு காட்டு விலங்குகளின் தன்மைகள் பற்றிய அறிவு அன்றைய காலத்தில் இருந்தது..

காட்டையும் விலங்கையும் நாம் அழித்து விட்டதால், அவர்கள் காட்டைவிட்டு வெளியேறி நவீன உலகில் வரும் பொழுது அவர்களின் நடத்தை அவர்களின் மொழிகள் நம்மவர்களுக்கு ஒரு இளக்காரம் ஆகியது..

தமது வயிற்று பசிக்கு வேறு வழியின்றி குறவன் குறத்தி ஆட்டத்தை ஆரம்பித்து அதிலும் ஆபாசமாக ஆடவேண்டும் என்ற கட்டளையின் படி உருவாக்கப்பட்டதே இந்த ஆட்டம்.

காமப்பசிக்கும் வயிற்று பசிக்கும் ஆளாக்கப்பட்ட இம்மக்கள் இன்று அழிந்து கொண்டு வருகிறார்கள் என்பதே நிதர்சன உண்மை..

இதில் கவனிக்கப்பட வேண்டிய இனம் நரிக்குறவர்கள் நரியை போன்று தந்திரம் வைத்து காட்டு விலங்குகளையும் நரிகளையும் வேட்டையாடுவதில் மிகவும் சிறந்து விளங்கினர்.

இவர்களது பூர்வீகம் மராட்டியம் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் இவர்களது மொழி வாக்ரிபோலி என்றோரு மொழியை பேசுகின்றனர்..

இந்த இனத்தில் சில அழகான தனமைகள் உண்டு அதாவது திருமணம் ஆன பெண் இரவு அந்தி சாய்ந்ததும் எங்கிருந்தாலும் தினமும் தனது கணவனை சந்திக்க வேண்டும், அதாவது கணவன் அல்லாமல் வெளியே எங்கேயும் ஓர் இரவு தங்க கூடாது என்று அர்த்தம்..

கணவன் மனைவி பிரசனையாயின் பெரியோர்கள் முன்னிலையில் இருவரும் விவகாரத்து முடித்தபின் சில மாதங்களில் மறுமணம் செய்து கொள்ள வேண்டும்..

முக்கியமாக இவர்களிடம் திருட்டு விபசாரம் அறவே கிடையாது. இன்றைய நவீனயுகத்தில் பணம் இல்லாமல் அவதிப்பட்டாலும் மானத்தை இழந்து வாழாத ஒரு இனம் இவர்கள் மட்டுமே..

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் இவர்கள் நாடோடிகளாக இருப்பதற்கு சீதா தேவியின் சாபம் என்று இராமாயணத்தில் கட்டவிழ்த்து
விடப்பட்டுள்ளது..

சீதா தேவியின் அழகை இவர்கள் கிண்டல் செய்தார்களாம் அதனால் சீதா இந்த மக்களுக்கு சாபம் விட்டால் என்று கிறுக்கி வைத்துள்ளார்கள்.

உண்மை என்னவெனில் இவர்கள் நாளையை பற்றி கவலை இல்லாதவர்கள் அதனால் எதையும் சேமித்தது வைக்கும் பழக்கம் இல்லாதவர்கள்..

இதற்க்கு மறைமுகமான காரணம் ஒன்றும் உள்ளது..

இவர்களை பொறுத்தவரையில் அன்றைய காலத்தில் ஹிந்து மதத்தை நம்பாதவர்கள் ஏறக்குறைய எந்த மத கடவுளையும் அவர்கள் கும்பிடாதவர்கள்..

அதனால் தான் இவர்கள் கோவில் கூட காட்டுவதில்லை.. என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள் என்று எந்த குருக்களிடமும் சென்று காத்திருக்க மாட்டார்கள்..

அதே போன்று இன்னும் சில மலையடிவாரத்தில் தங்களது தோட்டம் தங்கள் மக்கள் சகிதம் குடிசை அமைத்து இவர்கள் வாழ்ந்து கொண்டு தான் உள்ளார்கள்..

இவர்கள் சம்பந்தமாக நிறைய இட்டுக்கட்டப்பட்ட வரலாற்று கதைகள் உண்டு அதற்க்கு எல்லாவற்றுக்கும் போதுமான ஆதாரங்கள் இல்லாதவைகள்..

அதில் ஒன்று நரிக்குறவர்கள் மராட்டிய மன்னன் சிவாசியின் படையில் இருந்தார்கள் என்றும் அவர்களுக்கு இவர்களே உதவினார்கள் என்றெல்லாம் இவர்களது வரலாற்றை சிதைத்துள்ளார்கள்..

எல்லாவற்றையும் அழித்து கெடுத்தது நவீன யுக படிப்பு..

பாரம்பரியத்தை அழித்து தான் படிப்பை காக்க வேண்டுமெனில் அந்த படிப்பு தேவையில்லை என்பதே சிறப்பு..

இனி எங்கேனும் குறிஞ்சி இனமக்களை [குறவர்கள்] கண்டால் அன்போடு பேசி அவர்கள் வைத்து இருக்கும் பொருட்களில் ஏதேனும் ஒன்றை வாங்கி அவர்களை ஊக்கப்படுத்துங்கள்..

எம் முன்னோர்களில் ஒரு பிரிவினர்
என்று நினையுங்கள்...

என்ன பிரச்சினைனு தெரியல.. ஆனா நம்ம தமிழ்நாடு குஜராத் சேட்டுங்ககிட்ட இருக்குனு மட்டும் நல்லா தெரியிது...


ஆமணக்கின் மருத்துவ பயன்கள்...


ஆமணக்கின் இலை, வேர், விதை, நெய் ஆகியவை ஆயுர்வேத மருத்துவத்தில் பல வழிகளில் பயன்படுகின்றன. ஆமணக்கு யூஃபோர்பியேசி என்ற ஒற்றைப் பூவிதழ் வட்டத்தையுடைய இரு விதையிலைக் குடும்பத்தைச் சார்ந்தது. ஏறக்குறைய இந்தியா, இலங்கை முழுவதும் பரவிக் காணப்படுகிறது. இதை, ஆமணக்கு என்றும் சிற்றாமணக்கு என்றும் கூறுவர்.

இலை...

சிற்றாமணக்கின் இலையையும், கீழா நெல்லி இலையையும் ஒரே அளவு எடுத்து அரைத்து எலுமிச்சங்காய் அளவு மூன்று நாள் காலையில் மட்டும் கொடுத்து நான்காம் நாள் மூன்று அல்லது நான்கு முறை வயிறு போவதற்குரிய அளவு சிவதைப் பொடி கொடுக்கக் காமாலை குணமாகும்.

இலைகளைச் சிறுக நறுக்கிச் சிற்றாமணக்கு நெய்விட்டு வதக்கிச் சூட்டுடன், வலியுடன் கூடிய கீல் வாய்வுகளுக்கும், வீக்கங்களுக்கும் ஒற்றடம் கொடுக்கலாம். ஆமணக்கின் இலையைச் சிற்றாமணக்கு எண்ணெய் தடவி, அனலில் வாட்டி மார்பில் வைத்துக் கட்டினால் பால் பெருகும்.

ஆமணக்கின் இலையை விளக்கெண்ணெய் தடவி அனலில் வதக்கிக் கட்டிகளில் வைத்துக் கட்ட அவை பழுத்து உடையும். வெளி மூலம், இரத்த மூலம் மற்றும் ரத்தம் கசியும் புண்களில் ஆமணக்கு இலையை அரைத்து பூசி வர இரத்தக் கசிவு மறையும். ரணம் ஆறும். சரும வியாதிகள், நரம்பு வலிகள், வீக்கம், தசை வலி, போன்றவற்றில் ஆமணக்கு இலையை அனலில் வாட்டி கட்டி வர நல்ல பலன் தெரியும்.

வேர்...

ஆமணக்கின் வேரைக் குடிநீர் செய்து அதில் சிறிது பூநீறு சேர்த்து மூன்று அல்லது, ஐந்து நாள்களுக்குக் காலை, மாலை ஆகிய இரு நேரங்களில் உட்கொண்டால் பக்கச்சூலை குணமாகும். வளிக் குற்றத்தைத் தன்னிலைப்படுத்தச் செய்யும் குடிநீர்களிலும், தைலங்களிலும் ஆமணக்கின் வேரைச் சேர்ப்பது வழக்கம். பல் வலி, ஈறு வலி, ஈறில் இரத்தம் கசிதல் போன்றவற்றில் ஆமணக்கு இலை மற்றும் குச்சியை மென்று சாப்பிட ரத்தக் கசிவு மறையும். ஈறுகள் பலம் பெறும்.

விதை...

ஆமணக்கின் விதையை மேல்தோல் நீக்கிக் காரசாரம் வைத்துத் துவையல் செய்து கழற்றிக் காயளவு கொடுத்தால் மலச்சிக்கல் நீங்கும். விதையை ஓடு நீக்கி அரைத்துக் கட்டிகளின் மேல் பற்றிட அவை பழுத்து உடையும். கன்று ஈனாத எருமைப் பாலில் ஆமணக்கின் பருப்பை இழைத்துக் கண்களில் தீட்டினால் மறுநாள் பீளை போகும். பின்னர்க் கண்கள் மிகவும் தூய்மையாக இருக்கும்.

எண்ணெய்...

ஆமணக்கின் விதையிலிருந்து நெய் இருவகையாக எடுக்கப்படும். அவை பச்சை எண்ணெய், ஊற்றினை எண்ணெய் என்பனவாகும். தினசரி காலை, மாலை இரு வேளை மூன்று மி.லி. அளவு உள்ளுக்கு கொடுக்க நரம்புத் தளர்ச்சி, பக்கவாதம், மலக்கட்டு, மூட்டுவலி போன்றவை மறையும்.

குடல் இறக்கம் (hernia), வயிற்றுப் பூச்சிகள், சமிபாட்டுக் கோளாறு, போன்றவற்றிற்கும் மூன்று மில்லி எண்ணெய்யை தினசரி காலை மாலை உள்ளுக்கு கொடுக்கலாம். சிறுநீர் கோளாறுகள், எரிச்சல், சிறுநீர் பாதையில் எரிச்சல் போன்றவற்றிலும் விளக்கெண்ணையை உள்ளுக்கு கொடுக்கலாம்.

தீராத மூட்டு வலி, மூட்டு பிடிப்பு, மூட்டு வாதம், எலும்பு தேய்வு, மூட்டு வீக்கம் போன்றவற்றிற்கும் 2 – 3 மி. லி. தினசரி எண்ணெய்யை உள்ளுக்கு கொடுக்கலாம். வீக்கம், உடல் வலி, போன்றவற்றிலும் விளக்கெண்ணையை உள்ளுக்கு கொடுக்க நல்ல பலன் தெரியும்.

பச்சை எண்ணெய்...

ஆமணக்கு விதைகளை உலர்த்தி ஓடுகளை நீக்கி, எந்திரத்தின் மூலமாய்ப் பருப்புகடிள அழுத்திப் பிழியும் எண்ணெய், பச்சை எண்ணெய் எனப்படும்.

ஊற்றின எண்ணெய்...

ஓர் அகன்ற பாத்திரத்தில் நான்கு பங்கு நீர் விட்டு, அதில் ஆமணக்குப் பருப்புகளை இடித்து, ஒரு பங்கு சேர்த்து, தீயில் எரிக்க நெய் கக்கி நீரின் மீது மிதக்கும். இதை அகப்பையால் எடுத்து, வேறு பாத்திரத்தில் சேர்த்து, அதில் கலந்துள்ள நீரை, அனலில் வைத்து போக்கும் முறையே ஊற்றின எண்ணெய் எனப்படும். இதில் நீருக்குப் பதிலாக, இளநீர் சேர்த்துக் காய்ச்சி எடுக்கும் எண்ணெய் குற்றமற்றதும், உடலுக்கு மிகுந்த நன்மை பயப்பதுமாகும்.

இதைக் கைக்குழந்தை, இளவயதுடையவர்கள் சூல் கொண்டவர்கள், பிள்ளை பெற்றவர், சீதக் குருதிப் பேதியால் வருந்துபவர் முதலானோர்க்கு அச்சமின்றி வயிறு கழியக் கொடுக்கலாம். தற்போது இம்முறை வழக்கொழிந்து வருகிறது.

மலக்கட்டு உள்ளவர்கள் ஆமணக்கெண்ணையை மல வாயின் உட்புறத்தில் தடவ மலம் இளகி வெளிப்படும் வயிற்று வலியினால் அவதியுறும் குழந்தைகளுக்கு அடிவயிற்றிலும், பெரியவர்களுக்கு தொப்புளைச் சுற்றிலும் ஆமணக்கெண்ணையைத் தடவி, ஒற்றடம் இட வயிற்று வலி குறைந்து, மலம் வெளிப்படும்.

உடம்பில் மேல்தோல் உராய்ந்து, எரிச்சல் ஏற்பட்டால் அவ்விடத்தில் விளக்கெண்ணையைத் தடவ எரிச்சல் நீங்கி முன்பிருந்த நிலையை அடையும். கண்கள் மருந்துகளின் வேகத்தாலும், தூசுகள் விழுவதாலும் அருகிச் சிவந்தால் ஆமணக்கெண்ணையும், தாய்ப்பாலும் சேர்த்துக் குழைத்துக் கண்ணிலிடச் சிவப்பு மாறிக் குணமாகும்.

முலைக்காம்பு புண், வெடிப்பு இவற்றிற்கு இதைத் தடவி வரலாம். முக்கூட்டு நெய்யில் இதுவும் ஒன்று. பலவகையான உள், வெளிப் பயன்பாடுகளில் பயன்படுத்தப்படும் எண்ணெய் முறைகளில் ஆமணக்கெண்ணெய் சேர்க்கப்படுகிறது.

ஆமணக்கு எண்ணெய்...

ஆமணக்கு எண்ணெய்யை 5 மி.லி. வீதம் காலையும், மாலையும் உட்கொண்டு வர வாதம், நரம்பு வலி, தசை வலி, முக வாதம் போன்றவற்றிற்கு பயன் தரும்.உள்ளுக்கு 5 மி.லி. வீதம் உட்கொள்ள சமிபாட்டுக் கோளாறுகள் சீராகும். குடல் இறக்கம் பிரச்சனை குறையும்...

இயற்கையை நேசியுங்கள் அது வாழக் கற்றுக் கொடுக்கும்...


பிராணிகளை நேசியுங்கள் அது இன்னொரு வாழ்க்கையை கண்முன் காட்டும்...

கரீபியன் தமிழர்...


கிறித்தவத் தேவாலயம் போன்ற கட்டிடத்தில் ஏசு சிலை இல்லை. ஆனால், வேறு ஏதோ தெய்வங்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

அவை மாரியம்மனையும் அய்யனாரையும் ஒத்திருக்கிறது.

அங்கே பூசாரி தன்னை ஒரு இசுலாமியர் என்கிறார் நோய்வாய்ப்பட்டு வந்த மக்களுக்கு வேப்பிலை அடித்து, சாமியாடி, மருந்து தருகிறார்.

யார் இவர்கள்? பார்ப்பதற்கு தமிழர்கள் போலவே இவர்கள் முகம் இருக்கிறது; ஆனால் உடையோ வேறுமாதிரி இருக்கிறது.

இவர்கள் பெயர்களோ தமிழோடு ஒத்துப்போகிறது; ஆனால் பேசும் மொழி வேறு எதுவோ.

இவர்கள் சமைக்கும் உணவுவகைகளின் பெயரும் சுவையும் தமிழ் மண்ணோடு ஒத்துப்போகிறது; இவர்களின் இருப்பிடமோ தமிழ்மண்ணிலிருந்து பாதி உலகம் கடந்து இருக்கிறது.

கிறித்தவப் பெயர்களோ இசுலாமியப் பெயர்களோ வைத்துள்ளனர்; ஆனால் திருமணமுறை தமிழ்முறைப்படி உள்ளது.

நீங்கள் யார் என்று கேட்டால் 'தமிழர்' என்கின்றனர்.

வாழ்வதோ வேற்றின மக்களுக்கு மத்தியில் எங்கோ ஒரு பட்டியூரில் (குக்கிராமம்).

மிகவும் பின்தங்கிய மக்கள், தங்கள் வாழ்க்கையை அடையாளத்தைத் தொலைத்துவிட்ட மக்கள்.

நீங்கள் இந்தியர்கள் என்று அங்கே இயங்கும் இந்திய அரசு அமைப்புகள் இந்தியைக் கற்றுக்கொடுத்து இந்து சமயத்தை அந்த மக்களிடம் பரப்புகின்றன.

விடுமுறை நாட்களில் ஆடு, கோழி பலியிட்டு, கும்மிப்பாட்டு பாடி, விருந்துண்ணும் போது அவர்கள் தாங்கள் தமிழகத்தில் வாழ்ந்த கண்ட அனுபவித்த விடயங்களை பகிர்ந்து கொள்கின்றனர்.

எந்த திசையில் இருக்கிறதென்றே தெரியாது ஆனாலும் அவர்கள் தமிழகத்தின் நினைவாகவே இருக்கின்றனர்...

உங்கள் அறியாமையின் புறக்கணிப்பே அவர்களின் பலம்...


இனி ஒருபோதும் அறியாமையில் மூழ்கி விடாதீர்கள்...

மறக்க முடியுமா... திமுக கருணாநிதியின் துரோகங்கள்...


1. தமிழீழப் படுகொலை நடந்த 2009இல் மத்திய அரசுக்கு ஆதரவை வாபஸ் பெறப் போகிறோம் என்று சொல்லி விட்டு பின்னர் பின்வாங்கியதன் காரணம் என்ன?

2. தமிழீழ ஆதரவாளர்கள்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டியதன் அவசியம் என்ன?...  சட்டம் இவர்களுக்கு மட்டும் கடுமையாக்கப்பட்டதேன்?

3. போராட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுக்க காரணங்கள் என்ன ?

4. போரை நிறுத்து என துண்டறிக்கை கொடுத்ததற்காக எங்களது தோழர்கள் 13 பேர் 10 நாட்களாக புதுக்கோட்டை சிறையில் அடைத்த காரணம் என்ன ?

5. உங்கள் ஆட்சி மாறும் வரை ’தமிழீழம்’, ’புலிகள்’, ‘ முத்துக்குமார்’, ‘இலங்கை’
என்று பேசும், எழுதப்பட்ட எந்த வித துண்டறிக்கைகளோ, சுவரொட்டிகளோ அச்சகங்கள் அச்சடிக்க தடையை திமுக அரசு விதித்திருந்தது. இதை அச்சிட்ட அச்சகங்களை கண்டறிந்த காவல்துறை
சிலவற்றை மூடியதும், வழக்கு பதிவு செய்து அச்சுக் கூடங்களை கையகப்படுத்தியதும் நடந்தது. வேண்டுமானால்  அச்சக தோழர்களை சந்தித்து உண்மை அறிந்து கொள்ள திமுக  நண்பர்கள் முயற்சி எடுக்கலாம். இதை பல இடங்களில் சொல்லியும் திமுக நண்பர்கள் பதில் சொல்லாமல் சென்றதை கவனித்து இருக்கிறேன்..

6. கடற்கரை ஓரத்தில் காவல்துறை கண்கானிப்பு பலப்படுத்தப்பட்டு தமிழீழத்தில் இருந்து வருபவர்களை கைது செய்வதும், உதவி பொருட்கள் அனுப்பபடுவது தடுக்கபட்டும் செய்யப்பட்டது..

மறைந்த தோழர். புதுக்கோட்டை முத்துக்குமார். இதை சொல்லி இருக்கிறார்.

7. கருணாநிதியை விமர்சனம் செய்தார்கள் என்பதற்காக சிவனடியார்களை மூன்று மாதம் பொய் வழக்கில் சிறை வைக்கப்பட்டார்கள்

8. தமிழீழ போர் சி.டிக்களை தமிழக காவல்துறை பறிமுதல் செய்தது. அத்தகைய சி.டிக்களை நகல் எடுக்க முடியாமல் தடை செய்தது.

காரைக்குடிக்கு சி.டிக்களை கொண்டு வந்த எங்களது தோழர் திருச்சியில் கைது செய்யப்பட்டார்.

9. போரை நிறுத்த வேண்டும் என தொடர்ந்து போராடிய வழக்கறிஞர்களை தாக்கி போராட்டத்தை உடைத்தது திமுக அரசு.

10. சுவரொட்டிகளை திமுக அரசின் காவல்துறை இரவோடு இரவாக கிழித்துப் போடுவார்கள் . அல்லது சுவரொட்டிகள் பறிமுதல் செய்யப்படும். ஒட்டுபவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்

11. தமிழீழப் படுகொலையை கண்டித்தும், திமுக அரசினை விமர்சித்து பேசினார் என்பதற்காக புஇமு தோழர் நெல்லையில் கடுமையாக காவல்துறையால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டு பொய் வழக்கில் அடைக்கப்பட்டார்

12. முத்துக்குமார் தீக்குளித்ததும் அவர் தமிழ் தீவிரவாதி என தனது ஊடகங்களில் செய்தி வெளியிடச் செய்தார். பிணத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்றார்.

13. இரண்டாவது ஈகியரான பள்ளப்பட்டி ரவி தீக்குளித்து இறந்ததும். கடன் தொல்லையாலும்., உடல் நலக் கோளாறினாலும், குடித்துவிட்டும் தற்கொலை செய்தார் என செய்தி வெளியிட வைத்தது அரசு. பின்பு இதை மாற்றி எழுதவைக்க போராட்டம் நடத்த வேண்டி இருந்தது.

14. தமிழீழ தேசியதலைவர் புகைப்படத்தை சுவரெழுத்தில் கூட அழிக்க உத்தரவிட்டிருந்தார் கருணாநிதி.. விடுதலை சிறுத்தைகளுக்கே கூட இது நடந்தது. அவர்களின் சுவரெழுத்தில் பிரபாகரன் படம்
கருப்பு மை பூசி அழிக்கப்பட்ட படம் என்னிடம் இருக்கிறது. தேவையெனில் பதிவேற்றம் செய்கிறேன்.

15. மூன்றாவது ஈகியரான சென்னை அமரேசன் எழுதி வைத்திருந்த கடிதம் காவல்துறையால் கைப்பற்ற பட்டு அழிக்கப்பட்டது. இன்று வரை கிடைக்கவில்லை.

16. அனைத்து ஈகியரின் நினைவு ஊர்வலமும் உடனடியாக நடத்த கோரி நெருக்கடி செய்யப்பட்டு
முடிக்கப்பட்டது.

17. தமிழீழ போர் காட்சிகள் தொலைக் காட்சியிலோ, ஊடகத்திலோ வெளியிடக் கூடாது என சட்டம் கொண்டு வந்து தடுத்தார்.

18. போர்காட்சிகளை வெளியிடலாம் என உயர் நீதி மன்றத்தில் சென்று உணர்வாளர்கள் உத்தரவு வாங்கி வந்த உடன் ‘மக்கள்’ தொலைக்காட்சி அதை வெளியிட்டது. உடனடியாக அந்த
தொலைக்காட்சி அலுவலகத்தில் காவல்துறை குவிக்கப்பட்டு நிகழ்ச்சி நிறுத்தப்படாவிடில் உள்ளே நுழைந்து கைப்பற்றுவோமென  காவல்துறை மிரட்டி அதை நிறுத்தியது.

19. போர்காட்சிகள் 2011 ஏப்ரல் திமுக ஆட்சியில் இருக்கும் வரை அச்சகங்கள் அச்சடிக்கவில்லை. மறைமுகமாகவே இவை அச்சடிக்கப்ப்ட்டன.

20. சென்னை மற்றும் இதர இடங்களில் உள்ள அரசு கருத்தரங்க கூடங்கள் தமிழீழ பிரச்சனைக்கும், தமிழீழம் சாரத தமிழர் பிரச்சனை, தமிழ் மொழி பிரச்சனை என்ற எதற்கும் கருத்தரங்கம் நடத்த அனுமதி மறுக்கப்ப்ட்டது.

21. சென்னை தேவ நேய பாவணர் அரங்கம் ஒவ்வொருமுறையும் காவல்துறை அனுமதி பெற்று ந்டத்த வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது. போர் முடியும் வரை இங்கு எந்த நிகழ்வும் தமிழர் பிரச்சனை சார்ந்து நடத்த அனுமதிக்கப்படவில்லை.. கீற்று ரமேஸ் பலமுறை சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் 8 மணி நேரம் அலைந்ததை நான் நேரில் கண்டு இருக்கிறேன். ( நாங்கள் எங்களது போராட்ட அனுமதிக்காக அலைந்து கொண்டிருக்கும் சுழல் இருக்கும். நிகழ்வின் முதல் நாள் வரை அனுமதி பற்றிய விவரங்கள் கிடைக்காது).

22. தமிழீழப் போரை நிறுத்த வேண்டும் என்று பொதுக் கூட்டத்தில் பேசியதற்காக கொளத்தூர்மணி, மணியரசன், சீமான் கைது செய்யப்பட்டனர் சனவரியில்.

23. பின்னர் மீண்டும் சீமான் கைது செய்யப்பட்டார் பேசியதற்காக. நெல்லையில் இருந்து அவர் தலைமறைவாக வெளியேறி பல ஊர்களுக்கு பயணம் செய்து பேச வேண்டி இருந்தது. சீமானும், அமீரும் கைது செய்யப்பட்டார்கள்.

24. நாஞ்சில் சம்பத்தும், கொளத்தூர் மணியும் திரும்பவும் கைது செய்யப்பட்டார்கள்.

25. சோனியாவிற்கு கருப்பு கொடி காண்பிக்க முயற்சி செய்து, திரள அனுமதி மறுக்கப்பட்டதால் ‘கருப்பு பலூனை’ பறக்க விட்டார்கள் என்பதற்காக இயக்குனர். பாரதிராஜா உள்ளிட்ட திரைப்பட உணர்வாளர்கள் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.

26. கோவை ராணுவ வண்டி தாக்குதலுக்காக பல உணர்வாளர்களை வேட்டையாடி கைது செய்து பொய் வழக்கில் சிறையில் அடைத்தது

27. முத்துக்குமாரை இழித்து பேசினார் என்பதற்காக ஈ.வி.கே.எஸ் வீட்டில் அருகே சென்று முற்றுகையிட சென்ற இயக்குனர் செந்தமிழன், அருணா பாரதி உள்ளிட்ட 40 பேர் ஒரு மாதத்திற்கும்
மேல் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

28. முத்துக்குமாரின் மரணத்தின் ஊர்வலத்தின் போது கல்லூரிகள், பள்ளிகள் காலவரையின்றி அடைக்கப்பட்டன.

29. கோவை பாஸ்போர்ட் அலுவலகத்தை தாக்கினார்கள் என்று தோழர்களை கைது செய்து சிறையில் அடைத்தது

30. போரில் காயமடைந்து எவரேனும் தமிழகத்தின் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வருகிறார்களா என்று கண்கானிக்கப்பட்டு நடவெடிக்கை எடுக்கப்பட்டது. மருந்துகள், ரத்தம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தமிழீழத்திற்கு அனுப்பமுடியாமல் செய்யப்ப்ட்டது. இதையும் மீறி ரத்தம் மருந்து பொருட்களை அனுப்பினார் என்பதற்காகத்தான் திமுக அரசால் 2010இல் புதுக்கோட்டை முத்துக்குமார் கைது செய்யப்பட்டார். திமுக ஆட்சியில் தான் அவர் கொலையும் செய்யப்பட்டார்.

31. மே மாதம் 2009இல் பெரியார் திக அலுவலகத்தை தாக்கிய திமுக குண்டர்கள், பெரியாரின் சிலையையும்  உடைத்தார்கள்.. பெதிக அலுவலகம் அண்ணா அறிவாலயத்திலிருந்து குறைந்த பட்ச தூரத்திலேயே உள்ளது. கருணா நிதியின் கோபாலபுர வீடு இருக்கும் அதே பிரதான சாலையில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

32. பிரணாப் 70,000 தமிழர்கள் மட்டுமே போர் பகுதியில் இருப்பதாக பச்சை பொய் சொன்ன போது திமுக கண்டிக்கவே இல்லை.

33. தஞ்சையில், த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் அவர்களது இல்லம் உட்பட பல த.தே.பொ.க. தோழர்களின் வீடுகளுக்கும் சென்று சோதனையிட்டது காவல்துறை. ஈரோட்டில் பெ.தி.க. செயலாளரின் வீட்டில் குறுந்தகடுகளைக் கைப்பற்றி அவரை ரிமாண்ட் செய்தது காவல்துறை. --க. அருணபாரதி, த.தே.பொ.க.

34. தஞ்சையில் இந்திய அரசின் விமானப்படைத் தளத்திலிருந்து, இலங்கையின் பலாலி விமானத்தளத்திற்கு ஆயுதம் அனுப்புகிறார்கள் என்று செய்தியறிந்து, தஞ்சை விமானப்படைத் தளத்தை முற்றுகையிட்ட, த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன், பெ.தி.க. தலைவர் தோழர் கொளத்தூர் மணி, த.தே.வி.இ. செயற்குழு உறுப்பினர் தோழர் சிவகாளிதாசன் உள்ளிட்ட தலைவர்களும், பெண்கள் - குழந்தைகள் உள்ளிட்ட தோழர்களுமாக 275 பேரை கருணாநிதியின் காவல்துறை ரிமாண்ட செய்தது. இரவு 4 மணிக்கு நீதிபதி வீட்டில் வழக்கறிஞர்கள் பலரும் போராடி பிணை வாங்கி அனைவரும் அதிகாலை 5 மணியளவில் விடுதலையாயினர்.--க. அருணபாரதி,த.தே.பொ.க. இன்றைக்கு, முன்னெச்சரிக்கை கைது செய்யக் கூடாது என மனு போடுகின்ற தி.மு.க. நிர்வாகிகள், தாம் ஆட்சியிலிருந்த போது, அவர்களது தில்லி கூட்டாளிகள் தமிழகம் வரும்போதெல்லாம், அவர்களுக்கு சொறிந்து விடுவதற்காக ஈழஅகதிகளை முகாமிற்கு சென்று எத்தனை முறை முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர் என்பதை நாமறிவோம்.

2009 இனப்படுகொலை நடக்கும் வரை நடந்த  அடக்குமுறைகள் இவை.  2009-2011 இரண்டு வருடங்களில் செய்த அயோக்கியதனத்தை  சொல்லவும் வேண்டுமா ?

பாஜக மோடியின் ஊழல் சாதனை...


பாஜக - அதிமுக வின் தூத்துக்குடி இனப் படுக்கொலை யை கண்டித்து சுவீடன் நாட்டு தமிழர்கள்...


சுவீடன் நாட்டின் கோத்தென்பர்க் நகரில், தூத்துக்குடி மக்களின் மீது ஏவப்பட்ட அரச பயங்கரவாதத்திற்கு எதிராகவும், ஸ்டெர்லை நச்சு ஆலைக்கு எதிராகவும், தூத்துக்குடி மக்களின் பாதிப்பிற்கான நீதிக்காகவும் 100ற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் கலந்துகொண்ட போராட்டம் நடந்தது.

நகரின் மையப்பகுதியில் நடந்த இந்த ஆர்ப்பட்டத்தின் பொழுது, ஸ்டெர்லை ஆலையின் சட்டவிரோத நடவடிக்கைகள், 20 ஆண்டுகளுக்கும் ஆலையினால் மேலாக பரப்பட்டு வரும் நச்சுக் காற்று, நீர் மாசடைதல், 1998 முதல் 2013 நீதிமன்றங்களும் தமிழ்நாடு அரசாங்கங்களும் எடுத்த சட்ட நடவடிக்கைகள், வேதாந்தா நிறுவனத்தில் உலகளாவிய சட்ட விதிமுறை மீற்ல்கள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

போராட்டத்தின் முடிவில், கோத்தென்பர்க் வாழ் மக்களின் சார்பாக, சுவீடனிற்கான இந்திய தூதரகத்திற்கு எழுதப்பட்ட கோரிக்கை மனு தயாரிக்கப்பட்டு, அனைவரும் ஏற்று கையெழுத்திட்டனர். இந்திய தூதரகத்திற்கு எழுதப்பட்ட மனுவின் பிரதியை, சுவீடனின் பிரதமர், துணை பிரதமர், வெளியுறவு அமைச்சர், வெளியுறவுத் துறை செயலாளர்,  சுவீடன்-இந்திய வணிக அவை, Amnesty International, Green Peace, ஐரோப்பிய, நோர்டிக் நாடுகளின் பசுமை-இடதுசாரி முன்னணி நாடாளுமன்றக்  கூட்டமைப்பு, Volvo, ABB, SKF உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களின் மக்கள் தொடர்பு அலுவலகத்திற்கு அனுப்ப உள்ளதாகவும் போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள் தெரிவித்தனர்.

அம் மனுவில்,

1) மே 22 கலவரத்திற்கான நீதி விசாரணையை, பணியில் இயங்கும் மூன்று நீதிபதிகள் (தமிழகத்தவர் 1, பிற மாநிலத்தவர் 2) தலைமையில், சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் 2 பிரதிநிதிகளின் மேற்பார்வையில், தொடங்க வேண்டும்.

2) ஆணையத்தில் விசாரணைக்காக, தமிழக முதல்வர், தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், காவல்துறை உயர் அதிகாரிகள், இந்திய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சர் அனைவரும் அழைக்கப்பட வேண்டும்.

3) தமிழக அரசு, மே 28 ஆம் நாள் வெளியிட்ட அரசாணையை உறுதி செய்ய, அமைச்சரவைக் கூட்டத்தை உடனடியாக கூட்டி, ஸ்டெர்லைட் நிறுவனத்தை நிரந்தரமாக மூடுவது தமிழக அரசின் கொள்கை முடிவென அறிவிக்க வேண்டும்.

4) வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். வருங்காலத்தில் கடவுச்சீட்டு உள்ளிட்ட எவ்வித விசாரணைகளின் பொழுதும் அவர்கள் துன்புறுத்தப்படக் கூடாது.

5) ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டப் பிறகு, அடுத்த 6 மாதங்களுக்கு உரிய சம்பளத்தை தொழிலாளர்கள் அனைவருக்கும் ஸ்டெர்லைட் நிர்வாகம் வழங்கிட வேண்டும், 6 மாதத்திற்குள் அவர்களுக்கான பணி வாய்ப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

6) அரச வன்முறையால் பாதிக்கப்பட்டோருக்கு, தமிழக அரசு, இந்திய அரசு, ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகம் இணைந்து, நல்லிணக்கம், மீள் கட்டமைப்பு, நிவாரணம், உள்ளிட்டவைகளில் ஈடுபடல் வேண்டும்.

7) ஸ்டெர்லைட் ஆலையின் சட்டவிரோத செயல்பாடுகளால் பாதிக்கப்பட்ட, கடல், நில, நீர், காற்று உள்ளிட்டவைகளை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளின் மொத்த செலவுகளையும் ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகமே ஏற்க வேண்டும்.

மே 22, அரச கலவரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கான நினைவு மண்டபத்தையும் அதனை ஒட்டி, பெரிய அளவிலான பசுமைப் பூங்கா ஸ்டெர்லைட் ஆலையின் செலவில் அமைத்திடல் வேண்டும்.

உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகளை அம் மனு உள்ளடக்கி உள்ளது...

Isis உருவாக்கியதே அமெரிக்கா & இஸ்ரேல் தான்...


மனித பரிணாமம் இன்னும் அதிவேகத்தில் சென்று கொண்டிருக்கிறதா?


நான் முன்பே பதிவிட்டிருந்தது போல மனித இனம் இன்னும் பரிணமித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், பிற உயிர்கள் போல அல்ல, அவற்றைவிட 100 மடங்கு அதிக வேகத்தில் என்பதுதான் ஆச்சரியம். இதற்கு காரணமாய் கூறுவது மரபனு மாற்றங்களை. ஆனால் சிலர் இதை மறுக்கிறார்கள்...

அப்துல் கலாம் தீவு...


தமிழர் படை குழுக்களின் பெயர்...


இன்றைய ராணுவத்தில் உள்ள படை பிரிவுகளை போல ஏன்.. அதை விட நுட்பமாக தாக்குதலின் தேவைகேற்ப தமிழக மன்னர்களால் ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பல குழுக்களாக பிரிக்கப்பட்ட படை குழுக்களின் பெயரும் அவற்றின் எண்ணிக்கையும்...

பட்டாட்டி :
காலாட்படை வீரர்கள் - 5
தேர் - 1
யானை - 1
குதிரை - 3
மொத்தம் - 10

சேனாமுகன் :
காலாட்படை வீரர்கள் - 15
தேர்கள் - 3
யானைகள் - 3
குதிரைகள் - 9
மொத்தம் - 30

குழுமம் :
காலாட்படை வீரர்கள் - 45
தேர்கள் - 9
யானைகள் - 9
குதிரைகள் - 27
மொத்தம் - 90

கனம் :
காலாட்படை வீரர்கள் - 135
தேர்கள் - 27
யானைகள் - 27
குதிரைகள் - 81
மொத்தம் - 270

வாகினி :
காலாட்படை வீரர்கள் - 405
தேர்கள் - 81
யானைகள் - 81
குதிரைகள் - 243
மொத்தம் - 810

பிரட்டனை :
காலாட்படை வீரர்கள் - 1215
தேர்கள் - 243
யானைகள் - 243
குதிரைகள் - 729
மொத்தம் - 2430

கமு :
காலாட்படை வீரர்கள் - 3645
தேர்கள் - 729
யானைகள் - 729
குதிரைகள் - 2187
மொத்தம் - 7290

அணிகம் :
காலாட்படை வீரர்கள் - 10935
தேர்கள் - 2187
யானைகள் - 2187
குதிரைகள் - 6561
மொத்தம் - 21870

அக்குரோணி :
காலாட்படை வீரர்கள் - 109350
தேர்கள் - 21870
யானைகள் - 21870
குதிரைகள் - 65610
மொத்தம் - 2,18,700...

நாட்டை ஆண்டு கொண்டு இருந்த ஒரு முதல்வர் ஜெயலலிதா இறந்ததற்கான காரணத்தையே கூறவில்லை. இதற்கு எங்கே கூறப்போகிறார்கள்...


சித்தர்கள் காட்டிய எட்டு வடிவ நடை பயிற்சி...


எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த வழிமுறை ஒருவர் தினமும் 30முதல் 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஆரோக்கியம் மேம்படும், பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். நடைப்பயிற்சி சாதாரணமாக செய்யாமல் எட்டு வடிவத்தில் நடப்பது மிகமிகச் சிறந்ததாகும்.

பயிற்சியும் செய்முறையும்...

மேற்படி படத்தில் இருப்பது போல் 6 அடி அகலம் மற்றும் 8 முதல் 12 அடி நீளம் அளவில் தரையில் எட்டு ஒன்றுவரைந்து கொள்ளவும். அதை வடக்கு தெற்கு முகமாக  வரைந்து கொள்ளவும். படத்தில் உள்ளது போல் அம்பு குறியிட்டு காட்டியது போல் பாதையில் “1″ குறியில் இருந்து ஆரம்பித்து “5″ வரை சென்று மீண்டும் “1″ வர வேண்டும். நடக்கும் பொழுது மிகவும் வேகமாகவோ அல்லது மிகவும் மெதுவாகவோ நடக்கலாகாது. மிகவும் இயல்பாக நடக்க வேண்டும்.

தினமும் காலையும் மாலையும் 15 – 30 நிமிடங்கள் நடப்பது மிகச்சிறப்பு. நடக்கவேண்டிய நேரம் காலை அல்லது மாலை மணி 5 – 6 (am or pm). வெளியே செல்ல முடியாதவர்கள், வீட்டுக்குள் நடக்கலாம். நல்லமுறையில் பயன்பெற, இந்த பயிற்சியை இடைவிடாது குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும்.

நடைப்பயிற்சி முடியும்வரை மெளனமாக நடக்க வேண்டும்.

இப்பயிற்சியை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அல்லது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செய்ய வேண்டும். 15 வது நிமிட முடிவில் இருநாசித்துவாரங்களின் மூலம் உள்ளிழுக்கப்பட்ட முழு மூச்சுக் காற்றையும் உணரலாம். பின்னர் நடைப்பயிற்சியானது மேலும் 15 நிமிட நேரம் தொடர வேண்டும். இதற்கிடைப்பட்ட நேரத்தில் மார்புச்சளி தானாகவே வெளியே காரி உமிழ்வதாலோ அல்லது கரைந்து இறங்குவதை உணரலாம்.

பலன்கள் இந்த பயிற்சியை காலை மாலை 1 மணிநேரம் செய்து வந்தால் உள்ளங்கை விரல்கள் ரத்த ஓட்டத்தினால் சிவந்திருப்பதை உணரலாம். 70வயது 50 வயதாக குறையும். முதுமை இளமையாகும்.. சர்க்கரை வியாதி குறைந்து முற்றிலும் குணமடையும். குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி, மலச்சிக்கல் தீரும். முழுமையாக சுவாசிக்கப்படும் மூச்சுக்காற்றால் 5 கிலோ பிராண வாயு உள்ளே சென்று மார்புச்சளி நீக்கப்படுகிறது. இரண்டு நாசிகளும் முழுமையாக சுவாசிப்பதால் நாசியில் உண்டாகும் சளியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

கண்பார்வை அதிகரிக்கும், ஆரம்பநிலை கண்ணாடி அணிவது தவிர்க்கப்படுகிறது. மற்றவர்களுக்கு மூக்குக்கண்ணாடியின் புள்ளி(Point) அதிகமாகாமல் பாதுகாக்கப்படுகிறது. செவிகளின் கேட்கும் திறன் அதிகரிக்கிறது. உடலினுள் அதிகப்படியான 5 கிலோ பிராண வாயுவால் உடல் சக்தி பெறுகிறது.

காலையிலும் மாலையிலும் 1 மணிநேரம் இந்த பயிற்சியைசெய்து வந்தால் (ஹெர்னியா) குடலிறக்கநோய் குணமாகும். அளவான நடைப்பயிற்சியால் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது.

இரண்டுவேளை 30 நிமிடம் செய்தால், பாத வெடிப்பு, வலி, மூட்டு வலிகள் மறைந்து விடுகின்றன. முதியோரும், நடக்க இயலாதோறும், பிறர் உதவியுடன் சக்கர வண்டியின் மூலம் செய்து பயன் அடையலாம். தினமும் ‘எட்டு’ நடைப்பயிற்சி செய்வதால் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும்.

உடல் பருமன், இரத்த அழுத்தம், இதய நோய், சுவாசகாசம் (Asthma), கண் நோய்கள், மூக்கடைப்பு, தூக்கமின்மை, மூட்டுவலி, முதுகுவலி, மன இறுக்கம், போன்ற கொடிய நோய்கள்கூட மெல்ல மெல்ல பூரணமாக குணமாகி விடுகின்றன. நல்ல முறையில் பயன்பெற, இந்த பயிற்சியை இடை விடாது குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும். வாழ்க வளமுடனும் நலமுடனும்...

கச்சத்தீவும் அரசியலும்...


தமிழர் வீரப்பன் - மக்களைக் காத்த மகாநாயகன்...


மக்களைக் காத்த மகாநாயகன்.

1993ம் ஆண்டு மே மாதம்...

வீரப்பனாரை ஒழித்துக் கட்டியே தீருவது என்ற முடிவுடன் தமிழக - கன்னட கூட்டு அதிரடிப்படை வீரப்பனார் கட்டுப்பாட்டுப் பகுதியை ஒட்டிய தமிழ்ச் சிற்றூர்களில் கொலை வெறித் தாண்டவம் ஆடினர்.

வீரப்பனும் அவர்களுக்கு தக்கப் பதிலடி கொடுத்துக் கொண்டிருந்தார்.

அவர்களும் வீரப்பனாருடனான மோதலில் ஒரு படை உறுப்பினர் இறத்தால் பதிலுக்குப் பத்துத் தமிழரைக் கொண்டு போய் சுட்டுக் கொன்றனர்.

வீரப்பனாரின் படையில் எத்தனை பேரைப் பிடித்தாலும் மக்களை என்ன தான் கொடுமைப்படுத்தி தகவல்களை சேகரித்தாலும் வீரப்பனாரை நெருங்கக் கூட முடியவில்லை.

வீரப்பனார் தமது மக்கள் படும் துன்பத்திற்கு தானும் ஒரு காரணம் என்று மிகவும் வேதனையடைந்தார்.

தனது ஆட்களை அனுப்பி அதிரடிப் படையினரால் வாழ்விழந்த மக்கள் யார் யாரென்று விசாரித்து அவர்களை தம்மிடம் அழைத்து வரும் படியும் தாமே அவர்களுக்கு அடைக்கலம் தருவதாகவும் கூறி அனுப்பினார்.

கிட்டத்தட்ட ஒரு சிற்றூரே வீரப்பனாரின் வனக்கோட்டைக்குக் கொண்டு வரப்பட்டது.

கத்தரி மலை அடிவாரத்தில் ஐந்து கிணறுகள் தோண்டப்பட்டன.

இருநூறு துப்பாக்கி ஏந்திய காவலர்களின் பாதுகாப்பில் உணவு, உடை, என அனைத்தும் குறைவின்றி வழங்கப்பட்டது.

ஒரு மாதம் இவ்வாறு கழிந்தது. ஒரு நாள் அதிரடிப்படையினர் தேவாரம் என்பவர் உத்தரவுப்படி கத்தரி மலையடிவாரத்தில் தேடுதல்வேட்டை நடத்திய போது வீரப்பனார் பாசறைப் பார்த்து விட்டார்கள். ஒரு ஊரே அங்கு இருந்தது.

இருந்தாலும், அவர்கள் தாக்குதல் நடத்த வீரப்பனார் பக்கத்திலிருந்து எதிர்தாக்குதல் நடத்தப்பட்டது.

மக்களை ஒருநொடி எண்ணிப்பார்த்த வீரப்பனார் சரவெடியைக் கொழுத்திப் போடச் சொல்லி அந்த இரைச்சலும் துப்பாக்கி வேட்டுச் சத்தமும் எதிர் நிற்பவருக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கி அந்த நேரத்தில் மக்களை மலைக் குகைகளுக்குள் பத்திரமாக கொண்டு சென்றார்.

இதன்பிறகு சில நாட்கள் கழித்து கன்னட - தமிழக அதிரடிப்படையினர் கர்நாடக டி.ஜி.பி பர்மன் மற்றும் தமிழக எஸ்.பி சஞ்சய் அரோரா தலைமையில் வீரப்பனார் பாசறையை மோப்பம் பிடித்து நாலாப்புறமும் சுற்றி வளைத்துத் தாக்கினர்.

அப்போது அங்கே ஒரு நிறைமாத சூலிக்கு பிள்ளைப்பேறு நடக்கவிருந்த நேரம்.

இந்த தாக்குதலை எதிர்பார்த்திராத வீரப்பன் படை எதிர்த்தாக்குதல் நடத்தினாலும், அவ்வளவு மக்களை வைத்துக் கொண்டு அவர்களால் முழுமையாக எதிர்த்தாக்குதல் நடத்த முடியவில்லை.

நிலைமை மோசமானதும் மக்கள் மீது குண்டுகள் பாயவே அவர்கள் சிதறி ஓடினர்.

வீரப்பனார் தளபதிகள் ஏழுபேர் பிடிபட்டனர்.

ஆனால், வீரப்பனார் அப்போதும் சிக்கவில்லை. முப்பது பேருக்கு மேல் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

வீரப்பனாரின் மனைவி, அன்று பிள்ளயீன்று மோதலில் அப்பிஞ்சை பறிகொடுத்த தாய் என சில பெண்கள் பிடிக்கப்பட்டு பன்னாரி எனும் இடத்திலுள்ள முகாமில் அடைத்து வைக்கப்பட்டனர்.

வீரப்பனாரின் பெண் தளபதி மேரி என்பவரும் உயிரிழந்தார்.

கிட்டத்தட்ட ஒரு சிற்றூருக்கே சோறு போட்டுக் காப்பாற்றும் அளவுக்கு பண பலமும் ஆள்பலமும் வைத்திருந்தவர் வீரப்பன்.

கடத்தல்காரனாக இருந்த போதும் தனக்கென்று எதுவும் வைத்துக் கொள்ளாமல் மக்களைப் பற்றி சிந்தித்தவர் தான் வீரப்பன்.

வீரப்பனார் தமிழ்ப் போராளியாக மாறியது 1997க்குப் பிறகு தான்.

ஆனால், அதற்கு முன்பே, அவர் தம் இனத்தின் மீது வைத்திருந்த பற்றும் இனத்திற்காகச் செய்த செயல்களும் பெரும்பாலும் மறைக்கப்பட்டுள்ளன.

படம்: வீரப்பனாரைக் கொல்ல அலைந்த அதிரடிப்படை (special task force) செய்த கொடுமைகள்...

சட்ட விரோதமாக பிடித்து வைக்கப்பட்டு ஊனமாகவும் பைத்தியமாகவும் ஆனவர்கள் 270பேர்..

அதிரடிப் படை சித்தரவதை செய்தும் சுட்டும் கொன்றது 89 பேரை..

பாலியல் வன்புணர்வுக்கு ஆளானோர் 57 பேர்..

தடா சட்டத்தில் அடைக்கப்பட்டோர் 123 பேர்..

உடைமைகளை இழந்து ஊரை விட்டு ஓடியவர்கள் 200 பேர்...

திமுக 200 ரூபாய் கூலிப்படை சாகசங்கள்...


மனித தோல் பற்றிய தகவல்கள்....


பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்பன்னர் என அழைக்கலாம் உடலின் மேற்புறம் முழுவதும் போர்வையாக அமைந்துள்ளது. இவ்வமைப்பு உடலின் உள்ளுறுப்புகளைப் பாதுகாக்கிறது. உடலில் நீர் ஆவியாதலைத் தடுக்கிறது.

உடலின் வெப்பத்தைப் பாதுகாக்கிறது. உடலுக்கு வைட்டமின் D தயாரித்தளிக்கிறது. தொடு உணர்ச்சி, வலியறிதலில், வெப்பமறிதலில் போன்ற உணர்வுகளை உடலுக்கு உணர்த்துகிறது. இவ்விதம் பலதரப்பட்ட பணிகளைச் செய்வதால் தோலை 'பலதொழில் விற்பன்னர் எனலாம்.

மேல்தோலானது கை(ஹை)ப்போடெர்மிசு(ஸ்) (கீடெர்மிஸ்) எனும் செல்š பரப்பின் மீது அமைந்துள்ளது.

கை(ஹை)ப்போடெர்மிசு(ஸ்), தோலை அடியில் உள்ள எலும்பு, தசைகளுடன் இணைக்கும். மேலும் தோலின் நரம்புகளையும் இரத்தக் குழல்களையும் பெற்றிருக்கும்.

தோலில் டெர்மிசு(ஸ்) , எபிடெர்மிசு(ஸ்) (மேடெர்மிஸ்) என இருமுக்கிய திசுக்கள் உண்டு. டெர்மிசு இணைப்புத் திசுவிலிருந்து தோன்றும். இத்திசுவே தோலுக்கான அடிப்படை வலுவைத்தரும். இப்பகுதியில் நரம்பு முடிவுகள் , ரோமங்களின் அடிப்பகுதிகள், மென்மைத் தசைகள் மற்றும் சுரப்பிகள் உள்ளன.

டெர்மிசு பகுதி இரண்டு அடுக்கு கொண்டது. அவை மேற்புற பாப்பில்லரி அடுக்கு கீழ்ப்புற ரெட்டிகுலார் அடுக்கு ஆகும். ரெட்டிகுலார் அடுக்கு டெர்மிசின் முக்கிய பகுதியாகும். இப்பகுதி அடர்த்தியான தன்மையுடன் கீழ்டெர்மிசுடன் தொடர்பு கொண்டிருக்கும்.

தோலானது தடித்தோ அல்லது மென்ம்மையனதகவோ இருக்கலாம். தடித்த தோலில் மேற்குறிப்பிட்ட ஐந்து அடுக்குகளும் உண்டு. உடல்பரப்பு மென்மையான தோல் கொண்டது. தொடர்ந்து உராய்வு உள்ள இடங்களில் தோலில்த் தடிப்பு ஏற்ப்படும் . இதில் கார்னியம் அடுக்கு, பல அடுக்கு செல்களை கொண்டிருக்கும்.

நிறமிகள் தோலின் நிறத்தை உண்டாக்குகின்றன. கார்னியம் அடுக்கின் அடர்த்தி, அடியில் உள்ள இரத்த ஓட்டம் போன்றவைகளும் நிறமளிக்கலாம். நிறமானது மெலனின் நிறமிகளால் தோன்றும் . இந்நிறமி தோல், ரோமம், கண்கள் போன்ற பகுதிகளுக்கு நிறமளிக்கும். சூரியன், உதா கதிர்களிலிருந்து உடலைப் பாதுகாக்கும்...

பாஜக மோடியின் வளர்ச்சி...


மின்காந்த சக்தி...


இதயத்திலிருந்தும், துடிதுடிப்பு உணர்விலிருந்தும் துளிர்விட்டு, தூய்மையாகவும், வலுவாகவும் இருக்கும் ஆசைகளுக்கு அபாரமான மின்காந்த சக்தி உண்டு.

ஒவ்வொரு இரவும் மனம் உறக்க நிலையில் ஆழ்ந்து விடும்போது இந்த சக்தி வனவெளியில், கலக்கிறது.

பிரபஞ்ச இயக்கதில் வலுவடைந்த அந்த சக்தி-cosmic currents தினம், தினம் காலையில் உணர்வு நிலையில் சங்கமிக்கிறது.

இப்படி மனதில் தோன்றி வலுவடைந்த ஆசை நிச்சயமாக நிஜமாகும்.

யுக யுகமாக தொடர்ந்து வரும் இந்தக் கருத்தை சூரிய உதயமும் வசந்த காலமும் மாறாமல் நிகழ்வதை நம்புவது போல நீ நம்ப வேண்டும் இளைஞனே...

இப்படி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கூறுகிறார்..

நல்ல பழக்க வழக்கங்கள் வருவதற்குக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் அவற்றோடு வாழ்வது சுலபமே ஆகும்.

தீய பழக்க வழக்கங்கள் சுலபமாக வருவதாக இருக்கலாம். ஆனால் அவற்றோடு வாழ்வது கடினமாகும்.

சிறு திட்டங்களை தீட்டாதீர்கள், நம் இரத்தத்தைக் கிளர்ந் தெழச் செய்யும் சக்தி அவற்றிற்கில்லை….

பெருந் திட்டங்களைத் தீட்டுங்கள்; நம்பிக்கையுடன் உயர்ந்தவற்றைக் குறி வைத்து வேலை செய்யுங்கள்...

திராவிடம் - ஆரியம் உண்மைகள்...


பழைய சோற்றில் இருக்கு சத்து...


எரிவாயு அடுப்பும், சமையல் பாத்திரம் (cooker) சோறும் வந்தபின்னர் பழைய சோறு சாப்பிடுவதே நமக்க மறந்துவிட்டது. குழந்தைகளுக்க பழைய சோறு கொடுப்பதையே குற்றமாக கருதும் பெற்றோர்கள் பெருகிவிட்டனர். ஆனால் பழைய சோற்றில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அதிகமாக இருப்பதாக அமெரிக்காவில் இருந்து ஆராய்ச்சி செய்து தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் சென்று அங்க குடியேறிய நம்மவர்கள் சிலர். தங்களின் இளமைக்காலத்தில் சாப்பிட்ட உணவுகள் கண்டறிந்து நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டாராம். அப்போது அவர்களில் ஒரு சிலருக்கு பழைய சாதத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்யும் எண்ணம் வந்துள்ளது.

அதன் விளைவாக ஒரு குழுவாக அமைத்து ஆசாய்ச்சியில் இறங்கினர். அவர்கள் கண்டறிந்த தகவல்கள் அவர்களை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது முதல் நாள் சோற்றில் நீருற்றி மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் பி6, பி12 வைட்டமின்கள் ஏராளமாக இருந்துள்ளது.

உடலுக்கு குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் ட்ரில்லியன்ஸ் பாக்டீரியாக்கள் (Trillions Of Bacteria) (கவனியுங்கள் மில்லியன் அல்ல ட்ரில்லியன்) பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம். கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும் போது நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம்.

அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன எந்தக்காய்ச்சலும் நம்மை அணுகாது. காலை சிற்றுண்டியாக பழைய சாதத்தை சாப்பிடுவதால் உடல் இலகுவாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது. இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் லட்சக்கணக்கான நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் (bacteria) அதில் உருவாகின்றன.

மறுநாள் இதை சாப்பிடும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்துகிறது. இதிலிருந்து நார்ச்சத்து,மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது. ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு கொழுப்பு சத்து குறைந்துள்ளது. உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால் எந்த நோயும் அருகில் கூட வராது. இப்போதைய நிலையில் புழுங்கல் அரிசி(Raw rice)என்று அழைக்கப்படும் கைக்குத்தல் அரிசி சாதத்தை ஒரு மண் சட்டியில் போட்டு சுத்தமான தண்ணீர் ஊற்றி மூடி வைத்து விட்டு மறுநாள் சாதத்தை நன்கு பிசைந்து மோர் சிறிது சோர்த்து, சின்ன வெங்காயம் சேர்த்து சாப்பிட்டால் போதும். ஆராய்ச்சியில் சொன்ன பலன்களை அனுபவிக்க முடியும்...

தூத்துக்குடி மக்களை மிரட்டும் கலெக்டர்...


மூளையின் மொழி.. நமக்கு நடக்க போகும் ஆபத்துகளை முன்பே எச்சரிக்கும் மூளை...


மூளையில் என்றால் இந்த பதில் அதிலிருக்கும் neuron களை நினைத்து கொள்ளுங்க

ஒருவன் நம்மை தொடுகிறான் அந்த செய்தியை ஒளியின் வேகத்தை விட அதிவேகத்தில் மூளைக்கு சொல்லி உடனே அதற்கு  மூளையின் கட்டளைகள் ஒளியின் வேகத்தை விட அதிக வேகத்தில் உடலை எதிர்வினையாற்ற செய்யும்.

எடுத்துக்காட்டாக : ஒரு " ஈ " காதுகளுக்கு அருகே வந்தால் மூளை உனக்கு எச்சரிக்கை செய்துவிடும் அது காதுகளுக்கு உள்ளே போனால் செவித்திறகளை பாதிக்கும் என்று உடனே நமது கைகள் காதுகளை மூடும்
அந்த வேலையில் உடல் பாகங்கள் சாதாரணமாக இயங்குவதை விட அதிக வேகத்தில் இயங்கும் அதற்கு வேகமாக துடிக்கும் இதயம் சாட்சி.. இப்போ மனிதன் மூளைபகுதி 8-10% வேலை செய்கிறது என்று தோராயமாக வைத்துக்கொள்வேம்

இப்போ அந்த nervous system தின்  திறன்/வேகம்/செயல்பாடு அதிகரித்து அதே திறனில் எப்போதும் இயங்கி கொண்டிருந்தால் அந்த திறன் நமக்கு முன்னாடியே என்ன நடக்கும் என முன்பே உணர்த்திடும் (திறனின் அளவை பொருத்தும் அவர்களுடன் இணைப்பில் உள்ள தூரத்தை பொருத்து இந்த ஆற்றலின் வீரியம் செய்ல் படும்)
நம் செல் போனில் உள்ள "Bluetooth app" போல தான்.. செய்திகளை பரிமாறிக் கொள்ளலாம் சில சமயங்களில் வலிமையான ஆற்றலை கொண்டு வலிமை அற்ற ஆற்றலை இயக்கு முடியும் (Bluetooth த்த home theatre ல இணைத்து செல் போன் மூலம் தூரத்தில் இருந்து கொண்டு இயக்குவது போல.

இதில் சில விசயங்களை மறைமுகமாகவும் சொல்லிருக்கோம் உங்களின் தேடுதலுக்காக...