இதயத்திலிருந்தும், துடிதுடிப்பு உணர்விலிருந்தும் துளிர்விட்டு, தூய்மையாகவும், வலுவாகவும் இருக்கும் ஆசைகளுக்கு அபாரமான மின்காந்த சக்தி உண்டு.
ஒவ்வொரு இரவும் மனம் உறக்க நிலையில் ஆழ்ந்து விடும்போது இந்த சக்தி வனவெளியில், கலக்கிறது.
பிரபஞ்ச இயக்கதில் வலுவடைந்த அந்த சக்தி-cosmic currents தினம், தினம் காலையில் உணர்வு நிலையில் சங்கமிக்கிறது.
இப்படி மனதில் தோன்றி வலுவடைந்த ஆசை நிச்சயமாக நிஜமாகும்.
யுக யுகமாக தொடர்ந்து வரும் இந்தக் கருத்தை சூரிய உதயமும் வசந்த காலமும் மாறாமல் நிகழ்வதை நம்புவது போல நீ நம்ப வேண்டும் இளைஞனே...
இப்படி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கூறுகிறார்..
நல்ல பழக்க வழக்கங்கள் வருவதற்குக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் அவற்றோடு வாழ்வது சுலபமே ஆகும்.
தீய பழக்க வழக்கங்கள் சுலபமாக வருவதாக இருக்கலாம். ஆனால் அவற்றோடு வாழ்வது கடினமாகும்.
சிறு திட்டங்களை தீட்டாதீர்கள், நம் இரத்தத்தைக் கிளர்ந் தெழச் செய்யும் சக்தி அவற்றிற்கில்லை….
பெருந் திட்டங்களைத் தீட்டுங்கள்; நம்பிக்கையுடன் உயர்ந்தவற்றைக் குறி வைத்து வேலை செய்யுங்கள்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.