சுவீடன் நாட்டின் கோத்தென்பர்க் நகரில், தூத்துக்குடி மக்களின் மீது ஏவப்பட்ட அரச பயங்கரவாதத்திற்கு எதிராகவும், ஸ்டெர்லை நச்சு ஆலைக்கு எதிராகவும், தூத்துக்குடி மக்களின் பாதிப்பிற்கான நீதிக்காகவும் 100ற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் கலந்துகொண்ட போராட்டம் நடந்தது.
நகரின் மையப்பகுதியில் நடந்த இந்த ஆர்ப்பட்டத்தின் பொழுது, ஸ்டெர்லை ஆலையின் சட்டவிரோத நடவடிக்கைகள், 20 ஆண்டுகளுக்கும் ஆலையினால் மேலாக பரப்பட்டு வரும் நச்சுக் காற்று, நீர் மாசடைதல், 1998 முதல் 2013 நீதிமன்றங்களும் தமிழ்நாடு அரசாங்கங்களும் எடுத்த சட்ட நடவடிக்கைகள், வேதாந்தா நிறுவனத்தில் உலகளாவிய சட்ட விதிமுறை மீற்ல்கள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
போராட்டத்தின் முடிவில், கோத்தென்பர்க் வாழ் மக்களின் சார்பாக, சுவீடனிற்கான இந்திய தூதரகத்திற்கு எழுதப்பட்ட கோரிக்கை மனு தயாரிக்கப்பட்டு, அனைவரும் ஏற்று கையெழுத்திட்டனர். இந்திய தூதரகத்திற்கு எழுதப்பட்ட மனுவின் பிரதியை, சுவீடனின் பிரதமர், துணை பிரதமர், வெளியுறவு அமைச்சர், வெளியுறவுத் துறை செயலாளர், சுவீடன்-இந்திய வணிக அவை, Amnesty International, Green Peace, ஐரோப்பிய, நோர்டிக் நாடுகளின் பசுமை-இடதுசாரி முன்னணி நாடாளுமன்றக் கூட்டமைப்பு, Volvo, ABB, SKF உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களின் மக்கள் தொடர்பு அலுவலகத்திற்கு அனுப்ப உள்ளதாகவும் போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள் தெரிவித்தனர்.
அம் மனுவில்,
1) மே 22 கலவரத்திற்கான நீதி விசாரணையை, பணியில் இயங்கும் மூன்று நீதிபதிகள் (தமிழகத்தவர் 1, பிற மாநிலத்தவர் 2) தலைமையில், சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் 2 பிரதிநிதிகளின் மேற்பார்வையில், தொடங்க வேண்டும்.
2) ஆணையத்தில் விசாரணைக்காக, தமிழக முதல்வர், தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், காவல்துறை உயர் அதிகாரிகள், இந்திய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சர் அனைவரும் அழைக்கப்பட வேண்டும்.
3) தமிழக அரசு, மே 28 ஆம் நாள் வெளியிட்ட அரசாணையை உறுதி செய்ய, அமைச்சரவைக் கூட்டத்தை உடனடியாக கூட்டி, ஸ்டெர்லைட் நிறுவனத்தை நிரந்தரமாக மூடுவது தமிழக அரசின் கொள்கை முடிவென அறிவிக்க வேண்டும்.
4) வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். வருங்காலத்தில் கடவுச்சீட்டு உள்ளிட்ட எவ்வித விசாரணைகளின் பொழுதும் அவர்கள் துன்புறுத்தப்படக் கூடாது.
5) ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டப் பிறகு, அடுத்த 6 மாதங்களுக்கு உரிய சம்பளத்தை தொழிலாளர்கள் அனைவருக்கும் ஸ்டெர்லைட் நிர்வாகம் வழங்கிட வேண்டும், 6 மாதத்திற்குள் அவர்களுக்கான பணி வாய்ப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
6) அரச வன்முறையால் பாதிக்கப்பட்டோருக்கு, தமிழக அரசு, இந்திய அரசு, ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகம் இணைந்து, நல்லிணக்கம், மீள் கட்டமைப்பு, நிவாரணம், உள்ளிட்டவைகளில் ஈடுபடல் வேண்டும்.
7) ஸ்டெர்லைட் ஆலையின் சட்டவிரோத செயல்பாடுகளால் பாதிக்கப்பட்ட, கடல், நில, நீர், காற்று உள்ளிட்டவைகளை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளின் மொத்த செலவுகளையும் ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகமே ஏற்க வேண்டும்.
மே 22, அரச கலவரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கான நினைவு மண்டபத்தையும் அதனை ஒட்டி, பெரிய அளவிலான பசுமைப் பூங்கா ஸ்டெர்லைட் ஆலையின் செலவில் அமைத்திடல் வேண்டும்.
உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகளை அம் மனு உள்ளடக்கி உள்ளது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.