29/12/2017

சென்னை தலைமைச் செயலகத்தில் டி.டி.வி.தினகரன் ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.,வாக பதவியேற்றார்...


️டி.டி.வி.தினகரனுக்கு சபாநாயகர் தனபால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்..

ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.,வாக பதவியேற்ற டி.டி.வி.தினகரனுக்கு சபாநாயகர் தனபால் வாழ்த்து.

பதவியேற்பில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் செந்தில்பாலாஜி, வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்...

ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு எதிராக மாணவர்களின் போராட்டம் ஆரம்பம்...


இன்றைய தமிழனின் நிலை... தெலுங்கு (திராவிட) மாப்பியா ஆதிக்கத்தில்...


தமிழக மக்கள் எங்களை உற்று பார்த்து கொண்டு இருக்கிறார்கள் - பாஜக தமிழிசை...


கடந்த Rkநகர் தேர்தலில் தமிழக மக்கள் தமிழிசையை உற்று பார்த்த போது எடுத்த படம்...

மச்சு பிச்சு - வியப்பூட்டும் சில தகவல்கள்..


வரலாறு என்றவுடன் நமக்கு நினைவிற்கு வருவன எவை?

முன்னோர்களின் வாழ்க்கை முறை, மன்னர்களின் ஆட்சிமுறை, பண்பாட்டுச் சின்னங்கள், உருவாக்கிய நகரங்கள், கோட்டைகள், மாளிகைகள் போன்றவற்றைக் கூறலாம்.

இவற்றுள் நமக்குப் பார்த்தவுடனே பிரமிப்பை ஏற்படுத்துவது வரலாற்றுத் தலங்களே..

தமிழகத்தை எடுத்துக் கொண்டால், தஞ்சைப் பெரிய கோவில், தாராசுரம் கோவில், மகாபலிபுரம் சிற்பங்கள் மற்றும் இன்னபிற தலங்கள் நம் முன்னோர்களின் சிறப்பைப் போற்றுகின்றன.

இதே போல உலகெங்கும், வரலாற்றுத் தலங்கள் அந்தந்த நாட்டு முன்னோர்களின் சிறப்பை பறைசாற்றி நிற்கின்றன...

மச்சு பிச்சு.. தென்னமெரிக்க நாடான பெருவில் பதினைந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நகரம் தான் மச்சு பிச்சு..

செங்குத்தான ஆண்டிஸ் மலைத் தொடரில், கடல் மட்டத்திற்கு மேல் 2400 மீட்டர் உயரத்தில் கொண்ட இன்கா பேரரசால் கட்டப்பட்டது. ( நம் ஊட்டி, கொடைக்கானல் போன்ற ஊர்கள் கிட்டத்தட்ட இந்த உயரம் தான்) பச்சாகுட்டி (Pachakuti) என்ற இன்கா மன்னரின் ஆட்சிக்காலத்தில் இந்த நகரம் கட்டப்பட்டிருக்கிறது.

பழங்காலத்தில், மலைகளின் நடுவே மக்கள் வாழ்க்கை நடத்தியிருந்தாலும் மச்சு பிச்சு நகரத்திற்கு மட்டும் அப்படி என்ன தனிச்சிறப்பு..

செங்குத்தான மலைத்தொடரின் உச்சியில் 1000 பேர் வாழும்படியாக ஒரு நகரத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

அந்தக் காலத்தில் இப்பொழுது இருக்குமளவிற்கு தொழில்நுட்ப வசதிகள் எதுவும் இல்லாத பொழுது எப்படி நிர்மானித்தார்கள்?

மக்களின் உழைப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மலை உச்சியில் ஒரு நகரம் அமைப்பதென்பது அதிசயமானதே...

சீனப் பெருஞ்சுவரும் மலை உச்சியில் தான் கட்டப்பட்டதென்றாலும், அவை மங்கோலியப் படையெடுப்பைத் தடுப்பதற்காகவே பயன்பட்டது.

ஆனால் மச்சு பிச்சு நகரமோ, அடர்ந்த காட்டுக்குள்ளே யாரும் எளிதில் அடைய முடியாத இடத்தில்..

இந்நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள அமைப்புகள், கற்களால் ஆன வடிவங்கள் ஏதோ சூரிய அல்லது இறை வழிபாட்டிற்கான இடமாக இருந்திருக்கலாம் என்றும் கருதுகிறார்கள்....

தேயிலைத் தோட்டங்களில் படிப்படியாக பயிரைச் சாகுபடி செய்ய அமைக்கப்பட்டிருப்பதைப் போல மலைச்சரிவில் படிப்படியாக கட்டடங்களை கட்டியிருப்பது இன்கா மக்களின் கலாச்சாரத்தைப் போற்றுகிறது.

மழைக்காலத்தில் வெள்ளத்தால் கட்டடங்கள் அடித்துச் செல்லாமல் இருக்கும் படியாக வடிகால்களையும், விவசாயத்திற்குத் தேவையான நீர் ஆதாரங்களையும் உருவாக்கியிருப்பது வியப்பளிக்கிறது....

இவ்வளவு சிறப்பாக ஒரு நகரை உருவாக்கிய இன்கா பேரரசு என்ன ஆனது...

பெரு நாட்டின் மீது ஸ்பானிஷ் படைகள் தாக்குதல் நடத்தியதால் தப்பி ஓடிய இன்கா மக்கள் கஸ்கா என்ற தங்கள் நகரத்தை விட்டு அடர் காடுகள், பள்ளத்தாக்குகளில் தஞ்சம் புகுந்தனர்.

கஸ்கா ஸ்பானியர்களின் ஆக்கிரமிப்புக்குள் போனது. காட்டுக்குள் தங்கிய இன்கா மக்களை ஸ்பானிஷ் படை நெருங்க முடியாமல் விலகி விட்டது.
ஆனால் கானகத்தில் நுழைந்த இன்கா மக்கள் தங்களுக்கென ஒரு பெரிய நகரை காட்டுக்குள்ளேயே நிர்மாணித்தனர்.

வில்கபாம்பா என அவர்கள் அந்த நகருக்குப் பெயரிட்டனர். நகரை நிர்மாணித்த இன்கா மக்கள் தங்களுடைய நிம்மதியான வாழ்க்கையைக் கெடுத்த ஸ்பானியர்களுக்கு சண்டை, போர் என குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருந்தனர். ஸ்பானியர்களும் திரும்பித் தாக்கிக் கொண்டே இருந்தார்கள்.

சுமார் முப்பத்து ஆறு ஆண்டுகள் இந்த சண்டை விட்டு விட்டு நடந்தது. ஸ்பானியர்கள் கடைசியில் 1572ல் மாபெரும் கொடூரத் தாக்குதலை நிகழ்த்தினார்கள்.

இன்கா மக்களை வயது, பாலியல் வேறுபாடு ஏதுமின்றி கொன்று குவிக்க ஆரம்பித்தார்கள்.

போராளிகள் மட்டுமன்றி கண்ணில் பட்ட அனைவருமே படுகொலை செய்யப்பட்டனர் ஸ்பானிய படைகள் கடைசியில் வில்காபாமாவையும் தாக்கியது.

இன்கா மக்களின் கடைசி மன்னன் துப்பாக் அமாரு சிறை பிடிக்கப்பட்டான்.

மன்னனைச் சிறைப்பிடித்த ஸ்பானியர்கள் அவரை கஸ்கோ நகருக்குக் கொண்டு பிளாசா டி ஆர்மாஸ் என்னுமிடத்தில் வந்து படுகொலை செய்தனர்....

ஸ்பானியர்களின் படையெடுப்பின் காரணமாக இன்கா பேரரசு முழுவதும் சிதைக்கப்பட்டு மக்கள் சிதரடிக்கப்பட்டனர்.

இப்படி ஐரோப்பியர்களின் படையெடுப்பின் காரணமாக உலகெங்கும் அழிந்த கலாச்சாரங்கள் எத்தனையோ?

இன்கா பேரரசை ஸ்பானியர்கள் கைப்பற்றியதில் இருந்து, இப்படி ஒரு நகரம் இருப்பது தெரியாததால் கைவிடப்பட்ட நிலையில் இருந்து வந்தது மச்சு பிச்சு..

பல நூற்றாண்டுகளாக மறக்கப்பட்டிருந்த இந்த நகரத்தை 1911 இல் அமெரிக்க வரலாற்றியலாளர் ஹிராம் பிங்கம் என்பவர் மீளக் கண்டு பிடித்தார்.

அதன் பின்னர் இது ஒரு சுற்றுலாப் பயணிகளின் ஒரு முக்கிய இடமாக மாற்றப்பட்டது.

1983 முதல் யுனெஸ்கோ அமைப்பின் கலாச்சார சிறப்புமிக்க இடங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது....

மச்சு பிச்சு நகரிற்குச் செல்ல குஸ்கோ என்னும் நகரில் இருந்து ஒல்லாண்டயடம்போ என்னும் இடத்திற்கு ரயிலிலும், பிறகு மலைகளின் சரிவில் உள்ள பேருந்து பயணம் மூலம் இடத்தைச் சென்றடைய முடியும்..

2007ல், புதிய 7 உலக அதிசயங்கள் பட்டியலை சுவிஸ் நாட்டைச் சேர்ந்த அமைப்பு தேர்ந்தெடுத்த பொழுது இந்த வரலாற்றுச் சின்னம் நமக்கு அறிமுகமானது....

தென்னமெரிக்க நாடுகளில் நம்மவர்கள் பணியாற்றி வந்தால் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய இடத்தில் மச்சு பிச்சுவைச் சேர்த்தாக வேண்டும்..

பல கஷ்டங்களுக்கிடையில், எங்கெங்கோ, யார் யாரையோ பிடித்து எந்திரன் படத்திற்காக ஒரு டூயட் பாடலை டைரக்டர் ஷங்கர் அவர்கள் படமாக்கி உள்ளார்…...

இந்த இடம் தடைசெய்யப்பட பகுதி என்பதால், படப்பிடிப்புக்கு அவ்வளவு கெடுபிடி...

ஜல்லிக்கட்டை அழிக்க கார்ப்பரேட் (பாஜக) சதியா.?



சென்னையில் ஜல்லிக்கட்டு என்ற பெயரில் கார்ப்பரேட் மற்றும் பாஜகவினர் கையில் ஜல்லிக்கட்டு சென்றுள்ளதாக தொடர் தகவல் வருகிறது..

தமிழா விழித்துக்கொள்...

சித்தர் ஆவது எப்படி.. சித்தர் என்பவர் யார் - 1...


இந்த உலகில் சித்தர்கள் இருக்கின்றார்களா ? என்ற கேள்வி பல வருடங்களாக சாதாரண மனிதர்களால் கேட்கப் பட்டு வருகின்றது....

சித்தர்களை பார்க்கத் துடிக்கின்ற மனிதர்கள் பலர் இன்னும் இருக்கின்றார்கள்....

சிலர் தாம் பார்த்ததாக சொன்னார்களே தவிர யாரும் யாருக்கும் காட்டியதாக தெரியவில்லை...

மனிதகுலம் தம் தம் காலங்களில் தோன்றிய சில மாமனிதர்களை சித்தர்களாக, இல்லை இல்லை சித்தர்கள் போல சித்தரித்தார்களே தவிர அதில் உண்மை துளியும் இல்லை..

இறைவன் என்ற ஒரு உயர்நிலை இருக்க சித்தர்களை இறைவனை விட உயர்வாக போற்றும் போற்றிய மர்மம் என்ன ?

இறைவனால் சாதிக்காததை அப்படி என்ன சித்தர்கள் சாதித்தார்கள் ?..

சித்தர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள் என்றும் நம்பும் உலகம் ஒருவரையேனும் இன்று பார்க்க முடியவில்லையே அது ஏன் ?

இன்று என்ன உண்மையோ அப்படிதானே முன்னும் இருந்து இருக்க வேண்டும்..

அப்படியென்றால் சித்தர்களை இதுவரை எவரும் சரித்திரத்திலோ அல்லது எந்த தலைமுறையிலோ காண வில்லை என்ற பொருளாகி விடுமா ?

இது போன்ற கேள்விகள் எழுகின்ற போது பலரது புருவங்கள் உயர்த்தப் படலாம் என்பதில் சந்தேகம் இல்லை..

மன கசப்பும் அவர்களுடைய நம்பிக்கை உடையும் அபாயம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை..

சற்று பொறுமை இழக்காமல், சித்தர் ஆவது எப்படி என்ற தொடர் பதிவினை முழுமையாக படிக்குமாறு வேண்டுக் கொள்கின்றேன்...

முழுவதுமாக படித்தால் மட்டுமே உள்ளதை உள்ளவாறு அறிந்து கொண்டு சித்தர் பாதையில் நேர் வழியில் பயணப்பட முடியும்...

சித்தர் ஆவது எப்படி என்ற தலைப்பில் வரும் பல பகுதிகளில் பல உண்மைகள் ஒவ்வொரு பகுதியும் மற்ற பகுதியோடு தொடர்பு கொண்டமையால், படித்த பதிவின் நினைவு கொண்டால் மட்டுமே தொடர்ந்து வரும் பகுதியை சரியாக புரிந்து கொள்ள முடியும்..

ஆகவே ஒவ்வொரு பதிவினையும் உற்று கவனித்து படிக்குமாறும், படித்ததை நினைவில் கொள்ளுமாறும் வேண்டுகிறேன்....

நம் பஞ்சபூதங்களிலேயே அதிகம் மாற்ற அடையக் கூடியதும், அதனால் நம் வாழ்வியலை பல மாற்றங்களை ஆக்கக் கூடியதும் ஆனது நீர் தன்மை உடைய சித்தம் என்ற பூதம்..

இந்த சித்தம் என்ற பூதத்தை முறை படுத்தி மண், ஆகாயத்தை போல் ஸ்திர தன்மை பெற்றால் மட்டுமே நித்திய நிலையாகிய மரணமில்லா பெரு வாழ்வு அடையமுடியும்..

மாறும் போக்கு உடைய சித்தம் என்ற பூதம் உறுதி தன்மை அடைய வாழும் முறையை மேற் கொண்டவர்கள் தான் சித்தர்கள்..

அதாவது சித்தத்தை கையாளுகிறவர்கள் தான் சித்தர்கள்...

மாற்றம் காணும் சித்தம் உறுதி காணும் போது, முன் ஜென்மங்களில் சேர்த்து வைத்த ஆற்றல்கள் உள் வாங்கும் திறமை அதிகரிக்கப் படுவதால் அளவற்ற ஆற்றலை அடையும் பேறு கிடைக்கிறது...

அதனால் மனிதன் மாமனிதன் ஆகிறான்..

இந்த சித்தர்கள் விசயத்தில் மனிதர்கள் செய்யும் பெரிய தவறு என்ன ?

சித்தர்கள் அடைந்ததாக கருதப்படும் பெரும் செயல்களால் ஈர்க்கப் பட்டு, சித்தர்கள் பால் மிகுந்த ஈர்ப்பு உடையவர்களாக இருக்கிறார்கள்..

இன்றைய திரைபடங்களில் மிக பெரிய செயல்களை செய்வது போல் நடித்துக் கொண்டு இருப்பவர்களையே தெய்வமாக கருதி அவர்களின் பெரிய பேனர் படங்களுக்கு குடம் குடமாக பால் அபிசேகம் செய்யும் காலம் இது...

இது முறையற்று செயல் படும் சித்தத்தால் உருவானது..

மாயா நிலையை அள்ளி தரும் இந்த முறையற்ற சித்தத்தை சீர் செய்பவனே சித்தன்..

மாயா நிலை என்ற மயக்க நிலைவிட்டு தெளிவு நிலை என்னும் ஞான நிலை பெற வேண்டும் என்றால் முறையற்ற சித்தத்தை சீர் செய்யவேண்டிய அவசியம் உள்ளதே அன்றி அப்படி சித்தத்தை சீர் செய்து பெரும் ஆற்றலை பெற்ற சித்தர்களின் பெருமை பேசி பேசி சித்தத்தை சீர் செய்யும் செயலை விட்டு விலகி செல்லும் தந்திரத்தை இந்த உலகம் செய்து கொண்டு இருப்பதை பின் பற்றக்கூடாது ..

உலகின் செயல் பாட்டை விட்டு விலகி உண்மை நிலைக்கு திரும்பவேண்டும் ..

உலகத்தார் ஏன் அப்படி விலகி செல்ல விரும்புகிறார்கள் என்றால் அவர்களிடம் ஆற்றல் இல்லாத தன்மையால் உருவான சோம்பல் என்ற பலவீனமே..

எல்லாவற்றிக்கும் ஆற்றல் பெறுவதே முதல் ஆதாரமாக உள்ளது..

அதுவே எல்லாவற்றிக்கும் மூலமாக இருப்பதால் ஆற்றல் பெறுவதே மூலாதாரம் அதாவது மூல ஆதாரம்..

இதனை தேகத்தில் ஒரு இடத்தை காட்டி குறிக்கோளை விட்டு அப்பால் நகர்ந்து செல்வோரும் உண்டு...

எப்படியோ உண்மையான ஆற்றலை பெறும் வழியை விட்டு தப்பி செல்வதே மனித இயல்பாக உள்ளது..

இப்படி தப்பிக்காமல் பொறுப்பை ஏற்று உண்மையை நோக்கி பயணப் படுவதுதான் சித்தர் வழி..

சித்தத்தை சீர் செய்யும் சித்தர் வழியையும் சித்தராகும் நுணுக்கங்களையும் பார்ப்போமாக...

ஆற்றல் பெருகுவதற்கு சித்தத்தின் பங்கு மற்ற பூதங்களை காட்டிலும் மிக மிக அதிகம்..

எண்ண ஆதிக்கங்களை தந்து நம் மனதில் உள்ள பிரபஞ்ச ஆற்றலின் கனலை வெளிச்சமாக விரையமாக்கி, நம்மை செயலற்ற சவநிலைக்கு அழைத்துச் செல்லும் சித்தத்தை சீர் செய்யாமல் சித்தராக முடியாது..

அதற்கான உளவுகளை பகுதி பகுதியாக பார்ப்போமாக...

திருட்டு Sbi வங்கியின் டூபாக்கூர் வேலை...


தீட்சிதர்கள் தமிழை நீசபாசை என்றார்களா?


தில்லை அதாவது சிதம்பரம் சைவர்களின் இதயம்.

சிவனிய மதத்தின் தலைமை பீடம்.

மாலை ஆறுமணி.

கோவிலின் இரண்டு காண்டா மணிகள் கணீரென்று ஓசைகள் எழுப்பி சுற்றுப்புறத்தை ஒரு மைல் தூரம் அதிர வைக்கின்றன.

கோயிலை நெருங்கினால் காண்டா மணிகளின் ஓசையுடன் சிறுசிறு மணிகள் சேர்ந்துகொண்டு கிலுகிலுவென்று தம் பங்குக்கு ஒலியெழுப்புவதையும் கேட்க முடிகிறது.

இன்னும் நெருங்கினால் வேத முழக்கம் செய்யும் பார்ப்பனரின் குரலும் அந்தப் பேரோசையில் கலந்திருப்பது புலனாகிறது.

திடீரென்று அனைத்து ஓசைகளும் நின்றுவிடுகின்றன.ஒரு பேரமைதி சூழ்கிறது.

ஒரு குரல் ஒலிக்கிறது.பல ஆண்டுகள் பயிற்சி பெற்ற செம்மையான நடையில் பதிகங்களைப் பாடுகிறது.

என்ன மொழியில்?

ஆம், அது தமிழ்.

கோவிலின் உள்ளே நுழைகிறோம்.

பார்த்தால் தமிழில் பாடும் அந்த செம்மையான குரல் ஒரு பார்ப்பனப் பூசாரிகளில் ஒருவரின் குரல்.

ஆம். இப்பார்ப்பனர்கள்தாம் புகழ்பெற்ற தமிழ்ப் பார்ப்பனர்களான 'தில்லைவாழ் அந்தணர்கள்'.

அதாவது சோழியப் பார்ப்பனர்கள்.

தற்போது தீட்சிதர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

மொத்தமே 360 குடும்பம்தான் இருக்கும்.
அனைவரும் தில்லை கோவிலைச் சுற்றிய தேரடி வீதிகளிலேயே வாழ்கிறார்கள்.

சிறிது நேரத்தில் அப்பார்ப்பனரான் தமிழ் வேதமுழக்கத்துடன் மீண்டும் சிறுசிறு மணிகளும் காண்டா மணிகளும் மங்கள இசைக்கருவிகளும் சேர்ந்து கொள்கின்றன.

நாத்திகருக்கும் பரவசமூட்டும் அந்த இசை வழிபாடு உச்சகதிக்கு போய் அரைமணி நேரத்தில் முடிவடைகிறது.

தில்லை நடராசர் கோவிலுக்கு போனால் நாள்தோறும் மாலை ஆறுமணிக்கு, ஆதிசங்கரர் தந்ததாக நம்பப்படும் ஸ்படிக லிங்கத்துக்கும் நடராஜருக்கும் இந்த பூசை நடக்கும்.

இதிலே பாடப்படும் தமிழ் மந்திரம் மற்ற எல்லா மனிதர்கள் காதிலும் விழும்.

ஆனால் 'பார்ப்பன வெறுப்பு' விசம் ஊட்டப்பட்ட அதிமுற்போக்கு மனிதர்களின் காதில் மட்டும் இது கேட்கவே கேட்காது.

பார்ப்பனர் தமிழ் ஓதினால் போதும் அதிமுற்போக்குவாதியின் காதுகள் சட்டென்று செவிடாகிவிடும்.

இவர்கள் காதுகள் வேறு எப்போதெல்லாம் செவிடாகும் தெரியுமா?

இரவு ஒன்பது மணிவாக்கில் நடக்கும் அர்த்த ஜாம பூஜையின் போது நடராஜரின் பாதுகைகளை பள்ளியறைக்கு ஊர்வலமாக எடுத்து செல்லும் போதும் தீட்சிதர்கள் தமிழ் பதிகங்கள் பாடுவார்கள்.அப்போது செவிடாகி விடும்.

தேர் தரிசன உற்சவத்தின் போது பத்து நாட்களும் மாணிக்கவாசகர் சிலை கொண்டு வரப்பட்டு அனைத்து சாதி பக்தர்களும் ஓதுவாருடன் சேர்ந்து திருவெம்பாவை பதிகங்களை சத்தமாக பாடுவார்கள்.

திருவெம்பாவை தமிழ்தான்.அப்போதும் அதிமுற்போக்காளர் செவிடாகி விடுவார்.

தேர் திருவிழாவின் போது தேர் நிலைக்கு வந்ததும் நடராஜரை கோவிலுக்குள் கொண்டு செல்வதற்கு முன் தமிழ் பதிகங்களை பாடித்தான் தீப ஆராதனை நடக்கும்.

இது சிதம்பர ரகசியம் அல்ல. வெளிப்படையாக நடக்கும் நிகழ்வு.

சிதம்பரத்தில் வாழும் யாரையும் கேட்டுப் பாருங்கள்.

ஆனால் அதிமுற்போக்காளரை அங்கே கொண்டு நிறுத்தி கேட்டாலும் அவர் மட்டும் மறுப்பார்.

ஏனென்றால் அவர் காதுதான் அப்போது அவிந்து போய் விடுமே.

அப்படி என்றால் சிதம்பரம் தீட்சிதர்கள், ஆறுமுகசாமி என்ற ஓதுவாரை தமிழில் பாட விடாமல் தடுத்தார்கள் என்று செய்தி வந்ததே?

தமிழ் நீஷபாஷை என்று தீட்சிதர்கள் கூறியதாக கேள்விப்பட்டோமே?

ஆம். அப்படியெல்லாம் பரப்புரை செய்பவர்கள் 'பார்ப்பன எதிர்ப்பு' விசத்தை வியாபரம் செய்பவர்கள்.

ஆறுமுகசாமியை தீட்சிதர்கள் தடுத்ததற்குக் காரணம் அவர் கருவறை இருக்கும் மேடையான திருச்சிற்றம்பலத்தில் நின்று பாடுவேன் என்று அடம்பிடித்தது தான்.

தீட்சிதர்கள் கருவறை இருக்கும் மண்டபத்தில் ஏறி பாட தடை எதுவும் கூறவில்லை.

அவர்கள் கூறுவது கருவறை மேடைக்கு வரக்கூடாது என்பது தான்.

ஆக இங்கே பிரச்சனை தமிழ் இல்லை.
திருச்சிற்றம்பலத்தில் ஏறி நாள்தோறும் மாலை தமிழில் தான் தீட்சிதர் பாடுகிறார்.

இதை தமிழுக்கு ஏற்பட்ட இழிவாக ஏன் திரிக்கிறார்கள்?அந்த திரிப்பு எப்படி எடுபடுகிறது?

திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியான பொய்ப் பிரச்சாரம் இது எடுபட வழி செய்துள்ளது.

சாதிப் பெயர்கள் வைத்து எத்தனையோ கடைகள் உள்ளன.

ஆனால் 'ஐயர் கபே' என்று கடை வைத்தால் அந்த கடை முன்னே சென்று படுத்து உருண்டு பெயரை மாற்றச் செய்வார்கள்.

அரசியலுக்காக இதைச் செய்கிறார்கள்.

வாஞ்சிநாதன் ஆஷ்துரையைச் சுட்டுக்கொன்ற பின் அவர் பையில் வைத்திருந்த சீட்டில் பிரிட்டிஷ் பேரரசர் ஐந்தாம் ஜார்ஜை பஞ்சமன் என்று வடமொழி வடிவத்தில் எழுதிவிட்டார் (பஞ்ச்சம் = ஐந்தாவது) உடனே பார்ப்பான் வெள்ளைக்காரனைக் கூட கீழ்சாதியாகப் பார்க்கிறான் என்று ஆங்கில அடிவருடி கொள்கையையுடைய திராவிடவாதிகள் பரப்புரை செய்தனர்.

மிகச்சிறந்த எடுத்துக்காட்டு ஒன்றைக் கூறுகிறேன்.

இராஜாஜி தன் ஆட்சிக்காலத்தில் ஆசிரியர் பற்றாக்குறையால் ஆசிரியரின் பணி நேரத்தை பல வகுப்பு மாணவர்களுக்கு பகிர்ந்தளித்தார்.

ஆசிரியர் இல்லாத நேரத்தில் என்ன செய்யலாம் என்று பேட்டியில் கேட்டதற்கு "வீட்டிற்குச் சென்று பெற்றோருக்கு உதவிகள் செய்யலாம்" என்றார்.

அவ்வளவு தான்.

"பார்ப்பான் மனுதர்மப்படி குலத் தொழிலை செய்யச் சொல்லிவிட்டான்" என்று பொய் பிரச்சாரம் செய்து செய்தே அவரை பதிவியிலிருந்து இறங்கினார் அண்ணாதுரை.

இன்று அத்திட்டத்தின் பெயரே 'குலக்கல்வித் திட்டம்' என்றாகிவிட்டது.

ஆனால் அந்த திட்டம் இராசாசி போட்ட திட்டம் கிடையாது.குலம் பற்றி அதில் எதுவுமே கூறப்படவில்லை.

இதுபோல பார்ப்பனர் மீது வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் உடைக்க முடியும்.

ஆனால் பார்ப்பனர் தமிழர் என்று கூறினாலே காரணமே இல்லாமல் பல நல்லவர்களுக்கும் கூட கண் அவிந்து காது திருகி மூளை மழுங்கி போய் விடுகிறது.

ஆகவே தமிழரே, பார்ப்பனர் தமிழனத்தின் ஒரு குலத்தினரே.

தமிழ்ப் பார்ப்பனர்களை பிறமொழிப் பிராமணருடன் குழப்ப வேண்டாம்.

தமிழ் ஓலைச்சுவடிகளை பாதுகாத்தோர் இந்த தில்லை சோழியப் பார்ப்பனர்கள் தான்.

இராசராசன் அவற்றை மீட்ட கதை தெரியும் தானே?

அந்நிய படையெடுப்பின் போது நடராசர் சிலையை பல இடங்களுக்கும் எடுத்துச் சென்று மறைத்து வைத்து பாதுகாத்ததும் இதே தில்லைவாழ் சோழியப் பார்ப்பனர்கள் தான்.

எத்தனையோ கொடுமைகளையும் கொலைகளையும் சந்தித்த பிறகும் அவர்கள் சிலைகளை மறைத்து வைத்த இடத்தைக் காட்டிக் கொடுக்கவில்லலை.

சிதம்பரம் கோயிலுக்குள்ளேயே எட்டு சிலைகள் இவ்வாறு மறைத்து வைக்கப்பட்டிருந்ததைப் பின்னர் அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்தனர் (ஜோப் தாமஸ், ‘திருவெண்காடு ப்ரோன்ஸ்’ (Tiruvengadu Bronzes), க்ரியா, 1986).

மாலிக் கபூர் படையெடுப்பை ஒட்டிய குழப்பமான காலகட்டத்தில் உமாபதி சிவாச்சாரியர் என்பவர் சாதி எல்லைகளைக் கடந்து அனைவருக்கும் ‘பேதமற தீக்கை’ (பேதமற்ற தீட்சை) தந்து தீட்சிதர் ஆக்கினார்.

முதலில் அவரை எதிர்த்த தீட்சிதர் பிறகு மனம் மாறி உமாபதி சிவாச்சாரியாரை மீண்டும் திருக்கோயில் பூசனைகளுக்கு அழைத்தனர்.

விஜயநகரப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் (1400 - 1700) சிவன் கோயில்கள் புறக்கணிக்கப்பட்டன.

பல சைவ கோவில்கள் அரசு ஆதரவின்றி அழிந்து போயின.

அப்போது தில்லைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் கோயிலை தாமே பொறுப்பெடுத்துக் கவனித்துக் கொள்ளத் தொடங்கினர்.

கிறித்துவ மிஷனரிகளின் சூழ்ச்சியால் நாடார்கள் கோவிலுக்குள் நுழைய தடை விதிக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நாடார்களுக்கு ஆதரவாக தீட்சிதர்கள் சாட்சி கூறியதும் அதனால் (மிஷனரிக்கு ஆதரவான) பிரிட்டிஷ் நீதிபதிகளால் கடுமையான அவமதிப்புக்கும் ஆளானார்கள்.

(தோள்சீலைக் கலகம், ‘சிஷ்ரி’ (SISHRI), 2010)

நாடார்கள் லண்டன் வரை மேல்முறையீடு செய்தும் அநியாயமான தீர்ப்பே வந்தது.

எனவே தீட்சிதர்கள் எந்த அரசாங்கத்தையும் நம்புவதில்லை.

அதனால் தான் கோவிலை அறநிலையப் பொறுப்பில் ஒப்படைக்க மறுக்கிறார்கள்.

அதற்காக தீட்சிதர்கள் செய்வதெல்லாம் சரியென்று கூற முடியாது.

தீட்சிதர்கள் மீது இன்னும் எவ்வளவோ விமர்சனங்கள் உண்டு.

அவர்கள் சைவ ஆகமத்தை பின்பற்றாது பதஞ்சலி முனிவர் வகுத்த முறையை பின்பற்றுகின்றனர்.

கோவில் நகைகள் காணாமல் போனது.

காசு கொடுத்தால் சிறப்பு பூசை.

மாத சந்தா கொடுத்து விட்டால் கோவிலுக்கு வராமலே அர்ச்சனை செய்து பிரசாதம் பெறும் வசதி செய்து தருவது.

ஆண்களை சட்டையைக் கழற்றச் சொல்வது.

பிறமதத்தாரை உள்ளே விடாதது.

திருமணம் ஆனால் தான் தீட்சை பெற்று தீட்சிதர் ஆகும் தகுதி கிடைக்கும் என்பதால் இளவயது திருமணம் செய்வது.

என்று ஏகப்பட்ட விமர்சனங்கள் உள்ளன.

அதைப் பற்றி நான் இங்கே கூற வரவில்லை.

நான் கூற வருவது தீட்சிதர்கள் தமிழுக்கு எதிரானோர் இல்லை என்பதைத் தான்.

ஆகவே தமிழர்களே...

திராவிடத்தை எதிர்க்கும் அதே நேரத்தில் தமிழரல்லாத அந்த திராவிட வந்தேறிகள் ஊட்டிய பார்ப்பனருக்கு எதிரான சாதிவெறிக்கு நீங்கள் இரையாகி உள்ளீர்கள்.

இனியாவது அந்த விசத்தைக் கக்குங்கள்.

பார்ப்பனர் தரப்பு நியாயத்தை சிந்தியுங்கள்.

பார்ப்பனரை ஏறெடுத்துப் பாருங்கள்...

சிவகாசி மக்களின் கேள்வி...


இந்த வட நாட்டானுங்க.. கோலி என்ற பேரில் கலர் கலரா பவுடரை தூவுகிறார்களே... அதற்கெல்லாம் எப்போது தடை வரும்...

நாம் காணும் கனவுகள்...


ஓர் சராசரி மனிதன் ஒவ்வொரு நாளும் இரவில் 4 முதல் 6, ஆகவே ஒரு வருடத்தில் 1.460 முதல் 2.190 கனவுகளை காண்கிறான்.

அதிலும் ஒரு கனவு 5 நிமிடங்களில் இருந்து 30 நிமிடங்களைக் கொண்டதாக இருக்கும்.

இப்போ நீங்கள் யோசிக்கலாம் இது என்னடா… காலையில் எழும்பும் போது ஒரு கனவே நினைவில் இல்லையாம் அப்படி என்றால் எப்படி 6 கனவுகள் காண்கிறோம் என்று.

இதில் கவனிக்க வேண்டிய விடயம் இது தான்..

நீங்கள் 95% முதல் 99% ஆகிய அனைத்து கனவுகளையும் உடனடியாக மறந்து விடுவீர்கள்..

ஏன் என்றால், நீங்கள் காணும் எல்லாக் கனவுகளுமே உங்களுக்கு சுவாரசியமாக இருப்பது இல்லை..

ஆகவே அவை அனைத்துமே மறந்து விடுகின்றீர்கள்.

மேலும் பார்ப்போம்…

நீங்கள் கனவுகளில் காணும் அடையாளம் தெரியாத நபர்கள் கூட உண்மையில் நீங்கள் எப்போதாவது சந்தித்த ஒருவராகத் தான் இருக்கும்.

அவர் பக்கத்து ஊர் McDonald’s இல் வேலை செய்யும் ஒருவராக அல்லது தெருவில் தற்செயலாக பார்த்த ஒருவராகத் தான் இருப்பார்.

கற்பனையிலேயே ஒரு புது முகத்தை நமது மூளை தயாரிப்பதில்லை.

நமது வாழ்நாளில் நாம் பார்த்த விஷயங்களை வைத்துத்தான் நமது மூளை கனவுகளை உருவாக்கின்றது.

சரி, கனவில் நடப்பதை நீங்கள் விரும்பும்படி மாற்றி அமைக்க முடியும் என்றால் நல்லா இருக்கும் அல்லவா?

உண்மை சொல்லப் போனால் அது கூட முடியும்..

Lucid Dreaming என குறிக்கப்படும் முறையை கற்றுக் கொண்டால் உங்கள் கனவுகளுக்கு நீங்களே கதை, வசனம், இயக்கம் மட்டும் செய்யாமல், நீங்களே கதாநாயகனாக திரிசா, நயன்தாரா, அசின், தமன்னா என்று எல்லோருடனுமே கனவில் ஒரு திரைப்படம் எடுக்கலாம்…

இப்போ நீங்கள் மட்டுமே காணக்கூடிய உங்கள் கனவுகளை எதிர்காலத்தில் YouTube இல் கூட upload பண்ணலாம் என்று விஞ்ஞானம் சொல்கிறது.

University of California Berkeleyயில் இது தொடர்புடைய ஆராய்ச்சி நடை பெறுகிறது.

இதில் சுவாரசியமான விஷயம் என்ன தெரியுமா…?

12 சதவீதமானவர்கள் தமது கனவுகளை Black & White இல் தான் காண்கிறார்கள்…

நீங்க என்ன மாதிரி.. Color கனவா Black & White கனவா காண்கிறீங்க...

அமைச்சர் செல்லூர் ராஜு சொன்னது அவருடைய கருத்து , அதிமுக வரும் காலத்தில் பாஜகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி...


பிஜேபியுடன் இணக்கமாக இருப்பது தமிழகத்தின் நலனிற்காகத்தான் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..

பாஜகவுடன் இணக்கமாக இருந்ததால் தான் ஆர்கே நகரில் தோல்வியை சந்தித்தோம் அதிமுக ஒரு போதும் மதவாத கட்சியுடன் இணையாது என அமைச்சர் செல்லூர் ராஜு கூறியிருந்தார்...

தவறிழைத்திருந்தால் டிஎஸ்பி மீது நடவடிக்கை உறுதி- நீதிபதி திட்டவட்டம்...


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நிலத்தகராறில் டிராக்டர் மூலம் உழுது சேதப்படுத்தப்பட்ட நெல் வயலை பார்வையிட்ட மாவட்ட நீதிபதி மகிழேந்தி, தவறு செய்திருந்தால் DSP ஜெரீனா பேகம் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்...

பாஜக பினாமி அதிமுக எடப்பாடி கலாட்டா...


முன்னேறிய நாடுகளில் வாக்குச்சீட்டு தான்...


உலகில் முன்னேறிய நாடுகள் என்றால் அவை அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி, பிரான்சு, ஜப்பான், ரஷ்யா, ஆஸ்திரேலியா போன்றவை...

மேற்கண்ட நாடுகள் 1995 க்குப் பிறகு ஒன்று அல்லது இரண்டுமுறை தேர்தல் வந்தபோது  மின்னணு வாக்குப் பதிவினை முயற்சித்து பார்த்து பெரும்பாலும்  2010க்குள் கைவிட்டுவிட்டன.

ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

கனடா எப்போதும் வாக்குச்சீட்டே பயன்படுத்துகிறது..

பின்லாந்து (ஒருமுறை பயன்படுத்தி தவறு நடந்ததாக கண்டுபிடித்து) மின்னணு வாக்குப்பதிவை 2008ல் தடை செய்து வாக்குச்சீட்டு மூலம் மறுதேர்தல் நடத்தியது.

ஜெர்மனி (ஒருமுறை பயன்படுத்திப் பார்த்து) 2009ல் மின்னணு வாக்குப்பதிவை தடை செய்தது.

அயர்லாந்து (ஒருமுறை பயன்படுத்தி பார்த்து) 2009ல் மின்னணு வாக்குப்பதிவு நம்பிக்கைக்குரிய வகையில் இல்லை என்று கூறி வாக்குப்பதிவு இயந்திரங்களை தடை செய்து அவற்றை அழித்து விட உத்தரவிட்டது.

நெதர்லாந்து (ஒரு முறை முயற்சித்து பார்த்து) 2007 ல் பாதுகாப்பற்றது என மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தடை செய்தது.

நார்வே 2013ல் (இருமுறை முயன்ற பிறகு) மின்னணு வாக்குப்பதிவு செய்து பார்த்து கைவிட்டது.

இங்கிலாந்து தேர்தல் ஆணையம் 2008 ல் மின்னணு வாக்குப்பதிவை கைவிட்டது.

இத்தாலி வாக்குச்சீட்டுதான் பயன்படுத்துகிறது. சீட்டின் வண்ணம் தேர்தலின் வகையைப் பொறுத்து இருக்கும்.

ஸ்காட்லாந்து வாக்குச்சீட்டை பதிவெடுத்து மின்னணு தரவாக மாற்றும் இயந்திரத்தை பயன்படுத்துகிறது.
(இதிலும் தவறு நடத்ததாக கண்டு பிடித்துள்ளது).

பெல்ஜியம் மின்னணு வாக்கு அட்டையை பயன்படுத்துகிறது.
(நேரடியாக இயந்திரத்தில் வாக்கினை பதிவு செய்வதில்லை).

அமெரிக்காவில் பாதி மாகாணங்கள் வாக்குச்சீட்டையும் பாதி மாகாணங்கள் மின்னணு முறையையும் பயன்படுத்துகின்றன.

ஜப்பான் வாக்குச்சீட்டில் வேட்பாளர் அல்லது கட்சியின் பெயரை எழுதி போடும் முறையை பின்பற்றுகிறது.
(தேர்தலுக்கு முன்பே வாக்களிக்கலாம்).

ஆஸ்திரேலியாவில் வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட்ட ஒன்று. வாக்குச்சீட்டு தான் பயன்படுத்துகின்றனர்.

ரஷ்யா வாக்குச்சீட்டுதான் பயன்படுத்துகிறது. சீட்டை மடிக்காமல் போட வேண்டும்.

ஆக வளர்ந்த நாடுகளே பயன்படுத்தி பார்த்து தோல்வியடைந்தது என பத்தாண்டுகள் முன்பே கைவிட்ட ஒரு தொழில் நுட்பத்தைத் தான் இந்தியா பிடித்துக் கொண்டு தொங்குகிறது.

இதைச் சொன்னால் நம்மை கோமாளி, பிற்போக்குவாதி, கற்கால மனிதன் என்கின்றனர் நவீன முட்டாள்கள்...

பத்திரிகையார் என்ற பேரில் வெளியில் இருக்கும் முக்காவாசி பேரு திமுக பினாமிகள் தான்...


மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை...


பச்சைக் கீரைகளில் எவ்வளவோ எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம்தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள்.

கீரை வகைகளில் இரும்புச் சத்து கணிசமாக உள்ளது.அந்த வகையில் முருங்கைக் கீரையின் பயன்களைப் பார்ப்போம். முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது.

முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.

சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. அதுபற்றி சற்று விரிவாக காண்போம்.

இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும்.

எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற பெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம்.

முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங் களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம். முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும்.

மரம் முழுவதும் மருந்தாக இருக்கும் முருங்கையை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள மறவாதீர்கள்...

கார்ப்பரெட் (இலுமினாட்டி) வியாபாரத்தை புரிந்துக் கொள்ளுங்கள்...


காஃப் சிரப் எதற்கு...? கஷாயம் இருக்க.....?


குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை சளி, இருமல் என்று அவதிப்படும் சீஸன் இது. அப்பாயின்மென்ட் வாங்கி, டாக்டரிடம் சென்று, ஆன்டிபயாடிக், சிரப், டேப்ளட் என்று மெடிக்கலில் செலவழிப்பதற்கு முன், இந்த கை வைத்தியத்தை முயற்சி செய்து பாருங்கள். செய்வதும் எளிது, உடலுக்கும் நல்லது, விளைவுகளும் இல்லாதது.

சில துளசி இலைகளை அலசி வைத்துக் கொள்ளவும். 10 மிளகை பொடித்து வைத்துக் கொள்ளவும். சீரகத்தை சிறிது எடுத்துக் கொள்ளவும்.

600 மிலி தண்ணீரில் துளசி இலைகள், மிளகுப் பொடி, சீரகத்தையை சேர்த்து கொதிக்க வைக்கவும்.

200 மிலி-ஆக தண்ணீர் வற்றியதும் இறக்கி, வடிகட்டி, அதனுடன் ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து கலக்கவும்.

பெரியவர்கள் சுடச்சுடவும், குழந்தைகள் இளஞ்சூட்டிலும் இதைப் பருகலாம்...

இன்றும் உலகின் பெரும் மருத்துவ கம்பனிகளுக்கு ஆப்பரிக்கர்களும் இந்தியர்களும் பரிசோதனை எலிகள் தான்...



ஆயிரக்கனக்கான ஏழைகளை கொன்ற மருந்து சந்தையில் புகுந்து நடுத்தர வர்கத்தை மெல்ல கொல்லும்...

வெள்ளைச்சீனி பற்றி நாம் அறிந்திடாத பல திடுக்கிடும் தகவல்கள்...


வெள்ளைச்சீனியும் அதன் நச்சுத் தன்மையும்...

இனிப்யை விரும்பிச் சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது.

பதார்த்தத்தில்தான் என்றில்லை. சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம். இந்த வெள்ளைச் சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள். குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயாணப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்.

கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.

பிழிந்த சாறு 60 செண்டி கிரேட் முதல் 70 செண்டி கிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.

இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.

102 செண்ட் கிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.
அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாக பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.

சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.

மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.

இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.
தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசயானம் மஞ்சல் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.

உங்கள் சட்டைக் கொலரொல் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதுகப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடு படும்?

குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல் சூத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது.

ஆலைகளில் தயாரான வெள்ளைச் சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது...

இந்திய இலுமினாட்டி களின் மருத்துவ மாப்பியா...



2011ஆம் ஆண்டு இந்திய அரசு இந்த மருந்தினை தடை செய்தது. மீண்டும் உச்ச நீதி மன்றம் தடையை விளக்கியது...

தமிழக அரசின் ஊழல்...


போங்கடா நீங்களும் உங்க மானங்கெட்ட கார்பரெட் அரசியலும்...


வைக்கோல் பார்த்திருக்கியா ?

வயக்காடு பார்த்திருக்கியா ?

மாடு கன்னு,பார்த்திருக்கியா ?

மஞ்ச நாத்து பார்த்திருக்கியா ?

நாத்து நடவு பார்த்திருக்கியா ?

சின்ன குருவி பார்த்திருக்கியா ?

சேட்டை பண்ணும் தேனீ
பார்த்திருக்கியா ?

மரங்கள் பார்த்திருக்கியா ?

அதில் பழங்கள் பார்த்திருக்கியா ?

கோல மயில் பார்த்திருக்கியா ?

கொஞ்சும் கிளி பார்த்திருக்கியா ?

அழகு புறா பார்த்திருக்கியா ?

காடுகள் பார்த்திருக்கியா ?

காட்டு விலங்குகள் பார்த்திருக்கியா?

காய்கறிகள் பார்த்திருக்கியா?

கனி தின்னும் வெவ்வால் பார்த்திருக்கியா?

வயல் தோறும் இருக்கும் "நாரை" பார்த்திருக்கியா?

தாத்தா பாட்டி பார்த்திருக்கியா?

தாய், தந்தை அன்பை நாள் முழுதும் பெற்றிருக்கிறாயா?

சகோதர சகோதரிகள் பார்த்திருக்கிறாயா?

இல்லை இல்லை இல்லை...

மரங்கள் இல்லை..
பறவைகள் இல்லை..
விலங்குகள் இல்லை..
வயக்காடும் இல்லை..
உழவனும் இல்லை..
அக்கம் பக்கம் பிள்ளைகளும் இல்லை..

இருப்பதெல்லாம்..

அரசியலும், அதிகாரமும்..
லஞ்சமும், ஊழலும்..
பாக்கெட் தண்ணீரும், டாஸ்மாக்கும்..
அவசர உணவுகளும்..

பார்வைக்கு....
கணினியும், தொலைக்காட்சியும் மட்டுமே...

காய்களால் ஆரோக்கியம்...


உடல் ஆரோக்கியத்தை தேடி பயணிக்கும் இயந்திர உலகில், இயற்கை மருந்தாய் கிடைத்திருப்பது காய்களும், பழங்களும். இதில், தான் நம் உடலுக்கு தேவையான, அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளன.

காய்கறி நிறம், மணம், சுவையை உள்ளடக்கியது. காய்கறிகளில் இருந்து மாவுச்சத்து, புரதம், தாது உப்புகள், வைட்டமின்கள் மற்றும் தண்ணீர் ஆகியவை கிடைக்கிறது.

காய்கறிகளில் உள்ள சத்துக்கள் மற்றும் ஏற்படும் நன்மைகள்...

நார்ச்சத்து: காய்களில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை தூண்டி, மலச்சிக்கலை தவிர்க்கிறது. உணவுக் குழாயில் உணவு எளிதாக பயணிக்க உதவும்.

வைட்டமின் சத்து: பச்சை இலை காய்களில், கீரைகளில் தான் அதிகளவில் வைட்டமின் இருக்கிறது. முக்கியமாக கரோட்டின் இருக்கிறது. கரோட்டின் நம் உடம்பில் வைட்டமின் ஏ ஆக மாற்றப்படுகிறது. இது கண் பார்வையை சீராக்குகிறது. மாலைக்கண் நோயை தடுக்கிறது. கீரை வகைகளில் கரோட்டினுடன் ரைபோபிளேவின் மற்றும் வைட்டமின் சியும் அதிகளவில் உள்ளது.

தாது உப்புகள்: தண்டுகீரை, அகத்தி, வெந்தயக் கீரை மற்றும் முருங்கைக் கீரையில் கால்சியம் அதிகளவில் காணப்படுகிறது. கீரை வகைகளில் இரும்புச் சத்தும் நிறைந்து காணப்படுகிறது. தினமும் நம் உணவுடன், 50 கிராம் கீரையை சேர்த்துக் கொண்டால் நமக்கு ஒரு நாளைக்கு தேவையான இரும்புச்சத்து, கால்சியம், கரோட்டின், வைட்டமின் சி ஆகியவை கிடைத்துவிடும்.

இவ்வளவு சத்துக்கள் நிறைந்த காய்களை தினமும் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழும் போது, மனமும் எவ்வித பிரச்னையை தாங்கக்கூடிய தன்னம்பிக்கையை பெறுகிறது.

ஆகவே, ஆரோக்கியமே அனைத்திற்கும் முக்கிய காரணம் என்பதை உணர்ந்து, காய்கறிகளை உணவில் சேர்க்க முன்வர வேண்டும்...

ஏறுதழுவல் (ஜல்லிக்கட்டு) : எம் இன உரிமை...


காளைகள் இல்லாத தமிழ்ச் சமூகத்தைக் கற்பனையிலும் காண இயலாது. காளைகள், சிந்துவெளி நாகரிகத் தமிழரின் பெருமிதச் சின்னங்களாக இருந்தன. ஆரியர் குதிரைகளை ஓட்டி வந்தபோது, தமிழர் காளைகளை முன்னிறுத்தியே அவர்களை எதிர்கொண்டனர். பொதுவாகவே, மாடுகள் தொல் பழங்குடியினரின் செல்வங்களாக இருந்து வருபவைதான். மாடு என்ற சொல்லுக்குத் தமிழில் ‘செல்வம்’ என்றும் பொருள் உண்டு.

ஆரியத்தின் கால்நடை அறிவுக்கும் தமிழிய கால்நடை மரபுக்கும் நேர் எதிர் முரண்களே அதிகம். ஆரியர்களைப் பொதுவாக, கால்நடைச் சமூகத்தினர் என்று ஆய்வுலகம் மதிப்பிடுகிறது. ஆயினும் அவர்களை முழுமையான கால்நடைச் சமூகத்தினர் எனக் கூறுவது பொருந்தாது. ஆரியர் குதிரைகளைத் தம் செல்வமாக, பாசத்துக் குரியவையாகக் கருதினர் என்ற பதிவுகளைக் காட்டிலும் அவற்றைப் பலி கொடுக்கும் பொருளாக மாற்றினர் என்பதையே ரிக் வேதப் பாடல்கள்,காட்டுகின்றன.

ஆரியரின் பொருளியல் சிந்தனை, கால்நடைகளை வளர்த்து பொருள் ஈட்டுவதோ, வணிகம் செய்வதோ, வேளாண் தொழில் புரிவதோ அல்ல. மேற்கண்ட தொழில் செய்யும் சமூகங்களைச் சுரண்டியும் சூறையாடியும் பிழைத்திருப்பது என்பதுதான். ரிக் வேதம் ஒன்றே இக் கூற்றைத் தெளிவாக விளக்கும்.

குதிரைகளை ஆரியர் பலி கொடுப்பதைச் சிந்து வெளித் தமிழர் கடுமையாக எதிர்த்தனர். ஆரியரது யாகங்களைத் தமிழ்ப் படை சிதைத்தது. இது ஆரியருக்குக் கடும் ஆத்திரத்தை ஊட்டியது.

வேள்வி செய்யாதவர் களாகவும், தானம் கொடுக்கா தவர்களாகவும் தன்னை வணங் காதவர்களாகவும், தேவனற்றவர் களாகவும் உள்ள தாசர்களைக் கொல்லுகிறவன் எவனோ அவன் இந்திரன்!’ என்கிறது ரிக் வேதம். (ரிக் 2-12-10/ அரப்பாவில் தமிழர் நாகரிகம்/ குருவிக்கரம்பை வேலு / சிவசக்தி 2001/பக்19)

கால்நடைகளைத் தம் சமூக உறுப்பினராகக் கருதும் மரபு தமிழருடையது. ஆயம், என்ற சொல் கூடி வாழுதலைக் குறிக்கும். கால்நடைகளின் கூட்டத்தோடு கூடி வாழ்பவர் ஆயர் எனப்படுவர். இச் சொற் களில், மனிதர் கால்நடைகள் இரண்டும் இணைந்த பொருள் உள்ளதைக் கவனிக்கலாம். அதாவது, ஆடு மாடுகளும் மனிதர்களும் ‘ஒன்றாக’ வாழ்தலை இச்சொல் குறிக்கிறது. கால்நடைகளை மனித சமூகத்தின் அங்கங்களாக தமிழர்கள் அணுகியதன் வெளிப்பாட்டினையே ஆயர் எனும் சொல் காட்டி நிற்கிறது

மானுடவியல் படி மலர்ச்சியில், ஒவ்வொரு சமூக மும் தம் உற்பத்தி முறையை மேம்படுத்தும் விதமான வீர விளையாட்டுகளை வளர்த் தெடுத்து வருகின்றன. மலை நாட்டவருக்கு வேட்டையே முதன்மை உற்பத்தி. ஆகவே, குறிஞ்சி நிலத்தின் வீர விளை யாட்டுகள் கொடும் விலங்கு களை வெல்வதாக இருந்தன.

நெய்தல் மாந்தர், சுறா வேட்டை யை வீர விளையாட்டாகக் கொண்டிருந்தனர். முல்லை நிலத்தவர் பல்லாயிரம் மாடு களை மேய்க்க வேண்டி யிருந்ததால், ஏறு தழுவல் எனும் காளை அடக்குதலை வீர விளையாட்டாகக் கொண் டனர்.

வீர விளையாட்டுகள் என்பவை, வெறும் வெட்டிப் பொழுது போக்குகள் அல்ல. அவை, உற்பத்தி நடவடிக் கையின் கூறுகள். சங்க கால முல்லை நிலப் பெண்கள், ஏறு தழுவும் இளைஞனைத் தம் தலைவனாகத் தேர்ந்தெடுப்பதை மரபாகக் கொண்டிருந்தனர். உற்பத்தி நடவடிக்கையான மாடு மேய்த்தலை யாரால் சிறப்பாகச் செய்ய முடியும்? அடங்காத காளையை அடக்கும் இளைஞர் களால்தான் முடியும். அவ்வா றான சிறந்த உற்பத்தித் திறன் கொண்டவனை மணம் கொள்வது, இல் வாழ்க்கை சிறக்க அடிப்படை என்பதே இதன் கருத்து.

இன்றும் கால்நடைச் சமூகத்தவரால் ஏறு தழுவல் கடைப்பிடிக்கப்படுகிறது. உற்பத்தி நடவடிக்கை என்பதன் உண்மையான பொருள் புரிந்து கொள்ளப்படாமல், வெறும் விளையாட்டு என்ற அளவில் ஏறு தழுவல் பார்க்கப்படுகிறது.

இன்றும் பெரும் மந்தைகளைப் பராமரிக்க, வீரமும் உடல் வலுவும் தேவைதான். திமிர் கொண்டு பெருத்த காளைகளை அடக்க இயலாத எவராலும் அக்காளைகள் அடங்கிய மந்தைகளைப் பராமரிக்க இயலாது.

இது ஒருபுறம் இருக்கட்டும்.

இந்தியாவில் குதிரைப் பந்தயங்கள் அரசு அங்கீகாரத் துடன் நடத்தப்படுகின்றன. இதற்காக குதிரைகள் கோடிக் கணக்கான பணச் செலவில் பராமரிக்கப் படுகின்றன, இறக்குமதி செய்யப்படுகின்றன. இப் பந்தயங்களை நடத்துவோரும் இவற்றில் பங்கு பெறுவோரும், பணச் சூதாடிகள் மட்டுமே! இப் பந்தயங்களுக்காகக் குதிரைகள் மோசமான முறையில் துன்புறுத்தப்படுகின்றன. குதிரை ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி உறுப்புகள் இழக்கின்றனர், மரணம் அடைகின்றனர்.

கிரிக்கெட் ஆட்டக் காரர் கிர்மானி என்பவர் கண்களில் பந்து வேகமாக மோதியதால் பார்வை இழந்தார். கான்டி ராக்டர் என்ற ஆட்டக் காரரின் உச்சந்தலையில் பந்து மோதி, தலையின் மென்மை யான ஓடு உடைந்து போனது. உலோகத் தால் செய்யப்பட்ட செயற்கை ஓடு அவருக்குப் பொருத்தப் பட்டது. கவாஸ்கர் தலையில் பந்து மோதி, மிக மோசமான நிலையை அடைந்து, தீவிர சிகிச்சைக்குப் பின்னர் தப்பினார். ஆணுறுப்பின் மீது பந்து மோதி, விரைகள் வெளியே வந்து மரணம் நடந்த நிகழ்வுகள் கிரிக்கெட் வரலாற்றின் தவிர்க்க இயலாத பகுதிகள்.

இதற்காக, கிரிக்கெட் விளையாட்டைத் தடை செய்ய யாரும் கோரவில்லை. கை விரல்கள் முதல் மயிர் வரை அனைத்து உறுப்புகளுக்கும் பாதுகாப்புக் கவசம் அணிந்து கொண்டு ’வீரர்கள்’ அந்த விளையாட்டை ஆடுகின்றனர்.

கிரிக்கெட் எந்தச் சமூகத்தின் உற்பத்தி யைப் பாதுகாக்கிறது? குதிரைச் சூதாட்டம் எந்தச் சமூகத்தின் உற்பத்தி நடவடிக்கை? முதலாளிய நிறுவனங்களின் விளம்பரங்களுக்குப் பயன்படுகின்றன.

பெருமுதலாளிய ஊழலும் ஆரியச் சுரண்டல் கொள்கையும் இணைந்து இந்திய விளையாட்டுத் துறைகளைத் தம் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளன. இவற்றுக்கு ஏதுவான விளையாட்டுகளுக்கு சிவப்புக் கம்பளம், எதிரான விளையாட் டுகளுக்குச் சிவப்பு அட்டை. இதுவே இந்தியத் தேசியம்!

ஏறு தழுவலுக்கு நிபந்தனைகள் விதிப்பதன் பின்னணியில் ஒரு வரலாறு இருக்கிறது.

தமிழரின் மரபுசார் உற்பத்தி நடவடிக்கை களை ஆரியம் வெறுக்கிறது. அவற்றை அழிக்கத் துடிக்கிறது. ஆகவே, தமிழரின் கால்நடைச் செல்வங்கள் ஆரியப் பெரு முதலாளியத்துக்கு ஆகாதவை. பால் உற்பத்தி பெரு நிறுவனங்கள் சுரண்ட வேண்டுமானால், மாடு வளர்ப்போர் அழிய வேண்டும். இதைச் சாதிப்பதற்கு ஆரியப் பெருமுதலாளியம் பல ஆயுதங்களைக் கையில் எடுத்துள்ளது. அவற்றில் ஒன்றுதான், ஏறு தழுவலுக்கு எதிரான நெருக்கடிகள்.

மாடுகள் வளர்ப்பதே இழிவு என்ற கருத்து ஏற்கெனவே தமிழகத்தில் ‘முற்போக்கு’ முகமூடி யுடன் தூவப்பட்டு விட்டது. மாடு பிடிப்பது வெட்டி வேலை என்ற
’பகுத்தறிவு’ப் பரப்புரையும் வெற்றிகரமாக நடந்து வருகிறது.

ஏறு தழுவலின்போது ஏற்படும் உயிர் இழப்புகளைத் தடுக்கப் பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அவற்றைச் செய்யக் கூடாது என்று நாம் கூறவில்லை. இதைப் பற்றிய விரிவான ஆய்வுகளுக்கும் திட்டமிடல் களுக்கும் நாம் அணியமே. தமிழ் இளைஞரின் உயிர்களையும் உறுப்புகளையும் பாதுகாக்கும் பொறுப்பு ஆரிய திராவிட ’முற்போக்குவாதிகளை’ விட நமக்குக் கூடுதலாக உண்டு.

ஏறு தழுவலைப் பாதுகாப்பதற்காக வழக்கு நடத்திக் கொண்டிருக்கும் போராளிகளுக்கு இத்துறையில் நல்ல அறிவும் தேர்ச்சியும் உண்டு. அரசுக்கு உண்மையிலேயே ஏறு தழுவலைப் பாதுகாக்கும் அக்கறை இருந்தால், இவர் களோடு இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ளும். ஆனால், திராவிட அரசுகளும் ஆரியக் கொள்கை யாளர்களும் கூட்டுச் சேர்ந்துதானே தமிழரை ஆள்கின்றனர். ஆகவே அவர்கள் இவ்வகை நடவடிக்கைகளை முன்னெடுக்க மாட்டார்கள். போராட்டங்களின் வழி, ஏறு தழுவலைப் பாதுகாக்க வேண்டும்.

பொதுவாக கிராமங்களில் வகை வகையான மாடுகள் வளர்ப்பது, மாட்டு வேடிக்கையின் போது பெருமிதம் அடையத்தான். காங்கேயம், கண்ணாபுரம், பர்கூர், மணப்பாறை வகைக் காளைகள் கம்பீரமானவை, மிகுந்த ஆற்றல் உடையவை. இவை போன்ற நல் வகைக் காளைகளை வளர்த்து ஏறு தழுவலில் ஈடுபடுத்து வதில்தான் வளர்ப்பவரின் பெருமிதம் அடங்கியுள்ளது.

ஏறு தழுவலுக்கே தடை / நெருக்கடி எனும் நிலையில் இந்த வகைக் காளைகள் முற்றிலும் அழியும். இதே நிலை தொடர்ந்தால், சில ஆண்டுகளில், தமிழர் நாட்டு மாடுகள் மறைந்து போய்விடும் ஆபத்து உள்ளது.

இதைத்தான் ஆரியம் விரும்புகிறது. குதிரகளை வளர்த்து சூதாடினால் ஆரியம் மகிழும். மாடுகளை யாகத்துக்குப் பலியாக்கினால் ஆரியம் உற்சாகம் அடையும். ஆனால், வீரமும் நேர்மையான சமூக உற்பத்தியும் ஆரியத்தால் சகிக்க இயலாதவை.

தமிழரோ, வீரத்தில் விளைந்து வீரத்தில் வாழ்ந்து வந்த மரபினர். ஆரிய –திராவிடக் கூட்டுச் சதியினால் வீர உணர்வில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஏறு தழுவல் எம் இன உரிமை என முழ்ங்குவோம். தமிழர் மரபுப் பொருளாதாரத்தை, பண்பாட்டைக் காப்போம்.

காளைகள் தமிழரின் அடையாளங்கள், குதிரைகள் ஆரியச் சின்னங்கள். ஏறு தழுவலுக்கு எதிராக இப்போது நடப்பவை எல்லாம் 5 ஆயிரம் ஆண்டு இனப் போராட்டத்தின் தொடர்ச்சியே...

புலிக்கொடி சொல்லும் செய்தி...


1977 ஆம் ஆண்டு.. அப்போது தலைவர் பிரபாகரன் பல மாதங்களாக மதுரையில் தான் தங்கியிருந்தார்..

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்காக கொடி வடிவமைக்கும் பணி அப்போது நடந்தது..

பண்டார வன்னியனின் கொடியான ஒரு கேடயத்தின் குறுக்கான இரண்டு
வாட்கள் உள்ளபடி புலிகள் கொடி இருக்க வேண்டும் என்பது ஈழப் போராளிகளின் யோசனை..

துப்பாக்கியும் 33 தோட்டாக்களும் இருக்க வேண்டும் என்பது தலைவரின் விருப்பம்.
அதென்ன 33?

1977+33=2010

அதாவது 2010 ஆம் ஆண்டு ஈழப் போராட்டம் உச்சநிலை அடைந்து ஈழம் அமையும் என்பது தலைவரின் கணிப்பு..

மூவேந்தர் சின்னத்தை பொறிக்குமாறு தமிழக ஆதரவாளர்கள் யோசனை கூறினார்கள்.

பாண்டியரே ஆதி தமிழ் மன்னர்கள்.

பாண்டியர்கள் தாய்மண்ணை மட்டும் ஆண்டவர்கள்.

சிங்களவரோடு நட்பாக இருந்தவர்கள்.

எனவே மீன் சின்னத்தைச் சேர்க்க வேண்டும் என சில மதுரைக்காரர்கள் கூறினர்.

சிங்களவர்கள் சேரர்களையோ பாண்டியர்களையோ வெறுப்பதில்லை.

சோழர்கள் என்றால் தான் அலறுவார்கள்.

எனவே தான் 1976ல் தலைவர் 'தமிழ்ப் புதிய புலிகள்' என்றே இயக்கம் தொடங்கியிருந்தார்.

இதற்குக் காரணம் சோழர்களைப் பற்றி இராஜரத்தினம் என்ற தமிழகத்து தமிழ் தேசியவாதி 1972வாக்கில் தலைவரிடம் எடுத்துக் கூறியது தான்.

புலிக்கொடி வரையப்பட்ட காலம் 'தமிழீழ விடுதலைப் புலிகள்' என்று பெயர் மாற்றி ஓராண்டு ஆகியிருந்த காலம்.

சோழர்கள் கடல் கடந்து சென்று பல நாடுகளை பிடித்தவர்கள்.

எனவே அவர்களின் சின்னம் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடும் போராட்டத்திற்கு சரியாக வராது.

அதோடு ஈழத்து காடுகளில் புலியே கிடையாது.தமிழகக் காடுகளில் தான் உண்டு.

அதனால் நாம் புலியை சின்னமாக வைத்தால் தமிழகத்தையும் தனிநாடாக ஆக்க புலிகள் முயற்சி செய்யலாம் என்று இந்தியா சந்தேகிக்கலாம்.

இந்தியாவை நாம் பகைத்துக் கொள்வது நல்லதல்ல.

எனவே பண்டார வன்னியன் கொடியையே வைப்போம்.

புலி மட்டும் வேண்டாம் என்றார்கள் ஈழப் போராளிகள்.

கொடியை வரைந்து தர ஒரு ஓவியர் தேவைப்பட்டார்.

அப்போது சிவகாசியில் ஓவியராக இருந்தவர் நடராஜன்.

(பின்னாட்களில் மதுரை அரசாங்க மருத்துவமனையில் பார்மசிஸ்ட் ஆக இருந்தார்)

சொந்த ஊர் விருதுநகர் அருகே மல்லாங்கிணறு.

தமிழகத் தமிழர் மாறன் பேபியையும் பிரபாகரனையும் சிவகாசி அழைத்துச் சென்று நடராஜனை சந்தித்து ஈழ விடுதலைப் படைக்கு ஒரு கொடி வரைந்து தர வேண்டும் என்றனர்.

தமிழுணர்வாளரான நடராசன் உற்சாகமாக ஒத்துக்கொண்டு மற்ற வேலைகளை கிடப்பில் போட்டு விட்டு உடனடியாக பணியை ஆரம்பித்தார்.

தலைவர் சொல்லச் சொல்ல நடராசன் புலிக்கொடியை வரைந்தார்.

கொடி வரைந்து முடித்ததும் அதை புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

கொஞ்சம் படச்சுருளை (நெகட்டிவ்) நடராசன் வைத்துக் கொண்டார்.

புலிக்கொடியை தம் இருப்பிடத்திற்குக் கொண்டு சென்றார் தலைவர்.

ஈழப்போராளிகள் அதைப் பார்த்தனர்.

அதில் பண்டார வன்னியன்  கொடியின் வடிவமும் இருந்தது.

துப்பாக்கி தோட்டாக்களும் இருந்தன.

புலி நடுவில் எதிர்பார்த்ததை விட பெரியதாக இருந்தது.

ஈழப்போராளிகள் தலைவரை பார்த்தனர்.

தலைவர் புன்னகைத்தார்.

அந்த புன்னகைக்குள் அவர் வெளியே சொல்லாத ஒரு ஆழ்மன விருப்பம் ஒன்று புதைந்து இருந்தது...