இந்த மண்ணில் (பூமியில்) பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ உரிமை உண்டு. உரிமை பறிக்கப்படும் போது, நசுக்கப்படும் போது அதை எதிர்த்து கேட்பது நியாயம் தான்.
அப்படி பண்ணெடுங்காலமாக வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் யார் என்றும், நம் வரலாறு எப்படிப்பட்டது என்றும் தெரியாமல் வாழ்வதுதான் காரணம், இப்படி வரலாறு தெரியாமலேயே தமிழன் தலைமுறை அழிந்துவிடும் அல்லது அழிக்கப்பட்டுவிடும்.
பயத்திலேயே, நம்மிடம் தாழ்வு எண்ணம் குடிகொண்டுவிடும். இப்படியே நாம் மற்றவர்களின் கூலிகளாக, வேலைக்காரர்களாக மாற்றப்பட்டு விடுவோம்.
நம்மை திராவிடம் என்ற ஆட்டுமந்தைக்குள் அடைத்து ஒடுக்கி வைத்திருக்கிறார்கள். ஆட்டுமந்தையில் மாட்டிய சிங்கம் எப்படி தன் நிலை உணர்ந்து மீண்டதோ.. அதைபோல் நம்மை போர்த்தியுள்ள திராவிட முகமூடியை கிழித்தெறிந்து நாம் அனைவரும் தமிழன் என்ற அடையாளத்தை உண்ர்வோம். இது காலத்தின் கட்டாயம்.
தமிழ் அனைத்திற்கும் தாய் மொழி, கலப்பில்லாத தனி மொழி. மற்ற திராவிட மொழிகள் கலப்புடையவை, அவை திராவிட மொழியாக இருக்கட்டும்.
இப்படிப்பட்ட திராவிடர்கள் தன்னை திராவிடர்கள் என்றோ, திராவிடக் கட்சிகளையோ தங்கள் மாநிலத்தில் அனுமதிப்பதே இல்லை. எனவே திராவிடக் கொள்கை தமிழகத்தில் மட்டும் ஏன்?
இதை நாம் சிந்திக்க வேண்டும்...
தமிழ்நாட்டில் தமிழருக்கு நன்மை செய்யும் ஆட்சி நடக்கிறதா? இல்லை.
சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் என பல தலைமுறையாக முகம்மதியர்கள், ஆர்காடு நவாப்புகள், ஆங்கிலேயர்கள், தெலுங்கர், கன்னடர், மராத்தியார், கேரளர் என பலரும் ஆட்சி செய்தனர், இன்றும் செய்கின்றனர். இதை தொடர விடலாமா?
80 விழுக்காடு உள்ள மக்களில் ஆளுமைக்கு பஞ்சமா, அறிவுக்கு பஞ்சமா. நிலை போனால் நாம் நம் வரலாற்றை, நூல்களை இழந்தது போல, லட்டசக்கனக்கான மக்கள் இலங்கையில் கொன்று குவிக்கப்பட்டது போல இங்கும் தமிழினம் அழிக்கப்பட்டுவிடும் அல்லது நிச்சயமாய் முடக்கப்படும்.
தமிழன் என்ற நம்முடைய அடையாளத்தை மறந்துவிட்டால், நாளைய நம் தலைமுறை பதிவு செய்யப்பட்ட கணிப்பொறி போன்று இயங்கும். சிந்தனை அறிவில்லாத, மொழி அறிவு இல்லாத கணிப்பொறி பொம்மை போல்தான் இருப்பார்கள். வருங்காலத்தில் அரசியல்வாதிகள் நம்மை சுலபமாக விசை கொடுத்து இயக்குவார்கள்.
இதற்கு சில இலவசங்களை அள்ளி வீசுவார்கள். வலையில் சிக்கிய மீன் போல மாட்டி தவிக்க வேண்டியதுதான் நம் நிலமை.
தமிழர்களே!, ஏனென்று கேட்க நாதியில்லாத இளைய சமுதாயமாக தமிழினம் உருவாவதை விரும்புகிறீர்களா, சிந்தியுங்கள்..
நாமெல்லோரும் தமிழர்கள். இனி நமக்கு தேவையில்லை திராவிடன் என்ற முகமூடி..
நம்முடைய உண்மையான தமிழன் என்ற முகம்தான் இந்த உலகிற்கு நம்மை அடையாளம் காட்டும்.
எப்படி இலங்கை தமிழன், பூர்வீகத்தை இழந்து அகதி ஆனானோ அதேபோல், தமிழ்நாட்டிலேயே நீ ஏண்டா இன்னும் தமிழ் பேசுகிறாய் என்று இங்குள்ள தமிழனை இங்கு வந்த வந்தேறிகள் கேட்கவும் செய்வார்கள். வந்தேறி தமிழன் என்று தமிழனுக்கே முத்திரைகுத்தினாலும் கேட்க ஆளில்லை.
நம் அண்டை மாநிலத்தாரை சகோதரர்களாகவே பார்க்கிறோம். அவர்கள் நம்மை வெறுக்கிறார்கள். நமக்கு கிடைக்க வேண்டியதை தடுக்கிறார்கள். நம்மை ஒடுக்க முயலுகிறார்கள். நாம் மட்டும் திராவிடம் பேசி நம்மை சுற்றி உள்ளவர்களிடம் பாரம்பரிய சொத்துக்களையும் வரலாற்றையும் இழந்து தவிக்கிறோம்.
காரணம் நம்மை பிற இனத்தார் ஆண்டுவருதுதான், இவர்களால் நமக்கு எந்த நன்மையும் ஏற்றபடாது, நடந்த கொடுமைகளுக்கு தீர்வும் ஏற்படாது?
இன்றைக்கு ஆள்பவர்கள் நமக்காக நீலிக் கண்ணீர் வடிப்பார்கள் போலி உண்ணாவிரதம் அறிவிப்புகள் விடுவார்கள், ஆனால் எந்தவித உருப்படியான தீர்வும் இவர்களிடமிருந்து நமக்கு கிடைக்காது.
காரணம் இவர்கள் வந்தேறிகள். சுரண்டியது போதாது என்று இன்றும் நம் இரத்த்தை உறிஞ்சும் அட்டைகளே இவர்கள்.
இன்றைக்கு நடக்கும் சம்பவங்களே இதை நமக்கு உணர்த்துகிறது.
தமிழன் என்றால் அனைவருக்கும் தலைவணங்குவான் (இளிச்சவாயன்) என்ற முத்திரை வேறு.
இதற்கு நம்மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட திராவிடன் என்ற முகமூடியே இவர்களுக்கு சாதகம்.
இந்த முகமூடியை கிழித்து நாம் தமிழன் என்ற அடையாளத்தை காட்டுவோம்.
உண்மை முகம் இருக்க போலி எதற்கு...