இக்கருத்து இந்தியாவில் தேசிய இன ஒடுக்கு முறைகளே இல்லை என்று மறுக்கிறது.
ஒரு சமூகத்தில் செயல்படும் அனைத்து முரண்பாடுகளையும் கவனிக்காமல், தாம் வரித்துக் கொண்ட சில முரண்பாடுகளை மட்டும் பார்க்கும் அரைகுறைப் பார்வை இது.
இப்படிபட்ட அரைகுறைப் பார்வையை வர்க்கச் சுருக்கவாதம் ; ( Class reductionism ) என்று மார்க்சியம் சாடுகிறது.
மேலும் இது போன்ற பார்வை வறட்டுப் பொருளாதார வாதம் என்றும் விமர்சிக்கிறது.
பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், அசாம், நாகாலாந்து, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், மிசோரம் இங்கெல்லாம் நடந்த, நடக்கின்ற போராட்டங்கள் தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரானவையே.
இந்தி தேசிய இனம் இந்தியாவில் ஒடுக்கும் தேசிய இனமாக உள்ளது.
மார்வாடி, குசராத்தி சேட்டுகள் தங்கள் சுரண்டல் நலனுக்காக இந்தி தேசிய இனத்தோடு தங்களை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்கள்.
இந்தியப் பெருமுதலாளிகளும், பார்ப்பனிய சக்திகளும் தங்களை இந்தி தேசிய இனத்தோடு இணக்கப்படுத்திக் கொண்டுள்ளன...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.