02/11/2018

இளநீர் நல்ல மருந்து. சிறுநீரகத்தை சுத்திகரிக்கும்...


ஒரு டம்ளர் இளநீரில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு குடிக்க வேண்டும்.

உடல் வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சி அளிக்கும்.

இரத்தக் குழாயில் தேங்கி இருக்கும் அடைப்புகளை நீக்கும்.

இன்சுலின் சரியான அளவில் சுரக்க வைக்கும்.

வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும்.

விந்துவை அதிகரிக்கும்.

குடல் புழுக்களை அழிக்கிறது.

பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன.

ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

மாத விலக்கின் போது ஏற்படும் அடிவயிற்று வலிக்கும், சிறுநீரகக் கல் கோளாறுக்கும் இளநீரே நல்ல மருந்து. சிறுநீரகத்தை சுத்திகரிக்கும்...

விசிக திருமா விற்கு திமுக வை விட்டால் வேறு பிழைப்பில்லை...


உணர்வு நிலை மாற்றத்தின் அவசியம்...


ஆழ்மன சக்திகளை அடைவதும், அதைப் பயன்படுத்துவதும் சாதாரண மேற்போக்கான உணர்வு நிலையில் எந்த மனிதனுக்கும் சாத்தியமல்ல. ஏனென்றால் ஆழ்மன சக்திகள் உயர்ந்த, ஆழமான உணர்வு நிலைகளில் இருப்பவை. அந்த உணர்வு நிலைகளிலேயே சாத்தியமானவை. எனவே ஆழ்மன சக்திகளை அடைய விரும்புபவர்கள் அந்த உயர் உணர்வு நிலைகளை அறிந்து, அந்த உயர் உணர்வு நிலைகளுக்குச் செல்வது அவசியம். எனவே தான் யோகிகளும், சித்தர்களும் உணர்வு நிலை மாற்றமே (Shift in consciousness level) ஆழ்மன சக்திகள் என்னும் ரகசியக் கருவூலத்திற்குக் கதவு என்று சொல்கிறார்கள். அதைத் திறந்து உள்ளே சென்றால் மட்டுமே அந்த பிரம்மாண்டத்தை அறிவது கூட சாத்தியம் என்று அவர்கள் சொல்கிறார்கள்..

அரவிந்தர் போன்ற யோகிகள் அந்த உயர் உணர்வு நிலைகளை மிக நுண்ணிய அளவில் சில வகைகளாகப் பிரித்து பெயரிட்டு ஒவ்வொரு உணர்வு நிலையினையும் விவரித்து அதில் சாத்தியமாகக் கூடியவற்றை விவரித்து இருக்கின்றனர். நம் தற்போதைய நோக்கத்திற்கு அந்தப் பெயர்கள், நிலைகள், செயல்பாடுகள் ஆகிய விளக்கங்கள் மிகவும் அவசியம் இல்லை என்பதால் ஒட்டு மொத்தமாகவே உயர் உணர்வு நிலை என்றே என்றே குறிப்பிட நினைக்கிறேன். அந்த உயர் உணர்வு நிலைக்கு சென்றால் பின் அதுவே ஆழப்பட்டு அதற்கு மேம்பட்ட நுண்ணிய நிலைகளை அடைவது நிச்சயம் என்பதால் அதற்கு பெயர்களிட்டு வாசகர்களை அதிகம் குழப்ப நான் விரும்பவில்லை. ஆனால் விருப்பம் உள்ளவர்கள் அரவிந்தர் இந்த உணர்வு நிலைகள் (States of Consciousness) குறித்து எழுதியதை புத்தகங்கள் மூலமாகவோ, இணையத்திலோ படித்து அறிந்து கொள்ளலாம்.

மேற்போக்கான உணர்வு நிலையில் நாம் யார் என்பது கூட நம் பெயர், தோற்றம், தொழில், செல்வநிலை, நாம் மேற்கொண்டிருக்கும் சித்தாந்தங்கள், நம்மை பற்றி அடுத்தவர்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயங்கள் ஆகியவற்றைப் பொறுத்தே நாம் அறிகிறதாக இருக்கிறது. அவை எல்லாம் மாறும் போது அந்த ‘நாம்’ தானாக மாறி புதிய அவதாரம் எடுக்கிறது. இப்படி நாம் யார் என்பதும் ஆழமில்லாமல், மாறிக் கொண்டே இருப்பதாக இருக்கிறது. சில ‘நாம்’கள் நம்மை சந்தோஷப்பட வைக்கின்றன. சில ‘நாம்’கள் துக்கப்பட வைக்கின்றன. நாம் இதில் வாழ்நாள் முழுவதும் அலைக்கழிக்கப்படுகிறோம்.

மேலும் நம் தினசரி வாழ்க்கையில் சாதாரண உணர்வு நிலையில் வெளி உலகின் நிகழ்ச்சிகள் தரும் செய்திகளும், அது பற்றிய நம் எண்ணங்களுமே நம் மனதில் மேலோங்கி இருக்கின்றன. புதிய நிகழ்ச்சிகள் நடக்கும் வரை அவை நம்மிடம் தங்குகின்றன. புதிய நிகழ்வுகள் நடந்த பின் அவையே நம் மனதின் பிரதான இடத்தைப் பிடித்துக் கொள்கின்றன. பழையன காணாமல் போகின்றன. இதில் ஆழமாக என்று எதுவும் இல்லை. பெரும்பாலான நேரங்களில் செயல்படும் மனிதர்களாக இருப்பதை விட வெளியுலகச் செயல்களால் பாதிக்கப்படும் மனிதர்களாக அல்லது உந்தப்படும் மனிதர்களாக நாம் வாழ்கிறோம். பெரும்பாலாக எல்லோரும் அப்படியே வாழ்வதால் நமக்கு அது இயல்பாகவே தோன்றுகிறது.

இப்படி மேற்போக்கான உணர்வு நிலைகளில் தன்னையே அறியாத காரணத்தினால் தெளிவின்மையும், வெளியிலிருந்தே முக்கியமாக இயக்கப்படுவதால் தனித்துவம் இன்மையும் இருக்கின்றன. இதனாலேயே மேற்போக்கான சாதாரண உணர்வுநிலை பலவீனமானதாக கருதப்படுகிறது. ஆழ்மன சக்தியை அடையத் தடை செய்யும் பண்புகளான அவசரம், அவநம்பிக்கை, அமைதியின்மை மூன்றும் இந்த பலவீனமான மேற்போக்கான உணர்வுநிலையின் வெளிப்பாடுகளே.

எனவே தான் “உன்னையே நீ அறிவாய்” என்ற புராதன காலத்திலேயே கிரேக்கம், இந்தியா, எகிப்து போன்ற நாடுகளின் சான்றோர்களால் அதிமுக்கியமான அறிவுரையாக வழங்கப்பட்டது. ஆன்மீகத்திற்கும் சரி, ஆழ்மன சக்திக்கும் சரி இந்த வாக்கியம் ஆரம்பப் பாடமாக இருக்கிறது. (இது மட்டுமல்ல, இனியும் தொடர்ந்து நாம் கற்கவிருக்கும் சில பாடங்களும், பயிற்சிகளும், ஆன்மீகத்திற்கும் ஆழ்மன சக்திகளுக்கும் ஒரே போலத் தான் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட கட்டம் வரை இரண்டிற்குமான பாதை ஒன்றே. பின்பு தான் ஆழ்மன சக்திகள் அடைந்த கட்டத்தையும் தாண்டி ஆன்மீகத்தின் பாதை முன்னேறிச் செல்கிறது.)

தன்னை அறிய மனிதன் தன் உணர்வு நிலையின் ஆழத்திற்குச் செல்ல வேண்டி இருக்கின்றது. என்னை முதலில் கவனி என்று ஏகப்பட்ட விஷயங்கள் நம் கவனத்தைக் கவர முயற்சிக்கும் இந்த நவீனகாலத்தில், இருக்கின்ற 24 மணி நேரங்களே போதாமல் இருக்கின்றனவே என்று மனிதர்கள் புலம்பும் இந்தக் காலத்தில் தனியாக ஒரு சமயத்தை அதற்கென ஒதுக்குவது என்பது பெரும்பாலோருக்கு எளிதானதல்ல. ஆனால் உண்மையாகவே ஆழ்மன சக்திகள் பெறவும், தன்னை அறியவும் விரும்புபவர்கள் அதற்கென ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவதும், சோம்பலின்றி அதற்குத் தேவையான பயிற்சிகளைச் செய்வதும் மிக மிக அவசியமே.

முன்பே குறிப்பிட்டது போல மேற்போக்கான சாதாரண உணர்வுநிலை நம் பெயர், தோற்றம், தொழில், செல்வநிலை, நாம் மேற்கொண்டிருக்கும் சித்தாந்தங்கள், நம்மை பற்றி அடுத்தவர்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயங்கள் ஆகியவற்றைப் பொறுத்தே அமைந்திருப்பதால் உயர் உணர்வு நிலைகளுக்குச் செல்ல, உணர்வு நிலை மாற்றம் (Shift in consciousness level) ஏற்பட, நம்முடைய இந்த பொய்யான அடையாளங்களை நாம் கைவிட வேண்டியிருக்கிறது. நாம் ஒவ்வொன்றையும் உணர ஐம்புலன்களையே பயன்படுத்தும் அந்த இயல்பான பழக்கத்தையும் விட்டு விடுதல் அவசியமாக இருக்கிறது.

இந்த ஐம்புலன்களின் துணையில்லாமல் காண, கேட்க, அறிய, அறிவிக்க முடிவது என்பது இத்தனை தகவல்கள் படித்த பின்பும் சிலருக்கு சிரமமாக இருக்கலாம். மரண விளிம்பு அனுபவங்கள், உடலை விட்டு வெளியேறிச் செல்லும் சமாச்சாரங்கள் எல்லாம் கட்டுக்கதைகளாகச் சிலருக்கு இன்னமும் தோன்றலாம். அவர்களுக்கு முன்னமே சொல்லி இருக்க வேண்டிய, ஆனால் சொல்லாமல் விட்டுப் போன, தினசரி வாழ்க்கையில் நடக்கிற இன்னொரு எளிய உதாரணத்தைச் சொல்கிறேன்.

எல்லோரும் உறங்கும் போது கனவு காண்கிறோம். கனவில் பல இடங்களுக்குச் செல்கிறோம், பலரிடம் பேசுகிறோம், பலதையும் காண்கிறோம், பலதையும் கேட்கிறோம். இல்லையா? ஐம்புலன்களும் ஒடுங்கி இளைப்பாறிக் கொண்டிருக்கும் அந்த வேளையில் கனவில் நம்மால் துல்லியமாக பார்க்க, பேச, கேட்க, அறிய, உணர முடிகிறதே, அது எதனால்? சிந்தித்துப் பாருங்கள்.

இனி உயர் உணர்வு நிலைக்குச் செல்ல ராஜ யோகிகள் சொல்லும் பயிற்சிகளைப் பார்ப்போம்.

மேலும் ஆழமாகப் பயணிப்போம்....

வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாத சுவாமி திருகோயிலின் தல விருட்சம் கனமழையால் வேரோடு சாய்ந்த்து...


பழைய மைசூர் மாநிலத்தில் தமிழ்க் கல்வெட்டுகள்...


தமிழ் மொழியிலான கல்வெட்டுகள் அதிகமாக பழைய மைசூர் நாட்டின் எல்லை மாவட்டங்களான கோலார், பெங்களூரூ, மைசூரின் பகுதிகளில், வட-தென் பெண்ணையாறுகளின் படுக்கை பிரிவுகள் தொடங்கி தென்மேற்காக காணப்படுகின்றன.

Source:Tribes and castes of Mysore (Vol.1) by L K A Iyer...

தமிழன் போட்ட பிச்சையில் வாழுபவர்கள்... இன்று தமிழர்களுக்கு எதிராக...


பெலூசியும் போர் (Battle of Pelusium)...


எகிப்தியர்கள் பூனையை மிகவும் சக்தி வாய்ந்த விலங்காகவும் அது தங்களை பாது்காப்பதாகவும் எண்ணினர்.

எகிப்தில் பூனைகளுக்கு கோவில்களும் உண்டு அதை அவர்கள் கடவுளாக வணங்கினர்.

இதை புரிந்துகொண்ட பாரசீகர்கள் பெலூசியும் நகரத்தின் மீது போர் தொடுத்தபோது தங்களது கேடயத்தில் பூனைகளை கட்டிக்கொண்டு போரிட்டனர்.

பூனைகளை புனிதமாக எண்ணிய எகிப்தியர்கள் எதிர்தாக்குதல் செய்ய திண்டாடினர் இதனால் எகிப்தியர்கள் போரில் தோற்க்கடிககபட்டனர்.

இந்த போரில் பூனை ஒரு திருப்பு முனையாக அமைந்தது...

நீ சட்டம்போடு.... அதுக்கு முன்னாடி பல வருடக்கணக்கா சுற்றுச்சூழலை கடுமையாக மாசுபடுத்திக்கொண்டு இருக்கிற நிறுவனங்களுக்கும் சேத்து போடு...


எங்கள் மண் நாங்கள் கொண்டாடும் கொண்டாட்டங்களினால் அழிந்து போய் விடாது....

117 வகையான இயற்க்கை மருத்துவ ஆரோக்கிய குறிப்புகள்...


1) பொன்மேனி தரும் குப்பைமேனி - குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.

2) தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு - பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும்.

3) வயிற்றுவலி போக்கும் - நறுவலி
நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி போகும்.

4) காற்று சுத்திகரிப்பான் – சர்க்கரை
சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று உண்டாகி அறை சுத்தப்படும்.

5) தலைபாரம் நீக்கும் கிராம்பு -  கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம் நீரேற்றம் குணமாகும்.

6) காயத்துக்கு காட்டாமணக்கு - காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் காட்டாமைக்கு பாலைப் பூச குருதி நிற்கும். காயமும் ஆறும்.

7) உப்பலுக்கு உப்பிலாங்கொடி - மாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு உப்பிக் காணின், உப்பிலாங்கொடியை அரையில் கட்டத் தீரும்.

8) குழந்தையை காப்பான் - கரிப்பான்
கரிசாலைச் சாறு 2 துளியுடன், 8 துளி தேன் கலந்து கொடுக்க கைக்குழந்தைகளுக்கு உண்டாகும் நீர்க்கோவை நீங்கும்.

9) கடலையும் அடிதடியும் - கடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம், மூட்டுப் பிசகல் முதலியவைகளுக்குச் சூட்டோடு வைத்துக் கட்ட தீரும்.

10) மயக்கத்துக்கு ஏலம் - ஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் ½ பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம் நீங்கும்.

11) புளியிருக்க புண்ணேது - புளியிலை, வேப்பிலை இவ்விரண்டையும் சமஅளவு எடுத்து இடித்து எட்டுபங்கு நீர்விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர, ஆறாத புண்கள் ஆறும்.

12) பால்கட்டுக்கு பாசிப்பயிறு - பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றிட பால்கட்டு குறைந்து வீக்கமும் குறைந்து போகும். மார்பின் நெறிக்கட்டிகளும் குறையும்.

13) மயிர்கறுக்க மருதோன்றி - மருதோன்றி இலை, நிலவாரை இரண்டையும் சேர்த்து அரைத்துப் பூச மயிர் கறுக்கும்.

14) வாந்தி நீக்கும் நெல்லி - நெல்லியீர்க்கு, கருவேம்பீர்க்கு, வேப்பீர்க்கு மூன்றையும் சேர்த்து இடித்து, நீர்விட்டுக் காய்ச்சிக் கொடுக்க வாந்தி உடனே நிற்கும்.

15) படர்தாமரைக்கு - அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.

16) பல் ஈறு, வீக்கம், வலிக்கு - கிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு, வீக்கம் தீரும்.

17) மலச்சிக்கலுக்கு - பிஞ்சு கடுக்காய் – 100 கிராம், சுக்கு – 100 கிராம், எடுத்து தட்டி 1 குவளை நீரில் போட்டு காய்ச்சி இரவு படுக்க போகும்பொழுது குடித்து விட்டு படுக்கவும். நன்றாக மலம் இளகும்.

18) மூலம் அகல - ஆகாசத் தாமரை இலையை அரைத்து தொடர்ந்து தடவி வந்தால் மூலம் அகன்று விடும்.

19) முகப்பொலிவிற்கு - உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.

20) சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு - மிளகை தூள் செய்து சம அளவு பனைவெல்லம் கலந்து சுண்டைக்காய் அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

21) கல்லடைப்புக்கு – தாம்பூலம்
எருக்கம் பூவின் மொக்கு ஏழு எடுத்து சுண்ணாம்பு போடாமல் வெற்றிலை பாக்குடன் வைத்து உண்ணவும். இப்படி 2 அல்லது 3 வேளையில் கல் விழும்.

22) தாய்ப்பால் சுரக்க - கீரை கோவை இலையை நெய்யில் வதக்கி, வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கி, கால் வயிறு கீரை, காலையில் உண்டு விட்டு ஆகாரம் சாப்பிடவும். இவ்வாறு 3 நாள் செய்ய பால் சுரக்கும்.

23) அரையாப்பு தீர - எலுமிச்சம் வேர், சத்திசாரணைவேர் அரைத்து கெச்சக்காய் அளவு நல்லெண்ணையில் கலந்து சாப்பிடவும் 3 நாளில் தீரும்.

24) குழந்தைகள் பேதிக்குப் பிட்டு வகை - புளியாரை, வாழைப்பூ சமனெடை எடுத்து இடித்து பிட்டவியல் செய்து தேன் சேர்த்து பிசைந்து கொடுக்க பேதி நிற்கும்.

25) கர்ப்பிணிகளுக்கு குடிநீர் - கர்ப்பிணிகளுக்கு மலசலம் கட்டினால், ஒரு பலம் பழைய நெல்லிவற்றலை இடித்துக் குடிநீர் செய்து சமஅளவு பசும்பால் விட்டு சாப்பிட, மலசலம் வெளியேறும்.

26) பசி உண்டாக - புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

27) இருமலுக்கு தேனூறல் - 5 பலம் தேனை நன்றாய்க் காய்ச்சி சுடுகையில் மிளகுத்தூள் படிகாரம் (12 கிராம்) போட்டுக் குலுக்கி கொடுக்கவும்.

28) வெள்ளை தீர்க்கும் புங்கன் - புங்கன் கொழுந்தை நெகிழ அரைத்து நல்லெண்ணெய் கலந்து கொடுக்க வெள்ளை தீரும்.

29) அரையாப்புக்கு அரிசிக் களிம்பு - முருங்கை வேர்ப்பட்டையும், புழுங்கலரிசியும் உப்பும் சேர்த்து அரைத்து கட்ட கட்டி கரையும்.

30) துத்தி டீ - துத்தியிலை கஷாயம் வைத்து பால், சர்க்கரை கலந்து கொடுக்க மேகச்சூடு தணியும்.

31) வாய்ப்புண் தீர்க்கும் மருதாணி - மருதாணி இலையைப் பஞ்சுபோல் இடித்து அரைப்படி தண்ணீர் விட்டு காய்ச்சி வடித்து வாய் கொப்புளிக்கத் தீரும்.

32) நீர்த்துவார எரிவு தீர - வால்மிளகு 5 கிராம், நல்ல நீர்விட்டு அரைத்து தண்ணீரில் கலந்து 1 நாளைக்கு 4 முறை கொடுக்கவும்.

33) அஜீரண பேதிக்கு - மிளகை வறுத்துப் பொடி பண்ணி திரிகடி பிரமாணம் தேனில் கொள்ளத் தீரும்.

34) உடல் இளைத்தவருக்கு - பூசினிவித்தின் பருப்பை எடுத்து பொடித்துக் காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.

35) இரத்த கடுப்புக்கு - மாங்கொட்டை பருப்பை அரைத்து பாலில் கலக்கி உண்டு வர இரத்தகடுப்பு, சீதக்கடுப்பு இவை குணமாகும்.

36) வெளுத்த மயிர் கறுக்க - கரிய போளத்தை நெல்லிக்காயின் சாற்றால் அரைத்துப் பூசி வந்தால் மயிர்கள் கறுத்து வளரும்.

37) தொண்டை கம்மல் தீர - கற்பூர வள்ளிச் சாற்றில் கற்கண்டுத் தூள் ஒரு சிட்டிகை போட்டுச் சாப்பிட்டால் தொண்டைக்கம்மல் நிவர்த்தியாகும்.

38) வண்டுகடிக்கு - வெட்பாலை இலை, கொடி, வேர் முதலிய சமூலம் அரைத்த விழுது எலுமிச்சங்காயளவு எடுத்து ½ படி பசுவின் பாலில் கலந்து சாப்பிடவும். 3 நாள் காலையில் சாப்பிடக் கரப்பான், வண்டுக்கடி இவை நீங்கும்.

39) சூட்டுக்குத் தைலம் - அகத்திக்கீரை சாறும், நல்லெண்ணெயும் சமனாய்க் கூட்டி அடுப்பிலேற்றி வெந்தயத்தைப் பாலிலறைத்துப் போட்டுத் தைலபதமாக காய்ச்சி இறக்கி தலைமுழுகி வந்தால் சகல சூடுந்தணியும் தேகம் குளிர்ச்சியாகும்.

40) கிருமிகள் விழ - வேப்பீர்க்கு 10 வராகன், கடுக்காய் தோல் 4 வராகன், பிரண்டை சாற்றில் மைபோலரைத்து சுண்டைகாயளவெடுத்து விளக்கெண்ணெயில் மத்தித்து கொடுக்க கிருமிகள் வந்துவிடும்.

41) மூலம் தீர்க்கும் ஆவாரை - ஆவாரங் கொழுந்து, ஆவாரம்பட்டை, அறுகன் வேர் இவைகளை சமஅளவு எடுத்து உலர்த்தி சூரணம் செய்து 2 வேளை தேனில் (அ) நெய்யில் உண்டுவர உள்மூலம் தீரும்.

42) மூலத்திற்கு வேது - இளநீரில் வல்லாரை இலையை அவித்து, வரும் ஆவியை மூலத்தில் காட்டிப் பிறகு இலையை வைத்துக் கட்டிகொள்ள உடனே குணமாகும்.

43) ஈளை தீர்க்கும் இம்பூரல் - இம்பூரல் செடியும் வல்லாரைச் செடியும் சமஅளவு எடுத்து இடித்து குடிநீராக்கி உட்கொள்ள சுவாசகாசம், ஈளை இருமல் குணமாகும்.

44) கைநடுக்கம் தீர - தூதுவளையை மைபோல அரைத்து சுண்டைக்காய் அளவு காலை மாலை பசும்பாலில் 15 நாள் சாப்பிட தீரும்.

45) இருமல் தீர - இலவங்கப்பட்டை ஒன்றரை பலம், வால்மிளகு கால் பலம் பொடித்து 3 வேளையாக நெய்யில் தர இருமல் தீரும்.

46) காதில் சீழ் வருதல் தீர - இந்துப்பு, சுக்கு சமஎடை கூட்டிப் பொடித்து, வெண்ணெயில் போட்டு காய்ச்சி 4 முதல் 5 முறை விட சீழ் வடிதல் தீரும்.

47) தொண்டை புண்ணிற்கு - நவாச்சாரத்தை கோழிமுட்டை வெண்கருவில் அரைத்து தொண்டைக்குழியில் தடவ தீரும்.

48) தலைவலிக்கு - அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம் சூரணம் செய்து 1 கிராம் தேனில் உண்ண ஒற்றை தலைவலி தீராத தலைவலி தீரும்.

49) சீதபேதிக்கு - நாட்டுச் சர்க்கரையும், நெய்யும் கலந்து சாப்பிட தீரும்.

50) யானைக்கால் வீக்கம் வடிய - முருங்கைப் பட்டையுடன் சிறு அளவு கடுகு சேர்த்தரைத்து லேசாக பற்று போட யானைக்கால் வீக்கம் வடியும்.

51) விக்கல் தீர்க்கும் இந்துப்பு - இந்துப்பு சூரணத்தை நெய்யுடன் கலந்து உண்ண விக்கல் நிற்கும்.

52) புண்கள் ஆற - தாழம்பூவின் சுட்ட சாம்பலை புண்களின் மீது தூவி வர ஆறும்.

53) முடி உதிர்வதை தவிர்க்க - நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.

54) கட்டிகள் உடைய - சிவப்பு கீரைத்தண்டு இலையை அரைத்துக் கட்டிகள் மருவுகளுக்கு தடவி வந்தால் பழுத்து உடையும்.

55) அண்ட வாத கட்டு - பப்பாளி இலையை அறைத்து, இரவில் வீக்கத்தின் மீது கட்டி வர அண்டவாயு, அண்டவீக்கம், தீரும்.

56) கண் பூ குணமாக - சிவப்பு நாயுருவி இலையை கண்ணில் பிழிந்து வர கண் பூ மாறும்.

57) இரத்த மூத்திரத்திற்கு - மாதுளம்பூ, கசகசா, வேம்பு, இவைகளை சூரணித்து 3 தடவை 5 மிளகளவு பாலுடன் கொடுக்க இரத்த மூத்திரம் குணமாகும்.

58) இரத்த மூலம் குணமாக - வாழைப்பூ சாறுடன் சீரகத்தை கலந்து அரைத்து தினசரி காலையில் பருக வேண்டும்.

59) அசீரணம் குணமாக - கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.

60) வேர்க்குரு நீங்க - சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசலாம்.

61) தேக ஊறலுக்கு - கொட்டை கரந்தை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து சூரணம் செய்து வேளைக்கு 5 கிராம் வீதம் தேன் கலந்து உண்ண 5 நாளில் ஊறல் மிக குறையும்.

62) சூட்டிருமலுக்கு - சிறுதுத்தி விதையைப் பால்விட்டு ஊறவைத்து காலையில் எடுத்து அந்த கோழையுடன் சிறிது கற்கண்டுதூள் சேர்த்து 6 வேளை சாப்பிட இருமல் எளிதில் விலகும்.

63) நெருப்பு சுட்ட புண்ணிற்கு - வெந்தயத்தை நீர்விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச எரிச்சல் தணிந்து ஆறும்.

64) நீர்க்கடுப்பு எரிவு தீர - எலுமிச்சம் பழச்சாறும், நல்லெண்ணெய்யும் கலந்து சாப்பிட நீர்க்கடுப்பு, எரிவு தீரும்.

65) சகல விஷத்திற்கும் நசியம் - குப்பை மேனியிலை வெற்றிலை, நவச்சாரம் இவைகளை சிறுநீர் விட்டுத் தட்டித் துணியிற் கட்டி நாசியில் நசியமிட சகலவிஷமும் கலைந்து விடும்.

66) பெரியோர்களுக்கு மலக்கட்டு நீங்க சூரணம் - கருவேப்பிலை தூளும், வல்லாரையிலை தூளும் சமமாய் எடுத்து தேனில் குழைத்து இரவில் போசனம் செய்த பிறகு சாப்பிட்டு வரவும்.

67) பால் உண்டாக - ஆலம் விழுதும், ஆலம் விதையும் சமன் கொண்டு பாலில் காய்ச்சி உண்டால், பாலில்லாத பெண்களுக்கு பால் உண்டாகும்.

68) தோலில் ஊறல் - இவற்றிற்கு
ஏலரிசி பொடியை வல்லாரை இலைச்சாறு விட்டு அரைத்து காயவைத்து பின் கொட்டைக் கரந்தையை நிழலில் உலர்த்தி பொடித்து, இரண்டையும் சேர்த்து ஒன்றாக கலந்துவேளை 2 கிராம் வீதம் 3 வேளை உண்ண வேண்டும்.

69) உடல் வலுவுண்டாக - சிறியவர் முதல் பெரியவர் வரை அத்தி, ஆலம், அரசு, இதன் விதைகளை சம அளவில் எடுத்து பாலில் அரைத்து 5 கிராம் காலை மட்டும் உட்கொள்ள பிற நோயிலிருந்து பாதிக்கப்பட்ட உடலையும் உரமாக்குகிறது.

70) குடற்புண் தீர்க்கும் மணத்தக்காளி - மணத்தக்காளி கீரையைச் சமைத்தோ, மணத்தக்காளிப் பழத்தை வற்றல் செய்து உணவுடன் சேர்த்து தினந்தோறும் உண்டுவர வயிற்றுப்புண் குணமாகும்.

71) தேமல் மறைய - கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச சொறி, தேமல் குறையும்.

72) வாயு கலைய - வெள்ளைப் பூண்டின் மேல் தோலை அகற்றி பசும்பாலில் இட்டு காய்ச்சி அருந்த வாயு கலையும்.

73) பாலுண்ணி மறைய - சிவப்பு முள்ளங்கி இலையை உலர்த்தி சருகுபோலாக்கி அதனை எரித்து சாம்பலாக்கி, சாம்பலில் கொஞ்சம் எடுத்து ஆமணக்கு எண்ணெய்விட்டு குழப்பி ஒரு வெள்ளைத் துணி மீது தடவி பாலுண்ணி மீது சில தினங்கள் போட குணமாகும்.

74) தொண்டை நோய்க்கு - கடுகை குடிநீர் செய்து தேன்விட்டு உள்ளுக்கு கொடுக்க தொண்டை நோய் நீங்கும்.

75) பெளத்திரம் நீங்க - குப்பை மேனிச் சூரணமும், திப்பிலி சூரணமும் சமஅளவு கலந்து 1கி நெய்யில் உட்கொள்ள பெளத்திரம் நீங்கும்.

76) தீச்சுட்ட புண்களுக்கு - வேப்பங் கொழுந்தைச் சிதைத்து ஆமணக்கிலையில் பொதித்து உப காந்தலில் பொதித்து வெந்த பதத்தில் எடுத்து மேற்படி புண்மேல் வைத்துக்கட்ட தீச்சுட்டபுண் ஆறிவிடும்.

77) தேக பலமுண்டாக - நத்தை சூரி விதையை அரைத்து அல்லது சூரணித்து பாலில் உட்கொண்டு வந்தால் தேக பலமுண்டாகும்.

78) படைகளுக்கு - பொன்னாவாரை வேருடன் சந்தனத்தை சேர்த்து அரைத்து தடவி வந்தால் படைகள் உதிர்ந்து மறைந்து போகும்.

79) கண்ணோய் தீர - வெள்ளை (அ) சிவப்பு நந்தியாவட்டை பூவை பிழிந்து அந்த ரசத்தை 2 – 3 துளி கணக்காய் காலை மாலை கண்களுக்கு விட்டு வர கண்ணோய் தீரும்.

80) கற்றாழை நாற்றத்திற்கு - கோஷ்டத்தைப் பசுவின் பால் விட்டரைத்து பாலில் கலக்கி உட்கொண்டு வந்தால் கற்றாழை நாற்றம் நீங்கும்.

81) சேற்று புண்ணிற்கு - மருதோன்றி இலையை அரைத்து பூச குணமாகும்.

82) நகச்சுற்று குணமாக - வெற்றிலையுடன் கற்சுண்ணாம்பு சேர்த்தரைத்து சீழ்கோர்த்த நகச்சுற்றுக்கு பூசலாம்.

83) முகப்பரு குணமாக - சங்கை பன்னீரில் உரைத்து பூசலாம்.

84) புழுவெட்டு குணமாக - அரளிச் செடியின் பாலை புழுவெட்டுள்ள இடங்களில் தடவி வர மயிர் முளைக்கும்.

85) பொடுகு குணமாக - வெள்ளை மிளகு (அ) நல்ல மிளகை பாலில் அரைத்து தலைக்குத்தடவி குளித்து வந்தால் பொடுகு வராது.

86) தழும்பு மறைய - வேப்பம்பட்டைக் கியாழத்தைக் கலக்கி அதில் வரும் நுரையை தடவி வரலாம்.

87) முறித்த எலும்புகள் கூட - வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் கொடுத்துவர, முறிந்த எலும்புகள் சீக்கிரம் கூடும்.

88) பால் சுரக்க - பால் சுரக்கவும், பால் கட்டி உண்டாகும் முலை வீக்கத்தை கரைக்கவும் வெற்றிலையைத் தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்துக் கட்டலாம்.

89) தண்ணீர் தெளிய - தேற்றான் விதையை தண்ணீரில் உரைத்து கரைத்தால் தண்ணீர் தெளிந்து நிற்கும்.

90) கண் நீர் கோர்த்தல் தணிய - மஞ்சள் நீரில் ஒரு சிறிய வெண்சீலைத்துண்டை நனைத்து நிழலிலுலர்த்தி வைத்துக் கொண்டு கண்நோய் உள்ளவர்கள், இச்சீலையைக் கொண்டு கண்களை துடைத்துவரகண்சிவப்பு, கண்ணருகல், கண்வலி, கண்ணில் நீர்கோர்த்தில் இவை தணியும்.

91) புகையிலை நஞ்சுக்கு - வெங்காய கிழங்கு சாற்றை உட்கொள்ள புகையிலை நஞ்சு மாறும்.

92) குடிவெறியின் பற்று நீங்க - மிளகாய் செடியுடன் இலவங்கப்பட்டை, சருக்கரை சேர்த்து குடிநீரிட்டுக் கொடுக்க குடிவெறியின் பற்று நீங்கும்.

93) நீரிழிவு நீங்க - தொட்டாற்சுணுங்கி இலையையும், வேரையும் உலர்த்திப் பொடித்து பாலில் 4-8 கிராம் சேர்த்துக் கொடுக்க நீரிழிவு நீங்கும்.

94) பெரும்பாடு தணிய - அசோக பட்டையை இடித்துச் சாறுபிழிந்து கால் முதல் ஒரு உச்சிகரண்டியளவு கொடுத்துவர பெரும்பாடு தணியும்.

95) நரம்பு தளர்ச்சி நீங்க - அமுக்கராக் கிழங்குபொடி 1 பங்கும், கற்கண்டு 3 பங்கும் சேர்த்து, வேளைக்கு 4 கிராம் காலை மாலை உட்கொண்டு, அரை அல்லது ஓர் ஆழாக்குப் பசுவின் பால் சாப்பிட்டுவர,நரம்பு தளர்ச்சி நீங்கும்.

96) வீக்கத்திற்கு ஒற்றடம் - நொச்சி இலையை வதக்கி ஒற்றடமிட வீக்கம், கீல்வாயு தீரும்.

97) மூட்டுப் பூச்சிகள் அகல - ஆகாயத் தாமரை பூண்டை மூட்டுப் பூச்சிகள் நிரம்பிய இடங்களில் வைக்க, இது வாடுந்தறுவாயில் உண்டாகும் ஒருவித வெகுட்டல் மணத்தால் இப்பூச்சிகள் மயங்கி இறக்கும்.

98)நெஞ்சு சளி - தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

99)தலைவலி - ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

100)தொண்டை கரகரப்பு - சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

101)தொடர் விக்கல் - நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

102)வாய் நாற்றம் - சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

103)உதட்டு வெடிப்பு -கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

104)அஜீரணம் - ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

105)குடல்புண் - மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

106)வாயு தொல்லை - வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

107)வயிற்று வலி - வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

108)மலச்சிக்கல் - செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

109)சீதபேதி - மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

110)பித்த வெடிப்பு - கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

111)மூச்சுப்பிடிப்பு - சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

112)சரும நோய் - கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

113)தேமல் - வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

114)மூலம் - கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

115)தீப்புண் - வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

116)மூக்கடைப்பு - ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

117)வரட்டு இருமல் - எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா...


திராவிடமும் தமிழின அழிப்பும்...


1956 மொழிவழி மாநிலமாக சென்னை மாகாணத்தைப் பிரித்தார்கள். அப்போது தமிழர்கள் அதிகமாக வாழும் திருப்பதி தமிழ்நாட்டுடன் இணையவேண்டும் என்று சிலம்புச் செல்வர் ம.போ சி போராட்டங்கள் நடத்தினார் . திருப்பதியும்  தமிழ்நாட்டுடன் சேருவதாகத்தான்  இருந்தது.

அந்த நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழகம்  என்ற கட்சி உருவாகி எட்டு ஆண்டுகள்  தொட்டிருந்தது. திராவிடர் கழகம் நடத்திக் கொண்டு இருந்த கன்னட தெலுங்கன் இராமசாமி நாயக்கனுக்கு திருப்பதி தமிழ்நாட்டுடன் இணைவதில் ஆத்திரம்  இருந்தது. திருப்பதி ஆந்திராவுக்குத்தான் சேரவேண்டும் என்று அவன் திட்டமிட்டிருந்தான். 

அதே நேரம் தமிழ்நாடும் ஆந்திராவும்  திருப்பதியைப் பெற  மோதிக்கொண்டு இருந்த வேளையில்   தமிழகம் வெற்றி பெரும் நிலையில் இருந்தது. அப்போது சென்னையில் இருந்து ஆந்திர போராட்டக்காரர்களுக்கு ஒரு தாக்கீது போனது. அனுப்பினவன் தெலுங்கன் ராமசாமி நாயக்கன். அதில், திருப்பதிக்காக மட்டும் நீங்கள் போராடாதீர்கள். தோற்றுப்  போவீர்கள்.  திருப்பதியோடு சென்னையையும்  ஆந்திராவுடன் சேர்க்கக் கோரி  போராட்டங்கள் செய்யுங்கள். தமிழர்கள் மிரண்டுப் போவார்கள். சென்னையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் திருப்பதியை ஆந்திராவுக்கு கொடுக்க முன்வந்து விடுவார்கள்  அபப்டி ஒரு நெருக்கடி கொடுங்கள். நான் உங்களுக்கு உறுதுணையாக இங்கிருந்து வேலை செய்கிறேன், தமிழர்களின் போராட்டங்களை நீர்த்துப் போக செய்கிறேன்   என்று தாக்கீது அனுப்பினான்.

அநத்த் தாக்கீதைக் கண்டு உற்சாகம் அடைந்த ஆந்திரா போராட்டக்காரர்கள், ' சென்னையையும், ஆந்திராவோடு இணைக்கவேண்டும். என்று தங்கள் போராட்டத்தை விஸ்தரித்துக் கொண்டார்கள். 'மெட்ராஸ் மனதே'என்று பெயர் சூட்டி சென்னையையும் தங்களுடன் இணைக்கக்கோரி கலவரங்களை நடத்தினார்கள்.

சென்னை மாகாணம் மூன்று புறமும் துண்டாடப்பட்டது.  ராமசாமி நாயக்கன் பெங்களூருவை, கோலார் தங்கவயலை கர்நாடகாவுடன்  சேர்த்துக்கொள்ள கன்னடர்களைத் தூண்டி விட்டான்.  இடுக்கி மாவட்டத்தை,  பீர்மேட்டை, தேவிகுளத்தை, மூணாறை பெற்றுக்கொள்ள மலையாளிகளைத் தூண்டி விட்டான். இந்த நேரத்தில் தமிழ்நாட்டைக்  காக்க போராடி இருக்கவேண்டிய திராவிட முன்னேற்றக கழகத்தினரை அழைத்து,  தமிழருக்காய், மலையாளிக்காய் , கன்னடருக்காய் , தெலுங்கருக்காய்,  இல்லாத  'திராவிட நாடு ' கேட்டு போராடுமாறு தூண்டி விட்டான். அவர்களும் சிரத்தையாய் திராவிட நாடு கேட்டு போராட்டம் செய்தார்கள்  தமிழன் தாகத்துக்கு அலைந்துக்கொண்டு இருந்த வேளையில் கானல் நீரை காட்டி, அவனை மயக்கமுறச் செய்தார்கள்.   தேவடியாள்  மகன்கள். இவர்களின் புரட்டல் தமிழகம் தனது பெரும்பாலான பகுதிகளை திராவிட மலையாளிகளிடம், திராவிட கன்னடர்களிடம்   இழந்தது.

திருப்பதி போராட்டம் சென்னையையும் கேட்டு பெரும் கலவரமாய் வெடித்தது. மத்திய அரசில் இருந்த மலையாளிகளும், கன்னடர்களும், தெலுங்கர்களும் ஒன்று சேர்ந்துக் கொண்டார்கள். திராவிட முன்னேற்றக கழகமோ தீவிர தேவடியாத்தனம்  செய்து கொண்டு இருந்தது. மிரண்டு போன தமிழக போராட்டக்காரர்கள் கூடி, திருப்பதியைக் கேட்பதை விட சென்னையையாவது நாம் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று முடிவு செய்தார்கள். திருப்பதியை ஆந்திராவுக்கு விட்டுக்கொடுக்க இசைந்தார்கள்.

இப்படித்தான் திராவிடர்களின் துரோகத்தால் தான் தமிழகம் திருப்பதியை இழந்தது. இல்லையேல் திருப்பதி  நம்முடையதாக இருந்து  இருக்கும். தமிழர் தாயக நாளை திமுகவினர்  கொண்டாட மாட்டார்கள். ஏனெனில்  அவர்களின் துரோகம் தெரிந்து விடுமே...

மரம் வளர்ப்போம்...


அறிவைப் பெருக்கும் தோப்புக்கரணம்...


ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை.

ஆனால் இந்த தோப்புக்கரணம் அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr.Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன என்கிறார். அவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு அந்த உடற்பயிற்சியை சிபாரிசு செய்வதாகக் கூறுகிறார். பரிட்சைகளில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் ஒரு பள்ளி மாணவன் தோப்புக்கரண உடற்பயிற்சியைச் சில நாட்கள் தொடர்ந்து செய்த பின் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்ததாகக் கூறுகிறார்.

யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் அங் (Dr. Eugenius Ang) என்பவர் காதுகளைப் பிடித்துக் கொள்வது மிக முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுகின்றன என்று சொல்கிறார். அதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளிலும் சக்தி வாய்ந்த மாற்றங்கள் ஏற்படுவதாக அவர் தெரிவிக்கிறார். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் பலனடைகின்றன என்று சொல்கிறார்.

தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் மாற்றங்களை EEG கருவியால் டாக்டர் யூஜினியஸ் அங் அளந்து காண்பித்தார். மூளையில் நியூரான்கள் செயல்பாடுகள் அதிகரிப்பதை பரிசோதனையில் காண்பித்த அவர் மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைவதாகவும் சொன்னார். மிக நுண்ணிய தகவல் அனுப்பும் காரணிகள் வலுப்பெறுவதும் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டாக்டர் யூஜினியஸ் அங் தானும் தினமும் தோப்புக்கரணம் போடுவதாகக் குறிப்பிடுகிறார்.

Autism, Alzheimer போன்ற இக்காலத்தில் அதிகரித்து வரும் நோய்களுக்குக் கூட இந்த தோப்புக்கரண உடற்பயிற்சியை ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள். தோப்புக்கரணம் தினமும் செய்வதன் மூலம் மேற்கண்ட நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிக நல்ல பலன்களைப் பெறுவதாக அவர்களது பரிசோதனைகள் சொல்கின்றன.

ப்ராணிக் சிகிச்சை நிபுணர் கோ சோக் சூயி (Master Koa Chok Sui) தன்னுடைய Super Brain Yoga என்ற புத்தகத்தில் தோப்புக்கரணத்தைப் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய சொற்பொழிவுகளிலும் இதை அதிகம் குறிப்பிடுகிறார்.

இதனால் தான் தோப்புக்கரணம் பள்ளிகளில் நம் முன்னோர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. படிக்காத மாணவர்கள் தோப்புக்கரண முறையால் தண்டிக்கப்படுவதன் மூலம் அவர்களது அறிவுத் திறன் அதிகரிக்க வழியும் காண்பிக்கப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.

இந்த தோப்புக்கரணப்பயிற்சியை தினந்தோறும் மூன்று நிமிடங்கள் செய்தால் போதும் வியக்கத் தக்க அறிவு சார்ந்த மாற்றங்களைக் காணலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அவர்கள் பரிந்துரைக்கும் தோப்புக்கரண பயிற்சியை அவர்கள் சொல்கின்ற முறையிலேயே காண்போமா?

உங்கள் கால்களை உங்கள் தோள்களின் அகலத்திற்கு அகட்டி வைத்து நின்று கொள்ளுங்கள். உங்கள் பாதங்கள் நேராக இருக்கட்டும். வலது காதை இடது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். அதே போல் இடது காதை வலது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். பிடித்துக் கொள்ளும் போது இடது கை உட்புறமாகவும், வலது கை வெளிப்புறமாகவும் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

மூச்சை நன்றாக வெளியே விட்டபடி அப்படியே உட்கார்ந்து மூச்சை உள்ளே நன்றாக இழுத்தபடி எழுந்து நில்லுங்கள். மூச்சும், உட்கார்ந்து எழுவதும் ஒரு தாளலயத்துடன் இருக்கட்டும்.

செய்து பழக்கமில்லாதவர்களுக்கு ஆரம்பத்திலேயே மூன்று நிமிடங்கள் தொடர்ந்து தோப்புக்கரணம் செய்வது கடினமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் ஒரு நிமிடம் செய்வதில் இருந்து ஆரம்பித்து நாட்கள் செல்லச் செல்ல இரண்டு நிமிடங்கள், பிறகு மூன்று நிமிடங்கள் என்று அதிகரியுங்கள்.

ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் மிக நல்ல பலன்களைப் பார்க்கும் போது உங்கள் அறிவுத் திறனின் வளர்ச்சிக்காக மூன்று நிமிடங்கள் தினமும் செலவழிப்பது மிகப்பெரிய விஷயமல்ல அல்லவா?

ரீபப்ளிக் ஆஃப் தமிழ்நாடு...


தமிழர் தாயகம் பிறந்தநாள் நவம்பர் 1...


1956ல் மொழிவாரி மாநில எல்லைகள் மறுசீரமைப்பின் போது, தெற்கே பெருந்தமிழர் மார்சல் நேமணியும்..

வடக்கே தமிழரசுகழக நிறுவனர் பெருந்தமிழர் ம.பொ.சிவஞானம் ஆகிய இருவரின் பெரும் போராட்டங்களின்  விளைவாக..

தெற்கே  குமரி மாவட்டமும், வடக்கே தமிழகத்தின் தலைநகர் சென்னை தொடங்கி, திருத்தணி, சோழிங்கூர், ஆர்.கே.பேட்டை, பொதட்டூர்பேட்டை, பள்ளிப்ட்டு வரையிலான நமது  நிலப்பரப்பு  தமிழகத்துடன் துண்டிக்கப்படுவது  முறியடிக்கப்பட்டது.

இந்த நிலப்பரப்புகள் தமிழகத்தின் பகுதியாக தொடர்வதின் பெருமை  ஐயாக்கள் மார்சல் நேசமணி் மற்றும் மபொசி  இருவரையுமே சாரும்.

அன்று திராவிட நிறுவன தலைவர் பெரியார்,  எல்லை மறுசீரமைப்புக் குழுவின் உறுப்பினறும், முள்ளைப் பெரியார் பகுதியின்  நிலக்கிழார் பணிக்கர் என்பவரின் முகவராக, ஆதரவாளராக, தரகராக, சகல கீழறுப்பு வேலகளையும்  கமுக்கமாக செய்து முடித்து, முல்லைப்பெரியார், தேவிகுளம், பீர்மேடு பகுதிகள்  கேரளத்துடன் இணைக்க துணையாய் இருந்தார்.

அவ்வாறே ''அடைந்தால் திராவிடநாடு இல்லையேல் சுடுகாடென" கூவித்திரிந்த காகிதப்புலி திமுக., ஹிந்திய வல்லாதிக்கத்தின் ஏவலர் காங்கிரஸ் கட்சியும், திராவிட நிறுவன பெரியாரும், அன்றைய பிரஜா சோசலிஸ்ட் என்ற துரோகிகளும்  "தமிழக நிலப்பரப்பை" மறுசீரமைப்பு என்ற பெயரில்  பறித்த நடுவண் அரசை எதிர்த்து ஒரு கண்டன அறிக்கை, மாநில மத்திய அரசுகளுக்கு எதிரான எந்தப் போராட்டத்தையும்  நடத்த வில்லை என்பதே உண்மை.

இன்று வேண்டுமென்றால் கருணாநிதி, தானும் காமராஜரும் "தமிழருக்கென மொழிவாரி மாநிலம்" அமைய பெரும்பாடு பட்டதாக தமிழர்தேசிய கருத்தியல் வளர்ச்சிகண்டு வெற்றுக் கூச்சலிடுவார்.

எல்லை மறுசீரமைப்பின் போது தமிழகம் அடர்ந்தவனப்பகுதி, நதிநீர் உற்பத்திப் பகுதி, சமநிலப் பகுதி, மலைப் பகுதியென, இன்றைய நிலப்பரப்பின் மூன்றில் ஒருபகுதியாக 65, 000 சதுர கிலோமீட்டர் பரப்பளவினை "திராவிட வீணர்களின் கயமையாலும், ஹிந்திய அரசின் துரோகத்தாலும்" இழந்திருக்கின்றோம், ஆனாலும், துரோகம் இன்றும் தமிழினத்தின் நிழலாக தொடர்கிறது.

தமிழர்களது கையில் ஆட்சியதிகாரம்  கிட்டினால் துரோகத்தை  துடைத்தெறிய முடியும்  என்பதை  நினைவில் நிறுத்தி,  இருக்கும் நமது நிலபகுதியை காத்துக் கொடுத்த இருபெரும் தமிழர்களுக்கும் புகழ் வணக்கம் செலுத்தி மகிழ்வோம்...

வையகம் உள்ளவரை  அவர்களது புகழ் வாழ்க...

உன் படிநிலையை மறக்க எப்போதும் ஏதாவது ஒரு மாயையில் மூழ்கி உன் வாழ்வியலை இழக்கிறாய் என்பது மட்டும் நிச்சயம்...


அது என்ன கூப்பிடு தூரம்?


இன்று தான் தெரிந்தது.. கூப்பிடு தூரம்.. அது எவ்வளவு தூரம் என்பதைப் பார்ப்போம்.

வீரசோழிய உரையில், ‘முழ நான்கு கோல்; அக்கோலைஞ்ஞூறு கூப்பீடு’

என்று சொல்லப்பட்டிருக்கிறது.

முழநான்கு கொண்ட கோல் = 6 அடி நீளமுள்ள கோல்.

இந்தக் கோலால் 500 = 500 X 6 = 3000 அடிகள்.

கிட்டத்தட்ட முக்கால் மைலுக்குச் சற்றுக்குறைவான தூரம்.

இன்னொன்று ‘யோசனை’ எனப்படும்.

இதன் அளவுகள் ஒன்றுடன் ஒன்று மிகவும் வித்தியாசப்படும்.

பொதுவாக இது நான்கு காதம் கொண்டது.

அப்படியானால்...

12000 நீட்டளவு (Yard) X 4 = 48000 நீட்டளவுகள் கொண்டது. கிட்டத்தட்ட 30 மைல் என்று கொள்ளலாம்.

ராமாயணத்தில் எல்லாமே யோசனைக் கணக்கில்தான் இருக்கும்.

நூறு யோசனை நீளம், நூறு யோசனை உயரம், நூறு யோசனை அகலம் என்று இப்படி. நாட்டுக்கு நாடு பல அளவைகள் இருந்திருக்கின்றன.

பொதுவான வழக்கில் இருந்ததைச் சொல்கிறேன்.

இந்த வாய்ப்பாடுகளையெல்லாம் எங்காவது சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் கொள்ளுப்பேரப்பிள்ளைகளிடம் நீங்கள் கதை சொல்லும் போது, “இப்படியெல்லாம் அளந்து விட்டிருக்கிறாங்கப்பா, நம்ப ஆளுங்க”, என்று அளந்துவிடலாம்.

8 நெல் = 1 விரக்கடை (0.75 inches)

12 விரக்கடை = 1 சாண் (9 inches)

2 சாண் = 1 முழம் (18 inches)

2 முழம் = 1 கஜம் (3 feet = 36 inches)

4 முழம் = 1 பாகம் ( 6 feet)

6000 பாகம் = 1 காதம்(12000 கஜம்)

1 காதம் என்பது கிட்டத்தட்ட 7 மைல்.

கீலோமீட்டராக்க 7 X 8 / 5 செய்து கொள்ளுங்கள்.

இதனை ‘ஏழரை நாழிகை வழி’ என்றும் சொல்வார்கள்.

ஏழரை நாழிகை என்பது 3 மணி நேரம்.

ஒரு சராசரி மனிதன் 3 மணி நேரத்தில் பொடிநடையால் கடக்கும் தூரமாக இதைக் கருதினார்கள்.

சரிதானே? மூன்று மணி நேரத்தில் 7 மைல். ஒரு மணிக்கு ஒன்றே முக்கால் மைல்.

மனிதனே மூன்று மணி நேரத்தில் காத தூரம் போகிறான்.

ஆனால் ஒரு குறிப்பிட்ட குதிரை அப்படியல்ல.

காளமேகப்புலவர் சொல்கிறார் கேளுங்கள்:

முன்னே கடிவாளம் மூன்றுபேர் தொட்டிழுக்க

பின்னே இருந்திரண்டு பேர்தள்ள – எந்நேரம்

வேதம்போம் வாயான் விகடராமன் குதிரை

மாதம்போம் காத வழி.

விகடராமன் என்பவனுடைய குதிரை ஒரு காதம் செல்வதற்கு

ஒரு மாதம் பிடிக்குமாம். அதுவும் முன்னாலிருந்துகொண்டு மூன்று பேர் கடிவாளத்தைப் பற்றியிழுக்க, பின்னாலிருந்துகொண்டு இரண்டு பேர் தள்ளினால்தான் அந்த வேகமும்கூட.

சிவகங்கைப் பக்கத்தில் ராசசிங்கமங்கலக் கண்மாய் என்றொரு பேரேரி இருக்கிறது.

ராசசிம்ம பாண்டியன் காலத்தில் கிபி 800 வாக்கில் வெட்டப்பட்டது.

அதற்கு நாற்பத்தெட்டுக் கலிங்குகள் இருந்தனவாம்.

ஒரு காதத்துக்கு ஒரு கலிங்கு வீதம் கட்டியிருக்கிறார்கள்.

அதையொொட்டி ஒரு பெயர் அந்தக் கண்மாய்க்கு ஏற்பட்டிருக்கிறது.

‘நாரை பறக்காத நாற்பத்தெட்டுக் காதவழி’.

நாரைகள் ஆர்க்டிக் பிரதேசத்திலிருந்து நவம்பர் டிசம்பர் மாதத்தில் தெற்கு நோக்கி பறந்துவரும்.

ஆங்கில V எழுத்து அமைப்பில் அவை கூட்டங்கூட்டமாகப் பறந்துவந்து தமிழக நீர்நிலைகளில் நிலை கொள்ளும்.

நாரை அடாது விடாது நீண்ட தூரம் பறக்கக்கூடியது. அப்பேர்ப்பட்ட நாரையும்கூட ராசசிங்கமங்கலத்துக் கண்மாயின் நாற்பத்தெட்டுக் கலிங்குகளையும் ஒரே வீச்சில் பறந்து கடக்கமாட்டாதாம்...

பாஜக மோடிக்கு பாஜக காரனே ஆப்பு வைக்கிறான்...


3 குழந்தைகள் பெற்றால் இலவச நிலம்.. தம்பதிகளுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்…


இத்தாலி நாட்டில் நாளுக்கு நாள் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே செல்கிறது. கடந்த ஆண்டு வெறும் 4 லட்சத்து 66 ஆயிரம் குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளனர். 

அங்குள்ளவர்கள் திருமண பந்தத்தில் சிக்காமல் சேர்ந்து வாழ்வதையே பெரிதும் விரும்பகின்றனர். 

அவர்கள் குழந்தை பெற்று கொள்வதை விரும்புவதில்லை. மேலும் 2 குழந்தைக்கு மேல் பெற்று கொள்வதில்லை.  இதனால் வயதானவர்கள்தான் அதிக அளவில் உள்ளனர்.

இதனால் இத்தாலியில் குழந்தை பிறப்பை அதிகரிக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி 3 குழந்தைகளுக்கு மேல் பெற்று கொண்டால் அவர்களுக்கு இலவசமாக விவசாய நிலம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இத்தாலியில் அரசுக்கு சொந்தமாக 12 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இதனை கருத்தில் கொண்டே இந்த திட்டத்தை இத்தாலி அரசு அறிவித்துள்ளது...

டூபாக்கூர் நியூஸ் 7 தொலைக்காட்சி இதைப் பற்றி பேசாது...


நாம் உண்ணும் உணவு சரியானது தானா ? - கண்டுபிடிக்க ஒரு எளிய வழி...


அதாவது எந்த உணவானாலும் உணவு உண்ணும் போதோ உண்ட பின்னோ உடனே தண்ணீர் தேவைப்பட்டால் அப்போது உண்ட உணவு உண்பதற்கு ஏற்ற நல்ல உணவு அல்ல என்றும்..

உடனே தண்ணீர் தேவைப்படவில்லை என்றால் அது உண்பதற்கு ஏற்ற நல்ல உணவு என்றும் அறிந்து கொள்ளலாம்..

ஒருவருக்குத் தண்ணீர்த் தாகம் எடுக்கிறது என்றால் அவர் உழைப்பின் காரணமாகவோ அல்லது வெய்யிலின் காரணமாகவோ அல்லது எதிர்பாராத செய்தியைக் கேட்டு நாக்கும் தொண்டையும் வரண்டு போனதாலோ அல்லது அதிகம் தொண்டை வரண்டுபோகுமளவு சப்தமாகப் பேசியதாலோ தான் இருக்கவேண்டும்..

விளையாடும் போதும் ஓடும் போதும் வேகமாக நடக்கும் போதுகூட தண்ணீர்த் தாகம் எடுக்கலாம்..

காரணம் அந்த நேரங்களில் நமது உடம்பில் உள்ள நீர்மட்டும் அதிகம் செலவாகிறது.

அப்படியல்லாமல் உண்ணும் உணவால் ஒருவருக்குத் தாகம் எடுக்கிறது என்றால் அந்த உணவை நமது உடம்பு சாதாரணமாக ஏற்றுக்கொள்வில்லை என்பது பொருள்.

அதன் காரணமாக தண்ணீரைக் குடித்து சரிசெய்து மேலும் அதே உணவை வயிற்றில் செலுத்துகிறோம்.

உடம்புக்குத் தண்ணீர் தேவை இல்லாத போதும் உண்ட உணவு தண்ணீர் கேட்கிறது.

அத்தகைய உணவு எதாகிலும் குறையவோ கூடவோ உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியதே..

அடுப்பில் வைத்து எண்ணையின்றி வேகவைத்து சமைக்கப்படும் உணவுகள் குறைந்த தாகத்தையே உண்டு பண்ணும். அதாவது தாளிப்பின்றி குறைந்த உப்பு காரம் சேர்க்கப்படும் உணவுகள்..

எண்ணை கொண்டு தாளிக்கும் மற்றும் உப்பு காரம் நிறையச் சேர்க்கப்படும் உணவுகள் கூடுதல் தாகத்தை உண்டு பண்ணும்..

ஆனால் நெருப்பில் நேரடியாகவோ அல்லது காய்ச்சிய எண்ணையில் போட்டோ சுட்டெடுக்கப்படும் உணவு வகைகள் உடனே அதிகமான அளவு தண்ணீர் கேட்கும்..

காரணம் ஒவ்வொன்றும் அவற்றைச் சமைக்கும் முறைக்கேற்ப அதிகமான தண்ணீர் குடித்தால் தான் நமது செரிமான உறுப்புக்களால் செயல்பட முடிகிறது.

இந்த இருவகைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் தண்ணீர்த் தாகத்தை அதிகப்படுத்தும் உணவுகள் எல்லாம் குறைந்த அளவிலிருந்து அதிகமான அளவு வரை நோய்களுக்குக் காரணமாக இருப்பதும் அப்படித் தாகத்தை உண்டுபண்ணாத உணவுகள் எல்லாம் நோய்களை உருவாக்குவது இல்லை என்பதோடு அநேக நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுவது உறுதிப்படும்.

அதற்குக் காரணம் இயற்கை உணவுகள் அனைத்தும் எளிதில் செரிக்கப்படுவதோடு அவற்றின் கழிவுப்பொருட்களும் எளிதில் வெளியேற்றப்படுகின்றன.

அதேசமயம் சமைக்கப்படும் விதத்துக்கேற்ப சமையல் உணவுகள் எளிதில் செரிக்கப்படாமல் சிரமப்படுத்துவதோடு அவற்றின் கழிவுப்பொருட்களும் எளிதில் வெளியேறாமல் உடம்பிலேயே தங்கிப் பின் பல்வேறு நோய்கள் உருவாகக் காரணங்களாக மாறுகின்றன.

இயற்கை உணவுகள் தண்ணீரைச் சார்ந்து இருப்பது இல்லை

பச்சையாக உண்ணக்கூடிய காய்கறிகள், கனிவகைகள், முளைக்கட்டிய தானியங்கள், பழச்சாறுகள், மூலிகைச் சாறுகள், இளநீர் போன்ற இயற்கை உணவுகள் தாகத்தை அதிகமாகத் தூண்டுவது இல்லை.

இனியாவது இவற்றை அதிகம் எடுத்துக்கொள்வோம். ஆரோக்கிய வாழ்வு வாழ்வோம்...

கெப்ளரின் வரலாறு...



புனித மக்காவில் நடந்த திடீர் யுத்தம்...


உலக வரலாற்றில் எல்லாம் ஏற்கனவே வாழ்ந்த ஒரு வரலாற்று நாயகனையோ அல்லது அரசனையோ அல்லது விஞ்ஞானியையோ பற்றி பேசி இருக்கும்.

ஏன் ஏனைய மதத்தில் கூட அந்த அறிஞர் இப்படி நல்ல மனிதராக போராளியாக வாழ்ந்தார் என்று கூறும்

ஆனால் ஒரு மதத்தில்  பிற்காலத்தில் வரப்போகின்ற மனிதரை பற்றி சிலாகித்து கூறியுள்ளது.

அந்த மதம் இஸ்லாம்

அவருடைய பெயர்

மஹதி.

இவரைபற்றிய முன்னறிவிப்பு முகமது நபி கூறியுள்ளார்

உலகத்தில் விபச்சாரம் பெருகி கொலை கொள்ளை பெருகும் காலகட்டத்தில் பூகம்பம் ஏற்பட்டு உலகமே கூச்சல் குழப்பம் ஏற்படும் காலத்தில் ஒரு போராளியாக மஹதி என்பவர் தோன்றுவார்  அப்படி அவர் வரும்போது உங்களது ஆட்சியை ஒப்படையுங்கள் என்று கூறியுள்ளார்.

இது விஷயமல்ல

இதற்காக இதுவரை நான் தான் மஹதி என்று வரலாற்றில் 

40 க்கும் மேற்பட்ட பொய்யர்கள் வந்துள்ளனர்...

போன நூற்றாண்டு வரைக்கும் இந்த பொய் மஹதிகள் வந்தவண்ணம்  உள்ளனர். . .

கடைசியாக 1979 ம் வருடம் புனித மக்காவில் ஒருவர் வந்து நான் தான் உண்மையான மஹதி என்னிடம் நீங்கள் ஆட்சியை ஒப்படையுங்கள் என்று ஆயுதம் எடுத்து போராடினார் சவூதிக்கு எதிராக.

முழு வருடமும் ஒரு நாட்கள் கூட அடைத்து வைக்கப்படாத மக்காவில் உள்ள புனித காபா கிட்டத்தட்ட ஒரு வார காலம் போர்களமாக காட்சியளித்தது.

மிகவும் கஷ்டப்பட்டு சவுதி அரேபியா அரசு இந்த பொய் மஹதியின் சிரிய படையை வீழ்த்தி சமாளித்தது..

கூடுதல் தகவல் :

இன்றும் சில நாடுகள் எங்கள் பகுதியில் இருந்து தான் அந்த மஹதி வருவார் என அதற்கான ஏற்பாடுகளை செய்தும் வைத்துள்ளது...

நாசா வும்... நானும்...


வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


ஊர்வன இன ( Reptilians ) வேற்று கிரகவாசிகளின் முக்கிய ஊடுருவலானது. உலகம் முழுமைக்கும், உலகெங்கிலும் உள்ள நாடுகளின் தங்களுக்கான அடிமை ஆளுமைகளை படைத்திருக்கின்றனர். மேலும் அவர் அழிந்த Dinosaurs தொன்மாக்கள் மூலமாக சாம்பல் இனத்தவர்களின் ஒரு பிரிவினரை மாற்றி அமைத்திருக்கின்றன என்றும், இப்போது மனிதர்களுக்கு இதே போன்று செய்ய திட்டமிட்டுள்ளன, என்றும் கூறப்படுகிறது.

இந்த கோட்பாட்டில் உள்ள விசுவாசிகள் 3 வது, 4 வது மற்றும் 5 வது பரிமாணங்களில் வாழ்கின்றனர், அவர்கள் மனித துயரங்கள் மற்றும் பயம் ஆக்கிரமிப்பால் வழங்கப்படும் எதிர்மறை ஆற்றலை
உண்பதுடன். நமது உலகில் மோதல் ஏற்படுவதற்கு முயற்சி செய்கிறார்கள்.

பண்டைய மனித குலத்தில் குறுக்கிட்டு, ஒரு சக்திவாய்ந்த "உயரடுக்கின்" வர்க்கத்தை உருவாக்கி, அனைத்து அரசாங்கங்கள், தொழில்கள், வங்கி, மற்றும் அரச குடும்பங்களை என அனைத்தையும் இயக்கி வருகிறார்.

இந்த ஊர்வன இன ( Reptilians ) வேற்றுகிரகவாசிகளால்  வெளிப்படையாக தங்கள் உண்மையான அடையாளத்தை மறைக்க வடிவத்தை மாற்றிக்கொள்ள முடியும். உலகளாவிய மோதலை ஏற்படுத்துவதன் மூலம் கிரகத்தை எடுத்துக்கொள்வதே அவர்களின் முக்கிய நோக்கம்.

அவர்களின்( Reptilians ) தீய நோக்கங்களைக் கொண்டு ஊழல் நிறைந்த மனிதர்கள், பூமிக்குரிய களஞ்சியங்களைக் கண்டறிந்து ஆழமான நிலத்தடி குகையில் இருப்பதாக கூறப்படுகிறது.

டிராகோ ஊர்வன இன
( Draconians Reptilians ) வேற்று கிரகவாசிகளின் தீய செயற்பட்டியலை இவ்வுலகத்திற்கு எடுத்துச் செல்லுமாறு அவர்கள் வேலை செய்கிறார்கள்.

இவர்கள் ஆதிகாலம் முதல் இன்றுவரை தங்கள் தலைமையின் நோக்கத்தை நிறைவேற்ற தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்...