19/03/2018

கண் முன்னே மறைந்து போகும் சித்தர்...


இறந்தவர் உடலில் இருந்து வெளியேறும் ஆவி...


பற்களை பாதுகாக்க சுலபமாக கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து ஒரு தரமான பற்பொடியை எப்படி நம் வீட்டிலேயே தயாரிப்பது என்று பார்போம்...


கடுக்காய் பொடி 100 கிராம்
கிராம்பு 50 கிராம்
இந்துப்பு 25 கிராம்

இந்த கலைவையை அளவில் கூற வேண்டுமானால்..

ஒரு பங்கு கடுக்காய்
அரை பங்கு கிராம்பு மற்றும் கால் பங்கு இந்துப்பு.

மேற் சொன்ன பொருட்களில் கிராம்பு மற்றும் உப்பை நன்றாக மிக்ஸியில் அரைத்துக்கொண்டு அதில் கடுக்காய் பவுடரையும் கலந்து கொள்ளவும்.

இப்பொழுது உங்களுக்கான தரமான பற்பொடி தயாராகி விட்டது.

பல் சொத்தை உள்ளவர்கள் இதை பற்பொடியாக தினந்தோறும் பயன்படுத்தினால் பல் சொத்தை இருப்பதையே மறந்து விடுவார்கள்.

இதை அனுபவத்தில் பலரிடம் கண்ட உண்மை.

தயவு செய்து பல்லை பிடுங்காதீர்கள்.

குறிப்பு : இந்த பற்பொடி துவர்ப்பு சுவையாக இருக்கும். அப்படி துவர்ப்பு சுவை பிடிக்கவில்லை என்றால் 25கி அல்லது 50கி அதிமதுரம் சேர்த்து கொள்ளுங்கள்...

மட்டைப்பந்தில் இருந்து தமிழ்நாடு தப்ப வழியே இல்லை...


ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்றவர்கள் தமிழகத்து பார்ப்பன சாதியைச் சேர்ந்தவர்கள்...

ஐம்பது ஆண்டு கால திராவிட ஆட்சியில் பார்ப்பான் அல்லாத வீரர்களை உருவாக்கத் துப்பில்லாத ஆட்சியாளர்கள் தான்...

நாளை திராவிட நாட்டை வாங்கித்தரப் போறாங்களாம்..

தமிழா உன் கோவணம் பத்தரம்...

மரணத்தை தள்ளி போடும் நெல்லிக்காய்...


அனைவருக்குமே நெல்லிக்கனியை பற்றி நன்கு தெரியும். நெல்லிக்கனியில் வைட்டமின் சி அதிக அளவில் நிறைந்துள்ளது.

இந்த நெல்லிக்கனியில் அதிகமான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால், இதனை ஆயுர்வேத மருந்துகளில் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.

1. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நெல்லிக்கனியை சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.

2. உடலில் இருக்கும் கொழுப்பின் அளவைக் குறைக்கும்.

3. இது ஒரு இயற்கையான ஆன்டி-ஏஜிங் பொருள். ஆகவே இதனை உட்கொண்டால் சருமத்திற்கு மிகவும் சிறந்தது. மேலும் ஸ்காப்பிற்கு போதுமான அளவு ஈரப்பசை தருவதோடு, கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.

4. செரிமான மண்டலத்தை சரியாக இயங்கச் செய்து, மலச்சிக்கலை சரிசெய்யும்.

5. உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கும்.

6. கல்லீரலின் செயல்பாட்டை முறையாக நடத்துகிறது.

7. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எந்த நோயும் உடலை தாக்காமல் பாதுகாக்கும்.

8. நெல்லிக்கனி உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்...

பாஜக பினாமி அதிமுகவின் திருட்டு அரசியல்...


சயாம் மரண ரயில் - மறக்கப்பட்ட தமிழர்களின் ஒர் வரலாறு...


எத்தனைப் பேருக்கு தெரிந்திருக்கும் இந்த தமிழர்களை ? இவர்களுக்காக ஏன் ஒரு நினைவுக்குறிப்பு கூட இல்லை ? ஏன் இவர்களின் வரலாறு மறக்கப்பட்டது ? இவர்களைப் பற்றி எழுத ஏன் இவ்வளவு காலம் ஒருவருக்கு கூட மனம் வரவில்லை ? முன்னுரை மற்றும் ஆசிரியரின் உரையைப் படிக்கும் போதே தோன்றிய கேள்விகள் தான் இவை.

இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஜப்பான், அப்போதைய நிலைமை யை சாதகமாக்கி தன் எல்லைகளை விரிவாக்கும் முயற்சியில் இறங்கியது. மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, மற்றும் பர்மாவும் அதன் பிடியில் விழுந்தது. அப்போது தான் நேதாஜி காங்கிரஸை விட்டு விலகி இங்கிலாந்துக்கு எதிரான நாடுகளின் உதவியை நாடினார். அவரது இந்திய தேசிய இராணுவம் சிங்கப்பூரில் இருந்து இயங்கிக் கொண்டிருந்தது. அதில் பணியாற்றிவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்று கூறப்படுகிறது, அப்போது ஜப்பானுடன் உறவு வைத்துக் கொண்டார் நேதாஜி. இந்தக் காரணத்தை முன்னிட்டு இந்தியாவைக் கைப்பற்றும் திட்டத்தில் இறங்கியது ஜப்பான்.

இந்தியாவை கைப்பற்ற பெரும் எண்ணிக்கையிலான படைகள் தேவை. அவற்றை ஜப்பானிலிருந்து கடல் வழியாக கப்பல் மூலமாக கொண்டு வருவது சிரமம் என்பதால் தரைவழி பாதையை தேர்ந்தெடுத்து, சயாம் (தாய்லாந்து) முதல் பர்மா வரை ஒரு ரயில் பாதை ஒன்றை இட முடிவு செய்தது. அதன் ஐந்தாவது படை அணி மேற்பார்வையிட, 16 மாதங்களுக்குள் அந்த இரயில் பாதையை நிர்மாணித்து முடிக்க வேண்டுமென கட்டளையிட்டது.

அதற்கு ஏராளமான ஆள்பலம் தேவைப்பட்டது. தொழில் நுட்ப வேலைகளுக்கு, தங்களிடம் போர்க்கைதிகளாய் இருந்த ஆங்கிலேய மற்றும் ஆஸ்திரேலிய படைவீரர்களை பயன்படுத்திக் கொண்டனர். சுரங்கம் வெட்டுதல், மண் அள்ளுதல் போன்ற வேலைகளுக்கு அடிமட்டத் தொழிலாளிகள் நிறைய பேர் தேவைப்பட்டனர். இதற்காக பெருமளவில் ஆசியதொழிலாளர்கள் கொண்டு செல்லப்பட்டனர். சயாமியர், மலாய் இனத்தவர்கள் தவிர, ஒரு இலட்சத்திற்கும் மேலான தமிழர்களும் அவர்களிடம் சிக்கினர் என மதிப்பிடப்படுகிறது. ரப்பர் தோட்டத்தில் வேலை செய்த, தனியார் நிறுவனங்களில் பணி புரிந்த, தோட்டங்களையும் வயல்களையும் கவனித்துக் கொண்டிருந்த, ஏன் சாலைகளில் சென்று கொண்டிருந்தவர்களைக்கூட விடவில்லை ஜப்பானின் கங்காணியர்கள். ஏமாற்றி, வலியுறுத்தி என எப்படி பணியவைக்க வேண்டுமோ அப்படி.

போரினால் கடும் பஞ்சம் வேறு. உணவுக்காக தவித்த, உயிருக்கு பயந்த, குடும்பத்தைக் காப்பாற்ற, தன் பிள்ளைகளை அழைத்துச்செல்லாமல் தடுக்க என ஒவ்வொருவருக்கும் அடிபணிந்து போக ஒவ்வொரு காரணம். ஒரு இலட்சம் தமிழர்களில் போர் முடிந்தவுடன் திரும்பியவர்கள் பத்தாயிரத்தை கூட தாண்ட மாட்டார்கள் என குத்துமதிப்பான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் பணியாற்றிய ஆஸ்திரேலிய படைவீரர்கள் சிலர் தங்கள் அனுபவங்களை நூல்களாகக் கொண்டு வந்துள்ளனர். ஆங்கிலேயர்களோ “The Bridge on the River Kwai" என்ற திரைப்படத்தின் மூலம் தங்கள் அனுபவத்தை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே உலகத்திற்கு சொல்லி விட்டனர். அவர்களின் வலிகள் ஆவணப்படுத்தப் பட்டுவிட்டன. நம் பாடு தான் திண்டாட்டம். வெகு சில நூல்களே அதைப் பதிவு செய்திருந்தன.

எப்போதோ நடந்த நிகழ்வுகளைப் பதிவு செய்ய எண்ணி 1993’ஆம் ஆண்டு சண்முகம் எழுதியது தான் ”சயாம் மரண ரயில் - சொல்லப்படாத மெளன மொழிகளின் கண்ணீர்”. இதை தமிழோசை பதிப்பகம் 2007 ஆம் ஆண்டு மறுவெளியீடு செய்திருக்கிறது. இந்த புத்தகத்தைப் படித்துவிட்டு தான் இதைப் பதிவு செய்ய வேண்டுமென ஒர் உந்துதல் ஏற்பட்டது. உண்மையைச் சொன்னால் இதற்கு முன், இதில் குறிபிடப்பட்டுள்ள ஒரு விவரமும் நான் கேள்விப்பட்டதுகூட கிடையாது.

ஜப்பானிடம் சிக்கிய இந்த தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை, யூதர்களுக்கு நாஜி இழைத்த கொடுமைகளுக்கு இணையானது என இந்நூலின் பதிப்புரையில் சொல்லப்பட்டிருக்கிறது, படிக்க படிக்க அது எவ்வளவு உண்மை என உணரமுடிகிறது. அந்த களத்தில் பஞ்சத்தினால் தன் குடும்பத்திற்கு பாரமாக இருக்க விரும்பாமலும், தன் தந்தையை கண்டுபிடித்துவிடலாம் எனற நோக்கத்திலும் தானே சென்று இணையும் மாயா என்ற ஒரு இளைஞன் சுற்றியே கதையை சுழல விட்டு, தான் சொல்ல வந்த உண்மைகளை கதையெங்கும் தெளித்திருக்கிறார் ஆசிரியர், அதனூடே ஒரு மெல்லிய காதல் கதையையும் சேர்த்து ஒரு சுவாரஸ்யம் சேர்க்க முனைந்திருக்கிறார் ( நமக்கு தான் எல்லாவற்றிலும் தேவைப்படுமே)..

மரவள்ளிகிழங்கும், கருவாடும், சூப்பும் ஆகியவையே பெரும்பாலும் அவர்களின் உணவு. உடம்பு முடியாவிட்டாலோ, விஷப்பூச்சிகளோ பாம்போ கடித்துவிட்டாலோ, அவர்களுக்காக யாரும் நிற்பதில்லை. ஆங்காங்கே விழுந்து அப்படியே இறக்க வேண்டியது தான், முகாம்களில் சீக்கானால், மருத்துவமனை அழைத்து செல்கிறோம் என்ற பெயரில், ஒதுக்குபுறமான ஒரு கொட்டகையில் போய் விட்டுவிடுவார்கள். கும்பல் கும்பலாய் வயிற்றுபோக்கும் காய்ச்சலுமாய் இறப்பை நோக்கி செல்ல வேண்டியது தான். அழுகி நாறி இருந்தாலும், தங்களுக்கு வசதிப்பட்ட என்றாவது ஒரு நாளில் மொத்தமாய் குப்பை அள்ளுவது போல தள்ளுவண்டியில் ஏற்றி வந்து ஒரே பெரிய குழியாய் வெட்டி மொத்தமாய் போட்டு புதைத்துவிடுவார்களாம். எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தால் அந்த கொட்டகையோடு கொளுத்திவிடவும் செய்வார்கள் போல. குற்றுயிரும்
குலையுயிருமாய் கிடப்பவர்களுக்கும் மொத்தமாய் மோட்சம். மறுபடியும் ஒர் கொட்டகை முளைக்கும். இதில் எல்லாம் தவறி பிழைத்தவர்கள் அவ்வப்போது போர்விமானங்கள் போட்ட குண்டுகளில் மடிந்தார்கள். எந்தப் பக்கம் திரும்பினாலும் அவர்களுக்கு மரணம் காத்திருந்தது.

ஆங்காங்கே ஒவ்வொரு பாத்திரத்தின் உணர்வுகள், குடும்பத்தை பற்றிய கவலைகள், தாங்களும் உயிரோடு அங்கிருந்து பிழைப்போமா என கேள்விகள்,, மாயாவின் காதல் கதை, அவனுடன், உடன் பிறந்தவனைபோல உறவாடும் வேலுவின் நட்பு, முடிவை ஒட்டி அவன் மரணம் என உணர்வுப்பூர்வமாய் பயணிக்கிறது கதை. இரண்டு பெரிய குன்றுகளை வெட்டி சாய்த்து, இரும்புப் பாதை அமைக்க உதவிய நம் மக்கள், ஆற்றுப் பாலத்திற்கும் மலைக்கும் நடுவில், தூண்கள் கட்ட முடியாமல், ராட்சத சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட தொங்கும் பாலத்திலும் தண்டவாளத்தில் உயிரைப் பிடித்துக் கொண்டு பயணிப்பதைப் படிக்கும் போது, லேசாய் பயம் பற்றிக் கொள்கிறது. அங்கேயும் சந்தடி சாக்கில் சின்ன சின்ன பலசரக்குகளை வாங்கி முகாம்களின் உள்ளேயே வியாபாரம் பண்ணிய நமது மக்களின் திறமையை நினைத்து பெருமைப்படுவதா வேதனைப்படுவதா எனப் புரியவில்லை.

இத்தனை வேதனைகளிலிருந்தும் மீண்டு வீடு திரும்பியவர்களில் சிலர், தங்கள் குடும்பம் சிதைந்ததைக் கண்டு, மறுபடியும் சயாமுக்கே சென்றிருக்கின்றனர் என்பதும் மிகுந்த வேதனைக்குரியது. சான்றுகளுக்கும் மேல்விவரங்களுக்கும் கூகிள் செய்ததில், சமீபமாக இன்னொரு புத்தகமும், அதன் வரலாறை அப்படியே சொல்ல வந்திருப்பது தெரிய வந்தது. அதற்கான தகவல்களும் சுட்டிகளும் முடிவில்.

இந்த பதிவின் மூலமாக உலகத்தமிழர்கள் அத்தனை பேரின் சார்பாகவும், இந்த களத்தில் உயிர்துறந்த அப்பாவித் தமிழர்களுக்கும் பிற நாட்டவர்க்கும் அஞ்சலி செலுத்த விரும்புகிறேன்.

மேலும் புலம் பெயர்ந்து தங்கள் முகம் தொலைத்து முகவரி இழந்து தவிக்கும் அத்தனை தமிழருக்கும் இப்பதிவினை அர்ப்பணிக்கிறேன்...

தமிழன் யார்..?


தமிழரின் உணவுமுறை தானியங்களை பெரும்பாலும் நம்பியிருந்தது...


கூழ் காய்ச்சி உண்பதே நமது வழக்கம்.

நெல்லுச்சோறு ஒரு பண்டிகை உணவாக எப்போதாவது உண்ணும் வழக்கம் தான் 50 ஆண்டுகள் முன்புவரை இருந்தது.

நெல் நமது முக்கிய உணவு இல்லை.

நித்தம் நித்தம் நெல்லுச்சோறு என்ற பாடல் நினைவு வரலாம்.

இது தினம் தினம் பண்டிகை என்று மகிழ்வாகப் பாடுவதாகும்.

ஆகவே, நமது பழைய தானிய உணவுமுறை மீட்கப்பட வேண்டும்.

தண்ணீர் குறைவாக எடுக்கும் உணவு வகையைப் பின்பற்ற வேண்டும்...

பாஜக மோடி ஆட்சியில் கடந்த 2016-ம் ஆண்டில் நாடுமுழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள்...



இதில் 229 வழக்குகளில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது...

பாஜக மோடியால் பாலைவனமாகும் தமிழகத்தின் 36 விவசாய கிராமங்கள் - இது ஆரம்பம் தான்...


இப்பட்டியலில் உங்கள் ஊர் இருக்கிறதா பாருங்கள்.

அப்படி இருந்தால் குடும்பத்தோடு ஊரை காலி செய்ய தயாராகுங்கள் தமிழர்களே...

எல்லா அழிக்கப்பட்டு நீரின்றி நோய்வாய்ப்பட்டு கேவலமாக சாவதை விட இப்பொழுதே குடும்பத்துடன் வெளியேறி விடுங்கள்.

தன் உரிமைக்காக போராடாத ஒரு இனம் அழிந்து போகட்டும்.

தமிழகத்தில்  ஹைட்டரோ கார்பன் மற்றும் மீத்தேன் எடுக்க அடிமை மாநில அரசால் தாரைவார்க்கப்பட்டு பாலைவனமாக்கப்பட போகும் இடங்கள்.

1). கருவேப்பிலைக்குறிச்சிக்கும் விருத்தாச்சலத்திற்கும் இடையில் உள்ள - கண்ணூர்.

2). புவனகிரிக்கும் கீரப்பாளையத்திற்கும் இடையில் உள்ள - கிளியனுர்.

3). புவனகிரிக்கும் விருத்தாச்சலத்திற்கும் இடையில் உள்ள - எரம்பூர்.

4). புவனகிரிக்கும் விருத்தாச்சலத்திற்கும் இடையில் உள்ள, மனவெளி அருகிலுள்ள - பூதராயன்பேட்டை.

5). புவனகிரியில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஊர் பேரு தெரியாத இடம்..

6). சிதம்பரத்திற்கும் காட்டுமன்னார் கோவிலுக்கும் இடையிலுள்ள தாவரத்தாம்பட்டு அருகிலுள்ள - மெய்யத்தூர்.

7). சிதம்பரத்திற்கும் காட்டுமன்னார் கோவிலுக்கும் இடையிலுள்ள டி.நெடுஞ்சேரி அருகிலுள்ள - நெய்வாசல்.

8). சிதம்பரத்திற்கும் காட்டுமன்னார் கோவிலுக்கும் இடையிலுள்ள டி.நெடுஞ்சேரி அருகிலுள்ள - பூர்த்தங்குடி.

9). கருவேப்பிலைக்குறிச்சிக்கும் விருத்தாச்சலத்திற்கும் இடையில் உள்ள - வடக்குபாளையம்.

10). கருவேப்பிலைக்குறிச்சிக்கும் விருத்தாச்சலத்திற்கும் இடையில் உள்ள - பாளையம்கோட்டை.

11). ஆண்டிமடம் காடுவெட்டி இடையில் உள்ள - கோவில்வழக்கை.

12). ஆண்டிமடம் அருகிலுள்ள - கூவத்தூர், அக்னீஷபுரம்.

13). ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் இடையிலுள்ள - கீழக்குடியிருப்பு.

14). ஜெயங்கொண்டம் சிறுகொளத்தூர் இடையிலுள்ள - தேவனூர்.

15). ஜெயங்கொண்டம் உடையார்பாளையம் இடையில் உள்ள - சூரியமணல்.

16). மயிலாடுதுறை சேந்தன்குடி இடையிலுள்ள - மண்ணம்பந்தல்.

17). மயிலாடுதுறை நெய்வாசல் இடையிலுள்ள - பண்டூர், மகாராஜபுரம்.

18). கும்பகோணம் நெடுங்கொல்லை அருகிலுள்ள - கடமங்குடி, பரவனூர்.

19). திருப்பனந்தாள் திருமங்கலக்குடி இடையிலுள்ள - சூரியமூலை.

20). கதிரமங்கலம் பந்தநல்லூர் இடையிலுள்ள - முள்ளுக்குடி.

21). மயிலாடுதுறை குத்தாலம் அருகிலுள்ள - அரையபுரம், கோமல்.

22). மயிலாடுதுறை மண்டாரவாடை மாப்படுகை அருகிலுள்ள - பொன்னுர்.

23). மயிலாடுதுறை ஆனதாண்டவபுரம் அருகிலுள்ள - சேந்தன்குடி.

24). தரங்கம்பாடி பொறையார் திருக்களாச்சேரி அருகிலுள்ள - ஈச்சங்குடி, நரசிங்கநாதம்.

25). கும்பகோணம் காரைக்கால் இடையிலுள்ள - எழுமகளூர், எ.கிளியனூர்.

26). மயிலாடுதுறை திருவாரூர் இடையிலுள்ள - தேவூர், கீரனூர்.

27). திருப்பனந்தாள் அருகிலுள்ள
- திருலோக்கி

28). சேத்தியாத்தோப்பு சோழதரம் அருகிலுள்ள - நந்தீஸ்வரமங்கலம்.

29). குறிஞ்சிப்பாடி நெல்லிக்குப்பம் அருகிலுள்ள - பச்சாரபாளயம்.

30). புவனகிரி, நெடுஞ்சேரி அருகிலுள்ள - கீழநத்தம்.

31). காட்டுமன்னார்குடி அய்யன்குடி அருகிலுள்ள - குச்சூர்.

32). காட்டுமன்னார்குடி முத்தம் அருகிலுள்ள - ஆச்சாள்புரம்.

33). கங்கைகொண்டசோழபுரம் பாப்பாக்குடி இடையில் - ஊருபேரு தெரியாத இடம்.

34). ஆடுதுறை மங்கநல்லூர் இடையிலுள - கஞ்சுவோய், மாம்புலி.

35). மயிலாடுதுறை குத்தாலம் அருகிலுள்ள - சென்னியநல்லூர்.

36). கும்பகோணம் திருமங்கலக்குடி அருகிலுள்ள - வேப்பத்தூர்...

(பட்டியலுக்கு நன்றி: Veera VK)..

மேற்கண்ட அனைத்தும் விவசாய கிராமங்கள். இங்கே கூறப்பட்டது காவிரி டெல்டா மட்டும் தான்.

இதற்கு வடக்கே மரக்காணம் முதல் வேளாங்கண்ணி வரை ஐட்ரோ கார்பன் எடுக்க ஒற்றை உரிமை அடிப்படையில் அனுமதி தரப்பட்டுவிட்டது.

இனி மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஷேல் எண்ணெய், ஷேல் எரிவாயு உள்ளிட்ட எவற்றையும் எடுப்பதற்கு ஒரே ஒரு முறை அனுமதி வாங்கினால் போதுமானது.
 அதுவும் பத்தே நாளில் கிடைத்துவிடும்.

மாசுக் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதிகூட தேவையில்லை.

இந்த திட்டத்திற்கு பேர்தான் ஹெல்ப்  HELP..

100 விழுக்காடு நேரடி அந்நிய முதலீட்டில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளால் அரங்கேற இருக்கும் இத்திட்டத்தில் முதன்முதலாக வெளிநாட்டு நிறுவனங்கள் உள்நாட்டு கான்டராக்ட் தரகர்கள் இன்றி நேரடியாக நம் தாய் நிலத்தில் கால் பதிக்கும் வகையில் மத்திய அரசு தாரை வார்த்து விட்டது.

அதாவது முற்றாக அழிக்கப்படவுள்ள காவிரிப் படுகை.

பல ஆயிரம் ஆண்டுகள் நமக்கு சோறுபோட்ட பூமி.
பூமித்தாயின் பாலூட்டும் மார்பு.
அதை அறுத்து ரத்தத்தை உறிஞ்சப் போகிறார்கள்.

என்ன செய்யப்போகிறோம் நாம்?

இலுமினாட்டி அமெரிக்க நாடும்.. பேட் பாம் ஆயுதமும்...


திமுக வின் சன் டிவி அலுவலகத்தில் அனைத்து மேஜைகளிலும் ஒட்டப்பட்டுள்ள அறிவிக்கை...


(SCV என்பது அவர்களது சன் நெட்வெர்க் குழுமத்தின் பெயராகிய சுமங்கலி கேபிள் விஷன் என்பதாகும்).

ரஜினியை வைச்சு படம் எடுக்கறதுனால, அடுத்து விஜய்யை வைச்சு படம் எடுக்கப் போறதால, அவங்களைப் பத்தி தப்பா எந்த செய்தியும் போட்டுடக் கூடாதாம்...

தமிழகத்தில் கார்பரேட் நிறுவனங்களிடம் இருக்கும் நிலங்களை பறிக்க வேண்டும்...


பழத்தை தோலோடு சாப்பிடுங்க. ஆரோக்கியமா இருக்கலாம்...


அதிகமாக பழத்தை விரும்பி சாப்பிடுபவர்களா நீங்கள்? அதிலும் அந்த பழத்தை மட்டும் சாப்பிட்டுவிட்டு, தோலை தூக்கி போடுபவர்களா?

அவர்களுக்கு ஒரு முக்கியமான விஷயம் காத்திருக்கு!!! அப்படி தோலை தூக்கி போடாமல் அதையும் சாப்பிடும் பழக்கத்தை கொண்டு வாருங்கள். ஏனெனில் பழத்தை விட பழத்தில் தோல்களிலேயே அதிகமான அளவு ஊட்டச்சத்தானது இருக்கிறது. அந்த தோலானது சுவையாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அதை கண்டிப்பாக சாப்பிடுங்கள். ஏனென்றால் அதனை உண்Healthy Fruit Peels Eat பதால் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

அதிலும் முக்கியமாக பழத்தை சாப்பிடும் முன்பு நன்கு கழுவிய பின்னரே சாப்பிட வேண்டும். அத்தகைய பழங்களில் எவற்றின் தோல்களை முக்கியமாக சாப்பிட வேண்டும் என்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்...

மாம்பழம் : பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் மாம்பழத்தின் பழத்தில் மட்டும் ஊட்டச்சத்தானது இல்லை, அதன் தோலிலும் சத்துக்கள் நிறைந்துள்ளன. இதன் தோலை சாப்பிட்டால் நீரிழிவு, புற்றுநோய் போன்ற நோய்கள் குணமாவதுடன், இரத்தத்தில் உள்ள கொழுப்புகளின் அளவை குறைத்துவிடும். ஆகவே இந்த மாம்பழத்தை தினமும் ஒரு துண்டுகளை தோலோடு சாப்பிட்டால் நல்லது.

ஆப்பிள் : நிறைய பேர் ஆப்பிளை சாப்பிடும் முன் அதன் தோலை நீக்கி விட்டு, பின் அதனை சாப்பிடுவர். ஆனால் அந்த ஆப்பிளின் தோலானது அவ்வளவு கடினமாக இருக்காது, இருப்பினும் அவ்வாறே உண்பர். அத்தகைய ஆப்பிளின் தோலை சாப்பிடுவதால் விரைவில் செரிமானமடைவதுடன், பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளது. ஆப்பிளின் தோலில் கால்சியம் மற்றும் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. மேலும் அது டயட் மேற்கொள்வோருக்கு ஏற்ற அதிகமான நார்ச்சத்தானது உள்ளது. அதிலும் அளவுக்கு அதிகமான ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால், உடலில் இருக்கும் செல்கள் வலுவடைவதுடன், இதய நோய் மற்றும் நீரிழிவு ஏற்படாமல் பாதுகாக்கிறது. இது தோலுடன் சாப்பிடும் பழங்களில் மிகவும் எளிதாக விழுங்கக்கூடிய பழம்.

எலுமிச்சை : எலுமிச்சையின் தோலை சாப்பிட்டால், உடலில் செரிமானமானது நன்கு நடைபெறும். இது வயிற்றில் ஏற்படும் தசைப்பிடிப்புகளை நீக்கும். ஒரு சிறு துண்டு எலுமிச்சை தோலை தினமும் சாப்பிட்டால், உடலில் இரத்த சுழற்சியானது நன்கு நடைபெறும். மேலும் ஆயுர்வேதத்தில் கல்லீரலில் ஏற்படும் நோய்க்கு, இந்த எலுமிச்சையின் தோலில் இருந்து சாற்றை எடுத்தே கொடுப்பர். அதிலும் ஆயுவேதத்தில் ஸ்கர்வி நோயை சரிசெய்ய, இந்த சாற்றையே கொடுப்பார்கள். தினமும் ஒரு சிறு துண்டுகளை சாப்பிட்டால் சருமமும் அழகாக இருக்கும்.

ஆரஞ்சு : ஆரஞ்சு பழத்தோலில் அதிக அளவு தாவர ஊட்டச்சத்துகள் மற்றும் ஃப்ளேவனாய்டுகள் உள்ளன. இதுவும் செரிமானத்திற்கு சிறந்தது. மேலும் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, புற்றுநோய் ஏற்படுவதையும் தடுக்கும். அதிலும் இதனை சமையலில் பயன்படுத்தினால், ஒரு நல்ல சுவையானது கிடைக்கும். இந்த ஆரஞ்சு பழத்தோலை அப்படியே சாப்பிட முடியாதவர்கள், அதனை சமையலில் சேர்த்து உண்ணலாம்.

கிவி : கிவி பழத்தின் தோலில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் அளவுக்கும் அதிகமாக இருக்கிறது. அதிலும் இதனை உண்பதால் இரத்தமானது லேசாக இருப்பதோடு, உடலில் எளிதாக நன்கு சுழற்சியானது நடைபெற்று, இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது. ஆகவே இந்த பழத்தை தினமும் உண்டால், உடலுக்கு தேவையான சத்துக்களை எளிதாகப் பெற்றுக் கொள்ளலாம்...

வந்தேறி திருட்டு திராவிடர்ஸ்...


1938ல் இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழர் தேசிய உணர்வெழுச்சியை உண்டு பண்ணியது. அதன் விளைவாக ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கத்தை மறைமலையடிகள், அண்ணல் தங்கோ, கி.ஆ.பெ. உள்ளிட்ட பெரியார்கள் முன்வைத்தனர்.

அவர்கள் சிறை சென்று வருவதற்குள் அதை ‘திராவிட நாடு திராவிடருக்கே’ என தெலுங்கர்களும் கன்னடர்களும் மாற்றினர்..

திராவிட நாடு என்பதே வரலாற்று மோசடியால் கட்டமைக்கப்பட்டது..

தமிழ் தேசியம் எழும் போதெல்லாம் திராவிட நாடு பேசுவார்கள் திருட்டு திராவிடர்கள்...

தொலைக்காட்சியில் விளம்பரம் போடுமளவிற்கு வந்து விட்டது...


உணவு பழக்கத்தை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்...

ஆழ்மன சிந்தனா நிலை...


பனிப்பாறை (iceberg) கேள்விப்பட்டிருக்கிறீர்களா? டைட்டானிக் எனும் பெரியதொரு கப்பல் அதில் இடித்துக் கவிழ்ந்து போனதே? துருவ மண்டலங்களுக்கு நெருக்கமாயுள்ள கடல்களில் மிதக்கும். ராட்சத மலை போன்ற இவை கடல் நீர் மட்டத்துக்கு மேல் சிறு பாறைபோல் மட்டுமே தென்படும். அப்படித் தென்படுவது ஒன்பதில் ஒரு பங்கு. மீதமுள்ள எட்டுப் பங்கு? அது நீருக்குக் கீழே சமர்த்துப் பிள்ளையாய் மிதந்து கொண்டிருக்கும்.

சரி, அதற்கு என்ன இப்போ?

உணர்வு உள்ள நம் அனைவருக்கும் உள்ளுணர்வு என்று ஒன்று உண்டு. கண்ணால் யாரும் பார்த்ததில்லை எனினும் "ஆமாம், இருக்கிறது!" என்று பொத்தாம் பொதுவாய் ஒப்புக்கொள்ளும் அளவிற்கு எல்லோருக்கும் ஓர் அபிப்ராயம் உண்டு. மறுப்பாளர்கள் பண்டிகை நாளன்று தொலைக்காட்சியில் நடைபெறும் பட்டிமன்றத்திற்கு "உள்ளுணர்வு உண்மையா பொய்யா?" என்பதைத் தலைப்பாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

இந்த உள்ளுணர்வு என்பது என்ன, அது எப்படி இயங்குகிறது, என்பதை விவரிக்கச் சொன்னால்... அது சிரமம். அதற்காகச் சாமான்யர்கள் நாம் வருத்தப்பட ஏதுமில்லை. உள்ளுணர்வு பற்றியும் அது நம்மை இயக்குவது பற்றியும் மனோவியலாளர்கள் மூளையைச் சொறிந்துக் கொண்டு நூற்றுக்கணக்கான புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள். அதிலிருந்து சுருக்கமாய்க் காப்பி அடித்துக் கொண்டால் நமக்குப் போதும்.

"மனதின் ஆழ்மனம் சக்தி  வாய்ந்தது. நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அதை அடைய வழிவகை செய்து விடுகிறது. அந்த ஆழ்மனதின் ஆதிக்கமும் பயனும் நம்மை முழுவதும் ஆலிங்கனம் செய்யக் கூடியது." இதுதான் சாராம்சம்!
உள்ளுணர்வெனும் அந்த ஆழ்மனச் சக்தியைத்தான் மேலே சொன்ன பனிப்பாறையை  உவமையாகக் கூறி விவரிக்கிறார்கள். நாம் உணர்ந்த, அறிந்த நம் வெளியுணர்வு வெளியே தெரியும் பனிப்பாறை அளவே (tip of the iceberg). வலிமையான மீதம் நம்முள்ளே புதைந்திருக்கும் நம் உள்ளுணர்வு! பிரமிப்பாயில்லை?

வங்காள விரிகுடாவிலும் அரபிக் கடலிலும் பனிப்பாறைக்கு எங்கு செல்வது; எப்படிப் புரிந்து கொள்வது? எனவே நாம் வேறு சில உதாரணங்களை ஊருக்குள் தேடுவோம்.

சைக்கிள் ஓட்டப் பழகுவதற்குப் பெரும் பிரயத்தனம் தேவைப்படும்; கவனித்திருப்பீர்கள். சைக்கிளின் கைப்பிடியை ஆட்டாமல் பிடிக்க வேண்டும் என்பார்கள்; முதுகைச் சாய்க்கக் கூடாது என்பார்கள்; பேலன்ஸ் தவறாமல் பெடலை மிதிக்க வேண்டும் என்பார்கள்... விழுந்து சில்லறை எண்ணாமல் சைக்கிள் ஓட்டக் கற்றவர்கள் மிகவும் குறைவாகவே இருக்க வேண்டும். அப்படிப் பலவற்றையும் மனமானது உள்வாங்கி, உடலானது செயல்படுத்தி, சைக்கிளானது நம்மைச் சுமந்து கொண்டு ஓடத் துவங்கியபின், கற்பதற்குச் சிந்தனை செலுத்திய அத்தனையும் பொருட்டின்றி மறைந்துபோய், சைக்கிள் ஓட்டனுமா நீங்கள் ஏறி உட்கார்ந்தால் போதும்; செயல்படுத்துவது உங்கள் உள்மனமே. உங்கள் வெளியுணர்வு பழகி உணர்ந்த அனைத்தும் உள்மனதில் ஆழப்பதிந்து, நீங்கள் சைக்கிளில் எவ்விதச் சிரமமுன்றிச் சுவரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரையும் அதைத் தின்று கொண்டிருக்கும் மாட்டையும் பார்த்துக் கொண்டே செல்ல வேண்டியது தான்.

பிரக்ஞையுடன் கூடிய நமது சிந்தனைகள், நமது உடலின் செயல்பாடுகள், மனோபாவம், செயல் திறன் ஆகியன எல்லாம் உள்ளுணர்வுக்குள் பலமாய் பதிக்கப்பட்டு விடுகின்றன. இவை நம்முடைய உள்ளுணர்வை வடிவமைக்கின்றன. அது தன்னிச்சையாய் நம்மை இயக்குகிறது.

அதாவது? படுவேகமாய்த் தட்டச்சு செய்யும் திறன் கொண்ட ஒருவரிடம் எந்த எழுத்து எங்கிருக்கிறது என்று கேட்டால் அவரால் உடனே சொல்ல முடியாது. கீ போர்டை நைஸாய் அவர் எட்டிப் பார்க்க வேண்டியிருக்கும். அல்லது மேசையில் தன் விரல்களால் தட்டச்சுவது போல் பாவனை செய்தே சொல்ல வேண்டியிருக்கும். வியப்பாயில்லை? இது உள்ளுணர்வின் மகிமை என்கிறார்கள்.

க்ளாட் பிரிஸ்டல் (Claude Bristol) தன்னுடைய The Magic of Believing என்ற புத்தகத்தில், "உள்ளுணர்வு நம் வலிமைக்கு மூலம்" என்கிறார்.

நாம் நடப்பது, பேசுவது, சட்டென சில பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது, சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது திடீரென நம்மை நோக்கி ஓடிவரும் எருமை மாட்டினிடமிருந்து சரேலென விலகுவது என இப்படிப் பலவற்றிற்கும் நம் மனதின் உள்ளே ஆழ்மனதில் கச்சிதமான ப்ரோக்ராம் ஒன்று அமர்ந்து கொண்டு நம்மை இயக்கிக் கொண்டிருக்கிறது.

தினசரி நமக்கு எழும் எண்ணங்கள், சிந்தனைகள் ஆகியன சிறிது சிறிதாக உள்மனதில் பதிவாகிப் பதிவாகி, நம்மைத் தன்னிச்சையாய் வலிமையுடன் இயக்கிக் கொண்டே இருக்கின்றன. எந்த அளவிற்கு? நம்முடைய வெற்றி தோல்விகளின் காரணிகளை நிர்ணயிக்கும் அளவிற்கு.

உங்களது உள்ளுணர்வு உண்மையென்று நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, உங்களது உள் மனம் தயாராகியுள்ளதற்கு ஏற்பவே நீங்கள் வாழ்க்கையின் இலக்கினை அடைவீர்கள் என்கிறார்கள் உளவியலாளர்கள்.

அதனால் தான் "வெற்றி" என்பதைக் குறிக்கோளாய்க் கொண்டவருக்கு வெற்றியை எட்டுவதே உள்மனதின் எதிர்பார்ப்பாக மாறிப்போய், அது ஆழப் பதிந்துவிடுகிறது. அதற்கேற்ப அந்த வெற்றியின் இலக்கிற்கு அவரது ஆழ்மனம் அவரைச் செலுத்துகிறது. அதற்கு எதிர்மறையான எண்ணம் கொண்டவருக்கு மனதின் எதிர்பார்ப்பும் மாறிப்போகிறது.

ஆழ்மனம் பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும் அசாதரணமான ஆற்றல் கொண்டது. ஏதோ ஒரு பிரச்சனை; என்ன செய்வதென்று தெரியாமல் தூக்கமும் வராமல் புரண்டுக் கொண்டிருப்பீர்கள். ஒருநிலையில் அலுத்துப்போய், "சரி நாளை பார்த்துக் கொள்ளலாம்" என்று தூங்கியும்போய் மறுநாள் எழும்போது திடீரென்று ஒரு வழி தோன்றியிருக்கும்.

இதையே, "ஒரு பிரச்சனைக்குத் தீர்வு காண்பதிலோ, ஏதோ ஒன்றைத் தேர்வு செய்வதிலோ குழப்பம் இருந்தால் அதை ஒத்திப்போடுங்கள்; இன்னம் உசிதம் இரவு தூங்கிவிட்டுக் காலையில் எழுந்து பாருங்கள்; சட்டெனத் தெளிவான ஒரு முடிவை நீங்கள் அடைய முடியும்," என்று நெதர்லாந்து நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தாங்கள் சமீபத்தில் நிகழ்த்திய ஆராய்ச்சியின் மூலம் மேலும் உறுதிப்படுத்துகிறார்கள்.

இது எவ்விதம் நிகழ்கிறது? இதுதான் என்று அடித்துச் சொல்ல முடியாது. மூளை என்பது மிகவும் சிக்கலான, மனிதனால் முழுதும் பிரித்துப் போட்டு ஆராய முடியாத ஒரு சதை. அது இன்னும் மனிதனுக்குப் புதிரே! எனவே வெளியுணர்வற்ற ஆழ்மன சிந்தனா நிலையினால் நிகழ்கிறது என்று மட்டும் அறிந்து கொள்ளலாம்.

மனதில் உள்ளது தானே வார்த்தையில் வரும்! மிகவும் புழக்கத்தில் உள்ள வாசகம். இங்கு அந்த மனம் ஆழ்மனம்!

நமது எண்ணங்களே நமது ஆழ்மன உணர்வை நிர்ணயிக்கின்றன. ஆழ்மனமே நம்மை நடாத்துகிறது. எனவே நமது எண்ணம் தூய்மையாய் இருப்பது,

மனதிற்கு நல்லது.. உடம்பிற்கு நல்லது.. சூழ்ந்திருக்கும் சுற்றத்துக்கும் நட்புக்கும்  நல்லது...

இது தமிழர் நாடு...


இயற்கை உணவுப்பொருளில் சத்தான உணவுப்பொருள் கருப்பட்டி நமது முன்னோர்களுக்கு சர்க்கரை நோய் வராமல் இருந்ததற்கு இதுவும் ஒரு காரணம்...


மேலும் பூஸ்ட் கார்லிக்கஸ் போன்ற கார்பரேட் பொருட்களைவிட சத்தான பானம் கருப்பட்டி காப்பி இன்றைய விளம்பர உலகில் நாம் அதை மறந்தே போனோம்...

சும்மா ஏன்யா பேசிக்கிட்டு இருக்கீங்க ரவுண்டா 200 கோடிக்கு பேசி முடிங்கப்பா...


அரியலுார் மாவட்டம், முடிகொண்டான் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள், பாஸ்கர், 42, ராஜா, 33; தச்சு தொழிலாளர்கள்...


கட்டில், பீரோ, அலமாரி போன்றவற்றை செய்து வந்த இவர்கள், மர சைக்கிள் தயாரித்து, விற்பனையை துவக்கி உள்ளனர்...

இந்த சைக்கிளில், இரண்டு சக்கரங்கள், டயர், பிரேக், செயின், கிராங் செட் தவிர்த்து, மீதி அனைத்தும் மரத்தால் செய்யப்பட்டுள்ளது...

அவர்களின் தேவை இங்கு குறையும் போது, உங்களுக்கு கொடுக்கும் அளவின் மதிப்பும் குறையும்...


அன்று புரியும் அடிமை என்ற வார்த்தையின் அர்த்தம்...

உலகமே போற்றும் உழைப்பு...


ராமநாதபுரம் புதுமடத்தில் குளத்தை வெட்டி நீரை தேக்கிய இளைஞா்களின் அயராத உழைப்பின் பலனை பாருங்கள் தோழர்களே..

கோடைகாலத்திலும் நிரம்பியுள்ள குளம்
வாழ்த்துவோம்...

நியூட்ரினோ மாதிரி காவேரி வாரியமும் உடனே அமைங்க பார்ப்போம்...


உலக சாதனை படைத்துள்ள நெல்லை பேட்டையை சேர்ந்த பெண் மருத்துவ விஞ்ஞானி டாக்டர் பாத்திமா பெனாசிர்...


திருநெல்வேலி பேட்டையை சேர்ந்த டாக்டர் பாத்திமா பெனாசிர் அவர்கள் DNA பரிசோதனைக்கு இயற்கை மருந்து (ஜெல்) கண்டுபிடித்து உலக சாதனை படைத்துள்ளார்.

டாக்டர் பாத்திமா பெனாசிர் அவர்கள் என்ற தனியார் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும், இந்திய அறிவியல் கழக (Indian Institute of Science) மையத்தில் ஆராய்ச்சி பணியிலும் ஈடுபட்டு வருகிறார். அவர் மேற்கொள்ளும் ஆராய்ச்சி உலக அளவில் சிறப்பானதாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், பரம்பரையாக தொற்றும் கொடிய நோய்கள் குறித்தும், உடனடியாக அதன் மூலத்தை தெரிந்து கொள்ளும் வகையில், புதிய ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டார்.

அதன் பலனாக 'டென்டோராங்' (Tento Rong) என்ற பெயரில் DNA பரிசோதனைக்கு இயற்கை ஜெல் கண்டுபிடித்துள்ளார். உலகில் கண்டுபிடிப்புகள் எத்தனையோ இருந்தாலும் DNA மற்றும் RNA கண்டுபிடிப்பு மிக முக்கியமான ஒன்றாகும்.

இப்படிப்பட்ட கண்டுபிடிப்பில் தான் தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் பாத்திமா பெனாசிர் உலக சாதனை படைத்துள்ளார்.

அவரின் இயற்கை ஜெல் கண்டுபிடிப்பின் மூலம் கேன்சர், தோல்நோய், குடல்நோய், மஞ்சள் காமாலை, நீரிழிவு நோய், போன்ற தீரா வியாதிகள் எவ்வாறு உருவாகிறது என்பதை துல்லியமாக கண்டுபிடிக்கும் விதமாக அமைந்துள்ளது.

இதுகுறித்து பெண் மருத்துவ விஞ்ஞானி டாக்டர் பாத்திமா பெனாசிர் கூறும்போது; “எங்களது இந்த கண்டுபிடிப்பானது 100 சதவீதம் இயற்கையோடு ஒன்றியதாகும். இது ஜெல் வகையை சார்ந்ததாகும், மேலும் எங்கள் கண்டுபிடிப்பு மற்ற கண்டுபிடிப்பை விட மிக விரைவில் அடையாளம் காணக்கூடிய ஒன்றாகும். அதாவது DNA பரிசோதனைக்கு பிற வேதியியல் பொருட்கள் பயன்படுத்தும் போது 10 முதல் 40 நிமிடம் வரை ரிசல்ட் கிடைக்க நேரம் ஆகும், ஆனால் எங்களின் இந்த இயற்கை கண்டு பிடிப்பானது, 30 நொடிகளில் அடையாளம் கண்டுபிடிக்கும் ஆற்றல் பெற்றுள்ளது.

எங்கள் கண்டுபிடிப்பு மற்ற கண்டு பிடிப்பை விட ஏழு மடங்கு வீரிய வேகம் கொண்டதாகும். மேலும் மற்ற கண்டி பிடிப்புகள் வேதிப்பொருட்களால் ஆனவை. அவைகள் அனைத்தும் DNA வின் அமைப்பை (Structure) உருவாக்கும்.

ஆனால் இந்த இயற்கை கண்டு பிடிப்பானது DNA அமைப்பை (Structure) முழுவதும் தெரியாமல் குணமாக்கும் என்று கூறினார்.” இந்த கண்டுபிடிப்பின் உரிமத்தை இந்திய அரசிடமிருந்து எதிர்நோக்கியுள்ளார், உரிமம் கிடைக்கும் பட்சத்தில் DNA வின் இயற்கை கண்டு பிடிப்பை கண்ட உலகின் முதல் இந்திய பெண் விஞ்ஞானி என்ற பெருமைக்குரியவர் என்ற பட்டியலில் இடம் பெற்று நமது இந்திய நாட்டிற்கும்,  பெருமை சேர்ப்பார் என்பதில் பெருமை கொள்கிறோம்...

எய்ட்ஸ் என்ற நோய் உருவானது அல்ல... அமெரிக்காவால் உருவாக்கப்பட்டது தான் ...


கற்ப மூலிகை வேப்பிலை...


உடலை என்றும் இளமையுடன் இருக்கச் செய்யும் அற்புத சக்தி படைத்தவை தான் கற்ப மூலிகைகள். நரை, திரை, மூப்பு என்ற மூன்றையும் அணுகவிடாமல் தடுக்கும் குணம் கற்ப மூலிகைகளுக்கு உண்டு. இந்த இதழில் வேப்பிலை என்னும் கற்ப மூலிகையைப் பற்றி அறிந்துகொள்வோம்.

இந்திய திருநாட்டின் பாரம்பரிய மரங்களில் ஒன்று தான் வேம்பு. இதனை சக்தி என்றே அழைக்கின்றனர். சமய வழிபாட்டில் வேம்பு ஒரு பெண் தெய்வமாகவே போற ்றி வணங்கப் படுகிறது. மருத்துவக் குணங்கள் கொண்ட வேம்பின் இலைகள் பற்றி நீண்ட ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

வேப்பிலையை சர்வரோக நிவாரணி என்று சமஸ்கிருதத்தில் அழைக்கப்படுகிறது.
ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பிருந்தே நம் மூதாதையர்கள் வேப்பிலையை உட்கொள்ளும் பொருளாக உபயோகப்படுத்தி வந்துள்ளனர். அப்படி உபயோகிப்பதில் எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லை என்பதையும் கண்டறிந்துள்ளனர். ஆனால், கருத்தரித்த தாய்மார்களும் கருத்தரிப்புக்காக காத்திருப் போரும் இதை உட்கொள்ளக் கூடாது என்றும் கூறியுள்ளனர்.

2005ம் ஆண்டு ஆய்வாளர்கள் வெளியிட் டுள்ள அறிவியல் ஆய்வறிக்கையில் வேப்பிலையின் மருத்துவக் குணங்கள் உறுதிப்படுத்தப் பட்டுள்ளன. கீழ்கண்ட மருத்துவக் குணங்கள் வேப்பிலையில் நிறைந்துள்ளது.

1. நோய் எதிர்ப்புசக்தியை உருவாக்குதல் (Immunomodulatory).
2. வீக்க உருக்கி (anti inflammatory).
3. ஆண்டி ஹைப்போகிளைசிமிக் (anti hypoglycemic).
4. குடல் புண்ணகற்றி (Anti-ulcer).
5. மலேரியா போக்கி (Anti malarial).
6. பூஞ்சை நோய் நீக்கி (Anti fungal).
7. பாக்டீரியா அகற்றி (Anti bacterial).
8. வைரஸ் அகற்றி (Anti viral).
9. ஆண்டி ஆக்சிடென்ட் (Anti oxidant).
10. புற்றுநோய் தடுப்பு (Anti cancerous).

வேப்பிலையில் நார்ச்சத்து, மாவுச்சத்து மற்றும் புரதச் சத்து, 10 விதமான அமினோ அமிலங்கள் உள்ளன. இதில் Azadirachtia, nimbidiol, nimbidin போன்ற வேதிப் பொருட்கள் இதுவரை பகுக்கப்பட்டுள்ளன.

வேப்பிலையை நம்முடைய முன்னோர்கள் பலவிதமான ஆயுர்வேத சித்த மருந்துகளில் உபயோகப்படுத்தியுள்ளனர். வேப்பிலை சாறில் தொழுநோய், வயிற்றுப் புழுக்கள், சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாவதை அறிந்து இந்த நோய்களுக்கு உபயோகப் படுத்தியுள்ளனர்.

நாள்பட்ட தோல் வியாதிகளை எந்த விதமான பக்க விளைவுகளும் இன்றி குணப்படுத்தக் கூடிய ஒரு அற்புதம் வேப்பிலைக்கு உண்டு. சோரியாசிஸ், சாதாரண சிரங்கு, நமைச்சல், புழுவெட்டு நோய், மருக்கள் முதலியவை வேப்பிலையால் குணமாகக் கூடிய சரும நோய்கள்.

வேப்பிலையை அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் பூசினால் வெகு விரைவில் முகப்பரு மறைந்துவிடும்.

வேப்பிலையை பயன்படுத்தும் முறை...

புத்தம் புதிதாக பறிக்கப்பட்ட இலைகளை பயன்படுத்த வேண்டும்.

வேப்பிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து சுண்டக் காய்ச்சி, அதனுடைய அடர்த்தி அதிகமான நிலையில் உபயோகிப்பது.

வேப்பிலையை சாறு எடுத்து உபயோகிப்பது.

வேப்பிலையின் பொதுவான பயன்கள்...

வேப்பிலையை அப்படியே அரைத்து சரும வியாதிகள் மேல் பூசலாம்.

சரும வியாதி உள்ளவர்கள் வெந்நீரில் வேப்பிலை போட்டு கொதிக்கவைத்து அந்த நீரில் குளித்து வரலாம்.

சின்னம்மை, தட்டம்மை போன்ற அம்மை நோய்களுக்கு கிருமி நாசினியாக பயன்படுத்தலாம்.

வேப்பிலையை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.

வேப்பிலையை காலையில் டீயுடன் சேர்த்து அருந்தினால் சாதாரண சளி இருமல் குறையும்.

வேப்பிலையை அரைத்து வீக்கம் உள்ள இடங்கள், மூட்டுகள், வாத நோய் கண்ட இடங்களில் பூசலாம். முதுகுத்தண்டு வலி, தசைப்பிடிப்பு போன்றவற்றிற்கும் சிறந்த மருந்தாகும்.

வேப்பிலையின் தொழிற்சாலை உபயோகங்கள்...

விவசாயத் துறையில் பூச்சிக் கொல்லியாகவும், கிருமி நாசினியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதிலுள்ள முக்கிய வேதிப் பொருள் தற்போது நாம் உபயோகிக்கும உரங்களில் சேர்க்கப்படுகிறது.

அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அழகுக்காக உபயோகப்படுத்தும் கிரீம்கள், லோஷன்கள், சோப்பு மற்றும் கூந்தல் எண்ணெய்களில் வேப்பிலை பயன்படுத்தப்படுகிறது. சித்த மருத்துவத்தில் வேப்பிலை முக்கிய பொருளாக பயன்படுகிறது.

வேப்பிலையின் மருத்துவக் குணங்கள்...

சூழ்நிலைக்கேற்ப உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் வராமல் தடுக்கிறது. குருதியில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் தன்மை வேப்பிலைச்சாறுக்கு உண்டு. வயிற்றுப்புண்களை ஆற்றும் தன்மை மற்றும் வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை மட்டுப்படுத்தும் தன்மை வேப்பிலைக்கு உண்டு.

மலேரியக் காய்ச்சலுக்கு குளோரோக்குவின் என்ற மருந்து கொடுக்கப்படும். இந்த மருந்துக்கு கட்டுப்படாமல் இருக்கும் காய்ச்சலை வேப்பிலை கொடுத்து கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர முடியும். காளான் நோய்களான டிரைக்கோபைட்டா மற்றும் பிற காளான் நோய்களையும் வேப்பிலையைக் கொண்டு தீர்க்க முடியும்.

பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும் பண்பு வேப்பிலைக்கு உண்டு. கிராம் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை வேப்பிலைக்கு உண்டு.

வைரஸ் நோய்களை எதிர்க்கும் சக்தி வேப்பிலைக்கு உண்டு. இதனை அம்மை நோய்களுக்கு உபயோகிக்கும் மருந்தாக நம் முன்னோர் காலத்திலிருந்து பின்பற்றப் படுகிறது.

புற்றுநோய் எதிர்ப்பு தன்மை வேப்பிலைக்கு உண்டு. இதனால் புற்றுநோய் வளர்ச்சியைத் தடைப்படுத்தக்கூடிய மருந்துகளில் வேப்பிலையைப் பயன் படுத்துகின்றனர்.

வேப்பமரத்தின் பயன்கள்...

தோட்டத்திலுள்ள ஒரு வேப்பமரம், பத்து குளிர்சாதனக் கருவிகளுக்கு ஒப்பாகும். ஏனெனில், இது வெப்பநிலையை பத்து டிகிரி வரைக் குறைக்கவல்லது.

மருந்துகள், பல வாசனைப் பொருட்கள், கிருமிநாசினிகள் ஆகியவற்றைத் தயாரிக்க வேப்பிலைகள் பயன்படுகின்றன.

இலை, பட்டை, விதையிலுள் தைலம் பலவகையான பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்தும் திறன் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

Streptomycinie போன்ற மருந்துக்கும் கட்டுப்படாத காசநோய் கிருமிகள் வேப்ப எண்ணெய்க்கு கட்டுப்படுவதாக ஆய்வு அறிக்கைகள் சொல்லுகின்றன.

மூலம் வேப்பிலை மோசமான தோல் நோய்களையும் கட்டுப்படுத்தும், மேலும் குடல் புழுக்களையும் அகற்றும் ஆற்றல் உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேகாலாயவில் உள்ள பழங்குடி மக்கள் இதய நோய்க்கும், காச நோய்க்கும் வேப்பம் பழங்களையும், இலைகளையும் பயன்படுத்துகிறார்கள்.

வேப்பெண்ணெய்க்கு விந்துவிலுள்ள உயிர் அணுக்களைச் செயல் இழக்கச் செய்யும் ஆற்றல் உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கண்டறிந்துள்ளது.

வேப்பிலையிலுள்ள குயிர் சிடின் என்னும் சத்து Bacteria-க்களைக் கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.

வேப்ப எண்ணெய்யை சிதைத்து வடித்துப் பெறும் பைரோனிமின் மூலம் Rocketகான உந்துவிசை மாற்று எரிப்பொருளைப் பெறலாம் என்கின்றனர்.

எலிகளுக்கு வேப்பிலை சாற்றைக் கொடுத்து ஆராய்ந்ததில் அது கருத்தரிக்கும் ஆற்றலை 11-வது வாரத்தில் முற்றிலும் இழந்து விட்டதை அறிந்தனர். சாறு கொடுப்பதை நிறுத்தி விட்டால் மீண்டும் கருத்தரிக்கும் ஆற்றல் பெற்று விடுவதையும் கண்டுள்ளனர்.

வேம்பு வெளியிடும் பிராகிபிடின் என்னும் வேதிப்பொருள் காற்றில் கலந்து மனிதனையும் தாவரங்களையும் தாக்கும் கிருமிகளை இயங்க விடாமல் தடுத்து அழிக்கிறது என்று Dr.சக்சேனா கண்டறிந்துள்ளனர்.

வேப்பம் விதைக்கும், எண்ணெய்க்கும் பிண்ணாக்கிற்கும்-123க்கும் மேற்பட்ட பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. வேம்பு Meliazia தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.

புழு, பூச்சிகளால் நேரிடும் துன்பங்களை ஒழிக்கும்.

வேப்பங்கொழுந்தும், எள்ளும் சேர்த்து அரைத்துப் பூசிவர ஆறாத நாட்பட்ட புண்கள் ஆறும்.

வேப்பிலையை கற்ப முறைப்படி சாப்பிட்டு வர எந்த நோயும் அணுகாது.

வேப்பிலைச் சாறு + பழச்சாறு கலந்து படுக்கபோகும் முன் அருந்த ஆழ்ந்த உறக்கம் உண்டாகும்.

பூவை குடிநீரிட்டு குடிக்க குன்ம நோய் தீரும்.

மூலம், தோல் நோய், சூதக சன்னி, குடல் கிருமி, நரம்புப் பிரிவு நீங்கும்.

விதை + கசகசா + தேங்காய் பால் சொறி, சிரங்கு, நமைச்சல், தேமல் தீரும்.

வேப்பம் பட்டை + திப்பிலி குடிநீர் இடுப்பு வாதம், கீல் வாதம் தீரும்.

வேப்பம் பூவைத் தலையில் வைக்க ஈறும் பேணும் தீரும்.

100 வயதான வேப்பமரப் பட்டையை நிழலில் உலர்த்திச் சூரணித்து பாலில் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும். நோய் அணுகாது.

பூச்சாறு + நெல்லிக்காய் சாறு கலந்து தர எந்த நோயும் அணுகாது, தோல் பளபளக்கும், இரத்தம் சுத்தமாகும்.

வேப்பமுத்து, மிளகு, கருஞ்சீரகம் மூன்றையும் அரைத்து எண்ணெய்யில் கலந்து தலைக்குத் தேய்த்து முழுகி வரப் புழுவெட்டு மாறும். முடி செழித்து வளரும்.

வேப்பம்பட்டைத் + தூள் கரிசாலை + மல்லிச் சாறு 7 முறை பாவனை செய்து 1 மண்டலம் தேனில் உண்ண உடல் கருங்காலி மரம் போல் வலிமை உடையதாகும். விந்து கட்டும்.

வேப்பம்பூ + வேப்ப எண்ணெய் கலந்து காய்ச்சி காதுக்குச் சொட்டு மருந்தாகப் பயன்படுத்தக் காதில் உள்ள பூச்சிகள் வெளிப்படும். காது வலி, காது சீழ் மாறும்.

நம் வீடுகளில் வேம்பு வளர்ப்பது ஐதீகமாகக் கருதப்பட்டாலும், அதன் தத்துவம் என்னவென்றால் வேம்பை சுற்றி நிறைய நோய் எதிர்ப்பு ஆற்றல் உள்ளதென்றும், காற்றானது தூய்மையுறும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

உலகில், இந்தியாவில்தான் இப்போது அதிக வேப்ப மரங்கள் உள்ளன. சமீபத்தில் நிகழ்ந்த ஒரு கருத்தரங்கில் ஓர் எச்சரிக்கை வெளியிடப்பட்டது. வேப்பமரத்தின் பயன்களை அறிந்த மற்ற நாடுகள், குறிப்பாக ஆஸ்திரேலியா, வியட்நாம் ஆகியவை இப்போது அதிக அளவில் வேப்பமரங்களைப் பயிரிடத் தொடங்கியுள்ளன.

நாம் இருக்கும் வேப்பமரங்களையெல்லாம் வெட்டிக் கொண்டிருந்தால் இழப்பு நமக்குத்தான்.

மரங்களை வெட்டாதீர்... ஒரு மரத்தை வெட்ட வேண்டி வந்தால் 10 மரங்களை நடுவோம்...

தொழில்நுட்பங்கள் நமக்கானவையா...




தமிழின் அர்த்தம் எத்தனை பேருக்குத் தெரியும்....?


நம் அனைவருக்கும் தமிழ் தெரியும். ஆனால் எத்தனை பேருக்கு அதன் அர்த்தம் தெரியும்...? தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே...

தமிழ் என்பது த்-அ-ம்-இ-ழ் என்னும் ஐந்து அலகு நிலையுடையது.

அ - அகண்டாகார சித்தை விளக்கும் ஓங்கார ஐம்பூதத்திற்குள் பதி நிலையக்கரமாகும்.

இ - பதியைவிட்டு விலகாத சித்தை விளக்குவதால் அனந்தாகார பேதங்காட்டும் உயிர்ச்சித்த கலையக்கரமாம்.

பதி சித்தாத்ம கலைகளுக்காதாரமாகி உயிரினுக்கு உடலையொத்துக் குறிக்கப்படும். த்-ம்-ழ் எழுத்துக்களுக்கு உரை...

த் - ஏழாவது மெய். அறிவின் எல்லையைக் குறிக்கும்.

ம் - பத்தாவது மெய். ஞானத்தின் படியைக் குறிக்கும்.

ழ் - பதினைந்தாவது இயற்கையுண்மைச் சிற்ப்பியல் அக்கரம். நம் அண்டத்தைக் குறிக்கும்.

எல்லா மொழிகளுக்கும் பிதுர் (தந்தை) மொழியென்று ஆன்றோர்களால் கொண்டாடப்பட்டதும், இனிமையென்று நிறுத்தம் சிந்திக்கப் பெற்றுள்ளதுமான தமிழ் தான் இயற்கையான சிறப்பியல் மொழியாகும்...

ஓஎன்ஜிசி க்கு எதிரான பரப்புரை'யை இன்றே துவங்குவோம்...


படம்: ஓஎன்ஜிசி நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட வெள்ளக்குடி ஊர் மக்கள்...

ஓஎன்ஜிசியே வெளியேறு...

ஒன்றரை லட்சம் தமிழர்களை அழித்த இனப்படுகொலை என்பது ஏதோ தெருமுனையில் நிகழும் தகராறு அல்ல....


உலகில் இனப்படுகொலையை சந்தித்த மிகச்சில இனங்களில் தமிழினமும் ஒன்று.

அதுவும் இந்த இனக்கொலை பழங்காலத்தில் நிகழவில்லை..
நம் கண் முன் நிகழ்ந்தது...

இந்த இனக்கொலைக்கு நிகழ்வதற்கு முழுமையாக துணை போனவர்கள் ஆரியர்கள், தெலுங்கர், கன்னடர், மலையாளிகள்...

நமது மெளனம் தான் இதை சாதித்தது.....

இந்த தருணத்தில் புலிகளை விமர்சிப்பதும், தமிழீழ கோரிக்கையை கொச்சைப்படுத்துவதும் ஒரே ஒரு அர்த்தத்தில் தான் புரிந்து கொள்ள முடியும்..

நாசிப்படைகளால் துப்பாக்கி முனையில் தலையில் சுடப்பட காத்திருக்கும் யூதனிடம் ” நீ அதிகம் வட்டி வாங்கி சம்பாதித்தவன், அதனால் நாங்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டோம் என்றாவது நீ புரிந்து கொண்டிருக்கிறாயா?..

உனது செயல்களை எவ்வாறு விமர்சிக்காமல் இருப்பது..

நீ விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட ஒருவரா“ என்று பேசிக்கொண்டு செல்வது போன்றது...

இனக்கொலை நிகழ்ந்த போது ஒன்றையும் புடுங்காதவர்கள்..

இனக்கொலை நிகழ்ந்த பிறகும் ஒன்றையும் நகர்த்தாதவர்கள்..

இனக்கொலை தொடர்ந்து கொண்டிருக்கும் போது மெளனம் காக்கிறவர்கள்..

இனக்கொலையால் அழிக்கபப்டும் இனத்தினை காக்க போராடியவர்கள் மீது குற்றம் சுமத்துபவர்கள்..

தமிழீழக்கோரிக்கையே அவர்கள் வரலாற்றில் இல்லை என்று எழுதுபவர்கள் என அனைவரையும் ”மனுசனா” பார்க்கும் அளவிற்கு முதிர்ச்சி எனக்கு இன்னும் வரவில்லையே என்கிற சுயவிமர்சனத்தினை ஏற்கிறேன்...

உங்களை மனிதராக மாற்றுவதைவிட ராஜபக்சேவையே மாற்றிவிடலாம் என்கிற நம்பிக்கைதான் வருகிறது.

இதோ... இந்தியம் - திராவிடம் இனைந்து தமிழக தமிழர்களை அழிக்க பல அழிவு திட்டங்களை கொண்டு வந்துவிட்டது...

தமிழின மூட்டாள்களே...

எப்போது நம் இனத்தின் உரிமை பற்றி பேசுவீர்கள்....

பணம், பதவிக்காக எந்த கேடுகெட்ட செயலும் செய்யும் பாஜக பொன். ராதாவே...


மற்ற நாடுகளில் தடை செய்த இந்த திட்டத்தை, தமிழ்நாட்டு மக்களிடம்  மட்டும் திட்டத்தை கொண்டு வந்து அழிப்பது ஏன்..?

ஆழ்மன சக்திகள்...


உடலை விட்டு வெளியேறும் ஆத்மா
மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்கள். அவை Out of body experiences (OBE) என்ற பெயரில் பல்வேறு நாடுகளில் ஆராயப்பட்டு வருகின்றன.

முதலில் 1960 களில் டாக்டர் சார்லஸ் டார்ட் (Dr. Chares Tart) என்பவர் இது குறித்து நம்பத்தகுந்த ஆராய்ச்சிகள் செய்து சிலருக்கு அந்த சக்தி உள்ளது என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இது போன்ற சக்திகள் இன்றைக்கு நம்மைத் திகைக்க வைத்தாலும் பல பழம் கலாச்சாரங்களில் இவை பரிபூரணமாக நம்பப்பட்டன.

டீன் ஷீல்ஸ் (Dean Sheils) என்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர் 60 பழைய கலாச்சாரங்களை ஆராய்ந்து அறுபதில் மூன்று கலாச்சாரங்களில் மட்டும் உடலை விட்டு வெளியே செல்லும் அனுபவங்கள் பற்றிய நம்பிக்கைகள் இருக்கவில்லை என்றும் மற்ற 57 கலாச்சாரங்களில் அதீத நம்பிக்கையிலிருந்து ஓரளவு நம்பிக்கை வரை இருந்திருக்கிறது என்று சொல்கிறார்.

சென்ற நூற்றாண்டில் இந்த மரண விளிம்பு அனுபவமல்லாத உடலை விட்டு வெளியேறும் அனுபவங்களை ஆராய்ந்ததில் சில சக்தி படைத்தவர்களிடம் மட்டும் இந்த ஆராய்ச்சிகள் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபணம் ஆகி உள்ளது.

மற்ற பெரும்பாலான ஆராய்ச்சிகள் அந்த அனுபவங்களை அடைந்தவர்களாக தாங்களாக சொல்லிக் கொண்ட ஆட்களைத் திரட்டி நடத்தப்பட்டன. அப்படி சொல்லிக் கொண்டு வந்தவர்களில் பெரும்பாலானோர் தாங்களாக கற்பனை செய்து கொண்டும், அந்த கற்பனையையே உறுதியாக நிஜம் என்று நம்பிக்கொண்டும் வந்தவர்கள் என்பது ஆராய்ச்சிகளில் தெரிந்தது.

பலரை ஒரு அறையில் உள்ளே இருத்தி சற்று தொலைவில் வேறு அறையில் சில பொருள்களை வைத்து அல்லது சில எண்களை கரும்பலகையில் எழுதி வைத்து அதை கண்டுபிடித்துச் சொல்லச் சொன்னார்கள். பெரும்பாலானோர் யூகத்தின் பேரில் சம்பந்தம் இல்லாத பதில்களையே சொன்னார்கள் என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

ஆழ்மன ஆராய்ச்சிகளில் ஆழ்மன சக்தியை நிரூபிக்கும் சில ஆராய்ச்சிகள் இருக்குமானால் அப்படி இல்லாததை சுட்டிக் காட்டும் சில ஆராய்ச்சிகளும் உள்ளன என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

அப்படி ஆழ்மன சக்தி ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு நிரூபிக்க முடியாமல் போனவர்களில் ஒருசிலர் ஒருசில முறை உண்மையாகவே அந்த சக்திகள் பெற்ற அனுபவங்கள் உடையவர்களாக இருந்த போதும் ஆராய்ச்சிக் கூட சூழ்நிலையில் அதை திரும்பவும் செய்து காட்ட முடியாதவர்களாகக் கூட இருக்கலாம்.

ஆனாலும் ஒரு உண்மையைக் கண்டு பிடிக்கும் முன்னால் பல போலிகளை சந்திக்கிற நிலைமை ஆழ்மன ஆராய்ச்சிகளில் இருந்து வருகிறது என்பதை நாம் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.

உண்மையாக உடலை விட்டு வெளியே சென்றதாக நம்பப்பட்ட மனிதர்களின் அனுபவங்களைக் கேட்ட போது பலரும் மூன்று விஷயங்களை ஒருமித்து சொன்னார்கள்.

உடலை விட்டு வெளியேறிய பின்பும் எதோ ஒரு அபூர்வ சக்தியையும், சில அதிர்வலைகளயும் தாங்கள் உணர்ந்ததாகச் சொன்னார்கள்.

விசித்திரமான பலத்த சத்தங்களைக் கேட்டதாகச் சொன்னார்கள்.

தங்கள் உடல்களையும் மற்றவர்களையும் தெளிவாகக் காண முடிந்ததாகச் சொன்னார்கள்.

ஆதாரபூர்வமான மரண விளிம்பு அனுபவ ஆராய்ச்சிகளின் மூலம் உடலை விட்டு வெளியேறியவுடன் மனிதனால் கண்களின் உதவியில்லாமலேயே காண முடிகிறது, காதுகளின் உதவியில்லாமலேயே கேட்க முடிகிறது, மொழியின் உதவியில்லாமலேயே பேச முடிகிறது என்பதை தெளிவாக நாம் அறிந்தோம்.

அந்த ஆராய்ச்சிகளில் பங்கு கொண்ட மனிதர்கள் மகான்கள் அல்ல, அபூர்வ சக்தியாளர்கள் அல்ல, வாழ்ந்த காலத்தில் ஆழ்மன சக்திகளில் நாட்டம் கொண்டவர்களும் அல்ல. நாம் நம் வாழ்க்கையில் அடிக்கடி சந்திக்க முடிந்த சாதாரண மனிதர்கள்.

ஆனாலும் அவர்களால் கூட உடலை விட்டுப் பிரிந்த பின்னர், காண, கேட்க, பேச, புரிந்து கொள்ள முடிகிறது என்பது தான் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய செய்தி...

மரண விளிம்பு அனுபவமல்லாத பிற உடலை விட்டு வெளியேறிய அனுபவ ஆராய்ச்சிகள் கூட இதையே தான் உறுதிபடுத்துகின்றன என்பதையும் பார்த்தோம்.

ஆழ்மன சக்திகளைப் பெறும் முயற்சியில் அடுத்த கட்டத்திற்குப் போகும் முன் இது வரை நாம் ஆங்காங்கே ஆராய்ச்சிகளின் மூலமாக அறிந்த சில முக்கிய அடிப்படை உண்மைகள் மற்றும் தகவல்களைத் தொகுத்து சுருக்கமாக திரும்பவும் நினைவுபடுத்திக் கொள்வோம்.

ஆழ்மன சக்திகள் மனிதனுக்கு இயல்பானவை. மேல்மட்ட மன நிலையிலேயே மேற்போக்காய் வாழ்ந்து பழகிய மனிதன் ஆழத்தில் புதைந்து இருக்கும் தன் இயல்பான சக்திகளை அறியாமலேயே வாழ்கின்றான்.

ஐம்புலன்கள் வழியாகவே எதையும் அறிந்து பழகி விட்ட அவனுக்கு பயன்படுத்தாமல் இருக்கின்ற ஆழ்மன சக்திகள் மேல்மட்ட மனநிலைக்கு அற்புதங்களாகவே தெரிகின்றன.

ஆழ்மன சக்தியைப் பயன்படுத்தி நோய்களைக் குணமாக்க முடியும், தூரத்தில் இருப்பவர்களுக்கு செய்தியை அனுப்பவும் பெறவும் முடியும், தொடாமலேயே பொருள்களைப் பாதிக்க முடியும், உடல் மீது முழுக் கட்டுப்பாடு வைத்துக் கொள்ள முடியும், மற்றவர்கள் எண்ணங்களில் ஆதிக்கம் செலுத்த முடியும், கடந்த கால, நிகழ் கால, எதிர் கால நிகழ்ச்சிகளை அறிய முடியும், உடலை விட்டு வெளியேறி சஞ்சரிக்க முடியும்.

ஆழ்மன சக்தியை அடையத் தடையாக இருப்பவை அவநம்பிக்கையும், அவசரமும், அமைதியின்மையும். அவற்றை விலக்கினால் ஒழிய ஆழ்மன சக்திகள் சாத்தியப்படுவது கஷ்டம்.

ஆழ்மன சக்திகள் கைகூடுவது மேல்மன சலசலப்புகள் குறைந்து ஆழ்மன எல்லைக்குள் நுழையும் போது தான்.

கிட்டத்தட்ட எல்லா ஆழ்மன சாதனையாளர்களும் அப்படிச் சென்றே அற்புத சக்திகளைக் காட்டி இருக்கிறார்கள்.

மேல்மனதின் பரபரப்பும், சலசலப்பும் குறைந்து ஆழ்மன எல்லைக்குச் செல்ல தியானம் மிகவும் உதவுகிறது.

தியானத்தில் மனதை லயிக்கச் செய்து பழக்குவது ஆழ்மன சக்தியை உணரவும், பயன்படுத்தவும் மிக முக்கிய பயிற்சியாகும்.

தியானத்தின் மூலம் ஆல்ஃபா, தீட்டா அலைகள் கொண்ட அமைதியான மனநிலைக்குச் சென்றால் எல்லா உண்மைகளை உணரவும் முடியும், சக்திகளைப் பெறவும் முடியும்...

சவுதி அரேபியா - பகரைன் 28 கி.மீ நீளம் கொண்ட உலகின் இரண்டாவது பெரிய நீளமான கடல் வழி சாலை...


இந்தியாவால் தமிழன் இழந்த நிலம்...


ஆந்திரக்காரனிடம் தமிழன் இழந்த நிலம்...

சித்தூர் வட்டம்
சந்திரகிரி (திருப்பதி) வட்டம்
திருக்காளத்தி வட்டம்
பாமனேறு வட்டம்
குப்பம் ஜமீன் பகுதி

கேரளத்திடம் தமிழன் இழந்த நிலம்...

தேவிக்குளம் வட்டம்
பீர்மேடு வட்டம்
செங்கோட்டை வனப்பகுதி
நெய்யாற்றங்கரை வட்டம்
நெடுமாங்காடு கிழக்குப் பகுதி

கர்நாடகாவிடம் தமிழன் இழந்த மண்...

பாலக்காடு வட்டம்
கொல்லங்கோடு வனப்பகுதி
கொள்ளே காலம் வட்டம்
கோலார் தங்கவயல்
பெங்களூர் தண்டுப்பகுதி

ஸ்ரீலங்காவிடம் தமிழன் இழந்த மண்...

கச்சத்தீவு.

எவ்வளவு இழந்தாலும் ஒருமைபாடென்றும் திராவிடனென்றுமே முழங்குவோம்...

ஏன் என்றால் நாங்கள் மானத் தமிழர்கள் அல்ல... மானங்கெட்ட அடிமைத் தமிழர்கள்... 

தற்சார்புக்கு விரைவாக மாறி விடுங்கள்...


தென் கிழக்காசியாவில் தமிழர்களின் சுவடுகள்...


வனவாசகம் என்ற ஒரு நாடு உண்டு. அதை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?

தமிழர்கள் மலைநாடு என்று அன்போடு அழைக்கப்படும் மலேசியா நாட்டின் தொடர்பு வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்டது என்றும். அறியபட்ட சரித்திர குறிப்புக்களின் வழி இந்தியர்களின் தொடர்பு 5000 ஆண்டுகள் முற்பட்டது எனவும், இராமாயாண மகாபாரதம் நடைப்பெற்ற காலத்தில் தென் கிழக்கு ஆசியா, (ஜா)வா, மலாயா ஆகியவை இந்தியாவோடு இனைந்த பகுதி என்று அறிகிறோம்.

தமிழர் தம் பண்பாட்டில் மதம் இயற்கையாக இடம் பெற்றுள்ளது. நாகரித்தின் தொடக்க காலங்களில் மானுடச் சமூகத்தின் வளர்ச்சியில் மதம் ஆற்றல் மிக்க பங்களிப்பை நிகழ்த்தியிருக்கிறது. உண்மையில் தென்கிழக்கு ஆசிய மக்கள் முதலில் இந்து சமயத்தைத்தான் தழுவினர். அதனால்தான் அவர்களின் பழக்கவழக்கங்களிலும் பண்பாடுகளிலும் மொழிகளிலும் இந்து சமயத்தின் தாக்கம் இன்றும் உணரப்பட்டு வருகிறது

பாரதம் நடைப்பெற்றக் காலத்தில் மலேசியாவுக்கு “பார்த்தன் திக்கு” விஜயம் செய்துள்ளார். பாண்டவர்களின் சிறந்த பார்த்தன் திக்கு யெளவன தீபத்தையும் (ஜாவா) சு(ஸ்)வர்ண தீபத்தையும் (மலேசியா) கண்டு வெற்றிக் கொடி நாட்டியதாய் பாரதம் கூறுகிறது.

பாண்டவர் தலைவர் தருமபுத்திரர் இராச(ஜ) சூய யாகமொன்றை இந்திரப்பிரச(ஸ்)தத்தில் ( இந்தியா) நடத்தினார். இந்த வைபவத்திற்கு பல நாட்டின் மன்னருக்கு அழைப்புக்கள் கிடைத்தன. அன்றைய மலேசியா மன்னர்களும் கலந்து கொண்டனர். சகாதேவன் அன்றைய மலேசியாவின் பகுதிகளுக்கு கண்காணிப்பாளனாக இருந்து அடிக்கடி வங்க வாயிலாக வந்து சென்றுள்ளார். பாண்டவர்கள் யாவாத்தீவில் ஒரு காலத்தில் நாட்டாண்மைக் கொண்டார்கள் என வியாச முனிவர் குறிப்பிட்டுள்ளார்.

கி.மு 274-232 அசோக சக்கரவத்தி பவுத்த சமயப் போதகர்களை பொன்னாடு என்று போற்றப்பட்ட சுவர்ண பூமிக்கு அனுப்பி வைத்தார். சு(ஸ்)வர்ணம் என்றால் தங்கம் என்று பொருள். அந்த காலத்தில் மலேசியாவில் தங்கம் அதிகம் கிடைத்த காரணத்தால் பொன்னாடு என்று அழைக்கப்பட்டன. கி.மு 200ல் மலேசியாவை “இந்திர பாரத பூரா” என்று அழைக்கப்பட்டது. இந்திர என்றால் தங்கம் , பாரத் என்றால் நாடாகும்.

தமிழ் இலக்கியங்களில் கடாரம் என்று கூறப்படும் பழமைமிக்க ஒரு நாடு மலேசியாவில் இன்று கெடா என்று அழைக்கப்படும் மாநிலம் ஆகும்.கடா அல்லது கயிடா என்பது யானைகளை கன்னி வைத்து பிடிக்கும் இடம் என்று கூறப்படுகிறது. ஆனால் கெடா என்ற வார்த்தை அந்த அர்த்தத்தில் உருவான ஒரு பொருளாக இருக்காது என்பது சிலரின் வாதம்.

பழந்தமிழ் கல்வெட்டுக்கள் கெடாவை கடாரம் அல்லது கழகம் என்று கூறுகின்றது. கடாரம் என்பதின் பொருள் என்னவென்றால் அகன்ற பாணை அல்லது கருமை நிறம் என்று சில சரித்திர ஆராச்சியாளார்கள் கூறுவதுண்டு. அரபியரும் பார்சிகாரர்களும் வட மலேசிய தீபகற்பத்தை கிலா, கலா அல்லது குவலா என்று அழைத்ததுண்டு.

3000 ஆண்டுக்குமுன், இந்திய வேந்தர்கள் கடல் கடந்து கடாரம் வந்த பொழுது அங்கே தவளைகள் சண்டையிட்டுக் கொண்டிருந்தனவாம் அதனால் தான் கடாரத்தை “காத்தா” என்று அழைத்தனர். காத்தா என்றால் மலாய் மொழியில் தவளை என்று பொருள். மலாய்க் காரர்களின் வாய் மொழி கதைகளில் சொல்லப்படும் சில காதல் புனைவு கதைகளிலும் வரலாற்று தகவல்ளிலும் லங்காசுக என்ற ஒரு பண்டைய அரசாங்கம் கெடாவில் இருந்ததகவும் அதன் பண்டைய எச்சங்கள் இன்னும் இருபதாகவும் கூறுகின்றனார்.

பண்டைய இந்திய நாட்டு வியபாரிகள் கெடாவை காத்தாரை என்று அழைத்தாக சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றனர். கடாரம் அல்லது கெடா அன்றைய இந்திய வியபாரிகளுக்கு மலை நாட்டின் அடையாள மார்க்கமாகவும் இளைப்பாறி தனது கடற்பயணத்தை கிழக்கு ஆசியாவுக்கு தொடரும் தளமாகவும் விளங்கி உள்ளது. ஆறாம் நூற்றாண்டில் லங்காசுக என்ற அரசாங்கதின் மைய இடமாகவும் லெம்ப பூஜாங் என்று சொல்லபடுகின்ற பழைய வரலாற்று சின்னம் இந்தியர்களின் கலச்சார படை எடுப்புக்கும் நாகரிக அடையாள சின்னமாக திகழ்கிறது.

தமிழர்கள் கி.பி முதல் நூற்றாண்டிலும் அதற்கு முன்பும் தலைச்சிறந்த மாலுமிகளாகவும் படைவீரர்களாகவும் வர்த்தகர்களாகவும் திகழ்ந்தார்கள். வர்த்தக சம்மந்தமாக இந்திய தமிழ் மாலுமிகள் கடல் கடந்து மலேசியாவுக்கு வந்தவர்கள், நாளாடைவில் இங்கு குடியிருப்புக்களையும் அரச அமைப்பையும் எற்படுத்தி சமயம் கலைக் விவசாயம் பண்பாட்டுக் கூறுகளையும் எழுப்பி இருக்கின்றார்கள். காடுகளிலும் குகைகளில் வாழ்ந்த சுதேசிகளுக்கு விவசாயத்தையும் நாகரீகத்தையும் கற்றுக் கொடுத்திருக்கின்றார்கள் நம் தமிழர்கள்...

உயிர்க்கொல்லி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக லண்டன் மாநகரில் இன்று நடைபெற்ற கண்டன போராட்டம்...


அரசாங்கத்தை கேள்வி கேளுங்கள்...


ஏன்..? ப்ளோரைடூ கலந்த நீரை தருகிறீர்கள்..?

ஏன்.? மரபணு மாற்றப்பட்ட விதைகளை விதைக்கிறீர்கள்..?

ஏன்..? தடுப்பூசி முறையை கட்டாயப் படுத்துகிறீர்கள்..?

ஏன்..? பூச்சி மருந்து அடிக்கப்பட்ட காய்கறிகளை அனுமதிக்கிறீர்கள் என்று..

இவை அனைத்திற்கும் அவர்களிடம் இருந்து உண்மையான பதில்கள் என்றைக்கும் வர்றாது..

நீங்களே இதை தேட தொடங்குங்கள்...

பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்...


பூசணிக்காய்க்கு வெண்பூசணி, கல்யாணப்பூசணி என்ற பெயரும் உள்ளது..

காய்கறி வகைகளில் ஒன்றான, இதைச் சமைத்துச் சாப்பிட்டால் நரம்பைப் பற்றிய நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண் மேகவெட்டை, பிரமேக நோய் ஆகியவை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும். உடல் சூட்டைத் தணிக்கும். சிறுநீர் வியாதிகளை நீங்கும். சதா காலமும் உடல் வலி இருப்பவர்கள் பூசணிக்காயை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல்வலி தீரும். புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்கு சிகிச்சையளிக்கும் போது தினசரி பூசணிக்காய் சேர்த்து சமைத்த உணவைக் கொடுக்க புத்தி சுவாதீனம் படிப்படியாக மாறி நல்ல நிலைமைக்குத் திரும்பும்.

மருத்துவத்தில் பூசணிக்காயின் கதுப்பு, நீர்விதை ஆகியவை பயன்படுத்தப் படுகின்றன. நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது. ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் சிறுநீரக நோய்கள், ரத்தம் கலந்த சிறுநீர் வெளியேறுதல், பெண்களின் வெள்ளைப் போக்கு நீக்கவும் வெண்பூசணி பயன்படுத்தப்படுகிறது.

வெண்பூசணிக்காயின் சாறு 30 மில்லியளவு எடுத்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இதய பலவீனம் நீங்கும். ரத்தசுத்தியாகும்.

பூசணிக்காய் சாற்றைத் தயாரித்து தினசரி 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் தொடர்ந்த இருமல், நெஞ்சுச்சளி குணமாகும். நீரிழிவு நோய் கட்டுப்படும். அதிகத் தாகத்தைக் குறைக்கும். உடம்பின் எந்தப் பாகத்திலாவது ரத்தக்கசிவு ஏற்பட்டால் ரத்தக்கசிவை நிறுத்திவிடும்.

பூசணிக்காய் சாறு 30 மில்லியளவு சர்க்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் வலிப்பு நோயின் தீவிரம் குறைந்துவிடும்.

பூசணிக்காய் சாறு 120 மில்லியளவு தயாரித்து ஒரு தேக்கரண்டி தேனும், தேவையான அளவு சர்க்கரையும் கலந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகத்தில் ஏற்படும் நோய்கள் நிவர்த்தியாகும். சிறுநீரில் ஏற்படும் ரத்தம், சீழ் கலந்த சிறுநீர் வெளியேறுதல் நின்றுவிடும்.

பூசணிக்காயின் கதுப்புப் பகுதியை மட்டும் (தோல், பஞ்சுப் பகுதி நீக்கி) சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வேகவைக்கவேண்டும். வெந்தபின் இதை எடுத்து சாற்றைப் பிழிந்து நீரைச் சேகரித்து 60 மில்லியளவு தயாரித்து இதில் சிறிது கற்கண்டு சேர்த்து தினம் 2_3 வேளை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பாதிப்பால் ஏற்பட்டு வரும் மஞ்சள் காமாலை நோய் குணமாகும். தடையில்லாமல் சிறுநீர் வெளியேறும்.

பூசணிக்காயின் விதைகளைச் சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேக புஷ்டி உண்டாகும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தி மிகுதியாக உண்டாகும். உடல் சூட்டைத் தணிக்கும். பித்த நோயைக் கண்டிக்கும். பித்தவாந்தியை நிறுத்தும்.

வெண்பூசணி லேகியம்...

நன்கு முற்றிய பூசணிக்காயின் கதுப்புப் பகுதியை மட்டிலும் தேவையான அளவு எடுத்துக்கொண்டு இதில் 3.500 கிராம் எடுத்து சிறுசிறு துண்டுகளாக வெட்டி சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைத்து எடுத்து மிக்சியில் நன்றாக மசியும்படி அரைத்துக் கொண்டு வடிகட்டி, நீரையும் கதுப்பையும் தனித்தனியாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். வடித்து எடுக்கப்பட்ட பூசணிச் சக்கையை 500 கிராம் நெய்யில் மொற மொறப்பாகும்படி வறுத்து எடுத்து, நெய்வேறு, பொறிக்கப்பட்ட சக்கை வேறாக வைத்துக்கொள்ள வேண்டும்.

பூசணிக்காய் பிழிந்த சாற்றில் கல்கண்டு சேர்த்து பாகுபதம் வரும்வரை காய்ச்சி, இந்த பாகில் வறுத்த பூசணிக்காய்த் தூளைக் கொட்டிக் கிளற வேண்டும். திப்பிலி, சுக்கு, சீரகம் இவற்றின் பொடிகள் தலா 70 கிராம், லவங்கப்பட்டை, ஏலரிசி, பச்சிலை, தனியா, மிளகு இவற்றின் பொடிகள் தலா 20 கிராம். இவைகளை மேற்கண்ட மருந்துடன் கலந்து, வடித்து வைத்துள்ள நெய்யையும் சேர்த்து, நன்றாக எல்லா மருந்துகளும் ஒன்று சேர கிளறி வைத்துக் கொண்டு வேளைக்கு 10 கிராம் அளவில் தினசரி 2_4 வேளை சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா குணமாகும். சுவாச உறுப்புக்கள் பலப்படும். இருதய பலவீனம் நீங்கி பலப்படும். நல்ல பசியுண்டாகும். மலச்சிக்கல் இருக்காது. பொதுவாக உடல் ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாக்கும். ஈசனோபைல் நிவர்த்தியாகும். டான்சில்ஸ் தொல்லைக்குச் சிறந்தது.

பூசணிக்காயைச் சாறு எடுத்து 30 மில்லி முதல் 60 மில்லி வரை வைத்துக் கொண்டு இதில் தேன் ஒரு தேக்கரண்டி சேர்த்து தினசரி கொடுத்து வந்தால், ஒல்லியான சிறுவர்களுக்கு சதைப்பிடிப்பு ஏற்படும். அழகான தோற்றத்திற்கும், எடை அதிகரிப்பதற்கும் நோய் எதிர்ப்புச் சக்தி கூடி ஆரோக்கியமான உடல் தேறவும் நல்ல பலனைக் கொடுக்கும்.

சிறுநீரகச் செயல்பாடு குறைந்தவர்களுக்கு பூசணிக்காயில் 25 கிராம் அளவிற்கு வெட்டி எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்து வடிகட்டி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகச் செயல்பாடு சீராக அமையும்.

சிறுநீரகம் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் பூசணிக்காய்ச் சாறு 120 மில்லியில் ஒரு தேக்கரண்டி சர்க்கரையும், இரண்டு தேக்கரண்டி தேனும் கலந்து சாப்பிட்டு வந்தால், நோய்கள் முழுமையாக நிவர்த்தியாகும்.

பூசணிக்காயில் மருத்துவக் குணங்கள் அதிகம் இருப்பதால் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பல மருந்துகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்குக் கிடைக்கிறது. தனிப்பட்டவர்கள் மருந்து தயாரிக்கமுடியாத நிலையில் தயாரிக்கப்பட்ட மருந்துகளைப் பயன்படுத்திப் பயன்பெறலாம்.

இந்த லேகியத்தை வாங்கிச் சாப்பிட்டு வந்தால், ரத்தபித்தம், சயம், இளைப்பு, பலவீனம், இதய நோய், இருமல் உள்ளவர்கள் நல்ல நோய் நிவாரணம் கிடைப்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

வெண்பூசணி லேகியம்...

இந்த லேகியத்தை வாங்கிச் சாப்பிட்டால் காமாலை நோய், இரத்த சோகை, எலும்புருக்கி நோய், அஸ்தி வெட்டை, பிரமேகத்தால் ஏற்பட்ட வெள்ளை நோய் தீரும். உடல் வலிமை பெறும். தாது விருத்தி ஏற்பட்டு காம இச்சை மிகுதியாகும். வெண்பூசணி நெய் அல்லது கூழ்பாண்ட கிருதம் என்ற இந்தப் பூசணி நெய்யைச் சாப்பிட்டு வந்தால் சூலை நோய்கள் நிவர்த்தியாகும். தோல் நோய்கள், பெண்குறிப்புற்று முதலியன நீங்கும். உடல் சூடு, சூட்டுடன் எரிச்சல், நீர்க்கட்டு, நீர்க்குத்து முதலியன ஆண்களுக்கும், பெண்களுக்கும் நிவர்த்தியாகும். அஸ்திவெட்டை, கிராணிக்கழிச்சல், எலும்புருக்கி (T.B.) முதலிய கொடிய நோய்கள் நிவர்த்தியாகும்..

என்ன நடக்குது நாட்டுல.. பணம் வந்தால் கஷ்டம் தீரனும்.. ஆனால் இங்கு அதிகமாகி உள்ளதே...


மாவட்ட வாரியாக முக்கிய தமிழக நதிகள்...


1. கடலூர் மாவட்டம் ​நதிகள்  : தென் பெண்ணை, கெடிலம்.

2. விழுப்புரம் மாவட்டம் ​நதிகள் : கோமுகி.

3. காஞ்சிபுரம் மாவட்டம் ​நதிகள் : அடையாறு, செய்யாறு, பாலாறு.

4. திருவண்ணாமலை மாவட்டம் நதிகள் : தென்பெண்ணை, செய்யாறு.

5. திருவள்ளூர் மாவட்டம் ​நதிகள் : கூவம், கொஸ்தலையாறு, ஆரணியாறு.

6. கரூர் மாவட்டம் ​நதிகள் : அமராவதி.

7. திருச்சி மாவட்டம் ​நதிகள் : காவிரி, கொள்ளிடம்.

8. பெரம்பலூர் மாவட்டம் ​நதிகள் : கொள்ளிடம்.

9. தஞ்சாவூர் மாவட்டம் ​நதிகள் : வெட்டாறு, வெண்ணாறு, கொள்ளிடம், காவிரி.

10. சிவகங்கை மாவட்டம் ​நதிகள் : வைகையாறு.

11. திருவாரூர் மாவட்டம் ​நதிகள் : பாமணியாறு, குடமுருட்டி.

12. நாகப்பட்டினம் மாவட்டம் ​நதிகள் : வெண்ணாறு, காவிரி.

13. தூத்துக்குடி மாவட்டம் ​நதிகள் : ஜம்பு நதி, மணிமுத்தாறு, தாமிரபரணி.

14. தேனி மாவட்டம் ​நதிகள் :  வைகையாறு.

15. கோயம்புத்தூர் மாவட்டம் ​நதிகள் : சிறுவாணி, அமராவதி.

16. திருநெல்வேலி மாவட்டம் ​நதிகள் : தாமிரபரணி, மணிமுத்தாறு, அடவிநயனார், உள்ளாறு, செண்பகவல்லி, கடனாநதி. கொடு முடியாறு, பச்சையாறு, நம்பியாறு, கருமேனியாறு.

17. மதுரை மாவட்டம் ​நதிகள் : பெரியாறு, வைகையாறு.

18. திண்டுக்கல் மாவட்டம் ​நதிகள் : பரப்பலாறு, வரதம்மா நதி, மருதா நதி.

19. கன்னியாகுமரி மாவட்டம் ​நதிகள் : கோதையாறு, பறளியாறு, பழையாறு.

20. இராமநாதபுரம் மாவட்டம் ​நதிகள் : குண்டாறு, வைகை.

21. தருமபுரி மாவட்டம் ​நதிகள் : தொப்பையாறு, தென்பெண்ணை, காவிரி.

22. சேலம் மாவட்டம் ​நதிகள் : வசிட்டாநதி, காவிரி.

23. விருதுநகர் மாவட்டம் ​நதிகள் : கௌசிகாறு, வைப்பாறு, குண்டாறு, அர்ஜுனாறு.

24. நாமக்கல் மாவட்டம் ​நதிகள் : உப்பாறு, நெய்யல், காவிரி.

25. ஈரோடு மாவட்டம் ​நதிகள் : பவானி, காவிரி.

இந்த தீரங்களை, சரியாக பராமரிக்காமல் அங்குள்ள மணலையும் அள்ளி, இயற்கையின் அருடகொடை நாசப்படுத்திவிட்டோம். சிறு குளங்கள் போன்ற நீர் நிலைகள் கூட காணாமல் போய்விட்டது.

தமிழக நீர்நிலைகள்: நாட்டின் விடுதலைக்கு முன் அதாவது 1947 ல் அன்றைய சென்னை மாகாணமான இன்றைய தமிழக நிலப்பரப்பில் மட்டும் 50000 நீர் நிலைகள் இருந்தன.

இன்றைக்கு பாதிக்கு குறைவாக 20000 நீர் நிலைகள் இருப்பதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றனர்.

மதுரை, சென்னை மாநகர்களைச் சுற்றி 500 ஏரிகள் - குளங்கள் காணாமல் போய்விட்டன.

இன்றைக்கு தமிழகத்தில் 18789 பொதுப்பணித்துறை ஏரிகள், 29484 கிளை வாய்க்கால்கள், 86 ஆறுகள், 200 அணைகள் என்ற புள்ளிவிபர கணக்கில் தமிழக நீர் நிலைகள் உள்ளன. நிலத்தடி நீரும் மிகவும் குறைந்து விட்டது. விவசாய சாகுபடி நிலங்களும் குறைந்துக் கொண்டே வருகின்றன. நீர் நிலைகளில் நீரில்லாமல், நிலத்தடி நீரும் குறைந்து விட்ட்தால் 1.10 கோடி ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளன.

இதற்கெல்லாம் காரணம் என்ன? ரியல் எஸ்டேட் என்று சமூக விரோதிகள் நீர் நிலைகளை கபளிகரம் செய்து தங்களுடைய சொத்துகளைப் போல விற்று கொழுத்துப் போய் விட்டனர்.

இருக்கின்ற நீர் நிலைகளை தூர் வாராமல், மதகுகளை சரிவர பழுது பார்க்காமல், நீர் நிலைகளில் கருவேல மரங்கள் வளர்வதை தடுக்காமல் இருந்த நிலையில் நீர் நிலைகளுடைய பயன்பாடு குறைந்து விட்டது.

மணல் திருடர்கள் ஆறுகளிலும் ஏரிகளிலும் உள்ள மணலை கொள்ளை அடித்த்தனால் நீர் வரத்துகளெல்லாம் குறைந்து விட்டன.

இயற்கையின் அருட்கொடையான அந்த நீர் நிலைகளை நாம் சரிவர பாதுகாக்காமலும், ஆயக்காட்டு நலன்களை புறந்தள்ளியதால் இன்றைக்கு இவ்வாறான கேடுகளை நாம் சந்திக்க வேண்டியுள்ளது.

ஜன நாயகம் என்று சொல்லிக் கொண்டு திருட்டுத் தொழிலுக்கும் துணை போகும் அரசுகளால் தான் இந்த மாதிரியான கொடூரங்கள் நடந்து வருகின்றன.

மன்னராட்சியில் கூட மக்களுடைய பங்களிப்பில் குளங்களும் நீர் நிலைகளும் வெட்டப்பட்டு மக்களாலேயே பராமரிக்கப்பட்டது. அது அக்காலம்.

இன்றைக்கு நாம் ஓட்டுப் போட்டு அனுப்பியவர்கள் இயற்கை வளங்களைச் சுரண்டக் கூடிய கொள்ளைக்கார்ர்களுக்கு ஆதரவாளர்களாக உள்ளனர்.

தாது மணல் ஆற்று மணல் யார் வீட்டு சொத்து மாதிரி மலை முழுங்கி மகாதேவர்கள் அள்ளிச் செல்வதை மக்கள் சக்தி பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது. ஏனென்றால் ஓட்டுக்குப் பணம் வாங்கி விட்டோமே…. வெற்றிப் பெற்றவர்களெல்லாம் மணல் கொள்ளைக்கார்ர்கள், ரியல் எஸ்டேட்காரர்களிடம் தானே காசை வாங்கி ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார்கள். வேறு என்ன செய்ய முடியும்...

ஆடுங்கடா பாஜக பினாமி அதிமுக ஊழல் அடிமைகளே... இன்னும் சிறிது நாட்கள் தான்...


சக்தி வாய்ந்த புற்றுநோய் கொல்லியாக காட்டு ஆத்தாப்பழம்...


நோய்களில் 'உயிர்க்கொல்லி நோய்' என அஞ்சப்படும் சில வகைகளில் எல்லா தரப்பு மக்களிடையேயும், வயது வித்தியாசமின்றி பரவி வருவது புற்றுநோயே..

ஆரம்ப கட்டத்திலேயே கண்டு பிடித்து தகுந்த சிகிச்சையை உடனுக்குடன் அளித்தால் ஓரளவுக்கு காப்பாற்றி விடலாம் என்பது ஆறுதலான விஷயமாக இருந்தாலும், அவ்வாறு தப்பிப் பிழைத்த ஒருசிலரின் நிகழ்வுகளைத் தவிர பல பேருக்கு உயிரைப் பறித்துவிடும் அளவுக்கு தான் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது.

இதனால் மக்கள் மத்தியில் புற்றுநோய் பற்றிய பயம் என்றுமே மனதில் குடிகொண்டுள்ளது. மேலும் மருத்துவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் இந்த நோய் கடுமையான ஒரு சவாலாகவும் உள்ளது.

ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பிறகு அதற்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பயனற்று போய்விடுவதால் மருத்துவர்களால் ஒன்றும் செய்யமுடியாமல் கை விரித்து விடுகிறார்கள்.

பல வகைகளில் உருவாகி மக்களை ஒருகை பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நோயானது பெரும்பாலான உறுப்புகளை தாக்குவதாக உள்ளது.

இவற்றில் சிலவகை புற்றுநோய் முன் அறிகுறியே இல்லாமல் முற்றிவிட்ட நிலையில் தாக்குவதும் உண்டு.

அதனால் எந்த மருந்து புற்றுநோய்க்கென அறிமுகப் படுத்தப்பட்டாலும் அதை மனித நேயமுள்ள அனைவரும் உடனுக்குடன் பகிர்ந்துக் கொண்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது இன்றைய காலக்கட்டத்தில் மிக அவசியமான ஒன்றாகும்.

புற்றுநோய் வந்தபிறகு கொடுக்கப்படும் மருந்துகள் மட்டுமே இன்று அறிமுகத்தில் உள்ளன. ஆனால் இதற்கான தடுப்பு மருந்துகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

அதேசமயம் இயற்கையான உணவுப் பொருட்களிலேயே புற்றுநோயின் எதிர்ப்புச் சக்தியை இறைவன் கொடுத்துள்ளான்.

அவற்றில் மிகவும் சக்தி வாய்ந்த புற்றுநோய் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை (Chemo) மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.

அவ்வளவு சக்தி வாய்ந்த கேன்சர் கில்லராக இருக்கும் இந்தப் பழம் அமெரிக்காவின் அமேசான் மழைக் காடுகளிலும், கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்காவிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாகவும் விளைகிறது.

சகோதர நாடான இலங்கையிலும் மற்றும் வியட்நாம், கம்போடியா, பிரேசில், போர்த்துகல் போன்ற நாடுகளில் பழங்களோடு பழமாக சாதாரண உபயோகத்தில் மட்டுமே உள்ளது.

மலேஷியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் தெரு வியாபாரிகள்கூட பழ ஜூஸ், ஷர்பத், மில்க் ஷேக் போன்றவை தயாரிக்க சர்வ சாதாரணமாக இந்தப் பழத்தை பயன்படுத்துகிறார்கள்.

மெக்ஸிகோவில் ஐஸ்கிரீம் வகைகளிலும், ஃப்ரூட் ஜூஸ் பார்லர்களிலும் அதன் சுவைக்காக மிகவும் பிரபலமான பழமாக பயன்படுத்தப்படுகிறது.

ஏன், நம் நாட்டில் கேரளாவிலும் "ஆத்தச்சக்கா" (aatha chakka) என்ற பெயரில் மக்களின் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் பெரும்பாலான மக்கள் அதன் பலன் தெரிந்து பயன்படுத்துவதாக தெரியவில்லை.

இதன் மரம் Graviola Tree என்று அழைக்கப்படுகிறது.

பழத்தின் மேற்புறத்தில் பலாப்பழத்தைப் போன்று, ஆனால் சற்று அதிகமான இடைவெளியில் முட்கள் இருக்கும்.

இவை சாதாரண ஆத்தாப் பழத்தின் அளவுகளிலும், அதிக பட்சம் 20-30 செ.மீ. வரை நீளத்திலும், 2.5 கிலோ எடை வரையிலும் விளைகிறது.

அதிகமான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட இந்தப் பழத்தில் கார்போஹைட்ரேட், பிரக்டோஸ் மற்றும் கணிசமான அளவில் வைட்டமின் C, வைட்டமின் B1, வைட்டமின் B2 போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன.

இதன் பலனை அனைவரும் அடைந்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக, இந்தப் பழம் எந்த நாடுகளில்/மொழிகளில், என்னென்ன பெயர்களில் அழைக்கப்படுகிறது என்ற விபரங்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை: "காட்டு ஆத்தா" (சில வட்டாரங்களில் "அன்னமுன்னா பழம்" அல்லது "அண்ணவண்ணா பழம்" என்ற பெயரில் அறிமுகத்தில் இருப்பதாக சொல்கிறார்கள்).

ஆங்கிலம்: "Soursop", "Prickly Custard Apple", "Soursapi".

மலையாளம்: "Aatha Chakka".

பிரெஞ்ச்: "Corossol", "Cachiman Epineux"
அரபி: "سورسوب".

ஸ்பானிஷ்: "Guanábana ", "Anona".

ஜெர்மன்: "Sauersack", "Stachelannone", "Flashendaum".

இந்தோனேஷியா: "Sirsak" & "nangka landak".

பிரேசில்: "Graviola".

மலேஷியா: "Durian Belanda".

கிழக்கு மலேஷியா: "Lampun".

தென் வியட்நாம்: "Mãng cầu Xiêm".

வட வியட்நாம்: "Quả Na".

கம்போடியா: "Tearb Barung" ("Western Custard-apple fruit").

போர்த்துகல்: "Curassol", "GraviolaSee...

உன்னை நேரடியா தாக்குனா தப்பிச்சிடுவ அதனால தான் கொஞ்சம் கொஞ்சமா போதை ஏற்றி சாகடிக்குறான்...


உலகின் வரலாறு - ஒரு வரலாற்று ஆய்வு...


பக்தி இயக்கம்....

சமணமும் பௌத்தமும் ஒருக் காலத்தில் கோலோச்சிக் கொண்டு இருந்த மண்ணில் இன்று அவற்றின் சுவடே இல்லா வண்ணம் இருக்கும் நிலைக்கு வழிவகுத்த ஓர் இயக்கம்...

உண்மையினைச் சொல்ல வேண்டும் என்றால் இன்றைய இந்தியாவின் இன்றைய நிலைக்கு -இந்து மதம் என்று நாம் இன்று கொண்டாடும் மதத்திற்கு அடிப்படைக் காரணியாக ஒரு இயக்கம் அமைந்து இருக்கும் என்றால் அது இந்த இயக்கம் தான்.

இவ்வியக்கம் இல்லை என்றால் சைவமும் இல்லை... வைணவமும் இல்லை... இந்தியா இன்னும் ஒரு சமணத் தேசமாகவோ அல்லது புத்த தேசமாகவோ இருந்திருக்கக் கூடும். ஆனால் ஏனோ தெரியவில்லை, இன்று இந்து சமயத்தின் பெருமைகளைப் பற்றிப் பறைசாற்றுவோர்,

அச்சமயத்தினை போற்றிப் பாதுகாத்து வளர்த்த இந்த இயக்கத்தினைப் பற்றிப் பெரிதும் கண்டுக் கொள்வதில்லை. அதைக் கண்டுக் கொள்ள அவர்களுக்குத் தேவையும் இல்லை.

ஆனால் இந்தியாவினுள் சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கைகள் எவ்வாறு புகுந்தன என்பதனை நாம் அறிந்துக் கொள்ள, கவனிப்பாரின்றி இந்திய வரலாற்றின் முக்கியப் பக்கங்களை அலங்கரித்துக் கொண்டு இருக்கும் இந்த இயக்கத்தினைப் பற்றி நாம் அறிந்துக் கொள்ளத் தான் வேண்டி இருக்கின்றது. ஏனெனில் மறைக்கப்பட்ட அந்தப் பக்கங்களில் தான் மறுக்கப்பட்ட நீதிகளும் உண்மைகளும் புதைந்துக் கிடக்கின்றன.

"கடவுள் என்றொருவர் இல்லவே இல்லை..." என்றுக் கூறிக் கொண்டு சமணத் துறவிகளும், கடவுளைப் பற்றி எதுவுமே சொல்லாது அன்பினை மட்டும் போதித்துக் கொண்டு புத்த துறவிகளும் சுற்றிக் கொண்டு இருந்த தமிழகத்தில் தான் "இறைவன் இல்லையா... என்னய்யா சொல்கின்றீர்... இதோ என் இறைவன் இங்கேயே இருக்கின்றானே... காணும் பொருட்கள் அனைத்திலும் நீக்கமற நிற்கின்றானே... அவ்வாறு இருக்கும் அவனை எவ்வாறையா இல்லை என்கின்றீர்" என்றவாறே கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் புத்த சமணக் கருத்துக்களுக்கு மாற்றாக உருவான எழுச்சி தான் இந்த பக்தி இயக்கம் என்று நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம்.

இறைவன் இல்லை என்று அதுவரை சொல்லி வந்த மண்ணில் திடீர் என்று "இறைவன் இருக்கின்றான்...அவன் யாதுமாகி நிற்கின்றான்" போன்றக் கருத்துக்கள் பரவ ஆரம்பிக்கின்றன. ஆங்காங்கே ஆழ்வார்களும் நாயன்மார்களும் தோன்ற ஆரம்பிக்கின்றனர். அவர்களின் கைப் பற்றி மெதுவாய் வைணவமும் சைவமும் வளர ஆரம்பிக்கின்றன.

தமிழ் மண்ணில் பக்தி மணம் கமிழ ஆரம்பிக்கின்றது. தெருவெங்கிலும் பக்திப் பாடல்கள் இசைக்கப் படுகின்றன. மன்னர்கள் மாறுகின்றனர். மக்களும் மாறுகின்றனர். 'அன்பே சிவம்' என்று அன்பின் வழியில் மக்கள் இறைவனைக் காண முயல்கின்றனர். தமிழகம் சமணக் கோலத்தினைத் துறந்து சைவ வைணவக் கோலத்திற்கு மாற ஆரம்பிக்கின்றது.

நல்ல மாற்றம் தான்...

ஆனால் அன்பினை அடிப்படையாகக் கொண்டு மக்கள் இறைவனை உணர வேண்டும்.... வாழ்வினை நல்வழியில் வாழ வேண்டும் என்பதற்காக ஆரம்பித்த இந்த எழுச்சியினை, சமணத்தினையும் புத்ததினையும் இந்த மண்ணை விட்டு நீக்குவதற்காகவும் மேலும் அச்சமயங்களால் தளர்ச்சி உற்றிருந்த தங்களது வேத நெறிக் கொள்கைகளை மேம்படுத்திக் கொள்வதற்காகவும் சில ஆரியர்கள் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பிக்க, மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட அந்த மாற்றம் தடுமாற ஆரம்பிக்கின்றது.

அந்தத் தடுமாற்றம் ஆரம்பிக்கும் காலம் கி.பி ஏழாம் நூற்றாண்டு. ஆரம்பித்து வைப்பவர் திருஞானசம்பந்தர்..

"என்ன திருஞானசம்பந்தரா?... தேவாரம் இசைத்த சம்பந்தரையா சொல்லுகின்றீர்... சைவம் வளர்த்த அவரைப் பற்றி எப்படி ஐயா இவ்வாறு உங்களால் கூற முடிகின்றது..." என்றுக் கேட்கின்றீர்களா... ஒரு கணம் பொறுங்கள்... இதோ அவர் எழுதிய தேவாரத்தின் சில வரிகளைப் படியுங்கள்.

"பெண்ணகத்து எழில்சாக்கியயப் பேய் அமன் தென்ணாற் கற்பழிக்கத் திருவுள்ளமே"

மேலே உள்ள வரிக்கு விளக்கம் தரத் தேவை இல்லை என்றே நினைக்கின்றேன். சமண சமயத்தின் மேல் உள்ள வெறியின் காரணமாக சமணம் மற்றும் புத்தப் பெண்களை சீரழிக்க வேண்டும் என்று வேண்டுகின்றார் சம்பந்தர்.

"அன்பே சிவம்" என்று சைவம் கூறிக் கொண்டு இருக்க அக்கூற்றுக்கு மாறாக ஞானசம்பந்தர் பாடி இருப்பது எவ்வாறு சைவத்தினை வளர்த்திருக்கும். இரண்டுக் கருத்துக்களும் முரண்பட்டு அல்லவா இருக்கின்றன. அப்படி என்றால் ஞானசம்பந்தர் வளர்த்தது என்ன?

"என்னங்க சொல்றீங்க... வரலாறு உங்களுக்குத் தெரியுமா... சமணர்கள் சைவர்களை என்னப்பாடு படுத்துனாங்க அப்படின்னு உங்களுக்கு தெரியுமா... திருநாவுக்கரசர் மீது மத யானையை ஏவி விட்டும், அவரை கடலில் தள்ளியும், மேலும் பல இன்னல்களும் தந்தனரே. அவர்கள் அச்செயல்களை சைவர்கள் மேல் புரிந்தப் பொழுது கோபத்தில் திருஞானசம்பந்தர் ஒரு பாடலைப் பாடி விட்டார். அதைப் போய் பெரிது படுத்துகின்றீர்களே" என்கின்றீர்களா. சரி அவ்வாறே வைத்துக் கொள்வோம்.

அப்படி சைவர்களை சமணர்கள் கொடுமைப்படுத்தியதால் திருஞானசம்பந்தர் இப்பாடலை பாடி விட்டார் என்றால் அவரின் பாடல்களில் அந்தச் செய்திகள் தான் வெளிப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் எதற்கு ஐயா அவர் சைவத்திற்கு துளியும் தொடர்பில்லாத வேள்விகளைப் பற்றியும் வேதங்களைப் பற்றியும் பாடி இருக்கின்றார்.

"வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
ஆத மில்லி அமணொடு தேரரை
வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே..."

"அந்த ணாளர் புரியும் அருமறை
சிந்தை செய்யா அருகர் திறங்களைச்
சிந்த வாதுசெ யத்திரு வுள்ளமே..."

"வேட்டு வேள்வி செயும்பொரு ளைவிளி
மூட்டு சிந்தை முருட்டமண் குண்டரை
ஓட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே..."

மேலே உள்ள வரிகள் மூலம் திருஞானசம்பந்தர் சமணர்களை வெறுக்கின்றார் என்று தெரிய வருகின்றது. ஆனால் எதற்கு அவர்களை வெறுக்கின்றார் என்பதே நாம் அறிய வேண்டியது. சமணர்கள் வேத வேள்விகளை மதிப்பதில்லையாம்... அந்தணர்கள் சொல்லையும் கேட்பதில்லையாம்... அதனாலே திருஞானசம்பந்தர் அவர்களைச் சாடுகின்றார். அதனாலையே சாடுகின்றாரே தவிர அவர்கள் சைவத்தினை
மதிப்பதில்லை என்பதற்காக சாடவில்லை.

இதன் மூலம் திருஞானசம்பந்தர் சைவத்தினை வளர்க்கவில்லை என்றும் சைவத்தின் வாயிலாக வேத நெறிகளையே வளர்த்தார் என்றும் நாம் அறிய முடிகின்றது.

திருஞானசம்பந்தரின் இந்தச் செயல்பாடுகள் மூலம் சமணம் மற்றும் புத்தத்தினால் வீழ்ந்திருந்த வேத வேள்விக் கருத்துக்கள் சைவத்தின் கைப்பற்றிக் கொண்டு சமணத்தினையும் புத்தத்தினையும் வேரறுக்க கிளம்புகின்றன.

சைவ நெறி... சைவ வெறியாகின்றது...

அன்பினைப் போதித்த மதம் 8000 சமணர்களை மதுரையில் கழுவில் ஏற்றுகின்றது. அன்பும் பக்தியும் பரவிய வீதிகளில் வெறியும் பயமும் பரவ ஆரம்பிக்கின்றது.

சைவமும் சரி... பக்தி இயக்கமும் சரி... திசை மாற ஆரம்பிக்கின்றன. இதனைக் கண்ட திருநாவுக்கரசர் போன்றோர்

"நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன்
நாவினுக்குஅரையன், நாளைப்போவானும்,
கற்ற சூதன், நல் சாக்கியன், சிலந்தி,
கண்ணப்பன், கணம்புல்லன், என்று இவர்கள்
குற்றம் செய்யினும் குணம் எனக் கருதும்
கொள்கை கண்டு, நின் குரைகழல் அடைந்தேன்"

என்றுக் கூறிச் சென்றாலும் மதம் பிடித்த யானை எவ்வாறு கட்டுக்கடங்காது இருக்குமோ அதேப்போல் மக்களும் கட்டுக்கடங்காது இருக்கின்றனர். அவர்களுக்கு பிடித்து இருந்தது சைவம் மற்றும் வைணவ மதம்.

வேத நெறிகள் நீண்ட காலத்திற்கு பின் மீண்டும் பலம் பெற ஆரம்பித்தன...தமிழகத்தில். இது நடந்தக் காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு.

கிட்டத்தட்ட இதேக் காலத்தில் தான் வடக்கில் ஆரியவர்த்தமும் அமைகின்றது. வேத நெறி மீண்டும் வளர நல்ல காலக்கட்டம். அதுவும் வளரத் தான் செய்தது சைவம் மற்றும் வைணவத்தின் நிழலில்.

நிலை இவ்வாறு இருக்கையில் தான் ஆதி சங்கரர் வருகின்றார்...சாதி ஏற்றத் தாழ்வுக் கருத்துக்களை தன்னுடன் அழைத்துக் கொண்டே வருகின்றார். அடுத்தப் பதிவில் அவரை சந்திப்போம்....

பி.கு:

வேத வேள்விக் கருத்துக்களை திருஞானசம்பந்தர் வளர்த்ததற்கு காரணம்... அவர் ஒரு ஆரிய பிரோகிதர். 63 நாயன்மார்களில் அவர் ஒருவர் மட்டுமே ஆரியர்.சமயக் குரவர்களில் தமிழரான திருநாவுக்கரசர் முதன்மையானவராக இருந்தப் போதும் முதலிடம் திருஞானசம்பந்தருக்கு கொடுக்கப் பட்டு இருப்பதும் இங்கே கவனிக்கத்தக்கது...