02/02/2018

10ரூ. நாணயத்தில் போலியா? ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு...


10.ரூ நாணயத்தில் ரூபாய் குறியீடு (₹) இருந்தாலும், இல்லாவிட்டாலும் செல்லும்.. வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் - ரிசர்வ் வங்கி...

தேரையர் கூறும் வைகைநதியின் சிறப்பு...


தமிழ் மரபின் தொன்மையான அடையாளங்களில் வைகை நதிக்கு சிறப்பிடம் உண்டு.

தமிழ் வளர்த்த பாண்டியர்களின் பொய்யா குலக்கொடியாக இருந்தவள் வைகை நதி என்றால் மிகையில்லை. 

வைகையை கடலில் புகாத நதி  என்பார்கள்.

இதனை புகழேந்தி புலவரின் பழந்தமிழ் பாடல் ஒன்றும் உறுதி செய்கிறது.

நாரியிட பாகருக்கு நஞ்சளித்த பாவியென்று
வாரியிடம் புகுதா வைகையே – மாறி
இடத்தும் புறத்தும் இருகரையும் பாய்ந்து
நடத்தும் தமிழ்ப் பாண்டிய நாடு.

மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மேகமலை எனும் பகுதியில் வைகை நதி உருவாகி வனத்தினூடே இறங்கி வருகிறது.

வரும் வழியில் மேல் மணலாறு, இரவங்கலாறு, மூங்கிலாறு, கலிக்கவையாறு, சுருளியாறு, கூத்தநாச்சி வாய்க்கால், வறட்டாறு என்கிற தேனியாறு உட்பட மேலும் சில சிற்றோடைகள் வைகை நதியில் கலக்கின்றன.

இவை தவிர பழனி மலைக்கு மேற்கே உற்பத்தியாகும் சோற்றுப்பாறை ஆறு, பாம்பாறு ஆகியவை வராக நதியுடன் கலந்து வைகையுடன் இணைகின்றன.

இதுவரை மலைப்பகுதியில் பயணிக்கும் வைகைநதி சமவெளியில் இறங்குமிடத்தே அதனுடன் மஞ்சளாறு, மருதா நதி  போன்ற ஆறுகளும் இணைந்து கொள்கின்றன.

சமவெளியில் மதுரைக்கு அருகே சாத்தையாறு என்கிற ஓடையும், மானாமதுரை அருகே உப்போடையும் வைகை நதியில் கலக்கின்றன.

இத்தனை நதிகளின் சங்கமமான வைகை பொங்கிப் பெருகி பாண்டியநாட்டின் வளத்திற்கும் செழிப்பிற்கும் காரணமாய் அமைந்திருந்தது.

பாண்டிய மன்னர்களின் சிறப்பான நீர்மேலாண்மையின் காரணமாக நதிவெள்ளத்தை வீணாக்கிடாமல் முறையாக எல்லா பகுதிகளுக்கு பிரித்து ஏரிகள், குளங்கள், ஊருணிகள் என நிரம்பச் செய்யப்பட்டன.

இதன் காரணமாகவே வைகை கடல் புகா நதியாயிற்று.

வைகையாற்றின் மொத்த நீளம் 258 கிலோமீட்டர். இதில் பெரும்பகுதி மலையிலும், வனப்பகுதிகளிலும் பயணித்து வருகிறது.

இதனால் வைகை நீரில் மூலிகை குணங்கள் நிறைந்திருந்தன. இதனை தேரையரின் ஒரு பாடலும் உறுதி செய்கிறது.

தேரையர் அருளிய "பதார்த்த குண சிந்தாமணி" எனும் நூலில் உள்ள ஒரு பாடல் வைகை நதியின் சிறப்பினை பின்வருமாறு குறிப்பிடுகிறது.

வைகை நதிப்புனலால் வாதநீர் குஷ்டோடுமெஉச்
செய்கைதவிக் குஞ்சோபை திண்கரப்பான் - மெய்யெரிவு
தாகநடுக்கனிலந் தாதுநஷ்டஞ் சிலவிடமும்
ஏகுமிந்த வையம் விடுத்தே.

வைகை நதியின் நீரானது வாதநீர், குஷ்டம், சோபை, கரப்பான், உடல் எரிவு, தாகம், நடுக்குவாதம், தாது நஷ்டங்கள் நீங்குவதுடன் சில வைகையான விஷ முறிவிற்க்கும் பயன்படும் என்கிறார் தேரையர்.

இத்தனை சிறப்பு வாய்ந்ததாக திகழ்ந்த வைகை நதி இன்று கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் ஒரு நதியாக இருப்பது மிகவும் வருந்தத் தக்கது...

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை பிரசவ வார்டு கட்டிடம் முன்பு உள்ள அபாயகரமான பள்ளம்...


நோயாறிகளுக்கு அபாயத்தை உண்டாக்கும் இந்த பள்ளம் சரி செய்யப்படுமா ?

இங்கே பணிபுரிபவர்கள் யாருக்கும்  இந்த பள்ளம் கண்ணீல் படவில்லையா ? சரி செய்ய வேண்டும் என யாரும் நினைப்பதில்லையா ?

அரசு மருத்துவமனை அறிவிப்பு பலகையில்  idea விளம்பரத்தை அப்புரபடுத்த வேண்டும் மாவட்ட நிர்வாகம்.

அன்புடன்
உங்களில் ஒருவன் ,
வெண்மணி வரதராஜன் ,
சமூக ஆர்வலர் ,
பெரம்பலூர் மாவட்டம்...

நோயறிதலும், சோதிடமும்...


எந்த வகை மருத்துவமாக இருந்தாலும் அதன் அடிப்படை நோயறிதல் (diagnosis) ஆகும்.

நோயின் தன்மை, அதன் தீவிரம் போன்றவைகளை அறிந்தால் மட்டுமே முறையான சிகிச்சை என்பது சாத்தியமாகும்.

ஒவ்வொரு வகை மருத்துவமும் தனக்கே உரித்தான சில பிரத்யேக நோயறியும் முறைகளை கடைபிடிக்கிறது.

இவற்றில் எது சிறந்தது, எது சரியானது என்பதெல்லாம் விவாதங்களுக்கு உரியது. இந்தப் பதிவு அதைப் பற்றியதுமில்லை.

சித்த மருத்துவத்தில் மனித உடலானது வாத, பித்த, சிலேத்தும என மூன்று வகையாக கூறப்படுகிறது.

வாத, பித்த, சிலேத்தும சமநிலையில் மாற்றங்கள் ஏற்படும் போது அவை தொடர்பான நோய்கள் தலையெடுக்கிறது.

சித்த மருத்துவத்தில் வாத நோய்கள் என என்பதும், பித்த நோய்களென நாற்பதும், சிலேத்தும நோய்கள் என தொண்ணூறும் கூறப்பட்டிருக்கின்றன.

சித்த மருத்துவத்தில் நோயறிய சோதிடத்தையும் பயன்படுத்தி இருக்கின்றனர் என்பது பலரும் அறிந்திருக்காத செய்தி.

அந்த வகையில் புலிப்பாணி சித்தர் அருளிய புலிப்பாணி வைத்திய காவியம் என்னும் நூலில் காணக்கிடைக்கும் ஒரு நோயறியும் முறை பற்றியதே இந்தப் பதிவு.

பாரப்பா இன்னமொரு விவரங்கேளு
பகர்தனுங் குருசனியும் வாதநாடி
சீரப்பா துர்க்கிரகம் சூரிசேயும்
சிறப்பான பாம்புகளும் பித்தநாடி
நேரப்பா பால்மதியும் சுங்கன்தானும்
நேர்மையுள்ள சிலேட்டுமத்தின் கிரகமென்று
வீரப்பா போகருட கடாட்சத்தாலே
விவரமெலாம் புலிப்பாணி விளம்பக்கேளு.

- புலிப்பாணி.

ஒருவருடைய ஜாதகத்தை ஆராயும் போதே ஜாதகனுக்கு வரப்போகிற அல்லது வந்திருக்கின்ற நோயைப் பற்றி தெளிவாக அறியலாம் என்கிறார் புலிப்பாணிச் சித்தர்.

புதன், குரு மற்றும் சனி 6-ஆம் வீட்டு அதிபதி ஆனால் வாத நோய் பீடிக்கும் என்றும், சூரியன், செவ்வாய், 6-ஆம் வீட்டு அதிபதி ஆனால் பித்த நோய் பீடிக்கும் என்றும், 6-ஆம் வீட்டில் இராகு, கேது நின்றாலும் பித்த நாடி நோய்ப் பாதிக்குமாம்.

சந்திரன், சுக்கிரன் 6-ஆம் வீட்டு அதிபதியானால் சிலேத்தும நோய் உண்டாகுமாம்.

மேலும், 6-ஆம் வீட்டின் அதிபதி கேந்திர திரிகோணங்களில் நின்று குரு பார்வை இன்றி இருப்பின் நோய் தாக்கம் (6-ஆம் வீட்டில் அதிபதியின் நாடியைப் பொறுத்து) அந்த நாடியை பொறுத்து அதிகரித்துக் காணப்படும் என்கிறார்.

வாதநாடி: குரு, புதன், சனி
பித்த நாடி: சூரியன், செவ்வாய், இராகு, கேது
சிலேத்தும நாடி: சந்திரன், சுக்கிரன்

இரத்த அழுத்தம், இருதய நோய், நரம்பு வலி, நரம்பு பிடிப்பு, காக்காய் வலிப்பு, பக்கவாதம், வாயு போன்றவை வாத நோய்கள்.

சீரணம் தொடர்பான பிரச்சினைகள், வயிற்றுவலி, வயிற்றுப்புண், மஞ்சட் காமாலை, இரத்தச் சோகை, இரத்த வாந்தி, கல்லீரல் மற்றும் பித்தப்பை பிரச்சினைகள் பித்த நோய்கள்.

மூச்சுவிடுதல், மூக்கில் நீர்வடிதல், மூக்கடைப்பு, தடுமன், இருமல், சயம், ஆஸ்துமா போன்றவை சிலோத்தும நோய்கள்...

பழைய இந்தியா மற்றும் புதிய இந்தியா வின் சிறு குறிப்பு...


மாயமாக மறைந்த ஒரு கிராமம் – விடையின்றி தொடரும் மர்மம்...


அஞ்ஜிகுனி, கனடாவில் ஒதுக்குப்புறமாக மலையைச்சார்ந்து அமைந்திருந்த கிராமம்.

சுமார் 2000 மக்கள் சாதாரணமாக வாழ்ந்து வந்தார்கள்.

ஏரியில் மீன் பிடித்து விற்பதை முக்கிய தொழிலாக கொண்டிருந்தார்கள் அவர்கள்.

1930 ஆம் ஆண்டு கார்த்திகை ( நவம்பர்) மாதம் ஒரு நாள்…

பொறி வைத்து விலங்குகளை பிடிக்கும் தொழிலை மேற்கொண்ட ஜோலபல் என்பவர் அந்த ஊருக்கு சென்றார்.

அது முதல் தடவையல்ல… பல தடவைகள் அவர் அந்த ஊருக்கு சென்றுள்ளார்.

ஆனால் அன்று சற்று வித்தியாசமாக இருந்தது ஊர். ஊருக்குள் கால் வைத்தது முதல் யாரையும் அவர் காணவில்லை. ஊரின் மையப்பகுதிக்கு சென்றும் அவர் கண்களில் யாரும் அகப்படவில்லை. வீட்டுக்கதவுகள் திறந்து கிடந்தன. வீட்டிற்குள் சென்று பார்த்தால் சமைத்த உணவுகள் அப்படியே கிடந்தன. பாதி தைத்த உடைகளில் ஊசி கூட வெளியில் எடுக்கப்படாமல் இருந்தது.
இறுதியாக இரு வாரங்களுக்கு முதல் கூட அங்கே வந்திருந்தார் ஜோ.

கிராமத்தவர்கள் அனைவருமே கலகலப்பானவர்கள். சுமூகமான சமூகம்.
ஏதோ விபரீதம் நடந்திருப்பதை உணர்ந்த ஜோ, பகுதி காவலர்களுக்கு அறிவித்தார்.

அவர்கள் தேடியும் அந்த கிராமத்திற்கு என்ன நடந்தது? அங்கிருந்தவர்கள் எங்கே? போன்ற கேள்விகள் தேங்கித்தான் நின்றன.

சுற்று முற்றும் தேடி விசாரித்ததில்…

ஊரின் மறு முனையில் வண்டில்களை இழுத்து செல்லும் நாய்கள் இறந்து கிடந்தன. ( 7 நாய்கள் என்று சில தகவல்களும் சிலது 3 எனவும் மாறுபட்டு இணையத்தில் உள்ளது.) அந்த நாய்கள் எவ்வாறு இறந்தன என்பதை அப்போது பெரிதாக யாரும் சோதனையிடவில்லை.

அருகில் உள்ள ஊரைச்சேர்ந்த பலர் அந்த ஊரின் மலைப்பகுதியில் வெளிச்சத்தத்தை பார்த்ததாக கூறினார்கள்.

கூறப்படும் காரணங்கள்.

வேறு இடம் பெயர்ந்திருப்பார்கள் - சகல வசதிகளும் இருக்கும் அந்த மக்கள் பொருட்களை அப்படி அப்படியே விட்டு விட்டு கிளம்பிப்போக வாய்ப்பில்லை. அப்படி போய் இருந்தாலும் எங்கே?

படையெடுப்பு - ஏதோ ஒரு ஊரைச் சேர்ந்தவர்கள் படையெடுத்து சிறைப்பிடித்திருப்பார்கள். ஊரில் படையெடுப்பு நடந்தமைக்கான எந்த அறிகுறிகளும் இருந்ததில்லை. படையெடுப்பு அமைதியாக நடைபெற வாய்ப்பும் இல்லை.

வெம்பயர், காட்டேர்களின் தாக்குதல் - குறிப்பிட்ட காலத்தில் வெம்பயர்கள் தொடர்பான அதீத நம்பிக்களைகள் இருந்தமையால் இந்த கருத்து வெளியிடப்பட்டிருக்கலாம். மனித இறப்புக்களுக்கான சான்றுகளோ இரத்த அடையாளங்களோ கிராமத்தில் கண்டு பிடிக்கப்படவில்லை.

ஏலியன்ஸ் - பக்கத்து ஊரைச் சேர்ந்தவர்கள் மலையில் வெளிச்சத்தை பார்த்ததாக கூறியதன் படி, ஏலியன்ஸ் ஒரே தடவையில் அந்த ஊர் மக்களை/ உயிரினங்களை மட்டும் கடத்தி இருக்க கூடும்.

பரிமாணம் - அந்த ஊர் மக்கள் பரிமாண மாற்றத்தில் மறைந்திருக்கலாம். இதுவும் சற்று குழப்பமானது. விரிவாக பின்னர் பார்க்கலாம்.

எமது கருத்துப்படி, மறை உலகம்.. கிட்டத்தட்ட இது பரிமாணத்தை ஒத்துப்போகும்.

இவ்வாறு பல கருத்துக்கள் கூறப்பட்டாலும், இந்த கிராம மக்கள் காணாமல் போய் 83 வருடங்களைத் தாண்டியும் இன்னமும் இதற்கான விடையை கனேடிய போலிஸாரும் ஆய்வாளர்களும் கண்டறிய முடியாதுள்ளனர்...

பாஜக மோடியின் டிஜிட்டில் இந்தியாவின் பட்ஜெட்...


ஆவிகள் - பேய்கள் பற்றிய உண்மைகள்...


1.பேய்கள் அல்லது ஆவிகள் தங்களை வெளிக்காட்டிக்கொள்ளவே விரும்பும். எனவே தான் அறைகளில் நறுமணம் அல்லது வெளிர் நிற புகைகளை பனிமூட்டங்களை பரப்புகின்றன.

2.பேய்கள் அல்லது ஆவிகள் இறந்துபோன உடல்களை சுற்றியோ அல்லது சுடுகாட்டிலோ இருக்காது. எப்பவுமே கோவில்கள், ஆலயங்கள் என வழிபாட்டுத் தலங்களை அண்டியே சுற்றிய படி இருக்கும். சிலநேரம் பாழடைந்த கட்டடங்களை அண்டியும் இருக்கும்.

3.பேய்கள் அல்லது ஆவிகள் கூடுமானவரை ஆபத்தானவை அல்ல. விபத்து அல்லது கொலைகளினால் உண்டான பேய்கள் அல்லது ஆவிகளின் தோற்றம் மட்டும் தான் பயங்கரமானதாக இருக்கும்.

4.பூமியை விட்டு உறவுகளை விட்டு செல்ல விரும்பாதவ்ரகள் தான் கூடுமானவரை பேய்கள் அல்லது ஆவிகளாக சுற்றும்.

5.பேய்கள் உறங்குவதில்லை. தங்கள் சாவுக்கான நீதி கிடைக்கும் வரை அலைந்தபடியே இருக்கும்.

6.பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உங்கள் எதிர்காலம் நன்றாகவே தெரியும். சில நேரங்களில் அவை கனவுகளின் மூலம் வெளிப்படுத்த முயற்சி செய்யும்.

7.பூனைகளால் தெளிவாக பேய்கள் அல்லது ஆவிகளை காணமுடியும். உங்கள் வீட்டு பூனை வானத்தையே அசையாமல் பார்த்துக் கொண்டு இருந்தால் ஏதோ ஒரு ஆவியை காண்கிறது என்று அர்த்தம்.

8. பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உணர்ச்சிகள் (feelings) உண்டு. ஆனால் உணர (sense) முடியாது.

9.பேய்கள் அல்லது ஆவிகள் தனக்கு நெருக்கமானவர்களுக்கு அல்லது தன் சாவுக்கு காரணமானவர்களுக்கு மட்டுமே தன்னை வெளிக்காட்டிக் கொள்ள முயற்சிக்கும்.

10.பேய்கள் அல்லது ஆவிகளால் கொலை செய்ய முடியாது. ஆனால் ஒருவன் தன்னைத்தானே கொலை செய்யும் அளவுக்கு தூண்டி விடும் சக்தி உண்டு.

11. பேய்கள் அல்லது ஆவிகளால் தரையை கால்களால் தொட முடியும். கைகளாலோ அல்லது உடலின் வேறு பகுதிகளாலோ அல்ல. எனவே தான் உங்களால் அவைகளின் காலடி ஓசையை கேட்க முடியும்.

12.பேய்கள் அல்லது ஆவிகளால் ஒரு மனித உடலில் புகுந்து மற்றொருவருடன் தகவல் தொடர்பு கொள்ள முடியும்.

13.பேய்கள் அல்லது ஆவிகளால் 12 நாட்கள் மட்டுமே [இறந்த நாள்முதல்] அவர்கள் வீட்டில் அருகில் இருக்க முடியும்.

14.பேய்கள் அல்லது ஆவிகள் இறந்து போனவரின் உடலை அடக்கம் செய்யும் வரை அவர்களை பற்றி யார் பேசிக் கொண்டு இருந்தாலும் அருகில் நின்று கேட்கும் குணம் உண்டு.

15. பேய்கள் அல்லது ஆவிகளை சாதாரணமாக் காணக்கூடியவர்களின் இரத்த பிரிவு (Blood Group) ‘O’ (+) அல்லது O’ (–) ஆக இருக்கும். மற்றவகை இரத்த பிரிவு உள்ளவர்களின் கண்களுக்கு தெரிவது அபூர்வம்.

16.குழந்தைகளாக இறந்து போயிருந்தால் பேய்கள் அல்லது ஆவிகள் தேவதைகள் என அழைக்கப்படுவார்கள்.

17.பேய்களால் சும்மா இருக்க முடியாது. எப்பொழுதும் தங்கள் மேல் கவனம் இருக்க வேண்டும் என்பதற்காக மற்றவர்களை தொந்தரவு செய்த படியே இருக்குமாம்.

18.பேய்கள் எப்போதுமே தாங்கள் இறந்து விட்டதாக நினைப்பது இல்லை. எதாவது ஒன்றை செய்து தான் இறக்கவில்லை என்பதை நிரூபிக்க முயற்சிக்கும்.

19.பேய்கள் பல்வேறு விதங்களில் மனிதர்களுடன் தொடர்பு கொள்ளுகின்றன.. கனவுகள், மர்ம குறியீடுகள், தானாக எழுதுவது, சத்தம், புகை, போன்ற பல்வேறு வகையான தந்திரங்களை பயன்படுத்துகின்றன.

20.பேய்களுக்கு வாசனை மோப்பசக்தி அதிகம். சில வாசனைகளை அவைகள் நுகர்ந்த்து அது பிடித்து விட்டால் அங்கே தன்னை இருக்க வைக்க முயற்சிக்கும். சில வகை பெர்ஃபியூம் வாசனைகளும் ரொம்ப பிடிக்கும்.

21. பேய்களுக்கு நேரம் காலம் தெரியாது என்றாலும், நள்ளிரவு நேரங்களில் பகலை விட கூடுதலாக அலையும். எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், சத்தங்கள் இருந்தால் பேய்கள் வராது என்று நினைப்பவர்களும் உண்டு. ஆனால், பேய்களால் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் வேகத்தையும், அதன் இயக்கத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் சக்தி நிச்சயமாக உண்டு.

22.அமைதியான இடம், நிசப்த்தமான இடங்கள், நேரங்களில் திடீரென சத்தத்தை உண்டாக்கி திகிலூட்டுவது பேய்களுக்கு பிடித்த விசயம்.

23.பேய்கள் ஒளிக்கீற்று, அமானுஷ்யக் கோடுகள், மூடுபனி, புகார், கருநிழல், நிழலுக்குள் நிழல், மங்கலான தெரிவது, கரு உருவம், காற்றுத் தூசிகள், காற்று சலங்கை சத்தம், பெண்குரல் சிரிப்பு போன்றவைகள் மூலம் தங்களை வெளிப்படுத்துகின்றன. முழு உருவத்தையும் எப்பொழுதும் வெளிப்படுத்துவது இல்லை. ஆனால் சாத்தியம் உண்டு.

24.கூட்டமாக வருபவர்களுக்கு பேய்கள் தன்னை வெளிப்படுத்த விரும்புவதில்லை. அதில் ஒரு ஆளை தேர்ந்தெடுத்து அவரை மட்டுமே பின்தொடர்ந்து செல்லும்.

25.பேய்கள் குழந்தைகள், அல்லது பெண்கள், ஆண்கள் உடலுக்குள் நுழைய முடியும். பேய்களுக்கு நிறை அதிகம் என்பதால் அவைகளுக்கு நிறைய சக்தி தேவை என்பதால் பீடிக்கப்பட்டவர்கள் அதிகமாக சாப்பிடுவார்கள். நிறைய சக்தியை உறிஞசி விடுவதால் பீடிக்கப்பட்டவர்கள் நாளடைவில் மெலிந்து போவார்கள்.

26.பேய்களுக்கு ஞபாக சக்தி அதிகம். வாழும் காலத்தில் நடந்த உணர்வுப் பூர்வமான விடயங்களை , சம்பவங்களை அடிக்கடி நினைத்து பார்க்குமாம். ஆனால், சாவுக்கு காரணமான சம்பவம் தான் அதிகம் நினைவில் நிற்கும். பழிவாங்கும் எண்ணம் ஏற்பட அதுவே காரணமாகும்.

27.குழந்தைகள், மிருகங்களால் பேய்களை அடையாளம் காணமுடியும். மிருகங்களின் மீதும் பேய்கள் இறங்கி அவைகளை தாறுமாறாக செயல்பட வைக்க முடியும்.

28. பேய்களுக்கு உதவி செய்யும் குணம் உண்டு. பல சந்தர்ப்பங்களில், குழந்தைகள் முதல் பெரியவர்களை காப்பாற்றி இருப்பதை நீங்களே கேள்விப்பட்டிருப்பீர்கள். பேய்ப் பிடித்தவருக்கே பல சமயங்களில் உதவி செய்த சம்பவங்களும் உண்டு. அவர் குடும்பத்தினரை கூட ஆபத்துகளில் காப்பாற்றியிருக்கிறது. புதையல்கள், கொலைகளில் துப்புகளை கூட காட்டிக்கொடுத்தும் இருக்கின்றனவாம்.

29. இருப்பிடத்தை விட்டு வெளியே வராத பேய்களும் உண்டு. ஆனால், அந்த வழியாக யார் வந்தாலும் அவர்களை மட்டும் பயமுறுத்தி வேடிக்கை காட்டும் பழக்கம் பேய்களுக்கு உண்டு.

30.பேய்கள் இடம்பெயரும்பொழுது பயங்கர காற்று, காற்றுச்சுழல், நீர்நிலைகள் அதிருதல், சுழிகள் உண்டாகுதல், மரங்களை முறித்தல், கதவுகள் தானாக அடிபடுதல் போன்றவை ஏற்படுகின்றன...

ஊடகங்கள் மக்களுக்கு எதிரானவை.. நம்பாதீர்கள்...


நல்ல வேல இன்னும் ஒரு வருசம் தான் இருக்கு.. பாஜக அரசை கலாய்த்து ராகுல் காந்தி ட்வீட்...


ஆட்சிக்கு வந்து 4 வருடம் முடிந்த விட்ட நிலையிலும் இன்னும் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் எனக் கூறுகின்றனர் என ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்...

வயிற்று வலி குணமாக...


தமிழக பாஜக தமிழிசை மற்றும் பொன். ராதா அவர்களே...


தமிழ் இனத்தை அழிக்கும் போது எல்லாம் இருவரும் பணம், பதவிக்காக.. பாஜக விற்கு ஆதரவாகவும் தமிழ் இனத்திற்கு எதிராகவும் செயல்பட்ட நீங்கள்...

தற்போது தன் சாதியை பற்றி சொன்னதும் பொங்கி எழுகிறீர்களே... இதன் பெயர் என்ன? சாதி வெறியா அல்லது தேசியமா..?

சாதி ஒழிப்பு போராளிகளாக காண்பித்து கொண்ட சிலரும் தன் சாதி பற்றி பேசியதும் பொங்கிக் கொண்டிருக்கிறார்கள்...

இதுவே மற்ற தமிழ் சாதிகள் செய்தால் அவர்கள் சாதி வெறியர்கள் என்ற பட்டம் கொடுக்கிறீர்கள்...

என்னங்கடா உங்க சாதி ஒழிப்பு போராட்டம்... போங்கடா..

தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே...


தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே. என்பது என்னைப் பொருத்தவரை, அரசியல் கருத்தல்ல. சமூகப் பொருளாதாரக் கருத்து. இது தமிழர்களுக்கு மட்டும் பொருந்தக் கூடியதும் அல்ல. அனைத்து சமூக இனங்களுக்கும் பொருந்தக்கூடியது.

இங்கு வந்து கூலிக்கு வேலை செய்யும் பிற மாநிலத்தவர்கள் அவரவர் மாநிலங்களில் உரிய ஊதியத்துடன் மரியாதையுடன் வேலை செய்ய வேண்டும் என்பதையும் உள்ளடக்கியதே இக்கருத்து.

இன்னொரு வகையில் பார்த்தால், தமிழ்ச் சமூகம் எதிர்கொள்ளப் போகும் ஒரு சமூகப் பேரிடருக்கான எச்சரிக்கை மணி இது. இப்போதே உணர்ந்து கொண்டு செயலாற்றினால், அடுத்த தலைமுறைக்கு அரசுப் பணிகளில் இடம் இருக்கும்.

அரசியல் நிலைப்பாடுகளின் பெயரால்,  சித்தாந்தங்களின் பெயரால், இக்கருத்தினை இப்போது ஏளனம் செய்பவர்கள், எதிர்ப்பவர்கள் அடுத்த தலைமுறைக்கு கேடு விளைவிக்கிறீர்கள் என்பதை காலம் கடந்தேனும் உணர்ந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.

- ப.கலாநிதி

‘தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே’
சென்னையில் பிப்ரவரி 3 அன்று மாநாடு!
நாள்: பிப்ரவரி 3, 2018
இடம்: அண்ணா அரங்கம், சென்னை
நேரம்: காலை 9 மணி - மாலை 8 மணி...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா...


மக்கள் சம்பளம் மட்டும் எப்போதும் உயராது...

நாவல் பழம் (நவ்வா பழம்)...


நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும். மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும்.

சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும். மலச்சிக்கலைப் போக்கும். மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும்.

நன்கு பழுத்த நாவற்பழத்தை, உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும்.

அஜீரணக் கோளாறுகளைப் போக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்யும்.

தூக்கமின்றி அவதிப்படுபவர்கள், நாவல் பழத்தை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும்.

மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும்.

நாவல்பழம் வியர்வையைப் பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தைக் குறைக்கும், உடல் சூட்டைத் தணிக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

நாவல் பட்டையை இடித்து நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் நீரிழிவு நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பைப் பாதிப்புகளைப் போக்கும்., எனவே, நாவல் பழம் கிடைக்கும் காலங்களில் அதனை வாங்கி உண்டு அதன் பயன்களைப் பெறுவோம்...

பாஜக பட்ஜெட்ல மக்களுக்கு அல்வா கொடுக்கலாம்னு பாத்தானுங்க.. ஆனா மக்கள் தேர்தல்ல அல்வா கொடுத்துடாங்க...


பூசணி - அதிசயத்தின் உச்சம்...


ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதை இருக்கிறது என்பதை உங்களால் கூற முடியுமா? முடியும் என்கிறது நம் தமிழ் செய்யுள்.

"கணக்கதிகாரம்" கொறுக்கையூரைச் சேர்ந்த காரி நாயனார் என்பவர் எழுதிய ஒரு தமிழ்க் கணித நூல்.

"கீற்றெண்ணி முத்தித்துத் கீழாறினால் மாறி
வேற்றையஞ்சு தன்னில் மிகப்பெருக்கிப் பார்த்ததிலே
பாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும்
பூசணிக்காய் தோறும் புகல்"

ஒரு பூசணிக்காயின் கீற்றுகளை எண்ணிக்கொண்டு அதை மூன்று, ஆறு, ஐந்து இவற்றால் பெருக்கி வரும் விடையை பாதியாக்கி மீண்டும் மூன்றால் பெருக்கினால் வருவது விதைகளின் எண்ணிக்கையாகும்.

ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிக்கையை "அ" என்க.
பாடலின் படி அதை 3,6,5 ஆகியவற்றால் பெருக்க கிடைப்பது "90அ" ஆகும் அதை பாதியாக்கினால் கிடைப்பது "45அ" ஆகும். அதை மீண்டும் மூன்றால் பெருக்க கிடைப்பது "135அ" ஆகும்.

ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிகையை அ=6 ஆறு எனக்கொண்டால் (135 * 6 = 810) 135 ஐ ஆறால் பெருக்க கிடைப்பது 810 ஆகும். எனவே பூசணியில் உள்ள விதைகளின் எண்ணிக்கை 810 ஆகும்...

வள்ளலாரை கொலை செய்து மறைத்த ஆரியம்...


எண்ணமும் பிணியும்...


நல்ல ஆரோக்கியமான உணவு, முறையான வாழ்வியல்முறை மற்றும் உடற்பயிற்சி மட்டும் நோயை தீர்த்துவிடாது.

ஒருவரின் எதிர்மறை எண்ணமும், மனஉளைச்சலும் தான் அவருடைய உடல் நலனை 70% வரை பாதிக்கிறது.

மனதை சரி செய்யாமல் என்ன வகை மருந்து எடுத்தாலும் அது உங்களுக்கு வேலை செய்யாது.

எதிர்மறை எண்ணங்களும், மனஉளைச்சலும் ஏற்படுத்தும் உடல் நலக்குறைவின் பட்டியல்...

1. பொறாமை குணம்...

அணைத்து வகையான கேன்சர் நோய்களை வரச்செய்யும்.

உடலின் நோய் எதிர்பாற்றலை குறைத்து விடும்.

2. சினம், எரிச்சல், கோபம் கொள்பவர்கள்...

மூச்சுக்குழாய் மற்றும் சுவாச பிரச்சனைகள் ஏற்படுத்தும்.

3. பழிவாங்கும் குணம்...

தொண்டை பகுதியை பாதிக்கப்படுத்தும்.

தூக்கமின்மை கோளாறு ஓங்கும்.

4. பிடிவாத குணம்...

ஒற்றை தலைவலி, அடிக்கடி கடுமையான தலைவலி ஏற்படுத்தும்.

கை கால் வீக்கம் ஏற்படுத்தும்.

உடலில் அடிக்கடி கட்டியை தோன்றுவிக்கும்.

நீரிழிவு நோயை உண்டாக்கும்.

5. ஒழுக்கமின்மை...

தொற்றுநோய்க்கு ஆளாகி, தோல் நோயால் பாதிக்கபடக்கூடும்.

நீண்டநாள் சரி செய்ய முடியாத நோய்க்கு ஆட்படுவார்கள்.

6. விரோத குணம்...

உணவு செரிமானமின்மை, நெஞ்செரிச்சல், குடல் புண், குடல் ரணம் ஏற்படுத்தும்.

7. ஏமாற்றும் குணம்...

போதைக்கு அடிமையாதல், ஒட்டுண்ணி தொற்று, அழற்சி ஏற்படுத்தும்.

உடலின் நோய் எதிர்பாற்றலை குறைத்து விடும்.

8. முரட்டுகுணம், மனிதாபிமானமற்ற, இரக்கமற்றத்தனம்...

இரத்தசோகையை ஏற்படுத்தும்.

காசநோய் ஏற்படுத்தும்.

கால்-கை வலிப்பு (epilepsy) தோன்றும்.

9. கூச்சசுபாவம், அதிகம் பேசாத குணம்...

சிறுநீரகம் பாதிப்படைகிறது.

மனநலம் பாதிப்படைகிறது.

10. சர்ச்சை ஏற்படுத்தி சண்டையிடும் குணம்...

THYROID சுரபி பிரச்சனையை அதிகமாக்கும்.

11. அலட்சியகுணம், உற்சாகமின்மை.

நீரிழிவு நோயை உண்டாக்கும்.

12. உணர்ச்சிவசப்படக்கூடிய குணம், நிலையான சிந்தனை இல்லாமை...

ஆணோ/பெண்ணோ இருவருக்கும் மலட்டுதன்மையை ஏற்படுத்தும்.

13. துஷ்பிரயோகம், பண்பற்ற பலவந்தப்படுத்தும் குணம்...

அணைத்து வகையான இருதய கோளாறுகளையும் ஏற்படுத்தும்.

நீரிழிவு நோயை உண்டாக்கும்.

14. பொருளாசை, பேராசை அடையும் குணம்...

உடலில் ரத்தகட்டிகள், கருப்பையில் நீர்க்கட்டிகள் உண்டாக்கும்.

உடல் பருமனை ஏற்படுத்தும்.

அணைத்து வகையான இருதய கோளாறுகளையும் ஏற்படுத்தும்.

15 கவலை, பயந்தசுபாவம், பதற்றகுணம்...

சரும நோய்களை ஏற்படுத்தும்.

அணைத்து வகையான இருதய கோளாறுகளையும் ஏற்படுத்தும்.

குடல் செரிமானம் சமந்தப்பட்ட அணைத்து கோளாறுகளையும் வரச்செய்யும்.

நல்லெண்ணத்தை வளர்த்தால், நலம் தானே தேடிவரும்...

எல்லா பிரச்சனைகளுக்கும் நம் பங்கு உண்டு இனியாவது திருந்துவோம் திருத்துவோம் நாம்...


சீனியின் (சக்கரை) உபயோகமும் அபாயமும்...


உங்கள் சட்டைக் கழுத்துப்பட்டையில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா?

கவலைப்படாமல் அரை தேக்கரண்டி சீனியை எடுத்து தேய்த்துப்பாருங்கள். நிச் சயமாகப்போய்விடும்.

ஆக, சட்டை அழுக்கைப்போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் சீனி என்ற பெயரில் அன்றாடம் அள்ளி அள்ளித்தின்று கொண்டிருக்கிறோம். விடாத மை அழுக்கையே சில நொடிகளில் போக்கும் இந்த சீனியை சலிக்காமல் தினந்தோறும் உட்கொள்ளும் நமது குடல் என்ன பாடுபடும்? என்ற நமது சிந்தனையை சீனியின் இனிப்பு சுவை மழுங்கடித்து விடுகிறது என்ற அதிர்ச்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது..

இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் டீ, கோப்பியில் இருந்து இரவு படுக்கச்செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனியும் நமது அன்றாட உணவினூடே ஒரு ஊடுபொருளாக நமது குடலுக்குள் செல்கிறது.

இது தவிர, கிலோ கிலோவாக இனிப்பு தின்பண்டங்களை தின்று தீர்ப்பவர்களும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

’இல்லாத ஊருக்கு இலுப்பம் பூதான் சர்க்கரை’ என்ற முதுமொழிக்கு ஏற்ப, இலுப்பம் பூவைப் போன்று வெள்ளை வெளேர் என்று சிரிக்கும் சீனியை, ஆலைகளில் எப்படி தயாரிக்கிறார்கள்? என்கிற விபரத்தை முழுமையாக தெரிந்து கொண்டவர்கள் அதைத் தொடக்கூட ஒன்றுக்கு இரண்டு முறை யோசிப்பார்கள்..

இந்த வெள்ளை சீனியை தயாரிக்க என்னென்ன வகையான ரசாயன‌ப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன? என்பதை பார்ப்போம்..

1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் புளுயுடு பாக்டீரியாவை கட்டுப்படுத்த பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது..

2. பிழிந்தெடுக்கப்பட்ட கரும்பு சாற்றுடன் 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரேட் கொதிநிலையில், ஒரு லிட்டர் கரும்பு சாற்றுடன் 200 மில்லி பாஸ்போரிக் ஆசிட் வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த கட்டத்தில் பாஸ்போரிக் ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது..

3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்தப்படுகிறது..

4. 102 சென்டிகிரேட் வெப்பநிலை கொண்ட கொதிகலனில் சூடுபடுத்தப்படும் இந்த சாறு தன்வசம் தேக்கி வைத்திருந்த நல்ல விட்டமின்களை இழக்கின்றது: எதிர் வினையாக, அளவுக்கு அதிகமான செயற்கை சுண்ணாம்பு சத்து கூடி விடுகிறது..

5. அடுத்த கட்டமாக, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் இட்டு மண், சக்கை போன்ற பொருள்களை தெளிய வைத்து, வடிகட்டி, பிரித்து எடுத்த பின்னர் தெளிந்த சாறு கிடைக்கிறது..

6. மீண்டும் கொதிகலனில் இட்டு காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து, நீர்த்துப் போய் கிடக்கும் கரும்பின் சாறு அடர்த்தி மிக்க சர்க்கரை குழம்பாக உருமாற்றப்படுகிறது..

7. அதன் பின்னர், சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்கப்பட்டு, படிக நிலையில் கற்கண்டாக சர்க்கரை மறுபிறவி எடுக்கிறது. இந்த மறுபிறவி காலத்தில் சல்பர் டை ஆக்சைடு எனப்படும் மெல்லக் கொல்லும் நஞ்சு, ஒவ்வொரு துளி சர்க்கரையிலும் பரவி, கலந்து விடுகிறது..

8. இவ்வாறு தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே. அதனால் தான், தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சர்க்கரையை பயன்படுத்த கூடாது என நமது முன்னோர்கள் வலியுறுத்தி வந்தனர்..

9. தயாரிக்கப்பட்டு ஆறு மாத காலத்தை கடக்கும் போது சர்க்கரையில் உள்ள சல்பர் டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது..

இதன் விளைவாக, குடல் சார்ந்த நோய்கள் மட்டுமன்றி, பல் வலி, பல் சொத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம் போன்ற கொடிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது..

எனவே, ஆலைகளில் தயாரான வெள்ளை சர்க்கரையின் பயன்பாட்டை குறைத்துக் கொண்டு, வெல்லம், பனை வெல்லம், நாட்டுச் சர்க்கரை போன்றவற்றை தாராளமாக பயன்படுத்தி மேற்கண்ட நோய்களின் தாக்கத்தில் இருந்து விலகியே இருப்பதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நாம் ’இனிதாக’ மேற்கொள்ள முடியும்...

கண்மாயில் சிதறிக்கிடக்கும் 800 ஆண்டுகள் பழமையான பாண்டியன் காலத்து கல்வெட்டுகள்...


ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பேரையூர் கண்மாய்க்குள் சிதறிக் கிடக்கும் தூண்களில் கல்வெட்டுகள் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அக்கல்வெட்டுக்கள் தொல்லியல் துறையால் ஆய்வு செய்யப்பட்டது.

அக்கல்வெட்டுகள் 1985ல் பேரையூர் கண்மாயில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு பின்பு, குமிழிமடை, செங்கமடையை உயர்த்தி கட்ட முடிவெடுத்து  கண்மாயை தோண்டியபோது, பெரிய அளவிலான கற்கள் புதைந்த நிலையில் இருந்தன.  குமிழிமடையில் 9, செங்கமடையில் 2 என 11 துண்டு கல்வெட்டுகள் இருந்தன. இவை 13ம் நூற்றாண்டு கால எழுத்து வடிவத்தில் உள்ளதாகவும். இதன் மூலம் இப்பகுதியில் சிவன் கோயில் இருந்து அழிந்துள்ளதை அறிய முடிகிறது என்று தொல்லியல் துறை தெரிவிக்கிறது.

இக்கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவைகளை அறிவோம்...

கிபி 1238 முதல் கிபி 1258 வரை மதுரையை தலைநகராக கொண்டு ஆண்ட இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் மெய்க்கீர்த்தியின் சில பகுதிகள் இக்கல்வெட்டுகளில் இருப்பதால், இவற்றில் சில அவருடைய காலத்தை சேர்ந்தவை என்பது உறுதியாகிறது. கல்வெட்டுகளில் ஈழம், கடாரம், கவுடம், தெலிங்கம் ஆகிய நாடுகளின் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. ஒரு கை, இரு செவி, மும்மதம், நாற்கோட்டு என வரிசை சொற்களால் மெய்க்கீர்த்தி அழகுபடுத்தப்பட்டுள்ளது.

கல்வெட்டில் உத்தமபாண்டியநல்லூர், அண்டநாட்டு பெருமணலூர் ஆகிய ஊர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. நின்றாடுவான் வீரசோழ தேவனான குருகுலத்தரையன், விக்கிரப்பாண்டிய உத்தர மந்திரி ஆகிய அரசு அதிகாரிகள், பாண்டியநல்லூர் பட்டர் என்ற பிராமணர், இரண்டாம் சுந்தரபாண்டியனின் பட்டத்து அரசி உலகமுழுதுடையார் ஆகியோர் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

வெட்டிபாட்டம், பஞ்சுபீலி எனப்படும் வரிகள், ஐப்பசி குறுவை, கோடைக்குறுவை ஆகிய விவசாய பருவங்கள், பத்து மா எனும் ஒரு நிலஅளவு, திருக்காமக்கோட்டம் எனும் அம்மனுக்கான கோயில் ஆகியவை குறித்தும் கூறப்பட்டுள்ளன. கரிசல் நிலம், கருஞ்செய் என சொல்லப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு இறையிலி தேவதானம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக நல்லூர் எனும் ஒரு ஊரை விற்று இருப்பதை அறிய முடிகிறது. ஆவுடைய நாச்சியார் என்பவர் வழங்கிய தேவதானம் பற்றியும் கூறப்பட்டுள்ளது.

இப்பகுதியில் சமண, பவுத்த கோயில்கள் இருந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. பேரையூர் பேருந்து நிறுத்தம் அருகில் சில ஆண்டுகளுக்கு முன் குழி தோண்டியபோது, புதைந்த நிலையில் சுவாமி சிலைகள் இருந்ததாக அப்பகுதி மக்கள் கூறினர். அவை அந்த கோயிலின் சிலைகளாக இருக்கலாம் என தெரிகிறது. இப்பகுதியில் இன்னும் விரிவாக ஆய்வு நடத்தினால் பல வரலாற்றுத் தகவல்கள் தெரியவரும்...

சாதி சண்டைகள் ஏன் எப்போதும் தமிழ் சாதிகளுக்கு உள்ளே நடக்கிறது?


அருந்ததியினர் மீது மிக கொடூரமாக இன்றும் தீண்டாமை கடைபிடிப்பது நாயுடு, ரெட்டி போன்ற மக்களே....

இவர்களை பற்றியோ, நாயுடு ஆதிக்க சாதி வெறி என்றோ திராவிடம், தமிழ் சாதி பிரச்சனைகளை பேசும் அளவுக்கு பேசாமல் மறைப்பது ஏன்?

அப்படி மறைக்க நினைக்கும் உங்கள் நோக்கம் என்ன?

தமிழர்கள் சாதி வெறி பிடித்தவர்கள், தெலுங்கர்கள் அப்படி அல்ல என்று மக்கள் மனதில் பதிய வைப்பது தானே...?

இது நாள் வரை மேற்ப்படி திராவிடம் சாதி பாகுபாடு பார்க்காமல், அனைத்து சாதி வெறி உணர்வையும் கடித்து வந்துள்ளது, பள்ளர் பறையர் என எல்லாருக்கும் போராடியது என்று கூறி வந்ததன் நோக்கம் போலித்தனம் இல்லையா?

தமிழர் நாடு... தமிழர் தேசியம்...


1800 ஆண்டு காலமாகத் தமிழரின் நாட்டை தமிழர்களால் ஆள முடியவில்லை என்பதை ஏதோ எக்குத்தப்பாக நடந்துவிட்டது என்று தட்டிக் கழிக்க முடியாது...

ஓர் அங்குல நிலம் கூட இல்லாத யூதர்கள் தங்களுக்கென்று ஒரு நாட்டை அமைத்துக் கொள்ள முடியுமென்றால்...

அமெரிக்க வல்லாதிக்க வெறியிலிருந்து உலகின் பல நாடுகள் திமிறிக் கொண்டு விடுதலை பெற்றுக் கொள்வது சரியென்றால்...

சோவியத் ஒன்றியத்திலிருந்து தேசிய இனங்கள் விடுதலை பெற இயலும் என்றால்...

சீனாவிற்கு எதிரான திபத்தியர்களின் போராட்டத்தில் ஞாயம் இருக்கிறது என்றால்..

உலகில் வாழும் பன்னிரண்டு  கோடித் தமிழர்களுக்கென்று ஒரு நாடு அமைவது எந்த விதத்தில் ஞாயமற்றதாக இருக்க முடியும்?