06/07/2018

கழிவறை, படுக்கை வசதியுடன் கூடிய அரசு சொகுசு பேருந்தில் கட்டணம் எவ்வளவு?


சென்னையில் இருந்து மதுரைக்கு ஏ.சி. படுக்கை கட்டணம் ரூ.975, சேலம் ரூ.725, போடிநாயக்கன்பட்டி ரூ.1110, ஈரோடு ரூ.905, கரூர் ரூ.820 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கோவை-பெங்களூர் இடையே இயக்கப்படும் ஏ.சி. படுக்கை வசதி பஸ்சுக்கு ரூ.805 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து 6 நகரங்களுக்கு ஏ.சி. படுக்கை வசதி பஸ் நேற்று முதல் இயக்கப்படுகிறது.

சென்னை-மதுரை ஏ.சி வசதி அல்லாத படுக்கை வசதிக்கு ரூ.725, சென்னை- திண்டுக்கல் இடையே விடப்பட்டுள்ள கழிப்பிட வசதியுள்ள அல்ட்ரா டீலக்ஸ் பஸ்சுக்கு ரூ.500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதுகுறித்து விரைவு போக்குவரத்து கழக உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், விரைவு போக்குவரத்து கழகத்துக்கு 100 புதிய பஸ்கள் ஒதுக்குகிறார்கள். அதில் 40 ஏ.சி. படுக்கை வசதி பஸ்களாகும், 50 அல்ட்ரா டீலக்ஸ் (யூ.டி) பஸ்களில், 10 கழிவறை வசதி கொண்ட அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களாகும். இவற்றில் முதல் கட்டமாக 40 பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்டு மாதத்துக்குள் மீதமுள்ள பஸ்கள் வந்து விடும். நீண்டதூரம் செல்லக்கூடிய பஸ்களில் பயணிகளுக்கு வசதிகளை செய்து கொடுத்தால் அதிகளவு பயணிப்பார்கள். புதிய சொகுசு பஸ்கள் விடப்பட்டதால் இனி பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்...

சேலம் மக்களுக்கு எச்சரிக்கை...


மூலிகை சாறில் முழுமையான ஆரோக்கியம்...


நம் முன்னோர்கள் பலன் அறிந்து பயன்படுத்தி வந்த மூலிகைகள் ஏராளம். மூலிகைகளை சாறாகவும், கஷாயமாகவும் செய்து சாப்பிடுவதன் மூலம் நோய்கள் நம்மை நெருங்கவிடாமல் செய்யலாம். இதோ, சில மூலிகைகளும், அதன் பலன்களும்....

அருகம்புல் - ரத்த சுத்தி
இளநீர் - இளமை
வாழைத்தண்டு - வயிற்றுக்கல், மலச்சிக்கல்
வெண் பூசணி - அல்சர்
வல்லாரை - மூளை, நரம்பு வலுபடும்
வில்வம் - வேர்வையை வெளியேற்றும்
கொத்தமல்லி - ஜீரண சக்தி
புதினா - விக்கல், அஜீரணம்
நெல்லிக்காய் - முடி வளர்ச்சி, அழகு
துளசி - தொண்டை சளி, சோர்வு
முடக்கத்தான் - மூட்டு வலி, வாதம்
தூதுவளை - தும்மல், இருமல்
கரிசிலாங்கண்ணி - பார்வை திறன் மேம்படும். கல்லீரல் நோய்
கடுக்காய் - புண்களை ஆற்றும்
அகத்தி இலை - உடல் உஷ்ணம்
ஆடாதொடா - ஆஸ்துமா, குரல் வளம்...

வானிலை மாற்றமும் உண்மைகளும்...


அதுவும் சரிதான்... பிக்பாஸிலும் சினிமாக்களிலும் மூழ்கி இருக்கும் நமக்கு இதுபோன்ற உலக நிகழ்வுகள் எங்கே தெரியப் போகிறது...

அமெரிக்காவும் பயங்கிரவாதமும்...


Climate engineering is the most powerful and most utilized weapon of the western power structure to destabilize and topple the countries and governments around the globe that it wishes to control.

Geoengineering is a primary tool that has been used to help force nations to allow U.S. or NATO occupation. If you don’t believe the U.S. military is concerned with the climate, think again. The military industrial complex has long sought to “control the weather” and historical documents prove that the U.S. has been heavily invested in climate modification for a very long time.

It is important to remember that defense contractor Raytheon is involved in geoengineering programs, and also does the weather modeling for NOAA and the National Weather Service. Lockheed Martin (another defense contractor involved in weather modification) supplies the weather modeling for the FAA. The weather “predictions” are nothing more than the scheduled weather...

அடக்குமுறையில் பரிணாம வளர்ச்சி...


அது ஃபாசிசத்தையும் நாஜிசத்தையும் மிஞ்சிய மோடியிசம்..

தம்மை எதிர்த்தவர்களையும் எதிர்த்துப் போரிட்டவர்களையுமே குறிவைத்தன ஃபாசிசமும் நாஜிசமும்..

ஆனால் எந்தச் செயலிலும் ஈடுபடாதவர்களைக் கூட வேட்டையாடுகிறது மோடியிசம்.

சேலம்-சென்னை 8 வழிச் சாலைக்கு எதிரான துண்டு பிரசுரம் வைத்திருந்ததாக வேன் பறிமுதல் மற்றும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பினர் 19 பேர் கைது.

மோடியிசத்தைக் கட்டவிழ்த்து மிக மோசமான கொடுங்கோலராகிவிட்ட எடப்பாடி பழனிசாமியை வன்மையாகக் கண்டிப்பதுடன், பொய்வழக்கில் கைது செய்திருக்கும் 19 பேரையும் விடுவிக்குமாறு எச்சரிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

உலகின் ஆகக் கொடிய கொடுங்கோலர்களாக வரலாற்றில் இடம்பெற்றவர்கள் இத்தாலி நாட்டு முசோலினியும் ஜெர்மன் நாட்டு ஹிட்லரும் ஆவர்.

இவர்கள் கையாண்ட அடக்குமுறை வடிவங்கள்தான் ஃபாசிசம் மற்றும் நாஜிசம்.

இவர்கள் இருவரையுமே தூக்கி சாப்பிட்டுவிட்டார் நரேந்திர தாமோதர தாஸ் மோடி.

அவர்களின் ஃபாசிசத்தையும் நாசிசத்தையும் மிஞ்சிவிட்டது நரேந்திர தாமோதர தாஸ் மோடியின் மோடியிசம்.

அடக்குமுறையின் பரிணாம வளர்ச்சிதான் இந்த மோடியிசம்.

எப்படியென்றால்; தம்மை எதிர்த்தவர்களையும் எதிர்த்துப் போரிட்டவர்களையுமே குறிவைத்தன ஃபாசிசமும் நாஜிசமும்.

ஆனால் எந்தச் செயலிலும் ஈடுபடாதவர்களைக் கூட வேட்டையாடுகிறது மோடியிசம்.

மோடியிச அடக்குமுறை தர்பார் என்பது, வகுப்புவாத-மதவாத அடிப்படையில் பொறுக்கியெடுத்த உயரதிகாரிகளாகப் பார்த்து அனைத்து துறைகளிலும் புகுத்தி நடத்தப்படுகிறது.

காஞ்சிபுரத்திலிருந்து பக்கத்துச் சிறுமதிலூருக்குப் புறப்பட்ட வேனை அதில் சேலம்-சென்னை 8 வழிச் சாலைக்கு எதிரான துண்டு பிரசுரம் வைத்திருந்ததாக மகரல் போலீசார் பறிமுதல் செய்திருக்கின்றனர்.

வேன் ஓட்டுநர் உள்பட அதில் இருந்த 19 பேரையும் கைது செய்திருக்கின்றனர்.

பெண்களும் ஆண்களுமான இந்த 19 பேரும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள்; தமிழக வாழ்வுரிமைக் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, காஞ்சி மக்கள் மன்றம், திராவிடர் விடுதலைக் கழகம், பாலாறு பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கம் மற்றும் விவசாய அமைப்பைச் சேர்ந்தவர்கள்.

அவர்கள் 1.ச.தீனன் என்ற தினேஷ்(37), 2. மகேஷ்(46), 3. ஜெசி குளோரி(46), 4. ரேச்சல் என்ற கனல்விழி(43), 5. யோகநாதன் என்ற காஞ்சி அமுதன்(52), 6. அர்விந்த்(27), 7.ஜெயராமன் என்ற உலக ஒளி(73), 8.சாந்தி(48), 9.ஆனந்தி(38), 10.முருகானந்தம்(41), 11.வெற்றித்தமிழன் என்ற விஜயகுமார்(35), 12.தாண்டவமூர்த்தி(48), 13.பழனி, 14.ரவி பாரதி(32), 15.செல்வராஜ், 16. சுப்பிரமணி (23),17. சந்திரன்(55), (46), 18. அல்லி(53) மற்றும் ஓட்டுநர் எழிலரசன்.

ஐபிசி 147, 188, 341, 283, 290, 294(பி), 505(1)(பி), 353, 506(1) பிரிவுகள் மற்றும் பொது இடத்தில் கூடி வன்முறையைத் தூண்டி பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் தடுப்புச் சட்டம் பிரிவு 7(1)-இன் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கைது செய்யப்பட்ட இவர்களை நீதிமன்றக் காவலுக்குக் கொண்டுசெல்கையில் நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்தே போலீசார் தாக்கவும் செய்திருக்கிறார்கள்.

சேலம்-சென்னை 8 வழிச் சாலைக்கு எதிரான மக்கள் கருத்துக்களை அன்றாடம் ஊடகங்கள் வெளியிடுகின்றன, ஒளிபரப்புகின்றன. அத்தகைய கருத்துக்களுக்கு மேல் எந்தக் கருத்தும் துண்டு பிரசுரத்தில் இடம்பெறவில்லை; அந்தத் துண்டு பிரசுரத்தையும்கூட விநியோகிக்கவில்லை. ஆனால் வேனோடு சேர்த்து 19 பேரையும் கைது செய்து கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் போட்டு ரிமாண்ட் செய்திருக்கிறது ஃபாசிச பழனிசாமி அரசு.

இதன் மூலம் ஃபாசிசத்தையும் நாஜிசத்தையும் மிஞ்சிய மோடியிசத்தைக் கட்டவிழ்த்துவிட்டு மிக மோசமான கொடுங்கோலராக தன்னை அடையாளம் காட்டிக்கொண்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

எந்தச் செயலிலும் ஈடுபடாத தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பினர் 19 பேரை பொய்வழக்கில் கைது செய்திருக்கும் பழனிசாமி அரசை  வன்மையாகக் கண்டிப்பதுடன், குற்றமற்ற அவர்களை விடுவிக்குமாறு எச்சரிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி...

பாஜக வும் டிஜிட்டல் இந்தியா விற்பனையும்...


உணர்வுத் திறனை கூர்மையாக்குங்கள்...


தியானம் பற்றி குறிப்பிடுகையில் ஆரம்பத்தில் ‘ஒரே இடத்தில் தியானம் செய்யும் போது அந்த இடத்தில் தியான அலைகள் உருவாக ஆரம்பிக்கின்றன. நாளாக நாளாக அந்த அலைகள் வலிமைப்பட ஆரம்பிக்கின்றன. முதலில் தியானம் கைகூட நிறைய நேரம் ஆனாலும் காலப்போக்கில் அந்த இடத்தில் தியானத்திற்காகச் சென்று அமர்ந்த சிறிது நேரத்திலேயே அங்கு உருவாகி இருக்கும் அலைகளின் தன்மையால் தியான நிலைக்குச் சுலபமாகப் போய் விடலாம்’ என்று சொல்லி இருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

மனிதர்களின் எண்ணங்கள் தொடர்ந்து எண்ணும் போது சக்தி வாய்ந்தவையாக மாறுகின்றன. அவற்றை வாய் விட்டுச் சொல்லாத போதும் அவை சக்தியை இழப்பதில்லை. எண்ணங்களும், இயல்பும் ஒருவரைச் சுற்றி நுண்ணிய அலைகளாக எப்போதும் இருக்கின்றன. காலப்போக்கில் அவர்கள் வசிக்கும் இடத்தில் கூட அந்த நுண்ணிய அலைகளின் தாக்கம் அதிகப்பட ஆரம்பிக்கும் என்று சொல்கிறார்கள்.

உண்மையான மகான்கள் வாழ்ந்த இடங்களுக்கும், சில புனித வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்றவர்கள் அங்கு இருக்கையில் வார்த்தைகளில் சொல்ல முடியாத ஒரு வித அமைதியையும், நிறைவையும் உணர்ந்திருக்கக்கூடும். அந்த மகான்கள் வாழ்க்கைக் காலம் முடிந்து பல ஆண்டுகள் கழிந்த பின்பும் அந்த இடத்தில் அவர்களது ஆன்மிக சக்தி மையம் கொண்டிருப்பதே அதற்குக் காரணம் என்று சொல்லலாம். அதே போல அந்த புனித வழிபாட்டுத் தலங்கள் உருவாகிப் பல நூறு ஆண்டுகள் கூட ஆயிருக்கலாம். ஆனால் அந்த தலங்களை நிறுவிய மற்றும் வழிபாடு நடத்தி வந்த ஆன்மிகப் பெரியோரின் சக்தி மற்றும் பக்தி அலைகள் அங்கு இப்போதும் பரவியிருந்து நம்மை ஊடுருவுவதே நாம் உணரும் அந்த அமைதிக்குக் காரணம்.

மனதின் எண்ண அலைகள் சக்தி வாய்ந்ததாக இருந்தால் அவர்களுடைய காலம் கழிந்த பின்னும் அவற்றின் தாக்கம் அப்படியே இருக்கும் என்பதற்கு இதுவே ஒரு சிறந்த உதாரணம். உடல் அழிந்து பல்லாண்டுகள் கழிந்த பின்னும் உள்ளத்தின் எண்ண அலைகள் வீரியமுள்ளதாக இருந்தால் அவை வாழ்வது மட்டுமல்லாமல் மற்றவர்களிடம் தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்பது நல்ல எண்ணங்களுக்கு மட்டுமல்லாமல் தீய எண்ணங்களுக்கும் பொருந்தும்.

தியோசபி அமைப்பின் நிறுவனரான ப்ளாவட்ஸ்கி அம்மையார் தன் அதீத சக்திகளுக்குப் பெயர் போனவர். அவர் ஒரு முறை அந்த அமைப்பின் சக நிறுவனரான கர்னல் ஓல்காட் அவர்களுடன் அலகாபாத் சென்றிருந்தார். அவர்களை இரவு உணவுக்கு ஓரிடத்திற்கு சின்னட் என்ற நண்பர் காரில் அழைத்துச் சென்றார். போகின்ற வழியில் கார் ஒரு தெரு முனையைக் கடக்கையில் ப்ளாவட்ஸ்கி அம்மையார் திடீரென்று உடல் சிலிர்த்தபடி சொன்னார். “இந்த இடத்தில் ஏதோ பெரிய கொடூரம் நடந்திருக்க வேண்டும். இரத்தம் சிந்திய இடத்தைப் போல் நான் உணர்கிறேன்”.

அலகாபாதிற்கு ப்ளாவட்ஸ்கி அம்மையார் வருவது அதுவே முதல் முறை. அதுவும் சின்னட் என்பவரின் வீட்டிற்கு வந்து தங்கியவர் அந்த வீட்டை விட்டு வெளியே வருவதும் அதுவே முதல் முறை. அப்படி இருக்கையில் அவருடைய உணர்வின் கூர்மையால் அப்படி உணர்ந்ததைக் கண்டு வியப்பு மேலிட்ட சின்னட் அந்த தெருமுனையின் அருகில் இருந்த ஒரு பெரிய கட்டிடத்தைக் காட்டி சொன்னார். ”அந்த கட்டிடத்தில் தான் ஒரு காலத்தில் சில ஆங்கிலேய அதிகாரிகள் தங்கி இருந்தனர். சிப்பாய்கள் கலகத்தின் போது ஒரு நாள் இரவு அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் சிப்பாய்கள் அவர்களைக் கொடூரமாகக் கொன்று குவித்திருந்தார்கள்.” சிப்பாய் கலகத்தில் நடந்த அந்த சம்பவம் முடிந்து பல ஆண்டுகள் கழித்தும் ப்ளாவட்ஸ்கி அம்மையார் அலகாபாத்தில் அந்த இடத்திற்குச் சென்றவுடனேயே ஏதோ ஒரு கொடூர சம்பவம் நடந்திருக்கிறது என்பதை உணர முடிந்ததை யோசித்துப் பாருங்கள்.

ப்ளாவட்ஸ்கி அம்மையாரைப் போல சற்று தொலைவிலேயே உணரக் கூடியதாகவும், பல காலம் கழித்து உணரக் கூடியதாகவும் அந்தத் திறன் இல்லா விட்டாலும் நாம் அனைவருமே அந்தந்த இடத்திலும், நிகழ்காலத்திலும் உணரக்கூடிய திறனை ஓரளவு இயல்பாகவே பெற்றிருக்கிறோம். ஆனால் அது பெரும்பாலும் வார்த்தைப் படுத்த முடியாதபடி கூட இருக்கலாம். சில வீடுகளுக்குள்ளேயே நுழையும் போதே ஒரு அசௌகரியமான உணர்வை நாம் பெறுவதுண்டு. அங்கிருந்து சீக்கிரமே போய் விட வேண்டும் என்று தோன்ற ஆரம்பித்து விடும். நம் தன்மைக்கு ஒவ்வாத எதிர்மறையான தன்மைகள் இருக்கிற மனிதர்கள் வசிக்கிற வீடாக பெரும்பாலும் அது இருக்கும். கலகலப்பாகவும், மகிழ்ச்சியாகவும் அனைவரும் இருக்கும் ஒரு இடத்தில் திடீரென்று யாராவது ஒரு நபர் உள்ளே வர கலகலப்பும், மகிழ்ச்சியும் காணாமல் போய் ஒரு அசௌகரியமான மௌனம் நிலவுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். அவர்களுடைய மனநிலைகளுக்கு எதிர்மறையான நபராக அவர் இருந்திருப்பார். அவர் அங்கிருந்து போகும் வரை கலகலப்பு தொடராது. அதே போல ஒரு நபர் வரவால் அந்த இடத்தில் இருக்கும் பலரும் ஒரு புத்துணர்ச்சியையும், மகிழ்ச்சியையும் உணர்வதும் நிகழ்வதுண்டு. அந்த நபரின் இயல்பு நுண்ணலைகள் அந்த மாற்றத்தை ஏற்படுத்துவனவாக இருந்திருக்கும்.

இது போன்ற அனுபவங்கள் கூட சம்பந்தப்பட்ட மனிதர்களின் இயல்பின் நுண்ணலைகள் நல்லதாகவோ, தீயதாகவோ மிகவும் உறுதி படைத்தவையாக இருக்கும் போது மட்டுமே நாம் உணர்கிறோம். அப்படி உணரும் போதும் நாம் அதைப் பற்றி மேற்கொண்டு ஆராயப்போவதில்லை. அதற்கு பெரிய முக்கியத்துவமும் கொடுப்பதில்லை. ஆனால் மனிதர்கள், மற்றும் இடங்களுடைய நுண்ணலைகளை தெளிவாக உணர முடிவது ஆழ்மன சக்திகளை அடைய விரும்புவோருக்கு அத்தியாவசியத் தேவை என்று சொல்லலாம்.

பெரும்பாலும் நாம் நம் முயற்சியில்லாமல் உணரும் மற்ற நபர்களுடைய, அல்லது இடங்களுடைய நுண்ணலைகள் நம் ஆழமான இயல்புத் தன்மைகளுக்கு பாதிப்பையோ, தாக்கத்தையோ ஏற்படுத்துவனவாகவே இருக்கின்றன. அவற்றைப் பாதிக்காத, சம்பந்தமில்லாத நுண்ணலைகளை நாம் உணர்வதில்லை. ஆனால் பயிற்சியின் மூலம் நாம் நம் உணர்வுத் திறனை அதிகரித்துக் கொள்ள முடியும். அதனைக் கூர்மைப்படுத்திக் கொள்ளவும் முடியும்.

ஆழ்மன சக்தியின் ஒன்பது வகை வெளிப்பாடுகளில் Psychometry பற்றி குறிப்பிட்டு இருந்தோம். இந்த சக்தி மூலம் ஒரு பொருளை வைத்து அதன் சம்பந்தப்பட்ட விஷயங்களையும், மனிதர்களையும் அறிய முடியும். இச்சக்தி நாம் மேலே குறிப்பிட்ட நுண்ணலைகளை உணரும் சக்தியின் தொடர்ச்சி தான். மனிதர்கள் உபயோகப்படுத்திய இடங்களில் அவர்களுடைய எண்ண மற்றும் இயல்பு நுண்ணலைகள் பரவியிருப்பது போல அவர்கள் உபயோகப்படுத்துகிற பொருள்களிலும் பரவி இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அதனால் அந்தப் பொருளைக் கையில் வைத்துக் கொண்டு அதை உபயோகப்படுத்திய நபரின் இயல்பு பற்றிய தகவல்கள் சொல்ல முடியும்.

பொதுவாக ஒருவரை அறிய நாம் நம் ஐம்புலன்களின் உதவியையே அதிகம் பயன்படுத்துகிறோம். அவரது தோற்றம், உடை, பேச்சு, நடத்தை ஆகியவற்றை வைத்தே அவரை எடை போடுகிறோம். ஆனால் மனித இயல்பை நன்றாக அறிந்த சாமர்த்தியமான ஏமாற்றுப் பேர்வழிகள் அப்பழுக்கற்ற தோற்றம், நடை, உடை, பேச்சுகளை வெளிப்படுத்தி யாரையும் ஏமாற்ற வல்லவர்களாக இருக்கிறார்கள்.

ஆனால் தங்கள் உள்ளுணர்வுத் திறன்களை மேம்படுத்திக் கொண்டவர்களை யாரும் அவ்வளவு சுலபமாக ஏமாற்றி விட முடியாது...

சிந்தித்து விழித்துக்கொள் தமிழினமே...


மரமும் மனிதனும்...


திருவாச்சி மரம் அல்லது மந்தாரை மரம், இளமஞ்சள் நிறத்தில் அழகிய மலர்களை உடைய, இளம்பச்சை நிற இலைகளைக் கொண்ட திருவாச்சி, இன்று மிக அரிதாகக் காணப்படும் ஒரு குறுமரமாகிவிட்டது. சிருவாச்சி, இருவாச்சி, திரு ஆத்தி, மந்தாரை எனப் பல பெயர்களில் அழைக்கப்படுவது போலவே, திருவாச்சி மரமும் பல விதங்களில் மனிதரின் வியாதிகள் தீர, மருத்துவப் பலன்கள் தருபவை. ஆன்மீகத்திலும், சித்த வைத்தியத்திலும் பெரும் பயனாகும், திருவாச்சி, தமிழ் சங்கீத இசை உலகிலும், வாத்தியங்களுக்கு இன்றியமையாத ஒரு துணையாகவும் விளங்குகிறது.

திருவாச்சி மரம், வல்லாரை இலைகளைப் போன்ற காம்புகளைச் சுற்றி படர்ந்த பசுமையான இலைகளைக் கொண்ட, குறு மரமாகும், திருவாச்சியின் மலர்களில் உள்ள, அதிக அளவு மகரந்தத்தையும், தேனையும் சுவைக்க தேனீக்களும், வண்ணத்துப் பூச்சிகளும் போட்டியிடுவதைக் காண்பதே, கண்களுக்கு விருந்தாக அமையும். இலை, மலர் மற்றும் பட்டை இவற்றின் மூலம், நலம் தரும் மருத்துவ பலன்களைக் கொண்டது, திருவாச்சி.

ஆன்மீகத்தில் திருவாச்சி...

திருக்கோவில்களில் தல மரமாக விளங்கும் திருவாச்சி மரங்களின் இலைகள், வில்வ இலைகளைப் போல, சிவபெருமானுக்கு உகந்தவையாகக் கருதப்படுபவை. திருவாச்சி மலர்களும், சிவ பூஜைக்கு உகந்த மலர்களாகின்றன. திருக்கோவில்களில் அகல்களில் விளக்கேற்றும் போது, அகல்களின் கீழே, அந்தந்த நாட்களுக்கு விஷேசமாகக் கருதப்படும் இலைகளைக் கொண்டு, விளக்கேற்றுவர்.

அந்த வகையில், சிவபெருமானுக்கு உகந்த சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமைகளில், திருவாச்சி இலைகளின் மேலே, அகலில் தீபம் ஏற்றி வைத்து வழிபட, நலமாகும். காற்றுவெளியை நலமாக்கும் திருவாச்சி மரத்தை வீடுகளில் வளர்த்து வர, ஆன்மீக வளத்தோடு, ஆரோக்கியமான வாழ்க்கை நலத் தீர்வுகளும் கிடைக்கும்.

சித்த மருத்துவத்தில் மந்தாரை :
உடலுக்கு நலம் தரும் திருவாச்சி மரம், வயிறு தொடர்பான அனைத்து பாதிப்புகளுக்கும் நிவாரணம் தரும், கை கால் வலிகளைப் போக்கும் தன்மை மிக்கது, உணவை உண்ணப் பயன்படும் வாழை இலைகளைப்போல திருவாச்சி இலைகள் பயன் தந்து, மனிதர்களின் உடல் மன வியாதிகளைப் போக்கும் இயல்புடையது, திருவாச்சி இலைகள். இரத்த பேதி, இரத்த வாந்தி, மலச்சிக்கல் போக்கும் ஆற்றல் உள்ளவை.

திருவாச்சி குடிநீர்...

திருவாச்சி பூக்களின் மொட்டுக்களை நன்கு அலசி, ஒரு லிட்டர் நீரில் இட்டு கொதிக்க வைத்து, அந்த நீர் கால் லிட்டர் அளவில் சுண்டி வந்ததும், எடுத்து வைத்துக் கொண்டு, காலை மாலை இருவேளை, இருபது அல்லது முப்பது மிலி அளவு பருகி வர, சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் புண்கள் ஆறும். பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் அதீத இரத்தப் போக்கு குணமாகும். இரத்த மூல பாதிப்புகள் விலகும்...

லண்டன் பங்கு சந்தையில் இருந்து விலகும் வேந்தாந்தா நிறுவனம்...


8ம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு.. நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்த நபர்....


உத்தரபிரதேச மாநிலம் ஷாமி என்ற மாவட்டத்தில் ஆர்யன் என் தனியார் மருத்துவமனை உள்ளது. 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்தான் இந்த மருத்துமனையின் உரிமையாளர்.

இந்த நிலையில் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நோயாளி ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதனை ஒருவர் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பரவ விட்டுள்ளார்.  இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட மருத்துவமனை உரிமையாளர் மற்றும் டாக்டர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட அந்த மருத்துவமனையில் மாவட்ட முதன்மை மருத்துவ அலுவலர் அசோக் ஹண்டா ஆய்வு செய்தார்.

விசாரணை நடத்தப்பட்ட பிறகே சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி அசோக் குமார் கூறினார்...

வளைகுடா கண்டத்தில் இசுரேல் என்ற கொடிய மிருகம் வந்த பிறகே, அங்கு பிரச்சனைகள் உருவாகின்றன என்பதே நிதர்சனம்...


கிரிவலமும் ஆதித் தமிழனும்....


ஆதித் தமிழன் எந்த ஒரு செயலையும்  எடுத்தோம், கவிழ்த்தோம் என்று செய்ததில்லை, தான் செய்து வைத்து விட்டு சென்ற ஒவ்வொரு விடயத்திற்கு பின்னாலும், அறிவியல், மருத்துவம், விஞ்ஞானம், என்ற எண்ணற்ற விடயங்கள் அதனுடன் விட்டுச் சென்றிருக்கிறான்.

ஆனால் அதனுடன் சேர்த்து அவன் செய்துவிட்டு சென்ற மிகப்பெரிய தவறு, அந்த ஒவ்வொன்றிற்கும் பின்னால் கடவுள்  பெயரை சொல்லிவிட்டு சென்றது தான், ஒருவேளை அவன் கடவுள் பெயரை கூறினாலாவது பயந்து கொண்டு அந்த விடயங்களை கடைபிடிப்பார்கள் என்ற தொலை நோக்கு பார்வையாக கூட இருந்திருக்கலாம், ஆனால் பாவம் அவனுக்கு தெரியாது,

வரும் சந்ததியினர், கவர்ச்சி நடிகைக்கெல்லாம் கோயில் எழுப்பி, தான் பெரிதாக நினைத்த கடவுளையே கூட இழிவு படுத்துவர் என்று.

இன்றைக்கு பகுத்தறிவு என்ற பெயரில், நம் முன்னோர்களின் பல அறிய கண்டுபிடுப்புகளை நாளுக்கு நாள் நாம் அழித்துக் கொண்டு வருகிறோம் என்று தான் கூற வேண்டும், கோவிலுக்கு செல்ல கூடாது, சாமியும் இல்லை, பூதமும் இல்லை, என்ற வாதம் தான் இன்றைய பகுத்தறிவின் வெளிப்பாடாக இருக்கின்றது.

அது உண்மையா, பொய்யா என்பது தனி நபர் விருப்பத்திற்கு உட்பட்டது. ஆனால் நாளடைவில் அந்த விடயம் பலரால், பலவிதமாக திரித்து இன்று நம் அடையாளங்களை இழக்கும் நிலைக்கு வந்து விட்டோம் என்பதே உண்மை.

கடவுளின் பெயரை கூறி நடக்கும் மூட நம்பிக்கைகளை தடுத்து நிறுத்துவது தானே உண்மையான பகுத்தறிவு?

உதாரணத்திற்கு பவுர்ணமி அன்று கிரிவலம் வந்தால் நல்லது, என்பதற்கு பின்னால் கடவுளின் பெயரை கூறியதால் இன்று நாத்திகர்கள் அதை செய்வது இல்லை, ஆனால் இதற்கு பின்னால் இருக்கும் அறிவியல், முழு நிலவு அன்று நிலாவிலிருந்து வரும் ஒளிக்கதிரில் உள்ள ஒருவித "நேர்மறை ஆற்றல்" (Positive Energy) நாம் சுற்றிவரும் மலையின் மீது பட்டு, நம் உடலில் இறங்கினால் நல்லது என அதையே தான் இன்று விஞ்ஞானம் கூறுகின்றது.

இன்றைக்கு இருப்பதை போன்று கேளிக்கைகளுக்கு திரை அரங்குகளோ,கல்வி கற்பதற்கு "ஏரிகளின்" மேல் கல்லூரிகளோ, மருத்துவமனைகளோ அவர்கள் கட்டிவைக்க வில்லை, இவை அனைத்தும் நடந்தது ஓரே இடத்தில், ஒரு இடத்திற்கு சென்றால் அனைத்தையும் கற்க முடியும் என்றால் ( களவி உட்பட ) அது அன்று கோவில்களாக மட்டுமே இருந்துள்ளது.

அது ஒரு பல்கலைக்கழமாகவே இருந்துள்ளது , அதனால் தான் கோவில் சிற்பங்களில் களவி சம்மந்தப்பட்ட சிற்ப்பங்கள் கூட காண நேர்கின்றது," கோவில்களில் கேளிக்கைகளுக்கு நாட்டியங்கள் அரங்கேறியுள்ளது, கல்வி கற்க பாடசாலைகள் அமைக்கப்பட்டது.

சில கோவில்கள் மருத்துவமனைகளாகவும் செயல்பட்டுள்ளது ,உதாரணத்திற்கு திருச்சி, திருவைகுண்டத்தை கூட கூறலாம் அங்கே ஆயிரம் வருடங்களுக்கு முன்னே,வெறும் மூலிகைகளை வைத்து அறுவை சிகிச்சை... (Surgery) வரை நடைபெற்றுள்ளது.

இன்றைக்கு இருப்பதை போன்று அன்று அனைவரும் மாடி வீடுகளில் தங்கி இருக்க வாய்ப்பில்லை ஆக பெரு வெள்ளம் வரும் போது, பெரும் பாறைகளால், பெரும் உழைபிற்கு மத்தியில் உருவான இந்த கோயில்களில் மட்டுமே மக்கள் தஞ்சம் அடைந்திருக்க கூடும், கோவில் தூண்களில் தான் நம் கலைகளை வளர்த்துள்ளோம், அங்கே ஒவ்வொரு சிற்பமும் சொல்லும் கதை தான், இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள்.

ஆயிரம் வருடங்களுக்கு மேல் நம்முடம் பயணிக்கும் கோயில்கள் அமைந்திருக்கும் இடம் சாதாரணமாக தேர்வு செய்து கட்டி இருக்க வாய்புகள் இருக்காது. அந்த இடமானது பூமத்திய ரேகை கோட்பாடுகளின் படி அறிவியல் அமைப்புகளுடன் மட்டுமே கட்டப்பட்டிருக்கும், இன்றைக்கு இருக்கும் நிலப் பதிவு அலுவலகம் அன்று கிடையாது, கோவில் கல்வெட்டுகள் முழுவதும் தான் அது பதியப்பட்டுள்ளது, அந்த கல்வெட்டுகளில் தான் தமிழனின் வரலாறு புதைந்துள்ளது.

தஞ்சை பெரிய கோயில் கட்டியது " ராச ராசன் " என்று நிலைவட்டு (hard disk), பென்ட்ரைவிலோ (Pen Drive) பதியப்படவில்லை, அனைத்தும் கோயில் கல்வெட்டுகள் மூலமே நமக்கு தெரிய வருகின்றது, அப்படி இருக்க பகுத்தறிவின் பெயரில் இப்பேற்பட்ட நம் வரலாற்று சின்னங்களை கொஞ்சம், கொஞ்சமாக அழிப்பது எந்த விதத்தில் நியாயம்?

என்று யோசித்து பாருங்கள் ! வரலாற்று அடையாளங்கள் வேண்டாம், மொழி மட்டும் போதும் என்பவர்கள், மரங்கள் வேண்டாம் பிராணவாயு மட்டும் போதும் என்று முரண்பாடான கருத்தை கூறுவதைப் போன்றது என்பதை உணரவேண்டும்.

ஐயாயிரம் வருடத்திற்கு முன்பே தமிழன் சித்த வைத்தியத்தில் கூறிய மஞ்சளுக்கு வெளிநாட்டுக்காரன் உரிமை வாங்கி வைத்துள்ளான், வீட்டு முற்றத்தில் தமிழன் வளர்த்த வேப்பமரத்திற்கு வெளிநாட்டுக்காரன் உரிமை வாங்கி வைத்துள்ளான், இன்னும் எதை எல்லாம் தொலைக்கைப்போகிறோம் ?

மொழி கலப்படமாகிவிட்டது, உடை மேற்கத்திய உடை, கலப்படம் இல்லாமல் பழமையுடன் காட்சியளிப்பதும், நாம் பழமையானவர்கள் என்று ஆதாரத்துடன் நிரூபிப்பதும், இந்த கோயில்களை வைத்து மட்டுமே என்பதை நாம் எப்போது உணரப்போகிறோம் அடுத்த தலைமுறைக்கு எதை விட்டுச் செல்ல இருக்கிறோம்?

தொலைத்தது வரை போதும், மீதம் உள்ளவயேனும் காப்பாற்றுவோம். 

வரலாற்று சின்னங்களான நம் கோவில்களை காப்போம். அந்த சிலைகளில் கூறப்பட்டுள்ள செய்திகளை உலகறிய செய்வோம். தமிழை அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்வோம்...

இந்தியாவில் சீனா வங்கி செயல்பட அனுமதி...


தமிழருக்கென ஓர் அரசியல் அமைப்பு ஏற்ப்படுவதைப் கன்னட ஈ.வே. ராமசாமி நாயக்கர் எவ்வாறு வஞ்சகமாய் தடுத்தார் என்பதை இங்கே காண்போம்...



சேலத்தில் 1944ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட மாநாட்டில் 'நீதி கட்சி' எனப்பட்ட தென்னிந்தியா நலவுரிமைக் கழகத்தின் பெயரைத் 'திராவிடர் கழகம்' எனப் பெயர் மாற்றினார் பெரியார். ஆனால், கி.ஆ.பெ விசுவநாதன், அண்ணல் தங்கோ, மு.தங்கவேலு, சவுந்திர பாண்டியன் ஆகியோர் நீதி கட்சியின் பெயரைத் திராவிடர் கழகம் என மாற்றுவதற்கு மாறாகத் 'தமிழர் கழகம்' என்று பெயரிட வேண்டும் என்று எவ்வளவோ போராடிப் பார்த்தனர். பெரியார் அடாவடித் தனமாக அதை ஏற்க மறுத்துவிட்டார்.

திராவிடர் என்பதற்கு மாறாகத் 'தமிழர்கள்' என்று ஏன் வழங்கக்கூடாது என்று சிலர் கேட்கிறார்கள். தமிழர்கள் என்று சொன்னாலே பார்ப்பனர்கள், நாங்களும் தமிழர்கள் தாம் என்று கூறி அதில் சேர்ந்து கொள்கிறார்கள். 'நாங்களும் தமிழ்நாட்டில் பிறக்கிறோம்;வளர்கிறோம்; அப்படி இருக்கும்போது எப்படி எங்களைத் தமிழர்கள் அல்லர் என்று நீங்கள் கூற முடியும்?' என்று கேட்கிறார்கள். ஒரு காலத்தில் தமிழர் என்பது 'தமிழ் (திராவிட) பண்புள்ள' மக்களுக்கு உரிய பெயராக இருந்திருக்க கூடுமானாலும், இன்று அது மொழிப் பெயராக மாரிவிட்டிருப்பதால், அம்மொழியைப் பேசும் 'ஆரியப் பண்புடைய' மக்கள் யாவரும் தாமும் தமிழர் என்ற உரிமை பாராட்ட முன்வந்துவிடுகிரார்கள். அதோடு, ஆரியப் பண்பை நம்மீது சுமத்த, அந்த சேர்க்கையைப் பயன்படுத்தி விடுகிறார்கள். (பெரியார் ஈ.வே.ரா, சிந்தனைகள், முதல் தொகுதி, பக் 556).

என்பதே பெரியாரின் கருத்தாக இருந்தது.

திராவிடர் என்று நம்மைக் சொல்லிக்கொள்ளவே பெரும்பாடாக இருக்கும்போது, தமிழர் என்று எல்லாரையும் ஒர்மையாக்க முயற்சிஎடுப்பதால் இன்னல்கள் கூடும். இங்கேயே பாருங்கள், கண்ணப்பர் தெலுங்கர், நான் கன்னடியன், தோழர் அண்ணாத்துரை தமிழர் (தெலுங்கர்)  இனி எங்களுக்குள் ஆயிரம் சாதிப்பிரிவுகள். என்னைப் பொருத்தவரையில், நான் தமிழன் எனச் சொல்லிக் கொள்ள ஒப்புகிறேன். ஆனால், எல்லா கனடியர்களும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள், தெலுங்கரும் அப்படியே. எனவே 'திராவிடக் குமுகத்தின்' உறுப்பினர்கள் நாம்; நம் நாடு திராவிட நாடு' என்று வரையறுத்து கொள்வதில் இவர்களுக்கு மறுப்பு இருக்காது. அது நன்மை பயக்கும்.

(பெரியார் ஈ.வே.ரா, சிந்தனைகள், முதல் தொகுதி, பக் 550).

இவ்வாறாக தமிழர்க்கென ஒரு வலுவான அரசியல் அமைப்பு உருவாவதை பெரியார் முறியடித்தார். பெரியாரின் 'திராவிட நாடு' கொள்கையை கன்னடர்களோ, தெலுங்கர்களோ, மலையாளிகளோ தொடக்கத்தில் இருந்தே ஏற்றுக்கொள்ளவில்லை என்பது பெரியாருக்கு நன்கே தெரியும். இதனால், தமிழகத்தில் மட்டுமே அத்திராவிட கொள்கைக்கு கடை விரிப்பது என்னும் தெளிவு பெரியாருக்கு அப்போதே இருந்தது கண்கூடு!

தமிழர் பெரும்பாலாக உள்ள கூட்டங்களில் எல்லாம் 'தமிழராகிய நாம்' என்று பேசும் பெரியார், 'நான்' என்று சொல்லும் போதெல்லாம் 'கன்னடராகவே' இருந்தார். இதனை 'நமது மொழி தமிழ் என்றார்;
எனது மொழி கன்னடம் என்றார்" (சு.அரசு திராவிட கயமை) என்ற பாடல் வரிகள் உணர்த்தும்...

விழித்துக்கொள் தமிழினமே...


ஒருவர் கொட்டாவி விட்டால்...


ஒருவர் கொட்டாவி விட்டால், பக்கத்தில் உள்ளவரும் கொட்டாவி விடுவார் என்று கூறுவார்கள். ஆனால் இது அறிவியல் ரீதியற்ற பொதுவான நம்பிக்கை என்பதுதான் நமது எண்ணமாக இருக்கும்.

தற்போது ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தி விட்டார்கள்- கொட்டாவி விடுபவர் நெருங்கிய உறவினராகவோ, நண்பராகவோ இருந்தால் அது நிச்சயமாகப் பரவும் என்று.

அருகில் உள்ளவர்கள் கொட்டாவி விடுவதைப் பார்ப்பவர்களும் ஏன் கொட்டாவி விடுவதைத் தவிர்க்க முடிவதில்லை என்ற கேள்வி நீண்டகாலமாக விஞ்ஞானிகளின் மண்டையைக் குடைந்து கொண்டிருந்தது.

தற்போது இத்தாலியின் பைசா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கொட்டாவி குறித்த உண்மையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

கொட்டாவி விடுபவருக்கும், அவருக்கு அருகில் இருந்து அதைப் பார்ப்பவர் அல்லது கேட்பவருக்கும் உள்ள உறவைப் பொறுத்து கொட்டாவியின் தாக்கம் இருக்கும் என்கிறார்கள் இவர்கள்.

நெருங்கிய உறவினர்களுடன் பேசிக்கொண்டிருப்பவர்கள் கொட்டாவி விடுவது அல்லது அதை அடுத்தவருக்குப் பரப்புவதற்கான வாய்ப்பு அதிகம் என்பது இந்த ஆய்வாளர்களின் கருத்து.

இவர்கள் தெரிவிக்கும் கூடுதல் தகவல், குழந்தைகளுக்கு நான்கு அல்லது ஐந்து வயது வரை அடுத்தவரிடம் இருந்து கொட்டாவி தொற்றிக் கொள்வதில்லை.

அவர்கள், அடுத்தவர்களின் உணர்வுகளைப் புரிந்து பழகத் தொடங்கும் போதுதான் கொட்டாவி தொற்றுகிறது...

விஞ்ஞானம் சோறு போடாது புரிகிறதா.?


தமிழர்களுள் எந்த சாதியும் உயர்ந்ததும் அல்ல, எந்த சாதியும் தாழ்ந்ததும் அல்ல...


தமிழ்ச் சாதிகள் அனைத்தும் சமமே என்றே கருத்தை ஆதி காலம் தொட்டே நம் முன்னோர்கள் முன்மொழிந்து வந்துள்ளனர்.

சாதிகள் இரண்டொழிய வேறில்லை என்று ஒளவையும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று நம் வள்ளுவனும் மனிதர்களுள் ஏற்றத் தாழ்வுகள் இல்லை என்று தெளிவுபட உரைத்துள்ளனர்.

எனினும் ஆரியம் தமிழ்ச் சாதிகளிடையே ஏற்றத் தாழ்வுகளை உருவாக்க, அதை திராவிடம் தனக்கு சாதகமாக பயன்படுத்தி சாதி இறுக்கத்தை உருவாக்கி தமிழர்கள் ஒன்றிணைய விடாமல் பார்த்துக் கொண்டது.

இதன் விளைவாகத் தான் தமிழ் சாதிகள் ஒன்றோடு ஒன்று மோதி தங்களுக்குள் அடித்து சாகிறது...

இஸ்ரேல் பிரதமர் யார்?


Link - http://www.bollyn.com/the-ties-between-netanyahu-and-silverstein

தமிழர் பண்பாட்டில், மொழியில், வரலாற்றில் இருந்து பிரிக்க முடியாத அறிவர் பட்டினத்தார்...


தமிழ் இலக்கியங்களில் நான் அதிகம் படித்தது பக்தி இலக்கியங்கள் தான். அதிலும் அதிகமாக படித்தது சித்தர் பாடல்கள். அவற்றுள் நான் விரும்பி படித்தது பட்டினத்தார் பாடல்கள் தான். கடவுள் இருப்பு மறுப்பு என்பதை கடந்து தமிழர்கள் யாவரும் படிக்க வேண்டிய படைப்பு பட்டினத்தார் பாடல்கள்.

தமிழின் அருஞ்சுவை, தமிழர் பண்பாட்டின் சாரம், மனதின் மாய விளையாட்டுகள், மெய்யறிவின் திறனாய்வு என பன்முக கோணங்களில் பாடப்பெற்ற பாடல்கள் தான் பட்டினத்தாரின் ஒப்பற்ற படைப்புகள்.

எல்லாவற்றிக்கும் மேலாக தாயை நேசிக்கும் எவரும் படிக்க வேண்டியது, தாயை குறித்த பட்டினத்தாரின் உணர்வுகள் மற்றும் நெஞ்சை உள்ளிருந்து உருக்கும் அவரது பாடல்கள்.

ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி.

முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே
அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்.

போன்ற பாடல்கள் நெகிழ்ச்சியின் உச்சகட்டம். மனிதன் கருவில் உருவாதல் முதல் பாடையில் சென்று முடிவில் சாம்பல் ஆகும் வரை வாழ்க்கையை அங்குல அங்குலமாக அளந்து பாடிய பாடல் வரிகள் நிச்சயம் படிப்பவரை மெய்சிலிர்க்க வைக்கும். சிந்திக்கத் தூண்டும்.

ஒரு கணப் பொழுதில் தனக்கு அறிவை ஊட்டி மறைந்த தனது புதல்வனின் இதயத்தை தைக்கும் வார்த்தைகள்.

'காதற்ற ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே' என்னும் வரிகள் தமிழர்களின் ஈடு இணையில்லா மெய்யியல் வாசகம்.

பகட்டான ஆரியப் பண்பாட்டினை, சடங்குகளை, நூல்களை சாடாமல் இல்லை பட்டினத்தார். தமிழர்களுக்கே உரிய அரிய சித்தர் ரகசியங்களை இவர் பாடல்கள் உள்ளடக்கி உள்ளது.

சாதி மதம் கடந்து தமிழர் மெய்யியல் விரும்பும் ஆர்வலர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல் பட்டினத்தார் பாடல்கள். இன்றும் தமிழர்கள் இறந்தால், சுடுகாட்டில் இறுதி சடங்கு செய்பவர் பாடும் பாடல்கள் பட்டினத்தார் பாடல்கள் தான்.

ஒவ்வொரு ஊருக்கும் உள்ள சிறப்பியல்புகளை விளக்கும் பாடல்கள். உடுக்க ஒரு உடைக் கோவணத்தோடு தமிழர் நிலப்பரப்பு முற்றிலும் தன் காலால் நடந்தே அளந்து முடித்து ஓய்ந்து முடிவில் திருவொற்றியூருக்கு வந்து நிலை கொண்டார் பட்டினத்து அடிகள்.

அவர் இறுதியில் அடக்கமான இடம் இன்றும் அங்கு இருக்கிறது. பல முறை அங்கு சென்று பட்டினத்தாரை நினைவு கூர்ந்துள்ளேன். அவரது பாடல்கள் என்றும் நினைவில் விட்டு நீங்காதவை.

தமிழும், தமிழர் பண்பாடும் இவ்வுலகில் வாழும் வரை பட்டினத்தாரும் இணைந்தே வாழ்வார். தமிழர் பண்பாட்டில், மொழியில், வரலாற்றில் இருந்து பிரிக்க முடியாத ஒரு மாமனிதர் பட்டினத்தார்.

யாருக்கும் அடங்காத வீரம், மண்டியிடாத மானம், சமரசம் இல்லா அறிவு போன்ற பண்புகளை தன்னகத்தே கொண்ட கருணையின் ஊற்றாக விளங்கிய பட்டினத்தாரை பற்றி ஒவ்வொரு தமிழனும் நிச்சயம் அறிந்திருக்க வேண்டும்...

விழித்துக்கொள் தமிழா...


கத்தரிக்காய்...


கத்தரிக்காய் ஒரு மூலிகை என்பது பலருக்கு தெரியாது. எனவே தான் சித்தர்கள் மரியாதையுடன் பத்தியக் கறி என்று இதனை அழைக்கிறார்கள்.

நம் இலக்கியங்களில் இதுவே வழுதுணங்காய் என அழைக்கப்படுகிறது.

ஆஸ்துமா, ஈரல் நோய், காசம் போன்ற தீவிரமான நோய்களுக்கு இலக்கானவர்களுக்கு வலிமை தரக்கூடியது இது.

இதனை வற்றல்போல் செய்து நல்லெண்ணெயில் பொறித்து உண்டால் உடலுக்குத் தேவையான வெப்பசக்தி கிடைக்கும். தாது பலவீனமாகி, இல்வாழ்வில் உடல்சோர்வை போக்கும். ஈரல் வலிமை குன்றி இருந்தால், ஈரல் சோர்வைப் போக்கும்.

கத்தரிப்பழத்தை ஊசியினால் குத்தி நல்லெண்ணெயில் வதக்கி மிளகுத்தூள், உப்பு தூவி உண்டால் பல் நோய்கள், அஜீரணம் நீங்கும். வாய்வுக் கோளாறு குறையும். பித்தம் போகும். மனிதர்களுக்கு மட்டுமின்றி, மாடுகளுக்கு வரும் வயிற்று வலி, வயிற்றுப்புழுக்கள், வயிறு உப்புசம் ஆகியவற்றுக்குக் கத்தரிக்காயைத் தணலில் சுட்டுச் சிறிது பெருங்காயம் கூட்டி மாடுகளுக்குக் கட்டினால், அந்நோய்கள் விலகும்.

தோல் சம்பந்தப்பட்ட நோய் உடையவர்கள் மட்டும் கத்தரிக்காயைச் சேர்க்கக்கூடாது. தோல் நோய்க் காரணங்களை இது மிகுவிக்கும். மூர்த்தி சிறியதாயினும், கீர்த்தி பெரியது என்னும் பழமொழிக்குச் சரியான எடுத்துக்காட்டு கத்தரிக்காய். நீர்ச்சத்து அதிகம் கொண்ட கத்தரிக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, பி1, மற்றும் பி2, காணப்படுகின்றன.

வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் ஒன்று. கத்தரிக்காய் பிஞ்சாகச் சாப்பிடுவதே நல்லது. முற்றிய பெரிய காய்களைச் சாப்பிட்டால் உடம்பில் அரிப்பு ஏற்படும். குறிப்பாக, வீட்டிலே வளர்த்துப் பிஞ்சாகப் பறித்துச் சாப்பிட வேண்டிய காய்களுள் இதுவும்  ஒன்றாகும்.

முற்றிய காய்கள் உடல் வளர்ச்சிக்குப் பயன்படும். காரணம், இவற்றில் வைட்டமின் ‘ஏ’ அதிக அளவில் இருக்கிறது. ஆனால், அளவாகத்தான் பயன்படுத்தவேண்டும். இதனால் கண்பார்வைத் திறனும்  அதிகரிக்கும். உடலுக்கு சூடு தரும் காய்கறி இது. எனவே, மழை நேரத்தில் கூட  இரவு நேரத்தில் உடல் கதகதப்பாய் இருக்கக் கத்தரிக்காய் குழம்பு சமைத்து உண்ணலாம்.

கத்தரி வற்றலும் உடம்பில் சூட்டை ஏற்படுத்தும். நீர்க்கனத்தைக் குறைக்கும். உடல் பருமனைக்  குறைக்கும். உடம்பில் சொறி சிரங்கு, புண் உள்ளவர்கள் கத்தரிக்காயைத் தவிர்ப்பது  நல்லது. உடலுக்குச் சூடு தரும் காய் என்பதால் அரிப்பை உண்டு பண்ணிப் புண்கள் ஆற அதிக நாள் ஆகும். மற்றவர்கள்  மருந்தைப்போல் கத்தரிக்காயை உணவில் சேர்த்து உடலுக்கு நன்மை பெற வேண்டும். இக்காய் இளம் பிஞ்சாய் இருந்தால், சமையலில் சேர்த்து நாம் சாப்பிடும் மற்ற உணவுகள் விரைந்து  சிதைந்து  சத்தாக உடலுக்குக் கிடைக்க இது பயன்படும்.

வீட்டில் நன்கு உரமிட்டு  வளர்க்கப்படும் கத்தரிச்செடியில் உள்ள பிஞ்சு உடலுக்கு வளத்தையும் வலிமையையும் தவறாமல் தரும்....

இயற்கை சக்தியா.? வல்லாதிக்க சக்தியா.?


இந்தியாவில் கான்பூர் நகரத்தில் படம்பிடிக்க பட்ட பறக்கும் தட்டு...


கான்பூரில் அபிஜித் ஒரு சிறுவன் மேகத்தை கானொலியாக எடுக்கலாம் என எண்ணியபொழுது பறக்கும் தட்டு பதிவானது .. கடந்த புதன் கிழமை இந்த படங்கள் எடுக்க பட்டதாக Indianexpress நாளிதழ் செய்திகள் வெளியிட்டுள்ளது . அபிஜித்தின் தந்தை சந்தோஷ் குப்தா ஆராய்ச்சியாளர்களிடம் இந்த படங்களை குடுத்து ஆராய போவதாக கூறியுள்ளார் .

அமெரிக்காவில் மட்டும் தான் பறக்கும் தட்டு , வேற்றுகிரகவாசிங்க வருவாங்களா ? ஏன் இங்க வரமாட்டன்களா என்று ஒரு சில வாசகர்கள் ரொம்ப நாள் கேட்டுட்டு இருந்திங்க.. அதை பாத்து இங்க ஒரு விசிட் அடிச்சுட்டாங்க போல..

உண்மையோ ? பொய்யோ எவன் கண்டான் ...

விழித்துக்கொள் தமிழா...


தோழர் முகிலன் அவர்களை கொலை வேண்டுமென்று முடிவு செய்து விட்டது.. பாஜக - அதிமுக அரசு...


ஸ்டெர்லைட் போராட்டத்தில் அவர் இருந்திருந்தால் சுட்டு கொன்றிருப்பார்கள் ஆதலால் தற்போது சிறையில் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி ஏதோ நோய்வாய்பட வைத்து கொல்ல திட்டம்.

3 வருடம் யாருமே அடைக்கப்படாமல் பூட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு கட்டிடத்தில் தோழர் முகிலன் அவர்களை மட்டும் தனியாக பூட்டி வைத்துள்ளனர். அவர் அடைக்கப்பட்டுள்ள அறையின் பின்பகுதியில் கழிப்பறைகளில் இருந்து வரும் மலம் செப்டிக் டேங்க் கட்டாமல் நேரடியாக அப்படியே தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் தான் தோழரை அடைத்து வைத்துள்ளனர்.

தோழர் இரண்டு நாட்களாக இரவு ஒரு நிமிடம் கூட தூங்கவில்லை காரணம் பத்தாயிரம் கொசுவாவவது இருக்கும் அந்த அறையில் அவரை சிறைபடுத்தியுள்ளனர்.

அந்த கட்டிடத்தில் ஒரு 5 நாட்கள் இருந்தால் போதும் ஏதாவது ஒரு நோய் தாக்கப்பட்டு இந்த அரசுக்கு தேவையான அவர் உயிர் கிடைத்து விடும். இது சாதாரண விசயம் அல்ல இப்படித்தான் சிறையில் நோய்வாய்பட்டு பல மரணங்கள் நடக்கும் போலிருக்கிறது...

சாகர்மாலா - தஞ்சை மற்றும் வேலூரில் விரைவில் விமான சேவை...


தனது நண்பரின் அப்பாவை திருமணம் செய்து கொண்ட சிறுமி.. என்ன காரணம் சொன்னார் தெரியுமா...


மலேசியாவில் 41 வயது அப்துல் கரீம் என்பவர் 11 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதற்கு அந்த நாட்டில் உள்ள முஸ்லிம்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இஸ்லாமிய சட்டப்படி ஒரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்றால் அவருக்கு குறைந்தபட்சம் 16 வயதாவது ஆகி இருக்க வேண்டும். மலேசிய சட்டப்படி 18 வயதுக்கு குறைவானவரை திருமணம் செய்யகூடாது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளதால் அந்த நாட்டு அரசு இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

ஆனால் 41 வயது அப்துல் கரீமை திருமணம் செய்து கொண்ட 11 வயது சிறுமி கூறும்போது, அவரை நான் விரும்புவதாகவம், அவர் நல்ல மனிதர் என்றும் தெரிவித்து உள்ளார். என்னை விரும்பும் நபரை நான் நேசிக்கிறேன். அவரை நான் விவாகரத்து செய்ய மாட்டேன். நான் சிறுமிதான். அவரை எனக்கு நீண்ட நாட்களாக தெரியும்.

அவருடைய குழந்தைகள் எனது நண்பர்கள். அவரை ஒரு போதும் விட்டு தர மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறி இருக்கிறார். இந்த சமபவம் மலேசியால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...

விழித்துக்கொள் தமிழா...


இவர் யாரென்று எத்தனை பேருக்கு தெரியும்...


தெரிந்து கொள்வதற்கு முன், இவருக்கு உங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் நீங்கள் இன்று வாழ்வதற்கு முக்கிய காரணமே இவர்தான்.

Dr.Jonas Salk, இவர் தான் போலியோ'க்கு தடுப்பு மருந்து கண்டு பிடித்தவர். சரி, எத்தனையோ நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்த பல அறிவியலாளர்கள் இருக்கும்போது இவருக்கு மட்டும் ஏன் இவ்வளவு சிறப்பு?

இவர் POLIO தடுப்பு மருந்து கண்டுபிடித்த பிறகு patented right, வாங்க மறுத்து விட்டார் (அதாவது கண்டுபிடிப்பு உரிமம். சினிமா படம் copyrights வாங்குவது போல்..) இவர் அவ்வாறு செய்திருந்தால் உலகிலேயே மிகப்பெரிய பணக்காரனாக இருந்திருப்பார்.

ஆனால் அப்படி செய்திருந்தால், பல கோடி ஏழை எளிய மக்கள் அந்த மருந்தை வாங்க முடியாமல் நோய் வாய் பட்டு இறந்திருப்பார்கள்..

பேட்டி ஒன்றில் ஏன் நீங்கள் உரிமம் பெறவில்லை எனக்கேட்டதற்கு, சூரியனுக்கு யாராவது உரிமை கொண்டாட முடியுமா என்று கேட்டார், இந்த மாமனிதர்...

பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ்... போன்றவர்களை போற்றும் இந்த உலகம், இவரை யாரென்று கூட தெரிந்து கொள்ளவில்லை என்பது கசப்பான உண்மை...

பிறகு எதற்கு சாலை வரி கட்டணம்..?


ஆழ்மனம்.. வெளிமனம்...


மனதை, பொதுவாக அறிவு மனம் (conscious mind), ஆழ்மனம்(Sub-conscious mind) என இரு பிரிவுகளாக பிரிக்கலாம்.

அறிவுமனம் அல்லது வெளிமனம் ஒரு செய்திவங்கியாக பணியாற்றுகிறது. புலன்களின் தொடர்பு இதற்கு உண்டு. கண்ணால் கண்ட காட்சிகள், காதால் கேட்ட வார்த்தைகள், சப்தங்கள், மூக்கால் நுகர்ந்த வாசனைகள், நாக்கால் அறிந்த சுவைகள், தொட்டு உணர்ந்த புரிதல்கள் அனைத்தும் செய்திகளாக அறிவு மனத்தில் பதிவு பெறும்.

விவாதங்கள் மனதில் மிகும். அறிவின் துணை கொண்டு ஆய்வுகள் நடைபெறும். நல்லது கெட்டது தெரியும். அதனால் வாழ்வில் சிலவற்றை நாம் ஒதுக்குவோம். பலதை விரும்புவோம். அதற்குரிய செயல்கள் தொடரும். பழக்கங்கள் மிளிரும். பண்புகள் தோன்றும். தன் அனுபவத்தை வைத்து சிந்தித்து சீர்தூக்கி முடிவு செய்யும்.

ஆனால் ஆழ்மனம் அல்லது உள்மனம் என்பது பாதுகாக்கப்பட்ட ஒரு பெட்டகம். இது தன்னிச்சையாக இயங்கும். அறிவு மனத்திற்குக் கிடைக்கும் செய்திகள் எதையும் அது ஏற்காது. அதற்கு நல்லது கெட்டது என்று எதுவும் தெரியாது, கிடையாது. வெற்றி,தோல்வி என்றும் எதுவும் கிடையாது. உண்மையான அனுபவத்திற்கும், கற்பனையான அனுபவத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டை அது அறியாது.

இத்தகைய பண்புகளைக் கொண்ட ஆழ்மனம் என்னதான் செய்யும்?

அடிக்கடி காண்பவைகள், திரும்ப திரும்பக் கேட்பவைகள் உணர்வு வயப்பட்ட நிலையில் கண்டு, கேட்டவைகள், அனுபவித்தவைகள், ஆல்ஃபா என்ற தளர்வு நிலையில் அல்லது தியானநிலையில் கேட்டவைகள் ஆகியவை மட்டுமே அதனுள் செல்லவல்லது. எந்த எண்ணத்தை வேண்டுமானாலும் ஆழ்மனதுள் ஆல்ஃபா நிலையில் நாம் செலுத்தலாம். நல்ல எண்ணம் அல்லது தீயஎண்ணம், வாழ்விற்கு உதவும் எண்ணம், உதவாத எண்ணம் என அது விவாதம் புரிவதில்லை. எண்ணத்தின் தன்மைகளை பார்ப்பதில்லை. அனிச்சையாக நாம் எந்த செயல் செய்தாலும் அது உள்மனதின் வழிகாட்டுதல்தான்.

திரும்பதிரும்பச் சொல்லப்பட்டவைகளை, தனக்கு தரப்பட்டவைகளை ஏற்றுக்கொள்வது என்கிற ஒரே நிலையில் அது பணிபுரிகிறது. ஆனால் இது மகத்தான சக்தி உடையது. எந்த எண்ணத்தை அதற்குத் திரும்பதிரும்ப கொடுக்கிறோமோ அதை ஆழ்மனக்கட்டளையாக மாற்றி ஏற்றுக்கொண்டு,அக்கட்டளைகளைப் புற உலகில் வேண்டியவைகளை ஈர்த்து, தனதாக்கிக் கொண்டு அவ் எண்ணத்தை நிறைவேற்றும் பணியை செவ்வனே நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறது. தன்னிடம் தரப்படுவதை, ஊட்டப்படுவதை ஒன்றுக்கு பத்தாக பெருக்கிக் காட்டுவதே இதன் இயல்பு.

இதை பண்படுத்தப்பட்ட நிலமாக வைத்திருக்க வேண்டியது நமது பொறுப்பு. நல்ல விசயங்களை ஆழ்மனதிற்கு தொடர்ந்து கொடுக்க வேண்டும். உண்மையாகவும், விசுவாசமாகவும் கொடுக்கப்பட வேண்டும் என்பதே முக்கியம். நினைத்தேன் நடக்கவில்லை என்றால் மேலோட்டமாக நினைத்துள்ளோம் என்பதே பொருள். நமக்கு நாமே எப்படி உண்மையாக, விசுவாசமாக இருக்கிறோமோ அதுபோல் எண்ணம் இயல்பானதாகி விடவேண்டும். நம்மை மாற்றியமைக்க ஒரே வழி, நமக்கு தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் ஆழ்மனதை உற்ற நண்பனாக்கிக் கொள்வதுதான்.

இப்போது சற்று சிந்தித்து பாருங்கள்...

நீங்கள் அடிக்கடி எந்தவிதமான வார்த்தைகளை பயன்படுத்துகிறீர்கள்? எதைப் படிக்கிறீர்கள் ? அடிக்கடி என்னவிதமான எண்ணங்களை மனதில் சுழல விட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்? இவை உங்கள் வாழ்வில் எந்த விதமான மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன? இவற்றிற்கிடையே உள்ள தொடர்பை புரிந்து கொள்ள முடிகிறதா? சிந்தியுங்கள், வாழ்க்கை வளம் அடையும்...