03/03/2022

சராசரித் தமிழனே சாதிப்பான்...

 


நீங்கள் வேண்டுமானால் பாருங்கள்...

வரலாறே தெரியாத

தமிழில் புலமையே இல்லாத

அரசியல் பற்றி எதுவுமறியாத

ஒரு சராசரித் தமிழ் இளைஞன் தான்  இனத்தின் மீது அக்கறைகொண்டு தன் வீரமும் அறிவும் மட்டுமே துணையாக ஆயுதம் தூக்கி பதிலடி கொடுத்து..

புத்தகம் எழுதும்

இயக்கம் நடத்தும்

அரசியல் பேசும்

கூட்டம் சேர்க்கும்

அதிமேதாவி தமிழ்தேசியர்களின் அத்தனை முயற்சிகளின் பலனையும் அசட்டையாக தட்டிக்கொண்டு போகப்போகிறான்..

கோடானு கோடித் தமிழர்கள் மனதில் கால்மேல் கால் போட்டு அமரப்போகிறான்..

இன்று நடப்பதெல்லாம் அவன் செயல்களுக்கு நியாயம் கற்பிக்க மட்டுந்தான் பயன்படப்போகிறது...

உக்ரைன் Vs மீ...

பிராணயாமம் - நாடி சுத்தி...

 


பிராணயாமங்களின் அடிப்படை என்பது நாடி சுத்தி என்றழைக்கப்படும் சுவாச சுத்தியே.

சுவாச சுத்தி என்பது, இடதுபுற நாசித்துவாரத்தில் காற்றை உள்ளிலுத்து பின்பு காற்றை அடக்காமல் வலப்புற நாசியின் வழியே காற்றை வெளியேற்ற வேண்டும்.

அதன்பின்பு வலப்புற நாசியினால் காற்றை உள்ளிழுத்து காற்றை அடக்காமல் இடப்புற நாசி வழியே காற்றை வெளியிட வேண்டும்.

இவ்வாறாக மாறிமாறி செய்வதால் சுவாசம் சுத்தமடையும். இச்செயலின் காலத்தில் அதிகமாக கோபப்படுதல், வேகமடைதல் போன்ற உணர்ச்சிகளுக்கு ஆளாக கூடாது.

நிதானமும், அமைதியும் வேண்டும். காலை வேளையே இந்த பயிற்சிக்கு சரியானதாகும். குளிர்ந்த நீரைப்பருகி வெறும் வயிற்றுடன் இந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

இந்த பயிற்சியை பழகிய பின்பு தினமும் காலை, உச்சி வேளை, மாலை வேளை என்று மூன்று நேரங்களிலும் இந்த பயிற்சியை நிதானமாக செய்ய வேண்டும்.

இப்படியே தொடர்ந்து ஒரு மாதம் செய்தால் நாடி சுத்தமடையும். இதை இன்னும் சுருக்கமாக சொல்லலாம். காற்றில் கண்ணுக்கு தெரியாத கிருமிகள் கலந்திருக்கின்றன. இவை நாம் சுவாசிக்கும் போது சுவாசத்தின் வழியாக உடலுக்குள் சென்று உடலை நோய்வாய்ப்படுத்துகின்றன.

இந்த நோய்க்கிருமிகளை தான் ஆலகால விஷம் என்று புராணங்கள் சொல்கின்றன. இந்த விஷத்தை முறியடிக்க வாசுகி என்னும் வாசிக்கலை முக்கியமானதாகிறது.

மூச்சுக்கலையால் உடலுக்குள் செல்லும் விஷங்கள் எல்லாம் முறிக்கப்பட்டு உடலுக்குள் தூய பிராணன் மட்டுமே நிறைகிறது. இப்படி தூயகாற்றால் உடலின் நுண்உறுப்புகள் எப்போதும் பரிசுத்த தன்மையுடன் விளங்குவனவாக அமைகின்றன.

மூச்சுப் பயிற்சி...

எல்லோருக்குமே இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கான வழிகள் தெரியாது. இளமையாக இருக்க ஆசனங்கள் உதவும். ஆசனங்களை முறையாக செய்வது நன்மை தரும்.

நம்முடைய சுவாசம் சரியாக இருக்கும் பட்சத்தில் உடலும், மனமும் புத்துணர்ச்சியை பெறும். சுவாசத்தை சரியாக செய்யாதபோது, நம் செயல்களில் கவனம் செலுத்த முடியாது. தியானமும் இதன் அடிப்படையில் உருவானது தான். மூச்சுப் பயிற்சியை முறையாக செய்தால் சிறந்த பலன்கள் பெற முடியும்.

பல ஆண்டுகளுக்கு முன்பு மூச்சு விடுதல் ஒரு கலையாக இருந்தது. அதை கற்றதால் உடலில் மட்டுமின்றி வாழ்க்கையிலும் சாதிக்க முடிந்தது. ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை மூச்சு விடுகிறான். அதை பத்து முறையாக்கும்போது புத்துணர்ச்சி கிடைக்கும்.

இதனை தியானத்தின் மூலம் பெறலாம். தினமும் பத்து நிமிடம் ஒதுக்கி மூச்சுப் பயிற்சி செய்தால் பலன் கிடைக்கும். முதுகை நேராக வைத்தபடி, அமர்ந்து, கண்களை மூடி நிதானமாக மூச்சு விட்டால் புதிய அனுபவத்தை உணரலாம்.

மூச்சுப்பயிற்சி செய்பவர்கள் காலையில் 5 நிமிடம் மாலையில் 5 நிமிடம் மூச்சை மெதுவாக இழுத்து வெளியே விட்டால் நல்ல மாற்றம் தெரியும்...

திட்டம் போட்டு திருடர கூட்டம் திருடி கொண்டு இருக்குது...

திருட்டு திமுக ஸ்டாலின் பித்தலாட்டம்...

ஆடி மாதம் - அம்மன் கூழ் மகிமை தெரியுமா?

 


கேழ்வரகு மிகுந்த சத்துள்ள தானியம். கம்பு குளிர்ச்சியைத் தரக்கூடியது. சத்தையும் குளிர்ச்சியையும் தரக்கூடிய இவற்றில்தான் கூழ் காய்ச்சி ஊற்றியிருக்கிறார்கள்.

பஞ்சத்தைப் போக்குவதோடு... வெப்பம் மற்றும் வறட்சி ஆகிய இரண்டையும் தாக்குப்பிடிக்க உதவியிருக்கிறார்கள்.

கூழுக்குக் கடித்துக்கொள்ள கொடுக்கும் சின்ன வெங்காயம் மிகப்பெரிய மருத்துவ பலன்களைக் கொண்டது.

அதேபோல் கஞ்சியில் சேர்க்கும் பாசிப்பயறு, இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், பெருங்காயம், தேங்காய் துருவல், மல்லித்தழை, கறிவேப்பிலை, மாங்காய் என்று எல்லாமும் மருத்துவ குணங்களைக் கொண்ட பொருட்கள்தான்.

இப்படிச் சத்தான, நோய்களை தீர்க்கும் பொருட்களைக் கொண்ட உணவுதான் கூழும்... கஞ்சியும்.

எவ்வளவு பெரிய மருத்துவ அறிவோடு இந்த வழக்கத்தை கடைப்பிடித்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்...

எதுக்கும் நாமளும் உஷாரா இருப்போம்...

உங்களில் ஒருவன் நூலிலிருந்து😁😂

இனிய காலை வணக்கம்...

திமுக ஸ்டாலின் கலாட்டா 😁

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆப்பு...