28/10/2017

வெண்படைகளுக்கு வெளிமருந்து, உள்மருந்து இரண்டும் உண்டு...


இதுக்கு அடிப்படையான மூலிகைகள்...
 
கார்போக அரிசி, கருஞ்சீரகம், நீரடிமுத்து, சேராங்கொட்டை, பறங்கிப்பட்டை போன்றவை.

இவற்றை மாத்திரை வடிவிலும், ரசாயனம், சூரணமாகவும் கிடைக்கும்.

வெளிமருந்தாக தைலம், பசை உண்டு.

மருந்து சாப்பிடும் போது உணவில் பத்தியம் உண்டு.

புளிப்பு சுவையுள்ள பழங்கள், உணவுகள் தவிர்க்க வேண்டும்.

மாதுளை, அத்தி, சப்போட்டா, நாவல்பழங்கள் சேர்த்துக் கொள்ளலாம்.

மீன், மாமிசம் தவிர்க்க வேண்டும்.

முளைகட்டிய தானியங்கள், கீரைகள், மோர் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வாரம் ஒருமுறை மூலிகை எண்ணெய்க் குளியல் செய்ய வேண்டும்...

கன்னட நடிகை ஒருவருடன் பிரபல கர்நாடக மடாதிபதி சாமியார் உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியாகி கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...


கர்நாடகாவில் 500 வருடங்கள் வரலாற்று சிறப்பு மிக்க ஹுனாசமரனஹலி சமஸ்தான பீடத்தின் தலைமை மடாதிபதியான பர்வதராஜ சிவச்சார்யாவின் மகனான தயானந்தா மற்றும் குருநாஞ்சேஸ்வர சிவச்சார்ய சுவாமி ஒரு நடிகையுடன், ஒரு அறையில் உல்லாசமாக இருக்கும் வீடியோ இன்று வெளியானது.

மடத்தினுள்ளே உள்ளே அறையிலேயே இந்த சம்பவம் நடைபெற்றதாக தெரிகிறது. 

இதைக்கண்டு கொதித்தெழுந்த பொதுமக்கள், அந்த மடத்தின் முன்பு ஒன்று கூடி தலைமறைவாக உள்ள தயானந்தாவை வெளியே வருமாறு குரல் எழுப்பினர். ஆனால், அது தான் இல்லை என தயானந்தா மறுப்பு தெரிவித்துள்ளார்.

அந்த நடிகை சிவமோகா என்ற பகுதியை சேர்ந்த அந்த நடிகை சிறு பட்ஜெட் படங்கள் சிலவற்றில் நடித்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது. 

மடத்திற்கு சொந்தமான இடத்தை சில லட்சங்களுக்கு தயானந்தா விற்றுள்ளார் என்ற புகார் ஏற்கனவே அவர் மீது இருக்கிறது.

இந்நிலையில், இந்த பாலியல் புகாரில் அவர் சிக்கியுள்ளார். இவரின் தந்தையும் ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக ஏற்கனவே புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது....

உடல் நலக்குறைவால் டெல்லி தனியார் மருத்துவமனையில் காங். தலைவர் சோனியா காந்தி அனுமதி...


பிரம்மத்தை நோக்கி - 3...


நமது மூலம் என்ன? நாம் நமது தாய் தந்தை வழியே இணைய பெற்று இங்கு வந்துள்ளோம்.

தாய் தந்தையின் விந்தணுவில் உள்ள 46 குரோமோசோம்களும் இணைந்து வந்துள்ளோம்.

தாயின் மரபணுவில் உள்ள 23 குரோமோசோம்களும், தந்தையின் மரபணுவில் வந்த 23 குரோமோசோம்களும் இணைந்து ஒரு செல் உருவாகி, தாயின் கருவில் வளர்ந்து நாம் இங்கு வந்துள்ளோம்.

சரி தாய் தந்தையின் மூலம் என்ன?

நமது தாய் உருவாக இரண்டு பேர் காரணம், அவளது தாய் மற்றும் தந்தை, நம் தந்தை உருவாக இரண்டு பேர் காரணம், அவனது தாய் மற்றும் தந்தை.

ஆக நான்கு பேர்கள். அந்த நான்கு பேர்களின் தாய் தந்தையென எட்டு பேர்கள். இப்படி 2-4-8-16-32-64-128-256-512-1024.

இந்த பெருகி வரும் நம் முன்னோர் சந்ததி இரு வேறு புறத்திலும் விரி வடைகிறது.

ஆக, நாம் என்னவோ முப்பாட்டன் பாட்டன் அப்பன் பிறகு நான் எனக்கு அடுத்து என் மகன் என இந்த மரபு தந்தையின் மூலம் ஒரே வழியாக நேரடியாக வரும் மரபு என நினைத்து கொண்டு இருக்கிறோம்.

அது தவறு, அது நேரடியான மரபு அல்ல. உன் முன்னோர்கள் என சொன்னால் அது ஒரு நதியின் நீரோட்டமல்ல. அந்த நதி தாய் தந்தை என இரண்டு கிளைகளாக பிரிகிறது. இன்னும் கொஞ்சம் முன்னே பார்த்தால் அந்த இரண்டுக்கும் நான்கு கிளைகள்.

இப்படி ஒவ்வொரு கிளைக்கும் மொத்தம் 1024 கிளைகள் பிரிந்து செல்கிறது. நம் உயிரானது இந்த கிளைகள் ஒன்றை ஒன்று சந்திக்கும் இடத்தில் உருவாகிறது.

ஆம் நம் மூலம் ஒருவழிப் பாதை அல்ல. இருவேறு வழிப்பாதை. நமது இடப்புற பாதையிலும் வலப்புற பாதையிலும் இருவேறு உலகங்கள் அகண்டு விரிந்து பரவுகிறது.

பிரம்மத்தை நோக்கிய பயணம் தொடரும்....

விழுப்புரத்தில் நெடுஞ்சாலையோரத்தில் கடை அமைக்க ரூ 2 லட்சம் லஞ்சம் வாங்கிய 2 அதிகாரிகள் கைது...


திருட்டு அரசியல் உண்மைகள்...


வெற்றிகரமாக திசைதிருப்பட்டோம் அனைத்து கட்சிகளும் கூட்டணியே வெளியில் மட்டும் எதிரி போல் நடிப்பு இதனை மக்கள் சிந்திக்க செல்லும் போது ஏதாவது ஒரு பிரச்சனையில் திசைதிருப்ப பட்டு மறக்கப்படுவாய்...

தேசத்தின் குரவளையை நெறிக்கும் அடுத்த கயிறு.. ஏழை எளிய மக்களின் கனவில் மண் அள்ளி போட்ட அயோக்கிய பாஜக மோடி அரசு...




நிலம், வீட்டு மனைகள் வாங்க விற்க 12% GST - ஜெட்லி அறிவிப்பு...

இனிவரும் காலங்களில் 5 இலட்சத்திற்கு ஒரு வீட்டு மனை வாங்கினால்.. வாங்கும் நபர் 60 ஆயிரமும், விற்பனை செய்பவர் 60 ஆயிரமும் ஆக மொத்தம் 1,20,000 ஆயிரம் ரூபாயை வரியாக செலுத்த வேண்டும்.

இதுபோக தற்போது நடைமுறையில் உள்ள 8% (40 ஆயிரம் ரூபாயை) பத்திரப்பதிவுக்கு செலுத்த வேண்டும்.

மொத்தம் 32% வரி (1,60,000)..

இனி வரும் காலங்களில் வீட்டு மனை வாங்க வேண்டும், வீடு கட்டவேண்டும் என்ற கனவு, நடுத்தர, ஏழை மக்களுக்கு கனவாகவே போகும்.

ஓராண்டுக்கு வங்கியில் 2000 ரூபாய் வைப்புத்தொகை (Fixed Deposit) செலுத்தினால் 6% வட்டியில் 120 ரூபாய் கிடைக்கும்.

ஓராண்டுக்கு வங்கியில் 2000 ரூபாய் கடன் (Loan) வாங்கினால் 13% வட்டியில் 260 ரூபாய் கட்டவேண்டும்..

ஆனால், 2000 ரூபாய்க்கு சாப்பிட்டால் 18%-ல் 360 ரூபாய் அரசாங்கத்திற்கு வரி கட்ட வேண்டும்.

இதுதான் சட்டப்படி கொள்ளையடிப்பது;
முறைப்படுத்தப்பட்ட வழிப்பறி;

இந்த அயோக்கிய மோ(ச)டி கும்பல் என்று  ஒழிகிறதோ அன்றே இந்தியாவுக்கே விடிவுகாலம்.

இப்போது புரியுதா 2020 க்குள் அனைவருக்கும் வீடுங்கிற திட்டம் எவ்வளவு அயோக்கியத் தனமான பச்சை பொய்யுனு?

அவன் அவன் வாயை கட்டி வயித்தை கட்டி குருவி சேர்க்கிற மாதிரி சேர்த்து நிலம் வாங்க போனா இந்த பிச்சைக்காரனுங்க வந்து 32 சதவிகிதம் வரிங்கிற பெயரில் அதிகார பிச்சை எடுத்துட்டு போவானுங்களாம்....

நாட்டோட வளர்ச்சியை இப்படி அடித்தட்டு மக்களின் வயிற்றில் அடித்து பிடுங்கியா காட்ட வேண்டும்?

பாஜக அரசு மக்கள் விரோத அரசு என்பதை மீண்டும் மீண்டும்   நிருபிக்கிறது.

ஏன்டா அயோக்கிய நாய்களா மக்களுக்கு என்ன நன்மை செய்து கிழிஞ்சிட்டிங்க உங்களுக்கு எதுக்குடா கட்டனும் வரி?

நாங்கள் ரத்த வேர்வை சிந்தி உழைத்து சேர்த்த பணத்தில்  என்ன மயிருக்குடா குடுக்கனும் லட்ச கணக்கில் வரி திருட்டு நாய்களா....?

ஜெயலலிதா மரணம்குறித்து தகவல் அறிந்த தனி நபர்கள் விசாரணை ஆணையத்திடம் தெரிவிக்கலாம்...


தகவல்களைத் தெரிவிக்க நவம்பர் 22-ம் தேதி கடைசி நாள் - விசாரணை நீதிபதி ஆறுமுகசாமி அறிவிப்பு...

சேலம் மகேந்திரபுரியில் விளையாட்டு மைதானமாக இருந்த இடம் இப்போது கொசு உற்பத்தியாகும் குட்டையாகியுள்ளது. சேலம் மாநகராட்சிக்கு எவ்வளவு அபராதம் விதிப்பது?


அமானுஷ்யம் - மனுஷங்களைப் போல தான் பேய்களிலும்... ஏகப்பட்ட குரூப்கள்...


சில வகைப் பேய்கள் மக்களோடு தான்
இருக்கும்..

நள்ளிரவில் விசும்பல் சத்தம் கேட்பது, கட்டில் கிரீச்சிடுவது, யாரோ நடக்கிற மாதிரி கேட்பது இதெல்லாம் இந்த வகைப் பேய்களுடைய சமாச்சாரங்கள்.

தற்கொலை, விபத்து, கொலை என ஏடாகூடமாகச் செத்துப் போறவங்க தான் இந்த வகைப் பேய்கள்.

ரொம்ப உஷாரா இருங்க இவை புத்திசாலிப் பேய்கள்.

சில பேய்கள் சும்மாச் சும்மா ஒரே மாதிரி செயல்களைச் செய்து கொண்டே இருக்கும்..

கொஞ்சம் முட்டாள் பேய் என்று சொல்லலாம். பாழடைந்த மண்டபங்களில் கதவு அசைவது , ஊஞ்சல் ஆடுவது இப்படி சொல்லி வைத்த மாதிரி எல்லோரும் ஒரே கதை சொல்றாங்கன்னா, இந்த வகைப் பேய்கள் தான்.

சில வகைப் பேய்கள் நினைவு நாள்
பேய்கள்..

செத்துப் போன நாளைக் கொண்டாட மட்டும் ஆவியா பூமிக்கு வருமாம். மற்றபடி சாதுவாக கல்லறைக்குள் தூங்கி விடும். ஆனால் ஒரே ஒரு நாள் வந்தாலும் கொஞ்சம் கெடுபிடியான பேயாகவே இருக்குமாம்.

சினிமாவில் வருவது போல, மனிதர்களைப் பிடித்து உள்ளே நுழையும் பேய்கள் இன்னொரு வகை..

மனிதனுக்குள் புகுந்து கொண்டு அதிகாரம் செய்யும். கொஞ்சம் டேஞ்சரஸ் பேய் இது.

நிறைவேறாத ஆசை பேய்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்..

பையனுக்கு கல்யாணம் பண்ணிப் பாக்க ஆசைப்பட்டேன் என ஏக்கத்துடன் இறந்து போனவர்கள், அந்தப் பையனுக்கு திருமணம் நடக்கும் வரை ஆவியாகி சுற்றிச் சுற்றி வருவார்களாம்.

சிலவகைப் பேய்கள் மெசெஞ்சர்
பேய்கள்..

நல்ல பேய்கள் லிஸ்டில் வைக்க வேண்டிய பேய்கள் இவை.

பெரும்பாலும் ஒரு குடும்பத்திலுள்ள மரணச் செய்தியை நெருங்கிய சொந்தக்காரர்களுக்குச் சொல்லும் செய்தியாளன் இது.

சட்டென மனதில் ஏதோ தோன்ற ஊருக்கு போன் பண்ணினால், ஆமாப்பா இப்போ தான் தாத்தா போயிட்டார் என கிடைக்கும் புரியாத Ghost (22)கதைகளின் நாயகன் இந்தப் பேய்தான்.

இன்னொரு வகை பேய் பாசக்கார பேய்..

சொந்தக்காரர்களைத் தேடி வரும். பார்த்து விட்டுப் போய்விடும். பல வேளைகளில் அது வருவதே கூட யாருக்கும் தெரியாது. இறந்து போன பிறகும் வீட்டிலுள்ளவர்களைக் காவல் காப்பவை இவை.

நல்ல பேய் இனத்தில் பாதுகாக்கும்
ஏஞ்சல்ஸ் முக்கியமானவை..

இவை ஒவ்வொருவருடைய தோளிலும்
அமர்ந்திருந்து நம்மைப் பாதுகாக்குமாம்.

பல நேரங்களில் மயிரிழையில் தப்புவதெல்லாம் இந்த காவல் தேவதைகளின் புண்ணியத்தினால் தான்.

சில வகைப்பேய்களுக்கு தான் இறந்து போனதே தெரியாது. உயிருடன் இருப்பதாகவே நினைத்துக் கொள்ளும்.

குறிப்பாக ஊருக்கு ஒதுக்குப் புறத்தில்
வசிக்கும் வயதானவர்கள் கவனிக்க
யாருமின்றி இறந்து போனால், அவர்கள்
ஆவியான பின்னும் மனிதர்களைப் போலவே வாழ்ந்து கொண்டே இருப்பார்களாம்...

ஆன்மா...


நன் மக்கள் கூற்றை கேளுங்கள்.... தெரிந்து கொள்வதில் கெடுதல் இல்லை..

உடம்பைச் சாராத ஆன்மா..

அதுவே நீ என்ற தியானப் பகுதி இது..

ஆன்மா வாழும் வீடு இந்த உடம்பு.

அதாவது, உள்ளே உறைகின்ற ஆன்மா என்பது ஒன்று, உடம்பு என்பது வேறொன்று.

இதனை தியானிப்பவன், இந்த உண்மையை ஆழ்ந்து சிந்தித்து தனக்கு உரியதாக்கிக் கொள்பவன், அந்த உணர்விலேயே வாழ முடிந்தவன் சுதந்திரனாகிறான்.

அதாவது உடம்பு, மனம் போன்ற கருவிகள் தன்னைக் கட்டுப்படுத்துவதிலிருந்து விடுபடுகிறான்.

உடம்பும் மனமும் தன்னிலிருந்து வேறானவை அவை தன்னைக் கட்டுப்படுத்துவதில்லை என்று உணர்கின்ற ஒருவன் மரணத்திலிருந்தும் விடுபடுகின்றான்.

ஏனெனில் மரணம் உடம்பிற்கு மட்டுமே.

சுருக்கமாகச் சொல்வதானால் அவன் மரணத்தை வெல்கிறான்.

உடம்பு வீழ்ந்த பிறகு, மீண்டும் பிறவாத நிலையை அடைகிறான்.

ஹம்ஸ: சுசிஷத் வஸுரந்தரிக்ஷசத்
ஹோதா வேதிஷத் அதிதிர் துரோணஸத் I
த்ருஷத் வரஸத் ரிதஸத் வ்யோமஸதப்ஜா
கோஜா ரிதஜா அத்ரிஜா ரிதம் ப்ருஹத் II (கட 2.1:2)

பொருள் : அந்த ஆன்மா எங்கும் செல்வது, தூய ஆகாயத்தில் சூரியனாக இருப்பத், அனைத்திற்கும் ஆதாரமானது, வெளியில் (SPACE) காற்றாக இருப்பது, அக்கினியாக பூமியில் இருப்பது, விருந்தினனாக வீட்டில் இருப்பது, மனிதனில் உறைவது, தேவனில் உறைவது , உண்மையில் உறைவது, ஆகாயத்தில் உறைவது, நீரில் தோன்றுவது, பூமியில் தோன்றுவது , யாகத்தில் தோன்றுவது, மலையில் தோன்றுவது, பிரபஞ்ச நியதியாக விளங்குவது, பெரியது.

ஆன்மாவின் எங்கும் நிறைந்த தன்மைக்கான ஒரு பரந்த விளக்கத்தை இங்கே காண்கிறோம்.

எங்கும் நிறைந்த ஒன்றாக இருப்பதால் அது செல்ல முடியாத இடம் என்று ஒன்று இல்லை. எனவே எங்கும் செல்வது.

விருந்தினர் தெய்வமாகக் கருதப்பட வேண்டும் என்கிறது தைத்த்ரீய உபநிஷதம்.

ஒரு காலத்தில் இந்தக் கருத்து பிரபலமாக இருந்ததாகவும் தற்போது மறைந்து வருவதாகவும் சுவாமி விவேகானந்தர் குறிப்பிடுகிறார்.

சங்கு, சிப்பி, முது, மீன் போன்ற நீர்வாழ் உயிரினங்கள் நீரில் தோன்றுபவை. தானியங்கள் முதலானவை நிலத்தில் தோன்றுபவை.

பிரபஞ்சத்தில் பல்வேறு சக்திகள் செயல்படுவதையும், அந்த சக்திகளே பிரபஞ்சத்தை இயக்குவதையும் கண்ட வேத கால மனிதன் வாழ்வின் வளத்திற்கும் நலத்திற்கும் அந்த தேவர்களை நாடினான். யாகங்களின் மூலம் அவர்களிடம் தொடர்பு கொண்டான். எனவே யாகம் என்பது பொதுவாக தேவசக்திகளின் சின்னமாக உள்ளது. அந்த தேவசக்திகளாகவும் ஆன்மா இருக்கிறது. அதுவே ‘யாகத்தில் தோன்றுவது’ என்று கூறப்பட்டது.

மலையிலிருந்து தோன்றுகின்ற நதிகள் முதலானவையகவும் ஆன்மா உள்ளது.

சற்றே அமைதியாக நின்று இந்த உலகை, அதன் செயல்பாடுகளை ஒருமுறை பார்க்கத் தெரிந்த யாருக்கும் இந்த உலகின் இயக்கம் ஒரு மாறாத நியதிக்குக் கட்டுப்பட்டு நடைபெறுவது தெரிய வரும்.

சூரிய உதயம், காற்றின் இயக்கம், பூக்களின் மலர்ச்சி, நட்சத்திரங்களின் பயணம், உயிரினங்களின் செயல்பாடுகள் என்று அனைத்திலும் ஒரு நியதி, ஓர் ஒழுங்கு நிலவுகிறது.

இந்த ஒழுங்காகவும் நியதியாகவும் ஆன்மாவே உள்ளது...

தேனியில் கந்து வட்டி கொடுமையால் விவசாயி பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சி. மருத்துவமனையில் அனுமதி...


தொழில் மற்றும் சொத்து வரி : 2017-18 அரையாண்டில் ரூ 523.5 கோடி வசூல், சென்றை ஆண்டை விட ரூ 82.32 கோடி அதிகம் வசூல் - சென்னை மாநகராட்சி கமிஷனர் தகவல்...



தொழில் செய்பவர்களிடம் வரி வசூல் சென்ற ஆண்டை விட கோடிக்கணக்கில் இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்யப்பட்டுள்ளது. சரி ஆனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்துள்ளதே  இது எதை காட்டுகின்றது ?

இது தமிழகத்தில் உள்ள ஒரு மாவட்டத்தின் கணக்கு நாடு முழுவதும் செய்யப்பட்ட வரி வசூல் எவ்வளவோ இருக்கும் ? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் சென்ற ஆண்டை விட வரி வசூல் அதிகமாகியுள்ளது ?

ஆனால் சென்ற ஆண்டை விட மக்களின் தரம் உயர்ந்துள்ளதா ? அடிப்படை வசதிகள் அவர்களுக்கு சீராக கிடைக்கின்றதா ?

தினம் ஓர் போராட்டம் நாள் தோறும்  ஆர்ப்பாட்டம் வசூல் செய்யப்படும் பணமெல்லாம் யாருக்குத் தான் செலவு செய்யப்படுகின்றது ? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்...

தமிழின துரோக பாஜக vs விசிக கலாட்டா...


மயிலாடுதுறையில் தமிழிசைக்கு கருப்பு கொடி  காட்டிய விடுதலை சிறுத்தை கட்சியினர் மீது பாஜகவினர் தாக்குதல்...

கடும் வயிற்றுவலி...


கடும் வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு என்றாலும் ஐந்து பூண்டு பற்களை பாலில் தட்டிப்பொட்டு கொதிக்க வைத்து இளஞ்சூட்டில் அருந்த சரியாகும்...

சித்தராவது எப்படி - 25...


முன் நின்று சாதித்தல், உடன் இருந்து சாதித்தல்..

இதுவரை முன் நின்று சாதிக்கும் முயற்சியில் அனைத்து மதங்களும் முயன்று முயன்று தோற்றுப் போய் விட்டன.. இதுவரை எந்த பலனையும் அப்படி ஒன்றும் பெரிதாக எதையும் பெற முடியவில்லை..

முன் நின்று சாதிக்கும் முயற்சியில் தோற்றுப்போய் சோர்ந்து விழுந்து விட்டு பின் தன்னை அறியாமல் தானே உடன் இருக்கும் முறைக்கு மாறியதால் பெருத்த பலனை அடைந்தார்கள்..

மதங்கள் எல்லாம் உச்சத்திற்கு ஒரு மிக பெரிய தோல்வி நிலைக்கு அழைத்து சென்று, அங்கு மனதை ஒடுக்கி பின் மனம் தாண்டிய நிலைக்கு அழைத்து செல்லப் படுவதால், அங்கு எண்ணியது கிடைத்தாலும், கிடைத்ததை செயல் படுத்த மனம் வலுவற்ற நிலையில், கிடைத்ததை பயன் படுத்த முடியாமல் போகிறது... இதுவும் மிக பெரிய தோல்வியே ஆகும்..

கை எட்டியது வாய்க்கு எட்டாமல் போன கதை தான்..

ஆனால் உடன் இருந்து சாதிக்கும் ஒரு அற்புத வித்தையை மனிதன் கற்றுக் கொள்ளவும் இல்லை.. அவனுக்கு கற்றுக் கொடுக்கப் படுவதும் இல்லை..

ஒவ்வொரு மனிதனும் தோல்வியின் உச்சத்திலே மட்டுமே அடையும் அந்த வித்தையை அவன் மனித குலத்திற்கு சொல்லி கொடுக்க நினைத்தாலும், அது மற்றவர்களை துளியும் கவருவதில்லை.. அவன் மிக மோசமான நிலையை ஏற்கனவே அடைந்த காரணத்தால் அவன் தோல்வி நிலையை மையப் படுத்தப் படுவதால் கவர்ச்சியை விரும்பும் மனிதர்கள் அவனுடைய சொல்லை மதிப்பதில்லை..

அது சரி அது என்ன முன் நின்று சாதித்தல் உடன் இருந்து சாதித்தல் ?

இறைவன் முன் நின்று போராடி அழுது புலம்பி கெஞ்சி கொஞ்சி கதறி முறையிட்டு தனக்கு வேண்டியதை சாதிக்கும் பக்தனை போல உலகத்தவர் ஒரு பக்கம்..

இறைநிலை என்னவென்று அறிந்து அந்த நிலையோடு உடன் பட்டு இசைந்து வாழ்ந்து, அந்த இசையால் இறை ஆற்றலை தன்னுள் உள்வாங்கி கொண்டு வல்லவன் ஆகும் மற்றொரு முறை..

இந்த உடன் இருத்தலில் அந்த இறை ஆற்றலோடு இசையும் நிலைக்கு இருப்பதால் எந்த வித பயிற்சியும் இல்லாமல் இசைதல் என்ற உன்னத நிலை மூலம் இறை ஆற்றலையெல்லாம் பெற்று இறைநிலைக்கு நிகராக தன்னை ஆக்கி கொள்வதாகும்.. சும்மா இருக்கும் சுகம் என்பது இதுவே ஆகும்..

அப்படி சும்மா இருத்தலின் மூலம் இறை நிலைக்கு இசைந்து வாழ சூழ்நிலை ஏற்படுகிறது.. சும்மா இருத்தலின் மூலம் இசைந்து இருக்க தெரிந்து இருக்க வேண்டும்.. அப்படி இசைந்து இருக்க தெரியவில்லை என்றால் பல ஆண்டுகள் சும்மா இருந்தாலும் பலன் ஒன்றும் இல்லை..

இப்படி சும்மா இருப்பதின் மூலம் மட்டுமே இசைந்து இருக்க முடியும் என்பதும் மிக தவறான கருத்து.. நெருப்பில் நடக்கும் போதும் கூட இசைந்து இருக்க முடியும்.. இதை நாம் மறக்கக் கூடாது...

செயல் பாட்டிலும் சும்மா இருக்கும் நிலையும் சாத்தியப் படும்.. இது ஒன்றுதான் நம்மவர்களுக்கு புரியாததாக உள்ளது.. அதை பின்பு பார்த்துக் கொள்ளலாம்...

இப்படி இசைந்து இருக்கும் நிலையை பெருக்குவது எது என்றால் சுவாச ஒழுங்கு மட்டுமே..

எந்த வேலை செய்தாலும் சுவாச ஒழுங்கில் இருக்கும் போது சும்மா இருக்கும் சூழ்நிலை போன்ற அமைதியும், இசைந்து இருக்கும் உன்னத நிலையும் கிடைக்கிறது...

சரி அப்படி இசைந்து இருக்க, இசைப்பது ஒன்று இருந்தால் தானே அதற்கு நாம் இசைந்து இருக்க முடியும்.. வேறு எந்த பயிற்சியிலும் இசைக்கும் ஒன்றை காணவே முடியாது..

அந்த இசைக்கும் ஒன்று உருவானால் அதை வலுவுள்ள மனம் உடனே நீக்கி விடும்.. அதற்கு முன் சுவாச ஒழுங்கில் நம்மை இசைக்க வைப்பது எது..

எது ஒன்று சுவாசத்தை இசைக்க வைக்கிறதோ அதற்கு தானே நாம் சுவாச ஒழுங்கில் இசைகின்றோம்..

சுவாச ஒழுங்கில் நாம் இசைவது சுவாசத்தை இயக்கும் இறை சக்தியின் அம்சமான உயிர் சக்தி அல்லவா ? இதை யாராலும் நீக்க முடியாது..

நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது சுவாச ஒழுங்குடன் இருப்பது இறை ஆற்றலுக்கு இயங்கி, இசைந்து, உடன் இருத்தலுக்கு இணையானது... அதனால் முன் நின்று சாதிக்கும் வழக்கமான மிக கடினமான முறையை விட்டு விலகி உடன் இருந்து பயன் அடையும் ஒரு உன்னத ஆன்ம லாபம் தரும் நிலைக்கு வருகிறோம்..

முன் நின்று சாதிக்கும் நிலையில் பல கோடி சமயவாதிகள் ஏதோ கடவுள் தனக்கு மட்டுமே சொந்தம் கொண்டாடும் ஒரு மாயை தோற்றத்தில், கடவுளை விட்டு விலகியே இருக்கிறார்கள்.. ஆனால் உடன் இருக்கும் நிலையில் ஒரு சித்தன் கடவுளை பற்றி அதிகம் பேசாமல் கடவுளை மறந்தவன் போல் இருந்தாலும், கடவுளோடு உடன் இருக்கும் உன்னத நிலையில் இருக்கிறான்.. கடவுளுடன் இணைந்து இருக்கும் போது, கடவுளை விட்டு விலகி முன் நிற்கும் அவல நிலையை சித்தர் போன்ற மகான்கள் போவதில்லை...

சத்தியமான உண்மை இதுதான்.. கடவுள் யாரையும் காப்பாற்றுவதில்லை.. துளியும் காப்பாற்றுவதில்லை..

ஆனால் வல்லமை வாய்ந்த இசைக்கப் படும் இறை ஆற்றலுக்கு இசைந்து வாழும் உயிர்களே பல் வேறு உயிர் தோற்றங்களை பெற்று வாழ முடிகிறது..

இசைந்து வாழ்வதில் குறை ஏற்படும் பொழுது மரணத்தை தழுவுகிறது...

இறை ஆற்றலுக்கு இசைவதாலே மட்டுமே அனைத்தும் நடக்கிறது..

இந்த உண்மையால் மட்டுமே உண்மையான ஆன்மீகம் வெளிப்படும்..

ஆகவே சுவாச ஒழுங்கினை இறுகப் பற்றி விரைவில் சித்தராக முனைவோமாக...

மெர்சல் படத்தில் அப்படி என்ன குறை கண்டீர்கள் ? மேர்சல் படத்தில் பேசப்பட்ட வசனங்களால் பொதுமக்களுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது - சென்னை உயர் நீதிமன்றம் பாஜக விற்கு சரமாரி கேள்வி..


மேலும் மெர்சல் என்பது ஒரு படம், உண்மையில் பொதுநல அக்கறையிருந்தால் குடிப்பது புகை பிடிப்பது போன்ற காட்சிகளை நீக்கி சொல்லி நீங்கள் உயர் நீதிமன்றத்தை நாடலாம், மெர்சல் தனிக்கை சான்றிதழை திரும்ப பெறக் கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.

மேலும் கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்கும் உண்டு, உங்களுக்கு படம் பிடிக்கவில்லை எனில் நீங்க அதை பார்க்காமல் இருக்கலாம் என நீதிமன்றம் கூறியுள்ளது பாஜகவிற்கு பெரும் பின்னடைவை தற்போது ஏற்பட்டுள்ளது...

இலுமினாட்டி - லூசிஃபர் Vs இப்லீஸ்?


இலுமினாட்டிகளைப் பற்றி தெரிந்த அனைவருக்கும் லூசிஃபர் என்ற வார்த்தையும் தெரிந்திருக்கும். இவன் தான் இலுமினாட்டிகளின் தலைவன், இவனைத் தான் இலுமினாட்டிகள் தங்களது கடவுளாக நினைத்து வணங்கி வருகின்றனர். இதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றே நம்புகிறேன்.

ஆனால் யார் இந்த லூசிஃபர்? என்பதில் நம்மில் பலர் அதிலும் குறிப்பாக இஸ்லாமியர்கள் தவறான ஒரு புரிதலில் தான் இருக்கிறோம் என்றே நினைக்கிறேன்.

நம்மில் சிலர் தஜ்ஜால் தான் லூசிஃபர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். இன்னும் சிலர் இஸ்லாம் யாரை இப்லீஸ் என்ற பெயர் கொண்டு அழைக்கிறதோ அந்த ஒரு(ஜின்)வன் தான் லூசிஃபர் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம்.

கிருஸ்துவமும் கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு நம்பிக்கையில் தான் இருக்கிறது. உண்மையில் யார் இந்த லூசிஃபர்? மத ரீதியான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட எனது ஆய்வை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

லூசிஃபர்..

ஒளியைக் கொண்டு வந்தவன், அவன் கொண்டு வந்த ஒளியை பெற்றுக் கொண்டவர்களை (இலுமினாட்டிகள்-ஒளியை பெற்றுக் கொண்டவர்கள்) வைத்து தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள அவர்களை வழி நடத்திக் கொண்டிருக்கும் ஒருவன். இவன் மனித இனத்தைச் சேர்ந்தவனல்ல. மேற்கத்தியர்கள் இவனை வேற்றுகிரகவாசி என்கின்றனர். உண்மை தான் இவனது இனம் வேற்று கிரகங்களில் வசித்துக் கொண்டு தான் இருக்கிறது.

இந்திய மரபு வழிப்புராணங்கள் இவனது இனத்தை இராக்ஷசர்கள் என்ற பெயர் கொண்டு அழைக்கிறது. இஸ்லாம் இவனது இனத்திற்கு ஜின் என்று பெயர் வைத்திருக்கிறது. இந்த மூன்று பெயர்களும் ஒரே இனத்தைத்தான் குறிக்கின்றன.

லூசிஃபர் மனித இனத்தைச் சேர்ந்தவன் இல்லை என்பதால் மனித இனத்தை சேர்ந்தவனான தஜ்ஜால் தான் லூசிஃபர் என்று சொல்வது முறையாகாது. ஆனால் இப்லீஸும் ஜின் இனத்தை சேர்ந்தவன் தான் எனும் போது லூசிஃபரும் இப்லீஸும் ஒரே ஜின்னாக இருக்கலாம் என்ற எண்ணம் வருவது இயல்புதான். உண்மையில் இவர்கள் இருவரும் ஒருவர் தானா? என்பது பற்றி தெளிவாகப் பார்க்கலாம்.

கர்வம் கொண்ட மூடன்..

இஸ்லாமியர்களின் வேத நூலான திருகுர்ஆனில் பல இடங்களில் இப்லீஸ் கர்வம் கொண்டதாக வருகிறது. மேலும் அவன் இறைவனைப் பற்றி பொய்யான தகவல்களை பரப்பிக் கொண்டிருக்கிறான் என்றும் வருகிறது.

இந்த குறிப்புகளை மேலோட்டமாக வைத்தே இஸ்லாமியர்களில் சிலர் இப்லீஸ் தான் லூசிஃபர் என்று உறுதியாக நம்புகின்றனர். ஆனால் லூசிஃபர் கர்வம் கொண்டதற்கான காரணம், அவன் பரப்பிய பொய், நோக்கம் மற்றும் இலக்கு இவற்றை இப்லீஸோடு சற்று ஆழமாக ஒப்பிட்டுப் பார்க்கும் போது. இருவரும் வேறுவேறான இரு ஜின்கள் என்பது விளங்கும்.

லூசிஃபர்..

ஜின்களின் குறிப்பிட்ட சில இனத்தவர்களிடம் மனிதர்கள் அதிலும் குறிப்பாக அரசர்கள் பாதுகாப்பு தேடிக் கொண்டிருந்தனர். பண்டைய இந்தியா, எகிப்து, கிரேக்க நாகரீகங்கள் பற்றிய குறிப்புகளில் அதற்கு ஆதாரம் இருக்கிறது. இவ்வாறாக தானும் தனது குடும்பமும் தான் மனிதர்களுக்கும் மன்னர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கிறோம் என்று எண்ணி அதன் மூலம் கர்வம் கொண்டவன் இந்த லூசிஃபர். இதைத் தான் திருகுர்ஆன் அத்தியாயம் 72 வசனம் 6ல் குறிப்பிடுகிறது. இவனது கர்வம் மனிதர்கள் பூமிக்கு வந்து வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் ஏற்பட்டது.

ஆனால் இப்லீஸ் தனக்கு வழங்கப்பட்ட பதவி, தனது உடல் அமைப்பு, ஆற்றல் மற்றும் அது சார்ந்த இயல்பு இவைகளினால் கர்வம் கொண்டான். மேலும் இவன் மனிதர்கள் பூமிக்கு வருவதற்கு முன்பே கர்வம் கொண்டு விட்டான். எனவே திருகுர்ஆன் அத்தியாயம் 72 வசனம் 6ல் குறிப்பிடப்படுவது இவனைப் பற்றி அல்ல என்பது தெளிவாக நமக்கு விளங்குகிறது.

அதேபோல், லூசிஃபரும் இறைவனைப் பற்றிய பொய்யை ஜின்களுக்கு மத்தியில் பரப்பிக் கொண்டிருந்தான். இறைவனுக்கு குழந்தைகள் இருப்பதாகவும், இறந்த யாரையும் அவன் உயிர்ப்பிக்க மாட்டான் என்றும், பூமியில் உள்ளவர்களைக் கொண்டு (அதாவது மனிதர்களைக் கொண்டு) இறைவனை வெல்ல முடியும் என்றும் அவன் ஜின்களிடம் சொல்லிக் கொண்டிருந்ததாக திருகுர்ஆன் அத்தியாயம் 72 வசனம் 3, 4, 7 மற்றும் 12 சொல்கிறது.

இந்த வசனங்கள் இப்லீஸைத் தான் குறிக்கிறது என்றே பலர் கருதுகின்றனர். ஆனால் இது இப்லீஸ் அல்லாத வேறு ஒரு ஜின்னையே குறிக்கிறது.

திருகுர்ஆன் அத்தியாயம் 72 வசனம் 5ல் ஜின்கள் இறைவனைப் பற்றி பொய் சொல்ல மாட்டார்கள் என்று எண்ணியதால் அந்த மூடன் சொன்னதை நம்பியதாக மற்றொரு ஜின் சொல்கிறது. மனிதனுக்கு கட்டுப்பட மறுத்த அந்த கணமே இறைவன் இப்லீஸை சபித்து உன்னையும் உன்னை பின்பற்றும் மனித மற்றும் ஜின்களையும் போட்டு நரகத்தை நிரப்புவேன் என்று கூறிவிட்டு பிறகு ஒரு ஜின் அதுவும் முந்திய வேதங்களைப் பற்றிய அறிவுள்ள ஒரு ஜின் எப்படி ஜின்கள் இறைவனைப் பற்றி பொய் சொல்லாது என்ற அடிப்படையில் அந்த மூடன் சொன்னதை நம்பியிருக்கும்.

இப்லீஸ் ஒரு பக்கம் இறைவனைப் பற்றி பொய்யை பரப்பிக் கொண்டிருந்தான் அவன் யார், அவனது நோக்கம் என்ன என்பது பற்றிய விஷயங்கள் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக இருந்தது.

எனவே தான் இப்லீஸும் அவனது பிள்ளைகளான ஷைத்தான்களும் தவிர மற்ற ஜின்கள் யாரும் இறைவனைப் பற்றி பொய் சொல்லமாட்டார்கள் என்று ஜின்கள் எண்ணிக் கொண்டிருந்தன. இதன் அடிப்படையிலேயே அந்த மூடன் சொன்னதை இந்த ஜின்கள் நம்பின எனில், எந்த மூடனான ஜின் இப்லீஸ் தான் என்று எப்படி சொல்ல முடியும்? அந்த வசனம் இப்லீஸ் அல்லாத மற்றோரு கர்வம் கொண்ட மூடனான லூசிஃபரை தான் குறிக்கிறது.

கர்வம் கொண்டதற்கான காரணம் மற்றும் காலம், பொய் நம்பப்பட்டதற்கான காரணம் இவற்றின் அடிப்படையில் லூசிஃபர் மற்றும் இப்லீஸ் இருவரும் வேறுவேறான இரு ஜின்கள் தான் என்பது தெளிவாகிறது.

நோக்கம்..

இவர்களின் வேறுவேறான இலக்கு மற்றும் நோக்கங்களைப் பற்றி ஆராய்வதன் மூலம் இவர்கள் வேறுவேறான இருவர் தான் என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாமல் உணர முடியும்.

லூசிஃபர்..

மிக முக்கியமாக இவன் மனிதர்களை உயிரோடு வைத்து (அடிமையாக்கி) ஆளவேண்டும் என்று நினைக்கிறான். இவனது இலக்கு மனிதனல்ல. பூமியில் இறைவனை வெல்ல முடியும் என்ற எண்ணத்தில் அவனை வெல்வதையே தனது இலக்காக ஆக்கிக் கொண்டிருக்கிறான். இவனது இலக்கும் நோக்கமும் இவனுக்கு ஏற்பட்ட கர்வத்தை மையமாகவும் அடிப்படையாகவும் கொண்டது. தன்னை எதிர்க்கின்ற மனிதர்களை தவிர மற்ற மனிதர்களை இவன் வெறுக்கவில்லை.

மேலும் இலுமினாட்டிகளை இவன் நேசிக்கத்தான் செய்கிறான்.nதன்னை ஆதரிப்பவர்கள் நலம் நாடுகிறான். தன்னை எதிர்க்கின்ற மனிதர்களை முழுமையாக அழித்து விட்டு தனது ஆதரவாளர்களான மனிதர்களுக்கு பூமியில் சுகபோக வாழ்வை கொடுக்க வேண்டும் என்பது இவனது நோக்கங்களில் ஒன்று. வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் தனது ஆதரவாளர்களுக்கு தான் அளித்த வாக்கை முழுமையாக நிறைவேற்றுவான்.

இப்லீஸ்..

மனிதர்களை நரகத்தில் போட்டு அழிக்க துடிக்கிறான். மனிதர்கள் தான் அவனது எதிரிகளும் இலக்கும். தன்னை எதிர்ப்பவர்கள், தனது ஆதரவாளர்கள் என அனைத்து மனிதர்களையும் ஒட்டு மொத்தமாக வெறுக்கிறான். இவனின் ஒரே நோக்கம் முழு மனித இனத்தின் சர்வ நாசம். இவனது நோக்கமும் இலக்கும் மனித இனத்தின் மீது அவனுக்கு ஏற்பட்ட கோபத்தை மையமாகவும் அடிப்படையாகவும் கொண்டது. தனக்கு ஆதரவளிக்கும் மனிதனாக இருந்தாலும் அவனும் நரகத்தில் சென்று அழிய வேண்டும் என்பதே இவனது ஒரே விருப்பம், எனவே வாய்ப்பு கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் இவன் தனது ஆதரவாளர்களுக்கு அளித்த வாக்குறுதியை துளியும் நிறைவேற்ற மாட்டான். மனிதர்கள் மரணித்து நரகம் செல்லத் தேவையான அனைத்து சூழல்களையும்  உருவாக்கவே முயல்வான்.

இதுவே லூசிஃபரும் இப்லீஸும் வேறுவேறான இருவர் என்பதற்கு நான் தரும் ஆதாரம். அதேபோல் கிருஸ்துவ மத நூல்களிலும் லூசிஃபர் என்ற வார்த்தை சாத்தானைக் குறிக்க கையாளப்படவில்லை. இதன் அடிப்படையில் லூசிஃபர், இப்லீஸ் இந்த இரண்டு பெயர்களும் ஒரே ஜின்னை குறிக்கவில்லை என்பது தெளிவாகிறது.

லூசிஃபர் இப்லீஸ் இல்லை என்பதால் அவன் நல்லவன் என்று சொல்வதோ அல்லது உண்மையில் அவன் மனித குலத்திற்கான ஒளியைக் கொண்டு வந்தவன் தான் என்று சொல்வதோ இந்த பதிவின் நோக்கம் அல்ல.

அதேபோல் லூசிஃபரும் இப்லீஸும் நீண்ட காலமாகவே இணைத்து தான் செயல்பாட்டுக் கொண்டிருக்கிறார்கள், என்பதையும் மறுப்பதற்கில்லை.

உண்மையில் லூசிஃபர் ஒரு மூடன். எதிராளியின் முழு பலம் என்ன என்பதை உணரமுடியாத அளவிற்கு கர்வம் தலைக்கு ஏறிய கிறுக்கன். இறைவனின் கட்டளைகளை மீறுவதாலும், உண்மையான இறைவனை விட்டுவிட்டு லூசிஃபரை இறைவனாக நினைப்பதாலும் இவனின் ஆதரவாளர்களை இறைவன் வெறுக்கிறான்.

நடக்கவிருக்கும் இறுதிப்போரில் இவர்கள் வெற்றி பெறப் போவதில்லை என்பதாலும், யாராலும் எதிர்கொள்ள முடியாத சூர்(எக்காளம்) லூசிஃபரின் உயிரை பறிக்கும் என்பதாலும் இறுதி வரை இவனுக்கும் இவனது அடிமைகளுக்கும் வெற்றி கிடைக்க போவதில்லை என்பதாலும், முடிவில் இவனுக்கும் இவனது மனித ஜின் அடிமைகளுக்கும் இழிவுபடுத்தும் வேதனை காத்திருக்கிறது என்பதாலும் நாம் இவர்களைக் கண்டு அஞ்சவோ, இவர்களுக்குப்பின் செல்லவோ அவசியமில்லை.

இறைவன் நாடினால் நாம் தான் வெற்றியடைவோம் என்பது இன்றும் என்றும் இலுமினாட்டிகளால் ஏற்றுக்கொள்ள (ஜீரணிக்க) முடியாத உண்மை...

தகவல் - musthafays...

தூக்கத்தை கொடுக்கும் தூக்கு மாத்திரை...


காச நோய்க்கு மருத்துவம்...


ஐந்து பூண்டு பற்களை உரித்தெடுத்து 100மிலி பால் 200 மிலி நீர் ஊற்றிக் இலக்கி அடுப்பில் வைத்துக் கொதிக்க வைத்து.. அது பாதியாக வற்றியதும் இறக்கி இளஞ்சூட்டில் ஒரு நாளைக்கு மூன்றுவேளை அருந்தவும்.

இவ்வாறு தினசரி செய்து ஒரு மாதம் அருந்தி வர சிறந்த பலன் கிடைக்கும்...

பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு தமிழின விரோதக் கட்சிகளின் தமிழகத்தின் வாக்கு வங்கியே.. 90% நாடார் சமுதாயம் தான்...


யாருங்க அந்த சமுதாய சொந்தங்கள் ? 

நாடார் சமுதாய சொந்தங்களை.. தமிழின துரோகி தந்தி ஊடகம் அழைத்துள்ளது...

இறுதி யுத்தத்தில் முக்கிய இரு அணிகளுடன் வெளியேறிய தமிழினத் தலைவர் பிரபாகரன்...


இறுதி யுத்தத்தில் வெளியேறிய இரு படையணியும்-இறுதிவரை போரிட்டு மடிந்த ஒரு படையணியும்...

இறுதி யுத்தத்தின் இறுதி நாட்களில் புலிகளின் முக்கிய அணிகளை இலங்கை ராணுவத்தின் முற்றுகையிலிருந்து வெளியேற்றுவதற்கான திட்டங்களை புலிகளின் அதி உயர் தளபதிகள் வகுத்திருந்தனர்.

போர் முள்ளிவாய்க்காலின் நடு மையத்தை தொடுவதற்கு முன்னதாக புலிகளின் தலைவர் மேதகு.வே பிரபாகரன் உட்பட்ட சிறப்பு அதி உச்ச கடும் பயிற்சி பெற்ற போராளிகளையும் தளபதிகளையும் வெளியேற்றுவதற்கான கடும் போர் முள்ளிவாய்க்கால் மேகத்தில் சூழ்ந்து கொண்டது.

குறிப்பிட்ட மூன்று அணியையும் வெளியேற்றுவதற்கான கடும் சமர் ஆரம்பிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே ராணுவத்தினரும் புலிகளும் கடும் இழப்புக்களை எதிர் கொண்டிருந்தனர்.

ஆனால் கடும் இழப்புக்களுக்கும் மத்தியிலும் புலிகளின் கரும்புலி தாக்குதல் அணியின் பேராதரவுடன் மூன்று அணியையும் வெளியேற்றுவதற்கான புலிகளால் நடத்தப்பட்ட இறுதி தாக்குதல் புலிகளுக்கு சாதகமாக சில மணி நேரங்கள் இருந்துள்ளது.

இதை பயன்படுத்தி தலைவர் பிரபாகரன் உட்பட்ட சில முக்கிய தளபதிகள் கொண்ட இரு அணியினர் ராணுவத்தின் முற்றுகையிலிருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டிருந்தனர்...

இறுதியாக களமுனையில் இருந்து காயப்பட்டு கடல் மார்க்கமாக வந்த போராளி ஒருவரின் கருத்து...

செய்தி - http://eelamalar.com/இறுதி-யுத்தத்தில்-முக்கி/

குங்குமப் பூவின் மருத்துவக் குணங்கள்...


தலைவலி, மூக்கு நீர் ஒழுகுதுல், அதிக தாகம், குமட்டல், வாந்தி, உடல் எரிச்சல், சூதக அழுக்கு, ஆண்மைக் குறைவு ஆகிய வியாதிகளுக்கு குங்குமப் பூ அரிய மருந்தாகும்..

குங்குமப் பூவை 1 பங்கு எடுத்து, அதை 80 பங்கு தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி, அதில் 30 மிலி அளவு காலை, மாலை இருவேளை அருந்தி வர தலைவலி, மூக்கு நீர் ஒழுகுதுல், அதிக தாகம், குமட்டல், வாந்தி, உடல் எரிச்சல், சூதக அழுக்கு, ஆண்மைக் குறைவு ஆகியவை நீங்கும்.

குங்குமப் பூவுடன் தேன் கலந்து தினமும் இருவேளை உட்கொண்டு வர ஆஸ்துமா முதலிய சுவாச நோய்களை போக்கி சுவாசத்தை எளிதாக்கும்.

அம்மை நோய் கண்டவுடன் துளசி இலைகளையும், குங்குமப்பூவையும் சேர்த்து அரைத்து உட்கொள்ள கொடுக்க அம்மை நோய் குணமாகும்...

பாஜக கலாட்டா...


மூலிகைச் சாறுகள்....


கண் நோய்களை தடுக்கும் பொன்னாங்கண்ணிச் சாறு...

முன்னோர்கள் அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதையும் தெளிவாக பாடியுள்ளனர். இந்த மூலிகைச் சாறுகளின் பயன்களை பார்ப்போமா....?

எலுமிச்சை சாறு..

எலுமிச்சை சாற்றை அருந்தினால் பித்த மயக்கம், வாந்தி, கண்ணோய், இரத்த சோகையால் ஏற்பட்ட சோர்வு முதலியவை நீங்கும்.

உடலுக்கு புத்துணர்வை தரும். நன்கு பசியைத் தூண்டும். தாகத்தைத் தணிக்கும். எலுமிச்சம் சாற்றை தலையில் தேய்த்து குளித்து வந்தால் மனநோய், மன அழுத்தம் நீங்கும். உடலில் தேய்த்து குளித்தால் தோல் சம்பந்தப்பட்ட சில வியாதிகள் குணமடையும்.

நகச்சுற்றுக்கு இதன் சாறே சிறந்த மருந்து. யானைக்கால் வியாதி, கண்ணோய், காதுவலிக்கும் எலுமிச்சை சாறு சிறந்த மருந்து.

இஞ்சி சாறு..

நம் முன்னோர்கள் காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் என்றார்கள். இம்மூன்றையும் தினமும் உட்கொண்டால் நோய் என்பதே நம்மை நெருங்காது.

இஞ்சியை சாறு எடுத்து சிறிதளவு தினமும் அருந்தினால் வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், வாந்தி, குடல்நோய், பித்த மயக்கம், போன்றவை நீங்கும். நீரிழிவு நோயாளிகளுக்கும் இது உற்ற மருந்தாகும். மேலும் தொண்டைப்புண், குரல் கம்மல், இவைகளைக் குணப்படுத்தும்.

கரிசலாங்கண்ணிச் சாறு.

கரிசலாங்கண்ணிச் சாறு ஜலதோஷம், காய்ச்சல், உடல்வலி, விஷக்கடி, சிறுநீரில் இரத்தம் வெளியேறுதல் போன்றவற்றை குணப்படுத்தும். இதன் சாறை காலையில் அருந்துவது நல்லது. அல்லது மதிய உணவுக்குப்பின் சூப் செய்து அருந்தலாம்.

பொன்னாங்கண்ணிச் சாறு..

பொன்னாங்கண்ணி பல வகையான தைல வர்க்கத்தில் அதிகம் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த பொன்னாங்கண்ணி கீரையை சூப் செய்து காலை மாலை இருவேளை என 15 நாட்களுக்கு அருந்தி வந்தால் கண் நோய்கள் ஏதும் அண்டாது. உடலின் வெப்பத்தைக் குறைத்து உடலுக்கு புத்துணர்வை கொடுக்கும்.

தூதுவளைச் சாறு..

வறட்டு இருமல், தொண்டைக் கட்டு, தொண்டைப்புண், அடிக்கடி ஜலதோஷம் உள்ளவர்கள் தூதுவளைச் சாறு அருந்தி வந்தால் சளித் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

அருகம்புல் சாறு..

அருகம்புல் சாறானது இரத்தத்தை சுத்தப்படுத்துவதுடன் உடலுக்கும் புத்துணர்வை கொடுக்கிறது. உடலில் தேங்கியுள்ள அசுத்த நீர் அனைத்தையும் வெளியேற்றுகிறது.

தண்­ணீர் விட்டான் கிழங்கு சாறு..

தண்ணீ­ர் விட்டான் கிழங்கின் சாறை எடுத்து தினமும் காலையில் அருந்தி வந்தால் உடல் சூட்டை தணித்து பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதலைத் தடுக்கும். தாது புஷ்டியை கொடுக்கும்.

பித்தம் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும்.

வெள்ளைப் பூண்டு சாறு..

வெள்ளைப் பூண்டு சாற்றை காதில் இரண்டு சொட்டு விட்டால் காது மந்தம் குறையும். உள்நாக்கில் தடவினால் உள்நாக்கு வளர்ச்சி (டான்சில்) குறையும். மேலும் சிறிது அருந்தினால் இருமல், சுவாசம் அடைப்பு, மலக்கிருமிகள் நீங்கும். உடலின் மேல் சுளுக்கு ஏற்பட்ட பகுதிகளிலும் தடவலாம்.

வெற்றிலைச் சாறு..

வாத பித்த கபத்தினை அதனதன் நிலையில் சமப்படுத்த வெற்றிலைச் சாறு சிறந்த மருந்தாகும். சளியைப் போக்கும். காணாக்கடிகளுக்கு இதன் சாறு சிறந்த மருந்து. அஜீரணத்தைப் போக்கும். ஜீரண சக்தியைத் தூண்டும்.

வேலிப்பருத்தி சாறு..

சுவாசம், காச நோய்களுக்கு சிறந்த மருந்தாகும். கருப்பையிலுண்டாகும் பக்க சூலைக்கு இதன் சாறு தேன் கலந்து கொடுத்தால் பக்க சூலை நீங்கும். கை கால் வீக்கங்களுக்கு மேல் பூச்சாகத் தடவலாம்..

நீங்கள் ஒரு காந்தம்...


உண்மையில் ஒவ்வொரு மனிதனும் ஒரு காந்தம். எப்படி காந்தம் பல பொருட்கள் சுற்றி இருந்தாலும் இரும்புத் துண்டுகளை மட்டுமே கவர்ந்திழுக்குமோ மனிதனும் தனக்குத் தக்க மனிதர்களையும், சூழ்நிலைகளையும் மட்டுமே தன் வாழ்க்கையில் கவர்ந்திழுக்கிறான். காந்தத்திற்கும் ஒரு படி மேலே போய் அவன் தன் காந்த சக்தியைத் தானே தீர்மானம் செய்கின்ற சக்தி பெற்றிருக்கிறான். அவன் தன் காந்தசக்தியின் தன்மையை தீர்மானிக்கும் முக்கியமான விதங்கள் மூன்று.

முதலாவது, கர்மா-மனிதன் முன்பு விதைத்ததை அறுவடை செய்யத் தேவையான மனிதர்கள் அவனால் ஈர்க்கப்படுகிறார்கள். அதற்கான சூழ்நிலைகள், நிகழ்ச்சிகள் எல்லாம் தானாக அவனைத் தானாக வந்தமைகின்றன. முன்பு சில செயல்களைத் தீர்மானித்து செயல் புரிந்த அந்தக் கணத்திலேயே அதன் விளவுகளுக்கான காந்த சக்தியைத் தன்னிடம் ஏற்படுத்திக் கொள்கிறான். எல்லாம் துல்லியமான கணக்கோடு சரியான நேரத்தில் அவன் வாழ்வில் வந்து சேருகின்றன.

இரண்டாவது, ஆழ்மன நம்பிக்கைகள்-உலகில் நல்ல விஷயங்களில் ஆழமான நம்பிக்கைகள் கொண்டிருப்பவர்கள் நல்ல மனிதர்களையும் நல்ல விஷயங்களையும் தங்கள் வாழ்வில் தங்களை அறியாமல் வரவழைத்துக் காண்கிறார்கள். அதே போல நல்ல விஷயங்களில் அவநம்பிக்கையை ஆழ்மனதில் வளர்த்துக் கொள்கிற மனிதர்கள் அதை உறுதி செய்கிறது போன்றவற்றையே தங்கள் வாழ்வில் வரவழைத்துக் கொள்கிறார்கள். நான் அப்போதே சந்தேகப்பட்டேன் என்று பிறகு தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இவர்கள் அப்படி வரவழைத்துக் கொண்டதே தாங்கள் தான் என்பதை அறிவதில்லை.

மூன்றாவது அதீத ஆர்வம்-ஒரு மனிதன் எதில் எல்லாம் அதீத ஆர்வம் காட்டுகிறானோ அதுகுறித்து மேலும் ஞானமும், அனுபவங்களும் தரக் கூடிய மனிதர்களையும், சந்தர்ப்பங்களையும் காந்தமாக ஈர்த்துக் கொள்கிறான்.

ஆன்மீக ஆர்வம் அதிகமாக இருந்த விவேகானந்தரை ராமகிருஷ்ண பரம்ஹம்சரிடம் அழைத்துச் சென்றது அந்த காந்த சக்தியே. அதே போல் ஆன்மீகம் என்ற பெயரில் சித்து வித்தைகளில் அதிக ஆர்வம் காட்டுபவர்களைப் போலிச் சாமியார்களை சந்திக்க வைப்பதும் அந்தக் காந்த சக்தியே. இப்படி அவரவர் ஆர்வம் காட்டும் விஷயங்களில் ஆர்வத்தின் தரத்தைப் பொறுத்தே அவன் அனுபவங்களை விருத்தி செய்யக்கூடியவை அவனை வந்து சேருகின்றன.

ரமண மகரிஷி தானாகப் போய் ஆன்மிகப் பிரசாரம் செய்ததில்லை. சிஷ்யகோடிகளைச் சேர்த்ததில்லை. திருவண்ணாமலையை அடைந்த பிறகு அந்த ஊரை விட்டு வெளியே எங்கும் சென்றதில்லை. பல நாட்கள் தொடர்ந்து மௌனமாகவே இருந்திருக்கிறார். ஆனாலும் அவரது ஆன்மீக காந்த சக்தி இந்தியாவில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் பல ஆன்மீகவாதிகளை அவரிடம் வரவழைத்த அதிசயத்தைக் கண்டிருக்கிறோம்.

ஆகவே தற்போது நம்மிடம் உள்ளதும், இது வரை வந்ததும் நாம் காந்தமாகக் கவர்ந்தவையே. நாம் நம் வாழ்வில் எல்லாவற்றையும் மேலே குறிப்பிட்ட மூன்று வழிகளில் வர வைத்திருக்கிறோம். பிற காந்தங்களால் நாம் கவரப்படுவதும் இந்த விதிகளின் படியே. பிரபஞ்சம் இந்த மூன்றின்படியே எல்லாவற்றையும் நமக்கு வினியோகித்திருக்கிறது.

இந்தப் பேருண்மை நம்மை ஒரு விதத்தில் ஆசுவாசப்படுத்துகிறது. வாழ்க்கையில் பலவற்றைத் தேர்ந்தெடுப்பதில் நமக்குள்ள சுதந்திரத்தை இது கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த மூன்றில் முதல் விதியான கர்மாவால் வந்தது நமது பழைய சுதந்திரமான செயல்களின் விளைவு என்பதால் அதைத் தவிர்க்கும் சக்தி மட்டும் நமக்கில்லை. அதை அனுபவித்து தீர்த்துக் கொள்ளுதலே ஒரே வழி.

இரண்டாவது, ஆழ்மன நம்பிக்கைகள். நோய்க்கிருமிகளின் சக்தி மேல் பலமான நம்பிக்கை வைத்திருப்பவன் சீக்கிரமே நோய்வாய்ப்படுகிறான். தன் உடலின் எதிர்ப்பு சக்தி மீது நம்பிக்கை வைத்திருப்பவன் சீக்கிரமாக நோய்வாய்ப்படுவதில்லை. அப்படியே நோய் வந்தாலும் வந்த வேகத்தில் அது போயும் விடுகிறது என்று இன்றைய மருத்துவம் கண்டுபிடித்து இருக்கிறது.

ஆழ்மனதில் முன்பே வைத்திருக்கும் தவறான நம்பிக்கைகளை உடனடியாக மாற்றிக் கொள்வது சிறிது கஷ்டமே என்றாலும் அது முடியாததில்லை. நாம் எதை பலமாக நம்புகிறோம், எதை எதிர்பார்க்கிறோம் என்பதைப் பட்டியலிட்டு அதில் தேவையற்றவற்றையும், தவறானவற்றையும் நீக்கிக் கொள்ளுதல் நலம்.

அதற்கு எதிர்மாறான நல்ல விஷயங்களைப் பற்றி படித்தும், கேட்டும், அப்படி வாழ்பவர்களின் சகவாசத்தை வளர்த்துக் கொள்ளுவதும் சிறிது சிறிதாக நம் ஆழ்மன நம்பிக்கைகளை நல்ல திசையில் திருப்பும். நம் முன்னோர்கள் இதன் முக்கியத்துவத்தை பெரிதும் உணர்ந்து நல்ல மனிதர்களின் சேர்க்கையை "சத் சங்கம்" என்ற பெயரில் வலியுறுத்தியுள்ளார்கள்.

மூன்றாவதான ஆர்வம் நம் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. உயர்ந்த விஷயங்களில் ஆர்வம் காட்டும் போது நல்ல எண்ண அலைகளை நாம் ஏற்படுத்துகிறோம். அவை பலப்படும் போது நன்மையைப் பெருக்குகின்ற பலதும் நம் வாழ்வில் வந்து சேர ஆரம்பிக்கும். நாம் எதில் அதிக ஆர்வம் காட்டுகிறோம் என்பதை முதலில் கவனியுங்கள்.

அடுத்தவர்களின் தவறுகளைக் கண்டுபிடிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டுபவன் தன் தவறுகளை வளர்த்துக் கொள்கிறான். சில்லரை விஷயங்களிலேயே அதிக ஆர்வம் காட்டுபவன் அந்தத் தரத்திலேயே சாதித்து மடிகிறான். ஆர்வத்தின் தரத்தைப் பொறுத்தே பெறுகின்றதன் தரமும் அமையும்.

நீர் நிறைந்திருக்கும் டம்ளரில் பாலை நிரப்ப வேண்டுமானால் முதலில் நீரைக் கொட்ட வேண்டும். பின்பு தான் அதில் பாலை நிரப்ப முடியும். அது போல அற்ப விஷயங்களில் ஆர்வம் காட்டிக் கொண்டு பெரிய சாதனைகள் புரிய நாம் கனவு காண்பது வீணே. முதலில் அற்பங்களை அப்புறப்படுத்துங்கள். மேற்போக்கான ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டு உங்கள் வாழ்வில் அற்புதங்களை எதிர்பார்க்காதீர்கள். உங்கள் ஆர்வம் உங்களிடம் ஆழமாக இருக்குமானால் மட்டுமே அது காந்தத் தன்மை பெறும்.

எனவே இது வரை நாம் கவர்ந்தவற்றின் கணக்கை நம் வாழ்வில் ஆராய்வோம். எதற்கும் யாரையும் குறை கூறாமல் கவர்ந்து பெற்றதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வோம். இனி எதைக் கவர வேண்டும் என்று சிந்தித்து அவற்றை நம் மனதில் ஆழப் பதிப்போம். அதற்கான ஆர்வத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி அதைப் பலப்படுத்துவோம்.

இப்படி புதிய காந்த சக்தியை நம்மில் வளர்த்துக் கொண்டால் மீதியை இந்த பிரபஞ்ச விதிகள் பார்த்துக் கொள்ளும். வாழ்க்கை சிறப்படையும். அதற்குத் தேவையான சூழ்நிலைகள் நம் வாழ்வில் அமைய ஆரம்பிக்கும். சந்தர்ப்பங்கள் உருவாகத் துவங்கும். உதவும் படியான மனிதர்கள் நம் வாழ்வில் வந்து சேர்வார்கள். கனவுகள் மெய்ப்படும்...

சிங்கப்பூரின் பிரம்படி எப்படிபட்டது?


நம்மூர்ல இருக்கும் புனிதர்களுக்கு சிங்கப்பூர் அடின்னா எப்படீன்னு தெரியாது என்பதால் தெளிவாக விளக்குகிறேன்.

நாலு பிரம்படிக்கு பதிலா அபராதம் 5 லட்சம் சிங்கப்பூர் டாலர் கட்டுறயா என்றால் சரி என கட்டுவார்கள் என்பதே அடி எப்படி இருக்கும் என சொல்லும்.

மூங்கில் போன்ற ஒரு மரத்தின் குச்சி 1.5 இன்ச் தடிமனாகவும் 4 அடி நீளமாகவும் இருக்க வேண்டும். அடிப்பதற்கு ஒரு நாள் முன்பு ஊற வைப்பார்கள் குச்சி உடையாமல் இருக்க. புண் ஆனால் சீழ் பிடிக்காமல் இருக்க ஆன்டிசெப்டிக் மருந்து தடவப்படும்.

முழு நிர்வாணமாக கீழே படத்திலே இருப்பது போல கட்டி வைத்து மேலே சிறுநீரகத்தை பாதுகாக்கும் தடுப்பு வைத்து அடிப்பார்கள். 

முதல் அடியிலேயே பெரும்பாலானோர் மயக்கம் அடைந்துவிடுவார்கள். பின்பு மயக்கம் தெளியவைத்து தெளிய வைத்து அடிப்பார்கள். மொத்தமாக 24 அடி அடிக்கலாம் என சட்டம் அனுமதி வழங்கியுள்ளது.

4 அடி என்றால் ஒரே காவல் அதிகாரியே அடிப்பார் அதற்கும் மேல் என்றால் இரண்டு மூன்று மாறிக் கொள்வார்கள். உச்சகட்ட விசையோடு ஓங்கி அடிக்கவேண்டும் என்பதே விதி. மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்திலே தடி இறங்கும்.

மயக்கம் தெளிய வைக்க அல்லது மருத்துவரீதியா வலுவாக இருக்கிறாரா என பரிசோதிக்க மருத்துவர் உடன் இருப்பார்.

4 அடிகளுக்கு மேல் வாங்கினாலே பின்பக்க தசை கிழிந்துவிடும். 5 அடிகளுக்கு மேல் என்றால் ஒருவருடம் நடக்கவே முடியாது. புண் ஆறினாலும் தழும்புகள் மறையாது.

தசை எப்படி கிழியும் என்ற போட்டோகள் இணையத்திலே இருக்கின்றன. தேடிப் பார்த்துக் கொள்ளுங்கள்.

தமிழ்நாட்டிலே செய்வது போல் கருப்புபணம் பதுக்கினால் 24 அடி விழும்.

பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வது சிங்கபூரிலே இல்லை ஏன்னா இந்த அடி தான். ரவுடித் தனம், திருட்டு, கொள்ளையை ஒழிச்சதும் இந்த அடிதான்.

24 அடி வாங்கினவன் வாழ் நாளிலே திரும்ப ஒழுங்கா நடக்க கூட முடியாது. அப்புறம் எங்க பொம்பளை கையபிடிச்சு இழுக்கறது? கொள்ளையடிக்கறது?

தமிழ்நாட்டு புனிதர்களுக்காகவே இதை கொண்டு வரனும். ஒரு வருசம் நடைமுறையிலே இருந்தா போதும். தமிழ்நாடு சிங்கப்பூராகி விடும்..

மன தைரியமுள்ளவர்கள் வீடியோ பார்க்க...

https://m.liveleak.com/view?i=3c9_1304013159

படிக்காத மேதையின் அபார சாதனை...


அடித்தளம் இல்லாத நகரும் வீடுகளை உருவாக்கி படிக்காத மேதை ஷாகுல் ஹமீது சாதனை....

தமிழ் தேசியம் என்பது என்ன ?


தமிழ்த் தேசியம் என்பது எந்த ஒரு தனிப்பட்ட மனிதரோ, அமைப்போ, பிரிவினைவாதியோ, இனவெறியரோ வலிந்து முன்னிறுத்தும் கருத்து இல்லை.

அது வரலாற்று வழிப்பட்டுப் புறநிலை மெய்ம்மையிலிருந்து விளைந்த சமூக அறிவியல் கருத்தாகும்.

வட வேங்கடம் தென் குமரி வரை ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்.. என சுமார் மூவாயிரம் ஆண்டுக்கு முன்பே தமிழரின் தேசத்துக்கு எல்லை குறிக்கிறார் தொல்காப்பியர்...