28/10/2017

இறுதி யுத்தத்தில் முக்கிய இரு அணிகளுடன் வெளியேறிய தமிழினத் தலைவர் பிரபாகரன்...


இறுதி யுத்தத்தில் வெளியேறிய இரு படையணியும்-இறுதிவரை போரிட்டு மடிந்த ஒரு படையணியும்...

இறுதி யுத்தத்தின் இறுதி நாட்களில் புலிகளின் முக்கிய அணிகளை இலங்கை ராணுவத்தின் முற்றுகையிலிருந்து வெளியேற்றுவதற்கான திட்டங்களை புலிகளின் அதி உயர் தளபதிகள் வகுத்திருந்தனர்.

போர் முள்ளிவாய்க்காலின் நடு மையத்தை தொடுவதற்கு முன்னதாக புலிகளின் தலைவர் மேதகு.வே பிரபாகரன் உட்பட்ட சிறப்பு அதி உச்ச கடும் பயிற்சி பெற்ற போராளிகளையும் தளபதிகளையும் வெளியேற்றுவதற்கான கடும் போர் முள்ளிவாய்க்கால் மேகத்தில் சூழ்ந்து கொண்டது.

குறிப்பிட்ட மூன்று அணியையும் வெளியேற்றுவதற்கான கடும் சமர் ஆரம்பிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே ராணுவத்தினரும் புலிகளும் கடும் இழப்புக்களை எதிர் கொண்டிருந்தனர்.

ஆனால் கடும் இழப்புக்களுக்கும் மத்தியிலும் புலிகளின் கரும்புலி தாக்குதல் அணியின் பேராதரவுடன் மூன்று அணியையும் வெளியேற்றுவதற்கான புலிகளால் நடத்தப்பட்ட இறுதி தாக்குதல் புலிகளுக்கு சாதகமாக சில மணி நேரங்கள் இருந்துள்ளது.

இதை பயன்படுத்தி தலைவர் பிரபாகரன் உட்பட்ட சில முக்கிய தளபதிகள் கொண்ட இரு அணியினர் ராணுவத்தின் முற்றுகையிலிருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டிருந்தனர்...

இறுதியாக களமுனையில் இருந்து காயப்பட்டு கடல் மார்க்கமாக வந்த போராளி ஒருவரின் கருத்து...

செய்தி - http://eelamalar.com/இறுதி-யுத்தத்தில்-முக்கி/

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.