25/02/2021
Clover field paradox அறிவியல் விரும்பிகளுக்கான மற்றுமொரு படம்...
கதை படி ஒரு ஸ்பேஸ் ஷிப் குழு ஒன்று space இல் ஆய்வு ஒன்று செய்கிறது.
அதாவது பூமியில் energy sorce தீர்ந்து வரும் நிலையில் free energy பெற துகள் முடக்கி (particle accelator ) கொண்டு ஆற்றலை பெற முயற்சிக்கிறது.
பூமியில் நாம் வைத்துள்ள மிக பெரிய ஆய்வு கூடம் அல்லது ஆய்வு கருவி எது என்றால் அது hadron collieder எனும் துகள் முடக்கி தான்.
கிட்ட தட்ட 20 கிமி சுற்றளவு கொண்ட பிரமாண்ட ஆய்வு கருவி அது (படத்தில் அல்ல நிஜத்தில்) அந்த collider இன் மினி வடிவம் ஒன்றை அந்த ஸ்பேஸ் ஷிப் இல் வைத்து இருக்கிறார்கள் அதை வைத்து தான் இந்த ஆய்வு செய்கிறார்கள்.
பல முறை தோல்விக்கு பின் வெற்றிகரமாக அது ஆற்றலை உமிழ்கிறது...
அப்படினு.. நினைத்து சந்தோஷ படுவதற்குள் அந்த கருவி over load ஆகி துகள் களை ஆற்றல்களை வெடித்து சித்தறடிக்கிறது.
அந்த கருவி மிக ஆற்றல் வாய்ந்த ஒன்று எந்தளவு என்றால் அது space time யை யே கிழித்து ரியாலிட்டி யை மாற்றி வேற வேற டைம் லைன்களை இணைத்து மல்டி வெர்ஸ என்று சொல்ல கூடிய பல பரிமாணம் கொண்ட வெவ்வேறு இணை பிரபஞ்சம் அல்லது இணை உலகங்களை ஒன்றாக்கி குழப்பம் விளைவித்து விடுகிறது.
விளைவு ? இங்கே செத்தவன் அங்கே உயிரோடு இருக்கான் அங்கே இருந்து ஒருத்தி இங்க வரா... இன்னோரு டைம் லைன்ல உலக போர் அரம்பிக்குது..
இன்னோரு டைம் லைன்ல மான்ஸ்டர் விலங்குகள் எல்லாம் கிளம்புது...
ஏற்கனவே வந்த clover field படங்களின் தொடர்ச்சியாகவும் அதில் நடந்த நிகழ்வுகளுக்கு லாஜிக் சொல்லும் படியாகவும் இருக்கிறது இந்த பார்ட்.
ஆனாலும் பல பரிமாண கலப்பு ..வேற வேற டைம் லைன் இணைப்பு..
மல்டி வெர்ஸ்... ஸ்பேஸ் டைம் ல ஓட்டை னு செம விஷயங்களை கையில் எடுத்து உள்ள இந்த படம் இன்னும் நிறைய விதமாக அதை அறிவியல் கற்பனை காட்சிகள் கொண்டு பிரமாண்டமாக கொடுத்து இருக்கலாமோ என்று படுகிறது.
சாதாரணமான ஆக்ஸன் சண்டைகள் காட்சி அமைப்புகளுக்கு இவ்வளவு அறிவியல் பின்புலம் கொண்ட கதை எதற்கு என்ற கேள்வி வருகிறதே..
சரி இனி வரும் clover field பாகங்கள் அதை பூர்த்தி செய்கிறதா என்று பார்ப்போம்...
இந்தியா ஜனநாயக நாடா ?
68 ஆயிரம் காஷ்மீரிகளைக் கொன்ற ஒரு இந்திய ஒன்றியத்தை ஜனநாயக நாடு என்று கூற உரிமையில்லை..
குசராத்தில் 2500 இசுலாமியர்களை இனப்படுகொலைச் செய்த ஒரு நாட்டிற்கு மதசார்பற்ற நாடு என்றும் கூற தகுதியில்லை..
இலங்கையுடன் கூட்டு சேர்ந்து 2 இலட்சத் தமிழர்களை கொன்று குவித்த இந்தியம் அமைதிக்கான தேசமும் அல்ல...
இந்தியன் என்பது அவமானம்..
தமிழன் என்பதே அடையாளம்...
மனம் தான் மனித வாழ்வின் விளைநிலம்...
அதை செம்மையாக வைத்துக் கொண்டால் வாழ்வு வளம் பெறும்.
மனதை அடக்க நினைத்தால் அலையும்.
அதை அறிய நினைத்தால் அடங்கும்.
தவறு செய்வதும் மனம் தான்.
இனி தவறு செய்யக் கூடாது என்று தீர்மானிப்பதும் மனம் தான்.
அன்றாடம் மனம் பலவிதமான விஷயங்களில் அலையவிட்டு தடுமாற்றம் பெறுகிறது.
குறிப்பிட்ட நேரம் தியானம் செய்து மனதை தூய்மைப்படுத்தினால் மனநலம் மேம்பாடு அடையும்.
வாழ்வில் இடையிடையே சிக்கல்கள் ஏற்படுவது இயற்கையே.
அதைக் கண்டு மிரள்வது அறிவுடைமை ஆகாது.
அவற்றை எப்படி எதிர்கொள்வது என்று சிந்தித்து தீர்வு காண்பதே சிறந்தது.
கவலைப்படுவதால் மட்டுமே சிக்கலில் இருந்து மீளமுடியாது.
இன்னும் சொல்லப் போனால் கவலையின் போது பிரச்சனை மேலும் பெரிதாகிவிடும்.
தீர்க்க முடியாத துன்பம் என்ற ஒன்று வாழ்வில் கிடையவே கிடையாது.
தீர்க்கும் வழிவகைகளை அறியாமல் தான் நாம் துன்பத்தைக் கண்டு அஞ்சுகிறோம்.
திறக்க முடியாத பூட்டு எதுவுமில்லை அதற்கான சரியான சாவியைத் தேடிப் பிடித்தால் போதும்...
அலைகழிப்பு...
நீங்க ஒரு செயலுக்காக பல முறை அலைகழிக்கபட்டால் உங்கள் மனம் வெறுத்து போய் " சே என்னப்பா ஒரு சின்ன விஷயத்திற்கு இத்தனை அலைகழிப்பு என்று மனம் வேதனையோடு எதிர்மறையான சொற்களை பயன்படுத்துவது வழக்கம்.
அதனால் உங்கள் மனதில் தேவையற்ற எதிர்மறை அதிர்வுகள் உருவாகும் அது இதோடு நில்லாமல் உங்கள் பிற விஷயங்களிலும் தடை, ஏற்படுத்தும்.
மனம் எப்போதும் அந்த ஒரு விஷயத்தில் முன்னிருத்தும்.
அதனால் இன்று ஒரு காரியமாக சென்றோம் நாளை வர சொன்னார்களா , சரி ஐயா மகிழ்ச்சி நன்றி என்று சொல்லி வாருங்கள்.
முதலில் உங்கள் மனம் சாந்தமாகும்,
இரண்டாவது உங்களை மறு தினம் வர சொன்ன நபரின் எண்ணம் உங்கள் மகிழ்ச்சி நன்றி என்ற வார்த்தையை பற்றி யோசிக்கும்.
மூன்றாவது உங்களை நாளைக்கு வாருங்கள் என்று சொன்ன அந்த நபரே ஐயா தாங்க இப்போதே முடித்து தருகிறேன் என செயல் பட தொடங்கி விடுவார்.
நல்ல நேர்மறை எண்ண அலைகள் நம்மை சுற்றி இருப்பவர்களை நம்மோடு ஒன்றினக்க செய்யும்.
முயன்று பாருங்கள் வெற்றி நம்ம பக்கம் தான்...
பாஜக மோடி யின் டிஜிட்டல் இந்தியா ஒரு வரி கொள்ளையர்கள் நாடு...
இப்போது திடீரென்று சில தேசப்பற்று உள்ளவர்கள் வந்து விடுவார்கள்...
வரி இல்லாமல் எப்படி ஒரு அரசாங்கம் செயல்பட முடியும்..?
இது முட்டாள்தனமான பதிவு என்று...
ஆம், வரி என்பது ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கு அவசியமான ஒன்று, அதை மறுக்கவில்லை..
ஆனால் ஒன்றை நினைவுப்படுத்த விரும்புகின்றேன்..
நாம் நம்முடைய அடிப்படை தேவைகளான உணவு, நீர், இருப்பிடம், கல்வி, மருந்துவம் போன்ற பல அடிப்படை வசதிகளுக்கு தான் அதிகமாக வரி செலுத்துகின்றோம்..
மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யாமல், அதற்கு பன்மடங்கு வரி விதிக்கும் சனநாயக அரசாங்கம் எதற்காக..? யாருக்காக இருக்கின்றது..?
மக்களுக்காகவா.? இல்லை வணிகர்களுக்காகவா..?
பொய்களின் மடம் காஞ்சி மடம்...
காஞ்சி காமகோட்டி மடம் ஆதிசங்கரர் நிறுவியது என்பது முழுப் பொய்...
அதன் தலைமை மடாதிபதிகள் சங்கராச்சாரியார் என்ற பட்டத்தைப் பயன்படுத்த தகுதி இல்லாதவர்கள்...
அந்த மடம் உருவானது 1780களில்...
ஆதிசங்கரருக்கும் காஞ்சி மடத்திற்கும் தொடர்பே கிடையாது...
காஞ்சி சங்கராச்சாரிகள் அத்தனை பேரும் முழுப் பொய்யர்கள் என்பதையும் அவர்கள் கூறும் வரலாறு அனைத்துமே கட்டுக்கதை என்பதையும்..
ஆதிசங்கரர் நிறுவிய சிருங்கேரி, பூரி, துவாரகா, பதரி ஆகிய நான்கு மடங்களினுடைய உண்மையான சங்கராச்சாரிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர்...
இதற்கெல்லாம் சான்று காஞ்சி சங்கராச்சாரிகள் பத்திரிக்கைகளில் எழுதிய தொடருக்கு வரிக்கு வரி பதிலடி கொடுத்து 'வாரணாசி ராஜ்கோபால் சர்மா' (பிராமணர்) எழுதிய "Kanchi Kamakoti Math - A Myth" என்ற புத்தகம்.
அந்த கொலகாரனுக மொதல்ல சங்கராச்சாரியே கெடையாது ஓய்...
ஈர்ப்பு விதி இரகசியம்...
ஈர்ப்பு என்ற விதி இல்லாமல் இந்த பிரபஞ்சமே இயங்காது...
அதே போல உயிருள்ள, உயிரற்ற, எந்த நிலையாயினும் அங்கே ஈர்ப்பு என்ற தன்மை இருந்து கொண்டே இருக்கின்றது.
ஈர்ப்பு என்பது ஒருவித விசை அந்த ஈர்ப்பு இல்லையேல் இயக்கம் இல்லை, ஜனனம் இல்லை, செயல் இல்லை, அசைவற்ற தன்மை ஆகி போய்விடும்.
படைத்தலுக்கு காரணமான சூட்சமத்தில் இந்த ஈர்ப்பு விசை ஒரு முக்கிய செயலாற்றி வருகிறது.
ஈர்ப்பு என்றால் புவிஈர்ப்பு மட்டுமே நமக்கு தோன்றும், சற்று தீவிரமாக சிந்தித்தால் ஈர்ப்பு பல பரிணாமங்களில் செயலாற்றி வருகிறது.
நகர்வற்ற ஒரு மரம் அதன் மலர், காய், பழம், இலை, இது போன்ற வடிவத்தால், அழகால் நம்மை பிரபஞ்சம் ஈர்க்க வைக்கின்றது.
ஒரு ஆண் ஒரு பெண் மேல் அவளது உடை, அழகு, குணம், போன்றவற்றால் ஈர்க்க படுகிறான்.
இந்த ஈர்ப்பு என்பது இடம், பொருள், இவற்றிற்கு தகுந்தால் போல் நம் உணர்வுகளை ஈர்க்கின்றன.
அவை காமம், காதல், ரசித்தல், ருசித்தல், அடைதல், போன்ற பல்வேறு ஈர்ப்பு தன்மையை நமக்கு ஏற்படுத்த செய்கிறது.
இத்தகைய தானாகவே உருவாகும் ஈர்ப்பை ஏன் உங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் அதை உருவாக்கி பயன்படுத்த முயலகூடாது என்பதே எனது கேள்வி.
அதற்கு சாத்தியமா என்றால் ஆம்.. என்றே என்னுடைய பதில் இருக்கும்...
ஆன்மீக வாழ்வு...
காலகாலமாக உலகெங்கிலும் உள்ள மக்கள் யாவரும் தமக்கு பிரியமான வழியில் இறைவழிபாடு செய்து வருகின்றனர்.
இங்கு நான் உங்களுடன் பகிரவிருப்பது இந்து சமய தெய்வ வழிபாட்டு முறை பற்றி..
இந்து சமயம் பல நூற்றாண்டுகள் கடந்தும் உயிர்ப்புடன் இருந்து வருகின்றது.
அவ்வப்போது அது தன் வீரியத்தை இழக்கும் போதும், வேற்று சமயத்தவரால் தொல்லைகள் வந்த போதும் அதனை எதிர்கொண்டு மீண்டு வந்த வண்ணம் இருக்கிறது.
மற்ற எந்த சமயத்தைக் காட்டிலும் பல்லாயிரம் ஞானியரை, சித்தமஹா புருஷர்களையும், இறை அவதாரங்களையும் காலந்தோறும் தொடர்ந்து தோற்று விக்கும் இறை கற்பகவிருட்சம் இந்து தர்மம்.
ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள், ஞானியர் இவர்களே இறைவன் எனும் கடலில் சிறிதேனும் நீந்தியவர்கள் அந்த கடல் நீரை பருகியவர்கள்.
நம்மை போன்ற சாதாரண மனிதர்கள் அந்த கடலை தள்ளி நின்று வேடிக்கை பார்த்து ஆச்சர்யப்பட்டு நிற்பவர்கள்.
நமது ஞானப் பெருமக்கள் அவர்கள் கண்ட ஆன்மா அனுபவத்தை நாமும் காண வழிவகைகளைக் கூறிச் சென்றுள்ளார்கள்.
அதை வைராக்யத்துடன் தொடர்ந்து அப்யாசித்தால் நாமும் இறைவனை அடையலாம்.
ரிஷி என்ற வார்த்தையின் பொருள் மந்திர த்ரஷ்டா அதாவது மந்திரங்களை நேரில் கண்டவர்கள் என்று அர்த்தம்.
மந்திரங்கள் பிரபஞ்சத்தில் காலாகாலத்திற்கும் சாஸ்வதமாக இருப்பவை.
ரிஷிகளும் சித்தர்களும் தமது மனம் கடந்த நிலையில் இறைக் கருணையால் அதை உணர்ந்தவர்கள்.
எந்த மனிதனும் யாருக்கும் பணிந்து வாழ ஆசைப்படுவதில்லை அடிமையும் கூட..
அப்படியிருக்க நாம் சிறுவயது முதலே இறைவழிபாடு செய்து வருகிறோம்.
இத்தனை வருட பக்தியில் ஏதேனும் சொல்லிக் கொள்ளத்தக்க இறையனுபவம் நமக்கு உண்டா என்று நமக்கு நாமே கேள்வி கேட்டுக் கொண்டால் வெட்கமின்றி சொல்வதானால் இல்லை என்பதே பதிலாக இருக்கும்.
வெறுமனே வேண்டுதல்கள் பலிப்பதும், செல்வமும் மட்டும் இறைவழிபாட்டின் பயன்களல்ல.
படைப்புகளில் எல்லா ஜீவராசியின் வாழ்க்கையும் ஒரு கட்டுப்பாட்டிற்குட்பட்டது.
ஆனால் மனிதன் மட்டும் அதற்கு விதிவிலக்காக சிறிது அதிக சுதந்திரம் அளிக்கப்பட்டவன்.
ஏனென்றால் எந்த மரமும், விலங்கும், பறவையும் இன்ன பிறவும் விரும்பினால் வேறொன்றாக மாறச் சுதந்திரம் அற்றவை.
மனிதன் மட்டுமே நல்லவன், கெட்டவன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், யோகி, ஞானி, மகான் என தான் விரும்பியபடி வாழவும், விரும்பிய யாவையும் முயற்சியால் அடையவும் வல்லவன்.
அந்த சாய்ஸ் உடன் படைக்கப்பட்ட நாம் என்னவாக வேண்டுமானாலும் ஆகலாம் கடவுளாய் கூட..
இன்று நாம் வழிபட்டு வரும் பல தெய்வங்கள் மனிதர்களாய்ப் பிறந்து பின் உயர்ந்த நிலை அடைந்தவர்கள் தான்..
அது குறித்து பின்னர் விரிவாய் காண்போம்...
கண்டங்கத்திரியின் சிறப்பைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாமா?
கண்டங்கத்திரியும் அதன் மருத்துவ குணமும்..
கண்டங்கத்திரிக்கு கண்டகாரி, முள்ளிக்காய் என்கின்ற வேறு பெயர்கள் உண்டு.
சித்த மருந்துகளில் புகழ் பெற்ற மருந்து 'தசமூலம்' என்பதாகும். இது பத்து மூலிகைகளின் வேர்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதாகும். இந்த பத்து வகை மூலிகைகளில் கண்டங்கத்திரியும் ஒன்றாகும்.
மருத்துவ பயன்கள்: கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து பக்குவமாகக் காய்ச்சி வடித்துக்கொள்ள வேண்டும்.
இதனை உடலில் வியர்வை நாற்றம் இருப்பவர்கள் பூசிவர நாற்றம் நீங்கும். கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சமஅளவு நல்லெண்ணெய் சேர்த்து பக்குவமாகக் காய்ச்சி வடித்து தலைவலி, கீல்வாதம் முதலிய வாத நோய்களுக்கு பூசி வர அவை நீங்கும்.
காலில் ஏற்படுகின்ற வெடிப்புகளுக்கு இதன் இலையை இடித்து எடுத்து சாற்றுடன் ஆளிவிதை எண்ணெய் சமஅளவு கலந்து பக்குவமாக காய்ச்சி பூசிவர மறையும்.
கண்டங்கத்திரி பூவை சேகரித்து வாதுமை நெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி மூலநோய்க்கு பூசிவர நன்மை தரும்.
கண்டங்கத்திரி காயை சமைத்து உண்டுவர நெஞ்சில் கட்டியிருக்கும் சளியை வெளியேற்றும், பசியைத் தூண்டும். கழிச்சலை உண்டாக்கும்.
வெண் குட்டத்திற்கு இதன் பழம் சிறந்த மருந்தாகும்.
கண்டங்கத்திரி பழங்களை பறித்து சட்டியிலிட்டு நீர்விட்டு வேக வைத்து கடைந்து வடிகட்டிக் கொண்டு நான்கு பங்கெடுத்துக் கொண்டு அத்துடன் ஒரு பங்கு நீரடி முத்து எண்ணெய் சேர்த்து காய்ச்சி பக்குவத்தில் வடித்து வெண்குட்டம் உள்ள இடங்களில் பூசி வர வெண்புள்ளிகள் மறையும்.
சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நாள்பட்ட இருமலுக்கு இதன் பழத்தை உலர்த்தி பொடி செய்து குறிப்பிட்ட அளவு தேனுடன் கலந்து இரண்டு வேளை கொடுக்கலாம்.
பல் வலிக்கும், பல்லில் இருக்கும் கிருமிகளை போக்கவும் கண்டங்கத்திரி பழத்தின் விதைகள் பயன்படும்.
இதன் பழத்தையும் உலர்த்தி பொடித்து நெருப்பில் போட புகை வரும். இதனாலும் பல் வலி, பல்லிலுள்ள கிருமிகள் நீங்கும்...
சித்தர்களின் எளிய வைத்தியம்...
பண்டையச் சித்தர்கள் தங்களது ஆய்வின் மூலமாக நோயினைத் தீர்க்க எளிய முறையை உருவாக்கித் தந்துள்ளார்கள்..
இந்த மருத்துவ முறை பாரம்பரிய மரபு முறைப்படி பரவி வந்துள்ளது.
அதில் வீட்டில் தினந்தோறும் பயன்படுத்தும் உணவுப் பொருள்கள் மூலம் எளிதாக செய்யும் சில மருத்துவ முறைகளையும் குறிப்பிட்டுள்ளனர் அவை ..
ஐந்தாறு துளசி இலைகளோடு ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை நன்கு வறுத்துப் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆற வைத்து நெஞ்சில் தடவினால் சளி குணமாகும்.
நெல்லிக்காய் இடித்துச் சாறு பிழிந்து, தேன் சேர்த்துச் சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
நெல்லிக்காயை சட்டியில் படிகாரம் போட்டுக் காய்ச்சி ஆறவைத்து, அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகிய மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடித்தால் அஜீரணம் சரியாகும்.
மஞ்சளை தணலில் இட்டு, சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண் ஆறும். பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். அத்துடன் ஆறாத வயிற்றுப்புண்ணும் நீங்கும்.
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடித்தால் வயிற்று வலி நீங்கும்.
செம்பருத்தி இலைகளை பொடியாக்கி, தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.
கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வந்தால் தேமல் குணமாகும்.
கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும்.
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
எலுமிச்சம் பழச்சாறு, தேனில் கலந்து குடித்தால் வறட்டு இருமல் குணமாகும்...
கருப்பையும், சிகப்பையும் பார்த்தாலே வயிறு எரிகிறது...
வந்தவரெல்லாம் வாழ வேண்டும், தமிழன் ஓட்டை சட்டியை வைத்துக் கொண்டு அரசியல் ஆட்சி அதிகாரத்தை விட்டுக் கொடுத்து விட்டு கையேந்தி நிற்க வேண்டும்.. என்ற நிலையில் தான் தமிழினம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது..
எதிரிகளை ஏளனம் செய்ய கோடி கோடியாக கொள்ளையடிப்பார்கள், இருப்பதை எல்லாம் சுரண்டுவார்கள், நாம் ஏன் என்று கேட்க கூடாது.
தமிழனுக்கு ஏன் எந்த அதிகாரம் கூடாது என்று மற்ற மாநிலத்தார் நினைக்கிறார்கள்...
தன்னை தமிழன் என்று நினைத்துவிட கூடாது. தான் வாழ தமிழனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற சுயநலத்தினால் “வந்தாரை வாழ வைக்கும்” தமிழகம் என்று மேலே தூக்கி வைத்து காலில் போட்டு நசுக்குகிறான்.
தமிழன் ரத்தத்தை 3-மாநில திராவிட அட்டைப்பூச்சிகள் உறிஞ்சிக்குடிப்பதற்கு வசதியாக தங்கள் கொடியில் ரத்தம் எனும் குருதியை (சிகப்பு) அடையாளமாக வைத்தார்கள்..
நம்பினவர்கள் முகத்தில் கரியைபூசும் கேலமானமானவர்கள் என்பதால் (கருப்பு) நிறத்தை தங்கள் கொடியில் பூசினார்கள்.
இந்த கருப்பையும், சிகப்பையும் பார்த்தாலே தமிழனுக்கு வயிறு எரிகிறது.
சண்டாளர்களே சுரண்டிய தெல்லாம் போதாதா, ரத்தம் குடிக்கும் நரிகளே இனியாவது தமிழர்களை வாழ விடுங்கள்...
தற்பெருமை...
தற்பெருமை கொள்ளுதல் ஒரு மனிதனுடைய நல்ல குணநலன்களையும் கெடுத்து விடும்.
நிறை குடம் தழும்பாது என்பது ஒரு பழமொழி.
எல்லாம் கற்று தெரிந்த ஒருவன் மிகவும் அமைதியாக இருப்பான். ஏதோ அரைகுறையாக தெரிந்து கொண்டவன் எல்லாம் தெரிந்தது மாதிரி நடந்து கொள்வான்.
நீ ஒரு செயலை முடித்து விட்டால் நீயாகவே உன்னை உயர்த்தி சொல்லக் கூடாது. உனது செயலை பற்றி மற்றவர்கள் பேச வேண்டும்.
அதைவிட்டு நீயே பேசினால் அது தற்பெருமை.
மற்றவர்கள் பேசினால் அது பெருமை.
விஞ்ஞானி ஒருவர், தன்னைப் போலவே அச்சாக பல மனிதர்களை உருவாக்கும் நுட்ப்பத்தைக் கண்டறிந்தார். அதன்படி அவர் உருவாக்கிய நகல்களுக்கும் அசலுக்கும் வித்தியாசமே தெரியவில்லை..
ஒரு நாள், தன் உயிரைக் கவர்ந்து செல்ல எமதர்மன் வரப் போகிறான் என்பதை அறிந்தார் விஞ்ஞானி. ஏற்கனவே தான் உருவாக்கி வைத்திருந்த ஒரு டஜன் நகல் மனிதர்களுக்கு நடுவில் போய் நின்று கொண்டார். பூலோகம் வந்த எமதர்மன், உருவத்தில் விஞ்ஞானியைப் போன்றே இருக்கும் பதின்மூன்று பேரில் உண்மையானவர் யார் என்பதை அறிய முடியாமல் குழம்பிப்போனார். வெறுங்கையுடன் திரும்பினான். மரணத்தை வென்று விட்டதாகக் குதூகலித்தார் விஞ்ஞானி.
இருப்பிடம் திரும்பிய எமதர்மன் நன்கு யோசித்தான். அவன் மனதில் ஒரு திட்டம் பளிச்சிட்டது. பாசக்கயிற்றுடன் பூலோகம் வந்தவன், விஞ்ஞானியின் இடத்தை அடைந்தான். ''ஐயா.. நீங்கள் பேரறிஞர்தாம். உங்களைப் போலவே ஒரு டஜன் உருவங்களைச் செய்து விட்டீர்கள். ஆனால். ஒரே ஒரு குறை...'' என்றான்.
விஞ்ஞானிக்குப் பொறுக்கவில்லை. ''என்ன குறை கண்டீர்?'' என்று எமதர்மனின் கைகளைப் பிடித்துக் கேட்டார். உடனே எமதர்மன், ''தற்பெருமை என்ற குறைதான். வாருங்கள் எமலோகத்துக்கு'' என்று விஞ்ஞானியை இழுத்துச் சென்றான்.
படிப்பாலும் கல்வியாலும் வருகிற அகங்காரம் மற்றவர்களின் அறிவால் இது வெறும் அறியாமையே என்று உணர்த்துகையில் தான் நாம் நம்மையே உணர்கிறோம்...
சைனஸ் பிரச்சனையை போக்க...
பருவ காலநிலை அடிக்கடி மாறுபடுவதால், உடலில் ஜலதோஷம் திடீரென்று ஏற்படும், அவ்வாறு ஜலதோஷம் வந்தால், அது இரண்டு, மூன்று நாட்களில் போய்விடும்.
ஆனால் அது சிலருக்கு நீண்ட நாட்கள் இருந்து, எந்த வேலையையும் சரியாக செய்ய முடியாத அளவு இருக்கும். இதனால் அந்த சளியானது மூக்கில் நீண்ட நாட்கள் இருப்பதால், அது சைனஸாக மாறி விடுகிறது.
அதுமட்டுமல்லாமல், தலைக்கு குளித்தப்பின்னர், தலையில் இருக்கும் ஈரத்தை காய வைக்காமல் இருப்பர். இதனால் தலையில் நீர் கோர்த்து, அடிக்கடி வலி ஏற்படும். பின் மூச்சு விடும் போது ஒரு துர்நாற்றம், திடீரென்று மூக்கில் எரிச்சல் போன்றவை ஏற்படும். அத்தகைய பிரச்சனைகளை போக்க ஈஸியான வீட்டு மருந்து இருக்கிறது.
சைனஸ் பிரச்சனையை போக்க...
ஒரு வாணலியில் நல்லெண்ணெயை ஊற்றி, அதில் தும்பை பூக்களை போட்டு, காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும். பின் அந்த எண்ணெயை வாரத்திற்கு ஒரு முறை தேய்த்து, வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்து வர வேண்டும். இதனால் அடிக்கடி வரும் தலைவலி மற்றும் நீர்க்கோர்வையால் ஏற்படும் தலைபாரம் போன்றவையும் குணமாகிவிடும்.
தாய்ப்பாலில் சிறிது கிராம்பை அரைத்து போட்டு, பேஸ்ட் போல் செய்து அதனை தலைக்கு பற்று போட்டால், சைனஸால் ஏற்படும் தலைவலி நீங்கும்.
தலைக்கு குளித்தப் பின், சாம்பிராணி புகையை போட்டு, தலையை காயவைத்துக் கொள்வது போல், ஓமம், சிறிது மஞ்சள் போட்டு, அதனால் வரும் புகையை நுகர்ந்து கொண்டால், ஜலதோஷம், நீர்க்கோர்வை போன்றவை சரியாகும்.
குப்பைமேனி, கீழாநெல்லி போன்ற செடிகளின் இலையை சாறு பிழிந்து, அந்த சாற்றின் அளவிற்கு நல்லெண்ணெயை கலந்து, சூடேற்றி வைத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த எண்ணெய் ஆறியதும், அதனை மூக்கினுள் விட்டால், நாள்பட்ட தலைவலி மற்றும் மூக்கினுள் ஏற்படும் குடைச்சல் போய்விடும்.
கடுகு சிறிது, கஸ்தூரி மஞ்சள், சிறிது சாம்பிராணி ஆகியவற்றை பொடி செய்து, தண்ணீரில் கலந்து, படுக்கும் முன் நெற்றிக்குத் தடவி, காலையில் கழுவ வேண்டும். இல்லையென்றால் கிராம்பு, சுக்கு ஆகிய இரண்டையும் அரைத்து, நீரில் பேஸ்ட் போல் கலந்து, மூக்கு மற்றும் நெற்றியில் தடவ வேண்டும். இதனால் நீர்க்கோர்வை, தலைபாரம், ஜலதோஷம் போன்றவை விரைவில் குணமாகும்...
பணத்தின் கவர்ச்சி...
ஒவ்வொருவரும் பணத்தைப் பற்றிதான் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். சிலர் பணத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள். அவர்கள் பரவாயில்லை. இன்னும் சிலர் பேராசை பிடித்தவர்களாக இருக்கிறார்கள்.
அவர்கள் அடுத்த உலகத்தைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்து விடுகின்றனர். நன்னெறியைப் பற்றியும், அதன் மூலம் சொர்க்கத்தை அடைவதைப் பற்றி சிந்திப்பதும், பணத்தைப் பற்றி சிந்திப்பதற்கு சமமாகத்தான் இருக்கும்.
ஒரு மனிதன் நிகழ் காலத்தில் வாழும்போது மட்டும்தான் பணத்தைப் பற்றியோ அடுத்த உலகத்தைப் பற்றியோ சிந்திக்காமல் இருக்க முடியும்.
பணம் என்பது எதிர்காலம். எதிர்காலத்துக்கான பாதுகாப்பு. அதிகாரத்தின் அடையாளம். அதனால்தான் நீ பணத்தை மேலும் மேலும் சேகரிக்கிராய்.
ஆனால் இன்னும் சேர்க்க வேண்டும் என்ற ஆசை உன்னை விட்டு ஒருபோதும் அகலாது. ஏனெனில் அதிகார தாகம் முடிவில்லாதது.
மக்கள் அதிகாரத்திற்காக ஏங்கித் தவிக்கின்றனர். ஏன் என்றால் அவர்கள் அவர்களுக்குள்ளே வெற்று மனிதர்களாக இருக்கிறார்கள். அந்த வெறுமையை எதைக் கொண்டாவது நிரப்பப் பார்க்கின்றனர்.
அது பணமாக இருக்கலாம்;அதிகாரமாக இருக்கலாம்; தன் மதிப்பாக இருக்கலாம்; மற்றோரால் மதிக்கப் படுவதாக இருக்கலாம்; நல்ல குண நலன்களாக இருக்கலாம்.
இவ்வுலகில் இரண்டு வகை மனிதர்கள் இருக்கிறார்கள்...
இருக்கும் வெறுமையை நிரப்ப முயல்பவர்கள் ஒரு வகை. இவர்கள் எப்போதும் ஏமாற்றத்துடனே இருக்கிறார்கள். அவர்கள் நிரம்ப குப்பையை சேகரிக்கிறார்கள். அதனால் அவர்கள் வாழ்க்கை முழுவதும் பயனற்றதாகி விடுகிறது.
வெறுமையை அப்படியே காண முயலும் இன்னொரு வகையினர் தியானம் செய்தவர்கள் ஆகிறார்கள்.
உன் முன் இருக்கும் கண நேரத்தில் வாழ்ந்து பார். எதிர்காலத்தை விட்டுவிடு. அப்போது பணம் அதன் கவர்ச்சியை இழந்து விடும்...
கிராம்பின் மருத்துவ குணங்களை அறிவோம்…
கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.
நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்.
சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும்.
தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.
கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.
முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.
கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.
3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும்.
தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண்ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.
கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.
கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.
சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம். வாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது...