இப்போது திடீரென்று சில தேசப்பற்று உள்ளவர்கள் வந்து விடுவார்கள்...
வரி இல்லாமல் எப்படி ஒரு அரசாங்கம் செயல்பட முடியும்..?
இது முட்டாள்தனமான பதிவு என்று...
ஆம், வரி என்பது ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கு அவசியமான ஒன்று, அதை மறுக்கவில்லை..
ஆனால் ஒன்றை நினைவுப்படுத்த விரும்புகின்றேன்..
நாம் நம்முடைய அடிப்படை தேவைகளான உணவு, நீர், இருப்பிடம், கல்வி, மருந்துவம் போன்ற பல அடிப்படை வசதிகளுக்கு தான் அதிகமாக வரி செலுத்துகின்றோம்..
மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யாமல், அதற்கு பன்மடங்கு வரி விதிக்கும் சனநாயக அரசாங்கம் எதற்காக..? யாருக்காக இருக்கின்றது..?
மக்களுக்காகவா.? இல்லை வணிகர்களுக்காகவா..?
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.