நீங்க ஒரு செயலுக்காக பல முறை அலைகழிக்கபட்டால் உங்கள் மனம் வெறுத்து போய் " சே என்னப்பா ஒரு சின்ன விஷயத்திற்கு இத்தனை அலைகழிப்பு என்று மனம் வேதனையோடு எதிர்மறையான சொற்களை பயன்படுத்துவது வழக்கம்.
அதனால் உங்கள் மனதில் தேவையற்ற எதிர்மறை அதிர்வுகள் உருவாகும் அது இதோடு நில்லாமல் உங்கள் பிற விஷயங்களிலும் தடை, ஏற்படுத்தும்.
மனம் எப்போதும் அந்த ஒரு விஷயத்தில் முன்னிருத்தும்.
அதனால் இன்று ஒரு காரியமாக சென்றோம் நாளை வர சொன்னார்களா , சரி ஐயா மகிழ்ச்சி நன்றி என்று சொல்லி வாருங்கள்.
முதலில் உங்கள் மனம் சாந்தமாகும்,
இரண்டாவது உங்களை மறு தினம் வர சொன்ன நபரின் எண்ணம் உங்கள் மகிழ்ச்சி நன்றி என்ற வார்த்தையை பற்றி யோசிக்கும்.
மூன்றாவது உங்களை நாளைக்கு வாருங்கள் என்று சொன்ன அந்த நபரே ஐயா தாங்க இப்போதே முடித்து தருகிறேன் என செயல் பட தொடங்கி விடுவார்.
நல்ல நேர்மறை எண்ண அலைகள் நம்மை சுற்றி இருப்பவர்களை நம்மோடு ஒன்றினக்க செய்யும்.
முயன்று பாருங்கள் வெற்றி நம்ம பக்கம் தான்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.