09/12/2018

கருங்காலி மரமும் அதன் மருத்துவ குணமும்...


கருங்காலி மரத்தில் இருந்து பெறப்படும் பலகைகள் மிகவும் உறுதியானது. இப்பலகை கருப்பு நிறம் கொண்டது. நூற்றாண்டுகள் கடந்தாலும் சேதம் அடையாதது. இதன் ஆங்கில பெயர் "EBONY" ஆகும்.

இரும்பை ஒத்த உறுதியுடன் கூடிய இந்த மரத்தின் பலகைகள் மூலம் செய்யப்படும் பொம்மைகள், அலங்கார பொருட்கள், கதவு, ஜன்னல், மர அலமாரிகள், கட்டில் போன்ற வீட்டு உபயோக பொருட்கள் மிகவும் விலை உயர்ந்தவை தங்கத்துக்கு இணையான பெறுமதி மிக்கவை.

மருத்துவ குணம்...

கருங்காலி வேரை எடுத்து சுத்தப்படுத்தி நீரில் ஊறவைக்க வேண்டும்.  பின்பு அந்த நீரைக் கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தினால் வயிற்றுப்புண் ஆறும். வயிற்றில் உள்ள கொழுப்பைக் குறைக்கும்.

நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் இருவேளை இதைக் குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.. இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும்.  பித்தத்தைக் குறைக்கும். வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றும் அதேவேளை  கிருமி நாசினியாகவும் செயல்படும்.

கருங்காலி மரப்பட்டை...

கருங்காலி மரப்பட்டை அல்லது மரக்கட்டை 1 பங்கு எடுத்து 8 பங்கு நீர் சேர்த்து நன்றாகக் காய்ச்சி அதனுடன் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்த்து மீண்டும் காய்ச்சி வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால், ஈளை, இருமல் நீங்கும்.  சுவாச காச நோய்கள் அகலும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.  உடலில் உள்ள தேவையற்ற விஷ நீரை வெளியேற்றும்.

பெண்களுக்கு கருப்பையை வலுப்படுத்தும்.  மலட்டுத் தன்மையைப் போக்கும்.  பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலைக் குறைக்கும்.  நீரிழிவு, இரத்த அழுத்தம், இதய நோயாளிகள் இதைஅருந்துவது நல்லது. வாய்ப்புண்ணை அகற்றி வாய் நாற்றத்தைப் போக்கும்.

இதுபோல் கருங்காலிப்பட்டை, வேப்பம் பட்டை, நாவல்பட்டை இம்மூன்றையும் ஓர் எடை எடுத்து இடித்து நாள்பட்ட புண்களின் மீது தடவி வந்தால் புண்கள் ஆறும்.

கருங்காலி மரப்பிசின்...

கருங்காலி மரத்தின் பிசினை எடுத்து  காயவைத்து பொடிசெய்து அதை பாலுடன் கலந்து அருந்தி வந்தால்  உடல் பலமடையும்.  நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும்.  அதிக இரத்தப்போக்குள்ள பெண்களுக்கு சிறந்த மருந்தாகும்.  நரம்புத் தளர்ச்சியைப் போக்கி புத்துணர்வு கொடுக்கும்.

கரப்பான் நோயினை போக்கவல்லது.  பால்வினை நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. கருங்காலிக் கட்டையை தண்ணீரில் ஊறவைத்தால் அந்நீரின் நிறம் மாறும். அந்த நீரைக் கொண்டு குளித்து வந்தால், உடலில் உண்டாகும் அனைத்து வலிகளும் நீங்கும்...

கட்டப்பஞ்சாயத்து, நாடக காதல், சாதி கட்சி தலைவர் விசிக திருமா கலாட்டா...


இனி சேலம் இன்னொரு சௌகார்பேட்டை...


எட்டுவழிச் சாலை வருவது யாருக்காக?

சேலத்திற்கு ரோகிணி கலெக்டராக அமர்த்தப்பட்டு அவரது விளம்பரத்திற்கு செலவு செய்வது  யார்?

சேலம் உட்பட சென்னை முதல் கோவை வரை வடமாவட்டங்களில் மகாவீரர் ஜெயந்தி அன்று கறிக்கடைகளை திறக்கவிடாமல் தகராறு செய்து கடைசியில் கலெக்டர்கள் மூலம் தடை விதித்து லோக்கல் சட்டமாகவே கொண்டுவந்து யார்?

புதுச்சேரி முதல்வரையே வரவைத்து சாதாரண ஆள்போல தேரை இழுக்கவைத்தது யார்?

பெரிதாக எதையுமே சாதிக்காத சேலம் பியூஸ் மானூஸ் எப்படி திடீரென்று பிரபலமானார்?

இசுலாமியர் நாய்க்கறி போடுவதாக கொளுத்திப் போட்டது யார்?

விடை தெரிய தொடர்ந்து படியுங்கள்...

சேலம் எருமாபாளையம் அருகில் 1995-ஆம் ஆண்டு சில ஜெயின் மதத்தை சார்ந்தவர்கள் (அதாவது பனியா சமூகம்) குஜராத் ராஜஸ்தான் பகுதிகளில் இருந்து வந்து குடியேறினார்கள்.

மிகச் சிறுபான்மையாக இருந்த இவர்கள் வெறும் 20 ஆண்டுகளில் சேலத்தை கைப்பற்றி தமது கைக்குள் கொண்டுவந்து விட்டார்கள்.

நம்ப முடியவில்லையா?
ஆனால் இதுதான் உண்மை.

ஒரு பக்கம் மார்வாடிகளும் ஒரு பக்கம் ஜெயின்களும் மெல்ல மெல்ல குடியேறி சத்தமேயில்லாமல் படு சாமர்த்தியமாக எருமாபாளையம் தொடங்கி பழைப்பேருந்து நிலையம், செவ்வாய்பேட்டை, அரசிபாளையம், நான்கு ரோடு, சங்கர் நகர், காந்தி ரோடு என ஒரு வட்டமான பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான கடைகளையும் வீடுகளையும் வாங்கி குவித்துவிட்டார்கள்.

அதுதான் இன்று சேலத்தின் இதயம்.
அந்த இதயத்தில் பனியாக்கள் குத்தவைத்து உட்கார்ந்து விட்டனர்.
 இப்பகுதி முழுவதும் மார்வாடியும் ஜெயினும் பெரும் ஆதிக்க சக்தியாக மாறியதன் விளைவாக சங்கர் நகர் பகுதிகளில் நான்கு தெருவின் பெயரையே அரசு கெஜட்டில் "ஜெயின் தெரு" என்று மாற்றிவிட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

 ஏன் சேலத்தைக் குறிவைத்துள்ளனர்?

இங்குதான் தமிழகத்தின் முக்கியமான கனிம வளம் குவிந்துள்ளது.
(பார்க்க படம்: Mineral map of Tamil Nadu)

சேலத்திலும் அதைச் சுற்றிலும் உள்ள கனிமங்களைக் கொள்ளையடிக்க பனியா கம்பெனிகள் பல ஆண்டுகளாக காய்நகர்த்தி வருகின்றன.

அதன் விளைவு சேலம் எட்டு வழிச்சாலை மற்றும் சேலம் உருக்காலை தனியார் மயமாக்கும் முயற்சி போன்றன.

இவர்களுக்கு ஒத்தாசையாக நடந்ததே மேற்படி குடியேற்றம் மற்றும் ஆதிக்க மாற்றம்.

இதை எப்படி செய்கிறார்கள்?

பொதுவாக வடயிந்திய வணிக சமூகமான பனியாவில் இரு பெரும் பிரிவுகள் உண்டு.

மார்வாடி மற்றும் ஜெயின்.

அம்பானி, அதானி, மிட்டல், வேதாந்தா, ஜிண்டால் என கார்ப்பரேட் பணமுதலைகள் பனியா சமூகமே.
இவர்கள் தான் மத்திய அரசை இயக்குவது.

இதில் மார்வாடிகள் இந்து மதத்தையும் ஜெயின் மக்கள் மகாவீரரின் போதனைகளையும் பின்பற்றினாலும் இரண்டு தரப்பும் பாஜகவை ஆதரிப்பவர்கள்.

காரணம் அவர்களின் வியாபாரத்திற்கு  காங்கிரசை விட பாதுகாப்பாக பாஜக ஆட்சி இருக்கிறது என்பதால்.

இயல்பில் ஜெயினும் மார்வாடியும் ஒன்றிப்போவது இல்லை.

அவர் வீதியில் இவர் வசிப்பது இல்லை, இவர் வீதியில் அவர் வசிப்பது இல்லை.

இவர்கள் இரண்டு பேருமே முதலாளி சமூகம் என்பதால் இவர்கள் இந்தி பேசிக்கொண்டு வருகின்ற பீகாரிகளை தொழிலாளிகளாக அடிமாட்டு கூலிக்கு பயன்படுத்துகிறார்கள்.

(பொதுவாகவே கஞ்சத்தனம் உள்ளவர்கள். சொத்து சேர்த்துக் கொண்டே போவார்கள். ஆனால் அனுபவிக்க மாட்டார்கள்)

இம்மூன்று பேருக்குள்ளும் எதில் முரண்கள் இருந்தாலும் வியாபாரம், அரசியல், நில ஆக்கிரமிப்பு போன்றவற்றில் ஒத்த சிந்தனை உடையவர்களாக இருக்கின்றனர்.

உதாரணமாக ஒரு வீடு விற்பனைக்கு வந்தால் நான்கு குடும்பம் ஒன்று சேர்ந்து அதனை வாங்கி நான்கு அடுக்குமாடி வீடு கட்டி குடிவருகிறார்கள்.

அருகிலேயே ஒரு கொட்டகை போட்டு பீகாரிகளை குடியமர்த்தி வைக்கிறார்கள்.

இதன் விளைவாக நிலம் நீர் மின்சாரம் என்ற அனைத்தையும் சுரண்டுகிறார்கள்.

குறிப்பாக இவர்கள் கட்டும் வீடுகள் காலியாகவே கிடந்தாலும் வாடகைக்கு கூட தமிழர்களைத் தங்க வைப்பது இல்லை.

இதன் உச்சபட்ச கொடுமையாக எருமாபாளையத்தில் ஒரு ஏரியையே வளைத்து ஒரு பிரமாண்டமான ஜெயின் கோயிலை கட்டிவிட்டார்கள்
(சேலத்தின் பிரபலமான சமூக சேவகரென நாம் கொண்டாடுகின்ற பியூஸ் மானுஸ் இந்த கோயில் கட்டப்பட்டதற்கு முக்கிய காரணம்).


அதில் தமிழர்கள் நுழையத் தடை என்பது கூடுதல் செய்தி. அங்கு மட்டும் அல்ல, அவர்கள் வாழும் அனைத்து பகுதிகளிலும் ஒரு ஜெயின் கோயில் கட்டி முடித்துவிட்டார்கள்.

தமிழர்களை அண்டவிடக் கூடாது என்பதில் மட்டும் இவர்கள் அனைவருமே தெளிவாக இருக்கிறார்கள்.

ஒரு தெருவில் வரிசையாக வீடுகளை வாங்கி அதன் பொதுவழியில் தடுப்பு போட்டு அதைத் தனி தீவுபோல ஆக்கிக் கொள்கின்றனர்.

உள்ளே நடப்பது தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களான புகையிலை மற்றும் பாக்கு உற்பத்தி.

இவற்றிற்கு தடை விதித்ததே இவர்கள்.
 முதலில் போதைப் பொருட்களை மக்களுக்குப் பழக்கப்படுத்தி அவர்கள் அடிமையான பிறகு தடை விதித்து பத்து மடங்கு விலைக்கு விற்பார்கள்.

இதன் மூலமே இவர்கள் பெருமளவில் பொருள் ஈட்டுகின்றனர்.

இது தவிர வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வெளிப்பார்வைக்கு நகைக்கடை அல்லது அடகுக்கடை நடத்துவதும் இவர்கள் பல தலைமுறைகளாக செய்துவரும் உத்தி
 (அயன் படத்தில் கூட காட்டியிருப்பர்).

இவர்களிடம் பணம் விளையாடுவது இந்த மாதிரியான சட்டவிரோத தொழில்களைக் காலங்காலமாக கச்சிதமாக செய்துவருவதால்தான்.

இவர்கள் தமது பண பலத்தால் சேலத்தில் முக்கிய விற்பனைப் பொருட்களான கட்டுமானப் பொருட்கள், தங்கம், வெள்ளி, துணி, பான்பாராக், புகையிலை, எலக்ட்ரானிக், கைவினைப் பொருட்கள், செருப்பு உட்பட அனைத்தையும் கைப்பற்றிவிட்டனர்.
 இப்போது சேலத்தில் ஊசி முதல் பங்களா வரை உற்பத்தி முதல் விற்பனை வரை மார்வாடியோ ஜெயினோ தான் செய்கிறார்கள்.

அது சார்ந்த வேலைகளுக்கு பீகார் சார்கண்ட் உத்திரபிரதேச பகுதிகளை சார்ந்த 15 வயதிற்கு உட்பட்ட பல்லாயிரக்கணக்கான குழந்தை தொழிலார்களை கொண்டு வந்து சேலம் முழுவதும் நிரப்பிவிட்டார்கள்.

குடிவரும் அனைவருக்கும் பத்து நாட்களுக்குள் வாக்காளர் அடையாள அட்டையும் மூன்று மாதங்களுக்குள் ரேசன் கார்டும் தேடி வருகின்றன.

இந்த பனியா ஆக்டோபஸின் மூளை சென்னை செளக்கார்பேட்டை யில் உள்ளது.

அங்கு ஏற்கனவே இவர்களுக்கு ஆள், பத்திரிக்கை, பணம், சங்கம், பதவி, சரக்குப் போக்குவரத்து என அனைத்துக்கும் ஏற்பாடு உள்ளது.

இந்த ஆக்டோபஸ் சென்னை முதல் கோவை வரை தன் கால்களைப் பரப்பியுள்ளது.

இதன் அடுத்த குறி மதுரை ஆகும்.
தற்போது மதுரை மீனாட்சி கோவிலைச் சுற்றி அனைத்து வீதிகளிலும் முக்கால்வாசி ஜெயின் - மார்வாடிகளுக்கு சொந்தம்.

மதுரையின் இரண்டு வார்டுகள் பீகாரிகள் குடியேறி வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் வாக்காளர்களாக ஐந்தே ஆண்டுகளில் ஆகிவிட்டனர்.

தமிழகம் முழுக்க இவர்களுக்கு போட்டி தெலுங்கர் மட்டுமே.

தெலுங்கர் வியாபாரத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டதால் இப்பொழுது தங்கள் ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ள இவர்களும் இந்துத்துவ அமைப்புகளில் சேர தொடங்கிவிட்டார்கள்.

முதலில் குடியேற்றம்,
பிறகு கள்ளக் கடத்தல்,
பிறகு நில ஆக்கிரமிப்பு,
பிறகு சந்தை கைப்பற்றல்,
பிறகு அந்நிலத்தை தக்க வைக்கவும் தமது மக்களை ஒருங்கிணைக்கவும் ஜெயின் கோயில்,
கோயில் மூலம் கூட்டுநிதி,

அந்த நிதி மூலம் இனம் மொழி என்கிற வரையறையில் வராத தேசிய அல்லது மதவாத அரசியல் மற்றும் விளம்பரம்,
இதன் மூலம் வரும் பிரச்சனைகளைச் சமாளிக்க பனியா கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கண்கானி வேலை பார்த்து அதிகாரத்தை பெறுவது,
 குடியேறி வாக்குவங்கி அளிப்பது, தேர்தல் பணி செய்வது, நிதி அளிப்பது, கார்ப்பரேட் ஆதரவு என மத்திய அரசை  ஆட்டிப்படைக்கும் ஒரு வலிமையான அரசியலை மார்வாடியும் ஜெயினும் இந்தியா முழுவதும் கட்டவிட்டனர்.
தமிழகத்தில் கட்டத் தொடங்கி பாதி வெற்றிபெற்று விட்டனர்.

இவர்கள் அதிகாரத்தின் நீட்சித்தான் இப்பொழுது புதிதாக தமிழ்நாட்டின் எல்லா நகரங்களிலும் ஆர்எஸ்எஸ் ஊர்வலம், ஜெயின் ஊர்வலம் ஆகியன நடத்தப்படுகிறது.

இவர்களின் முதல் இலக்கு சாதாரண மக்கள் அல்ல;

ஒவ்வொரு நகரத்திலும் இருக்கின்ற உள்ளூர் வியாபாரிகள்தான்.

இந்த வியாபாரிகளையும் சந்தையையும் கைப்பற்றிவிட்டால் நிலத்தையும் அரசியலையும் கைப்பற்ற முடியுமென திட்டமிடுகிறார்கள்.

இத்தகைய சூழலில் மொழி இனம் நிலம் என்று பேசுகின்ற ஒரு கட்சி தமிழ்நாட்டில் உருவானால் மார்வாடி மற்றும் ஜெயின் வியாபாரமும் அவர்களின் குடியேற்றமும் சிக்கலுக்கு உள்ளாகும் என்பதால்தான் நாம் தமிழர், தமிழ்தேசியப் பேரியக்கம் போன்ற தமிழ்தேசிய அரசியலை நசுக்க பார்க்கிறார்கள்.

பாரிசாலன் இரண்டு மாதம் உள்ளே இருந்தது இவர்கள் கைங்கர்யம்தான்.

இன்றைய சூழலில் தமது முதல் எதிரி நாம் தமிழர் கட்சிதான் என்பதில் இவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் இளைஞர்கள் இந்த புரிதல்களுக்கு வந்துவிடாமல் தடுக்கவே இந்து முன்னணியை வளர்த்து விடுவது
ரஜினியை அரசியலுக்குள் இழுத்து விடுவது இன்டர்நெட்டில் வெட்டித்தனமான நடவடிக்கைகளை ஊக்குவிப்பது என காய் நகர்த்துகின்றனர்.

இன்னும் பத்தே ஆண்டுகளில் தமிழகத்திலும் இவர்கள் சொல்வதுதான் சட்டம் என்ற சூழல் வரும்.

உறவுகளே நம்புங்கள்...

ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டு இருக்கிறோம்...

- மேகநாதன் முனுசாமி...

விழித்துக்கொள் தமிழினமே...


மதுவுக்கு எதிரான திமுகவின் பொய் முகம்...


மதுவுக்கு எதிராக தற்போது குரல் கொடுத்து வரும் தி.மு.கவை சேர்ந்தவர்கள் கையில் தான் தமிழகத்தில் பெரும்பாலான மது தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன.

இவர்களிடம் இருந்துதான் டாஸ்மாக்கிற்கு அதிகமாக மது கொள்முதல் செய்யப்படுகிறது. 

பீர் வகைகள்:

சென்னை புருவரீஸ்-பெங்களூரு தொழிலதிபர்.

மோகன் புருவரீஸ் - மருத்துவக் கல்லூரி உரிமையாளர்.

எம்.பி புருவரீஸ்- எம்.பி புருஷோத்தமன்.

கல்ஸ்- தி.மு.க. தலைமையின்  வாரிசுகள்.

அப்பல்லோ- சென்னை தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமானது.

ஏ.எம். புருவரீஸ்- முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவருக்கு  சொந்தமானது.

மதுவகைகள்:

யுனைடெட் ஸ்பிரிட்ஸ்- பெங்களூரு பிரபல தொழிலதிபர்.

மோகன் புருவரீஸ்- மறைந்த முதல்வருக்கும் நெருக்கமான தொழிலதிபர்.

சிவா டிஸ்டில்லரீஸ்-பொள்ளாச்சி மகாலிங்கம் குடும்பத்துக்கு சொந்தமானது.

எம்.பி டிஸ்டில்லரீஸ்- எம்.பி. புருஷோத்தமன்.

சபில் - பொழுது போக்கு பூங்கா உரிமையாளருக்கு  சொந்தமானது.

மிடாஸ்- அ.தி.மு.க. தலைமைக்கு நெருக்கமானவருக்கு சொந்தமானது.

எலைட் டிஸ்டில்லரீஸ்- முன்னாள் மத்திய அமைச்சருக்கு சொந்தமானது.

எஸ்.என்.ஜே- கருணாநிதிக்கு நெருக்கமான சினிமா தயாரிப்பாளருக்கு.

கல்ஸ் - திமுக வாரிசுகளுக்கு சொந்தமானது.

கோல்டன் வாட்ஸ்-தஞ்சை தி.மு.க. அரசியல் தலைவருக்கு சொந்தமானது.

இம்பீரியல் ஸ்பிரிட்ஸ்- சென்னை தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமானது.

இந்த நிறுவனங்கள் அனைத்தும் ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு லட்சம் பெட்டிகள் முதல் 8 லட்சம் பெட்டிகள் வரை உற்பத்தி செய்யும் திறன் படைத்தவை...

வீட்டில் உள்ள தரை பளிச்சிட...


கீறல்கள் மறைய...

தளத்தில் உள்ள கீறல்கள் மறைய ஒரு தேக்கரண்டி பேக்கிங் பவுடர் கலந்த நீரை ஒரு வாளி நிறைய எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வெள்ளைத்துணியை நனைத்து எடுத்து பிழிந்து கீறல்கள் விழுந்த இடத்தை அழுத்தித் தேய்த்து விடுங்கள். காய்ந்த பிறகு பாருங்கள். கீறல் விழுந்த தடமே இல்லாமல் போய்விடும்.

வினைல் தளம்...

வினைல் தளமாக இருந்தால், பேக்கிங் பவுடரை சிறிதளவு எடுத்து தளத்தில் தூவி விடுங்கள். பிறகு, கறைபடிந்த தரையை, வினிகரில் நனைத்த துணியால் அழுத்தி துடைத்து விடுங்கள். அதன்பிறகு சுத்தமான நீரில் துணியை நனைத்து பிழிந்து தரையை சுத்தம் செய்யுங்கள். இப்படி செய்வதால், வினிகரின் மணம் பரவாமல் தடுக்கப்படும்.

காங்கிரீட் தளம்...

சில துளிகள் வீரியமிக்க டிடர்ஜென்ட் பவுடர் கலந்த நீரை காங்கிரீட் தரையில் இட்டு, தரையை பிரஷால் அழுத்தித் துடைத்துவிட்டு, ஸ்பான்ஜை வைத்து ஈரமான தளத்தை ஒற்றி எடுங்கள். இந்த தளத்தில் எண்ணை பிசுக்குகள் இருந்தால், கறைபடிந்த இடங்களில் ஆல்கலின் சோப் போட்டு, அழுத்தமாக தேய்த்து கழுவி விடுங்கள்.

மார்பிள் தளம்...

பேக்கிங் சோடா பேஸ்டை எடுத்து, ஊறவைத்த துணியால் தரை முழுவதும் தேய்த்து விடுங்கள். பின்பு உலர்ந்த துணியால் சுத்தமாக துடைத்து விடுங்கள். இப்போது கறைபடிந்த மார்பிள் தரை, சுத்தமாக பளிச்சென்று இருக்கும்.

எண்ணை பிசுக்குளை நீக்க...

சொரசொரப்பான தளத்தில் படிந்துள்ள எண்ணை பிசுக்குகள் போன்ற கறையைப் போக்க ஐஸ்கட்டியுடன் மென்மையான ஸ்பாஞ்ச்சைக் கொண்டு சுத்தம் செய்யுங்கள். இது தரையைக் குளுமைப்படுத்துவதோடு மட்டுமின்றி `பளிச்' என பளபளக்கும். வீட்டின் தரையை எப்போதும் துடைத்துக் கொண்டே இருங்கள்...

மராட்டிய ரஜினியை செருப்பால் அடிக்கும் பெண்...


கூடு விட்டு கூடு பாய்தல்...


சிலர் தொடர்ந்து.. கூடு விட்டு கூடு பாய்தல் பற்றி கேட்டுக் கொண்டே இருப்பதால்.. அவர்களுக்காக சில தகவலை பதிவிடுகிறேன்...

முதலாவது, தன் உடலிலிருந்து தன் ஆத்மாவை பிரித்தல்...

இவ்வாறு தன் உடலிருந்து தன் ஆத்மாவை தானே பிரித்துக் கொண்டு எல்லா நாடுகளையும் சுற்றிவிட்டு மீண்டும் உடலில் வந்து புகுந்து கொள்ளலாம்.

ஆனால் ஒரு பிரச்சினை. அத்தகையவர் தன் உடலிலிருந்து ஆத்மாவை பிரித்துக் கொண்டு வெளியே சென்ற நேரத்தில் அவரது உடலை அவரது நிலையிலில்லாத மற்ற யாரும் தொடக்கூடாது.

அப்படித் தொட்டு விட்டால் அந்த ஆத்மா அந்த உடலுக்குள் மறுபடியும் நுழையாது.

அதனால் அத்தகைய வல்லமை உள்ளவர்கள் தனி அறையில் யாருடைய குறுக்கீடும் இல்லாத நிலையில் உள்தாழிட்டுக் கொண்டு இதை செய்வார்கள். அல்லது நம்பிக்கைக்குரிய சீடனை வைத்துக் கொள்வார்கள்.

அடுத்த படியாக ஒரு உடலிலிருந்து மற்றொரு உடலுக்குள் ஆத்மா புகுதல்...

மற்றொரு உடல் ஏற்கனவே உயிரற்ற நிலையில் இருந்தால், அந்த கூடுபுகும் கலையை கற்றவர் அந்த இறந்த கூடுக்குள் புகமுடியும். அதுவரையிலும் அவரது உடல் பாதுகாக்கப்பட வேண்டும்.

அடுத்தபடியாக, ஆத்மாவை பிரித்து கூடுவிட்டு கூடுபுகும் கலை கற்றறிந்த இரண்டு பேரும் மாறி மாறி அவர்கள் உடலில் கூடுமாற வேண்டும் என்றால், மூன்றாவது ஒரு குரு உதவியுடன் தான் அதை செய்ய முடியும்.

மூன்றாவது குரு ஒருவருடைய ஆத்மாவை பிரித்து தன் வசம் பத்திரமாக வைத்துக் கொண்டு, மற்றொருவருடைய ஆத்மாவையும் பிரித்து எடுத்து உடலை மாற்றி ஆத்மாவை கூடு செலுத்த வேண்டும்.

இரண்டுபேர் தன்னந்தனியாக ஆத்மாவை பிரிக்கும் இடங்களில் இறந்து போன சூனியக்காரர்கள் ஆத்மா போன்ற தீய சக்திகள் இருந்தால் கூடுபிரிந்த ஆத்மாக்களை தம் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துச் சென்று விடும்.

(எல்லா ஆலயங்களிலும் மனிதர்கள் மட்டுமல்லாது, பேய் என்று சொல்லப்படுகின்ற இறந்தவர்கள் ஆவி, பூதங்களும் வந்து தெய்வங்ளை வழிபடும்).

தன் உடலுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் வெளியிடங்களில் தன்னந்தனியாக ஆத்மா பிரிக்கப்பட்ட உடல் கிடந்தால், யாராவது பார்த்து என்ன இப்படி கிடக்கின்றாரே என்று கையை வைத்து புரட்டினாலே போச்சு... அவ்வளவு தான்.

அந்த உடலுக்குள் அவர்கள் ஆத்மா திரும்ப நுழையாது.

இப்போது இவர்கள் இருவருடைய ஆத்மாவும் திரிந்து கொண்டிருக்கும். தனக்கு பிடித்தவர்கள் மீது ஏறிக்கொள்ளும்...

கருத்துக்கள் வாழ்வியலுக்கானது, நகைப்போர் நகைத்து செல்ல, நாளை உங்கள் பொழப்பும் நகைப்புக்குரியதாகவே அமையும்...


அடிப்படைத் தமிழறிவைக் குழந்தைகளுக்கு எப்படி ஊட்டுவது?


எண்களோடு எண்ணங்களை இணைத்துக் கற்றுக் கொடுங்கள்.. அப்படியே நெஞ்சில் ஒட்டும்...

ஒன்று: வானம் - ஒன்று.

இரண்டு: ஆண், பெண் - சாதி இரண்டு.

மூன்று: இயல், இசை, நாடகம்- தமிழ் மூன்று.

நான்கு: வடக்கிலிருந்து வருவது வாடை,
தெற்கிலிருந்து வீசுவது தென்றல்,
கிழக்கிலிருந்து தீண்டுவது கொண்டல்,
மேற்கிலிருந்து வாட்டுவது கோடை
தமிழன் காற்றுக்கு வைத்த பெயர்
நான்கு.

ஐந்து: எழுத்து, சொல், பொருள்,
யாப்பு, அணி-இலக்கணங்கள் ஐந்து.

ஆறு: இனிப்பு, கைப்பு, புளிப்பு,
உறைப்பு, உவர்ப்பு, துவர்ப்பு-
சுவைகள் ஆறு.

ஏழு: குரல், துத்தம், கைக்கிளை,
உழை, இளி, விளரி, தாரம்-தமிழ்ப்
பண்கள் ஏழு.

எட்டு: நகை, அழுகை, இளிவரல்,
மருட்கை, அச்சம், பெருமிதம்,
உவகை, வெகுளி-மெய்ப்பாடுகள்
எட்டு.

ஒன்பது: கண்ணிரண்டு, காதிரண்டு,
நாசி இரண்டு, வாய் ஒன்று,
முன்னொன்று, பின்னொன்று-உடலி­
ன் வாசல்கள் ஒன்பது.

இப்படி எண்களுக்குப் பக்கத்தில்
எண்ணங்களைப் பொருத்தித்
தமிழியம் கற்றுக்கொடுக்க முடியுமா என்று கருதிப்பாருங்கள்.. தமிழாசிரியப் பெருமக்களே...

அரசுகளின் வன்முறையே அக்குமுறை...


அமெரிக்க இனங்கள்...


அமெரிக்கன் பேசுவது பலவகை ஆங்கிலம்...

இதன்படி ஜெர்மானிய-அமெரிக்கர் (German American) அமெரிக்காவின் மிகப்பெரிய இனம் ஆவர். மொத்த மக்கட்தொகையில் 15%..

இது ஆங்கில அமெரிக்கரை (8%) விட ஏறத்தாழ இருமடங்கு ஆகும்...

ஊடகமே மக்களின் முதல் எதிரி...


முதுமையை தடுக்கும் தண்ணீர்...


தண்ணியடிப்பவர்களுக்கு இது பொருந்தாது...

உலகிலேயே மிகவும் சிறப்பான ஒரு அழகு பொருள் என்று சொன்னால், அது தண்ணீர் தான். தண்ணீர் குடிப்பதால், உடலுக்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. அதிலும் தண்ணீரைக் குடிப்பதால், உடலில் உள்ள ஒவ்வொரு கலங்களும் நன்கு ஆரோக்கியமாக செயல்படும்.

இத்தகைய தண்ணீரை தினமும் தவறாமல் குடித்து வந்தால், எந்த ஒரு பக்க விளைவும் இல்லாமல், சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ளலாம். ஒரு தினமும் போதிய அளவில் தண்ணீர் பருகினால், ஆரோக்கியமான உடல், பொலிவான சருமம் மற்றும் பட்டுப்போன்ற கூந்தலைப் பெற முடியும்.

ஏனெனில் தண்ணீர் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதால், நச்சுக்களால் உடல் மட்டுமின்றி, சருமம் மற்றும் கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கிறது. சரி, இப்போது அந்த தண்ணீரினால் கிடைக்கும் சில அழகு நன்மைகளைப் பற்றி பார்ப்போமா..

நல்ல மாய்ஸ்சுரைசர்...

தினமும் தண்ணீரை போதுமான அளவில் குடித்து வந்தால், உடலில் வறட்சி ஏற்படுவதை தவிர்க்கலாம். மேலும் சருமமும் வறட்சியின்றி, மென்மையாக இருக்கும்.

சரும சுருக்கத்தை...

தடுக்கும் தண்ணீர் குடித்தால், இளமையிலேயே சருமத்தில் ஏற்படும் சுருக்கத்தை தவிர்க்கலாம்.

பொலிவான கண்கள்...

நீர்ச்சத்து உடலில் குறைவாக இருந்தால், கண்கள் பொலிவிழந்து காணப்படும். எனவே தண்ணீரை தினமும் போதிய அளவில் குடித்து வந்தால், நீர்ச்சத்து அதிகரித்து கண்கள் பளிச்சென்று காணப்படும். மேலும் தண்ணீரைக் கொண்டு பொலிவிழந்த கண்களை கழுவினாலும், கண்களில் உள்ள நச்சுக்கள் வெளியேறி கண்கள் அழகாக இருக்கும்.

நல்ல க்ளின்சிங்...

முகத்தை தண்ணீரால் கழுவினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, சருமத்தை புத்துணர்ச்சியுடனும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ளும்.

பருக்களைக் குறைக்கும்...

வெதுவெதுப்பான நீரில் ஒரு துணியை நனைத்து, அதனைக் கொண்டு முகத்தை துடைத்தால், சருமத்துளைகளில் தங்கியிருக்கும் அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, பிம்பிள் வருவதைத் தடுக்கும். குறிப்பாக இதனை தினமும் செய்து வர நல்ல மாற்றம் தெரியும்.

பொலிவான சருமம்...

தண்ணீர் பிணி நீக்கல் (therapy) எடுக்கும் போது, வெதுவெதுப்பான தண்ணீரைப் பயன்படுத்தினால், இறுதியில் குளிர்ந்த நீரை ஒரு முறை பயன்படுத்த வேண்டும்.

ஏனெனில் வெதுவெதுப்பான தண்ணீர் சருமத்துளைகளை திறக்கவும், குளிர்ந்த நீர் திறந்த சருமத்துளைகளை மூடவும் உதிவியாக இருக்கும். இதனால் தேவையற்ற மாசுக்கள் சருமத் துளைகளில் தங்குவதை தவிர்த்து, சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ளலாம்.

முதுமையை தடுக்கும்...

இளமையை தக்க வைக்க தண்ணீர் ஒரு சிறந்த மருந்து. ஏனெனில் இது சருமத்தின் நெகிழ்வுத் தன்மையை சீராக பராமரித்து, சுருக்கம், சரும வறட்சி போன்றவற்றை தடுத்து, எப்போதும் இளமையான தோற்றத்தை தக்க வைக்கும்.

அழகான உதடுகள்...

உதடுகளின் அழகைக் கெடுப்பதே வறட்சி தான். ஆகவே அத்தகைய வறட்சியை போக்க, தண்ணீர் அதிகம் பருகினால், போதிய நீர்ச்சத்து கிடைத்து, உதடுகள் எப்போதும் அழகாக வெடிப்புக்களின்றி இருக்கும்.

மென்மையான சருமம்...

சரும வறட்சி ஏற்பட்டால், சருமம் கடினமாகி மென்மையிழந்து காணப்படும். எனவே தண்ணீர் அதிகம் குடித்து வந்தால், வறட்சி நீங்கி, சருமம் மென்மையாக இருக்கும்.

எடை குறைய...

தண்ணீர் அதிகம் குடித்தால், சாப்பிடும் அளவு குறைந்து, செரிமான மண்டலம் சீராக இயங்கி, உடல் எடை குறைவிற்கு பெரிதும் துணையாக உள்ளது.

சரும தொற்றுகள்...

ச(ஷ)வரில் குளிக்கும் போது, சருமத்தில் தங்கியிருக்கும் நோய்த்தொற்றுகள் நீக்கப்படுவதோடு, சருமத் துளைகளில் தங்கியுள்ள நச்சுக்களும் வெளியேற்றப்பட்டு, உடலை நன்கு புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்கிறது.

உடல் முழுவதற்கும் நல்லது...

உடல் ஆரோக்கியத்தை சருமத்தை வைத்து சொல்லலாம். இத்தகைய சருமம் அழகாக இருக்க வேண்டுமெனில், தண்ணீரை அதிகம் பருக வேண்டும்.

உடல் வெப்பத்தை சீராக வைக்கும்...

தண்ணீரை தினமும் போதுமான அளவில் பருகினால், உடலின் வெப்பநிலையானது சீராக பராமரிக்கப்பட்டு, உடலை மற்ற பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும்.

உடல் துர்நாற்றத்தைப் போக்கும்...

குடிக்கும் நீரின் அளவை அதிகரித்தால், உடல் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம். எப்படியெனில் தண்ணீர் அதிகம் குடித்தால், உடலில் உள்ள நச்சுக்கள் சிறுநீர் வாயிலாக வெளியேறுவதால், அளவுக்கு அதிகமாக வியர்வை வெளியேறுவதைத் தவிர்க்கலாம்...

சட்டீஸ்கரில் வாக்கு பெட்டி வைத்திருக்கும் பாதுகாப்பு அறையில் லேப்டாப் உடன் இருந்த இருவர் கைது...


சொற்கள்...


சொற்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில்லை. அவை தான் உணர்ச்சிகளை உருவாக்குகின்றன.

நாம் ஒன்றைச் சொன்ன பின்னரே அவற்றை உணரத் தொடங்குகிறோம்.

அதைச் சொல்லி விட்டதாலேயே அதை நம்பவும் அதில் நீடிக்கவும் தொடங்குகிறோம்.

பெரும்பாலான பகைகளும் சினங்களும் சொல்லை விட சொல்லைத் தொடர்ந்து செல்லும் உள்ளங்களால் உருவாக்கப்படுபவை.

ஆன்மா குடியிருக்கும் வீட்டில் திண்ணையில் விடப்பட்ட கைக்குழந்தை தான் என்று நாக்கை சுக்ர ஸ்மிரிதி வகுக்கிறது.

நாக்கு நம் நலன்களைப் பேணத் தெரியாத பேதை.

சொற்களை அடுத்து எழுத்து...

ஓலை  எத்தனை மிதமாக எழுதப் பட்டிருந்தாலும் அது மாறாதது என்பதாலேயே ஒரு உறுதியைக் கொண்டிருக்கிறது.

அதை வாசிப்பவர் தன் கற்பனையை அதில் ஏற்றிக்கொள்ள இடமிருக்கிறது.

வாசிப்பவரின் மனமே அந்த சொற்களுக்குப் பொருள் அளிக்கிறது.

எழுதுபவரின் மனம் அல்ல.

ஒருவர் வன் குரலில் வாசித்துக் காட்டி அறைகூவலாக ஒலிக்கச் செய்ய முடியும்.

ஆகவே எந்தவிதமான மறுப்பையும் மறுதலிப்பையும், உணர்ச்சிகரமாக அதில் ஈடுபடாத ஒருவர் வழியாக மட்டுமே தெரிவிக்க வேண்டும் என்று நூல்கள் வகுக்கின்றன.

கேட்பவரின் முகத்தையும், சூழ்நிலையையும் கணித்து அவன் செய்தியை சொல்ல வேண்டும்.

கேட்பவன் உருவாக்கும் எதிர் வினைகளுக்கேற்ப தணிந்தும், நயந்தும், தேவை என்றால் மிஞ்சியும் தன் செய்தியை விரிவாக்கம் செய்ய வேண்டும்.

அதன் பின்னர் அச்செய்தியை உறுதிப்படுத்த ஓலையை அளிக்கலாம்...

தொப்பை குறைய எளிய பயிற்சி...


தொப்பை குறைய நிறைய பயிற்சிகள் இருந்தாலும் ஒரு சில குறிப்பிட்ட பயிற்சி உடனே பலன் தரக்கூடியவை. அவற்றில் இதுவும் மிக முக்கியமானது. இந்த பயிற்சி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

முதலில் விரிப்பில் கால்களை நேராக நீட்டி படுக்கவும்.

கைகளை மேல் நோக்கி வளைக்காமல் நேராக துக்கவும். பின்னர் மெதுவாக முன்னால் எழுந்து உட்காரவும். கைகள் முன்னோக்கி படத்தில் காட்டிய படி நீட்டியே இருக்க வேண்டும். கால்களை மடக்க கூடாது. இவ்வாறு இந்த பயிற்சியை ஆரம்பத்தில் 25 முறை செய்யவும்.

பின்னர் நன்கு பழகிய பின்னர் 30 முதல் 40 முறை செய்யலாம். எண்ணிக்கையின் அளவை அதிகரிக்க அதிகரிக்க பலன் விரைவில் கிடைப்பதை காணலாம்.

இந்த பயிற்சியை தொடர்ந்த 3 மாதம் செய்து வந்தால் தொப்பை படிப்படியாக குறைவதை காணலாம்...

நோய்களை எட்ட விரட்டும் எருக்கு செடி...


நோய்களை எட்ட விரட்டும் எருக்கு செடியின் மருத்துவ குணங்களைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

12 ஆண்டுகள் நீரில்லாமல் வாழும்...

எருக்கு, வளமற்ற நிலங்கள், பராமரிக்கப்படாத வயல்கள், சாலையோரங்கள், சுடுகாடு… என எங்கும் விளையும். பன்னிரண்டு ஆண்டுகள் வரை மழையே இல்லாவிட்டாலும்கூட உயிர்வாழும் ஆற்றல் கொண்டது. அகன்ற எதிரடுக்கில் அமைந்த இலைகளைக் கொண்ட, நேராக வளரும் பாலுள்ள குத்துச்செடி. ஒழுங்கற்ற அரைக்கோள வடிவில் உள்ள இதன் காய்க்குள் உள்ள பஞ்சில் விதைகள் இருக்கும்.

முற்றிய காய்கள் வெடித்து காற்றில் பறக்கும்போது, பஞ்சுகள் ஆங்காங்கு விழுந்து மட்கி… அதனுள் உள்ள விதைகள் மண்ணில் பதிந்து முளைத்து செடியாகும். மனிதர்கள், பறவைகள், விலங்குகள் என யாருடைய தயவும் இல்லாமல் தன் இனத்தை தானே உற்பத்தி செய்து கொள்கிறது, எருக்கு.

இத்தனை சிறப்பு வாய்ந்த எருக்கை நாம் கொண்டாட தவறிவிட்டோம். விநாயகர் சதுர்த்தி தினத்தைத் தவிர, மற்ற நாட்களில் எருக்கின் அருகேகூட செல்லத் தயங்குகிறோம். உண்மையில் நம்முடைய பலவிதமான நோய்களுக்கான தீர்வை தன்னுள் வைத்துக் கொண்டிருக்கும் இந்த எளிய செடியின் மருத்துவ குணங்களைத் தெரிந்துக் கொண்டால், ஆச்சரியத்தில் விழிகளை விரிப்பீர்கள்.

எருக்கின் இலை, பூ, பட்டை, வேர் என அனைத்திலும் மருத்துவக் குணங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆடு, மாடு மேய்ப்பவர்கள் காலில் முள் தைத்தால், எருக்கு இலையை உடைத்து அதன் பாலை முள் தைத்த இடத்தில் பூசிக்கொள்வார்கள். இதனால் வலி குறைவதுடன், அந்த இடம் பழுத்து, முள் வெளியே வந்துவிடும். இதை இன்றைக்கும் கிராமங்களில் பார்க்கலாம்.

அதனால்தான் ‘ஏழைக்கு வைத்தியம் எருக்கு’ என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். தென்னைநார்க் கயிறு, ட்வைய்ன் நூல், நைலான் கயிறு, இரும்பு ரோப் என கயிறுகளின் பல பரிமாணங்களை இன்றைக்குப் பயன்படுத்துகிறோம். ஆனால், ஆதிமனிதனுக்கு கயிறாகப் பயன்பட்டவை, எருக்கு நார்களும், சில கொடி வகைகளும்தான். எருக்கு நார் மிகவும் வலுவானது. வில்லின் நாண், மீன் வலை, முருக்கு நூல் என எருக்கு நாரை பலவிதமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள், பண்டைத் தமிழர்கள். இலவம்பஞ்சு தலையணை கிடைக்காதவர்களுக்கு, எருக்குக் காயிலுள்ள பஞ்சுதான் தலையணையாக இருந்திருக்கிறது.

விஷக்கடிக்கு மருந்து...

இதன் இலை, விஷமுறிவுக்குப் பயன்படுகிறது. பாம்பு கடித்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சையாக எருக்கு இலையை அரைத்து… புன்னைக் காய் அளவு (கோலிகுண்டு அளவு) உள்ளுக்குக் கொடுத்தால், விஷம் இறங்கும். அடுத்து, மருத்துவரிடம் கொண்டு செல்லலாம். தேள் கடித்தால், இதே இலையை அரைத்து சுண்டைக்காய் அளவு கொடுத்து, கடிவாயிலும் வைத்து கட்டினால் விஷம் இறங்கும். மூன்று துளி எருக்கன் இலைச் சாறு, பத்து துளி தேன் கலந்து கொடுத்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியே வந்துவிடும்.

குதிகால் வலி இருந்தால், சூடான செங்கல் மீது, பழுத்த எருக்கு இலையை வைத்து அதன்மீது குதிகாலை வைத்து வைத்து எடுத்தால், வலி குறையும். எருக்கு இலையை நெருப்பில் வாட்டி பொறுக்கும் சூட்டில், உடம்பில் உள்ள கட்டிகள் மீது வைத்து கட்டினால், கட்டிகள் உடையும். இலையை எரித்து, புகையை வாய்வழியாக சுவாசித்தால், மார்பு சளி வெளியேறும்.

ஆஸ்துமாவை விரட்டும் வெள்ளெருக்கு...

எருக்கன் பூவைக் காய வைத்துப் பொடியாக்கிக் கொள்ள வேண்டும். இந்தப் பொடியில் 200 கிராம் எடுத்து, சிறிது சர்க்கரை சேர்த்து இரண்டு வேளை சாப் பிட்டு வந்தால், பால்வினை நோய், தொழு நோய் குணமாகும். வேரை கரியாக்கி, விளக்கெண்ணெய் கலந்து மேற்பூச்சாகப் பயன்படுத்தினால் கரப்பான், பால்வினை நோய்ப் புண்கள், ஆறாத காயங்கள் ஆறும். இதன் பால்… பொடுகு, படை, மூட்டுவலி, மூட்டுவீக்கம், மூலநோய்க்கு சிறந்த நிவாரணி என்கிறது சித்த மருத்துவம்.

கத்திரிப்பூ நிறப் பூக்களைக் கொண்ட எருக்குதான் பெரும்பாலான இடங்களில் இருக்கும். ஆனால், வெள்ளை நிறப் பூக்களை உடைய எருக்கு அரிதாக காணப்படும். இதை வெள்ளெருக்கு என்பார்கள். இதுதான் பிள்ளையாருக்கு உகந்ததாக கருதப்படுகிறது. இந்த எருக்கின் வேர்களில் பிள்ளையார் உருவங்களைச் செதுக்கி வழிபடுவார்கள். இந்த வெள்ளை எருக்கின் பூக்கள் ஆஸ்துமாவை விரட்டும் அருமருந்து.

வெள்ளெருக்குப் பூக்களின் நடுநரம்பை நீக்கிவிட்டு, இதழ்களை மட்டும் எடுத்துக் கொள்ளவேண்டும். இதற்கு சம அளவு மிளகு, கிராம்பு சேர்த்து மை போல அரைத்து, மிளகு அளவுக்கான மாத்திரைகளாக உருட்டி, நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். மூச்சிரைப்பு அதிகமாகும்போது, இதில் ஒரு உருண்டையை வாயில் போட்டு நீர் அருந்தினால், உடனே இரைப்பு தணியும்.

10கிராம் இஞ்சி, 3 வெள்ளெருக்குப் பூக்கள், 6 மிளகு ஆகியவற்றை நசுக்கி, அரை லிட்டர் தண்ணீரில் போட்டு, கால் லிட்டராகும் வரை சுண்டக் காய்ச்சி தினமும் இரண்டுவேளை குடித்து வந்தால், இரைப்பு குறையும்  என்கிறார்கள், சித்த மருத்துவர்கள்...

கார்ப்பரேட் பொருட்களை தவிர்க்க முயலுங்கள்...


வழிபாடுகள்...


எந்த ஒரு வழிபாடுகளும் மனிதர்களின் சுயநலத்திற்காக மனிதர்களால்  மட்டுமே உருவாக்க பட்டவை தான்...

இயற்கையை இயற்கை தன்மையில் விடாமல் மனிதர்கள் தேவைக்கு அதை என்று மாற்ற நினைத்தார்களோ அன்றே மனிதர்கள் இயற்கை தன்மையை இழந்து விட்டார்கள்...

1800 வாக்கில் தமிழர்களின் தெற்கெல்லை...


1799 இல் பிரிட்டிஷ் ஆளுநர் நோக்ஸ் என்பவரது உதவியாளரான பேராசிரியர் கிளைக்கோர்ன் எனும் ஸ்காட்லாந்து இனத்தவர் ஒரு குறிப்பு எழுதியுள்ளார்.
அது வருமாறு,

இலங்கைத் தீவானது மிகப் பழங்காலந்தொட்டே இரு வெவ்வேறு தேசிய இனங்களால் உரிமை கொண்டாடப்பட்டது.

இத்தீவின் நடுப்பகுதியும் தெற்குப் பகுதியும் மற்றும் வளவை ஆற்றிலிருந்து சிலாபம் ஆறு வரையுமுள்ள மேற்கு பகுதியும் சிங்கள நாட்டினத்தால் ஆட்சி செய்யப்பட்ட பகுதிகளாகும்.

இத்தீவின் வடக்கு கிழக்கு நிலப்பகுதிகள் தமிழரால் ஆட்சி செய்யப்பட்ட பகுதிகளாகும்.

இரு நாட்டினங்களும் சமயத்தாலும், மொழியாலும் வாழ்க்கைப் பண்பாலும் முற்றிலும் வேறுபட்டவை.

தமிழர் இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்து புலம்பெயர்ந்தனர் போலும்.
ஏனெனில் அக்கரையில் உள்ள அதே மொழி அதே பழக்க வழக்கங்கள் அதே சமயம் என்பனவற்றைக் கொண்டுள்ளனர்.

இக்குறிப்பில் சிலாபம் ஆறு எல்லையாகக் குறிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு மத்திப் பகுதியும் தென் பகுதியும் சிங்களர் வாழ்விடமாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் தெற்கே உள்ள வளவி ஆறு மேற்கில் இருப்பதாக தவறாக உள்ளது.

இவர் உதவியாளராக இருந்த முதல் பிரிட்டிஷ் ஆளுநர்  நோக்ஸ் (knox) எழுதிய நூல் ஒன்று உள்ளது.

கண்டி சிறையிலிருந்து தப்பித்து மன்னார் நோக்கி செல்லும்போது மல்வத் (அருவி) ஆற்றைக் கடந்து அனுராதபுரம் வந்தடைந்தபோது அங்கே யாருக்குமே சிங்களம் தெரியவில்லை என்று அந்நூலில் எழுதியுள்ளார்.

ஆற்றின் பெயர் சிங்களத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

இதிலிருந்து அருவியாறு அனுராதபுரம் அருகே வரும் இடம் வரை சிங்களவர் வாழ்ந்ததாக கொள்ளலாம்.

அலெக்சாண்டர் ஜான்ஸ்டன் (Alexander johnston) 1806 இல் இலங்கை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர்.

இவர் 1807 நம்பர் 4 இல் எழுதிய கையெழுத்து குறிப்பு ஒன்று கொழும்பு அருங்காட்சியம் பாதுகாத்து உள்ளது.
அது வருமாறு,

வடமேற்கில் உள்ள புத்தளம் முதல் தென்கிழக்கே உள்ள குமணை ஆறு வரை உள்ள நிலப்பகுதி வரை தமிழரின் குடியிருப்பு ஆகும்.

மேற்கே சிலாபம் ஆற்றிலிருந்து தென்கிழக்கே உள்ள குமனை ஆறு வரை உள்ள நிலப்பகுதி சிங்களவரின் குடியிருப்பு ஆகும்.

இதிலும் சிலாபம் ஆறு எல்லையாகக் குறிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு எல்லையாக குமணை ஆறு குறிக்கப்பட்டுள்ளது.

இதுவே சரியான வரையறையாகும்.

குமனையாறு கடலில் கலக்கும் இதுவே தமிழரின் தென்கோடி எல்லை.

மேற்கண்ட விபரங்கள் ஜே.ஆர்.சின்னத்தம்பி எழுதி 1977 இல் சென்னையில் அச்சிட்டு வெளியிடப்பட்ட "தமிழ் ஈழம் நாட்டு எல்லைகள்" எனும் நூலில் இருந்து எடுக்கப்பட்டன.

நான் ஏற்கனவே வெளியிட்ட தமிழர்நாடு இறுதிசெய்யப்பட்ட வரைபடம் இந்த எல்லைகளையே கொண்டிருந்தது.

புலிகள் பயன்படுத்திய ஈழ வரைபடம் தவறானது ஆகும்.

அவ்வரைபடத்தில் தெற்மேற்கு எல்லை சிலாவ ஆற்றையும் தாண்டி நீள்கிறது.

தவிர அவ்வரைபடத்தில் அனுராதபுரம் சேர்க்கப்படவும் இல்லை.

புலிகளின் வரைபடத்தில் வடக்கு கிழக்கு இணைப்பு மிக குறுகிய பகுதியாக உள்ளது.

புத்தளம் மாவனடம் வடக்குடன் இணையும் பகுதியும் குறுகலாக உள்ளது.

கிழக்கு பகுதியும் ஒடுங்கலாக வரையப்பட்டு இருந்தது.

ஆனால் புத்தளத்துக்கு வடக்கிலும்
கிழக்கு மாவட்டங்களிலும் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதி அவர்களது வரைபடத்தில் உள்ளதை விடவும் பெரியதாகவும் அகலமாகவும் இருந்தது.

பழ.நெடுமாறன் எழுதிய "பிரபாகரன் - தமிழர் எழுச்சி வடிவம்" புத்தகத்தில் இருந்த புலிகள் ஆண்ட பகுதி வரைபடம் மூலமாக இது அறியக்கூடியதாக இருக்கிறது.

எனவே 1800 களில் எழுதப்பட்ட குறிப்புகளின் படி 1832 இல் வெளியிடப்பட்ட ஒரு வரைபடத்தில் எல்லைகளைக் குறித்து அன்றைய எல்லையை வரைந்துள்ளேன்...

தடைச்செய்... தடைச்செய்.. ஸ்டெர்லைட் ஆலையை தடைச்செய்...


அகத்தியப் பெருமான் அருள்வாக்கு...


அகத்தியப் பெருமான் உலகமக்கள் மீது இரக்கம் கொண்டருளிய அருள்வாக்கு...

மகான் அகத்தியர் யோக சூட்சும நூல்...

இவ்வுலகினில் தோன்றியதில் எண்ணற்றோர் தம்மை தோற்றியது எது? தோற்றியது யார்? எதனால் தோன்றினோம்? நமது நிலை என்ன? இனிவரும் நிலை என்ன? என்றெல்லாம் சிந்தித்து தமக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று உள்ளதென்றும் அதுவே நம்மை தோற்றி, காத்து, வளர்த்து, இயக்கி இறுதியில் அழித்தும் விடுவதை கண்டுபிடித்தார்கள். முயன்ற பல கோடி பேர்களில் ஒரு சிறு பகுதியினரே அவர்களில் கடவுள்தான் நம்மை தோற்றுவித்தார் என்றும் அந்த கடவுள்தான் நம்மை இயக்குகிறான் என்றும் நம்பினாலும் கடவுளானவரின் தன்மை என்ன? அவரின் வெளிப்பாடு எப்படி இருக்கும்? அவரது செயல்கள் எதுஎது? என்றும் அவனை காண்பது எப்படி? என்றெல்லாம் தொடர்ந்து முயன்றனர். ஒரு சிலர் அதன் முடிவாக கடவுள் நிலமாக உள்ளான்.

நிலமே கடவுள் என்றும் சிலர் கடவுள் நீராய் இருந்து உயிர்களின் ஆதாரமாக உள்ளான். நீர்தான் கடவுள் என்றும், ஒரு சிலர் நெருப்பை கடவுள் என்றும், ஒரு சிலர் கண்ணுக்கு புலனகாததும், உயிர்வாழ ஆதாரமாக உள்ள காற்றை கடவுளென்றும், ஒரு சிலர் இவற்றையெல்லாம் கடந்த வெட்ட வெளியான ஆகாயமே கடவுள் என்றும் எண்ணி அவரவர் முடிவுகளை பின்பற்றி நடந்திட ஆரம்பித்தனர்.

அதில் ஒரு சிலர் மூலிகைகள் பற்றி அறிந்தும் பயிற்சிகள் செய்தும் சிலசில விதமான முன்னேற்றங்களை கண்டனர். ஆனால் யாரொருவராலும் கடவுளின் தன்மையைப் பற்றியோ, கடவுளைப்பற்றியோ அறியவோ, நெருங்கவோ முடியவில்லை.

ஆனால் இயற்கையாகவே சிறப்பறிவு பெற்ற ஒருவன் ஜீவதயவின் பிரதிநிதியாக இவ்வுலகினில் தோன்றிய ஒருவனது சிந்தனை மட்டுமே மிக வித்தியாசமாக கடவுள் யார்? அவர் எங்கே இருக்கிறார்? அவர் என்ன செய்கின்றார்? அவர்க்கும் நமக்கும் என்ன தொடர்பு? ஏன் பிறக்கின்றோம்? ஏன் இறக்கின்றோம்? ஏன் வாழ்கின்றோம்? இவற்றிற்கெல்லாம் காரணம் என்ன?

இவற்றை நம்மால் புரிந்து கொள்ள முடியுமா? இதிலிருந்து நாம் விடுபடமுடியுமா? என்றெல்லாம் ஆராய்ந்து ஆராய்ந்து பல கோடி வருடங்களாக பாடுபட்டு பாடுபட்டு வந்தனன். ஒவ்வொரு ஜென்மத்திலும் அவன் ஒரு சில கேள்விகளுக்கு விடை கண்டுபிடித்தான். ஒரு கேள்வியின் விடை கிடைக்க ஒரு ஒரு ஜென்மமே தேவைப்பட்டது. இப்படி பல்லாயிரம் கேள்விகளுக்கு விடை கிடைத்தது, பல்லாயிரம் ஜென்மங்கள் கடந்தது. ஒரு ஜென்மத்திலே இந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்டங்களை தோற்றுவித்த இயற்கைதான் நம்மை தோற்றுவித்தது என்றும், அந்த இயற்கையே மாபெரும் சக்தியென்றும், அந்த இயற்கையே நமது தேகமாகவும் உருமாறி நிற்கின்றதையும் அறிந்து அந்த இயற்கையின் அதி சூட்சா சூட்சுமங்களும் நுட்பாதி நுட்ப இரகசிய இயக்கங்களும் உள்ளதையும் யாருக்கும் புரியாத நுட்பமான இந்த இயற்கையின் இயக்கமே கடவுளாகவும் கடவுள் சக்தியாகவும் உள்ளதை பலகோடி வருட ஆராய்ச்சியின் முடிவாக உணர்ந்தனர்.

உணர்ந்த அவன் இயற்கையின் விநோதங்களை விரிவாக ஆராய்ந்தனன். இயற்கையே எல்லா உயிர்களாகவும் எங்கும் நீக்கமற உரு மாறிமாறி பலவித தோற்றமும் பல்வித தேகமும் பலபல விதமான செயல்களையும் கற்பனைக்கும் எட்டாத வகையினிலே ஒரு சீரான கதியிலே இயங்குவதை கண்டான்.

இப்படி இயங்கும் இயற்கை எல்லா உயிர்களையும் தோற்றுவிக்கிறது, இயக்குகிறது, வளர்க்கிறது பின் ஒரு கால பரியந்தத்தில் அழிக்கின்றது. இவ்வாறு தோன்றி அழிந்து தோன்றும் இந்த சக்கர சுழற்சி கதி இயக்கத்திலிருந்து விடுபட்டால் இயற்கையை வென்று இயற்கைக்கு அப்பாற்பட்ட பரிணாம வளர்ச்சியினின்று விடுபட்ட என்றும் அழிவில்லாத நிலையையும் அடையலாம் என்பதையும் உணர்ந்தான்.

மூச்சுக்காற்று இயக்கம்தான் எல்லா உயிர்களின் இயக்கத்திற்கும் காரணமாக இருக்கின்றது என்ற மாபெரும் இரகசியத்தை கண்டுபிடித்தான். அந்த மூச்சுக்காற்று இயக்கமே உயிர்களின் வளர்ச்சிக்கு அவசியமான உணவை உட்கொள்ள ஆதாரமான பசிக்கு காரணமாக அமைகின்றது என்பதை அறிந்தும் அந்த பசியே நம்மை காக்கும் தாயாகவும், பசியின் மூலம் உணவை உண்ண செய்து உணவின் வழி சத்துகளை உடம்பினுள் சாரச்செய்து உடல் வளர்ச்சிக்கும், மலர்ச்சிக்கும் காரணமாகி அதுவே அந்த உடலின் தளர்ச்சிக்கும் காரணமாய் அமைந்து இறுதியில் வீழ்ச்சிக்கும் காரணமாக அமைந்துள்ளதையும் கண்டுபிடித்தான். இவற்றிற்கெல்லாம் காரணமான உயிர் இயக்கமும் உடல் இயக்கமும் அறிந்தான். உயிர் இயக்கமானது அந்தந்த உயிர்களின் உடல்சார்ந்த மூச்சுக்காற்று இயக்கத்தோடு பின்னி பிணைந்திருப்பதையும் கண்டுபிடித்தான். உயிர் என்றும் அழியாததையும் உடல் அழிந்து அழிந்து தோன்றுவதையும் கண்டுபிடித்தான்.

மூச்சுக்காற்றின் இயக்கமே உயிர் இயக்கமாகவும், அந்த மூச்சுக்காற்று இயக்கமே உடல் இயக்கமாகவும் இருக்கும் வரை அது இயற்கைக்கு கட்டுப்படுகிறது என்பதையும் உயிர் இயக்க மூச்சுக்காற்றின் இயக்கத்தையும், உடல் இயக்க மூச்சுக்காற்றின் இயக்கத்தையும் ஒருவிதமான வேதியியல் செய்து இணைத்துவிட்டால் என்றும் அழியாத உயிரின் தன்மையை அழியும் உடம்பும் பெறுவதையும் கண்டுபிடித்தான்.

இதை செயல்படுத்திட எல்லாம்வல்ல இயற்கை மனிததேகத்தில்தான் அந்த வேதியியல் செய்து வெற்றி பெறும் உடல் அமைப்பை வைத்துள்ளதையும் கண்டுபிடித்தான். உடலில் உடல்காற்று இடகலையாகவும், உயிர்காற்று வலகலையாகவும் மூச்சுக்காற்று இயங்குவதையும் இதற்கு இரண்டையும் சாராமல் வேறெந்த உயிர்களின் உடலிலும் காணப்படாத மனிததேகத்தில் மட்டுமே காணப்படுகின்ற ஒரு தனி நாடியான பிரம்மநாடி என்றும் சுழிமுனை என்றும் சொல்லப்பட்ட புருவமத்தியாகிய ஒரு தனி அமைப்பின் முன் செலுத்தினால் இடதுகலையும் வலதுகலையும் ஒன்று சேர்ந்து சுழிமுனையாகிய பிரம்ம நாடியில் ஒடுங்கி மரணமிலாப் பெருவாழ்வை அளித்து நம்மை பிறப்பு இறப்பற்ற நிலைக்கு கொண்டு சென்று அழியாத உயிரும், அழியும் உடல் வினைகாரணமாக ஏற்பட்ட மாசு நீங்கநீங்க அந்த உடல் தூய்மையான ஒளிபொருந்திய தேகமாக மாறி உடலும் உயிரும் இரண்டறக் கலந்து விடுவதையும் கண்டான் ஆதி ஞானத்தலைவன். அவனே சொல்லொண்ணா பேராற்றல் கொண்ட முதுபெரும் ஞானத்தலைவன் முருகப்பெருமான்.

இப்படி உடலையும் உயிரையும் சேர்க்கின்றதான மிகப்பெரும் நுட்பமான வேதியியல் செயல்முறைகளும், பயிற்சிகளும், உணவுக்கட்டுப்பாடும், உணவுமுறைகளும், மூலிகைகளும், உடல் தத்துவமும், உயிர் தத்துவங்களும் சேர்ந்து பின்னிப் பிணைந்துள்ள ஒரு அற்புதமான கலையே யோகக்கலையாகும். இந்த யோகக்கலையின் தலைவன் முருகப்பெருமானே. முருகப்பெருமான் தயவு இல்லையேல் யோகத்தின் ஒரு சிறு துளிகூட நமக்கு புரியாது. ஆனால் ஏதோ நாம் கற்றுக் கொண்டதாக எண்ணி தவறான பயிற்சிகளை செய்து இறுதியில் மாண்டுபோய்விடுவோம்.

ஆதலினால் யோகத்தை அறிய முற்படும் முன்னர் முதலில் ஆதிஞான யோகத்தலைவன் முருகப்பெருமானார் ஆசியினை முழுமையாக பெற வேண்டும் என்று உணர்ந்து முருகனது திருவருளைப் பெற உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சைவநெறியில் நின்று தூய சைவ உணவை மேற்கொண்டு முடிந்த அளவிற்கு மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்து ஜீவதயவை பெருக்கி ஜீவதயவின் கடவுளாம் முருகனது திருமந்திரமான “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்ற மூலமந்திரத்தை காலை 10 நிமிடமும் மாலை 10 நிமிடமும் முடிந்தால் இரவு 10 நிமிடமும் பூஜை செய்து மந்திர உருஜெபித்து வரவர ஜீவதயவு பெருகி முருகன் அருள்கூடி யோகத்தை அறிந்து கடைத்தேறலாம்.

இப்படிப்பட்ட யோகமெனும் ஞானத்தின் பகுதியாக ஞானமடைவதற்கு உறுதுணையாக உள்ளதான யோகப்பயிற்சிகளை எம்பெருமான் முருகப்பெருமானது அருளாசிகளை முழுமையாக பெற்று சித்துக்களையும் பலவிதமாய் பெற்று ஜீவ முக்திகளாக ஆகினார்கள் பலகோடி ஞானிகள்.

அவ்விதமே பொல்லா மாமாயை சூழ் கலியுகத்திலும் யோகத்தினை உறுதியுடன் கடைப்பிடித்து பல கடினமான யோக சாதனங்களை செய்து வெற்றி பெற்று மேன்மையான ஞானமதனை பெற்ற உயர் ஞானி எம்பெருமானின் அவதாரமே! முருகனே! அவதாரமாக வந்து உதித்திட்ட வள்ளல் ஞானி ஆறுமுக அவதார அரங்கமகா தேசிக ஞானியே தாம் யோகநிலையினில் அமர்ந்துமே உயர்வான தர்மத்தை செய்து உலகோரையெல்லாம் காத்து இரட்சிக்கின்றாய்.

ஆதலினாலே உமது அளவிலா தர்மத்தினைக் கண்டுமே வியந்து யோகபலம் பெற்றுயர்ந்த ஞானிகள் நவகோடி சித்தர்களாகிய நாங்களெல்லாம் உம்பால் கருணை மிகக் கொண்டுமே உம்மை சார்ந்து அருளி நிற்கின்றோம். எங்கள் அனைவருக்கும் மூலகுருநாதனான ஆசானே! முருகனின் அவதாரமே! அருள்மிகு ஆறுமுக அரங்கமகாதேசிக ஞானயோகியே! உமது புகழ் சிறக்கவே சொல்லற்கரிய உமது புகழை உலகெலாம் அறிந்திடவே ஞானிகள் நாங்களெல்லாம் யோக சூட்சும நூல்தனையே உரைத்து நிற்க இருக்கின்றோம். அதன் வழியே உமது புகழை உலகம் அறிந்திடவே அகத்தியர் யானும் யோக சூட்சும நூல்தனையே உரைத்து நிற்கின்றேன் என்கிறார் மகான் அகத்தியர்.

உலகோரெல்லாம் பயனடையவும், கடமைகள் சூழ்ந்திட்ட இல்லறத்தார்களும் கடைத்தேறிடவே அவர்களும் கடைப்பிடித்திடவே எளிமையான முறையினிலே நெறி அமைத்து அவர்களெல்லாம் யாகங்களும், யோகங்களும், ஞான பயிற்சிகள் என்றும் கடினமான பயிற்சிகளும், சடங்குகளும் செய்யாமலேயே நல்வழிதனை அடைந்திடவே அருளுகின்றேன் யோக சூட்சும நூல்தனிலே.

பிரபஞ்சத்தின் சக்தி மிக்க ஆற்றலாம், பிரபஞ்ச பேராற்றலை தன்னுள் அடக்கிய யோக சக்திதனை பலபிறவிகளில் பலவாறாய் செய்து அருளையும், ஆசிகளையும் எல்லா சக்திகளிடத்தும் பெற்று அருளாற்றலாய் மாபெரும் ஆற்றல் கொண்டு இப்பிறப்பினிலே முருகப்பெருமானின் அவதாரமாகவே தோன்றிட்டார் அருள்மிகு ஆறுமுக அரங்கமகாதேசிக ஞானயோகி. முருகனின் அவதாரமான அரங்கன் இன்று இக்கலியுகத்தினிலே முருகனின் சக்தி வடிவமாக இயங்கி மக்களுக்கெல்லாம் அருள் செய்து வருகின்றார். ஆதலின் உலகமக்களே நீங்களெல்லாம் நலம் பெற்று உயர்ஞான வாழ்வினை வாழ்ந்திடவே ஞானயோகி அரங்கமகா தேசிகனார் வாழும் இடமான துறையூரிலே அமைந்திட்ட ஏழாம் படைவீடாம் ஓங்காரக்குடிலினை நாடிச்சென்று பயபக்தியுடன் வணங்கிட்டாலே போதும், வணங்கி வழிபட்டோர் தமக்கு வல்லமைகள் கூடுமப்பா.

இன்றைய காலத்திலே கலியுகத்திலே கலியுக யுகமாற்ற தலைவனாக பொறுப்பேற்றுமே இன்றைய நாளிலே இவ்வுலகினிலே வாழும் ஒரே ஒரு ஞானயோகியாக மக்கள் பொருட்டு தன்னலம் பாராது மக்கள் நலனே தனது நலனாகக் கொண்டு தன்னிகரற்று விளங்கி நிற்கின்ற தயாநிதி தனிப்பெருங் கருணைக் கடவுளாக விளங்கி நிற்கின்ற மாட்சிமை பொருந்திய ஆறுமுக அரங்கமகா தேசிகர் தம்மை கண்டு வணங்கி அவர்தம் திருவடி பணிந்து பயபக்தி விசுவாசத்துடன் நடந்து பணிந்து வேண்டி தீட்சை உபதேசம் பெற்றிட வேண்டும்.

அரங்க தீட்சை பெற்றும் அரங்கர் உபதேசித்த வழிதனிலே மீறாது நடந்து தினம்தினம் மறவாமல் அரங்கன் அருளிய ஞானியர் பூசை முறைகளிலே பற்று கொண்டு ஞானியர்களை தவறாது தொடர்ந்து வழிபட்டு வருவதுடன், அவரவர் இல்லத்தினிலே தினம்தினம் தவறாமல் சரவண ஜோதிதனை ஏற்றி “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்று மூலக்கடவுளின் மூலமந்திரத்தை மந்திர ஜெபமாக ஜெபித்து உருஏற்றியும் வருவதோடு அவரவரால் முடிந்த அளவிற்கு பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்தும் வாழ்விலே ஒருபோதும் உயிர்க்கொலை செய்து புலால் உண்ணாதிருப்பேன் என்ற வைராக்கியம் மேற்கொண்டு சுத்த சைவ உணவை மேற்கொண்டு தவறாது கடைப்பிடித்து வருகையுற்றும், வருகின்றவர்களுக்கு உலகமகா ஞானயோகி அருள்மிகு ஆறுமுக அரங்கமகாதேசிக ஞானயோகியின் ஆற்றல் கிடைக்கப்பெற்று அரங்கனின் ஆற்றல் தூயநெறி நின்றோர் தம்மை தொடர்ந்து வலம் வரும்.

அவர்களுக்கு உண்டான தக்க அருள்பலத்தையும், ஞான பலத்தையும், யோக பலத்தையும், மன பலத்தையும், புண்ணிய பலத்தையும் தந்து குருவாம் அரங்கனருள் ஆற்றல் கூடி நின்று யோகம் கற்றதினால் வருகின்ற யோகசக்திகளுக்கு மேலான குறைவற்ற சக்தி நிலைதனை தரும்.

உலக மக்களே நீடித்த வாழ்வு பெறவும், நிலையாமையாகிய பிறந்து இறந்து மறுபடியும் பிறக்கின்ற நிலையற்ற வாழ்வை நீக்கி பிழையற்ற வகையிலே அருள் பெற்று என்றும் மாறா இளமையும், மரணமற்றதும், நிலையான வாழ்வாகிய மரணமிலாப் பெருவாழ்வு எனும் பெறுதற்கரிய பெரும்பேற்றை காண வேண்டுமாயின் இவ்வுலகின் மிகப்பெரும் யோக ஞானி அருள்மிகு ஆறுமுக அரங்கமகாதேசிக ஞானயோகியின் வழிதனை கடைப்பிடித்து கடைத்தேற்றம் பெற்று உயருங்கள் என தமது யோக சூட்சும நூல் மூலம் கூறுகிறார் மகான் அகத்தியர் பெருமான்...

வன்முறையாளனை உருவாக்குவது அரசே...


போர் வெறியில் வடகொரியா : அமெரிக்காவை காலி செய்ய ஒரு எச்-பாம் போதும்...


கடந்த பிப்ரவரி மாதம் 7-ஆம் தேதி சரியாக காலை 8.34 மணிக்கு, வடகொரியா மர்மமான ஒரு செயற்கைகோளை விண்ணில் ஏவி, அதை வெற்றிகரமாக பூமியின் சுற்றுவட்டப்பாதைக்குள் செலுத்தியது.

வடகொரியாவின் இந்த மர்மமான செயற்கைகோள் ஆனது ஒரு 'லாங் ரேன்ஜ் மிசைல் ப்ராஜக்ட் (Long Range Missile Project) அதாவது ஒரு நீண்ட தூர ஏவுகணைத் திட்டம் என்று பெரும்பாலான உலக நாடுகள் குற்றம்சாட்ட, மறுபக்கம் வடகொரியா அதை முற்றிலுமாக மறுத்தது.

ரஷ்யாவால் மட்டுமே இப்படியெல்லாம் பிளான் பண்ண முடியும்..

விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் ஆனது, பூமியின் அளவீடு மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் பொருத்தப்பட்ட, மூன்று மாதங்களுக்கு முன்பு விண்ணில் செலுத்தப்பட்ட வாங்மியாங்சாங்- 4 என்ற செயற்கைகோளின் (Kwangmyongsong-4) புதிய மாடல் செயற்கைக்கோள் என்று விளக்கம் அளித்தது வடகொரியா.

தற்போது அதே வடகொரியா பகிரங்கமான மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளதில் இருந்து அதன் முகமூடி கிழிந்துள்ளது.

ஹைட்ரஜன் வெடிகுண்டு...

நியூயார்க் நகரத்தின் இதயமான மன்ஹாட்டனை துவம்சம் செய்ய, பல்லிஸ்டிக் மிசைல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் செலுத்தப்படும் எங்களின் ஒரு எச்-பாம்ப் (அதாவது ஹைட்ரஜன் வெடிகுண்டு) போதுமானது என்று மிரட்டல் விடுத்துள்ளது வடகொரியா.

சோவியத் ஒன்றியம்...

'எங்கள் ஹைட்ரஜன் குண்டு, சோவியத் ஒன்றியம் உருவாக்கிய ஹைட்ரஜன் வெடிகுண்டை விட பெரியது' என்று அறிவுத்துள்ளது டிபிஆர்கே டுடே (DPRK Today).

அதிகாரப்பூர்வமான பெயர்...

டிபிஆர்கே என்பது கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு (Democratic People's Republic of Korea) என்பதின் சுருக்கமாகும். மற்றும் டிபிஆர்கே என்பது வடகொரியாவின் அதிகாரப்பூர்வமான பெயர் என்பதும் குறிபிடத்தக்கது.

நொடியில் சாம்பலாகிவிடும்...

ஒருவேளை வடகொரியா நியூயார்க்கின் மன்ஹாட்டனில் கண்டம் விட்டு கண்டம் தாண்டி அழிக்கும் பெல்லிஸ்டிக் தொழில்நுட்பத்தின் துணையோடு ஹைட்ரஜன் வெடிகுண்டை வீசினால், மன்ஹாட்டன் நொடியில் சாம்பலாகி விடும் என்கிறார் அணு விஞ்ஞானியான சோ யோங் இல்.

ஜனத்தொகை...

நியூயார்க் நகரத்தின் அதிகளவு ஜனத்தொகையைக் கொண்ட மாநகராட்சிகளில் (boroughs), மன்ஹாட்டனும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

கற்பனைக்கு விஞ்சியது...

உடன் அணு விஞ்ஞானியான சோ யோங் இல் 'வட கொரியா புதிதாக உருவாக்கியுள்ள ஹைட்ரஜன் குண்டு, நம் கற்பனைக்கு விஞ்சியது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1000 கிலோமீட்டர்கள்...

சோவியத் யூனியன் காலத்தில் உருவான எச் பாம்ப் ஆனது 1000 கிலோமீட்டர்கள் தாண்டி உலா கட்டிடங்களின் ஜன்னல்களை உடைத்தெறியும் வல்லமை கொண்டிருந்தது.

100 கிலோமீட்டர்...

அது மட்டுமின்றி சுமார் 100 கிலோமீட்டர் தூரத்திற்கு மூன்றாம்-நிலை நெருப்பு காயங்களை உண்டாக்கும் வண்ணம் வெப்பத்தை வெளிப்படுத்தும் வண்ணம் சக்தி வாய்ந்தது என்பதும் குறிபிடத்தக்கது.

சாதாரண பரிசோதனை இல்லை...

அப்படியாக பார்க்கும் போது கடந்த ஜனவரி மாதம் வடகொரியா நிகழ்த்திய எச்-பாம்ப் சோதனையானது (வடகொரியாவின் நான்காவது அணு ஆயுத சோதனை ), ஒரு சாதாரண அணு ஆயுத பரிசோதனை இல்லை என்பது உறுதி செய்யப்படுகிறது.

கேள்விக்குறி...

அமெரிக்காவின் 'வெஸ்ட் கோஸ்ட்' பகுதியை தாக்கும் அளவிலாக வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் தாண்டி அழிக்கும் ஏவுகணை தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து விட்ட நிலையில் அமெரிக்காவின் வட கிழக்கு கடற்கரையை வடகொரியாவால் தாக்க முடியுமா என்பது கேள்விக்குறி தான்.

கிழக்கு கடல்...

வடகொரியாவானது கிழக்கு கடல் என்று அழைக்கப்படும் ஜப்பான் கடல் பகுதியில் அவ்வபோது ஏவுகணையை செலுத்தி தினந்தினம் ஒரு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொருளாதார தடை...

போர் வெறி பிடித்து அலையும் வடகொரியாவிற்கு எதிராக ஏகப்பட்ட சர்வதேச கண்டனங்கள் எழும் நிலையில் வடகொரியாவின் மீது மேலும் பல கடுமையான பொருளாதார தடைகளை ஐநா இம்மாத இறுதியில் விதிக்கலாம் என்று நம்பப்படுகிறது.

மின்னலடி தாக்குதல்...

சமீபத்தில் வட கொரிய மக்கள் இராணுவம் ஆனது 'சியோல் உட்பட ஒட்டுமொத்த தென் கொரியா மீதும் கொரிய பாணியில் ஒரு தீவிர துல்லியமான மின்னலடி தாக்குதல் நடத்த வேண்டும் என்று வெளிப்படையாக கூறியுள்ளது.

ஆத்திரமூட்டும் செயல்...

அதனை தொடர்ந்து தென் கொரியா நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் (South Korea's Defense Ministry) வடகொரியா தனது அச்சுறுத்தல்கள் மற்றும் ஆத்திரமூட்டும் செயல்களை நிறுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தி இருந்தது.

ஆட்சி அழிவதை தடுக்க முடியாது...

மேலும் வடகொரியா தனது மிரட்டல்கள் மற்றும் போர் எண்ணங்களை நிறுத்திக் கொள்ளவில்லை என்றால் பியோங்யாங் ஆட்சி அழிவதை தடுக்க முடியாது என்று தென் கொரியா பணியாளர்களின் இணைத் தலைவர் எச்சரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொழில்நுட்ப திறன்...

அமெரிக்காவையே மிரட்டும் வகையில் வடகொரியாவின் தொழில்நுட்ப திறன்களை, அதன் சர்வாதிகாரியான கிம் ஜொங் உன் மிகைப்படுத்தியுள்ளார் என்று நம்புவதற்கு பல காரணங்களும் எடுதுக்கட்டுகளும் உள்ளன.

தற்புகழ்ச்சி எச்சரிக்கைகள்...

இருப்பினும் வடகொரியாவின் தற்புகழ்ச்சி எச்சரிக்கைகள் மற்றும் அதன் மிரட்டல்கள் ஆனது அந்நாடு சரியான குறிகோள்கள் இன்றி வெறும் கோபத்தை மட்டுமே காட்டிக்கொண்டு வருவதை தெளிவாக காட்சிப்படுத்துகிறது என்கிறார்கள் வல்லுனர்கள்...

மனிதர்கள்...


மனிதர்கள் மட்டுமே ஒவ்வொரு கருத்தியல்களையும் முடிவு என்று நினைக்கிறார்கள்...

அவர்களுக்கு தெரியாது அந்த கருத்தியல் முடிவில் இருப்பது என்று..

பயணத்தில் ஓய்வு இடம் இருக்கலாம் ஆனால் ஓய்வு இடமே நிரந்தரம் கிடையாது.

இலக்கு இல்லா பயணத்தை நோக்கி இயற்க்கையுடன்...

ரஷ்யா விண்வெளி கழகம்...


விண்மீண் பயணத்தின் சாத்தியம் பற்றி விவாதிக்கையில், சில விஞ்ஞானிகள், நட்சத்திரங்களுக்கு இடையேயான மிகப்பெரிய தூரம், விண்வெளி கப்பல் மற்றும் செயற்கைகோள்களின் ஆற்றல் தேவை, இவைகளே பல கண்டு பிடிப்புகள் தாமதமாக காரணம் என்கின்றனர்.

ரஷ்ய விண்வெளி கழகமான ரோச்கோஸ்மோஸ் புதிய விண்வெளி கப்பல் ஒன்றை வடிவமைத்து வெளியிட்டுள்ளனர், இது ஒரு சிறிய அணு உலை மூலம் இயங்ககூடியது என்கின்றனர்.

ரஸ்க்கோஸ்மோஸ் அதிகாரிகள் கூறுகையில், இந்த விண்வெளி கப்பல் "இண்டர்ஸ்டெல்லர்" பயணத்திற்கு உகந்ததாக இருக்கும் - அதாவது நட்சத்திரங்களுக்கு இடையில் தடையின்றி அதிவேகமாக பறக்கும் பொருள்.

மேலும் கதிர்வீச்சிலிருந்து அவற்றைப் பாதுகாக்க ஒரு பொருள் உருவாக்கப்படும் போது, ​​அதில் விண்வெளி ஆய்வு குழுவினர் மற்றும் பயணிகளையும்  அழைத்து செல்ல முடியும் என்று நம்பப்படுகிறது. சோவியத் யூனியன் விண்வெளித் தலைவர்கள், பனிப்போர்  யுத்தத்தின் போது விண்வெளிப் பயணத்தில் அணுசக்தி பயன்பாட்டை பயன்படுத்தி உள்ளனர்.

விளாடிமிர் புட்டினிடம் விஞ்ஞானிகள், இந்த கப்பல் பிரபஞ்சத்தின் நீண்ட தூர விண்வெளிப்பாதை வரை பறக்க முடியும் என்று நம்புகின்றனர் - மற்றும் "பழைய தொழில்நுட்பத்தை" பயன்படுத்துவதற்காக SpaceX தலைவர் எலோன் மஸ்க் அவர்களும் இதில் இணைந்துள்ளார். இதன் மூலம் அருகில் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் அண்டங்களில் வந்த வேற்றுகிரக சமிக்கைகளை ஆய்வு செய்வதும் முக்கிய நோக்கமாக உள்ளது என்றனர்.

இந்த அணுசக்தி விண்வெளி கப்பல், இன்றைய "தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான வளர்ச்சியினை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும் என்கின்றனர்". ரஷ்யா 2010 ல் இருந்தே மெகா வாட் பிரிவு அணுசக்தி ஆலைகளை உருவாக்கி வருகிறது. ரஷ்ய நாட்டின் உதவியுடன் உருவாகிய, கூடங்குளம் அணுஉலை நிலையத்தில் உண்மையில் மின்உற்பத்தி தான் நடைபெறுகிறதா...

ஆண் என்பவன் யார்.....?


எல்லோரும் பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்...

இப்போது ஆண்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்....

ஆண் என்பவன் யார்?

ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான்.

அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் கொக்கோ மாவுடன் இனிப்பு கலந்து செய்யப்படும் திண்பண்டம் (chocolate) தன் சகோதரிக்காக தியாகம் செய்கிறான்.

பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி தியாகம் செய்கிறான்.

தன் மனைவி மற்றும் குழந்தைகள் மீதான அன்பை இரவுகளில் நீண்ட நேரம் வேலை செய்வதன் மூலம் தியாகம் செய்கிறான்.

அவன் அவர்களின் எதிர்காலத்தை வங்கிகளில் கடன் வாங்குவதன் மூலம் உருவாக்குகிறான் ஆனால் அதை அவர்களுக்காக திருப்பிச் செலுத்த தன் வாழ்நாள் முழுதும் துன்பப்படுகிறான்.

எனவே அவன் தன் மனைவி மற்றும் குழந்தைகளுக்காக எந்தவித குறையும் சொல்லாமல் தன் இளமையை தியாகம் செய்கிறான்.

அவன் மிகவும் துன்பப்பட்டாலும், தன் தாய், மனைவி, தன் முதலாளி ஆகியோரின் இசையை (திட்டுகள்) கேட்க வேண்டியுள்ளது. எல்லாத் தாயும், மனைவியும் முதாலாளியும் அவனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயற்சிக்கின்றனர்.

இறுதியில் மற்றவர்களின் சந்தோசத்திற்காக விட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பதன் மூலம் அவன் வாழ்க்கை முடிகிறது.

பெண்கள உங்கள் வாழ்வில் ஒவ்வொரு ஆணையும் மதியுங்கள். அவன் உங்களுக்காக என்ன தியாகம் செய்துள்ளான் என்பதை நீங்கள் எப்போதும் அறியப் போவதில்லை.

அவனுக்கு தேவைப்படும்போது உங்கள் கரங்களை நீட்டுங்கள் அவனிடமிருந்து இருமடங்காக நீங்கள் அன்பை பெறுவீர்கள்.

ஆண்களுக்கும் உணர்வுகள் உண்டு, அதையும் மதியுங்கள். அமைதி கொள்வோம்.

இது ஆண்களின் அன்பு வேண்டுகோள்...

முடிவு என்றுமே உன்னிடம் மட்டுமே தோழா...


மந்திரம் - மாந்திரீகம்...


மனசுக்கு மட்டும் மருந்து கொடுத்து பல நோய்களை குணப்படுத்துகிறார்கள். இந்த மாந்திரீகம் எல்லாம் அந்த வகையில் வருவது தான்.

அதற்கு பூத சிகிச்சை என்று பெயர்.

சரி இந்த பூத சிகிச்சை அனைவருக்கும் பொருந்துமா ?

ஒருவரை தாக்கவேண்டுமேன்றால் இரண்டு விதங்களில் தாக்கலாம்.

1. உடலை தாக்குவது. ( நேரடியாக அவரது உடலை தாக்கி காயப்படுத்துவது ).

2. மற்றொன்று மனதை தாக்குவது. (அவருடைய மனதை மட்டும் தாக்கினால் போதும்) கதை முடிந்தது. அது தானாக மனம் பாதித்து பிறகு உடலும் பாதித்து விடும்.

இந்த மனதிற்கும் இந்த உடலுக்கும் நிறைய தொடர்பு உண்டு.

உடல் பாதித்தால் மனம் பாதிக்கும்.
மனம் பாதித்தால் உடலும் பாதிக்கும்.

மாந்த்ரீகத்தில் நோய் குணப்படுத்த முடியுமா ?

முடியும்..

நோய் உடலில் ஏற்படுவது மனதில் ஏற்படுவது என இரண்டு விதம் உண்டு.

மாந்திரீகத்தில் இரண்டையும் சரி செய்ய முடியுமா ?

மாந்திரீகத்தில் இரண்டையும் சரி செய்ய முடியும்.

அனைவருக்கும் மாந்த்ரீகத்தில் நோயை குணப்படுத்த முடியுமா ?

முடியாது.

என்ன குழப்பமாக உள்ளதா ?

சற்று விரிவாக பார்ப்போம்...

மந்திரம் என்றால் என்னவென்று முதலில் பார்ப்போம் பிறகு மாந்திரீகத்தை பற்றி பார்ப்போம்.

நமது முன்னோர்கள் பலர் மெய்ஞானம் மட்டும் அல்லாமல் விஞ்ஞானத்திலும் சிறந்து விளங்கினார்கள் என்பதை சற்று ஆழ்ந்து நோக்கும் போது புலப்படும்.

ஒலி (SOUND) யின் ஆற்றல், சிறப்பு அதன் பெருமைகளை இன்றைய விஞ்ஞானம் ஸ்ட்ரிங் தியரி தெளிவாகவும் தர்க்க ரீதியாகவும் சொல்கிறது.

இந்த ஒலியின் சிறப்பை நம் முன்னோர்கள் எப்படி அறிந்தார்கள் என்பது தான் நம்மை இன்றும் வியப்படைய வைக்கிறது.

ஒலி (SOUND) அலைகளாக பரவும். ஒவ்வொரு எழுத்து உச்சரிக்கும் போதும் ஒருவிதமான அதிர்வு (FREQUENCY) உண்டாகும். இந்த அதிர்வுகளை அடிப்படையாக கொண்டு எழும் ஒலிகளை HERTZ என்ற அளவில் அளப்போம்.

சரி இந்த ஒலியின் சிறப்பை அறிந்த நம் முன்னோர்கள் ஒலியை கேட்கும் ஒலி, கேளா ஒலி என பிரித்தனர்.

கேட்கும் ஒலியும், கேளா ஒலியும் அதிர்வுகளின் அடிப்படியில் தோன்றுபவை தான்.

விஞ்ஞானம் மற்றும் மெய்ஞானம் அறிந்த நம் முன்னோர்கள் இந்த இரண்டிற்கும் அப்பாற்ப்பட்ட ஒரு ஒலியை அறிந்து அதற்கு ஆதிநாதம் ( Pri - Mordial Sound) என அழைத்தனர்.

ஒலி இல்லாத இடம் இந்த உலகில் இல்லை. இந்த உலகத்திற்கு வெளியிலும் ஒலி உள்ளது.

அதே போல் ஒலி உண்டாக்காத எந்த ஒரு பொருளும் இங்கு இல்லை.

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து அசைவுகளும் அதற்கேற்றவாறு ஒலி உண்டு செய்யும்.

அணு முதல் அண்டம் வரை சதா ஒலித்துக்  கொண்டு தான் இருக்கிறது.

இதற்கு நல்ல சான்று ஸ்ட்ரிங் தியரி.

எழுத்துகளில் உள்ள ஒலி ஆற்றலை கண்டறிந்த முன்னோர்கள் அதை ஒழுங்குபடுத்தி பல அதிர்வுகளை உண்டாக்கும் எழுத்துகளை ஒன்று சேர்த்து பல புதிய அதிர்வெண்களை உண்டாக்கும் சொற்களை தோற்று வித்தனர்.

இத்தகைய ஒன்று சேர்த்த அதிர்வெண்கள் மிகுந்த ஆற்றல் உடையது என கண்டறிந்தனர்.

இவ்வாறு ஒன்று சேர்ந்த ஒலிக் கூட்டங்களுக்கு மந்திரங்கள் என அழைக்க பட்டது.

சாதாரண ஒலிக் கூட்டங்களால் ஏற்படும் அதிர்வெண் (மந்திர) களுக்கு எப்படி இவ்வளவு ஆற்றல் வரும் ? என சந்தேகம் தோன்றுவது இயல்பு தான்...

தெலுங்கர் வைகோ நாயூடு கலாட்டா....


உடலின் நலத்தை நகத்தில் தெரிந்துக் கொள்ளலாம்....


நகங்களை ஏதோ தேவையில்லாத பகுதியாகவோ, அல்லது அழகுபடுத்திக் கொள்வதற்காக அமைக்கப்பட்ட உறுப்பாகவோ நினைக்கிறோம். அது தவறு. மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் இன்றியமையாத முக்கிய உறுப்பு நகங்களாகும்.

ஆனாலும் பெரும்பாலும் நாம் நகங்களில் வண்ணங்களை தீட்டிக் கொண்டு, நீளமாக வளர்த்துக் கொண்டு ஒரு அழகு சாதன உறுப்பாகவே பயன்படுத்துகிறோம்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல உடலின் நலத்தை நகத்தில் தெரிந்து கொள்ளலாம். ஆனால் மருத்துவ உலகில் நகங்களை வைத்தே நம்முடைய உடலில் என்ன பிரச்சினை என்று கூறி விடுகிறார்கள் மருத்துவ அறிஞர்கள்.

நகங்கள் விரல்களுக்கு அழகு சேர்க்க மட்டுமல்ல, கரட்டின் என்ற புரதச்சத்தைக் கொண்ட நகங்கள் விரல் நுனிவரை பரவியுள்ள நரம்பு மற்றும் இரத்தக் குழாய்களை பாதுகாக்கக் கூடிய ஒரு அமைப்பாகும்.

நகங்கள் இல்லா விட்டால் விரல்களின் முனைகளில் கடினத்தன்மை ஏற்பட்டு விடும்.. நகங்கள் மிருதுவானவை. விரல்களின் சதைப்பகுதியின் அடிப் பாகத்தில் இருப்பது.

பொதுவாக ஆண்களுக்கு அதிக வளர்ச்சியும், பெண்களுக்கு பிரசவ காலங்களிலும், வயதான காலங்களிலும் வளர்ச்சி அதிகமாக இருக்கும். பொதுவாக நகங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். ஆனால் நமது உடலில் ஏற்படுகின்ற பாதிப்புகளைப் பொறுத்து நகங்களின் நிறம் வேறுபட்டிருக்கும்.

ஈரல் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் வெண்மையாக இருக்கும்.. சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டிருந்தால் நகங்களின் வளர்ச்சி குறைந்து பாதி நகங்கள் சிவப்பாக இருக்கும். மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.

இதயநோயால் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் அழுத்தமான இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இதயத்தில் ஓட்டை ஏற்பட்டு நல்ல இரத்தமும், கெட்ட இரத்தமும் கலந்திருந்தால் நகங்கள் நீல நிறத்தில் இருக்கும். நாள்பட்ட நுரையீரல், இதய நோய் உள்ளவர்களுக்கு நகங்கள் கிளிமூக்கு போல வளைந்து இருக்கும்.

இரத்தச் சோகை ஏற்பட்டு இரும்புச் சத்து குறைவாக இருந்தால் நகங்கள் வெளுத்து குழியாக இருக்கும். சர்க்கரையின் அளவு அதிகமாகவும், புரதம் மற்றும் துத்தநாக சத்து குறைவாகவும் இருந்தால் நகத்தில் வெண்திட்டுக்கள் காணப்படும்.

நகத்தில் மஞ்சள் கோடுகள் இருப்பதற்கு காரணம், புகைபிடிப்பதனால் நிக்கோடின் கறை படிந்து ஏற்பட்டதாக இருக்கலாம். நகங்களுக்கு பளபளப்பாக்கு (polish) தீட்டுவதால் ஏற்பட்ட இரசாயன மாற்றத்தின் காரணமாகவும் மஞ்சள் கோடுகள் இருக்கலாம்.

நகத்தில் சின்ன சின்னக் குழிகள் உண்டாகி, அவற்றில் வெடிப்பு ஏற்பட்டு செதில் செதிலாக உதிர்ந்தால் சொரியாசிஸ் என்ற தோல் வியாதியின் அறிகுறியாகும்.

இரத்தத்தில் போதிய அளவுக்கு பிராணவாயு இல்லாவிட்டால் நகங்கள் நீலமாக இருக்கும். ஒரு ரசாயன மூலகம் (arsenic) என்ற நச்சுகளால் பாதிக்கப் பட்டிருந்தால் நகங்கள் நீலநிறத்தில் காணப்படும். இரத்தத்தில் சர்க்கரை அதிக அளவு இருந்தால் குறைத்துக் கொள்ள வேண்டும்.

அதிக அமிலத் தன்மையுள்ள சோப்பு மற்றும் புளிக்கரைசல் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. நகங்களின் நுனிப்பகுதிகளை முழுவதுமாக வெட்டக் கூடாது. அவ்வாறு வெட்டினால் நகத்தை மூடி சதை வளர்ந்து அதிக வலியினை ஏற்படுத்தும். நகத்தினை பற்களால் கடிக்கக் கூடாது.

இதனால் நகங்கள் உடைந்து போக வாய்ப்பு அதிகம். நகம் வெட்டும் கருவியினால் மட்டுமே வெட்ட வேண்டும். சாப்பிட்ட பின்னர் கைகளை கழுவும்போது நகங்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.

நகங்களின் இடுக்குகளில் தங்கும் நுண்ணுயிரிகளால் வயிற்றுத் தொல்லை, வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை உண்டாகும். நகங்கள் அழகுடன் திகழ, காய், கனிகள் நிறைய உட்கொள்ள வேண்டும். இரவில் குளிர்ந்த நீரினால் கை மற்றும் கால் நகங்களை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்...

வாழ்க்கை...


வாழ்க்கை என்பது குழந்தை போன்று
அதை அதன் இயல்பில் விடுங்கள்...

குழந்தை எப்படி இருக்குமோ அப்படி இருங்கள் வாழ்வில்..

உங்களுள் ஒர்பாதை உருவாகும்...

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


பதிவு பெரிது.. கணிப்பு சிறிது...

இந்த மாத தொடக்கத்தில் YouTube channel ல் ஒரு பதிவேற்றம், இரண்டு நாட்களில் அரை மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கொண்டதாக காணமுடிந்தது.

அதாவது கி.மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க தத்துஞானி பிளாட்டோ கூறிய தொலைந்த நகரத்தின் எஞ்சியுள்ள இடங்கள். ஆப்பிரிக்க நாட்டிலுள்ள மவுரித்தேனியாவில் கண்டுபிடித்ததாக கூறப்படும் உண்மை தான் அது.

பிரைட் இன்சைட் என்ற மிகப்பெரிய உண்மைத் தேடுபவர்கள் குழு, அட்லாண்டிஸின் மாய நகரத்தை கண்டுபிடித்து, அதன் உண்மை இருப்பிடம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது மாயப் பார்வைக்கு மறைந்து வருவதாக வலியுறுத்துகிறார்கள்.

பிளாகர் ஜிம்மி பிரைட் என்பவர், வடமேற்கு சஹாராவின் புவியியல் குவிமாடம் #சஹாராவின்_கண் என்ற குறிப்பிட்ட இடம், அட்லாண்டிஸ் தான் என்று வாதிடுகிறார்..

இதற்கு ஆதாரமாக அவர் பிளாட்டோவின் புகழ்பெற்ற உரையாடல்களிலிருந்து அளவீடுகளை மேற்கோள் காட்டுகிறர். பிளாட்டோ
(கி.மு. 427-347 )ஏதென்ஸில் வாழ்ந்த கிரேக்க தத்துவவாதி. டிமீஸ் மற்றும் கிரிடியாஸ் என்பது அவரது உரையாடல்களில் ஒன்றாகும், அதில் அவர் எழுதிய சில விஷயங்கள்  புராண அட்லாண்டிஸ் மற்றும் ஏதென்ஸ், நகரங்களுகிடையே ஏற்பட்ட போரை பற்றியதாக உள்ளது.

அட்லாண்டிஸ் ஒரு நீண்டகால பேரரசு என்றும், அது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவிலிருந்து எகிப்திற்கு அப்பால் ஆப்ரிக்கா வரைக்கும் நீடித்தது என்றும், மிகப்பெரிய தீவு கிரகத்தின் முகத்தை, ஒரு இயற்கை பேரழிவால் "ஒரே நாளில் இரவில்" துடைத்தழிக்கப்பட்டது என்றார்.

"விண்ணிலிருந்து அல்லது ஒரு சுனாமி மூலம் #வெடித்தது போலவே இப்பகுதி முழுவதும் காணப்படவில்லை என்றார்"
11500 ஆண்டுகளுக்கு முன்னர் குறிப்பிடத்தக்க காலநிலை எழுச்சியை பூமிக்குள்ளாகக் கண்டறிந்ததாக அறிவியல் வரலாறு காட்டுகிறது. இதன் படி, அந்த நகரத்தின் அழிவு, உலக வெப்பநிலைகளில் பாரிய மாற்றம் திடீரென ஏற்படும் காலநிலை மாற்றம் மற்றும் கடல் மட்டங்கள் உயரும். போன்ற காரணங்களால் கூட இருக்கலாம் என்கின்றனர்.

சஹாராவின் கண் பிளேட்டோவின் உரையாடல்களின் விளக்கங்களை நெருக்கமாக ஒத்திருக்கிறது என்றும், ஒரு கோட்பாடை இணைக்க உதவுகிறது. அட்லாண்டிஸின் பிரதான நகரம் தண்ணீரும் நிலமும் அடங்கியது என்று பண்டைய தத்துவவாதி கூறியதை, ஜிம்மியின் சுற்றறிக்கையை மிகவும் அழகாக காட்டுகிறது.

பிளேட்டோ கூறிப்பிடும் நகரின், வடக்கில் வசிப்பதாக ஒரு மலைப்பகுதியைக் குறிப்பிட்டும், அதன் தெற்கில் ஒரு நீளமான வடிவத்தின் பெரிய சமவெளிக்கு உட்பட்டது என்றார். 'சஹாரா கண்', பகுதியின் பரப்பளவின் ஒரு விரைவான ஆய்வு உண்மையில் வடக்கில் ஒரு உயர்ந்த மலைப்பகுதி, தெற்கில் ஒரு பெரிய முட்டை வடிவ வெற்றுடன் மலைப்பகுதி ஒன்று காட்டப்படுகிறது.

அட்லாண்டிஸ் நகர விட்டம் 127 ஸ்டேடியம் என்று பிளேட்டோ கூறுகிறார். ஒரு ஸ்டேடியம் சுமார் 607 அடி ஆகும்.127 ஸ்டேடியமுக்கு 77,089 அடி மற்றும் 23.49 கி.மீ. ஆகும்.

கூகிள் எர்த்ஸில் 'சஹாரா கண்', கட்டமைப்பு விட்டம், 22 மற்றும் 24 கிலோமீட்டர்களுக்கு இடையில்  கொடுக்கிறது. அது அட்லாண்டிஸின் அளவீடுகளுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது.

பிளாட்டோ தன்னுடைய வாசகர்களிடம் கூறுகிறார்,

வோர்ஸர் என்ற பெயர் பெற்றவர். லியூஸீப் என்ற மனைவியிடம் இருந்தார். அவர்களுக்கு ஒரே ஒரு மகள் இருந்தாள். தன் தாயையும் தந்தையும் இறந்துவிட, போசைடன் அவளை காதலித்து, நிலத்தை உடைத்துக்கொண்டு, அவர் சுற்று முழுவதும் வாழ்ந்துகொண்டிருந்த மலைக்கு உள்ளே சென்று, கடல் மற்றும் நிலத்தின் மாற்று மண்டலங்களை பெரிய மற்றும் சிறியதாக ஆக்கினார்,

அங்கு நிலத்திலிருந்தும், மூன்று நீர்நிலைகளிலிருந்தும், அவர் ஒவ்வொன்றும் நடுவில் இருந்து ஒவ்வொரு வழியும்  வட்டப்பாதையாக ஒரு நகரை உருவாக்கினார், அதனால் எந்தவொரு மனிதனும் தீவுக்கு வரமுடியவில்லை, கப்பல் பயணங்களும் இல்லை, மையத்தின் தீவுக்கு விசேஷ ஏற்பாடுகள் செய்வதில் எந்த சிரமத்தையும் காணவில்லை, பூமியின் கீழிருந்த இரண்டு நீரூற்றுகள், அதில் சூடான மற்றும் குளிர்ச்சியான தண்ணீரைக் கொண்டுவருவதால், ஒவ்வொரு விதமான உணவையும், கடல்நீர் மற்றும் மண்ணிலிருந்தே பெற்றனர்.

அட்லாண்டிஸ் என்பது கிப்ரால்டரின் குறுக்குவெட்டுகளுக்கு வெளியே அமைந்துள்ள ஒரு தீவு அல்ல, அது ஒரு மிகப்பெரிய நிலம், சிசிலி அல்லது சைப்ரஸைக் காட்டிலும் பெரியது, இது பிளாட்டோ மற்றும் அவரது சமகாலத்தவர்களுக்கு நன்கு அறியப்பட்ட மிகப்பெரிய தீவுகளாக இருந்திருக்கும். உண்மையில், பிளாட்டோ கூறும் அட்லாண்டிஸ், லிபியா, ஆசியாவை ஒருங்கிணைப்பை விட மிகவும் பெரியதாக இருந்தது.

இந்த ஒப்பீடு மூலம்: லிபியா (சஹாரா ஆப்பிரிக்கா) மற்றும் ஆசியா (மத்திய கிழக்கு மற்றும் இந்தியா) ஆகியவற்றிற்கு அறியப்பட்ட மூன்று கண்டங்களில் இரண்டையும் குறிப்பிடுவதாக சில அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். அப்படியானால், அட்லாண்டிஸ் வெறுமனே ஒரு தீவு மட்டுமல்ல பெரிய கண்டமாக இருந்தது.

பிளாட்டோவின் அட்லாண்டிஸ் என்பது அண்டார்டிக்காவின் பெரும்பாலான மக்கள், நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக வெளிச்சத்திற்கு வரும் ஒரு நீர்மூழ்கிக் கப்பலைப் பற்றிய ஒரு அறிக்கையை வெளியிடுவது. ஆனால் பிளாட்டோவின் எழுத்துக்கள் அட்லாண்டிஸ் ஒரு நகரத்தைக் காட்டிலும் அதிகமாக இருப்பதை நாம் காணலாம்.

அட்லாண்டிஸ் தொலைந்த நகரம் மனித வரலாற்றில் மிக நீடித்த புதிர்களை உண்டாக்கிய ஒன்றாகும்.  ஸ்பெயினின் கடற்கரையோரத்தில் உள்ள கேனரி தீவுகள், ரியோ டி ஜெனிரோ, மற்றும் கியூபா, வரலாறு அல்லது கட்டுக்கதை என இருபது ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டது. பல சான்றுகளுடன் இன்றும் தொடர்கிறது...

உங்களுக்கு தெரியுமா..?


இலுமினாட்டி இரகசியம் - பிரிஸ்மாவிற்கு பின்னால் யார்..?


பிரிஸ்மா எனும் வாசகம் ஸ்பானிய வார்த்தை ஆகும் இது 'ஒளியை கண்டு கொண்டேன்' என பொருள்படுகிறது..

அத்தோடு இது பிரிஸ்ம் எனும் மூல சொல்லிலிருந்து புறப்படும் சொல்லாகும்..

பிரிஸ்ம் என்றால் 6 முகங்களை கொண்ட படிக முக்கோண அச்சு என்பதை பறை சாற்றுகின்றது..

இஸ்ரேலிய கொடியில் 6 முக்கோண முகங்கள் உள்ளது என்பதை கவனத்தில் தற்போது கொள்வோம்..

இஸ்ரேலிய தொழிநுட்ப வல்லுனர்களால் இஸ்ரேலிய கொடியை பிரதிபலிக்கும் ஒரு புகைப்பட தொழிலநுட்ப திட்டம் ஆகும்..

பிரிஸ்மா என்ற பெயர் புதிய பெயர் அல்ல. யூதர்கள் தங்களது கடவுளை புகழ்வதற்காக பயன்படுத்தும் வார்த்தை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்..

இது கூச்ச சுபாவம் கொண்ட பெண்கள் ஆண்கள் என இருபாலரும் தங்கள் உருவங்களை மாற்றி ஆபாசமற்ற புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்ற ஏதுவான திட்டத்தை கொண்டதாகும்..

ஆடைக்கு கட்டுப்பாடு மற்றும் சுதந்திர பெண்களுக்கு வரப்பிரசாதமாக ஈர்க்கும் வகையில் புகைப்பட தொழில் நுட்பத்தை அமைத்துள்ளனர்..

இச்செயலி மூலம் தன்னை உருமாற்றி முற்றிலும் காட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது..

யூதர்களான இலுமினாட்டியர்களின் சதி இது அதன் யதார்த்தமான விளைவு என்றாலும்.. இதுவரை அனேகமான முஸ்லிம்களுக்கு பாலஸ்தீன நாட்டின் கொடி எப்படி இருக்கும் என்பது தெரியாது..

இவ் புகைப்பட தொழில் நுட்பத்தின் மூலம் இஸ்ரவேல் கொடியின் முக்கோண வடிவமான யூத இனத்தை பிரதிபலிக்கும் சின்னத்தை நாளடைவில் மக்கள் இனம் கண்டு கொள்வர்..

அத்தோடு பிரிஸ்மா தொழில் நுட்பத்தில் உங்கள் புகைப்படத்தில் உள்ள நிறங்கள் ஓர் அரியத்தினூடாக அனுப்பப்பட்டால் எவ்வாறு நிறமாற்றத்தை தரும்..

அரியம் யூதர்களின் பார்வையயில் கடவுளின் இயல்பை கொண்ட ஓர் உபகரணம் மற்றும் பிரமிட்டுக்களின் வரப்பிரசாதம்..

கடவுளின் அன்பளிப்பாக அரியம் பயன்படுவதும் யூதக் குறியீட்டில் பிரமிடும் அரியமும் முக்கிய இடத்தை வகிப்பதை பார்க்க முடிகிறது..

பலஸ்தீனம் ஒரு மாயை இஸ்ரவேல் மட்டுமே உண்மை என ஒப்புக்கொள்ளும் நிலைக்கு நாளைய தலைமுறையை வாதிட வைக்கும் தொழில் நுட்ப மற்றும் மனோவியல் தந்திரம் இது..

இந்த தொழில் நுட்பத்தில் மேம்படுத்தப்படும் ஒவ்வொரு புகைப்படத்தின் மூலையிலும் குறிப்பிட்ட நபர் அறுகோண நட்சத்திர ஒளியை ஒப்புக்கொண்டார் என்பதாக அந்த புகைப்பட நுட்பம் தானாகவே செயல்படுகின்றது..

யூதர்களின் கடவுளுக்கு (தஜ்ஜால்) ஒப்பாக உங்கள் முகம் மாற்றப்பட்டு அக் கடவுளை வரவேற்பதறகாக இந்த புகைப்பட தொழில்நட்பம அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது..

தஜ்ஜாலின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் யூதாஸ் தங்களுக்கென தனி ராஜ்ஜியத்தை உருவாக்க துடிக்கின்றனர்..

இலுமினாட்டிகளின் சதிகளும் மக்களை ஒவ்வொன்றாக கவருகின்றது...