09/12/2018

ரஷ்யா விண்வெளி கழகம்...


விண்மீண் பயணத்தின் சாத்தியம் பற்றி விவாதிக்கையில், சில விஞ்ஞானிகள், நட்சத்திரங்களுக்கு இடையேயான மிகப்பெரிய தூரம், விண்வெளி கப்பல் மற்றும் செயற்கைகோள்களின் ஆற்றல் தேவை, இவைகளே பல கண்டு பிடிப்புகள் தாமதமாக காரணம் என்கின்றனர்.

ரஷ்ய விண்வெளி கழகமான ரோச்கோஸ்மோஸ் புதிய விண்வெளி கப்பல் ஒன்றை வடிவமைத்து வெளியிட்டுள்ளனர், இது ஒரு சிறிய அணு உலை மூலம் இயங்ககூடியது என்கின்றனர்.

ரஸ்க்கோஸ்மோஸ் அதிகாரிகள் கூறுகையில், இந்த விண்வெளி கப்பல் "இண்டர்ஸ்டெல்லர்" பயணத்திற்கு உகந்ததாக இருக்கும் - அதாவது நட்சத்திரங்களுக்கு இடையில் தடையின்றி அதிவேகமாக பறக்கும் பொருள்.

மேலும் கதிர்வீச்சிலிருந்து அவற்றைப் பாதுகாக்க ஒரு பொருள் உருவாக்கப்படும் போது, ​​அதில் விண்வெளி ஆய்வு குழுவினர் மற்றும் பயணிகளையும்  அழைத்து செல்ல முடியும் என்று நம்பப்படுகிறது. சோவியத் யூனியன் விண்வெளித் தலைவர்கள், பனிப்போர்  யுத்தத்தின் போது விண்வெளிப் பயணத்தில் அணுசக்தி பயன்பாட்டை பயன்படுத்தி உள்ளனர்.

விளாடிமிர் புட்டினிடம் விஞ்ஞானிகள், இந்த கப்பல் பிரபஞ்சத்தின் நீண்ட தூர விண்வெளிப்பாதை வரை பறக்க முடியும் என்று நம்புகின்றனர் - மற்றும் "பழைய தொழில்நுட்பத்தை" பயன்படுத்துவதற்காக SpaceX தலைவர் எலோன் மஸ்க் அவர்களும் இதில் இணைந்துள்ளார். இதன் மூலம் அருகில் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் அண்டங்களில் வந்த வேற்றுகிரக சமிக்கைகளை ஆய்வு செய்வதும் முக்கிய நோக்கமாக உள்ளது என்றனர்.

இந்த அணுசக்தி விண்வெளி கப்பல், இன்றைய "தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான வளர்ச்சியினை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும் என்கின்றனர்". ரஷ்யா 2010 ல் இருந்தே மெகா வாட் பிரிவு அணுசக்தி ஆலைகளை உருவாக்கி வருகிறது. ரஷ்ய நாட்டின் உதவியுடன் உருவாகிய, கூடங்குளம் அணுஉலை நிலையத்தில் உண்மையில் மின்உற்பத்தி தான் நடைபெறுகிறதா...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.