09/12/2018

கூடு விட்டு கூடு பாய்தல்...


சிலர் தொடர்ந்து.. கூடு விட்டு கூடு பாய்தல் பற்றி கேட்டுக் கொண்டே இருப்பதால்.. அவர்களுக்காக சில தகவலை பதிவிடுகிறேன்...

முதலாவது, தன் உடலிலிருந்து தன் ஆத்மாவை பிரித்தல்...

இவ்வாறு தன் உடலிருந்து தன் ஆத்மாவை தானே பிரித்துக் கொண்டு எல்லா நாடுகளையும் சுற்றிவிட்டு மீண்டும் உடலில் வந்து புகுந்து கொள்ளலாம்.

ஆனால் ஒரு பிரச்சினை. அத்தகையவர் தன் உடலிலிருந்து ஆத்மாவை பிரித்துக் கொண்டு வெளியே சென்ற நேரத்தில் அவரது உடலை அவரது நிலையிலில்லாத மற்ற யாரும் தொடக்கூடாது.

அப்படித் தொட்டு விட்டால் அந்த ஆத்மா அந்த உடலுக்குள் மறுபடியும் நுழையாது.

அதனால் அத்தகைய வல்லமை உள்ளவர்கள் தனி அறையில் யாருடைய குறுக்கீடும் இல்லாத நிலையில் உள்தாழிட்டுக் கொண்டு இதை செய்வார்கள். அல்லது நம்பிக்கைக்குரிய சீடனை வைத்துக் கொள்வார்கள்.

அடுத்த படியாக ஒரு உடலிலிருந்து மற்றொரு உடலுக்குள் ஆத்மா புகுதல்...

மற்றொரு உடல் ஏற்கனவே உயிரற்ற நிலையில் இருந்தால், அந்த கூடுபுகும் கலையை கற்றவர் அந்த இறந்த கூடுக்குள் புகமுடியும். அதுவரையிலும் அவரது உடல் பாதுகாக்கப்பட வேண்டும்.

அடுத்தபடியாக, ஆத்மாவை பிரித்து கூடுவிட்டு கூடுபுகும் கலை கற்றறிந்த இரண்டு பேரும் மாறி மாறி அவர்கள் உடலில் கூடுமாற வேண்டும் என்றால், மூன்றாவது ஒரு குரு உதவியுடன் தான் அதை செய்ய முடியும்.

மூன்றாவது குரு ஒருவருடைய ஆத்மாவை பிரித்து தன் வசம் பத்திரமாக வைத்துக் கொண்டு, மற்றொருவருடைய ஆத்மாவையும் பிரித்து எடுத்து உடலை மாற்றி ஆத்மாவை கூடு செலுத்த வேண்டும்.

இரண்டுபேர் தன்னந்தனியாக ஆத்மாவை பிரிக்கும் இடங்களில் இறந்து போன சூனியக்காரர்கள் ஆத்மா போன்ற தீய சக்திகள் இருந்தால் கூடுபிரிந்த ஆத்மாக்களை தம் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துச் சென்று விடும்.

(எல்லா ஆலயங்களிலும் மனிதர்கள் மட்டுமல்லாது, பேய் என்று சொல்லப்படுகின்ற இறந்தவர்கள் ஆவி, பூதங்களும் வந்து தெய்வங்ளை வழிபடும்).

தன் உடலுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் வெளியிடங்களில் தன்னந்தனியாக ஆத்மா பிரிக்கப்பட்ட உடல் கிடந்தால், யாராவது பார்த்து என்ன இப்படி கிடக்கின்றாரே என்று கையை வைத்து புரட்டினாலே போச்சு... அவ்வளவு தான்.

அந்த உடலுக்குள் அவர்கள் ஆத்மா திரும்ப நுழையாது.

இப்போது இவர்கள் இருவருடைய ஆத்மாவும் திரிந்து கொண்டிருக்கும். தனக்கு பிடித்தவர்கள் மீது ஏறிக்கொள்ளும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.