09/12/2018

மந்திரம் - மாந்திரீகம்...


மனசுக்கு மட்டும் மருந்து கொடுத்து பல நோய்களை குணப்படுத்துகிறார்கள். இந்த மாந்திரீகம் எல்லாம் அந்த வகையில் வருவது தான்.

அதற்கு பூத சிகிச்சை என்று பெயர்.

சரி இந்த பூத சிகிச்சை அனைவருக்கும் பொருந்துமா ?

ஒருவரை தாக்கவேண்டுமேன்றால் இரண்டு விதங்களில் தாக்கலாம்.

1. உடலை தாக்குவது. ( நேரடியாக அவரது உடலை தாக்கி காயப்படுத்துவது ).

2. மற்றொன்று மனதை தாக்குவது. (அவருடைய மனதை மட்டும் தாக்கினால் போதும்) கதை முடிந்தது. அது தானாக மனம் பாதித்து பிறகு உடலும் பாதித்து விடும்.

இந்த மனதிற்கும் இந்த உடலுக்கும் நிறைய தொடர்பு உண்டு.

உடல் பாதித்தால் மனம் பாதிக்கும்.
மனம் பாதித்தால் உடலும் பாதிக்கும்.

மாந்த்ரீகத்தில் நோய் குணப்படுத்த முடியுமா ?

முடியும்..

நோய் உடலில் ஏற்படுவது மனதில் ஏற்படுவது என இரண்டு விதம் உண்டு.

மாந்திரீகத்தில் இரண்டையும் சரி செய்ய முடியுமா ?

மாந்திரீகத்தில் இரண்டையும் சரி செய்ய முடியும்.

அனைவருக்கும் மாந்த்ரீகத்தில் நோயை குணப்படுத்த முடியுமா ?

முடியாது.

என்ன குழப்பமாக உள்ளதா ?

சற்று விரிவாக பார்ப்போம்...

மந்திரம் என்றால் என்னவென்று முதலில் பார்ப்போம் பிறகு மாந்திரீகத்தை பற்றி பார்ப்போம்.

நமது முன்னோர்கள் பலர் மெய்ஞானம் மட்டும் அல்லாமல் விஞ்ஞானத்திலும் சிறந்து விளங்கினார்கள் என்பதை சற்று ஆழ்ந்து நோக்கும் போது புலப்படும்.

ஒலி (SOUND) யின் ஆற்றல், சிறப்பு அதன் பெருமைகளை இன்றைய விஞ்ஞானம் ஸ்ட்ரிங் தியரி தெளிவாகவும் தர்க்க ரீதியாகவும் சொல்கிறது.

இந்த ஒலியின் சிறப்பை நம் முன்னோர்கள் எப்படி அறிந்தார்கள் என்பது தான் நம்மை இன்றும் வியப்படைய வைக்கிறது.

ஒலி (SOUND) அலைகளாக பரவும். ஒவ்வொரு எழுத்து உச்சரிக்கும் போதும் ஒருவிதமான அதிர்வு (FREQUENCY) உண்டாகும். இந்த அதிர்வுகளை அடிப்படையாக கொண்டு எழும் ஒலிகளை HERTZ என்ற அளவில் அளப்போம்.

சரி இந்த ஒலியின் சிறப்பை அறிந்த நம் முன்னோர்கள் ஒலியை கேட்கும் ஒலி, கேளா ஒலி என பிரித்தனர்.

கேட்கும் ஒலியும், கேளா ஒலியும் அதிர்வுகளின் அடிப்படியில் தோன்றுபவை தான்.

விஞ்ஞானம் மற்றும் மெய்ஞானம் அறிந்த நம் முன்னோர்கள் இந்த இரண்டிற்கும் அப்பாற்ப்பட்ட ஒரு ஒலியை அறிந்து அதற்கு ஆதிநாதம் ( Pri - Mordial Sound) என அழைத்தனர்.

ஒலி இல்லாத இடம் இந்த உலகில் இல்லை. இந்த உலகத்திற்கு வெளியிலும் ஒலி உள்ளது.

அதே போல் ஒலி உண்டாக்காத எந்த ஒரு பொருளும் இங்கு இல்லை.

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து அசைவுகளும் அதற்கேற்றவாறு ஒலி உண்டு செய்யும்.

அணு முதல் அண்டம் வரை சதா ஒலித்துக்  கொண்டு தான் இருக்கிறது.

இதற்கு நல்ல சான்று ஸ்ட்ரிங் தியரி.

எழுத்துகளில் உள்ள ஒலி ஆற்றலை கண்டறிந்த முன்னோர்கள் அதை ஒழுங்குபடுத்தி பல அதிர்வுகளை உண்டாக்கும் எழுத்துகளை ஒன்று சேர்த்து பல புதிய அதிர்வெண்களை உண்டாக்கும் சொற்களை தோற்று வித்தனர்.

இத்தகைய ஒன்று சேர்த்த அதிர்வெண்கள் மிகுந்த ஆற்றல் உடையது என கண்டறிந்தனர்.

இவ்வாறு ஒன்று சேர்ந்த ஒலிக் கூட்டங்களுக்கு மந்திரங்கள் என அழைக்க பட்டது.

சாதாரண ஒலிக் கூட்டங்களால் ஏற்படும் அதிர்வெண் (மந்திர) களுக்கு எப்படி இவ்வளவு ஆற்றல் வரும் ? என சந்தேகம் தோன்றுவது இயல்பு தான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.