கடந்த பிப்ரவரி மாதம் 7-ஆம் தேதி சரியாக காலை 8.34 மணிக்கு, வடகொரியா மர்மமான ஒரு செயற்கைகோளை விண்ணில் ஏவி, அதை வெற்றிகரமாக பூமியின் சுற்றுவட்டப்பாதைக்குள் செலுத்தியது.
வடகொரியாவின் இந்த மர்மமான செயற்கைகோள் ஆனது ஒரு 'லாங் ரேன்ஜ் மிசைல் ப்ராஜக்ட் (Long Range Missile Project) அதாவது ஒரு நீண்ட தூர ஏவுகணைத் திட்டம் என்று பெரும்பாலான உலக நாடுகள் குற்றம்சாட்ட, மறுபக்கம் வடகொரியா அதை முற்றிலுமாக மறுத்தது.
ரஷ்யாவால் மட்டுமே இப்படியெல்லாம் பிளான் பண்ண முடியும்..
விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் ஆனது, பூமியின் அளவீடு மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் பொருத்தப்பட்ட, மூன்று மாதங்களுக்கு முன்பு விண்ணில் செலுத்தப்பட்ட வாங்மியாங்சாங்- 4 என்ற செயற்கைகோளின் (Kwangmyongsong-4) புதிய மாடல் செயற்கைக்கோள் என்று விளக்கம் அளித்தது வடகொரியா.
தற்போது அதே வடகொரியா பகிரங்கமான மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளதில் இருந்து அதன் முகமூடி கிழிந்துள்ளது.
ஹைட்ரஜன் வெடிகுண்டு...
நியூயார்க் நகரத்தின் இதயமான மன்ஹாட்டனை துவம்சம் செய்ய, பல்லிஸ்டிக் மிசைல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் செலுத்தப்படும் எங்களின் ஒரு எச்-பாம்ப் (அதாவது ஹைட்ரஜன் வெடிகுண்டு) போதுமானது என்று மிரட்டல் விடுத்துள்ளது வடகொரியா.
சோவியத் ஒன்றியம்...
'எங்கள் ஹைட்ரஜன் குண்டு, சோவியத் ஒன்றியம் உருவாக்கிய ஹைட்ரஜன் வெடிகுண்டை விட பெரியது' என்று அறிவுத்துள்ளது டிபிஆர்கே டுடே (DPRK Today).
அதிகாரப்பூர்வமான பெயர்...
டிபிஆர்கே என்பது கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு (Democratic People's Republic of Korea) என்பதின் சுருக்கமாகும். மற்றும் டிபிஆர்கே என்பது வடகொரியாவின் அதிகாரப்பூர்வமான பெயர் என்பதும் குறிபிடத்தக்கது.
நொடியில் சாம்பலாகிவிடும்...
ஒருவேளை வடகொரியா நியூயார்க்கின் மன்ஹாட்டனில் கண்டம் விட்டு கண்டம் தாண்டி அழிக்கும் பெல்லிஸ்டிக் தொழில்நுட்பத்தின் துணையோடு ஹைட்ரஜன் வெடிகுண்டை வீசினால், மன்ஹாட்டன் நொடியில் சாம்பலாகி விடும் என்கிறார் அணு விஞ்ஞானியான சோ யோங் இல்.
ஜனத்தொகை...
நியூயார்க் நகரத்தின் அதிகளவு ஜனத்தொகையைக் கொண்ட மாநகராட்சிகளில் (boroughs), மன்ஹாட்டனும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
கற்பனைக்கு விஞ்சியது...
உடன் அணு விஞ்ஞானியான சோ யோங் இல் 'வட கொரியா புதிதாக உருவாக்கியுள்ள ஹைட்ரஜன் குண்டு, நம் கற்பனைக்கு விஞ்சியது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1000 கிலோமீட்டர்கள்...
சோவியத் யூனியன் காலத்தில் உருவான எச் பாம்ப் ஆனது 1000 கிலோமீட்டர்கள் தாண்டி உலா கட்டிடங்களின் ஜன்னல்களை உடைத்தெறியும் வல்லமை கொண்டிருந்தது.
100 கிலோமீட்டர்...
அது மட்டுமின்றி சுமார் 100 கிலோமீட்டர் தூரத்திற்கு மூன்றாம்-நிலை நெருப்பு காயங்களை உண்டாக்கும் வண்ணம் வெப்பத்தை வெளிப்படுத்தும் வண்ணம் சக்தி வாய்ந்தது என்பதும் குறிபிடத்தக்கது.
சாதாரண பரிசோதனை இல்லை...
அப்படியாக பார்க்கும் போது கடந்த ஜனவரி மாதம் வடகொரியா நிகழ்த்திய எச்-பாம்ப் சோதனையானது (வடகொரியாவின் நான்காவது அணு ஆயுத சோதனை ), ஒரு சாதாரண அணு ஆயுத பரிசோதனை இல்லை என்பது உறுதி செய்யப்படுகிறது.
கேள்விக்குறி...
அமெரிக்காவின் 'வெஸ்ட் கோஸ்ட்' பகுதியை தாக்கும் அளவிலாக வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் தாண்டி அழிக்கும் ஏவுகணை தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து விட்ட நிலையில் அமெரிக்காவின் வட கிழக்கு கடற்கரையை வடகொரியாவால் தாக்க முடியுமா என்பது கேள்விக்குறி தான்.
கிழக்கு கடல்...
வடகொரியாவானது கிழக்கு கடல் என்று அழைக்கப்படும் ஜப்பான் கடல் பகுதியில் அவ்வபோது ஏவுகணையை செலுத்தி தினந்தினம் ஒரு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொருளாதார தடை...
போர் வெறி பிடித்து அலையும் வடகொரியாவிற்கு எதிராக ஏகப்பட்ட சர்வதேச கண்டனங்கள் எழும் நிலையில் வடகொரியாவின் மீது மேலும் பல கடுமையான பொருளாதார தடைகளை ஐநா இம்மாத இறுதியில் விதிக்கலாம் என்று நம்பப்படுகிறது.
மின்னலடி தாக்குதல்...
சமீபத்தில் வட கொரிய மக்கள் இராணுவம் ஆனது 'சியோல் உட்பட ஒட்டுமொத்த தென் கொரியா மீதும் கொரிய பாணியில் ஒரு தீவிர துல்லியமான மின்னலடி தாக்குதல் நடத்த வேண்டும் என்று வெளிப்படையாக கூறியுள்ளது.
ஆத்திரமூட்டும் செயல்...
அதனை தொடர்ந்து தென் கொரியா நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் (South Korea's Defense Ministry) வடகொரியா தனது அச்சுறுத்தல்கள் மற்றும் ஆத்திரமூட்டும் செயல்களை நிறுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தி இருந்தது.
ஆட்சி அழிவதை தடுக்க முடியாது...
மேலும் வடகொரியா தனது மிரட்டல்கள் மற்றும் போர் எண்ணங்களை நிறுத்திக் கொள்ளவில்லை என்றால் பியோங்யாங் ஆட்சி அழிவதை தடுக்க முடியாது என்று தென் கொரியா பணியாளர்களின் இணைத் தலைவர் எச்சரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொழில்நுட்ப திறன்...
அமெரிக்காவையே மிரட்டும் வகையில் வடகொரியாவின் தொழில்நுட்ப திறன்களை, அதன் சர்வாதிகாரியான கிம் ஜொங் உன் மிகைப்படுத்தியுள்ளார் என்று நம்புவதற்கு பல காரணங்களும் எடுதுக்கட்டுகளும் உள்ளன.
தற்புகழ்ச்சி எச்சரிக்கைகள்...
இருப்பினும் வடகொரியாவின் தற்புகழ்ச்சி எச்சரிக்கைகள் மற்றும் அதன் மிரட்டல்கள் ஆனது அந்நாடு சரியான குறிகோள்கள் இன்றி வெறும் கோபத்தை மட்டுமே காட்டிக்கொண்டு வருவதை தெளிவாக காட்சிப்படுத்துகிறது என்கிறார்கள் வல்லுனர்கள்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.