சில நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகம் உட்பட சில பகுதிகளில்..
நன்றாக வாழ்ந்து அனுபவித்து எல்லாவற்றையும் கண்ட முதியோர்கள் தங்களது குடும்பத்தினரை அழைத்து போதும் பா நான் வாழ்ந்த வாழ்க்கை இப்போ நிம்மதியாக கிளம்புகிறேன் ஏற்பாடு செய்யுங்கள் என்ற ரீதியில் சொல்வார்கள்..
ஏற்பாடு செய்யுங்கள் என்று சொன்னதன் அர்த்தம்..
மூத்தோர் தாழி என்ற முறையை தான்...
அக்கால கட்டத்தில் இப்படியொரு வழக்கம் உள்ளதாக வரலாற்றில் அறிந்து கொள்ள முடிகிறது..
அதாவது ஏறக்குறைய 100 வயதிற்கு மேல் உள்ள நம்முடைய மூதாதையர்கள் இனி நமது வாழ்வு போதும் என்று முடிவெடுத்து.. ஊர்மக்கள் உறவினர்கள் முன்னிலையில்..
ஒரு மனிதனை உட்கொள்ளும் சட்டி போன்ற அமைப்பில் உள்ள தாழியின் உள்ளே உயிருடன் இறங்கி உயிரை போக்கிக் கொள்ளும் முறைமைகள்..
இலகுவாக சொல்வதானால் ஒரு பெரிய பாத்திரத்தின் உள்ளே சென்று பாத்திரத்தை வெளியில் இருந்து அடைத்து விடுவார்கள்..
பல நாட்கள் கழித்து தான் திறப்பார்கள்..
இப்படி தன் உயிரை போக்கி கொள்வார்கள் ...
இது தவறு என்ற ஒரு விஷயம் இருந்தாலும் அக்காலகட்டத்தில் 100 வயதிற்கு மேல் தான் இந்த முடிவுகளை எடுக்கிறார்கள்..
அப்படியென்றால் 100 வயது வரையில் வாழவைத்த உணவுகள் எது ?
இன்றைய தினத்தில் 100 வயது வரை வாழ்வதை அதிசயமாக பார்க்கும் நாம் அன்றைய காலகட்டத்தில் ஏறக்குறைய எல்லோருமே 100 வயதுக்கும் மேல் வாழவைத்த விஷயம் எது ?
வேறென்ன உணவு தான்...
நாம் உண்ணும் இன்றைய குப்பையை அவர்கள் உண்டு இருப்பார்களேயானால் அக்கலாம் இக்காலம் போன்றே அமைத்து இருக்கும் என்பதே நிதர்சன உண்மை...