18/06/2021

கொலஸ்ட்ராலை குறைக்கும் சூப்பர் பானம்...

 


உடல் எடை அதிகமானால் நீரிழிவு நோய், மூட்டுவலி, முதுகுவலி, என எல்லா நோய்களும் ஒவ்வொன்றாய் வர ஆரம்பிக்கும்.

உடலில் கொலஸ்ட்ரால் உடலுக்கு தேவையான சக்தியாக மாறி நமக்கு அன்றாட வேலை செய்ய ஆற்றல் தருகிறது.

ஆனால் இந்த கொலஸ்ட்ரால் அதிகமானால்இதயத்தின் ரத்த தமனிகளில் சென்று படிந்துவிடும். பின் இதய நோய்வரும் அபாயம் உள்ளது. கூடவே ரத்தக்கொதிப்பு, சர்க்கரை வியாதி என வரவேற்கத் தொடங்கி விடுவீர்கள்.

கொழுப்புமிக்க உணவுகளை சாப்பிட்டு, அதன் பின் நோயினால் வாழ்நாள் முழுவதும் ஏன் மருந்து மாத்திரைகளில் நாம் கழிக்க வேண்டும்? எனவே எதுவும் அளவோடு சாப்பிடுங்கள்.

உணவுக்கட்டுப்பாட்டின் மூலமாக கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தலாம். அதேபோல் உடலில் கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பவர்கள், உடல்பருமனாக இருப்பவர்கள் இந்த பானத்தை குடித்தால் கொலஸ்ட்ரால் படிப்படியாக குறையும்.

தேவையான பொருட்கள்...

வாழைப்பழம்- 1

ஆரஞ்சு- 1

பட்டைபொடி- அரை ஸ்பூன்

சோயா மில்க் - அரைக்கப்

வாழைப்பழத்தில் எல்லா விட்டமின்களும் உள்ளன. முக்கியமாய் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது ரத்தக்கொதிப்பை அண்ட விடாது.

ஏனெனில் பொட்டாசியம் ரத்தத்தில் உள்ள சோடியம் அளவைக் கட்டுபடுத்தும்.

ஆரஞ்சுபழத்தில் விட்டமின் சி அதிகம் உள்ளது. அது ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவினைக் குறைக்கும். சோயா மில்க்கில் அதிகமாய் புரோட்டின் உள்ளது.

உடலுக்கு தேவையான போஷாக்கினை அளித்து அதிக கலோரிகளை எரிக்கிறது. பட்டை சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட். நச்சுக்களையும் கழிவுகளையும் வெளியேற்றி, ரத்தத்தை சுத்தம் செய்கிறது.

வாழைப்பழம் ஆரஞ்சு, தோலை நீக்கி துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் அரைத்த பின் அதனுடன்சோயா மில்க் சேர்க்கவும். இதனை கிளாஸில் ஊற்றி அதனுள் பட்டைபொடியை சேர்த்து கலந்து பருகவும்.

இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உடலில் கொலஸ்ட்ரால் சேராது.

மேலும் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருப்பவர்களுக்கு நாளடைவில் குறைந்து விடும்...

அந்த வயசுல நானெல்லாம் ஜெயின் ராபட் கார்டூன் பார்த்துட்டு இருந்தேன் 😏


 

நீதிமன்றம் கலாட்டா...

 


இயற்கையாகவே இனிப்புத் தன்மை உடைய கேரட்டை விரும்பாதவர்கள் எவரும் இல்லை எனலாம்...

 


இந்த கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் நெருங்கவே நெருங்காது என்பது முழுக்க முழுக்க உண்மை.

கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதில் பெரும்பான்மையான சத்துக்கள் விரயம் ஆகாமல் நம்மை வந்து சேரும்.

வைட்டமின் "ஏ" சத்து நிறைந்துள்ள காரணத்தால், இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது.

இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் வல்லமை பெற்றது.

தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.

இவை இரத்தத்தைச் சுத்தப்படுத்தி, விருத்தியும் அடையச் செய்கின்றது.

மேலும், குடல் புண்கள் வராமல் தடுக்கிறது. வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது.

கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும்.

பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.

கேரட் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை உண்பதன் மூலம் மார்பகப் புற்றுநோயில் இருந்து ஆரம்ப நிலையிலேயே விடுபடலாம் என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

இந்தக் காய்களில் உள்ள வைட்டமின் ஏ-யில் இருந்து பெறப்படும் ரெட்டினாய்க் அமிலம், புற்றுநோய் உண்டாக்கும் செல்களை ஆரம்ப நிலையிலேயே அழித்து விடும்.

சருமத்துக்கு பொலிவைத் தந்து தோலில் ஏற்படும் சுருக்கத்தை கேரட் நீக்குகிறது.

மஞ்சள் காமாலை குணமாக தினமும் கேரட் சாறு அருந்துவதுநலம்.

பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் உதிரப்போக்கை கட்டுப்படுத்துகிறது.

உருளைக் கிழங்கை விட ஆறு மடங்க சக்தி அதிகம் இருப்பதால் எளிதில் ஜீரணமாகின்றது, எலும்புகள் வலுப்படுகிறது...

மது வாங்க 8 நாட்கள் வேண்டும் என இ பதிவு செய்த இளைஞர்🤣

 


இவனுங்க திருந்தவே மாட்டானுங்க...

 


சித்தர்கள் காட்டிய எட்டு வடிவ நடை பயிற்சி...

 


எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த வழிமுறை ஒருவர் தினமும் 30முதல் 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஆரோக்கியம் மேம்படும், பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். நடைப்பயிற்சி சாதாரணமாக செய்யாமல் எட்டு வடிவத்தில் நடப்பது மிகமிகச் சிறந்ததாகும்.

பயிற்சியும் செய்முறையும்...

மேற்படி படத்தில் இருப்பது போல் 6 அடி அகலம் மற்றும் 8 முதல் 12 அடி நீளம் அளவில் தரையில் எட்டு ஒன்றுவரைந்து கொள்ளவும். அதை வடக்கு தெற்கு முகமாக  வரைந்து கொள்ளவும். படத்தில் உள்ளது போல் அம்பு குறியிட்டு காட்டியது போல் பாதையில் “1″ குறியில் இருந்து ஆரம்பித்து “5″ வரை சென்று மீண்டும் “1″ வர வேண்டும். நடக்கும் பொழுது மிகவும் வேகமாகவோ அல்லது மிகவும் மெதுவாகவோ நடக்கலாகாது. மிகவும் இயல்பாக நடக்க வேண்டும்.

தினமும் காலையும் மாலையும் 15 – 30 நிமிடங்கள் நடப்பது மிகச்சிறப்பு. நடக்கவேண்டிய நேரம் காலை அல்லது மாலை மணி 5 – 6 (am or pm). வெளியே செல்ல முடியாதவர்கள், வீட்டுக்குள் நடக்கலாம். நல்லமுறையில் பயன்பெற, இந்த பயிற்சியை இடைவிடாது குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும்.

நடைப்பயிற்சி முடியும்வரை மெளனமாக நடக்க வேண்டும்.

இப்பயிற்சியை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அல்லது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செய்ய வேண்டும். 15 வது நிமிட முடிவில் இருநாசித்துவாரங்களின் மூலம் உள்ளிழுக்கப்பட்ட முழு மூச்சுக் காற்றையும் உணரலாம். பின்னர் நடைப்பயிற்சியானது மேலும் 15 நிமிட நேரம் தொடர வேண்டும். இதற்கிடைப்பட்ட நேரத்தில் மார்புச்சளி தானாகவே வெளியே காரி உமிழ்வதாலோ அல்லது கரைந்து இறங்குவதை உணரலாம்.

பலன்கள் இந்த பயிற்சியை காலை மாலை 1 மணிநேரம் செய்து வந்தால் உள்ளங்கை விரல்கள் ரத்த ஓட்டத்தினால் சிவந்திருப்பதை உணரலாம். 70வயது 50 வயதாக குறையும். முதுமை இளமையாகும்.. சர்க்கரை வியாதி குறைந்து முற்றிலும் குணமடையும். குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி, மலச்சிக்கல் தீரும். முழுமையாக சுவாசிக்கப்படும் மூச்சுக்காற்றால் 5 கிலோ பிராண வாயு உள்ளே சென்று மார்புச்சளி நீக்கப்படுகிறது. இரண்டு நாசிகளும் முழுமையாக சுவாசிப்பதால் நாசியில் உண்டாகும் சளியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

கண்பார்வை அதிகரிக்கும், ஆரம்பநிலை கண்ணாடி அணிவது தவிர்க்கப்படுகிறது. மற்றவர்களுக்கு மூக்குக்கண்ணாடியின் புள்ளி(Point) அதிகமாகாமல் பாதுகாக்கப்படுகிறது. செவிகளின் கேட்கும் திறன் அதிகரிக்கிறது. உடலினுள் அதிகப்படியான 5 கிலோ பிராண வாயுவால் உடல் சக்தி பெறுகிறது.

காலையிலும் மாலையிலும் 1 மணிநேரம் இந்த பயிற்சியைசெய்து வந்தால் (ஹெர்னியா) குடலிறக்கநோய் குணமாகும். அளவான நடைப்பயிற்சியால் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது.

இரண்டுவேளை 30 நிமிடம் செய்தால், பாத வெடிப்பு, வலி, மூட்டு வலிகள் மறைந்து விடுகின்றன. முதியோரும், நடக்க இயலாதோறும், பிறர் உதவியுடன் சக்கர வண்டியின் மூலம் செய்து பயன் அடையலாம். தினமும் ‘எட்டு’ நடைப்பயிற்சி செய்வதால் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும்.

உடல் பருமன், இரத்த அழுத்தம், இதய நோய், சுவாசகாசம் (Asthma), கண் நோய்கள், மூக்கடைப்பு, தூக்கமின்மை, மூட்டுவலி, முதுகுவலி, மன இறுக்கம், போன்ற கொடிய நோய்கள்கூட மெல்ல மெல்ல பூரணமாக குணமாகி விடுகின்றன. நல்ல முறையில் பயன்பெற, இந்த பயிற்சியை இடை விடாது குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும். வாழ்க வளமுடனும் நலமுடனும்...

உன் காதலே போலியா..?

 




என் கனவுகள் வழியே
மீண்டும் அழைக்கிறேன் 
அவளை...

அவள் மெதுவாக
எடுத்து வைக்கும்
ஒவ்வொரு அடியும்....
என் இதயத்தை
கொஞ்சம் கொஞ்சமாக
உடைத்து கொண்டிருந்தது......

காலம் தாழ்த்தாத
என் கேள்விகளுக்கு
சிறைக்கைதியாய் சிக்கியிருந்தது
பதில்....

என்னவள் இன்று எனதில்லை...

அவளின் இன்றைய
புன்னகையும் கண்ணீரும்
என்னுடையதே....

நாளைய பொழுதுக்காய்
அவள் விரல்களில் மோதிரம்
நான் இட்டு வைக்க வில்லை....

அதனால் இன்று
என்னவள் எனதில்லை...

என் நித்திரை போய்
நினைவெல்லாம் உன் கனவானது...
கனவு யாவும் 
உன் நினைவினாலானது...

இதில் நீ ஆச்சர்ய படுவதற்கு
ஒன்றுமே இல்லை......

உன்னை சந்திப்பதற்கு 
முன்னதாகவே
உன்னை காதலித்து 
கொண்டு தான் இருந்தேன்....

என் வாழ்வின்
அத்தனை கதவுகளும்
உன்னை சந்திப்பதற்காகவே
திறந்ததாக உணர்கிறேன்....

நீயே என்
தனிப்பட்ட உணர்வானவள்.....
என் வாழ்வினும் மேலானவள்...
என் தூய்மையான வலியானவள்...

உனக்கு நினைவிருக்கிறதா
நாம் காதலை
முதன் முதலாக
பரிமாறிக்கொண்ட அந்த நொடி..?

நீ உணர்ந்திருக்கவில்லை.....
என் காதலில் மெழுகாய்
நீ உருகியதும்.....
ஒளியாய் நான் ஒளிர்ந்ததும்.....

நீ கேட்டிருக்கவில்லை....
என் அழுகுரலை
உள்ளக் குமுறலை...

நீ கவனித்திருக்கவில்லை....
என் கண்கள் கண்ணீர் சிந்தியதையும்
என் இதயம் ரத்தம் சிந்தியதையும்...

நான் கொடுத்திருந்தேன்,
என் இதயம்
உடல், பொருள், ஆவி
அனைத்தும் உன்னிடம்...

எப்படி முடிந்தது
உன்னால் மட்டும்...

கண்ணீரையும்
வலியையும், துக்கத்தையும்
கொடுத்து செல்ல.....?

இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டும்
இன்றளவும் உன்னை
காதலிக்கிறேன்......
ஈரம் சுமந்த உன்
உதடுகளை உலர்த்திக்கொண்டாய்
காதல் சுமந்த
என் உயிரின் ஈரம் உலராது....
நான் இறந்த பின்பும் கூட......

தமிழகத்தை அழித்துக் கொண்டிருக்கும் பாஜக மோடி...

 


பாலியல் பாபா வும்... பாஜக கேடி ராகவனும்...

 


திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?

 


பட்டு சேலைகள் அணிவதன் விஞ்ஞான ரகசியம்...

தமிழன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒரு விஞ்ஞான ரகசியமும் உண்மை பொருளும் கலந்தே இருந்தன.

பட்டு துணிகளுக்கும் பட்டிற்கும் இயற்கையாகவே ஒரு குணம் உண்டு. அதாவது பட்டிற்கு எளிதில் சில நல்ல வகையான கதிர்களை தக்க வைத்துக் கொள்ளும் சக்தியும் தீய கதிர் வீச்சுகளை (நோயாளிகளின் சுவாசம், ஓசோன் படலத்தில் இருந்து வரும் அசுத்த கதிர்கள்) போன்றவற்றை தடுத்து உள்ளிருக்கும் உடலிற்கு வலிமை அளிக்கும்.

திருமணவீட்டிற்கு பல தரப்பட்ட எத்தனையோ பேர் வருகின்றனர். அதில் யார் எப்படி என்று தெரியாது. எனவே தான் மணப்பெண்ணிற்கும் மணமகனுக்கும் அரோக்கியமான வாழ்வு வேண்டும். தொற்று நோய் பரவக் கூடாது என்பதற்காகவே அணிகின்றனர்.

இதை சில நாடுகளும் தற்பொழுது ஆராய்ச்சி செய்து கொண்டு வருகின்றது.

மேலும் திருமண பெண்ணிற்கு அணிவிக்கும் நகைகளும் உடலியல் காரணங்களுக்காகவே.

தங்கம் நரம்பு மற்றும் இதயம் போன்ற இடங்களின் மீது படும் பொழுது ரத்த ஓட்டம் சீரடையும். எதற்கு தாலி தங்கத்தில் உள்ளது என தெரிகின்றதா?

மோதிரம் மோதிர விரலில் அணிவதும் விஞ்ஞான மற்றும் உடலியல் காரணங்களுக்காகவே. இதில் வருத்தம் அளிக்கும் விசயம் என்னவென்றால் நம் பாரம்பரிய முறை இன்று நம்மில் பலருக்கு தெரியவில்லை.

கோவில்களுக்கு செல்லும் பொழுது ஏன் அணிகிறார்கள் என்றால் நல்ல கதிர் வீச்சுகளை தக்க வைத்துக் கொள்ளவே. கோவில்களில் சென்றால் தெரியும் எவ்வளவு இடம் இருந்தாலும் கற்பக்ரகத்தின் வாயிலாகவே சில கதிர் வீச்சுகள் கிரகங்களில் இருந்து வந்து கொண்டே இருக்கும். மேலும் கோபுர கலசங்களும் இடி தாங்கியாகவே செயல் பட்டு வருகின்றன.

பிறகு ஏன் இடி தாக்குகின்றது என கேட்கின்றீர்களா?

முறையான பராமரிப்பு அற்ற காரனங்களுக்ககவே அவ்வப்பொழுது அப்படி நடக்கின்றது. முழுமையான ஆகம விதிப்படி கட்டப்பட்ட கோவில்கள் இருக்கும் சில குறிப்பிட்ட பகுதிகளில், சுற்று வட்டார பகுதிகளில் இடி தாக்கும் அபாயம் இல்லை.

சும்மாவா சொன்னாரு பாரதியார் கோவில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம் என்று?

இவை எதுவும் தெரியாமல் பகுத்தறிவு பகலவர்கள் நாகரீகம் என்று தனக்கு தானே புலம்பிக் கொண்டு தானும் நாசமாவதுடன் மற்றவர்களையும் கெடுக்கின்றனர்...

அதிமுக ஓபிஎஸ் சின் பித்தலாட்டங்கள்...

 


கோகோ கோலா கம்பெனி க்கு ஆப்பு வைத்த ரொனால்டோ...

 


வயிற்று வலியை குணப்படுத்தும் மாதுளை...

 


கோடைகாலத்தில் உடல் உஷ்ணம், சோர்வு, மயக்கம், நீர்வற்றிபோதல், சிறுநீர்தாரையில் எரிச்சல் போன்றவை ஏற்படும். இப்பிரச்னைகளை தீர்க்க மாதுளையை பயன்படுத்தி உடல் உஷ்ணத்தை போக்கும் சர்பத் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மாதுளை, பனங்கற்கண்டு, எலுமிச்சை. பனங்கற்கண்டை சாறாக எடுத்து பாகுபதத்தில் கொதிக்க வைக்கவும். இதனுடன் மாதுளை சாறு, எலுமிச்சை சாறு சேர்க்கவும். ஆறவைத்து பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளவும். தேவையானபோது, இதில் நீர்விட்டு குடித்துவர கோடைகாலத்தில் உடல் உஷ்ணம் தணியும். பித்தம் சமன்படும். குழந்தை இன்மையை போக்கும். வயிற்று வலி குணமாகும்.

மாதுளை உன்னதமான மருந்தாகிறது. பல்வேறு சத்துக்களை உள்ளடக்கியது. நோய்களை தடுக்கவல்லது. குளிர்ச்சி தரக்கூடியது. மாதுளையின் தோலை பயன்படுத்தி வயிற்று வலி, வயிற்று கடுப்பை குணமாக்கும் மருந்து தயாரிக்கலாம். மாதுளையின் மெல்லிய தோலை எடுக்கவும். இதில் பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர வயிற்று வலி, சீதபேதி குணமாகும்.

தாமரை பூவை பயன்படுத்தி வயிற்று வலியை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தாமரை பூ இதழை பசையாக அரைத்து, அதை பெரிய நெல்லிக்காய் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் சிறிது சந்தனப் பொடி, பனங்கற்கண்டு சேர்க்கவும். ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி குடித்துவர உடல் உஷ்ணம் தணியும். வயிற்று புண் ஆறும். வயிற்று வலி குணமாகும். செரிமானத்தை தூண்டும். உடல் உஷ்ணம், சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல், காய்ச்சல், வயிற்றுபோக்கு ஆகியவற்றுக்கு தாமரை இதழ் மருந்தாகிறது.

ஜவ்வரிசியை பயன்படுத்தி உடல் உஷ்ணம், வயிற்று வலியை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: ஜவ்வரிசி, வரமிளகாய், உப்பு, தயிர், நல்லெண்ணெய். ஜவ்வரிசியை லேசாக வறுத்து வெந்நீர் விட்டு சுமார் 5 மணி நேரம் ஊற வைக்கவும். ஜவ்வரிசியுடன் தயிர், தேவையான அளவு உப்பு சேர்த்து எடுத்து வைக்கவும். பாத்திரத்தில் நல்லெண்ணெய், கடுகு, வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

இதை ஜவரிசி, தயிர் கலவையில் சேர்த்து கலக்கவும். இதை சாப்பிட்டுவர உடல் உஷ்ணம் குறைந்து, குளிர்ச்சி அடையும். வயிற்று வலி குணமாகும். மரவள்ளி கிழங்கு வகையை சேர்ந்தது ஜவ்வரிசி. இது, குடலுக்கு நல்ல இயக்கத்தை கொடுக்கிறது. குளிர்ச்சி தரக்கூடியது. வயிற்று கடுப்பை தணிப்பதுடன், வயிற்றுப்போக்கை சரி செய்கிறது...

கார்ப்பரேட் தரகர் பாஜக மோடியின் சாதனை...

 


திமுக அரசின் நமக்கு நாமே நாடகம்...