பட்டு சேலைகள் அணிவதன் விஞ்ஞான ரகசியம்...
தமிழன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒரு விஞ்ஞான ரகசியமும் உண்மை பொருளும் கலந்தே இருந்தன.
பட்டு துணிகளுக்கும் பட்டிற்கும் இயற்கையாகவே ஒரு குணம் உண்டு. அதாவது பட்டிற்கு எளிதில் சில நல்ல வகையான கதிர்களை தக்க வைத்துக் கொள்ளும் சக்தியும் தீய கதிர் வீச்சுகளை (நோயாளிகளின் சுவாசம், ஓசோன் படலத்தில் இருந்து வரும் அசுத்த கதிர்கள்) போன்றவற்றை தடுத்து உள்ளிருக்கும் உடலிற்கு வலிமை அளிக்கும்.
திருமணவீட்டிற்கு பல தரப்பட்ட எத்தனையோ பேர் வருகின்றனர். அதில் யார் எப்படி என்று தெரியாது. எனவே தான் மணப்பெண்ணிற்கும் மணமகனுக்கும் அரோக்கியமான வாழ்வு வேண்டும். தொற்று நோய் பரவக் கூடாது என்பதற்காகவே அணிகின்றனர்.
இதை சில நாடுகளும் தற்பொழுது ஆராய்ச்சி செய்து கொண்டு வருகின்றது.
மேலும் திருமண பெண்ணிற்கு அணிவிக்கும் நகைகளும் உடலியல் காரணங்களுக்காகவே.
தங்கம் நரம்பு மற்றும் இதயம் போன்ற இடங்களின் மீது படும் பொழுது ரத்த ஓட்டம் சீரடையும். எதற்கு தாலி தங்கத்தில் உள்ளது என தெரிகின்றதா?
மோதிரம் மோதிர விரலில் அணிவதும் விஞ்ஞான மற்றும் உடலியல் காரணங்களுக்காகவே. இதில் வருத்தம் அளிக்கும் விசயம் என்னவென்றால் நம் பாரம்பரிய முறை இன்று நம்மில் பலருக்கு தெரியவில்லை.
கோவில்களுக்கு செல்லும் பொழுது ஏன் அணிகிறார்கள் என்றால் நல்ல கதிர் வீச்சுகளை தக்க வைத்துக் கொள்ளவே. கோவில்களில் சென்றால் தெரியும் எவ்வளவு இடம் இருந்தாலும் கற்பக்ரகத்தின் வாயிலாகவே சில கதிர் வீச்சுகள் கிரகங்களில் இருந்து வந்து கொண்டே இருக்கும். மேலும் கோபுர கலசங்களும் இடி தாங்கியாகவே செயல் பட்டு வருகின்றன.
பிறகு ஏன் இடி தாக்குகின்றது என கேட்கின்றீர்களா?
முறையான பராமரிப்பு அற்ற காரனங்களுக்ககவே அவ்வப்பொழுது அப்படி நடக்கின்றது. முழுமையான ஆகம விதிப்படி கட்டப்பட்ட கோவில்கள் இருக்கும் சில குறிப்பிட்ட பகுதிகளில், சுற்று வட்டார பகுதிகளில் இடி தாக்கும் அபாயம் இல்லை.
சும்மாவா சொன்னாரு பாரதியார் கோவில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம் என்று?
இவை எதுவும் தெரியாமல் பகுத்தறிவு பகலவர்கள் நாகரீகம் என்று தனக்கு தானே புலம்பிக் கொண்டு தானும் நாசமாவதுடன் மற்றவர்களையும் கெடுக்கின்றனர்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.